Monday 28 August 2017

மலையேற்ற பயிற்சி ; விழிப்புணர்வு பயிற்சி




                       மலை  ஏற்றம்
உடன்பாடு சுவாசத்தில் வலு ஏற்றம் காண, மலை ஏற்றம் அன்பர்களே நடை முறை பயிற்சி ஒன்றே பலன் அளிக்கும்.. மதுரையிலும் கோவையிலும் மலை ஏறும் பயிற்சியில் மிகுந்த பலனை அன்பர்கள் பெறுகிறார்கள்.. அவ்வாறே அந்த பலனை பெற சென்னை அன்பர்கள் மிகுந்த விருப்பம் கொண்டு வேண்டிக் கொண்டதால் வரும் ஞாயிறு 18-10-15 அன்று குன்றத்தூர் மலை அடிவாரத்திற்கு காலை சரியாக 06-30 மணிக்கு வருமாறு வேண்டிக் கொள்ளப் படுகிறார்கள்.. அங்கேவந்து அன்பர்கள் பதிவு செய்து கொள்ளலாம்.. பயிற்சியினை மேற் கொள்ளும் அன்பர்கள் தொடர்ந்து 10 வாரங்கள் வர வேண்டும்.. அப்படி வர முடியாதவர்கள் கலந்து கொள்ள வேண்டாம்.. 10 வாரங்கள் பயின்றால் தான் உடல் கதி சுவாசத்திற்கு பக்குவமாகும்.. இல்லையேல் முறையற்ற கதி சுவாசத்தில் பல ஆண்டுகள் பயின்று காலம் விரையம் செய்ய வேண்டியது தான்.. அதுவும் தொடர்ந்து பயின்றால் தான் சரிப்பட்டு வரும்.. 10 வாரங்கள் பயின்று தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே உயர் நிலை சுவாச பயிற்சி தர இயலும்.. ஐந்து வகை கூத்து பயிற்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக தரப் படும்... பயில்வோரின் முயற்சி என்ற தகுதி நிலைதான் முக்கியமே தவிர மற்ற நிபந்தனைகள் எதுவும் விதிக்கப் படுவதில்லை.. ஆகவே உணர்ந்தோர் உடன் பட்டு, உடன் பாடு சுவாச பயிற்சி பெற அழைக்கின்றேன்..      
---- மர்ம யோகி


மலை ஏற்றம் பயிலும் அன்பர்கள் கவனத்திற்கு  1) பொதுவாக மலை ஏறும் போதும் இறங்கும் போதும், தேகத்தில் செயல் படும் சக்தி, அண்ட ஆற்றல் என்பதை உண்மையாக உணர வேண்டும்...
2) அந்த அண்ட ஆற்றல் உண்மையை மனம் நொடிக்கு நொடி பற்றிக் கொண்டே இருக்க வேண்டும்..
3) தேகத்திற்கு சக்தியை ஈடு செய்ய அண்ட ஆற்றல் சுவாசத்தின் மூலம் சக்தியை அளிப்பதால் அந்த நிலையில் சுவாசத்தை ஒரு போதும் கவனிக்கக் கூடாது.. கவனிக்க கூடாது என்பது மிக முக்கியம்...
4) ஏறும் போதும் இறங்கும் போது,, தேகத்தில் அனைத்து சக்தியும் அதிக பட்ச செலவு செய்யும் விதமாக மிகுந்த விழிப்பு நிலையோடு பயிற்சியில் வேகம் கொள்ள வேண்டும்.. விழிப்பு நிலையில் மட்டுமே நிதானமும் எச்சரிக்கையும் கைகூட கவனமாக ஏற்றம் இறக்கம் செய்ய வேண்டும்..
5) ஒவ்வொரு தேக அசைவும், அண்ட ஆற்றலால் இயக்கப் படுவதையும், ஆற்றலும் தேகமும் கலக்கும் போது அது உணர்வாக வெளிப் படுவதையும் உணர வேண்டும்..எந்த காரணத்தைக் கொண்டும் ஏற்றம் இறக்கம் சமயம் மூச்சை கவனிக்கக் கூடாது.. தேக உணர்வோடு இருக்கவேண்டும்..
6) இதுவரை தேகம் சுவாசத்தின் மூலம் பெற்ற ஆற்றலை மனம் கவர்ந்து வெளிச்சமாக செயல் பட்ட பழக்கத்தாலும் மலை ஏற்ற இறக்க பயிற்சியால் தேகம் அதிக ஆற்றலை செலவு செய்வதை தடுக்கவும் தனக்கு போதிய ஆற்றல் கிடைக்காமல் போவதை தடுக்கவும், மலை ஏற்றத்தில் மெத்தனம் காட்டும்.. ஆனால் தேக உணர்வோடு பற்றி கொள்ளும் போது ஏற்படும் விழிப்பு தன்மை பயிற்சியில் மனதை வெல்லும் நிலைக்கு செல்ல சற்று வேகம் பயிற்சியில் காட்ட வேண்டும்...
7) அப்படி வேகம் கொண்ட தேகம் அதிக ஆற்றலை எடுத்துக் கொள்வதால், அதை ஈடு செய்ய அண்ட ஆற்றல் சுவாசத்தின் மூலம் அதிகமாக வர தொடங்குவதால் பெரும் சுவாசம் அல்லது மூச்சு இளைப்பு வர தொடங்கும்.. இந்த நிலையில் ஏற்றம் இறக்க செயல் பாட்டினை நிறுத்தி விட்டு அமைதியாக நிற்க வேண்டும்.. இடம் கிடைத்தால் அமர்ந்து கொள்ளலாம்.. இந்த நிலையில் இப்படி வரும் பெரும் சுவாச வேகத்தோடு மனதை பொருத்தும் போது, பழக்கமில்லாத சுவாச வேகத்தோடு மனம் பொருந்த முடியாமல் நின்று விடுவது போல் இருக்கும்.. இந்த பொன்னான நேரத்தில் விழிப்பு என்ற அக குரு நம்மில் தோன்றுவதை உணர வேண்டும்.. யார் உணருவது என்ற கேள்வி எழலாம்.. நிச்சயமாக செயல் படாத மனம் இல்லை.. விழிப்பே தான் உணரும்.. விழிப்பே உணரும் போது இதனை விழித்தல் என்கிறோம்..
8) இந்த விழித்தல் என்ற செயல் பாடு தான் தனக்குள் ஒருவன் பிறப்பதற்கு சமம்.. அவன் தான் மகன்.. மகன் என்றால் மறைவாய் (ம்) அகத்தில் ( அகன் ) தோன்றியவன் என பொருள்.. அகத்தில் தோன்றியவன் அகத்திலிருந்து தோன்றியவனாய் உருவெடுத்து புறத்தே செயல் படும் விழிப்பு நிலையே முருகன் எனலாம்.. மகன் என்பதில் ம் அடுத்து உரு ஆன உருவானதை இணையும் போது அது ம்+ உரு + அகன் என இணைந்து முருகன் ஆகிறான்.. முதலில் நம்மில் மகன் பிறக்கட்டும்.. பின் முருகன் நிலைக்கு வரலாம்... அக நிலையில் மகன் பிறப்பதை உணர வேண்டும்..
9) மனதிற்கு ஏற்ற சுவாச வேகம் குறையும் போது, மனம் எண்ண ஆதிக்கங்களோடு விழிப்பு என்ற கருவறையான தோன்ற நிலைக்கு உள் புக முனையும்.. உடனே ஏற அல்லது இறங்க தொடங்க வேண்டும்..
10 ) இப்படி ஒரு முறை அனுபவப் பட்டது போல் பத்து முறை அனுபவப் பட வேண்டும்.. அதற்காக இரண்டு அல்லது மூன்று முறை மலை ஏறி இறங்க வேண்டியதிருக்கும்..
11) அன்பர்கள் இதனை தேகப் பயிற்சியாக ஒரு போதும் நினைக்கக் கூடாது.. விழிப்பு நிலை பெறுவதற்க்கான உன்னத பயிற்சி.. மற்றவர்களோடு ஒத்து பார்த்து, அவர்களோடு இணையாக மலை ஏறவோ இறங்கவோ ஒரு போதும் கூடாது.. மற்றவர்களை பார்ப்பதை முற்றிலும் தவிர்த்தல் நலம்.. படியின் மேல் மட்டும் பார்வை, இளைப்பு என்ற பெரும் சுவாசம், அதில் மனம் பொருத்தி விழித்தல் என்ற செயலை உணர்தல், இதை தவிர மனம் எதையும் நாடக்கூடாது...
12) அன்பர்கள் மலை அடிவாரத்தில் கூடும் போதும் பிரியும் போதும் ஒருவர்க்கு ஒருவர் பேச்சில் ஈடுபடுவது மிகவும் பயிற்சிக்கு ஆபத்தானது... இதில் மிகவும் கவனம் தேவை... மன அமைதியில் மட்டுமே விழித்தல் என்ற செயல் பாட்டினை திறம் பட செய்ய முடியும்...
13) முதல் நாள் அகத்தில் மகன் கரு உற்ற நிலையில், கரு வளர்க்கும் பயிற்சியை தொடர்ந்து ஒவ்வொரு ஞாயிறும் தொடர்ந்து முடிந்த வரை வர வேண்டும்.. ஒவ்வொரு ஞாயிறுக்கும் இடைப் பட்ட நாட்களில் மாடி படி ஏறி பயில வேண்டும்..
14 ) தொடர்ந்து 10 ஞாயிறு கிழமைகளில் வர முடிந்தவர்கள் மட்டும் நேரடி பயிற்சிக்கு வரவும்.. உறுதி பாடு இல்லாதவர்கள் நேரடி பயிற்சியினை தவிர்க்கலாம்..
இது முதல் கட்ட நிலைக்கான செயல் பாட்டு விளக்க முறைகள்... பின்னால் பயிற்சியின் இடையே புதிய விளக்க முறைகள் அளிக்கப் படும்.. எல்லாமே முகநூல் பக்கத்தில் நேரடி பயிற்சியில் கலந்து கொள்ள முடியாத, வெளி ஊர் அன்பர்களுக்காக பதிவு செய்யப்படும்... வெளி ஊர் அன்பர்கள் கலந்து கொள்ள முடியவில்லையே என்ற கவலை வேண்டாம்.. நுணுக்கங்களை கவனமாக அறிந்து மாடி படிகளில் ஏறி இறங்கியோ மைதானத்தில் ஓடியோ நோக்கத்தோடு பயின்று செயல் படும் வெளி ஊர் அன்பர்கள் மிகவும் பயன் அடைந்து கொண்டு வருகிறார்கள்.. பதிவினை மட்டும் நன்றாக படித்து பயிலுமாறு வெளி ஊர் அன்பர்களை வேண்டிக்கொள்கிறேன்...


