Wednesday, 20 November 2024

சோளிங்கர் - கார்த்திகை மாதம் மட்டும் என்ன ஸ்பெஷல்??

 Shared post 


ஊரெங்கும் மாவிலைத் தோரணம்....

வீடெங்கும் வண்ண வண்ண கோலம்...

எங்கு?எப்போது? என்ன விசேஷம்?


சில ஊர்களில் சில மாதங்கள் விசேஷமாய் போற்றப்படும். இப்போ மதுரையை பார்த்தீங்கன்னா சித்திரை மாதம் ஊரே கூடி விழா எடுத்தமாதிரி சித்திரைத் தி(பெ)ருவிழா நடைபெறும். திருவண்ணாமலையில் கார்த்திகை மாதம் ஆரம்பித்து விட்டாலே கொண்டாட்டம் தான். பௌர்ணமியும் கார்த்திகை நக்ஷத்திரமும் ஒன்றாக வரும் மகாதீப வைபவத்திற்காக ஊரே காத்து நிற்கும். 

திருமலையிலோ எல்லா நாட்களும் விசேஷம் தான் என்றாலும் புரட்டாசி மாதம் தனித்துவம் வாய்ந்த விசேஷம். பெருமாளுக்கு மிக உகந்த மற்றும் பிரம்மோற்சவம் நடைபெறும் மாதம். பல லட்சக் கணக்கில் பக்தர்கள் குவிவர். 


அதே போன்று கார்த்திகை மாதம் என்றால் ஒரு ஊரே விழாவாக கொண்டாடும். அந்த மாதம் முழுதும். அதுவும் ஞாயிற்றுக்கிழமை என்றால் கேட்கவே வேண்டாம். அது எந்த ஊர் தெரியுமா?

சென்னைக்கு அருகில் இருக்கும் சோளிங்கபுரம் என அழைக்கப்படும் சோளிங்கர் தான்.


அங்கு ஆட்சி செய்யும் பெருமாளான ந்ருஸிம்ஹர்  எப்போதும் அங்குதானே இருக்கிறார்.. அப்படியிருக்கையில் கார்த்திகை மாதம் மட்டும் என்ன ஸ்பெஷல்?? 


எப்போதும் யோக நித்திரையில் இருக்கும் பெருமாள் இந்த கார்த்திகை மாதம் மட்டும் கண்களை மூடி யோகம் செய்வதிலிருந்து ஒரு சிறு விடுப்பு எடுத்துக் கொண்டு கண்களைத் திறந்து பார்ப்பதாக ஐதிகம். வழக்கமாக கோவில்களில் ஸ்வாமி தரிசனம் செய்கையில் எங்கள் மேல் கருணை காட்ட மாட்டாயா.?கண் திறந்து பாரப்பா என வேண்டி நிற்போர் தானே நாம் எல்லோரும்? 


அப்படி இருக்கையில் பெருமாள் கண் திறந்திருக்கிறார் என தெரிந்தால் விடுவோமா? அவரது கடைக்கண் பார்வை ஒரு நொடி நம்மீது விழுந்தால் போதுமே. அவ்வளவு பாவங்களும் களையுமே கோடி புண்ணியம் வந்தடையுமே என ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு செல்ல மாட்டோமோ? அந்த கடைக்கண் பார்வையை நம்மீது வீச பெருமாளே  தயார் நிலையில் இருக்கும் போது நாம் வாளாவிருக்கலாமா? 


எல்லோரும் இவ்வாறே எண்ணுவதால் சோளிங்கர் நகரமே கார்த்திகை மாதம் முழுதும் விழாக்கோலம் பூண்டிருப்பதில் வியப்பென்ன!! ஊர் முழுதும் ஒரே அமளிதுமளி தான் போங்க!


நரஸிம்மரை குலதெய்வமா கொண்டவர்களும் சரி, இஷ்ட தெய்வமா கொண்டவர்களும் சரி சோளிங்கரில் வீற்றிருக்கும் யோக ந்ருஸிம்மரை தரிசிக்காமல் இருக்க மாட்டார்கள். கிட்டத்தட்ட 1305 படிகள் ஏறி குரங்குகளின் அன்பு, வம்பு பார்வை தொந்தரவுகளை சாமர்த்தியமாக கடந்து  யோக கோலத்தில் வீற்றிருக்கும் யோகநரசிம்மரை தரிசனம் செய்வது என்பது ஒவ்வொருவருடைய மனதிற்குள் இருக்கும் தீராத தாகம்.  அதுவும் கண்திறந்து பார்ப்பதாகச் சொல்லப்படும் கார்த்திகை மாதத்தில் தரிசிப்பதை வாழ்நாளில் தாம் அடையும் பேறாக கருதிசெல்வர்.


இத்தலம் வைஷ்ணவர்கள் சிறப்பாகக் கொண்டாடும் 108 திவ்ய க்ஷேத்திரங்களில் ஒன்றாகும்.

 

ஒரு நாழிகை (24நிமிடங்கள்) இந்தத் திருத்தலத்தில் நாம் தங்கி இருந்தாலே இத்தலம் நமக்கு முக்தியை அளிக்க வல்லதாக பெரியோரும் ஆன்றோரும் கூறுவர்.

 

 சோளிங்கர் அல்லது சோளிங்கபுரம் எனும் பெயர் புழக்கத்தில் இருந்தாலும் புராணங்களில் திருக்கடிகை என்ற பெயரில்  தான் அழைக்கப்பட்டது. ஆழ்வார்கள் அந்த பெயரில் தான்  இங்குள்ள ஸ்ரீந்ருஸிம்ஹரை மங்களாசாசனம் செய்துள்னளர். 

காரணமில்லாமலில்லை.  கடிகை என்பது ஒரு நாழிகைப் பொழுதைக் குறிக்கும். ஒரு நாழிகை இந்தத் திருத்தலத்தில் தங்கி இருந்தாலே, இத்தலம் முக்தியை அளிக்க வல்லது என்று பார்த்தோம் இல்லையா..  அதனால் தான் திருக்கடிகை என்று இதனை ஆழ்வார்கள் அழைத்துள்ளார்கள். 

 

ஏன் இங்கு ந்ருஸிம்ஹர் எழுந்தருளி அருள் பாலிக்கிறார்? சாமான்யர்களாகிய நாமே காரணமின்றி எச்செயலையும் செய்யாதபோது பெருமாள்? காரணம் காணலாம் வாருங்கள்...

 

நரசிம்ம அவதாரத்தைத் தரிசிக்க விரும்பிய சப்த ரிஷிகள் (அத்ரி, காஸ்யபர்,வசிஷ்டர், ஜமதக்னி, கௌதமர், பரத்வாஜர் மற்றும் விஸ்வாமித்ரர்) எனப்படும் ஏழு முனிவர்கள், சோளிங்கர் மலைக்கு மேல் நரசிம்மர் யோக நிலையில் தவம் புரிவதை தங்களது தவ பலத்தால் அறிந்து  கொண்டனர். சுமார் 750 அடி உயரம் கொண்ட அந்த மலைக்கு மேல் சென்ற முனிவர்கள், யோகத்தில் இருக்கும் நரசிம்மர் தங்கள் முன்னே வந்து காட்சி அளிக்கவேண்டும் என்று வேண்டி ஒரு நாழிகை (கடிகை) தவம் புரிந்தார்கள். அந்த இருபத்து நான்கே நிமிடங்கள் செய்த தவத்துக்காக விரைவில் மனம் உகந்து, யோக நரசிம்மப்பெருமாள் அவர்களுக்குக் காட்சி அளித்தார். நாளை என்பதே ந்ருஸிம்ஹருக்கு இல்லை என்பர். எல்லாமே இன்றே இப்போதே  தாம் அவருக்கு.


அதற்கு முன் அவர்கள் செய்து கொண்டிருந்த தவத்திற்கு காலன், கேயன் என்ற அரக்கர்கள் இடையூறாய் இருந்தனர். அதே சமயத்தில் ராம அவதாரம் முடிந்து ஸ்ரீராமன் வைகுண்டத்துக்கு செல்லும்போது தானும் உடன் வருவதாகக் கூறியதால் அனுமனும் அங்கு வந்து காத்திருந்தார். அரக்கர்களின் இடையூறான செயலைப் பார்த்த அனுமன் ஸ்ரீராமனிடம் ப்ரார்த்தனை செய்தார். 


தன்னுடைய சங்கு சக்கரத்தை அனுமனிடம் கொடுத்து அதை வைத்து அரக்கர்களை அழிக்க உத்தரவிட அனுமனும் அவ்விதமே செய்தார்.

சப்தரிஷிகள் நரசிம்மர் திருக்காட்சிக்காக புரிந்த தவம் பூர்த்தியானதால்  அந்தரிஷிகள் வேண்டிக்கொண்டபடி பெருமாள் யோக நரசிம்மராய் அங்கு திருக்காட்சி தந்தார்.

அந்த யோக நரசிம்மரை அங்கேயே அவர்கள் பிரதிஷ்டை செய்தார்கள். இதன் விளைவே இன்றெல்லாம் நமக்கு சோளிங்கரில் ந்ருஸிம்.?ஹ தரிசனம்.


