Wednesday, 30 August 2017

தெய்வ தரிசன ரகசியம்

ஒவ்வொரு தெய்வத்தையும் உரிய முறையில், உரிய நேரத்தில் தரிசனம் செய்தால் அதனால் அபரிமிதமான பலன்கள் கிடைக்கும். ஆனால், அப்படி அபரிமிதமாகக் கிடைக்கும் பலன்களை நீ எந்தக் காரியத்திற்காகப் பயன்படுத்தப் போகிறாய் என்பதே முக்கியம். பெரும்பாலும் தன் மனைவி, குழந்தைகள், உற்றம், சுற்றத்திற்காகவே கோயில் தரிசனம் அமைவதால் இந்த இரகசியங்களை பெரியவர்கள் அவ்வளவாக வெளியிடுவது கிடையாது. பொது நலத்திற்காக, சமுதாய மேம்பாட்டிற்காக ஒருவர் இறைவழிபாட்டை மேற்கொள்ளும்போது உரிய காலமும், வழிபாட்டு முறைகளும் அவர்களை அறியாமல் மேலுலகத்தில் இருக்கும் சற்குருமார்களால் ஏற்படுத்தித் தரப்படுகின்றன என்பதும் நீங்கள் அறியாத ஒரு தெய்வீக ரகசியமாகும்.

சில குறிப்பிட்ட கோயில்களில் நிறைவேற்ற வேண்டிய தரிசன முறைகளைப் பற்றி மட்டும் தற்போது தெரிந்துகொள்ளுங்கள்.

திருப்பதி வெங்கடாஜலபதியை தம்பதி சமேதராய் வணங்குவது சிறப்பு. காலை ஆறு மணி முதல் பத்து மணிவரை ஏழுமலையானை அங்கபிரதட்சிணம் வந்து வணங்குதல் நலம்.

மது, புகையிலை போன்ற போதைப் பொருட்களுக்கு அடிøப்பட்டோர் பெரும்பாலும் அதிலிருந்து மீளாமலேயே தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள். இதற்குக் காரணம் மனதில் கற்பனையை சிறகடிக்கச் செய்து போலி சந்தோஷத்தைக் கொடுக்கும் நரம்பு மண்டலமானது நமது முன்னோர்கள் ஆதிக்கத்தில் இருப்பதுதான். கடுமையான போதைப் பழக்கத்திற்கு ஆளானோர் மூதாதையர்களுக்கு ப்ரீதி அளிக்கும் அமாவாசை, மாளய பட்ச தர்ப்பண படையல்களை விடாமல் தொடர்ந்து நிறைவேற்றி வந்தால்தான் தீய பழக்க வழக்கங்களிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள முடியும்.சென்னை கபாலி கோயிலில் விடியற்காலை நாலு மணி முதல் எட்டு மணி வரை வழிபடுதல் நலம்.
சமயபுரம் மாரியம்மனை மதியம் 3 மணி முதல் 5 மணி வரை வழிபடுதல் நலம். ஒவ்வொரு தெய்வமும் தினமும் நகர் வலம் என்று செல்வதுண்டு. இவ்வாறு சமயபுரம் மாரியம்மன் நகர் வலம் முடித்து தன் சிம்மாசனத்தில் அமரும் நேரமே மாலை மூன்று மணி. இந்த நேரத்தில் அம்மனை தரிசித்தல் நலம்.
மிகவும் சிறப்பான சித்த பீடமே மேல்மருவத்துõர். இங்கு எந்த நேரம் வேண்டுமானாலும் அன்னையை வழிபடலாம்.
மாங்காடு அம்மனை மதியம் 12 மணி முதல் 1 மணி வரை தரிசனம் செய்தல் நலம். மதியம் கடும் வெயிலில் தவம் இயற்றுகிறாள். இந்த தவக் கோலத்தில் அன்னையைத் தரிசிப்பதால் நம்முடைய கடுமையான வினைகளும் களைந்தோட அன்னை அருள் புரிவாள்.
மாயவரம் அயபாம்பிகையை அங்க பிரதட்சிணம் செய்து வழிபடுதல் நலம். திருக்கோயில் தெப்பக் குளத்தில் குளித்து விட்டு அங்க பிரதட்சிணம் செய்வது நலம்.
திருஅண்ணாமலையில் கிரிவலப் பாதையில் சிவராஜ சிங்க தீர்த்தம் அருகே 50 அடி வரை ஆண்கள் அங்க பிரதட்சிணம் செய்தல் நலம்.
பெண்கள் திருஅண்ணாமலையில் கிரிவலப் பாதையில் அங்கப் பிரதட்சிணத்தை தவிர்த்து, திருஅண்ணாமலையார் கோயிலில் அங்க பிரதட்சிணம் செய்தல் நலம்.

சபரிமலை ஐயப்பனுக்கு அபிஷேகம் நடக்கும்போது ஐயனைத் தரிசித்தல் நலம்.


முகூர்த்த நாளைச் சரியாகக் கணிக்காமல் திருமணங்களை செவ்வாய், குரு, சுக்கிர மூட காலத்தில் நிகழ்த்துவதால் சந்ததி விருத்தியின்மை, குடும்பத்தில் சச்சரவு, தம்பதிகள் அடிக்கடி நோய்வாய்ப்படுதல் போன்ற துன்பங்கள் ஏற்படுகின்றன. அறிந்தோ அறியாமலோ இத்தகைய மூட நாட்களில் திருமண வாழ்வைப் பெற்றவர்களுக்கு ஸ்ரீக்ஷிப்ர கணபதி வழிபாடு ஓரளவு பிராய சித்தத்தை அளிக்கிறது. அபிஷேக ஆராதானைகளுடன் முறையாக ஸ்ரீக்ஷிப்ர கணபதியை வணங்குவோரின் வாழ்க்கையில் ஏற்பட்ட திருமண தோஷங்கள் அகலும். மணமாகாத ஆண்களுக்கு நெடுநாள் திருமணங்கள் தடைபட்டிருந்தால் தோஷங்கள் விலகி விரைவில் திருமணம் கைகூடும். பாண்டிச்சேரி மணக்குள விநாயகரும், திருஅண்ணாமலை ஆநிறை கணபதியும் ஷிப்ர கணபதியின் சிலா உருவ மூர்த்திகள்.


No comments:

Post a Comment