      மலை ஏற்ற அனுபவங்கள் -- பகுதி ஒன்று
இன்று ( 18- 10 -15 ) அன்பர்கள் குறித்த நேரத்தில் சென்னையில் பல இடங்களிலிருந்து குன்றத்தூர் முருகன் கோயில்அடிவாரத்திற்கு இராணுவ ஒழுக்கத்தோடு வந்து சேர்ந்தார்கள்.. அவர்களுக்கு மலை ஏறும் நோக்கம், விதம் 20நிமிடங்கள் விரிவாக விளக்கப் பட்டது.... மலை ஏறி இறங்க பயின்றனர்.. கலந்து கொண்ட அன்பர்கள்-21 பேர்கள்.. மலைஏறும் முன் தெளிவாக சொல்லப் பட்ட பிரிண்ட் செய்யப் பட்ட மலை ஏறும் முறை பற்றிய காகிதம் ஒவ்வொருவருக்கும் தரப் பட்டது.. அதை படிப்பதற்கு கூட பொறுமை இல்லாமல் மடித்து பையில் வைத்துக்கொண்டனர் ஐந்து அன்பர்கள்.. அதில் முக்கியமான செய்தி ஒவ்வொரு தேக இயக்கமும் அண்ட ஆற்றலால் இயக்கப்படுகிறது என்பதை உணர்ந்து மலை ஏற வேண்டும் என்பதை பெரும்பாலான அன்பர்கள் இதயத்தில் வைத்து மலைஏறியதாக தெரியவில்லை.. அக்கம் பக்கம் பார்த்துக் கொண்டு மலை ஏறி இறங்கிய சிலர் நிச்சயமாக தேக உணர்வோடு இருக்க வாய்ப்பு இல்லை.. அந்த உணர்வு அண்ட ஆற்றல் தேகத்தில் ஊடுறுவி செல்லும் போது ஏற்படுவது என்பதைஅக உணர்விலே உணர்வதற்கு வாய்ப்பே இல்லை.. அண்டமே இந்த துளி அற்ப தேகத்தில் கருணை கொண்டு ஆற்றலை வழங்கும் அற்புதத்தை அறிந்து அந்த சிறு ஞான துளியை அன்பர்கள் அனுபவிக்கும் வாய்ப்புக்கு துளியும்அன்பர்களுக்கு இல்லை போல் தெரிந்தது... உலக விவகாரங்களிலிருந்து உள் அனுபவ ஞான அறிவை தவறவிட்டார்கள் என்பது நிச்சயமாக தெரிந்தது..
படிகளில் ஏறி மூச்சு இளைப்பு வந்த உடன் அந்த பொன்னான நேரத்தை பயன்படுத்தாமல் மேலும் தொடர்ந்து மற்றவர்களை ஒத்துப் பார்த்து படிகளில் சிலர் ஏறி இறங்கியது மிகவும் பரிதாபமாக இருந்தது... அந்த மூச்சு இளைப்பில் தன் உள்ளே இருக்கும் தோன்றாநிலைக்கு செல்லாமல் தோன்றும் நிலையான வெளி காட்சிகளில் கவனிக்க கண்களை
திறந்து வேடிக்கை பார்த்தது அதை விட பரிதாபமாக இருந்தது.. குறிக்கோள் முற்றிலும் தவற விடப் பட்டது..
மேலே இறை சன்னிதானத்தில் தோன்றா நிலையோடு எந்த வித கோரிக்கைகளும் இல்லாமல் அமைதியாக நின்று இறைவன் தன் பேரறிவால் எது கிடைத்தால் எல்லா கிடைக்குமோ அந்த தேவையை நம்முள் பதிக்க பதியாகிய இறைவன் முன் நிற்க இறைவன் அவனுடைய அருள் பணியை செய்ய பணிவோடு அனுமதிக்க வேண்டும் என்ற சிறு சொற்பொழிவு நடந்தது.. இறை ஆற்றலை பெற உண்மையான பக்தியோகத்திற்கான விதை விதைக்கப் பட்டது.. மலை ஏற்ற பயிற்சியின் முடிவில் இறை சன்னிதானத்திற்கு சென்று வந்தவர்களில் இருவர் எனது கோரிக்கையை இறைவன் முன் வைத்தேன்.. அது நடக்குமா ? என்ற கேள்வி அதிர்ச்சியை தந்தது.. எப்படி இறைவன் முன் இருந்தால் எதுவும் நடக்குமோ அதற்கான ஆயுத்தப் பயிற்சியான தோன்ற நிலை அனுபவப் பட வெகு தூரம் வந்து குன்றத்தூரில் மலையேறி பயின்றோமோ அதன் குறிக்கோள் இந்த கேள்வியால் தகர்த்து எறியப் பட்டது..
ஒரு அன்பர் என் மனதில் எந்த எண்ணங்களும் தோன்றுவதே இல்லை என்றும் ஆகையால் இது போன்ற மலையேறும் பயிற்சி தனக்கு தேவை இல்லாதது போல் பேசினார்.. பின் இது ஐப்பசி மாத முதல் தேதி வீட்டில் சடங்கு ஒன்று செய்ய வேண்டும், அது என்னை உறுத்திக் கொண்டே இருக்கிறது, அவசரமாக செல்ல வேண்டும் என்று விடை பெற்றுக்கொண்டு மிக அவசரமாக சென்று விட்டார்கள்.. எண்ண ஆதிக்கங்கள் தன்னை வருத்துவதை கூட உணர முடியாத அளவு அவர் இருந்தது வியப்பை அளித்தது..
ஒரு அன்பர் இந்த பயிற்சியின் முடிவில் தேடி கண்டு பிடித்து கோவிலில் சக்கரை பொங்கலை வாங்கி வந்தார்.. அதை எல்லோருக்கு காண்பித்து எல்லோரிடமும் ஒரு மன சலனத்தை ஏற்படுத்தி விட்டார்.. இது எந்த அனுபவமும் பெறாததை போல் ஏதோ வெறுப்பு அடைந்து அதை ஈடு கட்டுவதற்கு சக்கரை பொங்கலை வாங்கி வந்தது போல் தெரிந்தது.. ஒரு அன்பர் தன் திருமண நாள் அன்றுதான் என வெளிபடுத்த அதை கொண்டாடும்படி மற்ற அன்பர்கள் வற்புறுத்த, அவர் நிறைய பிரசாதங்களோடு வந்தவுடன் சூழ் நிலை முற்றிலும் மாறி ஓரிருவர் பெற்ற துளி அளவு தோன்றாநிலை அனுபவமும் அந்த மலை காற்றில் கரைந்து போய் விட்டது.. யாரும் பயிற்சி அனுபவத்தை பேசி பகிர்ந்து கொள்ள வில்லை.. பிரசாத அனுபவமும் அந்த மலைக்கு வந்த விதமும் இனி போகும் விதமும் பற்றிய பேச்சுக்களே அதிகம் இருந்தது.. மலை ஏறிய அனுபவத்தோடு விடைபெற்று சென்றார்களோ என்று தெரியவில்லை.. பர அனுபவத்திற்கு பதிலாக கோவில் பிரசாத அனுபவம் முன்னிலையில் இருந்தது தெளிவாக தெரிந்தது.. முகநூல் பக்கம், தனித்தனியாக கொடுத்த காகித பக்கம், நேரடி பேச்சு விளக்க உரை, அனைத்தையும் மனம் தன் வல்லமையால் சுலபமாக முதல் நாள் பயிற்சியில் வென்று விட்டது என்பது தெளிவான உண்மை.. இந்த பதிவு சென்னை அன்பர்களை தவிர மற்ற நகர அன்பர்களுக்கும் உதவும் நோக்கத்தோடு எழுதப் பட்டது.. மனம் படைத்த நாம் அனைவருமே இந்த தோல்விக்கு முழு பொறுப்பு.. அடுத்த முறை பயிற்சியில் நாம் கூட்டாக இருந்து சிறுக சிறுக கூட்டாக வெற்றி கொள்ள முனைவோமாக...


  மலை ஏற்ற அனுபவங்கள் -- பகுதி இரண்டு
இன்று ( 25-10-15 ) அன்பர்கள் சென்னை பல பகுதியில் இருந்து குன்றத்தூர் மலை அடிவாரத்திற்கு சிவில் ஒழுக்கத்தோடு வந்து சேர்ந்தார்கள்.. சிவில் ஒழுக்கம் என்றால் குறித்த நேரத்தில் வராமல் காலம் தாழ்த்தி வருவது.. ஒரு அன்பர் ஒரு மணி நேரம் தாமதமாக வந்தார்.. காரணங்கள் பல இருப்பினும் இந்த தாமதத்தின் அடிப்படை குறைபாடு ஒன்றுதான்... உயிர் துயரம் அல்லது ஆன்மா துயரத்திற்கான குறைபாடு... ஆன்மா அல்லது உயிர் துயரம் நீக்குவதற்கே நமது பயிற்சியின் நோக்கம்.. ஆனால் பாதிக்கு மேல் அன்பர்கள் மலைக்கு உயிர் துயரத்தோடே வந்தார்கள்... விழிப்பு நிலை அற்றவர்களுக்கு உயிர் துயரம் தேடித் தேடி வரும்.. மன நிலையோடு பொருந்தி இயற்கை நிலையான விழிப்பு நிலைக்கு மாறு பட்டு தங்கள் செயல் பாட்டிலும் பொருந்தாமல் மாறு பட்டு இருந்து உயிர் துயரத்தை மனித குலம் விலை கொடுத்து வாங்குகிறது...
பகுதி ஒன்றில் சொன்ன அனைத்து குறைகளையும் நீக்கி மிக கவனமாக அன்பர்கள் இருந்து செயல் பட்டது மிகவும் வியப்பாக இருந்தது... ஆனால் மனதிற்கு மாற்று வழிகள் தெரியாதா என்ன ? தேக பயிற்சியில் அதிகம் ஈடுபாடு கொண்ட ஒரு அன்பர், சுவாச இளைப்பு வருவதற்காக மிக அதி விரைவாக மலை ஏறினார்.. கின்னஸ் சாதனையை முறியடிக்கும் விதமாகவும் பல பேர்கள் வியப்பில் ஆழ்த்தும் விதமாகவும் இருந்தது.. மிக விரைவாக சென்ற அந்த அன்பருக்கு அந்த வேகம் அவருக்கு தேவையாக இருந்தது.. அதில் ஒன்றும் தவறு இல்லை.. ஆனால் முடியாத இரு அன்பர்கள் அவரை ஒத்துப் பார்த்து அவரை போலவே ஏற முயன்று தாங்க முடியாத மூச்சு இளைப்பிற்கு ஆளானது மிக வருத்தமாகவும் சற்று நகைப்பாகவும் இருந்தது... சில அன்பர்கள் மூச்சு இளைப்பிலே உடன் பாடு சுவாசத்தில் இருந்த பின் சுவாசம் இயல்பான நிலைக்கு வந்த பின்பும் அப்படியே அமர்ந்து இருந்தது தெரியவந்தது.. சுவாசம் இயல்பு நிலைக்கு வந்த பின்பும் அவர்களிடம் எண்ண ஓட்டங்களில் சிக்குண்ட நிலையில் இருப்பதை அவர்கள் தாங்கள் மற்றவர்களை பார்க்கும் பார்வையிலேயே, தன்னை தானே காட்டி கொடுத்து விட்டார்கள்.. சுவாசம் இயல்பு நிலைக்கு வந்தவுடன் எண்ணங்கள் தோன்ற தொடங்கியவுடன் பயிற்சியில் தொடங்க வேண்டும் என்பதை மறந்து விட்டார்கள் போலும்.. அதுவும் விழிப்பின் நிலை குறைபாடே... அப்படி கண்களால் வேடிக்கை பார்க்காமல் கண்கள் மூடிய நிலையில் அதிக நேரம் அமர்ந்த நிலையில் இருந்த ஓரிரு அன்பர்கள் ஒரு இரகசிய குட்டி தூக்கம் தூங்கி இருந்திருக்க வேண்டும்.. அதில் கனவுகள் கூட கண்டு இருந்து இருக்கலாம்.. தலை சாய்ந்த அவர்களின் தேக அமைப்பு அவர்களின் நிலையை காட்டி கொடுத்து விட்டது.. இதிலிருந்து தப்பிக்க மனம் அடுத்த வாரம் மலை ஏறும் சமயம் மறைமுகமான இடத்தில் யாரும் கவனிக்க முடியாத வண்ணம் அமர்ந்து இருக்க யோசிக்கலாம்...
இந்த முறை மலையேற்ற அனுபவத்தில் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான ஒன்றை ஒரு அன்பர் சொல்லாமல் சொல்லி அந்த இரகசியத்தை நமக்கு உணர்த்தினார்.. மலை ஏற்ற பயிற்சியில் 24 அன்பர்கள் கலந்து கொண்டனர்.. கூடியுள்ள இத்தனை அன்பர்களுக்கு வர்ம கலையை இலவசமாக சொல்லி தர ஒரு யோகி ஒருவர் விரும்புகிறார், அவரை வகுப்பு எடுக்க அனுமதிக்கலாமா என கேட்டார்.. திட்டவட்டமாக மறுப்பு அளிக்கப் பட்டது.. மிக நல்ல விசயம் தானே; இதில் என்ன தவறு இருக்கிறது என சிலருடைய மனதில் எண்ணம் எழலாம்... அது நல்ல விசயமே அல்ல.. மிக கொடுமையான விசயம்... தோன்றா நிலையில் தன் அக நானை காண மிகுந்த சிரமத்தோடு பயிலும் அன்பர்கள் ஒரு பெரிய மனமாற்றத்தில், மனதிற்கு அப்பால் உள்ள அகநானாகிய தெய்வீக நிலை, தொலைந்து போக அந்த மலை மேல் உள்ள முருகனே தோன்றும் நிலையில், தரிசனம் அந்த நேரத்தில் தந்தால் கூட ஏற்புடையது அன்று...
மிகவும் சிரமப் பட்டு தோன்றா நிலையில் தெய்வீக அக நான் அனுபவத்தை அனுபவிக்கும் அன்பர்கள் ஒன்றை மறந்து போய் விடுகிறார்கள்.. அந்த அனுபவத்தை தக்க வைக்கும் நெறியில் தோற்றுப் போய் விடுகிறார்கள்.. பெற்ற அனுபவத்தை தக்க வைத்து, அந்த அனுபவம் நீர் நிலையான சித்தத்தில் ஏறி அது மண் என்ற உறுதியான அனுபவத்தில் லயமாகவில்லை என்றால் எத்தனை முறை மலை ஏறி பயின்றாலும் பலன் ஒன்றும் கிடைக்காது... அந்த அனுபவத்திற்கு பின் தக்க வைக்கும் சூழ்நிலையில் நாம் இருக்க வேண்டும்.. அந்த சூழ்நிலை கெட்டு விட்டால் அந்த அனுபவம் நீரின் மேலே எழுதிய எழுத்து போல் மறைந்தே போகும்.. மீண்டும் அடுத்த அனுபவம் ஆரம்பத்திலிருந்து தொடங்க வேண்டியதிருக்கும்.. ஏற்கனவே கட்டப் பட்ட கட்டிடத்தின் மேல் கட்டிடம் கட்டாமல், ஏற்கனவே கட்டப் பட்ட கட்டிடம் காணாமல் போனதால், மீண்டும் கட்ட ஆரம்பிப்பது போல தான்... அந்த அவல நிலையால் எந்த முன்னேற்றமும் துளியும் காண முடியாது.. ஆகவே தான் அந்த தோன்றாநிலை அனுபவதிற்கு பின் தக்க வைத்து காக்கும் நெறியும் மிக முக்கியமானது.. அன்பர்கள் பயிற்சிக்கு பின் அந்த அனுபவத்தை தக்க வைக்கும் முறைக்கு எவ்வளவு முக்கியத்துவம் உள்ளது என்பதை நன்கு உணர்ந்து இருப்பார்கள் என நம்புகிறேன்.. சென்ற முறை சக்கரை பொங்கலாக சாமி பிரசாதமாக வாங்கியது தான் தக்க வைத்தலை கெடுத்தது...அதை குறை கூறியது சிலருக்கு வருத்தமாக இருக்கலாம்.. ஆனால் தெய்வீக அனுபவமாகிய தோன்றா நிலைக்கு அது சாதகமாக இருந்ததா ? அல்லது பாதாகமாக இருந்ததா? என்பதை அன்பர்கள் தங்கள் விழிப்பு நிலையில் உணர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.. அந்த ஒரு நாள் ஞாயிறு அன்று பெற்ற அனுபவத்தை தக்க வைக்கும் செயலாக தங்கள் வீட்டு மாடி படிகளில் ஏறி இறங்கியோ அல்லது மைதானத்தில் ஓடியோ அந்த அனுபவத்தை பெற்று, தக்க வைத்தலில், சித்தத்தில் ஏற்றி மண் பூதத்தில் உறுதி பட முனையவேண்டும்.. அப்படி செய்து அடுத்த முறை குன்றத்தூர் பயிற்சிக்கு வரும் போது, மிகுந்த முன்னேற்றத்தை காணலாம்... வெற்றி என்பது தக்க வைத்தலிலும் உள்ளது என்பதை அன்பர்கள் உணருவார்களாக.. அக்கம் என்றால் அசையும் தன்மை அற்றது, நிலை கொண்டது என பொருள்.. ஆக்கம் என்றால் செயல் பாடு அசையும் தன்மை உள்ளது... தக்கம் அல்லது தக்கவைத்தல் என்பது த் + அக்கம் என பிரிந்து திட நிலையில் மாறாமல் அசைவற்று இருப்பது என பொருள் கொள்ளும்.. அக்கம் பக்கம் என்பதில் அக்கம் என்பது நிலையானது பக்கம் என்பது நகர்ந்து புரளக்கூடியது.. அக்கம் பக்கம் பார்க்க வேண்டும் என்பது இதுதான்.. விழிப்பு என்ற அக்கம் ஒன்றை அதாவது நிலையான ஒன்றை பக்கம் ( வேறு சிந்தனைகளால் ) புரளாமல் பார்த்துக் கொள்வோம்.. இது தமிழ் யோக குறிப்பு...