மற்றுமொரு புராண நிகழ்வும் இந்த தலத்தை ஒட்டி கூறப்படுகின்றது. அதாவது, பிரம்மரிஷி என எல்லோராலும் புகழப்பட்ட விஸ்வாமித்திர மகரிஷிக்கு  தமது சமகால ஸ்ரேஷ்ட முனிவரான வசிஷ்டர் தம்மை அப்படி கருதவில்லையே  என எண்ணினார். அவர் திருவாயாலும்  பிரம்மரிஷி பட்டம் வாங்க விழைந்தவர் இந்த சோளிங்கர் மலை மேல் இருந்து தவம் புரிந்தால் எண்ணியது நிறைவேறும் என்பதால்  (ஏற்கனவே ஒரு கடிகை தவத்தின் பலனாக பெருமாளே நரசிம்மராய் திருக்காட்சி யளித்திருந்ததால்) அவ்வாறே இம்மலைக்கு வந்தார். சப்த ரிஷிகள் போன்று இருபத்து நாலே நிமிடங்கள் தவம் புரிந்தார். அதனை அறிந்து கொண்ட வசிஷ்டர் அவரைத்தேடி வந்து  பிரம்மரிஷி பட்டத்தைக் கொடுத்து விட்டுச் சென்றார் என்றும் இவ்வூரின் தலவரலாறு சொல்கிறது. 


மலையில் தனிக்கோவில் நாச்சியாராக  அம்ருதவல்லித் தாயார் திருக்காட்சியளித்து நம்மைக் கடாஷிக்க தயாராக எழுந்தருளியிருக்கிறார். 


..


ஏழு மண்டபங்கள் கடந்து மலை உச்சியை அடையலாம்.இரு பிரகாரங்களை உள்ளடக்கிய வடக்கு நோக்கிய நிலையில் அமைந்திருக்கும் ராஜகோபுரத்தில்  ஹேமகோடி விமானத்தின் கீழ் யோக நரசிம்மராகத் திகழும் திருமால், அந்த மலையின் அடிவாரத்தில் உற்சவராக  பக்தவத்சலர் எனும்  திருநாமத்துடன் காட்சி அளிக்கிறார். உற்சவ தாயார்திருநாமம் ஸ்ரீசுதாவல்லி. அருகிலுள்ள தீர்த்தம் ப்ரம்ம தீர்த்தம் என அறியப்படுகிறது.


சப்தரிஷிகளுக்கு கிடைத்த யோகநரசிம்மர் திருக்காட்சி அனுமனுக்கும் கிட்டியது. பரவசமடைந்த அனுமன் ஸ்ரீராமர் அளித்த சங்கு சக்கரத்துடன் பக்கத்திலுள்ள மலைமீது யோகநிலையில்  அமர்ந்தார். நான்கு கரங்களுடன் யோகநிலையில் தனிக்கோவிலில் எழுந்தருளியுள்ள அனுமனை நரசிம்மர் மலைக்கு அருகில் கிழக்குப் பக்கத்திலுள்ள சின்ன மலையில் 406 படிகளைக் கடந்து இன்றும் நாம் ஸேவிக்கலாம்.


சோளிங்கர் தலத்தை திருக்கடிகை என்ற பெயரில் மங்களாசாசனம் செய்த ஆழ்வார்கள் இங்குள்ள யோக ந்ருஸிம்ஹ பெருமானை அன்புடன் அக்காரக்கனி எனும் திருநாமமிட்டு விளிக்கின்றனர்.


"மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்

 புக்கானைப் புகழ்சேர்ப் பொலிகின்ற பொன்மலையைத்

 தக்கானைக் கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த

 அக்காரக் கனியை அடைந்து உய்ந்து போனேனே"

என்று அருளிச் செய்திருக்கிறார் திருமங்கை ஆழ்வார்.

 

திருக்கோவிலுக்கு செல்ல 1305 படிகளை ஏறி துவஜஸ்தம்பத்தை அடைந்து நன்கு ஸேவித்து  உள்ளே சென்றால் முதலில் நமக்கு அருள் பாலிப்பது  பத்மாசன கோலத்தில் வீற்றிருக்கும்  அமிர்தவல்லி தாயார் தான். காண கண் கோடி வேண்டும். 

தாயார் முன் நாம் கண் மூடி கரம் கூப்பி நிற்கையில் நம்மைப் பெற்றெடுத்த தாயாரே முன்னே நிற்பது போன்றதொரு உணர்வு கண்டிப்பா எல்லோரையும் தொற்றிக்கொள்ளும். சந்தேகமேயில்லை.

திருத்தாயாரின் புன்னகை ததும்பும் கருணை முகம் 'என்னிடம் வந்துவிட்டாய் அல்லவா. இனி உன்னை நான் பார்த்துக் கொள்கிறேன்' என்று சொல்வது போல் தோன்றும். நமக்கும் மனதில் கட்டாயம் அனைத்தும் நடந்தேறும் என்ற உறுதியும் நம்பிக்கையும் துளிர் விட்டுவிடும்.  


அந்நம்பிக்கையுடன் தாயாரை நன்கு மனங்குளிர ஸேவித்து பிரிய மனமில்லாமலே  உள்ளே சென்றால் ப்ரஹலாத வரதன், கூப்பிட்ட குரலுக்கு ஓடிவருபவன், பானகப் பிரியன், குழந்தை மனம் உள்ளவன், ப்ரதோஷப்பிரியன், அலங்காரப் பிரியன் என்று அழைக்கப்படும் ஸ்ரீ ந்ருஸிம்ஹ மூர்த்தி யோக கோலத்தில் அழகாய் வீற்றிருப்பதை காணலாம்.  பிரம்மாண்ட. உருவமாய் ஆனால் வாத்ஸல்யனாக  பத்மாசனத்தில் அந்த சங்கு சக்ரத்துடன் யோகத்தில் வீற்றிருக்கும்  பேரெழிலை ஆழ்வார்கள் போலன்றி நம்போன்ற சாமான்யர்களால் வர்ணிக்க இயலாது. 'தாயாரின்கடாக்ஷம் கிடைக்கப்பெற்று உனக்கு வேண்டியதை அளித்திட என்னிடம் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டாளல்லவா?பிறகென்ன? எல்லாம் உனக்கு ஜெயமே.. நிம்மதியாகப் போய்வா'  என அருள் பாலிப்பது நமக்கு அகக் கண்களுக்கு நன்கு புலப்படும். அந்த சந்தோஷத்தில், திருப்தியில், நிறைவில் அங்கிருந்து விடைபெற்றுச் செல்வோம். அதே உணர்வில் எஞ்சியிருக்கும்  நாட்கள் நொடிகளாக நம்மைக்கடந்து விடும். 


இருந்தாலும்அடுத்த வருடம் கார்த்திகை மாதத்திலும் கண்திறக்கும் எம்பெருமானின் அருள் வேண்டி நம்மை அங்கே வர வைத்துவிடும் அதுவே அவ்வக்காரக்கனியின் தனிச்சிறப்புமாகும்.

கார்த்திகை மாதத்திலும் குறிப்பா ஞாயிற்றுக் கிழமைகளில் அவனை ஸேவிப்பது கூடுதல் பலன் தரும் என்பதால் ஞாயிற்றுக்கிழமைகளில் அவனுக்கு டிமாண்ட் அதிகம். அதனால் பல்லாயிரக் கணக்கானோர் அங்கு ஆஜர். ஒவ்வொரு வருடம் கார்த்திகை மாதங்களிலும் அவனை ஸேவிப்பதோடு திருப்தி பட்டுக்கொள்ளாமல் ஒவ்வொரு கார்த்திகை ஞாயிறும் வந்து ஸேவிப்போர் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு கூடி வருகிறது. தம்மை அண்டி வரும் பக்தர்கள் ஒருவரையும் கைவிடுவதுமில்லை அவன்.


உபகதை ஒன்று காண்போமா?

இறைவனின் திருமேனி அவயவங்களுக்குள் ஒரு போட்டி வந்ததாம். அவரது திருவடி, என்னிடம் தான் பக்தர்கள் சரணாகதி செய்கிறார்கள், நான்தான் பெரியவன் என்றதாம். திருக்கரம், நான்தான் சரண் அடைபவர்களுக்கு அபயம் அளிக்கிறேன், நானே பெரியவன் என்றதாம். இதுபோல் ஒவ்வொரு அவயவமும் போட்டி போட்ட நிலையில், திருமால் தீர்ப்பு தந்தாராம், என் கண்கள் கடாக்ஷம் புரிவதால் தான் பக்தன் வந்து சரணாகதியே செய்கிறான், எனவே கண்ணே மற்ற அவயவங்களை விட

 உயர்ந்தது என்று. 

அத்தகைய கண்கள் கார்த்திகை மாதத்தில் நமக்குக் கடாஷிக்க காத்திருக்கையில் தயக்கம் ஏன்?

 

 "திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல்

 அங்கண் இரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்

 எங்கள்மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்"----


என்று ஆண்டாள் பாடியபடி நரசிம்மப் பெருமாளின் திருக்கண் நோக்குக்கு இலக்காகும் பேற்றினை இந்த ஆண்டு நாமும் பெறுவோமாக. 


ஏற்கனவே பெற்றிருப்போர் இவ்வாண்டும் பெறுவீர்களாக.


பின் தயக்கமேன்? தற்போது நடப்பது கார்த்திகை மாதம். வரப்போகும்ஞாயிறு. 

போய் ஸேவித்து வருவோமே??அப்படி  ஞாயிறு முடியாவிடினும் எஞ்சியிருக்கும் கார்த்திகை மாத நாட்களில்  ஏதேனும் ஒன்றில் போய் ஸேவித்து உய்வோமாக!!


இன்னும் எத்தனையோ பெருமைகளை உடைய இத்திருத்தலம் அரக்கோணத்தில் இருந்தும், திருத்தணியில் இருந்தும் 30 முதல் 35 கிமீ தொலைவில் இருக்கிறது.ஒருமுறை சோளிங்கர் வந்து யோகநரசிம்மரை தரிசித்து சென்றால் சோகம் என்பதே வாழ்வில் இருக்காது. நம்பினோரைக் கைவிடுவதில்லை நரசிம்மன்.

