Wednesday, 30 August 2017

மூல நட்சத்திர ரகசியம்

மூல நட்சத்திரத்தில் நிறைவேற்றும் நற்காரியங்கள் பன் மடங்காக விருத்தியாகும் தன்மை உடையன. உதாரணமாக, மூல நட்சத்திரத்தில் ஒரு தங்கக் காசு வாங்கினால் மூன்று காசு வாங்க வசதி வரும்.
மூலத் தங்கம் முழு முதற் பொருளாய் ஆகி
காலத் தாமதத்தைக் கவினுறக் கழித்திட வழி செய்யும் பாரேன்
என்று அகத்திய நாடி உரைக்கிறது.

120 ஆண்டுகள் மனித உடலில் வாழ்ந்து, உயிர் உடலை விட்டுப் பிரிந்த பின்பும் மற்றவர்களுக்காக தன் உடலைப் பாதுகாத்து அருள்புரியும் உடையவர் என்னும் ராமானுஜர் மூல நட்சத்திரத்தில் பிறந்தவரே. மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்தத் துறையைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அதில் தலைமைப் பொறுப்பில் இருப்பார்கள். காரிய சாதனைகள் பல புரியவல்லவர்கள் மூல நட்சத்திரக்காரர்கள்.

மூல நட்சத்திர தினத்தன்று திருஅண்ணாமலையைக் கிரிவலம் வருதல் சிறப்பாகும். ‘குத்துச் செடிஎன்று அழைக்கப்படும் ஒரு அற்புதமான மூலிகை உண்டு. சதுரகிரி மலை, திருஅண்ணாமலை, ஜவ்வாது மலை, சுருளி மலை, மருந்துவாழ் மலை, திருக்குற்றால மலை போன்ற மலைத் தலங்களில் மட்டுமே வளரக் கூடிய மூலிகை. இதன் குணம் கருதி இதைபங்காளிச் செடிஎன்றும் சொல்வது உண்டு. மூல நட்சத்திரத்தில் மட்டுமே இந்தச் செடி வளரும், மூல நட்சத்திரம் முடிந்தவுடன் பூமியின் அடியில் சென்று மறைந்து விடும். நிலம் புரண்டி என்ற ஒரு தெய்வீக மூலிகையைப் பற்றி அடியேன் உங்களுக்கு ஏற்கனவே விளக்கி உள்ளேன்.. அதைத் தொட்டாலே சிவபெருமான் பிரத்யட்சியமாக அதைத் தொட்டவர் கண் முன்னே நிற்க வேண்டும் என்பது இறை நியதி. அப்படிப்பட்ட அற்புத ஆற்றல் படைத்த நிலம்புரண்டிக்கு மூலமாக இருப்பதாலும், மூல நட்சத்திரம் அன்று மட்டுமே தோன்றுவதாலும் பங்காளிச் செடியைமூல நிலம்புரண்டிஎன்றும் சொல்வது உண்டு. இதன் காற்று மனிதர்கள் மேல் பட்டால் பங்காளிச் சண்டைகள், சொத்துத் தகராறுகள் மறையும்.

கான்சர், ஆஸ்துமா, பக்கவாதம் போன்ற கடுமையான வியாதிகளால் அவதியுறுவோர் தாங்கள் ஏற்கும் மருந்துகளைக் கையில் ஏந்தி மூல நட்சத்திரம் அன்று திருஅண்ணமலையைக் கிரிவலம் வந்து பின்னர் அவற்றைப் பயன்படுத்துவதால் நோயின் கடுமை படிப்படியாகக் குறைவதைக் கண்கூடாகக் காணலாம். புதிய மருந்துகள், விஞ்ஞானக் கண்டு பிடிப்புகள், கம்ப்யூட்டர் ப்ராஜக்ட்டுகள் போன்றவற்றை மூல நட்சத்திர தினத்தில் தொடங்குவது நலம். சில மருந்துகள் மூல நட்சத்திரத்தில் மட்டுமே செய்யப்படுகின்றன. மூல நட்சத்திரத்தன்று மருந்துகளின் வீரிய சக்தி அதிகரிக்கிறது.

Sulpha drugs என்று அழைக்கப்படும் கந்தக மருந்து வகைகளை மூல நட்சத்திரத்தன்று தயாரிப்பது விசேஷம். குளிகைகள் தயாரிக்க, பிரதிஷ்டை செய்ய மூல நட்சத்திரம் உகந்தது. மார்கண்டேய மகரிஷி திருஅண்ணாலையைச் சுற்றி குளிகைகளைப் பூமி அடியில் பதித்து வைக்கும் புனித பூஜைகளை மூல நட்சத்திர தினத்தில்தான் றிறைவேற்றினார். இன்றும் ஆஞ்சநேய மூர்த்தி ஒவ்வொரு மூல நட்சத்திரம் அன்று திருஅண்ணாமலையைக் கிரிவலம் வந்து அற்புதமான குளிகைகளை திருஅண்ணாமலை கிரிவலப் பாதை எங்கும் மக்களின் நலனுக்காக நிரவி வருகிறார் என்பது பலரும் அறியாத இரகசியம். இதனால்தான் திருஅண்ணாமலையில் எங்கு சென்றாலும் பாதணிகள் அணியாமல் வெறுங்காலுடன் செல்லுதல் சிறப்பு என்று சித்தர்கள் வலியுறுத்துகிறார்கள்.
வீட்டிற்குத் தேவையான மளிகை சாமான்களை மூல நட்சத்திரத்தன்று வாங்கலாம். மருத்துவர்கள், மருந்துகள் தயாரிப்போர், மருந்து கம்பெனிகளில் பணிபுரிவோர், பெண்ணியல் நோய் வல்லுநர்கள், குழந்தை மருத்துவர்கள் போன்றோர் மூல நட்சத்திர தினத்தன்று திருஅண்ணாமலையைக் கிரிவலம் வருவதால் நல்ல கைராசியுடன், தங்கள் தொழிலில் சிறந்து விளங்கி பேரும் புகழும் எய்துவர். மூல நட்சத்திரத்தில் தொடங்கும் வியாபாரம், தொழில் முயற்சிகள் நன்முறையில் வளர்ச்சி பெற்று சிறப்படையும்.

No comments:

Post a Comment