  மலை ஏற்ற அனுபவங்கள் -- பகுதி மூன்று  இரண்டாம் நிலை மலை ஏற்ற பயிற்சி
அன்பர்கள் மூன்று ஞாயிற்று கிழமைகளில் மலை ஏற்றம் பயின்று, தொடர்ந்து மற்ற நாட்களிலும் வீட்டு மாடி படிகளில் ஏறியோ அல்லது மைதானத்தில் ஓடியோ பயிலும் போது பெரும் சுவாசம் என்ற மூச்சு இளைப்பில் மனம் தன் செயற்ற தன்மையில் எண்ண ஆதிக்கங்கள் இல்லாத தோன்றா நிலையினை அனுபவப் பட்டீர்கள்.. அந்த எண்ண ஆதிக்கங்கள் இல்லாத நிலையில் தங்கள் மனதின் எல்லைக்கு அப்பால் மனம் அறியாத வண்ணம் அண்ட ஆற்றலின் அதிக வரவால் கடினமாக வேகமாக மலை அல்லது படியேறியும் மூச்சு இளைப்பு வெகுவாக குறைந்து போய் இருக்கிறது என சில நண்பர்கள் சொன்னார்கள்.. இதுதான் எதிர் பார்க்கப் பட்டது.. இது மிகவும் நல்லது.. நல்ல முன்னேற்றத்தின் அறிகுறி.. இது தோன்றாநிலையில் மட்டுமே அண்ட ஆற்றல் வரவு அதிகமானதின் அடையாளம்.. தோன்றா நிலையில் பெறப் படும் அண்ட ஆற்றல் காரியப் பட்ட செயல் பாடுகளில் மட்டுமே வெளிப் படும்.. அதனை காண மனதால் ஒரு போதும் முடியாது.. ஊக்கமும் உற்சாகமும் செயல் பாட்டின் திறனில் மேன்பட்ட நிலைதான் அதிக அண்ட ஆற்றலின் வரவின் வெளிப்பாடு.. அதனை காண முடியவில்லை என எவராவது புலம்பினால் மர்ம யோகத்திற்கு அவர்கள் தகுதி அற்றவர்கள்.. மர்மத்தை மர்மமாகவே ஏற்றுக் கொண்டு பயின்றால் மட்டுமே பெருத்த ஆதாயம் காண முடியும்.. கடவுளும் ஒரு மர்மமே.. ஒரு மறைவான அருவ நிலையில் உள்ளவரே.. அவரை மனதால் அறிய முயன்று முயன்று இன்று மனித குலம் அவரை விட்டு விலகி விலகி நிற்கிறது..
மர்ம நிலையிலும் அருவ நிலையிலும் இருக்க வேண்டிய பேரறிவு, மன கற்பனையின் குளறுபடியால் திரிபு களங்கம் ஏற்பட்டு இன்றைய சூழ்நிலையில் அந்த பேரறிவு சரியான விதத்தில் செயல் படாமல் உள்ளது.. அடியாளம் காண்பிப்பது அவசியம் ஆயினும் அந்த உருவநிலை அடையாளம் பெரிய அளவிலே ஆதிக்கம் செலுத்தி அருவ நிலையாகிய தோன்றா நிலையினை அழித்து விட்டதால் தான் இன்று உலகில் ஆற்றல் குறைபாட்டால் மனித குலம் மகிழ்ச்சியை இழந்து, அந்த மகிழ்ச்சியை திரும்ப பெற தகாத வழியை தேர்ந்து எடுக்கிறது.. தகாத வழியில் மகிழ்ச்சியை பெற என்றுமே முடியாதது.. ஆகவே மறைவு நிலையான மர்மத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திக் கூறுவது.. புரியாத மர்மத்தை புரியாததாகவே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது.. இதில் மனதால் நுழைய துடிப்பவர்கள் எவரும் கரை ஏறவே மாட்டார்கள்... இன்றைய ஒட்டு மொத்த மதங்களும் ஆன்மீகங்களும் மனதால் நுழைய துடித்து பல தடவை தோற்று போயும் பாடங்களை எதுவும் கற்றுக் கொள்ளாமல், மீண்டும் மீண்டும் அதே தவறு செய்து கொண்டு இருக்கிறது.. அந்த தவறை நீக்கி தோன்றா நிலையை மனதால் ஏற்றுக் கொள்ள பயிலுவதற்கு தான் இந்த மலை ஏற்றப் பயிற்சி..
தோன்றா நிலையை விழிப்பு நிலையால் உணரும் அன்பர்கள் அடுத்த கட்ட பயிற்சிக்கு செல்ல வேண்டும்.. உணர்வு என்றாலே விழிப்பு நிலை. அது தோன்றா நிலையில் மட்டுமே உணரப் படும்... நினைப்பு என்றாலே மனத்தின் செயல் பாடு.. அது தோன்றும் நிலையாலே மட்டுமே நடக்கும்.. தோன்றா நிலையில் ஆற்றல் வரவும், தோன்றும் நிலையில் ஆற்றல் செலவும் நடை பெறுவது அன்பர்கள் நன்கு அறிந்ததே.. மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் நினைப்பு சதா காலமும் உணர்வினை கெடுத்துக் கொண்டே, அல்லது சீரழித்துக்கொண்டே இருக்கிறது என்பது தான்.. உணர்வினை பிடித்துக் கொள்வதின் மூலம் நாம் தோன்றா நிலையில் நீடிக்க முடியும்.. இப்பொழுது தோன்றா நிலையை, உடன் பாடு சுவாச மூலம் அடையாளம் தெரிந்து உணர்ந்து கொண்ட நாம், அதில் நீடிக்க, உணர்வு மயமாக இருக்க முயல வேண்டும்... இது மிக கடினமான பயிற்சி.. முந்தைய பயிற்சி வேகத்தில் நடந்தது.. இப்பொழுது மிக நிதானமாக நடக்க வேண்டிய ஒன்று...
இனி வரும் மூன்று வாரங்களில் அதாவது 4, 5, 6, வது வார ஞாயிற்றுக் கிழமைகளில் பயிலக்கூடிய பயிற்சி மிக முக்கியமானது.. இந்த மூன்று வாரங்கள் உணர்வு வாரங்கள்.. கடந்த கால அனுபவ இறப்பு தன்மையை ஒழித்து நிகழ்கால புத்துணர்ச்சியும் வாழ்வும் பெற, பெரிய மாற்றத்திற்கான பயிற்சி.. விழிப்பு நிலை ஏற்றத்திற்கான, வலுவடைவதற்கான பயிற்சி.. வரும் ஞாயிறு முதல் மூன்று வாரங்கள் அன்பர்கள் மிக நிதானமாக மலை ஏற வேண்டும்.. அண்ட ஆற்றல் தேக ஆற்றலான கனலாக மாறும் போது ஏற்படுகின்ற இரசாயன மாற்றம் தான் உணர்வு.. மலையேறும் அன்பர்கள் இந்த இரசாயன மாற்றமான உணர்வில் மனம் பொருந்தும் போது, மனம் வெளிச்சத்தை விட்டு விலகி கனலை நோக்கி நகருகிறது.. கனல் பெருக்கத்திற்கு அது மிக உதவுகிறது.. இரசாயன மாற்றம் விரைவாகவும் அதிகமாகவும் நடை பெற, அந்த உணர்வில் மனம் பொருந்தும் போது, நிகழ்கிறது.. உணர்வோடு மனம்.. இது தாரக மந்திரம்.. என்றும் மறக்கக் கூடாது.. உணர்வோடு மனம் கனல் என்ற அக்கரை சேர்க்கும்.. அந்த அக்கரை, வெளிச்சம் என்ற இக்கரையான அகக் கறையை, அக அழுக்கை நீக்கும்.. இதில் புரிதலில் சிக்கல் இருந்தால் கேள்வி எழுப்பலாம்..
வெளிச்சமான மனதை தான் எண்ண ஆதிக்கங்களோடு கூடிய வழக்கமான மனம் என்று சொல்லிகொண்டு வருகிறோம்.. கனலோடு பொருந்திய மனம் ஒன்று மட்டுமே சுத்த கனலான விழிப்பு நிலையோடு தொடர்பு வைத்துக் கொள்ள முடியும்.. உணர்வோடு மனம் பொருந்தும் போது கனலோடு தொடர்பு கொள்வதால் இந்த மனம் அகநான் என்ற மனமாக மாறி தெய்வீக தொடர்புடன் இருக்கிறது.. இந்த தெய்வீக அக நான் வேலையை வேல் ஆக மாற்றும் வித்தையை செய்கிறது.. ஆனால் வேல் ஒன்றை ஏவும் வேலவன் அதாவது முருகன் இன்னும் உதிக்க வில்லை.. வேலவன் தோற்றம் அடுத்தக் கட்ட பயிற்சி.. தற்போது குழப்பிக் கொள்ள வேண்டாம்.. வேலவனுக்கு அதாவது முருகனுக்கு முன்பே வேல் தோன்றியது என்பது புராணம்.. தற்போது அகநானாகிய வேல் தோன்ற உணர்வு ஒன்றிலே மனம் பொருந்த வேண்டிய அவசியம் ஆகிறது... எண்ண ஆதிக்கங்கள் நிறைந்த ஒரு வேலை ஒன்றினை கனல் நிறைந்த தோன்றா நிலையான, வேல் ஆக வடிவெடுத்து நாம் புறத்தே திறம் பட இயங்க உணர்வு மயமாய் மனம் ஆக வேண்டும்.. புறத்தே செயல் பாட்டின் திறனை மேலும் மேலும் பெருக்க செயல் பாடு வீரர்களாய் மாறவும், நிறை நிலை மனிதனாய் மாறவும், அடுத்த கட்ட பயிற்சிகளை தொடர்வதற்கு நம்மை தயார் படுத்த, தற்போது உணர்வோடு மனம் பொருந்த, மலை ஏற்றும் பயிற்சியை வரும் மூன்று வாரங்கள் மிகுந்த உணர்வோடு பயில்வோமாக.. ஞாயிற்று கிழமை மற்றும் அல்லாது மற்ற வார நாட்களில் பயில்வது மிக அவசியம் ஆகிறது.. வாழும் நெறியான சிவகலப்பை நோக்கி நகர்ந்து நிறை நிலை மனிதனாக மாறும் நோக்கம் ஒன்றையே குறிக் கோளாக கொள்வோமாக...