ஆழ்வார்களில் திருமங்கையாழ்வார் மூன்று பாசுரங்களாலும் முதல் மூன்று ஆழ்வார்களில் இளையவரான பேயாழ்வார் ஒரு பாசுரம் மூலமும் இப்பெருமாளை மங்களாசாசனம் செய்துள்ளனர்.


----ஸ்ரீஅக்காரக்கனி திருவடிகளே சரணம்.

Wednesday, 6 November 2024

மாதவ வனேஸ்வரர் திருப்பூர்

 திருப்பூரில் உலக அதிசயம் நந்தியே கோபுரமாய் திருமுருகன்பூண்டி கோவிலின் பின்புறம் சற்று தூரத்தில் அமைந்துள்ள "மாதவ வனேஸ்வரர்" ஆலயத்தின் நுழைவு வாயிலில் ராஜகோபுரத்திற்குப் பதிலாக சுதையாலான பெரிய ஒரு நந்தியே அமர்ந்துள்ளது. இது எங்கும் இல்லாத அதிசய அமைப்பு

  

இங்கு அய்யன்  - மாதவனேஸ்வரர், அம்மை   - மங்களாம்பிகை.ஒரு காலத்தில் இங்குள்ள இறைவனை துருவாச முனிவர் வந்து வழிபட்டுள்ளார்.அதனால் அவர் பெயரில் துருவாச தீர்த்தக் கிணறு உள்ளது,


கேது பரிகார தலம்🙏🏻


தமிழகத்தில் கும்பகோணம் வட்டாரத்தில் உள்ள நவகிரக தலங்களில் கேது - தலமான கீழ்பெரும்பள்ளம் அடுத்து இரண்டாவதான ஒரே தலம் இந்த மாதவனேஸ்வரன் கோவில்தான்.இந்தக் கோவிலின் வடமேற்கு மூலையில் "கேது பகவான்"தனிசன்னதியில் அமர்ந்துள்ளார்.எனவே கேது தோஷ பரிகாரத்திற்கு கீழ் பெரும்பள்ளம் செல்லாமல் இங்கேயே செய்யலாம்.


தகவல் உதவி - கவிஞர் சிவதாசன் அவர்கள்


#TirupurTalks






Tuesday, 5 November 2024

அபயாம்பிகை

 மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள ஒரு சிற்றூர் நல்லத்துக்குடி,. அங்கு 200 ஆண்டுகளுக்கு முன்னால் ஓர் அந்தண தம்பதிக்கு அழகிய ஆண் மகவு பிறந்தது. குழந்தைக்கு தாத்தா பெயரான கிருஷ்ணசாமி என்று பெயர் வைத்தார்கள்

-

குழந்தை பிறந்து சில ஆண்டுகளில் அந்தத் தம்பதி நோய்வாய்ப்பட்டனர். சுவாமி இது என்ன சோதனை? நாம் இருவரும் விரைவில் இறந்துவிடுவோம் என்று தோன்றுகிறது. நம் குழந்தை என்ன செய்வான்? பாவம், அனாதை ஆகிவிடுவானே...? என்று அந்தணரின் மனைவி மனவேதனையுடன் சொன்னார். உடனே, அந்தணர் அப்படிச் சொல்லாதே; குழந்தை கிருஷ்ணசாமி, தேவியின் அருளால் தோன்றியவன். அவனை அபயாம்பிகை காப்பாற்றுவள் என்று கூறினார். வேதியரும், அவருடைய மனைவியும் இறந்துவிட்டனர். 

-

அவர்களின் இறுதிச் சடங்குகளும் முடிந்து விட்டன. தனித்து விடப்பட்ட குழந்தை கிருஷ்ணசாமி செய்வதறியாது, வீட்டுத் திண்ணையில், பசியுடன் சோர்ந்தவாறு அமர்ந்திருந்தான்.அவனை எடுத்து வளர்க்க யாரும் முன்வரவில்லை.


அப்போது இரண்டு வேதியர்கள் அவ்வழியே சென்றனர். ஓய்! குழந்தையின் நிலையைப் பார்த்தீரா? பெற்றவர்களை விழுங்கிவிட்டு, அனாதையாகி நிற்கிறான்? என்று ஒருவர் சொல்ல, மற்றவர் பாவம்! அப்படிச் சொல்லாதீர்; அனாதைக்குத் தெய்வமே துணை! என்று கூறினார்.

-

 குழந்தையை அபயாம்பிகை காப்பாற்றுவாள்! 

என்று தனது தந்தை குறிப்பிட்டது கிருஷ்ணசாமியின் நினைவிற்கு வந்தது. அம்மா! அபயாம்பிகே! அம்மா! என்று அம்பிகையை கண்கலங்கி வணங்கினான்.

-

ஒரு சாதாரணப் பெண் வடிவத்தில் அம்பாள் கையில் உணவுடன் சென்றார். ரொம்பப் பசியா? அம்மா வந்துவிட்டேன்! இந்தா, சாப்பிடு! என்று ஊட்டி விட்டாள். தங்கக் கிண்ணத்தில் கொணர்ந்த அன்னத்தை அபயாம்பிகை ஊட்டியவுடன், கிருஷ்ணசாமியின் வயிற்றுப் பசி நீங்கியது. அத்துடன், வேத சாஸ்திர ஞானமும், கவிபாடும் திறமையும் கிடைத்துவிட்டது! இறைநினைவாகவே இருந்த அவனுக்கு எப்படியோ உணவு கிடைத்து வந்தது

-

வாலிபப் பருவத்தை அடைந்த நிலையில் வேலையில்லாமல் இருந்த கிருஷ்ணசாமியின் முன்னால் மீண்டும் அபயாம்பிகை தோன்றினாள்.

கிருஷ்ணசாமி என்னுடன் வா! உனக்கு உரிய பணியை தருகிறேன். என்று அம்பாள் கூறினாள்.அதன் முன்னால் நிற்பது அம்பிகைதான் என்பது அப்போது கிருஷ்ணசாமிக்கு தெரியாது.ஏதோ பரவச நிலையில். வேதியப் பெண்ணாக வந்த அபயாம்பிகையைப் பின் தொடர்ந்து சென்றார் கிருஷ்ணசாமி. மயூரநாதர் கோயில் வாசல் வந்தவுடன் வேதியப் பெண் மறைந்து விட்டார். 

-

அப்போதுதான் தன்னை இத்தனை நாள் காத்துவந்தது அம்பிகை என்பதை உணர்ந்தான்.அபயாம்பிகை தாயே தன் கோயிலில் தொண்டு செய்ய அழைத்து வந்திருக்கிறாள்! இனி வாழ்நாள் முழுவதும் அவளுக்கே தொண்டு செய்வேன் என்று மனதாத வேண்டிக் கொண்டார்.

-

 ஒரு நாள் இரவில் கோயிலில் வாயிலில் கல்லில் கால் இடறி விழுந்தார் கிருஷணசாமி. அப்போது... அம்மா! அம்மா! அபயாம்பிகை தாயே! என்று அழைத்தார். மெதுவாகப் பார்த்து; வா! நான் உனக்கு நல்லத்துக்குடி வரை கைவிளக்குடன் வந்து வழி காட்டுகிறேன் என்று அபயாம்பிகை கைவிளக்குடன் நின்றார். 

அபயாம்பிகை கைவிளக்குடன் முன்னே நடக்க, கிருஷ்ணசாமி பின்னால் நடந்து சென்றார் அடுத்தநாள் அர்த்தஜாமப் பூஜைகள் முடிந்தபின் கிருஷ்ணசாமி இருளில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.அப்போதும் அபயாம்பினை கையில் விளக்குடன் வழிகாட்டியபடி முன்னால் நடந்து சென்றாள்


தாயே! பெற்றோர் இறந்தது முதல் என்னைப் பேணிக் காக்கும் உனக்கு நான் என்ன கைமாறு செய்ய முடியும்? என்று கிருஷ்ணசாமி அம்பாளிடம் கேட்க, அதற்கு தாய், என்னை செந்தமிழ்ப் பாக்களால் பாடலாமே? என்று கூற, மிகவும் மகிழ்ச்சி தாயே! நீ தந்த வாக்கால் உனக்கு ஒரு சதகம் பாடுகிறேன்! கேள் என்று பாடினார். கிருஷ்ணசாமி! 

-

அபயாம்பிகை மீது சதகம் பாடி, அன்னையை மகிழ்வித்த உன்னை இனி உலகம், அபயாம்பிகை பட்டர் என்று போற்றும் என்று ஊர்மக்கள் அனைவரும் கூறினர். பெரியோர்களே எல்லாம் அபயாம்பிகை திருவருள்! என்று கிருஷ்ணசாமி கூறினார். 

-

நூறு பாடல்களைக் கொண்ட அபயாம்பிகை சதகம் மயிலாடுதுறை அம்பிகையான அபயாம்பிகை மீது இயற்றப்பட்ட நூலாகும். 

