Monday, 28 August 2017

வலி வளி வழி நெறி:-- பகுதி நான்கு

சிவகலப்பின் சீர்மையில் வலியுடன் உடன்பட வலிமை பெருகும்!
நமக்குள்ளே பல பிறவிகளின் வடுக்களாய் நம் தேகத்தில் புதைந்துள்ள வலிகளே... அந்த வலிகள் நம் அறியாமையின் விளைவாக பாவங்களினால் செய்தாலும், அதனை உரமாக ஆக்கும் ஒரு யுக்திதான் இந்த புதைந்துள்ள உள்ள தேக வலிகள்... எந்த அறியாமையால் பாவம் செய்தோமோ, அந்த பாவத்தை புத்தியால் பவமாக்கி, அதாவது புண்ணியமாக்கி கொள்ள வேண்டும்... இந்த தேக வலிகளை நீக்காமல் நித்திய வாழ்விற்கும், ஆன்மீக சிறப்பு நிலைக்கும், மனித குலம் ஆசைப் படவே கூடாது.. அவைகள் நடக்கவும் நடக்காது.. புதைந்துள்ள தேக வலிகளை போக்காமல் இருந்தால், எந்த மகானும் மண்ணில் மறைவது திண்ணம்... அப்படி பட்ட தேக வலிகளை நீக்கும் வழியை மர்ம யோகத்தை தவிர வேறு எதிலும் காண முடியாதது போல் தெரிகிறது.. ஆன்மீக உண்மை பயணத்திற்கு பெரும் தடைகளாக உள்ள புதைந்துள்ள இந்த தேக வலிக்கான சரியான மருந்தாகிய அணுத்துவ அதீதம் என்னும் அகக் குரு மட்டுமே தரும் அமிழ்தம், அடைந்தால் மட்டுமே நமக்கு உண்மையான தீர்வு கிடைக்கும்.. தோன்றாநிலையில் மட்டுமே செயல் படும் அந்த நல் நாயகனை நாடினால் மட்டுமே கரை ஏற முடியும்... புற உலகில் அண்ட சராசரமும் தேடினாலும் கிடைக்காத அந்த அமிழ்தம் தோன்றா நிலையிலே வழங்க காத்துக் கொண்டு இருக்கும் அக குருவினை அடையாமல் வேறு ஒரு மார்க்கம்,வழி இல்லவே இல்லை..
அமிழ்தம் என்ற சொல் பஞ்ச பூதங்களை குறிக்கும்..
அ என்பது அண்டமான ஆகாயம் என்ற அறிவு
மி என்பது மிசை என்ற பொருந்தி இசைக்கக் கூடிய காற்று ஆன புத்தி
ழ் என்பது தோன்றும் தோன்றா நிலைக்கு இடையே சிறப்பான கனல் பொருந்திய மனம்
த என்பது தளர்வு நிலையான நீர் என்ற சித்தம்
ம் என்பது மண் என்ற உறுதியாக பொருந்திய ஆணவம்
நிலையாக தோன்றும் நிலையும், தோன்றா நிலையும் ஆன அண்டமும் மண்ணும், எதிரும் புதிருமாகவும் எதிர் எதிர் துருவங்களாக இருந்து உடன் பட முடியாததாய் தவித்துக் கொண்டு உள்ளன... அந்த தவிப்பை போக்க உதவும் மிழ்த என்ற மூன்று பூதங்கள் இடமாறி இருப்பதால், அதனுடைய வேலைகளை சரியாக, விரைவாக, செய்ய முடிய வில்லை.. இடமாற்றுகின்ற போது மிழ்த என்பது தமிழ் எனவாகிறது.. இடமாறிய தமிழில் முதலில் சித்தம் என்ற நீர் புதமாகிய நினைவகத்தை சரி செய்யாமல், தளர்வு நிலை உள்ள அதனை திடமாக்காமல், எதையும் சாதிக்க இயலாது என்ற காரணத்தினால் தான் மாற்றி படிக்கு கலையை கண்டு பிடித்தனர் சித்தத்தை கைவசம் ஆக்கிய சித்தர்கள்.. மிழ்தம் என்பது நிலையற்ற ஒன்று.. தமிழ் என்பது நிலையற்ற ஒன்றை நிலையானதாக ஆக்கும் தமிழ் என்ற புத்தி அறிவு விவேகமான ஒரு யோகம்.. தமிழ் யோகம் ஒன்றுதான் அமிழ்தம் என்ற ஒருங்கிணைந்த ஐம் பூத சேர்க்கையான ஒன்றை உடையவனான நிறைநிலை மனிதனை உருவாக்க முடியும்....அந்த அமிழ்தம் ஒன்றே தனி மனித, சமுதாய, அண்ட முழுமைக்குமான, அனைத்து பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வாக இருக்கும்.. அமிழ்தம் பெறும் தகுதி நிறைநிலை மனிதனுக்கு மட்டுமே உள்ளது..
இந்த பகுதியில் த என்ற சித்ததிற்கு முதலிடம் கொடுக்க வேண்டியது அவசியம் என உணர்ந்து கொண்டால் மட்டுமே தமிழ் யோகம் தொடங்கும்... அதற்கு புற உலகின் பிடிப்பிலிருந்து விலகி செல்ல ஓர் இடமாம் தன் நிலைக்கு வரவேண்டிய அவசியம் ஆகிறது.. அதற்கு மனம் என்ற ழ் என்ற சிறப்பு நிலை பின்னுக்கு தள்ளப் பட்டு சித்தமாகிய த என்பதை முன்னுக்கு நிறுத்தபட, இடைப்பட்ட மி என்ற புத்தியால் அதை சாதிக்க, தமிழ் என்ற யோகம் தோன்றுகிறது..
சேரும் இடம் அறிந்து சேரும் வழியை, தளர்வு நிலை கொண்ட சித்தத்தில் திடம் பெற்றால் மட்டுமே, எதையும் துவங்க முடியும்.. அப்படி திடம் பெற, தேக, உடல்,மன, வலிகள் பெரும் தடையாக இருப்பதால், அதற்கு ஒரு தீர்வு காணவே இந்த வலி வளி வழி நெறி..