  மலை ஏற்ற அனுபவங்கள் -- பகுதி நான்கு  இரண்டாம் கட்ட மலை ஏற்றத்திற்கான முக்கிய குறிப்புகள்
அற்புதத்தை அற்பமாக்கி விட்டதால் உலகம் என்றும் தடுமாறிக் கொண்டு இருக்கிறது.. இன்றைய சூழ்நிலையில் அதிகம் தடுமாறுகிறது.. அற்புதத்திற்கு வரையறுக்க முடியாத அண்ட ஆற்றலும் அதன் எல்லையில்லா தனி பெருங்கருணையும் இன்று மனித குலம் மிக அற்பமாக நினைப்பதை தான் சித்தர்கள் நெஞ்சு பொறுக்குவதில்லையே என புலம்பினர்... அந்த அற்புதத்தை அற்புதமாக நினைக்கும் தருணம் மனிதன் மிக பெரிய அற்புதம் செய்யும் வல்லமை அடைகிறான் என்ற ஒரு மிக சாதாரண உண்மையை அறிந்து கொள்ள முடியாது இருக்கிறான்... அறிவு நிலையாகிய ஆகாயமும் அதன் ஆற்றலையும் என்ன சொன்னாலும் உளமாற மனிதன் நம்பத் தயாராக இல்லை.. நிஜத்தை நம்பிக்கையாகவே வைத்துக் கொண்டு நடைமுறைக்கு வராமல் சில மாயை கோட்பாடுகளை அதை சுற்றி புனைந்து நிஜத்தை முற்றிலும் மறைத்தே விட்டார்கள்.. அந்த மறைப்பிற்கு பின்னால் இருக்கும் நிசத்தை உண்மையை நொடியில் கண்டு அறிந்து ஒவ்வொரு நொடியும், அந்த உண்மையோடு ஒவ்வொரு மலை படி ஏறும் போது ஒவ்வொரு அடியும் வைக்கும் போது, அது தெய்வீகமாக மாறுகிறது.. தெய்வீகத்தை இதுவரை துளியும் அனுபவப் படாத மனித குலம் அந்த அண்ட ஆற்றலால் இந்த தேகம் இயங்குகிறது என்பதை உணரும் போது, ஒவ்வொரு படியிலும் ஒவ்வொரு அடியும் ஒரு இனம் தெரியாத உணர்வு தோன்றுகிறது... அந்த உணர்வு வேறு ஒன்றும் இல்லை.. எல்லையில்லா அகண்டகார பெருவெளியில் அங்கு இங்கு என குறிப்பிட்டு சொல்ல முடியாத நிலையில் எங்கும் நீக்கம் இல்லாமல் நிறைந்துள்ள புனித பரிசுத்த அண்ட ஆற்றல், தேகத்தில் ஊடுருவும் போது தேக சக்தியான கனலாய் மாறும் மாற்றம் தான் அது.. அப்படிப்பட்ட உணர்வினை நாம் உணவு உண்ணும் போது எவ்வளவு இழிவாக எடுத்துக்கொள்கிறோம் என்பது நாமே நமக்கு தெரிந்த ஒன்றே.. ஒவ்வொரு தொழிலாளியும் தன் தேக உழைப்பு ஒரு தெய்வீக பேர் இயக்கம் என்பதை அறியாது வேலை செய்கிறார்..
நொடிக்கு நொடி மறக்காமல் ஒவ்வொரு படியும் ஏறும் போது அந்த தெய்வீக பேர் இயக்கம் செயல் படுகிறது என்ற உணர்வோடு செல்ல செல்ல என்ன நிகழ்கிறது என்பதை அனுபவப் படும் அன்பர்கள் தான் சொல்ல வேண்டும்... காலிலே தேகத்திலே உள்ள உணர்வோடு மனம் இணைந்து படி ஏறும் போது தோன்றா நிலை அனுபவப் படுவது மட்டும் அல்ல, தோன்றாநிலை வலுப்படுவதையும் உணரலாம்.. அதனால் அதிக அண்ட ஆற்றல் வரவின் காரணமாக படிகளில் ஏறும் போது ஒரு சுலப தன்மையை மேலும் மேலும் உணரும் போது வியப்பினை தரும்..
அண்ட ஆற்றலின் அதிக வரவால் படிகளே நம்மை தாங்கி தாங்கி ஏற்றிச் செல்லுகிறதோ என சந்தேகிக்கும் அளவிற்கு நம் நிலைமை மாறலாம்.. அப்படி அனுபவப் பட்டதால் தான் படி பூஜையில் ஒவ்வொரு படிக்கும் சந்தனம் குங்குமம் கற்பூரம் வைத்து வழிபட்டனர்.. இழந்து போன அந்த அனுபவத்தை நாமாவது இரண்டு மூன்று வாரங்களில் பெறுவோமாக.. அதனை அந்த சத்தியத்தை உணர்ந்து நடப்பதால் இதுவும் நிச்சயம் நமக்கு சாத்தியமாகும்...
நிதானமாக ஆரம்பத்தில் படியேற வேண்டும்.. முதல் மூன்று வாரங்கள் பயின்ற அன்பர்கள் தோன்றா நிலை அனுபவத்தோடு படியேற வேண்டும்.. ஒவ்வொரு படியும் உணர்வினை தூண்டும் விதமாக இருக்க வேண்டும்.. எந்த படியையும் உணர்வின்றி மனதால் வேகமாக கடந்து போகக் கூடாது..
அப்படி படிகளில் கடக்கும் போது பெரு மூச்சு என்ற இளைப்பு வந்தால் சற்று நின்றோ உட்கார்ந்தோ உடன் பாடு சுவாசத்தில் பயில வேண்டும்.. மூன்று வாரங்களில் முறையோடு அக்கரையோடு பயின்றவர்களுக்கு அப்படி பெருமூச்சு வர சந்தர்ப்பம் இல்லை... அப்படி வந்தால் தாங்கள் பயிற்சியில் பின் தங்கிய நிலையை கருத்தில் கொண்டு தீவிர பயிற்சியை இனி மேலாவது வரும் நாட்களில் மேற் கொள்ள வேண்டும்...
4,5&6 வாரங்கள் உணர்வு வாரங்களாக பயின்றால் தான் அடுத்து 7வது 8வது வாரத்தில் மூன்றாம் கட்ட பயிற்சி சுலபமாக கைகூடும்.. மிக சிக்கலான மூன்றாம் கட்ட நான்காம் பயிற்சியின் தன்மையை மனதில் கொண்டு மிகுந்த சுய ஒழுக்கத்தோடும் சுய சிந்தனையோடும் பயிலுவது அன்பர்களின் பொறுப்பு..
உடம்பினுள் உரு பொருள் கண்டேன், உடம்பினுள் உத்தமன் கோயில் கொண்டுள்ளான், என்ற திருமூலர் வாக்குப் படி, உடம்பினுள் புகுந்து இறை வாழும் கோவிலில் நுழையும் இந்த அரிய பயிற்சி செய்யும் போது வெளியே நம் நடவடிக்கைகளை சுத்தமாக குறைத்துக் கொள்வது மிகுந்த பயன் அளிக்கும்.. நிகழ் கால தெய்வமாகிய அண்ட ஆற்றலை விட்டு விட்டு கடந்த கால எண்ண அலைகளின் ஆதிக்கத்தில் நாம் நம்மை இழப்பது, நம்மை நாமே வருத்திக் கொள்வதாகும்... ஆகவே பேச்சை முடிந்த மட்டும் அதிகப் பட்சம் குறைத்துக் கொண்டு, நிகழ் கால இறையாகிய அண்ட ஆற்றலோடு ஒன்றித்து பயின்று பெருத்த ஆன்ம இலாபம் அடைவோமாக...





   மலை ஏற்ற அனுபவங்கள் -- பகுதி ஐந்து   வள்ளலார் தமிழ் நெறியில் உள்ள நான்கு பயிற்சி நிலைகளை சொல்லுகிறார்,, இது யோக நிலைக்கு மிகவும் பொருந்தும்.. அந்த நான்கு நிலைகளில் ஒவ்வொன்றிலும் உட் பிரிவுகள் உண்டு.. ஆக மொத்த 16 பயிற்சி நிலைகள் உள்ளன... அந்த நான்கு முக்கிய பயிற்சி நிலைகள்           1) சரியை 2) கிரியை 3) யோகம் 4) ஞானம் .. வாசி யோகத்தில் இந்த நிலைகள் என்ன என்ன என கவனிப்போம்..
1) சரியை:-- உடன்பாடு சுவாசம், சுவாச ஒழுங்கு, உணர்வு நிலையில் பொருந்துதல் 2) கிரியை :-- கதி சுவாசம் 3) யோகம் :-- கனல் சுவாசம் 4) ஞானம் :--- கரு நிலை சுவாசம்
நாம் இப்போது மலை ஏறும் பயிற்சியில் சரியை நிலையில் இருக்கிறோம்.. இந்த சரியை நிலை நான்காக பிரிகிறது..  1) சரியையில் சரியை 2) சரியையில் கிரியை 3) சரியையில் யோகம் 4) சரியையில் ஞானம்
சரியையில் சரியையில் நாம் சரியான நேரத்தில் திட சிந்தனையோடு தியாகமும் அன்பும் நிறைந்த உள்ளத்தோடு வாழ வேண்டும் என்ற குறிகோள் உடன் வருகின்றோம்.. காலம் தவறாமையும் திட சிந்தனையும் செயலில் இறங்குவதும் இதன் முக்கிய பங்குகள்..
சரியையில் கிரியையில் மலை ஏறும் பயிற்சியில் உடன் பாடு சுவாசம் மூலம் நமது தோன்றா நிலையை பிடித்து, அண்ட ஆற்றல் வரவினை அதிகப் படுத்துவது...
சரியையில் யோகத்தில் உணர்விலே மனதை பொருத்தி கால அளவினை அதிகப் படுத்துவதின் மூலம் அண்ட ஆற்றல் வரவினை ஒழுங்கு படுத்தி நினைத்த மாத்திரத்தில் தேகத்தின் துணை இல்லாமல் சுவாசத்திலேயே அண்ட ஆற்றலை ஒழுங்கு படுத்தி சுவாச ஒழுங்கினை பெறுவது..
சரியையில் ஞானத்தில் அகநானை அடையாளம் கண்டு அகநானில் செயல் படுவதும், அப்படி அகநானில் செயல் படும் போது அண்ட ஆற்றலே அகநானாய் இருந்து செயல் படுகின்ற உயர்ந்த ஞானத்தை தெளிவை பெறுவது..
சரியையில் சரியை-- திருமண நிலை சரியையில் கிரியை-- கருவுற்ற நிலை சரியையில் யோகம் --- குழந்தை பிறந்த நிலை சரியையில் ஞானம்--- மகனாய் வளர்ந்து வளர்த்தவனையே தாங்கும் நிலை..
தோன்றா நிலையில் கருவுற்ற நிலையில் அகநான் தோன்றியாயிற்று.. அந்த அக நான் வளர்க்கும் விதமாக சரியையில் யோகம் என்ற நிலைக்கு நாம் அடியெடுத்து வைத்து இருக்கிறோம்.. அந்த அக நான் குழந்தைக்கு உணர்வு என்ற உணவு ஊட்டி ஊட்டி வளர்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.. அன்பும் கடமையும் இரு கண்களாக கொண்டு உணர்வோடு இருந்து 4, 5 &6 வாரங்களில் அகநானை வளர்ப்போம்... இப்பொழுது 5 வது வாரத்தில் ( 15-11-15 அன்று ) அடியெடுத்து வைக்கிறோம் .. மிகவும் கவனமாக பயில வேண்டுகிறோம்...
காலத்தை விரையம் பண்ணாது அக்கரையுடன் பயிலும் போது நாம் அடுத்த நிலையாகிய கிரியையில் காலெடுத்து வைக்க முடியும்... கிரியை நிலைக்கு தங்களை தயாராக்க முனைப்போடு பயிலுமாறு வேண்டுகின்றேன்.. டிசம்பர் மாதம் 27 ந்தேதி கிரியை நிலை பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.. அதற்குள் சரியையில் ஞானம் என்ற பயிற்சியை அந்த குன்றத்தூர் முருகன் அருளால் முடித்து யோக குழந்தையை, முருகனாய், நம்மில் காண விழைவோம்...

