அகத்தியரை "நாடியில்" ...
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
எத்தனையோ எதிர்பார்ப்புடன் அகத்தியரை "நாடியில்" நாடி அருள்வாக்கு கேட்கிற மனிதர்கள் நம்மிடை உண்டு. அவர் சொல்கிற எத்தனையோ பரிகாரங்களை செய்தும், நாம் எதிர்பார்ப்பது நடக்க தாமதமாகலாம். வருத்தப் படுவது வேண்டாம். அகத்தியப் பெருமானே, ஏன் என்று, அதற்கான காரணங்களை, பல தருணங்களில் விளக்கியுள்ளார். இந்த வாரம், சித்தன் அருளில், அகத்தியரின் பல அறிவுரைகளை உங்களுக்கு வழங்கலாம் என்று எண்ணம்.
அகத்தியப் பெருமான் நாடியில் வந்து பலமுறை கூறிய அறிவுரைகளை, என் நண்பர் விவரித்த விஷயங்களை, எளிய முறையில், இங்கு தொகுத்து தந்திருக்கிறேன். அகத்தியப் பெருமான் அருள் தந்தும் ஏன் நடக்கவில்லை என்று நினைத்திருப்பவர்களுக்கும், நம்முள்ளே எழுந்து இன்றுவரை விடை கிடைக்காமல் இருக்கும் ஒரு சில கேள்விகளுக்கும், இங்கு கண்டிப்பாக பதில் இருக்கும். அதை சரியாக தரம் பிரித்து பார்த்து, உங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப, உங்களுக்கு அகத்தியர் கூறுகிற பதிலாக எடுத்துக் கொண்டு, அதன்படி நடந்து, பின்னர் அமைதி உங்களுக்குள் தவழ்ந்தால், இவைகள் உங்களுக்கென அகத்தியர் கூறிய பதில் என்று உணர முடியும்.
1 . அகத்தியர் ஒரு சித்தர். அவரை நாடிக் கேட்கும் பொழுது நல்வழி காட்டுவார். நூற்றுக்கு தொண்ணூறு பேருக்கு நல்ல வழி, நல்ல பயன் கிடைக்கிறது. மற்றவர்கள், பொறுமையாக , மறுபடியும், மறுபடியும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் நிச்சயம் அவர்களுக்கும் அருள் புரிவார். இங்கு நம் கடமை என்பது, பரிகாரங்களை செய்வதோடு மட்டும் அல்லாமல், பொறுமையாக, நிறைய நல்ல விஷயங்களை நம்பிக்கையோடு செய்து கொண்டிருக்க வேண்டும். மனம் தளரக்கூடாது. கண்டிப்பாக நல்லது நடக்கும்.
2 . பொதுவாக அகத்தியர் அவ்வளவு எளிதில் எல்லோருக்கும் வாக்கு கொடுப்பதில்லை. சோதனைகளை உண்டாக்கி, "உண்மையில் அவன்/அவள் நம்பிக்கையோடு வந்திருக்கிறார்களா? இல்லை சுயநலத்திற்காக வந்து கேட்கிறார்களா என்பதை அறிந்த பின்னர்தான், தனது தவவலிமையை கொண்டு, வியத்தகு காரியங்களை செய்து காட்டுவார். ஆகவே, கேட்பதில், நாம்தான் மிகத்தெளிவாக இருக்க வேண்டும். கேட்பது, நிலைத்து நிற்கும் விஷயங்களாக இருந்தால். நிச்சயமாக கிடைக்கும்.
3 . அகத்தியர் வாக்கு சில சமயம் பொய்த்துவிட்டது போல் தோன்றும். ஆனால், சரியான நேரத்தில் அது விஸ்வரூபம் எடுத்து மீண்டும் பிரம்மாண்டமாக வெளியே வரும். இது தான் உண்மை.