marma Yoogi
வலி வளி வழி நெறி:-- பகுதி நான்கு
*************************************

அந்த வலியின் முதல் நோக்கம்

உலகமே சலிப்பிலும் விரக்தியிலும் சிக்கிக் கொண்டு உள்ளது.. எவ்வளவு தான் விஞ்ஞான அற்புதங்கள் தோன்றினாலும், அவை சில மணி நேரத்திலேயே சலிப்பை உருவாக்கி விடுகிறது.. தன் குல இஷ்ட தெய்வத்தையே ஒதுக்கி விட்டு பல வகையான தெய்வ வழிபாடுகளை மேற்கொள்கிறது மனித குலம்.. விநாயகர் ஒருவர் என்றாலும் அவரை பல ஆயிரம் வடிவங்களில் தொழுவதற்கு காரணம், பழைய விநாயகர் வடிவம், சலிப்பை உருவாக்கியதாலும், பயம் உணர்வு காரணமாக விநாயகரையே தூக்கி எடுத்து அப்பாலே போடாமல் விநாயகருக்கு புது வடிவம் கொடுத்து, தன் சலிப்பை குறைத்துக் கொள்ள முயற்சி நடக்கிறது.. தற்கொலைகளே சலிப்பின் உச்சத்தில் மட்டுமே நடக்க்கிறது.. கடும் கோபமும் சலிப்பிலிருந்தே பிறக்கிறது..

எல்லாம் இருந்தாலும் சலிப்பு நிலை இருப்பதற்கு முக்கிய காரணம் உயிர் ஓட்டத்தின் குறைபாடே என்ற மையக் கருத்தை என்றும் மறக்கக் கூடாது.. அண்ட ஆற்றலின் துணையை பெற்று உயிர் ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும் நமது வாசியோகப் பயிற்சிகளை, பயிலுபவர்களுக்கு சலிப்பு நிலை துளியும் இருக்கக் கூடாது.. அதுவே பயிற்சியின் நல்ல அடையாளம்.... பயிற்சி முடித்து எழுகின்ற போது, விழிப்பு நிலையால் மட்டுமே எழுவார்கள்... சலிப்பு ஓங்க, முடியாமல் எழுந்தால் அது பயிற்சியின் குறை பாட்டினை குறிக்கும்... விழிப்பு நிலையால் அன்றைய கடமைகளை நிறைவேற்றவே பயிற்சியை விட்டு எழுவார்கள்... ஆனால் இந்த நிலை தொடக்கத்தில் சற்று பிடிபடாமல் இருந்தாலும், முறையான தொடர்ந்த பயிற்சியினால் இது சுலபமாக கை கூடும்....