-

Friday, 1 November 2024

காளி தேவி அர்களா ஸ்தோத்திரம்

 ஜயந்தீ மங்களா காளீ பத்ரகாளீ கபாலினீ

துர்க்கா க்ஷமா சிவாதாத்ரீ ஸ்வாஹா ஸ்வதா நமோஸ்துதே

ஜயத்வம் தேவி சாமுண்டே ஜய பூதார்த்தி ஹாரிணி

ஜயஸர்வகதே தேவி காளராத்ரி நமோஸ்துதே


மதுகைடப வித்ராவி விதாத்ரூ வரதே நம:

ரூபம் தேஹி ஜயம் தேஹி யசோ தேஹி த்விஷோ ஜஹி

மஹிஷாஸுர நிர்ணாச விதாத்ரி வரதே நம:

ரக்தபீஜவதே தேவி சண்டமுண்ட விநாசினீ


சும்பஸ்யைவ நிசும்பஸ்ய தூம்ராக்ஷஸ்யச மர்தினி

வந்திதாங்க்ரியுகே தேவி ஸர்வ ஸௌபாக்யதாயினி

அசிந்த்ய ரூபசரிதே ஸர்வ சத்ரு விநாசினி

நதேப்யஸ் ஸர்வதா பக்த்யா சண்டிகே ப்ரணதாயமே


ஸ்துவத்ப்யோ பக்திபூர்வம்த்வாம் சண்டிகே வ்யாதிநாசினி

சண்டிகே ஸததம் யேத்வாம் அர்ச்சயந்தீஹ பக்தித:

தேஹி ஸௌபாக்கியம் ஆரோக்யம் தேஹிமே பரமம் ஸுகம்

விதேஹி த்விஷாதாம் நாசம் விதேஹி பலமுச்சகை


விதேஹி தேவி கல்யாணம் விதேஹி விபுலாம் ச்ரியம்

ஸுராஸுர சிரோரத்ன நிக்ருஷ்ட சரணேம்பிகே

வித்யாவந்தம் யசஸ்வந்தம் லக்ஷ்மீவந்தம் ஜனம் குரு:

ப்ரசண்டதைத்ய தர்ப்பக்னே சண்டிகே ப்ரணதாயமே


சதுர்புஜே சதுர்வக்த்ர ஸம்ஸ்துதே பரமேஸ்வரி

க்ருஷ்ணேன ஸம்ஸ்துதே தேவி சச்வத்பக்த்யா ஸதாம்பிகே

ஹிமாசல ஸுதாநாத பூஜிதே பரமேஸ்வரி

இந்த்ராணீ பதிஸத்பாவ பூஜிதே பரமேஸ்வரி


தேவி ப்ரசண்ட தோர்த்தண்ட தைத்ய தர்ப்ப விநாசினி

தேவி பக்த ஜனோத்தாம தத்தானந்தோ தயேம்பிகே

பத்னீம் மனோரமாம் தேஹி மனோவ்ருத்தானு ஸாரிணீம்

தாரிணீம் துக்க ஸம்ஸார ஸாகரஸ்ய குலோத்பவாம்


இதம் ஸ்தோத்ரம் படித்வாது மஹாஸ்தோத்ரம் படேன்நர:

ஸது ஸப்த சதீ ஸங்க்யா வரமாப்னோதி ஸம்பதாம்


அர்களா ஸ்தோத்திரம்  –  சண்டிகாயை நம||


மார்கண்டேயர் சொன்னார் -


1. ஓம் ஜயந்தி மங்களா, காளி, பத்ரகாளி கபாலினீ, துர்கா,க்ஷமா,சிவா, தாத்ரி, ஸ்வாஹா, ஸ்வதா – உனக்கு நமஸ்காரம்.


2. காளராத்ரியான தேவி, எங்கும் நிறைந்தவள், உலகில் துன்பத்தை துடைப்பவள், என்று போற்றப்படும், சாமுண்டே ஜய, ஜய போற்றி போற்றி


3. மது கைடபர்களை அடக்கி, விதாதாவான ப்ரும்மாவுக்கு வரம் அளiத்தவளே, உனக்கு நமஸ்காரம். எங்களுக்கு எப்பொழுதும், நல்ல ரூபத்தை, ஜயத்தை, புகழைத் தருவதோடு,  விரோதிகளையும் வதைப்பாயாக.


4. மகிஷாசுரனை வதைத்து, பக்தர்களுக்கு சுகத்தை தந்தவள் நீ. உனக்கு நமஸ்காரம். எங்களுக்கு எப்பொழுதும், நல்ல ரூபத்தை, ஜயத்தை, புகழைத் தருவதோடு,  விரோதிகளையும் வதைப்பாயாக.


5. ரக்தபீஜன் என்பவனை வதைத்தவளே, சண்டன், முண்டன் என்றவர்களையும் நாசம் செய்தவள், (உனக்கு நமஸ்காரம்) எங்களுக்கு எப்பொழுதும், நல்ல ரூபத்தை, ஜயத்தை, புகழைத் தருவதோடு,  விரோதிகளையும் வதைப்பாயாக.


6. சும்பன், நிசம்பன், துaம்ராக்ஷன் இவர்களை மர்தனம் செய்தவள். (உனக்கு நமஸ்காரம்) எங்களுக்கு எப்பொழுதும், நல்ல ரூபத்தை, ஜயத்தை, புகழைத் தருவதோடு,  விரோதிகளையும் வதைப்பாயாக.


7. அனவரதமும் மற்றவர்கள் தொழும் பாதங்கள், அவை சர்வ சௌபாக்ய தாயினி – எல்லாவித நன்மைகளையும் தரும் என்பது நாம் அறிந்ததே -


அப்படிப்பட்ட (உனக்கு நமஸ்காரம்) எங்களுக்கு எப்பொழுதும், நல்ல ரூபத்தை, ஜயத்தை, புகழைத் தருவதோடு,  விரோதிகளையும் வதைப்பாயாக.


8. கற்பனைக்கு எட்டாத ரூபமும், சத்ருக்களை ஒடுக்கும் பராக்ரமும் உடையவளே, (உனக்கு நமஸ்காரம்) எங்களுக்கு எப்பொழுதும், நல்ல ரூபத்தை, ஜயத்தை, புகழைத் தருவதோடு,  விரோதிகளையும் வதைப்பாயாக.


9. பக்தியுடன் வணங்குபவர்களுக்கு வரும் துன்பத்தை நீக்குபவளே,(உனக்கு நமஸ்காரம்) எங்களுக்கு எப்பொழுதும், நல்ல ரூபத்தை, ஜயத்தை, புகழைத் தருவதோடு,  விரோதிகளையும் வதைப்பாயாக.


10. பக்தியோடு உன்னை வணங்குபவர்களுக்கு வியாதி அண்டாமல் காப்பவளே, (உனக்கு நமஸ்காரம்) எங்களுக்கு எப்பொழுதும், நல்ல ரூபத்தை, ஜயத்தை, புகழைத் தருவதோடு,  விரோதிகளையும் வதைப்பாயாக.


11. சண்டிகே, இதோ இவர்கள் எப்பொழுதும் பக்தியுடன் உன்னைஅர்ச்சனை செய்யும் இவர்fகளுக்கு,


12. சகல சௌபாக்யங்களையும், பரமான சுகத்தையும் தருவாயாக. (உனக்கு நமஸ்காரம்)  எங்களுக்கு எப்பொழுதும், நல்ல ரூபத்தை, ஜயத்தை, புகழைத் தருவதோடு, விரோதிகளையும் வதைப்பாயாக.


13. எங்கள் விரோதிகளால் துன்பம் இல்லாமல் செய். நல்ல பலம் தந்து என்றும் காப்பாய். (உனக்கு நமஸ்காரம்)        எங்களுக்கு எப்பொழுதும், நல்ல ரூபத்தை, ஜயத்தை, புகழைத் தருவதோடு,  விரோதிகளையும் வதைப்பாயாக.


14. தேவி, எங்களுக்கு என்றும் மங்களங்களை அருள்வாய். சிறந்த செல்வத்தை அருள்வாய். (உனக்கு நமஸ்காரம்)        எங்களுக்கு எப்பொழுதும், நல்ல ரூபத்தை, ஜயத்தை, புகழைத் தருவதோடு,  விரோதிகளையும் வதைப்பாயாக.


15. சுரர்களும், அசுரர்களும் இடைவிடாது தொழும் பாதங்களை உடையவளே, (உனக்கு நமஸ்காரம்)        எங்களுக்கு எப்பொழுதும், நல்ல ரூபத்தை, ஜயத்தை, புகழைத் தருவதோடு,  விரோதிகளையும் வதைப்பாயாக.


16. என்னையும் என்னைச் சார்ந்தவர்களையும் வித்யா சம்பன்னர்களாக, லக்ஷ்மி சம்பன்னர்களாக இருக்கச் செய். (உனக்கு நமஸ்காரம்)        எங்களுக்கு எப்பொழுதும், நல்ல ரூபத்தை, ஜயத்தை, புகழைத் தருவதோடு,  விரோதிகளையும் வதைப்பாயாக.


17. மிகக்  கொடிய தைத்யனின் கர்வத்தை அடக்கிய தேவி, உன்னை வணங்கும்  எங்களுக்கு எப்பொழுதும், நல்ல ரூபத்தை, ஜயத்தை, புகழைத் தருவதோடு,  விரோதிகளையும் வதைப்பாயாக.


18. நான்கு புஜங்களுடன், நான்கு முகங்களோடு இருக்கும் பரமேஸ்வரி, (உனக்கு நமஸ்காரம்)        எங்களுக்கு எப்பொழுதும், நல்ல ரூபத்தை, ஜயத்தை, புகழைத் தருவதோடு,  விரோதிகளையும் வதைப்பாயாக.


19. எப்போழுதும் பக்தியோடு, க்ருஷ்ணனால் துதிக்கப்பட்டவளே, (உனக்கு நமஸ்காரம்)        எங்களுக்கு எப்பொழுதும், நல்ல ரூபத்தை, ஜயத்தை, புகழைத் தருவதோடு,  விரோதிகளையும் வதைப்பாயாக.


20. ஹிமாசல நாதனுடைய மகள், அவள் நாதனான (சதாசிவனால்) துதிக்கப்பட்டவளே, பரமேஸ்வரி, (உனக்கு நமஸ்காரம்)        எங்களுக்கு எப்பொழுதும், நல்ல ரூபத்தை, ஜயத்தை, புகழைத் தருவதோடு,  விரோதிகளையும் வதைப்பாயாக.


