Sunday, 27 August 2017

ஓதி மலையைப்பற்றி அகத்தியர் அய்யாவின் வாக்கு

ஓதி மலையைப்பற்றி அகத்தியர் அய்யாவின் வாக்கு; தஞ்சாவூர் கணேசன் அய்யா அவர்களிடம் உரைத்தது

"இஹ்தப்ப, மெய்யாக, பரமனுக்கு பாலன் உபதேசம் செய்கின்ற, அந்த ஓதிய தன்மையை அடையாளம் காட்டுவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஆலயங்களில் இதுவும் ஒன்று. ஆனால், பிற ஆலயங்கள் பிற்காலத்தில் ஏற்படுத்தப்பட்டன, இவை (ஓதிமலை) ஆதிகாலத்து ஆலயம். கட்டாயம், இங்கு சென்று, இறை நினைப்போடு ஒருவன் வணங்குகிறானோ இல்லையோ, இஹ்தப்ப, தேகத்தை அசதியாக்கி, தேகம் வேதனைப்பட்டாலும் பாதகமில்லை, என்று அனுதினமும், ஒருமுறையாவது மேல் ஏறி, கீழே  இறங்கினால்... இப்படி ஏக வருடம் அவன் இருந்தால்... உடலைவிட்டு பல பிணிகள் போய்விடும்.

இஹ்தப்பநிலையிலே, ஐம்புலனும் அடங்க வேண்டும் என்று வினவுகிறவர்கள், இங்கு சென்று, கார்த்திகை நட்சத்திரம் நடக்கின்ற காலத்திலும், ஷஷ்டி காலத்திலும், இஹ்தப்ப பரணி காலத்திலும், அவரவர்கள் ஜன்மநட்சத்திர காலத்திலும், உபவாசம் இருந்து, முருகப்பெருமானின் ஷஷ்டி கவசத்தையோ, கந்தகுரு கவசத்தையோ, அல்லது பிற அறிந்த மந்திரத்தையோ, மனதிற்குள் ஜபித்து, முடிந்தவரை ஆலயத்தில் அன்று முழுவதும் இருந்து, பிறகு இறுதியாக பிரசாதம் ஏற்று, கீழே வருவது, கட்டாயம், ஞானமார்கத்திற்கு அற்புதமான வழியைக் காட்டும்.

இல்லை... லோகாயமார்க்கம் தான் இப்போழுது எனக்கு தேவை, என்று எண்ணக்கூடிய மனிதர்கள் கூட, இங்கு சென்று, தாரளமாக வேண்டியதை பெறலாம்.  மனதார, அங்கு அமர்ந்து, ஒரு நோக்கத்தை வைத்துவிட்டு வந்தால், கட்டாயம் நிறைவேறுவதை அனுபவத்தில் மனிதர்கள் காணலாம்.

பட்சிகள் வடிவிலும்இஹ்தப்ப விலங்குகள் வடிவிலும் அங்கு, இன்றும் முனிவர்கள் தவம் செய்துகொண்டிருக்கிறார்கள்.

(கும்பாபிஷேகம்) சிறப்பாக நடந்தது. இன்னமும் அங்கு அரூப நிலையிலே மஹான்களும், ஞானிகளும் இருந்துகொண்டு இருக்கிறார்கள்.

யாமும் அங்கிருந்தும், இங்கிருந்தும் வாக்கை கூறிக்கொண்டே இருக்கிறோமப்பா."


ஓம் லோபாமுத்திரா சமேத அகதீசாய நமஹா!

ஓம் நமசிவாய
சர்வம் சிவமயம்

அகத்தியர் இறைச்சித்தன்
சித்தர்கள் பீடம்
அகத்தியர் ஜீவ நாடி வாசிக்கும் இடம்
கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம்.
கைபேசி : 73738 38104, 95850 18295, 73738 35583

இணையதள வரைபட முகவரி
https://www.google.co.in/maps/place/11%C2%B016'03.0%22N+77%C2%B002'19.1%22E/@11.2593361,77.0383308,14z/data=!4m14!1m7!3m6!1s0x3ba8e53c391a7a2f:0xcc90c25cbc48be5!2z4K6q4K-K4K6Z4K-N4K6V4K6y4K-C4K6w4K-NLCDgrqTgrq7grr_grrTgr43grqjgrr7grp_gr4EgNjQxNjk3!3b1!8m2!3d11.2568639!4d77.0406147!3m5!1s0x0:0xa13082299b858af8!7e2!8m2!3d11.2675005!4d77.0386273?hl=ta



No comments:

Post a Comment