மலை ஏற்ற அனுபவங்கள் - பகுதி 6 ( 15-11-15)
வானிலை மைய எச்சரிக்கையையும், தொடர் மழையையும், பொருட்படுத்தாமல் பல பகுதிகளிலிருந்து அன்பர்கள் குறிப்பிட்ட நேரத்தில் குன்றத்தூர் மலை அடிவாரத்திற்கு வந்து சேர்ந்தார்கள்.. சில வழிமுறைகள் கேட்டு அறிந்த பின் பயிற்சியை தொடங்கினர்... மலை கோவிலில் கந்த சஷ்டி பாடல் எவ்வளவு பலமாக முடியுமோ அவ்வளவு பலமாக ஒலிபெருக்கியின் மூலம் ஒலித்துக் கொண்டு இருந்தது.. ஒருவர்கொருவர் பேசிக் கொள்வதற்கே முடியாத அளவிற்கு பாடல் ஒலி மிக அதிகமாக இருந்தது.. இந்த நிலையில் மழையின் வேகமும் குறைந்து, குற்றால சாரல் போல் விழுந்த நிலையில் பயிற்சியின் நெறி முறை பிரகாரம் மலை ஏறி பயின்றனர்... ஒருவர் கூட தவறாமல் எல்லோருமே தன் தோன்றா நிலையில் தானும் தன் தேக உணர்வு மட்டுமே அனுபவப் படுவது போல் , பயின்றது மிகவும் வியப்பு அளித்தது... தங்களுடைய முந்தைய பயிற்சியில் தீவிரமாக பயின்று தேறிய நிலையை இது சுட்டி காட்டியது... படிகளில் நிதானமாகவும் மிகுந்த விழிப்போடும் நடந்த விதம் அவர்கள் தன்னில் தானாய் எண்ண ஆதிக்கங்களில் சிக்காத நிலையில் முக பாவனை எப்படி இருக்குமோ அப்படியான மிக பாவனையில் இருந்து பயின்றார்கள்.. இது மிகவும் உற்சாகத்தை அளித்தது.. பயிற்சியின் நடுவில் 20 நிமிடமும் பயிற்சியின் கடைசியில் 40 நிமிடமும் சற்று கன மழைகாரணமாக கோவில் உள்ளே வகுப்பு நடை பெற்றது... அதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விசயங்கள் எடுத்து சொல்லப் பட்டன.. 7 & 8 வது வார புது பயிற்சிக்கு தங்களை ஆயத்தப் படுத்த இந்த இரண்டு வாரங்கள் தீவிர பயிற்சி செய்ய வேண்டிய அவசியத்தை எடுத்துச் சொல்லப் பட்டது...
7 & 8 வது வார பயிற்சி என்னவாக இருக்கும் என்பதை பற்றி துளியும் சொல்லவில்லை.. யாரும் கேட்க வில்லை.. காரணம் அதை தெரிந்தால் மனம் அதற்கு தாண்டி விடும் என்பதை தங்கள் விழிப்பு நிலையால் நன்கு அறிந்து இருந்தது அவர்களின் பக்குவ நிலையை எடுத்துக் காட்டியது... கேள்விகள் மறைய தொடங்கி தன்னில் தானாய் இருப்பதில் ஒரு அற்புத நிறைவு அன்பர்கள் அனுபவப் படுவதையே இது காட்டியது... உணர்வு மயமாய் அன்பர்கள் படியேறி பயின்ற போது ஒரு இனம் தெரியாத முன்னேற்றமான மாற்றம் அவர்களிடம் தென்பட்டது பயிற்சியில் அவர்கள் கொண்ட ஈடுபாட்டை சுட்டிக் காட்டியது... வகுப்பில் மனம் படுத்துபாட்டில் எப்படியெல்லாம் நாம் ஏமாற்றப் படுகிறோம் என்ற குறிப்புகள் நல்ல சிரிப்பலைகளை மட்டும் உருவாக்கியது... பெரும்பாலும் அன்பர்கள் ஒலி பெருக்கியின் பெருத்த சத்தத்தின் தாக்கத்தாலும் மழையின் தாக்கத்தாலும் சிறிது பாதிக்கப் படாமல் பயிற்சியில் தன்னில் தானாய் மூழ்கி பயிற்சியில் முழு நிலையில் இருந்தது தெய்வீகமாக இருந்தது... முருகனின் இறை அருள் அவர்களை நன்கு சூழ்ந்து செயல் பட்டது போல் தெரிந்தது... அடுத்தப் பயிற்சிக்கு தங்களை தயார் படுத்துவதில் உறுதியாக இருக்கிறார்கள் என்பது திண்ணம்...


மலை ஏற்ற அனுபவங்கள் -- பகுதி 7 ( 18-11-27 )
ஒரு அன்பரின் கேள்வி :--- அய்யா மலை ஏறும் சமயம் உடன் பாடு சுவாசம் செய்கின்ற போது சிறிது தலை வலிக்கிறது.. காரணத்தை அறிய விரும்புகிறேன்...
நாம் மனம் என்ற சிலந்தி வலையில் சிக்கி மிகவும் தவிக்கிறோம்... வானத்திலிருந்து மண்ணில் விழும் போது, புனித மழை நீர் எப்படியாவது மண்ணின் மாசுவால் கெட்டுப் போவது போல, விழிப்பு நிலையிலிருந்து வரும் ஒவ்வொரு செயலும் அண்ட ஆற்றலால் நடக்கும் போது, அதனை விழிப்பு நிலையில் உணராமல் மனம் அந்த செயலின் பலன்களை எல்லாம் வெளிச்சமாக மாற்றி விரையமாக்குகிறது.. மழை நீர் பூமிக்கு உதவாது கடலில் கலப்பது போல் நமது ஒவ்வொரு செயலின் பயன்களை உணர்வின் மூலமாக அதனை உடல் வளத்திற்கும், உடல் மேன்மைக்கும் பயன் படாமல், மனதால் அந்த பலன்களை எல்லாம் உடலுக்கு வெளியே பாய்ந்து விரையம் ஆகுகிறது.. அப்படி பாய்கின்ற போது அந்த ஆற்றலோடு ஏற்கனவே தேகத்தில் தங்கிய ஆற்றலையும் சேர்ந்து கணிசமான முறையில் வெளியே பாய்ந்து ஓடுகிறது... அதனால் விழிப்பு நிலையில் கால் ஊன்றாத எந்த யோகப் பயிற்சியும் முடிவில் உடல் சோர்வை மட்டுமே தருகிறது... நமது பயிற்சிகள் அனைத்தும் விழிப்பு நிலையில் கால் ஊன்றி பயிலும் பயிற்சிகளாகவே வடிவமைக்கப் படுகின்றன.... ஆனாலும் பழக்கத்தால் பயிற்சிகள் செய்யும் போது மனம் மிகுந்த எதிர்பார்ப்புகளோடு நான் செய்கின்றேன் நான் செய்கின்றேன் என்ற இறுமாப்போடு தன்னை ஈடு படுத்தி கொள்ளும் போது, ஆற்று வெள்ளம் கிணற்று நீரை அள்ளிக் கொண்டு சென்றது போல் உடல் ஆற்றல் இழந்து, இழந்ததின் காரணமாக உடலில் அங்காங்கே வலி தோன்றுகிறது.. சற்று பயின்று தேறி வரும் வரை நாம் வலி இருக்கும் இடத்தை விட்டு வேறு சில பயிற்சிகளை செய்தால் வலி உடனே காணாமல் போய்விடும்.. தலை வலி வரும் போது கால் பயிற்சியாக சற்று நடைபயணம் மேற் கொண்டால், கண்டிப்பாக தலைவலி நீங்கி விடும்... கால் வலி வரும் போது சற்று கைகளுக்கு பயிற்சி கொடுத்தால் கால் வலி குறையலாம்.. எந்த பயிற்சியும் செய்யும் போது மனதினுடைய ஆர்பாட்டம், கணிப்புகளுக்கு இடம் கொடுக்காமல் செய்யும் போது நாம் உணர்வோடு பொருந்தி அண்ட ஆற்றலின் தேக கலப்பை நாம் பெருக்கி பயன் கொள்ள முடியும்...
நான் பயிலுகின்றேன், இதோ நான் உணர்வோடு பொருந்தி யாரும் அடையாத பெரிய நிலைக்கு செல்லுகின்றேன், இனி நானே நாளைய இந்த நாட்டின் அதிபதி, எல்லோரையும் விட நானே உயர்ந்து நிற்பேன் போன்ற மன ஆர்பாட்டங்கள் துளி அளவும் தலை தூக்கினால் போதும் பயிற்சியின் தன்மை கீழ் நிலைக்கு போய் விடும்... ஆகவே பயிற்சி செய்யும் போது வலி தோன்றினால் சற்று விழிப்பு நிலையால் ஆராய்ந்து பார்த்தால் இந்த தவறுகள் மனதால் நடந்து இருப்பதை உணரலாம்.. அந்த வலியை மனதால் அறிய வைக்க வைக்க மனதிற்கு ஒரு பய உணர்வு ஏற்படும்.. இதுவும் சிறந்த உபாயம்.. பய உணர்வு மனதை ஓரளவு கட்டுப் படுத்தும்.. வலி வந்தால் அதனை பயன்படுத்தி அந்த வலியை நீடிக்க வைத்து அந்த வலிக்கான காரணம் மனம் தன் செயல் பாட்டினால் தான் என மனதிற்கு உணர வைக்கும் போது மனதிற்கு பய உணர்வு வருகிறது.. இப்படியாக நாம் போராடி போராடி விழிப்பு நிலையில் வாழும் அகநான் ஆகிய அககுருவை எழுப்பி விட்டால் அதன் பின் செய்யும் காரியங்கள் எல்லாம் சித்தி பெறும்...
நாம் அகநான் நிலையில் எந்த காரியத்தை செய்தாலும், அது முழு சித்தி பெறும்.. பயன் தரும்.. புற நானாகிய மனதின் மூலம் செய்யும் ஒவ்வொரு காரியமும் சீர் கெட்டே போகும்.. ஆனால் புற நானில் கலந்த பய உணர்வால் விழிப்பு நிலை செயல் படும் போது, செயல் படும் அளவிற்கு ஒரு காரியம் வெற்றி பெறுகிறது... பக்தியில் பயபக்தி அதிக பலன் தரும் என்பது இதனால் தான்.. ஆனாலும் அது ஓர் அளவிற்கே... அந்த அளவிற்குள் விழிப்பு நிலை பெருக்கம் அடைந்து, அந்த பயத்தை போக்கா விட்டால் அந்த பயமே மேல் பயிற்சிக்கு தடையாகி விடும்.. பய உணர்வில் கண்டுண்ட மதங்களில் உள்ளோர் விரிந்து ஓங்கிய நிலைக்கு செல்ல முடியாமல் இருப்பதற்கு காரணம் அந்த பய உணர்வே.. விழிப்பு நிலையை மையமாக வைத்து, அந்த விழிப்பு நிலையால் விழிப்பு நிலை பெருக்கத்தை அடைவது மிக சிறந்த வழி... நம்மில் இருக்கும் குறைந்த நிலையில் உள்ள விழிப்பு நிலையை பயன் படுத்தி மெல்ல மெல்ல முன்னேறி செல்வது சிறந்த வழியாகும்..
உலக அமைதிக்காகவும் மழைக்காவும் செய்யும் பூஜைகள் அனைத்தும் புறநான் நிலையில், செய்யப் படுவதால் உலக அமைதி மேலும் மேலும் கெடுகிறது.. சென்ற நான்கு ஆண்டுகள் தமிழ்நாட்டில் மழைக்காக செய்த பூஜைகள் ஏராளம்.. ஆனால் மழை பொய்த்துப் போய் ஏமாற்றி விட்டது.. ஆனால் இந்த வருடம் மழைக்காக தீவிரமாக எதுவும் செய்யவில்லை.. அதிக அளவு மழை பெய்து பூமி தேவைக்கு மேலே குளிர்ந்து விட்டது.. வானிலை மைய எச்சரிக்கையை மனதால் பொருட் படுத்தாமல் 15-11-15 அன்று குன்றத்தூர் மலை அடிவாரத்திற்கு வந்து கூடிய அன்பர்கள், மழை நிற்பதற்காக எந்த வேண்டுதலும் செய்யாமல் கீழ் மண்டபத்தில் விழிப்பு நிலையில் காத்து இருந்தனர்.. சற்று நேரத்தில் மழை நின்றது.. 45 நிமிடங்கள் வரை சிறு இதமான சாரல் மட்டுமே விழுந்தது.. பின் கோவில் உள்ளே வகுப்பு நடந்த போது கன மழை பெய்தது.. வகுப்பு முடிந்து வெளியே வந்த உடன் மழை நின்றது.. மீண்டும் பயிற்சி 30 நிமிடங்கள் தொடர்ந்த நிலையில் மழை சுத்தமாக நின்று விட்டது.. மீண்டும் வகுப்பு இரண்டாம் முறையாக கூடிய போது கன மழை பெய்தது.. வகுப்பும் பயிற்சியும் முடிந்த உடன் சற்று கன மழை பெய்தது.. சிறிது நேரம் மழை தாழ்ந்த உடன் அன்பர்கள் கலைந்து சென்றனர்.. அவர்கள் வீடு சேரும் வரை கன மழை இல்லை.. பின் தொடர்ந்த கன மழையில் குன்றத்தூரே நீரில் மூழ்கியது.. ஒரு மணி நேர தாமத மழையால் அன்பர்கள் பத்திரமாக வீடு போய் சேர முடிந்தது.. எந்த நிலையிலும் அவர்கள் மழையை கட்டுப் படுத்த, மனதளவில் நினைக்க வில்லை என்பது மிக முக்கியமானது.. விழிப்பு நிலையில் இருந்த அவர்கள் அண்ட பேரறிவோடு தொடர்பு கொண்டதால் வேண்டியவற்றை வேண்டிய வண்ணம் அண்ட அறிவே பார்த்துக் கொண்டது... பயிற்சிக்கு முன் இரண்டு நாட்கள் முன்பாக அய்யா மழை, பயிற்சியின் சமயம் நிற்க நீங்கள் ஏதாவது பிரார்த்தனை பண்ண வேண்டும் என அன்பர்கள் வேண்டிக் கொண்டனர்.. நான் முற்றிலுமாக மறுத்து விட்டேன்.. நமது விழிப்பு நிலையால் அண்ட அறிவே அனைத்தையும் பார்த்துக் கொள்ளும் என்றேன்.. அதே போலவே அன்பர்களின் கூட்டு விழிப்பு நிலையால் எல்லாமே சிறப்பாக, பாதுகாப்பாக நடந்தது... விழிப்பு நிலையில் அண்ட பேரறிவு செய்யும் அனைத்து சீரான காரியங்களை கனல் பக்கம் சாயாத, வெளிச்சம் பக்கம் சாய்ந்த மனம் காரியங்களை கெடுத்து விடும் என்பது முற்றிலும் உண்மை... அகநான் மூலம் ஒரு காரியத்தை செய்ய முடியுமா ?.. அதன் மூலம் மட்டுமே ஒரு காரியத்தை சிறப்பாக செய்ய முடியும்... அகநானாய் மாறுவது என்பதே மர்ம யோகத்தில் முதல் அடிப்படை தகுதி.. பேரறிவுடனும் பேராற்றலுடனும் சிவகலப்பிலே கலந்து நிறை நிலை மனிதன் ஆவது முடிவானது...