4 . "காரணமில்லாமல் பொறுத்திரு என்று அகத்தியன் கூற மாட்டேன். இது அவசரமான உலகம். பணம் கொடுத்தால் எதையும் சாதித்து விடலாம் என்று நம்புகிறார்கள். கலியுகம் என்பதால் அப்படி நடக்கவும் செய்கிறது. எப்போதைக்கு எப்போது எவன் ஒருவன் அகத்தியனிடம் முழு நம்பிக்கையோடு வந்து வாக்கு கேட்கிறானோ அவனை நானே கைபிடித்து தூக்கி அழைத்துச் செல்வேன். நம்பிக்கை இல்லாதவர்களைப் பற்றி பொருட்படுத்தவே மாட்டேன். ஏனெனில், என்னை நம்பி வருபவர்களுக்கு பிற்காலத்தில் எந்தவிதத் துன்பமும் வரக் கூடாது. அவர்களின் எதிர்காலத்தை பிரம்மாவிடம் கேட்டு பிரம்மாவின் அனுமதியோடு அவர்களுக்கு நல்லது செய்வேன். இதற்கு சில காலம் ஆகலாம். பலருக்கு பிரம்மா இரக்கப்படாமல் கூடப் போகலாம். பிரம்மா மறுத்துவிட்டால், அதை நான் அப்படியே என் பக்தர்களுக்கு சட்டென்று நான் சொல்லிவிடமாட்டேன். மீண்டும் பிரம்மாவின் மனதை சாந்தப்படுத்த முயற்ச்சிப்பேன். எனது வேண்டுகோளை பிரம்மா உடனடியாக ஏற்றுவிட்டால் என் பக்தர்களுக்கு உரிய எதிர்பார்ப்பை நிறைவேற்றி வைப்பேன். இது நடக்கும், நடக்காது என்று வெட்டு ஒன்று துன்று ரெண்டாக சொல்லும் பழக்கம் அகத்தியனுக்கு இல்லை, அப்படிச் சொல்ல ஆரம்பித்தால் நூற்றுக்கு ஒருவர், இருவரைத் தவிர வேறு யாருக்கும் எந்தக் காரியமும் நடக்காது. "பொறுத்திரு" என்று சொன்னால் அவர்களுக்காக அகத்தியன் போராடிக் கொண்டிருக்கிறேன் என்று அர்த்தம். பக்தர்கள் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும்" என்று கூறுகிறார். சரியாக புரிந்து கொள்வது நமது கடமை, பொறுமை மேலும் நல்லதை செய்யும்.
5 . அனுபவப்பட்ட பின்தான் பலருக்கும் புரிகின்றது - பிரார்த்தனையும், பெரியோர்களின் வழிகாட்டலும்தான் ஒருவரை சோதனையிலிருந்து காப்பாற்றுகிறது என்று. நாம்தான் அவசரக் குடுக்கையாக நடந்து கொள்கிறோம், என்பதே அகத்தியரின் முடிவு.
6 . அகத்தியர் சொன்னால் எல்லாமே நடக்கும் என்பது பொது விதிதான். ஆனால், சம்பந்தப்பட்டவர்களும் தங்கள் பொறுப்பை உணர்ந்து அதன்படி நடந்து கொள்ளவேண்டும். ஒருவர், இருவர் என்றால் அகத்தியர் உடன் ஓடி வந்து உதவி செய்வார். ஒரு நாளைக்கு 1000 பேர் வந்து முறையிடுகிறார்கள். அவர்கள் அத்தனை பேருக்கும் அருள் பாலிக்க வேண்டும் என்று அகத்தியருக்கும் ஆசைதான். ஆனால் அவருக்கும் எத்தனையோ பிரார்த்தனைகள் இருக்கின்றன. த்யானம் செய்ய வேண்டும். தெய்வம் இடும் கட்டளைகளை/கடமைகளை செய்யவேண்டும். அதற்காக,
No comments:
Post a Comment