எந்த யோகப் பயிற்சியின் முக்கிய நோக்கமே உடலில் உயிர் ஓட்டதை பெருக்குவதே... இந்த குறிகோளிலிருந்து நழுவும் எதுவும் யோகமாகாது, ஆன்மீகமாகாது... உயிரோட்டத்திற்கு உதவுவது இரண்டே இரண்டு தான்... வலி என்ற துன்பநிலை.. மற்றொன்று சுகம் என்ற இன்பநிலை... இதில் இன்ப நிலைக்கு விலை கொடுக்க வேண்டும்... ஆனால் அந்த விலை கொடுக்க அதிக துன்ப பட வேண்டும்... விலை கொடுக்க படும் துன்பம் ஒரு பலனும் தராது.. அதில் மனம் எப்பொழுதும் இன்பம் என்ற குறிகோளை சுமந்து கொண்டு இருப்பதாலும், அந்த இன்பம், புறப் பொருளில் மட்டுமே கிடைப்பதாலும், அந்த இன்பத்திற்கு விலை கொடுக்கப் படும் துன்பமும் புறத்திலிருந்து வருவதாலும், அப்படி பட்ட இன்பமும் துன்பமும் துளி அளவும் உயிரோட்டத்தை ஓங்க செய்ய ஒரு போதும் உதவாது.. மாறாக உயிரோட்டத்தை மங்க செய்யவே செய்யும்... இதனை மர்மயோகப் பயிற்சியாளர்கள் மறக்கவே கூடாது...

அப்படியானால் எந்த வகையான வலியை தேந்தெடுக்க வேண்டும் என்ற கேள்வி நமக்குள் எழுகின்ற போது மர்ம யோகம் தருகின்ற பதில் மிக மிக சிறப்பானது... அது இன்பத்திற்கு விலை கொடுக்க தரும் துன்ப வலி அல்ல.. நமக்குள்ளே பல பிறவிகளின் வடுக்களாய் நம் தேகத்தில் புதைந்துள்ள வலிகளே... அந்த வலிகள் நம் அறியாமையின் விளைவாக பாவங்களினால் செய்தாலும், அதனை உரமாக ஆக்கும் ஒரு யுக்திதான் இந்த புதைந்துள்ள உள்ள தேக வலிகள்... எந்த அறியாமையால் பாவம் செய்தோமோ, அந்த பாவத்தை புத்தியால் பவமாக்கி, அதாவது புண்ணியமாக்கி கொள்ள வேண்டும்... இந்த தேக வலிகளை நீக்காமல் நித்திய வாழ்விற்கும், ஆன்மீக சிறப்பு நிலைக்கும், மனித குலம் ஆசைப் படவே கூடாது.. அவைகள் நடக்கவும் நடக்காது.. புதைந்துள்ள தேக வலிகளை போக்காமல் இருந்தால், எந்த மகானும் மண்ணில் மறைவது திண்ணம்... அப்படி பட்ட தேக வலிகளை நீக்கும் வழியை மர்ம யோகத்தை தவிர வேறு எதிலும் காண முடியாதது போல் தெரிகிறது.. ஆன்மீக உண்மை பயணத்திற்கு பெரும் தடைகளாக உள்ள புதைந்துள்ள இந்த தேக வலிக்கான சரியான மருந்தாகிய அணுத்துவ அதீதம் என்னும் அகக் குரு மட்டுமே தரும் அமிழ்தம், அடைந்தால் மட்டுமே நமக்கு உண்மையான தீர்வு கிடைக்கும்.. தோன்றாநிலையில் மட்டுமே செயல் படும் அந்த நல் நாயகனை நாடினால் மட்டுமே கரை ஏற முடியும்... புற உலகில் அண்ட சராசரமும் தேடினாலும் கிடைக்காத அந்த அமிழ்தம் தோன்றா நிலையிலே வழங்க காத்துக் கொண்டு இருக்கும் அக குருவினை அடையாமல் வேறு ஒரு மார்க்கம்,வழி இல்லவே இல்லை..