மலை ஏற்ற அனுபவங்கள் - பகுதி 8 (28-11-15)
 மூன்றாம் கட்ட மலை ஏற்ற பயிற்சிக்கான குறிப்புகள்
தேக இயக்கம்
 1) அண்ட ஆற்றல்                                                                                                             2) தேக கனல் ஆற்றல்                                                                                                               3) நுண் உடல் ஆற்றலான காரண உடல்                                                                   4) காரண உடலால் இயங்கும் பரு உடல் ஆற்றல்                                                                     5) வெளியே அழைத்துச்செல்லும் மன ஆற்றல்                                                          6) கவர்ச்சி என்னும் வெளி தொடர்புகளின் ஆற்றல்
      இவைகள் மூலமாக இயங்குகிறது...
வெளியே அழைத்துச் செல்லும் மன ஆற்றலின் போக்கை மாற்றி உள்ளே போக வெளி கவர்ச்சியற்ற தோன்றா நிலையினை அனுபவப் பட வேண்டி உள்ளது.. அதற்கு பரு உடல் ஆற்றலை அதிகப்படுத்த மலை ஏறும் பயிற்சி போன்று சற்று கடினமான பயிற்சி செய்யும் போது வெளியே ஓடும் மன ஆற்றல் உள்ளே ஓட துவங்குகிறது.. இந்த நிலையில் கவர்ச்சி என்னும் வெளி புற தோற்றங்களின் தொடர்பு துண்டிக்கப் படுவதால் தோன்றா நிலை உருவாகிறது..  ஆகாய அனுபவ அறிவு, தோன்றா நிலையினை அனுபவப் பட பட அந்த அறிவு பெருகி பெருகி சித்தத்தில் பதிவாக மாறி பின் நினைத்த மாத்திரத்தில், உடல் இயக்க துணை இல்லாமல், அனுபவ அறிவின் துணையால் தோன்றா நிலை விழிப்பு நிலையில் அனுபவ பட முடிகிறது.. அந்த நிலையில் வெளிச்சமாகிய புற தொடர்புகளை விட்டு விட்டு மனம் கனலாய் மாறி காரண உடலில் பொருந்தி, நினைப்பிலிருந்து உணர்வுக்கு மாறுகிறது.. இந்த மாற்றத்தின் கால அளவு மிக குறுகிய நிலையில் உள்ளதால், நீங்கும் நிலையில் உள்ளது... மனம் கனலிலே போதுமான நேரம் தங்கி இருக்க வேண்டிய அவசியம் ஆகிறது.. அந்த நிலையில் தான், கனல் வடிவான விழிப்பு நிலையை, மனம் நன்கு அறிந்து பழகி கொண்டு, விழிப்பின் மேன்மையை அறிந்து, அதோடு ஒத்துழைக்கும் நிலைமைக்கு வரும்..
அப்படி கனலிலே மனம் இணைந்து இருக்கும் நிலைதான், அகநான், அககுரு, விழிப்பு என்கின்றோம்.. உணர்வு மயமாய் இருப்பது என்பது வெளிச்சமாக புறநானாய் இருக்கும் மனம், கனல் மயமான அகநானாக இருக்கப் பயணப்படுவது தான்.... அது அகநானாக மாறினாலும், நீங்கும் நிலையிலே அதன் கால அளவு, ஆகாய அனுபவ அறிவுக்கு எட்டாததாக உள்ளது.. இரண்டாம் கட்ட பயிற்சியில் கடந்த இரண்டு வாரங்களில் பயின்ற அன்பர்கள் அகநானில் இருக்கும் கால அளவினை சற்று உயர்ந்து இருப்பதை அனுபவ அறிவில் அறிந்து இருக்கலாம்..
7வது 8வது வார மலையேறும் பயிற்சியில் அகநானில் இருக்கும் கால அளவினை உயர்த்தும் பயிற்சியாக பயில வேண்டும்... அது நாம் உணர்விலே ஆழ்ந்து ஆழ்ந்து இருக்க கனல் மயமான அகநானில் மனம் பொருந்து இருக்கும் கால அளவு கூடிக் கொண்டே போகும்... அப்படி அந்த அகநானில் மனம் பொருந்தி இருக்கும் அனுபவ நிலையை இன்னதென விவரிக்க முடியாது... அது பேரின்ப நிலையின் துவக்கம்...
இந்த மூன்றாம் கட்ட பயிற்சி, உணர்விலே ஆழ் நிலையில் செல்லுவதற்கும், அகநானில் மனம் பொருந்தி இருக்கும் கால அளவினை அதிகப் படுத்துவதற்குமே.. இந்த நுணுக்கத்தை மனதில் கொண்டு நாம் 7 வது வார தொடக்கமாகிய வரும் ஞாயிறு கிழமை (29-11-15 ) முதல் இரண்டு வாரங்கள் தீவிரமாக பயிலுவோமாக.. குன்றத்தூர் மலை ஏறும் பயிற்சி என்பது ஒரு அடையாளம் காட்டும் பயிற்சி மட்டும் தான்.. மற்ற நாட்களிலும் தீவிரமாகவும் வீட்டு மாடி படிகளில் ஏறி இறங்கியோ அல்லது மைதானத்தில் வேகமாக நடந்தோ, பயில வேண்டியது அவசியமாகிறது.. முறையோடு தீவிரமாக பயின்றால் தான், நுண் உடல் தனி இயக்க பயிற்சிக்கு வழி வகுக்கும், கதி சுவாச பயிற்சி கை கூடும்... அன்பர்கள் தங்கள் மேன்மை நிலை அடைவதற்கு உணர்ந்து விரைந்து செயல் படுமாறு வேண்டுகின்றனன்...