21. இந்த்ராணீ பதியினால் ஸத்பாவத்துடன் துதிக்கப்பட்டவளே, பரமேஸ்வரி, (உனக்கு நமஸ்காரம்)        எங்களுக்கு எப்பொழுதும், நல்ல ரூபத்தை, ஜயத்தை, புகழைத் தருவதோடு,  விரோதிகளையும் வதைப்பாயாக.


22. தேவி, மிக பலசாலி என்று தோள் தட்டிய, தைத்யனையும் கர்வம் ஒழிந்து அடங்கச் செய்தவள் நீ.  பரமேஸ்வரி, (உனக்கு நமஸ்காரம்)        எங்களுக்கு எப்பொழுதும், நல்ல ரூபத்தை, ஜயத்தை, புகழைத் தருவதோடு,  விரோதிகளையும் வதைப்பாயாக.


23. பக்த ஜனங்களுக்கு உயர்வையும் ஆனந்தத்தையும் அளiப்பவளே, தேவி, பரமேஸ்வரி, (உனக்கு நமஸ்காரம்)        எங்களுக்கு எப்பொழுதும், நல்ல ரூபத்தை, ஜயத்தை, புகழைத் தருவதோடு,  விரோதிகளையும் வதைப்பாயாக


24. எனக்கு மனைவியை கொடு. மனோரமாவாக, என் மனதை அனுசரித்து நடப்பவளாக, இந்த ஸம்ஸார சாகரத்தைக் கடக்க என்னுடன் நடப்பவளாக, நல்ல குலத்தில் தோன்றியவளாக இருக்கும் படி கொடு.


 இந்த ஸ்தோத்திரத்தை படித்து விட்டு, மகா ஸ்தோத்திரத்தை படிக்க வேண்டும்.  அப்படி படிக்கும் மனிதர்கள், சப்தசதீ என்ற இந்த துதியின் பலனை அடைகிறார்கள். அளவில்லா செல்வங்களை அடைகிறார்கள்.


(தேவியின் அர்களா ஸ்தோத்திரம் நிறைவுற்றது)

Sunday, 27 October 2024

மீனாக்ஷி அம்மன் கோவில் கட்டப்பட்ட ஆண்டுகள்

 மீனாக்ஷி அம்மன் கோவில் கட்டப்பட்ட ஆண்டுகள்: நல்ல தகவல் தந்தவருக்கு நன்றி.


1168 – 75 -> சுவாமி கோபுரம்

1216 – 38 -> ராஜ கோபுரம்

1627 – 28 -> அம்மன் சந்நிதி கோபுரம்

1315 – 47 -> மேற்கு ராஜா கோபுரம்

1372 -> சுவாமி சந்நிதி கோபுரம்

1374 -> சுவாமி சந்நிதி வெஸ்ட் கோபுரம்


1452 -> ஆறு கால் மண்டபம்

1526 -> 100 கால் மண்டபம்

1559 -> சௌத் ராஜா கோபுரம்

-> முக்குரிணி விநாயகர் கோபுரம்

1560 -> சுவாமி சந்நிதி நார்த் கோபுரம்

1562 -> தேரடி மண்டபம்

1563 -> பழைய ஊஞ்சல் மண்டபம்

-> வன்னியடி நட்ராஜர் மண்டபம்


1564 – 72 -> வடக்கு ராஜா கோபுரம்

1564-72 -> வெள்ளி அம்பல மண்டபம்

-> கொலு மண்டபம்

1569 -> சித்ர கோபுரம்

-> ஆயிராங்கால் மண்டபம்

-> 63 நாயன்மார்கள் மண்டபம்

1570 -> அம்மன் சந்நிதி மேற்கு கோபுரம்


1611 -> வீர வசந்தராயர் மண்டபம்

1613 -> இருட்டு மண்டபம்

1623 -> கிளிக்கூட்டு மண்டபம்

-> புது ஊஞ்சல் மண்டபம்

1623 – 59 -> ராயர் கோபுரம்

-> அஷ்டஷக்தி மண்டபம்


1626 -45 -> புது மண்டபம்

1635 -> நகரா மண்டபம்

1645 -> முக்குருணி விநாயகர்

1659 -> பேச்சியக்காள் மண்டபம்

1708 -> மீனாக்ஷி நாயக்கர் மண்டபம்

1975 -> சேர்வைக்காரர் மண்டபம்


மீனாக்ஷி அம்மன் கோவில் கட்டியவர்களும், அந்த கால கட்டத்தில் ஆட்சி புரிந்தவர்களும்:


குலசேகர பாண்டியன் -> 1168 – 75.

மாறவர்மன் சுந்தரபாண்டியன் -> 1216 – 38.

பாராக்ரம பாண்டியன் -> 1315 – 47.

விஸ்வநாத நாயக்கர் -> 1529 – 64.


கிருஷ்ணப்பா நாயக்கர் -> 1564 – 72.

வீரப்ப நாயக்கர் -> 1572 – 94.

கிருஷ்ணப்பா நாயக்கர் -> 1595 – 1601.

முத்துகிருஷ்ணப்பா நாயக்கர் -> 1601 – 09.


முத்து நாயக்கர் -> 1609 – 23.

திருமலை நாயக்கர் -> 1623 – 1659.

ரௌதிரபதி அம்மாள் மற்றும்

தோளிமம்மை -> 1623 – 59. (Wives of ThirumalaiNaicker )

முத்து வீரப்ப நாயக்கர் -> 1659


சொக்கநாத நாயக்கர் -> 1659 – 82.

முத்து வீரப்ப நாயக்கர் -> 1682 – 89.

விஜயரங்க சோகநாத நாயக்கர் -> 1706 – 32.

மீனாட்சி அரசி -> 1732 – 36


 மதுரையிலேயே பஞ்சபூதத் தலங்கள் உள்ளதை நம்மில் பலபேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை🌹.

அவை:


1) மதுரை செல்லூரில் உள்ள திருவாப்புடையார் கோயில் 'நீர் ஸ்தலம்',


2) சிம்மக்கல் பழைய சொக்கநாதர் கோயில் 'ஆகாய ஸ்தலம்',


3) இம்மையில் நன்மை தருவார் கோயில் 'நில ஸ்தலம்',


4) தெற்கு மாசி வீதி தென் திருவாலவாயர் கோயில் 'நெருப்பு ஸ்தலம்',


5) தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயில் 'காற்று ஸ்தலம்' ஆகியவை மதுரையின் பஞ்சபூத ஸ்தலங்கள்


அதனால் தான் பஞ்சபூதங்களை உள்ளடக்கி வெள்ளை, ஊதா, பச்சை, சிவப்பு, மஞ்சள் நிறங்கள் கலந்த பஞ்சவர்ண கிளியை அன்னை மீனாட்சி கையில் பிடித்துள்ளாள் .


அப்பன் சிவனும் 64 திருவிளையாடல்களையும் கடம்பவனமாம் மதுரையிலேயே நிகழ்த்தி உள்ளார்.


திருவாரூரில் பிறந்தால் புண்ணியம்,

காஞ்சியில் வாழ்ந்தால் புண்ணியம்,

காசியில் இறந்தால் புண்ணியம்,

சிதம்பரத்தில் வழிபட்டால் புண்ணியம்,

திருவண்ணாமலையை நினைத்தாலே புண்ணியம் .


மதுரையில் பிறந்தாலும் 

மதுரையில் வாழ்ந்தாலும் 

மதுரையில் இறந்தாலும் 

மதுரையில் வழிபட்டாலும் 

மதுரையை நினைத்தாலும் புண்ணியம்.

சீறா நாகம், கறவா பசு, பிளிறா யானை, முட்டா காளை, ஓடா மான், வாடா மலை,காயா பாறை, பாடா குயில்

இவை அனைத்தும் மதுரை நகரின் அந்தக்காலத்து எட்டு திசைகளைக் குறிக்கும் எல்கை ஊர்கள்.👇👇👇


சீறா நாகம் - நாகமலை

கறவா பசு - பசுமலை

பிளிறா யானை - யானைமலை

முட்டா காளை - திருப்பாலை

ஓடா மான் - சிலைமான்

வாடா மலை - அழகர்மலை

காயா பாறை - வாடிப்பட்டி

பாடா குயில் - குயில்குடி


#madurai #மதுரை


ஐப்பசி_பூரம் நட்சத்திர நாளான இன்று

 ஐப்பசி_பூரம் நட்சத்திர நாளான இன்று 

உலகப் புகழ்பெற்ற இந்தியாவில் உள்ள ஏழு புண்ணிய இடங்களில் ஒன்றான,

51 சக்தி பீடங்களில் காமகோடி பீடமான பல யுகங்கள் கடந்த

காஞ்சிபுரம் என்ற 

திருக்கச்சி காமக்கோட்டது_ராணி

காமாக்ஷி_அம்மன் திருஅவதார_நாள் :

(ஜென்ம_நட்சத்திரம்)


காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில், 51 சக்தி பீடங்களில் பார்வதிதேவியின் தொப்புள் (நாபி )விழுந்த சக்தி பீடமாகும். 

இங்கு, வேத வியாசர் பிரதிஷ்டை செய்துள்ள காமாட்சி அம்மன், இரண்டு காலையும் மடித்து பத்மாசன யோக நிலையில் அமர்ந்திருக்கிறார். ஒரு கையில் கரும்பு வில்லையும், தாமரை, கிளியை மற்றொரு கையிலும் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஆதிசங்கரர் ஸ்ரீசக்கரத்தை பிரதிஷ்டை செய்து, ஆனந்தலஹரி பாடிய தலம் இது.