அமிழ்தம் என்ற சொல் பஞ்ச பூதங்களை குறிக்கும்..
அ என்பது அண்டமான ஆகாயம் என்ற அறிவு
மி என்பது மிசை என்ற பொருந்தி இசைக்கக் கூடிய காற்று ஆன புத்தி
ழ் என்பது தோன்றும் தோன்றா நிலைக்கு இடையே சிறப்பான கனல் பொருந்திய மனம்
த என்பது தளர்வு நிலையான நீர் என்ற சித்தம்
ம் என்பது மண் என்ற உறுதியாக பொருந்திய ஆணவம்

நிலையாக தோன்றும் நிலையும், தோன்றா நிலையும் ஆன அண்டமும் மண்ணும், எதிரும் புதிருமாகவும் எதிர் எதிர் துருவங்களாக இருந்து உடன் பட முடியாததாய் தவித்துக் கொண்டு உள்ளன... அந்த தவிப்பை போக்க உதவும் மிழ்த என்ற மூன்று பூதங்கள் இடமாறி இருப்பதால், அதனுடைய வேலைகளை சரியாக, விரைவாக, செய்ய முடிய வில்லை.. இடமாற்றுகின்ற போது மிழ்த என்பது தமிழ் எனவாகிறது.. இடமாறிய தமிழில் முதலில் சித்தம் என்ற நீர் புதமாகிய நினைவகத்தை சரி செய்யாமல், தளர்வு நிலை உள்ள அதனை திடமாக்காமல், எதையும் சாதிக்க இயலாது என்ற காரணத்தினால் தான் மாற்றி படிக்கு கலையை கண்டு பிடித்தனர் சித்தத்தை கைவசம் ஆக்கிய சித்தர்கள்.. மிழ்தம் என்பது நிலையற்ற ஒன்று.. தமிழ் என்பது நிலையற்ற ஒன்றை நிலையானதாக ஆக்கும் தமிழ் என்ற புத்தி அறிவு விவேகமான ஒரு யோகம்.. தமிழ் யோகம் ஒன்றுதான் அமிழ்தம் என்ற ஒருங்கிணைந்த ஐம் பூத சேர்க்கையான ஒன்றை உடையவனான நிறைநிலை மனிதனை உருவாக்க முடியும்....அந்த அமிழ்தம் ஒன்றே தனி மனித, சமுதாய, அண்ட முழுமைக்குமான, அனைத்து பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வாக இருக்கும்.. அமிழ்தம் பெறும் தகுதி நிறைநிலை மனிதனுக்கு மட்டுமே உள்ளது..

இந்த பகுதியில் த என்ற சித்ததிற்கு முதலிடம் கொடுக்க வேண்டியது அவசியம் என உணர்ந்து கொண்டால் மட்டுமே தமிழ் யோகம் தொடங்கும்... அதற்கு புற உலகின் பிடிப்பிலிருந்து விலகி செல்ல ஓர் இடமாம் தன் நிலைக்கு வரவேண்டிய அவசியம் ஆகிறது.. அதற்கு மனம் என்ற ழ் என்ற சிறப்பு நிலை பின்னுக்கு தள்ளப் பட்டு சித்தமாகிய த என்பதை முன்னுக்கு நிறுத்தபட, இடைப்பட்ட மி என்ற புத்தியால் அதை சாதிக்க, தமிழ் என்ற யோகம் தோன்றுகிறது..

சேரும் இடம் அறிந்து சேரும் வழியை, தளர்வு நிலை கொண்ட சித்தத்தில் திடம் பெற்றால் மட்டுமே, எதையும் துவங்க முடியும்.. அப்படி திடம் பெற, தேக, உடல்,மன, வலிகள் பெரும் தடையாக இருப்பதால், அதற்கு ஒரு தீர்வு காணவே இந்த வலி வளி வழி நெறி.. பொறுப்புடன் உணர்ந்து படித்து, சேரும் இடம் அறிந்து சேர்ந்து, சீர் பெறுக என வேண்டுகின்றனன்... ஆதி வேதமாக உள்ள இந்த தமிழ் யோகம் பற்றிய பதிவில் உள்ள அதி முக்கிய பகுதிகளில் உங்களுக்கு பிடித்ததையெல்லாம் comment ல் குறிபிட்டால், அது ஒரு எடுப்பு தன்மையாக ( high lighted ) இருக்கும்.. ஐயப்பாடுகள் எதுவாயினும் எடுத்துரைத்தால் கண்டிப்பாக பதில் கிடைக்கும்..

No comments:

Post a Comment