மலை ஏற்ற அனுபவங்கள்:-- பகுதி 9 (28-11-15)
ஒரு அன்பரின் கேள்வி:-- அய்யா இந்த முறை விழிப்பு நிலையில் வேகமாக அல்லது மெதுவாக படி ஏறி இறங்க வேண்டுமா என்ற முறையினை தெரிவியுங்கள் அய்யா
விழிப்பு நிலை என்பது ஒன்று மனதிற்கு கட்டுப் பட்ட விழிப்பு நிலை.. மற்றொன்று மனதிற்கு கட்டு படாத விழிப்பு நிலை.. இந்த மனதிற்கு கட்டுப் பட்ட விழிப்பு நிலை என்பது மனம் எப்பொழுது எல்லாம் தோன்றா நிலைக்கு சென்று செயல் இழந்து போகிறதோ அப்பொழுது விழிப்பு நிலை சுதந்திரமாக கட்டுபடாத நிலையில் செயல் பட தொடங்கும்... இந்த வகையில் தோன்றா நிலை நமக்கு மிக மிக அவசியம் ஆகிறது... இந்த மாதிரி தோன்றா நிலை உருவாகும் சூழ் நிலையை ஏற்படுத்தி மனதை செயல் இழக்கச் செய்து, விழிப்பு நிலை பலப் படுத்தும் பயிற்சியை தான் நாம் மூச்சுப் பயிற்சி மூலம் மலை ஏறும் பயிற்சியிலும் மற்ற பயிற்சிகளிலும் செய்து கொண்டு வருகிறோம்.. இப்படியாக பயின்று பலப் பட்ட விழிப்பு நிலையை மனம் ஒருபோதும் கட்டுப் படுத்த முடியாது.. அதைதான் நாம் அகநான் என்கின்றோம்.. விழிப்பை தன் வசம் கொண்டுள்ள மனதை நாம் புற நான் என்கின்றோம்..
ஆகவே தோன்றா நிலை மூலம் விழிப்பு நிலை பெருக்கம் பலம் அடைவதே முக்கிய நோக்கம்... அதற்காக விரைவாக மெதுவாக மலை ஏற்றத்தை வடிவமைத்துக் கொள்ள வேண்டும்.. புறமனம் எந்த வகையிலாவது செயல்பாட்டின் மூலம் விழிப்பு நிலையை தன் அடிமையாக்கவே வைத்துக் கொள்ள முயற்சி செய்யும்... விரைவாகவோ அல்லது மெதுவாகவோ விழிப்பு நிலை ஏற்படாத வகையில் தேகத்தை புறத்தே இந்த மனம் இயக்க முயற்சி செய்யும்.. விழிப்பு நிலை மனதிற்கு கட்டுப் பட்ட நிலையில் இருந்த போதிலும் தேக உள் உணர்வில் விழிப்பு நிலை சுதந்திரமாகவே உள்ளது.. தேக உணர்வில் இருப்பது என்பது அகத்தில் சுதந்தரமான விழிப்பு நிலையில் இருப்பதற்கு சமம்.. ஆனால் அந்த உணர்வில் மனம் இருக்க விடாது... உணர்வை விட்டு வெளியே வரவே துடிக்கும்.. இதனால் தான் எதையும் நாம் உணர்வோடு உண்ணவோ எதையும் உணர்வு மயமாய் அனுபவிக்க முடியாத நிலையில் இருக்கிறோம்.. மறைமுகமான விழிப்பு நிலை உதவி இல்லையேல், மனதின் நிலைப் பாடு சீர் குலைந்து போய் விடும்.. தன்னை நிலை நிறுத்த தனக்கு மறைமுகமாக உதவும் தோன்றா நிலையில் உள்ள விழிப்பு நிலையை மனம் தோன்றும் நிலையில் உள்ள உலக பொருள்களிடத்தில் தேடுகிறது... அந்த தேடலில் தோல்வியை மட்டுமே மனம் அடைகிறது.. இது தான் மிக பெரிய சிக்கலாக நமது உயிர்நிலையான ஆன்மாவுக்கு உள்ளது...
நமது பயிற்சியில் உடன்பாடு சுவாசத்தின் மூலம் தோன்றா நிலை என்ற சூழ்நிலையை உருவாக்குகின்றோம்... அந்த நிலையில் உணர்வோடு மனம் பொருந்தி இருக்கும் கால அளவினை விரிவாக்கம் செய்கின்றோம்.. அதனால் விழிப்பு நிலையோடு இருக்கும் கால அளவு வளருகிறது... மூன்றாவது பயிற்சியில் உணர்வோடு ஆழ்ந்து இருந்து விழிப்பு நிலையின் கால அளவை வளர்த்து அகநானில் மையம் கொள்ள முயற்சி செய்கிறோம்... இது உடன்பாடு சுவாசத்தை தாண்டி தோன்றா நிலையில் அகப்படும் தன்னில் தானாய் இருக்கும் அகநான் அனுபவம் காண்பதாகும்.. சில ஆரம்ப பயிற்சிகளில் நாம் நன்கு பயின்று தேறி வரவில்லை என்றால் மேல் நிலை பயிற்சிகள் புலப்படாமல் போய்விடும்... நமது பயிற்சியில் சற்று வேகம் அதிகமே.. அதனால் தான் அன்பர்களை மிக கவனமாக விடாமல் தொடர்ந்து பயிலுமாறு வேண்டுகின்றனன்... தேறி வந்தவர்கள் உடன்பாடு சுவாசத்தில் அதிக கவனம் செலுத்த தேவை இல்லை.. தேறாதவர்களுக்கு அது மிகவும் அவசியம்... தேறியவர்களுக்கு உணர்வில் ஆழ்நிலையில் அகநானில் மையம் கொள்ளும் பயிற்சியாக மூன்றாம் நிலையை தொடர வேண்டும்... தேறாதவர்கள் இன்னும் சற்று அதிகமாக முயன்று தோன்றா நிலையை உருவாக்கி பின் உணர்வில் ஆழ்ந்து தேறியவர்களை போல் அகநான் அனுபவத்தில் மையம் கொண்டு தேறியவர்களுக்கு சமமாக வர முயற்சி செய்ய வேண்டும்... நான்காம் நிலை பயிற்சி சற்று நுணுக்கமானது.. விசித்திரமானது.. அதோடு சரியை நிலை பயிற்சி முடிவுக்கு வந்து கிரியை நிலை பயிற்சி தொடங்கும்.. இன்னும் இரண்டு வாரங்களில் நான்காம் நிலை பயிற்சிக்கு தங்களை பண்படுத்திக் கொள்ளுமாறு வேண்டுகின்றனன்..

மலை ஏற்ற அனுபவங்கள்:-- பகுதி 10 (29-11-15)
இன்று பயமுறுத்தும் வானிலையும், வானிலை மைய எச்சரிக்கையும் இருந்தாலும் மிதமான மழைக்கு நடுவே அன்பர்கள் குறித்த நேரத்தில் குன்றத்தூர் மலை அடிவாரத்திற்கு வந்து சேர்ந்து 6.30 மணியிலிருந்து பயிற்சியினை தொடங்கினார்கள்... இரண்டு மூன்று அன்பர்கள் உடன் பாடு சுவாசத்தில் இருப்பதாக நினைத்துக் கொண்டு அதிக நேரம் அமர்ந்து இருந்தது தியானம் என்ற பெயரில் ஒரு குட்டி தூக்கம் அல்லது அரை தூக்கம் தூங்குவது போல் இருந்தது... தோன்றா நிலையிலே மையம் கொள்ள வைக்கும் உணர்வு மயமான பயிற்சியில் அண்ட ஆற்றல் பெருக்கத்தில் ஊக்கம் மிகுந்து காணப் படவேண்டிய தருணத்தில் இப்படி அதிக நேரம் அமர்ந்து இருந்தது முரண் பாடாக தெரிந்தது.. மூச்சு இளைப்பு வராமலேயே மூச்சு இளைப்பு வந்தது போலவும் அதற்கு உடன்பாடு சுவாசம் அவசியம் போலவும் மனம் விரித்த வலையில் விழுந்து விட்டார்கள் போல் தெரிந்தது... உணர்வு மயமான பயிற்சி, உடன் பாடு சுவாசப் பயிற்சியில் தேறி வந்தவர்களுக்கு தான் நன்றாக கை கூடும்.. பெரும்பாலான அன்பர்கள் தொடர்ந்து ஓய்வு இன்றி ஊக்கத்தோடு சற்றும் மூச்சு இளைப்பு ஏற்படாமல் உணர்வு மயமாய் மலை ஏறி இறங்கி பயின்ற தோரணை அவர்கள் ஆறு வார பயிற்சியில் உடன்பாடு சுவாசத்தில் தேறிய நிலையை காட்டியது...
7.20 முதல் 7.35 மணி வரை நடந்த வகுப்பில் உணர்வோடு மலை ஏறும் பயிற்சியின் குறிக்கோள் எடுத்து சொல்லப் பட்டது.. உணர்வை உணருபவன் யார் என்ற கேள்வியின் பதிலை பெறுகின்ற போது அது தன்னில் தானாய் இருக்கும் அகநானே என்பதை எடுத்துரைக்கப் பட்டது.. இந்த வார பயிற்சியில் உணர்வை உணருபவனை பிடித்தால் அது அகநானே என்பதை அனுபவப் படவும் அவனே நம்மில் செங்கோல் ஏந்திய அரசன் எனவும் அவன் தோன்றா நிலை என்ற வலுவான எண்ண ஆதிக்கங்கள் இல்லாத அக கோட்டைக்குள்ளே அரசு செய்யும் அரசன் எனவும் எடுத்துரைக்கப் பட்டது.. உணர்வு பயிற்சியின் மூலம் அகநான் நிலையை பிடிக்க வேண்டும் என்பதையும், உணர்வே புற நானிலிருந்து அகநானுக்கு முன்னோக்கி பயணப் படும் பாதை என எடுத்துரைக்கப் பட்டது.. அடிபடுதல், நெருப்பு சுடுதல், மிளகாய் போன்ற மிக காரமான உணவு ஏற்கும் போது மட்டுமே வல்லின உணர்வில் பழக்கப் பட்ட மனம் மெல்லின உணர்வினை அலட்சியப் படுத்துவதால் மனம் கனலை நோக்கி பயணப் பட சற்று சிரமப் படும் என்பதை உணர்த்தப் பட்டது.. சாதாரண நடை, இயக்கங்களில் மனதை கனலின் பக்கம் திரும்பும் படியாக உணர்வில் நாம் இருக்க வேண்டியது அவசியம் ஆகிறது..
உணர்வு மயமாய் இருக்கும் போது ஒருவர் எப்படி ஊக்கத்துடன் இருப்பார்கள் என்பதை அறிந்து கொண்ட பின் சில அன்பர்கள் அதை மனதில் எண்ண பதிவோடு, சிரமத்துடன் விடாமல் மலை ஏறி வியர்வை கொட்ட வியர்த்த நிலைக்கு ஆளானது சற்று முரண்பாடாக இருந்தது.. ஓய்வு எடுத்துக் கொண்டு நிதானமாக ஏறி இறங்கி பயில வேண்டிய அவர்கள் ஏதோ ஒரு நிலைக்கு தங்களை ஆளாக்கி கொண்டு குறிக் கோளை விட்டு நகர்ந்து சென்றது போல் இருந்தது.. வகுப்பில் சொன்ன கருத்தை மனதால் பிடித்தார்களே தவிர தங்கள் தேக உணர்வுக்கு மதிப்பு அளிக்க தவறி விட்டது போல் தோன்றியது... அதனால் மன ஆதிக்கத்திற்கு ஆளானார்களே தவிர விழிப்பின் பலம் பெறவில்லை போல் தோன்றியது.. இது சுற்றுபுற சூழ்நிலையில் கிடைக்கும் அறிவுரைகளை மையப் படுத்தி விழிப்பு நிலையிலிருந்து விலகும் மனதின் செயல் பாடு ஆகும்.. இப்படிதான் புறநான் செய்யும் எதுவும் முறையற்ற ஒன்றாக இருக்கும்.. இதிலிருந்து விடுபடவே எந்த எண்ண ஆதிக்கமும் இல்லாத தோன்றா நிலையால் ஆன வலுவான கோட்டைகுள்ளே, அரசு செய்யும், உணர்வுக்கு மதிப்பு அளிக்கும் அகநான் நிலையை கைபிடிக்க வேண்டும் என மர்ம யோகத்தில் வற்புறுத்துவது.. தோன்றா நிலையில் குடி இருக்கும் அகநான், மனமாகிய புற நானுக்கு தோன்றவே தோன்றாது.. புற நானுக்கு தோன்றா நிலையில், அகத்திலே அருள் ஆட்சி செய்யும் அகநான் அனுபவநிலையில் இயங்குவதால், அகநானில் செயல் படுபவர்களை மர்ம யோகிகள் எனப் படுகிறார்கள்.. அகநானில் இயங்கிய நம் தமிழ் யோக அரசர்கள் பிரமாண்டமான கோவில்களை கட்டியும் தங்களை விளம்பர படுத்தவோ அடையாளப் படுத்தவோ எந்த முயற்சியும் செய்யாதது அவர்களின் தியாகமும் அன்பின் பண்பின் வெளிப்பாடே ஆகும்.. ஆனால் இன்றைய கால கட்டம் அதற்கு முற்றிலும் முரண் பாடாய் இருப்பது வேறு விசயம்..
இப்படியாக சிறுக சிறுக பயணப் பட்டு அகநானில் அமரும் நிலைக்கு வருவோமாக.. காரணம் அகநான் மட்டுமே அண்ட ஆற்றலோடு நேரடி தொடர்பும் அண்ட ஆற்றலையே கையாளும் வல்லமையும் உடையது.. சிறு சிறு தோல்விகளில் துவண்டு போகாமல் தோல்விகளில் பாடம் கற்று உயர் நிலைக்கு உயருவோமாக...