ஐப்பசி_பூரம்:


ஐப்பசி மாத பூர நக்ஷத்திர தினத்தன்று, காமாக்ஷி அம்பாள் இன்றைய கால கட்டத்திலே நாம் எந்த ரூபத்தோடு தரிசனம் செய்து வருகிறோமோ, மூலஸ்தான அம்பாளாக, நான்கு புஜங்களுடன், பத்மாசனத்திலே இருக்கக் கூடிய அந்த உருவத்துடன், பக்தர்களுக்கு தரிசனம் அளித்த தினமாக, ஆதி திராவிட தினமாக, பிரகடனமான தினமாக, இன்றைய தினம் கொண்டாடப்படுகிறது.

காமாக்ஷி அம்பாள் ஐந்து ரூபமாக தரிசனம் அளித்து, அனுக்ரகம் தருகிறாள். முதலிலே விலாகாச காமாக்ஷி, எந்த இடத்தில் கம்பத்தில் ஓட்டை இருக்கின்றன. அந்த நிலத்தில் இருந்து வெளிப்பட்ட இடம். அந்த விலாகாசத்திலே, வருஷத்திற்கு ஒரு நாள் க்ஷீர அபிஷேகம் நடைபெறுகிறது. காஞ்சி காமாக்ஷி அம்மன் கோவிலிலே அது விசேஷமாக நடைபெறுகிறது. ஐப்பசி பூரம்.


இரண்டாவது தபஸ் காமாக்ஷி. ஒரு காலிலே நின்று கொண்டு, அந்த எகாக்ரத அம்பாள், எகாக்ரத நிலையோடு, ஸ்வாமியை தபஸ் பண்ணக்கூடிய நிலை. சிதக்னிகுண்ட சம்பூதா என்கிறோம். அந்த பஞ்சாக்னி தபஸ் பண்ணக்கூடிய அம்பாள். நான்கு பக்கமும் நான்கு அக்னிகள். மேலே சூரியன் பார்த்துக் கொண்டு அப்படி கடோரமான தபஸ். அதை கர்ப்ப காமாட்சியுடன் உள்ளேயே தரிசனம் செய்து கொள்ளலாம்.


வெளியிலே உற்சவதிற்க்காக பிரம்மோத்சவம், மாதப் பிறப்பு உற்சவம் இவைகளுக்காக வரக் கூடிய - சசாமர ரமா வாணி சவ்ய தக்ஷிண சேவிதா என்று சொல்லக் கூடிய அந்த அம்பாள், உற்சவ காமாக்ஷி அம்பாள்.


பிரம்ம தேவன் பூஜித்த அம்பாள் நாலாவது அம்பாள், பங்காரு அம்பாள். பங்காரு காமாக்ஷி. அந்த பங்காரு காமாக்ஷி ஸ்வர்ணமயமான காமாக்ஷி. அது தஞ்சாவூரிலே இருக்கிறது. காஞ்சிபுரத்திலே இருந்த அம்பாள், வேறு ஒரு சரித்திர பல்வேறு நிகழ்வு காரணமாக, இங்கிருந்து உடையார் பாளையம் சென்று, உடையார் பாளையத்திலிருந்து , காஞ்சிபுரத்தில் இருந்த காமாக்ஷி, திருவாரூர், தஞ்சை மேல வீதியிலே இருக்கிறது. தற்போது பங்காரு காமாக்ஷி அம்மன் கோவில் மேலவீதியில் இருக்கிறது.


ஐந்தாவது கற்பக்ரகத்தில் இருக்கக் கூடிய மூலஸ்தான காமாக்ஷி. இப்படியாக ஐந்து காமாக்ஷி-விலாகாச காமாக்ஷி, தபஸ் காமாக்ஷி, உற்சவ காமாக்ஷி, பங்காரு காமாக்ஷி, மூலஸ்தான காமாக்ஷி, அந்த காமாக்ஷி அம்பாள் ஸ்தோத்திரத்தை ஐப்பசி பூரத்தன்று பக்தர்கள் பாராயணம் செய்து ஆரம்பித்து, ஐந்து பூர நக்ஷத்திரத்திலே அதை பூர்த்தியாகப் பாராயணம் செய்து, அந்த அம்பாளின் அனுக்ரகத்தைப் பெற்று,


ஸமர விஜய கோடி ஸாதகானந்த தாடி


ம்ருது குணபரிபேடீ முக்ய காதம்பவாடீ


முனினுதபரிபாடி மோஹிதாஜாண்ட கோடீ


பரமஸிவவதூடீ பாது மாம் காமகோடீ


என்பதாக அந்த பக்தி ரசனை பெருகி , அமுதத்தை பருகி, மென்மேலும் ஐஸ்வர்யம் போன்ற பல சௌக்கியங்களை அடைய காமாக்ஷி அம்மனை பிரார்த்தனை செய்ய வேண்டும்.


காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் திருக்கோயில் கருவறையில் மூலவா் அம்மன் அமா்ந்துள்ள இடத்துக்கு வலதுபுறத்தில் உள்ள பிலாத்துவாரத்தில் இருந்து காமாட்சி அம்மன் வெளிப்பட்டு, பக்தா்களுக்கு சுயம்புவாக அருள்பாலித்து வருகிறாா்.


காமாட்சி என்ற சொல்லில் ‘கா’ என்பது சரஸ்வதிதேவியையும், ‘மா’ என்பது திருமகளையும் குறிக்கின்றன. ‘அட்சி’ என்பது கண்ணாக உடையவர் என்று பொருள்படும். கலைமகளையும் திருமகளையும் தன் கண்களாக கொண்டிருப்பவர் அன்னை காமாட்சி என்று அறிந்து கொள்ளலாம். தன்னை வேண்டும் அனைவருக்கும் கல்விச் செல்வம், பொருட்செல்வம் அருள்பவராகவும், அடியவர் விரும்பும் வரங்கள் அனைத்தையும் மழையாகப் பொழியக் கூடியவராகவும் போற்றப்படுகிறார்.


தட்சனின் வரம்:


தட்சன் என்ற அரசன் சிவபெருமானைத் தன் மருமகனாக அடைந்துவிட்டால், அனைத்துலகும் தனக்கு அடிபணியும் என்று நினைத்து, சிவபெருமானை நோக்கி தவம் இருந்தார். சிவபெருமானும் அவ்வாறே வரம் அளித்தார். அதன்படி தட்சனுக்கு தாட்சாயணி என்ற பெயரில் மகள் தோன்றினார். முன்னர்பெற்ற வரத்தின்படி தாட்சாயணியை மணந்தார் சிவபெருமான். திருமணம் முடிந்ததும், தட்சனிடம் கூறிக்கொள்ளாமல், சிவபெருமான் தாட்சாயணியுடன் கயிலாயம் திரும்பினார்.

சிவபெருமான் சொல்லாமல் சென்றதைத் தனக்கு ஏற்பட்ட அவமானமாகக் கருதிய தட்சன், சிவபெருமானை அழைக்காமலேயே யாகம் ஒன்றை நிகழ்த்தினார்.


யாகத்துக்கு சிவபெருமானை அழைக்காதது குறித்து, சிவபெருமானும் தாட்சாயணியும் கோபம் கொண்டனர். அதன்விளைவாக, சர்வேஸ்வரனின் கோபத்தில் இருந்து வீரபத்திரரும், தாட்சாயணியின் கோபத்தில் இருந்து காளியும் தோன்றி, தட்சனின் யாகத்தை அழித்தார்கள். தட்சனின் தலையும் கீழே உருண்டது. கொடியவன் தட்சனின் மகள் என்று தான் அழைக்கப்படுவதை விரும்பாத தாட்சாயணி, தன் உடலை தீக்கிரையாக்கினார்.


தீயில் கருகிய தேவியின் உடலை தன் தோளில் சுமந்தபடி, சிவபெருமான் ருத்ர தாண்டவம் ஆடினார். இதனால் அனைத்து உலகங்களும் நடுங்கின. ஈசனின் ருத்ர தாண்டவத்தை நிறுத்தும்பொருட்டு, தன் சுதர்சன சக்கரத்தை ஏவினார் திருமால். சுழன்று வந்த சுதர்சன சக்கரம், தாட்சாயணியின் அங்கத்தை பல கூறுகளாக சிதைத்தது. அந்தக் கூறுகள் அனைத்தும் பாரத தேசத்தில் பல பகுதிகளில் (51 இடங்கள்) விழுந்தன. அவையே அன்னை பராசக்தியின் சக்தி பீடங்களாக திகழ்ந்து கொண்டிருக்கின்றன. அன்னையின் முதுகு எலும்பு விழுந்த இடம் காஞ்சிபுரம் ஆகும்.

காஞ்சியில் அவதாரம்.


காமாட்சி_அம்மன் அவதாரம்:


பண்டாசுரன் என்ற அசுரன், பல வரங்களைப் பெற்று, தேவர்களை அச்சுறுத்தி, இன்னல்கள் விளைவித்து வந்தான். அவனது தொல்லைகளைப் பொறுக்க முடியாமல், கயிலைமலையை அடைந்து அன்னை பராசக்தியிடம், இதுகுறித்து தேவர்கள் முறையிட்டனர். பார்வதிதேவியும் அவர்களின் துன்பங்களைக் களையும் பொருட்டு, கிளியாக வடிவம் கொண்டு, காஞ்சிபுரத்துக்கு வந்து செண்பகாரண்யம் என்ற இடத்தில் ஒரு செண்பக மரத்தில் வாசம் செய்தார்.


பண்டாசுரன் பெற்ற வரத்தின்படி, அவனால் அடக்கப்பட்டவரின் பலம் முழுவதும் அவனுக்கே கிடைத்துவிடும். ஆனாலும் அனைவருக்கும் முடிவு என்று ஒன்று உண்டு என்ற பொதுவிதியின்படி, அவனுக்கு 9 வயது பெண்குழந்தையால் உயிரிழப்பு ஏற்படும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. அப்படித்தான் காமாட்சியாக அவதாரம் எடுத்த அன்னை பராசக்தி, பண்டாசுரனை அழித்து, இத்தலத்திலேயே எழுந்தருளினார்.


