Friday, 25 August 2017


ஸ்ரீ அகத்தியர் ஜீவ நாடி -சில குறிப்புகள்

        இந்த குறிப்புகளிள் அடியேனிற்கு புரிந்த அல்லது தெரிந்து கொண்ட ,ஜீவ நாடி சம்பந்தபட்ட அனுபவங்களை எனது குரு ஸ்ரீ அகத்தியரின் அருள் கொண்டு பகிர்ந்து கொள்ளுகிறேன்.
     முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால்,ஜீவ நாடியில் தோற்றமும் அதன் நோக்கங்களும் தான்.கலியுகத்திலே மனிதன் தான் செய்ய வேண்டிய தான,தர்மங்களை மறந்து தான், தன் குடும்பம் என்ற சுய நல செய்கையிலே தனது வாழ்நாள் பொழுதை வீணடித்து விடுகிறான்.ஆகவே அவன் செய்ய வேண்டிய தான,தர்மங்களை அல்லது அவனை நெறிபடுத்த தோன்றியவையே ஜீவ நாடிகள்.பண்டைய காலத்தில் ரிஷிகளும்,சித்தர்களும் தங்கள் ஆசிரமங்களை ஆங்காங்கே நிறுவி,சத்சங்கங்களையும் தோற்றுவித்து,அந்தந்த யுக தர்மங்களை செய்ய தூண்டி கொண்டேயிருந்தார்கள்,ஆனால் கலியுக தர்மம் என்னவென்றால் எந்த தெய்வ சக்தியும் அல்லாது சித்தர்களே நேரில் தோன்றி தர்மங்களை போதிக்க கூடாது என்பதே ஆகும் .ஆகவே கலியுகத்தில் மக்களை நெறிபடுத்த தோன்றியவையே ஜீவ நாடிகள் ஆகும்.
நாடிகளில் பல வகை உண்டு அவையாதனில்,
1)காண்ட நாடி
இது விரல் ரேகையை கொண்டு,மனிதனின் விதி அல்லது கர்மத்தை பற்றி உரைப்பது.இது வள்ளுவ குலத்தினரால் உரைக்கபடுவது.
2)சம்ஹீதா நாடி
இது வட மாநிலங்களில் அதிகமாக காணப்படுவது.இது ஒருவர் நாடி வாசிப்பவரை அணுகும் நேரம் மற்றும் அவரது பிறப்பு சாதகத்தை கொண்டு அவரவர்களுக்கு உரிய பலன்களை உரைப்பது.
3)ஆசி காண்டம்
இது காண்ட நாடியில் காணப்படுவது.சித்தர்களின் ஆசியை பெற்று தருவது.இதில் ஒரு மனிதன் பெறக்கூடிய குருமார்களின் ஆசியை பெற்று தருவது
4)ஜீவ நாடி
இது நாடிகளிலே உயர்ந்தது. சித்தர்களும் ரிஷிகளும் நாடியில் பிரதட்சனமாகி தங்கள் சீடர்களுக்கு உரிய அறிவுரைகளை தெரிவிப்பது.இது தெய்வ புருஷர்கள் மட்டுமே வாசிக்க கூடியது.
5)போத்தி
இது ஒரிசா மாநிலத்தில் படிக்கபடுவது.
வெள்ளி  அல்லது தாமிர பலகையில் எழுத்துக்கள் தோன்றுவது
பிராமணர்களால்  மட்டும் படிக்க கூடியது.
     ஜீவ நாடிகள் என்பது  அவ்வப்போது தோன்றி கொண்டே இருக்கும்.சித்தர்கள் தாங்கள் விரும்பிய நபர்களை தேர்ந்து எடுத்து அவர்களை நன்றாக பயிற்சி கொடுத்து,அவர்கள் மூலமாக வாக்குகளை உரைக்க செய்வது.பொதுவாக தெய்வ அருள் பெற்ற அருளாளர்கள் மட்டும் வாசிக்க இயலும்.அவர்களுக்கு எழுத்துக்கள் தங்க நிறத்தில் புலப்படும்.இத்தகைய நாடிகள் சமீப காலத்தில்,சென்னையில் மறைந்த திரு.அனுமந்தாசன்,தஞ்சாவூரில் திரு.கணேசன்,மற்றும் ஸ்ரீ காக புஜண்டர் நாடியில் படிக்கும் ஸ்ரீ ரமணி குருஜி ,ஸ்ரீ அகத்திய ஜீவ நாடி ஆகிய இடங்களில் புகழ் பெற்று விளங்குகின்றன .
       நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால்,எப்போது இந்த ஜீவ நாடிகள் தோன்றுகின்றன.ஒவ்வொரு மகா சிவராத்திரியிலும் இந்த ஜீவ நாடிகள் தோன்றுகின்றன (ஸ்ரீ வெங்கடராம சித்தர்).சில ஜீவ நாடிகள் ரகசியமாக படிக்க படுகின்றன .சில ஜீவ நாடிகள் சித்தர்களின் ஆணைப்படி பொது மக்களுக்கும் படிக்க படுகின்றன.ஆனால் ஜீவ நாடி இயக்குவதில் சில சூட்சுமங்கள் உண்டு.அவையே ஜீவ நாடியை திறக்கும் சாவிகளாகும்.
 இந்த சூட்சுமங்களை புரிந்து கொள்ளாவிட்டால்,ஜீவநாடிகள் இயங்காது.தற்போது திரு.அனுமந்தாசன் வாசித்த நாடியில் நிலைமையும்  அப்படித்தான்.சித்தர்களின் அருள் இன்றி நாடியை படிக்க எந்த நபராலும் இயலாது.மேலும் ஜீவ நாடிகள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் படிக்கும் நபரிடம் இருந்து வேறொரு நபருக்கு சித்தர்களின் ஆணைப்படி மாறி கொண்டேயிருக்கும் அல்லது சில தருணங்களில் மறைந்துவிடும்.
    ஜீவ நாடி சித்தர்கள் நம்முடன் தொடர்பு கொள்ள கூடிய ஒரு மீடியம் ஆகும்.மீடியமாகிய சுவடியை பயன்படுத்தும் மிகுந்த  பக்தி,சிரத்தை தான தருமங்கள் போன்ற வற்றை செய்யும் மனிதர்களாக தான் இருப்பார்கள் .மற்ற சாதாரண மனிதர்களால் படிக்க இயலாது.
   ஒவ்வொரு ஜீவ நாடியும் ஒவ்வொரு வகைப்படும்.சில ஜீவ நாடிகள் தருமத்துடனும் சில மந்திர மார்கங்களும்,சில பிராயசித்த மார்க்கங்களை  உரைகின்றன.சில ஜீவ நாடிகள் ஆலயம் மற்றும் வழிபாடு முறைகளை பற்றி தெரிவிகின்றன~
தெய்வதிருமிஸ்டிக் செல்வம்).சில ஜீவ நாடிகள் மடாலயங்களால் பாதுகாக்க படுகின்றன.
          தற்போது தமிழ் நாட்டில் பல ஜீவ நாடிகள் இருந்தும் பெரும்பாலும் அவை இயங்குவதில்லை.நாடி வாசிப்பவரின் அலட்சிய சுபாவமும் கேட்பவரின் அசிரத்தையாலும் தான்  சித்தர்கள் வாக்கு உரைப்பதில்லை.தொடர்ந்து செய்யும் தான தருமங்களை  பொறுத்துதான் ஜீவ நாடியில் தெள்ளிய முறைகளில் வாக்கு வரும்.
    அகத்தியர் ஞானம்

No comments:

Post a Comment