மலை ஏற்ற அனுபவங்கள்-- பகுதி 11 (5-12-15)
உணர்வு மயமான அனுபவத்தில் நான்கு நிலைகள்
உணர்வு என்பது பரு உடலுக்கும் நுண் உடலுக்கும் இடையே ஆன பாலம் போன்றது.. அந்த பாலம் அல்லது இணைப்பு சரியாக இருந்தால் நுண் உடலான சூட்சம தேக ஆதிக்கம் விரைவில் கிடைக்கும்.. ஏன் சூட்சம தேக ஆதிக்கம் தேவை.. அது ஒன்றே அண்ட ஆற்றலோடு நேரடி தொடர்பு கொண்டது.. காரண தேகமாகிய அது செம்மை ஆகும் போது காரிய உடலாகிய பரு உடல் செம்மை ஆகிறது.. அதாவது நோய் நொடிகள் நீங்கி உடல் வளமை,செழுமை, வலு அடைகிறது...
நுண் உடலின் ஆதிக்கம் புரிபவன் தான் விழிப்பு என்ற அகநான்.. பரு உடலின் ஆதிக்கம் புரிபவன் மனம் என்ற புறநான்...அகநான் செய்யும் எல்லா வினைகளும் சத்தியமும் உண்மையும் நிகழ் காலமாய் இருக்கும்.. புறநான் செயல்களில் நாம் அப்படி இருக்க முடியாது..
உணர்வு மயமான அனுபவத்தில் நான்கு நிலைகள்:-
1) காணல்   2) ஊடல்    3) கலத்தல்    4) அதுவாய் ஆதல்
1) காணல் :-- மலை ஏறும் அன்பர்கள் தேக உடல் உணர்வு மயமாய் படி யேறி நடக்க வேண்டும்.. அப்படி நடக்கும் அன்பர்கள் தாங்கள் அனுபவப் படும் உணர்வை மனதால் கண்டு அதாவது அடையாளம் கண்டு நடக்கின்றார்கள்.. நடந்து பார்க்கிறேன் செய்து பார்க்கிறேன் முகர்ந்து பார்க்கிறேன் போன்ற செயல்கள் எல்லாம் மனதால் அடையாளம் கண்டு நடை பெறுகின்றன.. இதில் மனம் இருப்பதால் கொஞ்சம் குறைபாடு உள்ளது... மனம் வெளியே செல்லாமல் உடலில் தங்கி முழு முரண் பட்டு இல்லாமல் இருந்தாலும், இதில் மனதின் செயல் பாடாகிய நான் உணர்வினை பார்க்கின்றேன் என்ற ஒன்று விரும்பத்தக்கது அல்ல.. இதனால் 25 விழுக்காடு சதவீதம் பலன்,பயன் மட்டுமே கிடைக்கும்... மனதின் செயல்பாடு பட்டும் படாமலும் இருப்பதால் மனம் உடலை விட்டு புறத்தே பாய்ந்து செல்ல அதிக வாய்ப்புகள் உள்ளன... வினாடிக்கு வினாடி மனம் அப்படி வெளியே செல்வதை விழிப்பு உணர்வால் உணரலாம்..
2) ஊடல் :-- மனம் உணர்விலே ஊடுருவி செல்ல, அதற்கு விழிப்பு நிலை உதவ உணர்விலே ஆழ் நிலையிலே ஊடுருவிய மனம், அவ்வளவு விரைவாக வெளியே செல்லாது.. மனம் உணர்விலே தங்கி இருக்கும் காலம் அதிகமாகி கொண்டே போகும்... மனம் உணர்வில் உடலில் ஊடலிலே இருக்கின்றதா என்பதை உணர கால அளவு அதாவது மனம் உடலில் தங்கி இருக்கும் நேர அளவினை வைத்து அன்பர்கள் கணக்கிடலாம்.. இது உணர்வு மயமான அனுபவ பயிற்சியில் இரண்டாம் கட்ட முன்னேற்ற நிலை... இதில் 50 விழுக்காடு பயன் கிடைக்கும்..
3) கலத்தல் :-- மூன்றாம் கட்ட முன்னேற்ற பயிற்சியாக மனம் உணர்விலே கலத்தல் என்பதாகிறது... இன்னும் இன்னும் ஆழ் நிலையிலே மனம் உணர்வோடு இருக்கும் போது, உணர்வோடு மனம் கலக்கத் தொடங்குகிறது... அப்படி உணர்வோடு கலந்த மனம் மிக அதிக நேரம் உணர்வோடு ஒன்றி இருந்து வெளியே பாய்ந்து செல்லாமல் உடலில் தங்கி இருந்து கனல் பெருக்கத்திற்கு உதவும்... எண்ண ஆதிக்கங்களும் புற உலக தேவை யற்ற செயல்பாடுகள் மனதை வெளியே இழுக்காது.. மனம் விழிப்பு நிலைக்கு உடன் பட்டு அதிக நேரம் இருக்கும் போது விழிப்பு நிலை அனுமதிக்கும் நேரத்தில் மட்டுமே மனம் விழிப்பு நிலை கட்டுப்பாட்டில் வெளியே இயங்கும்.. இந்த நிலையில் மனம் வெளியே சிக்கி கொள்ளாது உண்மைக்கும் சத்தியத்திற்கும் மட்டுமே நாடும்.. ஆனாலும் மிக வலுவான புற உலக செயல் பாடுகள் வந்தால் விசுவாமித்திரர் மோகினியிடம் காமத்தில் சிக்கிய நிகழ்வாக நடக்க வாய்ப்புகள் உண்டு... இதில் 75 சதவீதம் பயன் கிடைக்கும்...
4) அதுவாய் ஆதல் :-- உணர்வாய் மனம் ஆகவும், உணர்வும் மனமும் ஒன்றான நிலை ஏற்படவும் மிக மிக ஆழ் நிலைக்கு மனம் உணர்விலே செல்ல வேண்டும்.. அது படிப்படியான தான் செல்ல வேண்டும்.. தாவி செல்ல நினைத்தால் தோல்வியிலே தான் முடியும்... அவ்வாறு மனம் தாவி தாவி தோல்வியை தழுவது அதன் இயல்பு... இதனை தடுக்க விழிப்பு நிலை பெருக்கமே உதவும்... விழிப்பு நிலைக்கு உடன் பட்ட மனமே படிப்படியாக செல்லும்.. விழிப்பு நிலையால் அடக்கப் பட்ட மனம் விபரீத போக்குகிற்கே செல்லும்... அப்படி உணர்வாய் ஆன மனம் எந்த நேரமும் கனல் பெருக்கத்திற்கு உதவி, விழிப்பு நிலைக்கு நிகழ்நிலைக்கு எப்பொழுதும் உடன் பட்டே இருக்கும்.. அந்த மனமே சுத்தமனம் அல்லது கனல் மனம் எனலாம்... புறநான் முழுமையாக அகநானாக மாறும் போது எல்லா செயல் பாடுகளும் முழுமையான நிறைவினை, திருப்தியை தரும்... இதில் 100 விழுக்காடு முழு பலன் பயன் கிடைக்கும்...
சென்னை மாநகரம் மழை நீர் வெள்ளப்பெருக்கால் சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்துக் கொண்டு இருக்கிறது.. அகநான் அனுபவம் பெற்ற நமது அன்பர்கள் நாம் நாளை குன்றத்தூர் மலை ஏறும் பயிற்சிக்கு வரும் போது, முருகனை அகநான் உணர்விலே சென்னை வாழ் மாந்தர்களின் முழு துயர் அகல முழுமையாக வேண்டிக்கொள்வோம்.. உறுதியாக துயர் அகலும்.. சென்ற திங்கள் அன்று பெருத்த மழையில் இரவில் நமது அன்பர்கள் பிரார்த்தனை செய்ய வேண்டப் பட்டார்கள்.. அன்று இரவில் இருந்து பெருத்த கனமழை இன்று வரை நின்றது.. வானிலை மையத்தின் கடும் எச்சரிக்கையும் பொய்த்து போனது... இதனை மிகைபடுத்தி சொல்வதாக எடுத்துக் கொள்ளவேண்டாம்.. அகநான் உணர்வோடு எவரும் செய்தாலும் அண்ட ஆற்றல் அதற்கு தகுந்தாற் போல் செயல் படும்.. நம் விழிப்பு நிலையாளர்கள் அகநான் உணர்வோடு சென்னை வாழ் மாந்தர் துயர் நீங்க எப்பொழுதும் வேண்டி கொள்ளவும், நாளை முருகன் முன்னிலையில் சிறப்பு வேண்டுதல் செய்யவும் முனைவோமாக...


மலை ஏற்ற அனுபவங்கள்:பகுதி பன்னிரெண்டு ( 21-12-15)
13-12-15 அன்றும் 20-12-15 அன்றும் ஏற்பட்ட மலைஏற்ற அனுபவங்கள் இன்று பகிர்ந்து கொள்கிறோம்... பயிற்சிக்கு நடுவே 20 நிமிடம் வகுப்பு நடந்தது.. அந்த சமயத்தில் நுண் உடல் தனி இயக்கம் பயிற்சி தரப் பட்டது.. அது சிலருக்கு நன்றாக கைகூடியது.. சிலருக்கு திருப்திகரமாக கைகூடவில்லை.. சிலருக்கு சுத்தமாக கைகூடவில்லை போல்  தெரிந்தது... இந்த வித்தியாசம் எதனால் என்றால் உடல் உணர்விலே ஊடல் கலத்தல் என்ற நிலைகளில் முன்னேற்றம் ஏற்படாததே காரணம்.. நினைத்தல் என்ற நிலையிலே நான் உணர்கிறேன் உணர்கிறேன் என்று மனம் வாய்ப்பாட்டு பாடியதில் சிலர் அன்பர்கள் ஏமாந்து போய் இருக்கலாம்.. அந்த வாய்ப்பாட்டை நிறுத்தி நம்மில் மையம்கொண்ட குறைந்த அளவில் உள்ள விழிப்பு நிலை மூலமாக உணர்விலே ஊடுருவி சென்று உணர்விலே கலந்து உணர்வு மயமாய் ஆக வேண்டும்.. நான் செய்கிறேன் என்ற ஆணவ மலம் உடைய மனம் அந்த வாய்ப் பாட்டை பாடிக் கொண்டே இருக்கும் . உணர்விலே இருப்பதாக கூறிக் கொண்டே வாய்ப்பாட்டை பாடும் செயலை செய்து கொண்டே இருக்கும்.. இதனால் சக்தி விரையம் ஆகலாம்...
அதே நேரத்தில் அந்த வாய்ப் பாட்டை பாடுவதில் சலிப்பு நிலை அடைந்த மனம் வேறு ஒரு செயல் பாட்டை செய்ய விரும்பும்.. அரை மணி நேர வகுப்பில் சற்று வேடிக்கையான ஓரிரு விசயங்களை பேசும் போது பலத்த சிரிப்பொலிகள் எழுந்தது இதனால் தான்.. மாற்று செயல் பாட்டிற்கு, சலிப்படைந்த மனம், தாவும் வேகத்தையே இது காட்டிற்று..  மேலும் இரு அன்பர்கள் கோவிலில் சக்கரை பொங்கலை பிரசாதமாக வாங்கி உண்டு விட்டு தொடர்ந்து படியேறும் பயிற்சியினை முறையாக செய்ய தவற விட்டார்கள்.. மிகவும் அன்பாக கொடுத்ததாலும்,பிரசாதம் என்பதாலும் வாங்க வேண்டிய சூழ்நிலை வந்து விட்டது என்றனர்.. சலிப்படைந்த மனம் அன்பு பிரசாதம் என்ற புனித பெயர்களை உபயோகப்படுத்தி, மிக தந்திரமாக புற உலகில் புகும் செயலை பலம் குறைந்த விழிப்பு நிலையால் கட்டுப் படுத்த முடியாமல் போனதே இது காரணம்..
மனம் ஆழ் நிலையிலே, உணர்விலே ஊடுருவி, உணர்விலே கலந்து, அதில் விழிப்பு நிலையோடு ஆனந்தம் பெற்ற சிலர் அன்பர்கள், பயிற்சியில் முழு ஈடு பாடு கொண்டு இருந்தது, பத்து வார மலை யேற்ற பயிற்சிக்கு சமாதானமாக  இருந்தது.. பத்து வார பயிற்சி முடிந்தது... உணர்விலே கலந்த நிலை என்பது அகநானுடன், அககுருவோடு கலந்த நிலையே.. அந்த அகநானாகிய அககுருவே நம் நுண் உடலாகிய சூட்சம தேகத்தோடு தொடர்பு வைத்துக் கொள்ளும் தகுதி உடையது.. புற நானுக்கு அது முற்றிலும் இயலாத காரியமே.. சில அன்பர்களுக்கு நுண் உடல் தனி இயக்கம் கை கூடியது.. இது அவர்கள் உணர்விலே கலந்து அகநானை பிடித்ததே காரணம்... அன்பர்கள் மேலே சொன்னவற்றை நன்கு புரிந்து கொண்டு உணர்விலே ஊடுருவி கலந்து, தீவிரமாக பயிலுமாறு வேண்டப் படுகின்றனர்...

No comments:

Post a Comment