அசுரனை அழிப்பதற்காக ஏற்பட்ட அவதாரம் என்பதால் மிகவும் உக்கிரமாக இருந்தார் பார்வதிதேவி. அவரை சாந்தப்படுத்துவதற்காக 8-ம் நூற்றாண்டில் ஆதிசங்கரர் ஸ்ரீசக்கரம் ஏற்படுத்தி, உக்கிர சக்தியை அருள்சக்தியாக மாற்றினார். உக்ர ஸ்வரூபினியாக, காளியன்னையாக இருந்த அன்னை பராசக்தி, சௌம்யமான காமாட்சியாக, பரப்ரஹ்ம ஸ்வரூபினியாக அருள்பாலிக்கிறார்.


அன்னை காமாட்சி குடிகொண்டிருக்கும் இத்தலத்துக்கு ‘காமக் கோட்டம்’ என்ற பெயர் உண்டு. இக்கோயிலின் முதல் பிரகாரத்தின் நடுவில் 24 தூண்களுடன் காயத்ரி மண்டபம் அமைந்துள்ளது. காயத்ரி மண்டபம் செல்லும் வழியில் அன்னபூரணி சந்நிதி உள்ளது. அன்னை காமாட்சி, ஸ்தூலம், சூட்சுமம், காரணம் என்ற 3 அமைப்பில் விளங்குகிறார். காமகோடி காமாட்சி (ஸ்தூலம்), அஞ்சன காமாட்சி (அரூப லட்சுமி), காமகோடி பீடம் என்று கூறப்படும் ஸ்ரீசக்கரம் ஆகிய 3 அமைப்பில் அருள்பாலிக்கிறார். காஞ்சி காமாட்சியே சிவத் தலங்களுக்கு மூலமூர்த்தி ஆகிறார். இந்த மூலமூர்த்தியின் இடது பக்கத்தில் வடக்கு நோக்கியவாறு அஞ்சன காமாட்சி திகழ்கிறார். இவரே சூட்சும வடிவமாக உள்ளவர்.


திருமகளின் முகம் அரூபமாக மாறியதற்கு காரணம் உண்டு. ஒருசமயம் தன்னுடைய பேரழகில் கர்வம் கொண்ட திருமகள், திருமாலின் அழகை ஏளனம் செய்யும்விதமாக பேசிவிட்டார். ஆணவம், கர்வம் ஆகியன உயரத்தில் இருப்பவரையும் ஒருகணத்தில் வீழ்த்தக்கூடிய தீயகுணங்கள் ஆகும். இதை உலகுக்கு உணர்த்த விரும்பினார் திருமால்.


பல பெருமைகள் வாய்க்கப் பெற்றிருந்தாலும், தன் பேரழகின் மீது ஏற்பட்ட கர்வம் காரணமாக. அரூபியாக மாறும்படியான சாபத்தைப் பெற்றார் திருமகள். திருமாலின் சாபத்தைப் பெற்ற பின்னரே, தன் தவறை உணர்ந்தார் திருமகள். திருமாலிடம் மன்னிப்பு கோரிய திருமகள், தனக்கு சாப விமோசனம் தந்தருள வேண்டினார். காஞ்சி காமகோட்டத்துக்குச் சென்று காமாட்சியின் அருள் பெற்று, பழைய வடிவத்தை அடையலாம் என்று திருமால் கூறினார்.


திருமாலின் யோசனைப்படி, பூவுலகம் வந்த அரூப லட்சுமிக்கு, அஞ்சன காமாட்சி என்று பெயரிட்டு, தனது இடது பக்கத்தில் அமர்ந்து தவம் செய்ய அருளினார் காமாட்சி. தன்னுடைய குங்கும பிரசாதம், அஞ்சன காமாட்சியின் மீதும் விழும். அதன் காரணமாக, திருமகளுடைய அரூப நிலை மாறி, உண்மையான வடிவம் கிடைக்கப்பெறும் என்று அருள்பாலித்தார். ஆணவம், சுயநலம், பேராசை, வஞ்சகம், பொறாமை ஆகிய தீய குணங்கள், காமாட்சியின் அருளால் நீங்கப் பெற்று, அனைவரிடத்தும் அன்பு செலுத்தும் குணம் உயர்ந்தோங்கும் என்பதே இதன் உட்கருத்தாகும்.


காமகோடி பீடம்:


ஆதிசங்கரர், காமாட்சியின் உக்கிரத்தை குறைப்பதற்காக ஸ்ரீசக்கரத்தை ஏற்படுத்தினார். இந்த ஸ்ரீசக்கர வடிவமே காமகோடி பீடம் என்று அழைக்கப்படுகிறது.

ஆதிசக்தியான பார்வதி தேவி, காரண காரியங்களுக்காக எத்தகைய வடிவத்தையும் எடுப்பார் என்பதையே இந்த ஸ்ரீசக்கர வடிவம் நினைவுபடுத்துகிறது. தாட்சாயணியின் எலும்புகள் விழுந்த இடங்கள் அனைத்தும் காஞ்சியில் கோயில்களாக உருவாகின என்று அறியப்படுகிறது. அதனாலேயே ‘கோயில்களின் நகரம்’ என்று காஞ்சி மாநகரம் அழைக்கப்படுகிறது.


காஞ்சியில் எழுந்தருளியிருக்கும் ஏகாம்பர நாதரும், வரதராஜரும் உற்சவ மூர்த்திகளாக வலம் வரும்போது, அன்னை காமாட்சியின் கோயிலை சக்கர வட்டமாக வலம் வரும்வகையில் ஆதிசங்கரர் இக்கோயிலை வடிவமைத்தார். தன் கடமைகள் அனைத்தும் நிறைவடைந்த பின்னர், ஆதிசங்கரர், காஞ்சித் தலத்தில் அன்னை காமாட்சியின் திருவடிகளில் இரண்டறக் கலந்தார் என்பது சிறப்பு.

மகிஷாசுரமர்த்தினி, உற்சவ காமாட்சியான பங்காரு காமாட்சி இத்தலத்தில் அருள்பாலிக்கிறார்கள். காமக்கோட்டத்தின் வெளிவாயிலுக்கு அருகில் ‘ஞானக் கூபம்’ என்ற கிணறு உள்ளது. பஞ்சமூர்த்திகளால் ஏற்படுத்தப்பட்ட பஞ்ச தீர்த்தம் (பஞ்ச தீர்த்த புஷ்கர்ணி) உள்ளது. ‘உலகாணித் தீர்த்தம்’ என்றும் இத்தீர்த்தம் அழைக்கப்படுகிறது.


தலச் சிறப்பு:


அயோத்தி மன்னர் தசரத சக்கரவர்த்தி, இத்தலத்தில் புத்திர காமேஷ்டி யாகம் செய்ததன் பலனாக ராம சகோதரர்கள் அவதரித்ததாக மார்க்கண்டேய புராணத்தில் கூறப்படுகிறது. இதற்காகவே இத்தலத்தில் சந்தான ஸ்தம்பம் உள்ளது. இதை வலம் வருவதால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை.

காமாட்சி அம்மனின் திருவடிகளில் நவக்கிரகங்கள் தஞ்சம் அடைந்ததால், காமாட்சி அம்மனை வணங்குபவர்களுக்கு நவக்கிரக தோஷம் ஏற்படுவதில்லை. 


துர்வாச முனிவரால் கிருதயுகத்தில் 2000 சுலோகங்களாலும், பரசுராமரால் திரேதாயுகத்தில் 1500 சுலோகங்களாலும், தவுமியாசார்யாரால் துவாபரயுகத்தில் 1000 சுலோகங்களாலும், ஆதிசங்கரரால் கலியுகத்தில் 500 சுலோகங்களாலும் பாடப்பட்ட பெருமை காமாட்சிக்கு உண்டு. இங்கே அம்பிகைக்கு மூன்று வடிவங்கள் உள்ளன. அவற்றை ஸ்தூலம், சூட்சுமம், காரணம் என்று கூறுவார்கள். பார்த்தவுடனேயே சர்வ மங்களத்தையும் நமக்கு கோடி கோடியாக தந்தருளுவதால் காமகோடி காமாட்சி என அழைக்கப்படுகிறாள். காஞ்சிபுரத்திலுள்ள அனைத்து கோவில்களும் காமாட்சி கோவிலை நோக்கியே அமைந்திருக்கிறது.


இவ்வூரில் உள்ள எந்த கோவிலில் திருவிழா நடந்தாலும் உற்சவர்கள் தங்கள் கோவிலை சுற்றுவதை தவிர்த்து, காமாட்சியம்மன் கோவிலை சுற்றி வரும் பழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது. காஞ்சியில் எவ்வளவோ சிவாலயங்கள் இருந்தும், அவற்றில் அம்மன் சன்னதி கிடையாது. காமாட்சியே அனைத்து சிவாலயங்களுக்கும் ஒரே சக்தியாக திகழுகிறாள்.


சக்தி பீடத்தில் மிக முக்கியமான தலம். அம்பாள் தென்கிழக்கு திசையை நோக்கி அமர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், ஈஸ்வரன், சதாசிவன் ஆகிய பஞ்ச பிரம்மாக்களை தனக்கு ஆசனமாக கொண்டும், நான்கு கைகளுடனும் காட்சிதருகிறாள். கைகளில் பாசம், அங்குசம், புஷ்ப வானம், கரும்புவில் ஏந்தியிருக்கிறாள். காமாட்சிக்கு லலிதா, ராஜராஜேஸ்வரி, திரிபுரை, சக்கரநாயகி ஆகிய பெயர்களும் உண்டு.


கருவறைக்குள்ளேயே மூல விக்ரகத்துக்கு அருகில் ஒற்றைக்காலில் தவம் செய்த நிலையில் காமாட்சி உள்ளது பலர் பார்த்திராத ஒன்று.


துர்வாசர் – இவர் சிறந்த தேவி பக்தர். லலிதாஸ்தவரத்னம் என்ற நூலை இயற்றியவர். இவரே இப்போதுள்ள அம்மனின் மூல விக்ரகத்தை பிரதிஷ்டை செய்தவர். அம்மன் முதன்முதலில் காட்சி தந்ததும் இவருக்கே. இது அம்மனின் எதிரில் உள்ள ஸ்ரீசக்கரம் ஆதிசங்கரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. காஞ்சியில் ஒரு காலத்தில் அம்மன் மிக உக்கிரமாக விளங்கினாளாம். ஆகையால் இந்த ஸ்ரீ சக்கிரத்தை பிரதிஷ்டை செய்து அம்மனின் உக்கிர சக்தியை அருள் சக்தியாக மாற்றினாராம். இவருக்கு இக்கோவிலில் தனி சன்னதி உண்டு.


இங்கு காமகோடி காமாட்சி, தபஸ் காமாட்சி, பங்காரு காமாட்சி, அஞ்சன காமாட்சி, உற்சவர் காமாட்சி ஆகிய ஐந்து காமாட்சிகள் உள்ளனர்.


காமாஷி தத்துவம் – 


காம என்னும் 51 அட்சரங்களைப் பார்வையாகக் கொண்டவள் அன்னை காமாஷி. கா என்றால் ஒன்று. ம என்றால் ஐந்து. ஷி என்றால் ஆறு. அதாவது ஐந்து திருநாமங்களையும் – சக்தி பேதம் மூன்று, சிவபேதம் இரண்டு, விஷ்ணு பேதம் ஒன்று என்னும் ஆறு வகை பேதங்களைக் கொண்டவள். மற்றும் கா என்றால் சரஸ்வதி. மா என்றால் மகேஸ்வரி. ஷி என்றால் லட்சுமி. இம்மூன்று தேவிகளும் ஒன்றாக இணைந்தவள்.


காமக் கடவுளாகிய மன்மதனிடம் தான் கரும்பும், புஷ்ப பாணமும் இருக்கும். இவை இரண்டையும் காமாட்சி வைத்திருப்பதன் காரணம் மன்மதன் ஜீவன்களிடையே இந்த வில்லையும் அம்பையும் வைத்துக் கொண்டு அடங்காத காம விகாரத்தை உண்டாக்கி வரும்படி அவனுக்கு அச்சக்தியை அளித்திருக்கிறாள். பக்தர்களிடமும் ஞானிகளிடமும் உன் கை வரிசையை காட்டதே என்று மன்மதனிடம் கூறி அவனிடமிருந்து கரும்பையும் புஷ்ப பாணங்களையும் வாங்கி வைத்துக் கொண்டு விட்டாள் தேவி என்றும் காஞ்சி பெரியவர் கூறுகிறார்.


அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது காமகோடி சக்தி பீடம் ஆகும். இத்தல காமாட்சி அம்மனை வேத வியாசர் பிரதிஷ்டை செய்துள்ளார். தங்க விமானத்தின் கீழ் அம்மன் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அம்மனுக்கு முன்னால் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீசக்கரம் உள்ளது. இத்தலத்தில் தான் ஆதிசங்கரர் ஆனந்தலஹரி பாடினார்.


காயத்ரி மண்டபத்திற்கு செல்லும் வழியில் அன்னபூரணி சன்னதி உள்ளது. ஐப்பசி மாதம் இங்கு அன்னாபிஷேகம் நடக்கும். இந்த சன்னிதானத்தில் தர்ம துவாரம், பிக்ஷத்துவாரம் உள்ளது.


அம்பிகையை வணங்கி பிக்ஷத்துவாரத்தின் வழியாக “பவதி பிக்ஷாம் தேஹி” என கையேந்தி பிச்சை கேட்க வேண்டும் என்பது விதி. இப்படி செய்து வழிபட்டால் அம்பாள் நம்மை எவ்வித சிரமமும் இன்றி உணவு கொடுத்து காப்பாற்றுவாள் என்பது நம்பிக்கை.


அன்னை காமாட்சிக்கு நடைபெறும் மாசி மாத பிரம்மோற்சவம் (10 நாட்கள்) மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். வைகாசி வசந்த உற்சவம், நவராத்திரி விழா, ஐப்பசி அவதார உற்சவம் விமரிசையாகக் கொண்டாடப்படும். ஒவ்வொரு மாத பவுர்ணமி தினத்திலும் சிறப்பு ஆராதனைகள், அபிஷேகங்கள் நடைபெறும். தமிழ், ஆங்கில வருடப் பிறப்பு, சங்கர ஜெயந்தி, தீபாவளி, பொங்கல் நாட்களில் காமாட்சி அம்மன் தங்கரதத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.


அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்


அன்னை காமாட்சி உமையே.


ஹர ஹர சங்கர, ஜெய ஜெய சங்கர


ஓம் சக்தி 🙏



Sunday, 20 October 2024

யாக காட்சிகள் புரட்டாசி பௌர்ணமி 2024


 





Friday, 18 October 2024

யாகம் 17.08.2024


 

மகாலிங்க ஸ்வாமி திருக்கோவில்

 திருநெல்வேலியில் இருந்து நாகர்கோயில் செல்லும் வழியில் வள்ளியூர் என்ற ஊர்  செல்லவும். 


அங்கே இருந்து ராதாபுரம் என்ற ஊருக்கு செல்லுங்கள்.


 அங்கிருந்து  பனிரெண்டு கிலோமீட்டர் தொலைவில் விஜயாபதி என்ற கிராமம் கடலோரத்தில் இருக்கிறது.


 அந்த கிராமத்தில் இருந்து சிறிது தொலைவில் விஸ்வாமித்திர மகாலிங்க சுவாமி திருக்கோயில் என்ற இந்த அற்புதமான ஆலயம் அமைந்திருக்கிறது. 


இந்த கோயிலின் வயது சுமார் 18 லட்சம் ஆண்டுகள்.....


ராமர் லட்சுமணன் இருவரையும் 14 வயதில் விஸ்வாமித்திர மகரிஷி இங்கே அழைத்து வந்தார். தன்னுடைய யாகம் வெற்றி பெறுவதற்கு அவர்களை அழைத்து வந்தார்....




Thursday, 17 October 2024

அருள்மிகு வாய்மூர்நாதர் திருக்கோயில்

 திருவாய்மூர் அருள்மிகு வாய்மூர்நாதர் திருக்கோவில், திரு. ப. வாணிகலாபசர்மா சிவாச்சாரியார்அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 94880 77126


இந்த தேவார பாடல் பெற்ற திருத்தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது, நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 29 கிமீ தூரத்திலும், திருவாரூரில் இருந்து சுமார் 28 கிமீ தூரத்திலும், திருக்குவளையில் இருந்து  சுமார் 4 கிமீ தூரத்திலும் இந்த திருத்தலம் உள்ளது.

https://maps.app.goo.gl/5tcbaaHBfsiur44g6

அருள்மிகு வாய்மூர்நாதர் திருக்கோயில் தினமும் காலை 07.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையும், அதன் பின் மாலை 04.30 மணி முதல் இரவு 08.00 மணி வரை நடை திறந்திருக்கும்.



Tuesday, 24 September 2024

மஹா அவதார் பாபாஜி

 உண்மையில் மகா அவதார் பாபாஜி யார்? அவர் எங்கே பிறந்தார்? எங்கே வளர்ந்தார்? எங்கே இருக்கிறார்? அவரது வயது என்ன? 


பாபாஜி, இந்த வார்த்தைக்குதான் எத்தனை மந்திர சக்தி! எத்தனை மகத்துவம்! புரிந்தவர்கள் இவரை தெய்வம் என்று போற்றுகிறார்கள். புரியாதவர்களுக்கு இவர் என்றுமே புரியாத புதிர்தான்! 


பாபாஜி என்ற பெயரில் நைனிடால் பாபாஜி, ஹரியகான் பாபாஜி, ஹைடகன் பாபாஜி என்றெல்லாம் பலரும் இருந்தாலும் எல்லோரும் ஒருவரே என்றுதான் சொல்கிறார்கள்.உண்மையில் மகா அவதார் பாபாஜி யார்?


அவர் எங்கே பிறந்தார்? எங்கே வளர்ந்தார்? எங்கே இருக்கிறார்? அவரது வயது என்ன? இந்தக் கேள்விகள் உலகம் முழுக்க கோடானு கோடிப் பேரிடம் இருந்தாலும்,யாராலும் சரியான விடையைக் கண்டுபிடிக்க முடியவில்லை.


அருகிலேயே அவர் இருப்பது அறியாமல், அவரைத் தேடி அலைபவர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனர். எப்படி இருப்பார் என்ற ஆராய்ச்சியில் தங்கள் வாழ்நாளையே கழித்தவர்கள் பலர் இருக்கிறார்கள்.


ஒரே நேரத்தில் பல வடிவங்களில் இருக்க முடியும் அவரால். வடிவமே இன்றி ஒளிரூபத்திலும் தோன்றுவார் அவர்.


தேடிக்கண்டுபிடிக்க நினைத்து அலைவதை நிறுத்திவிட்டு, ஆத்மார்த்தமாக அவரிடம் சரணடைந்து அவரையே மனதுள் இருத்தி தியானம் செய்தால், நாம் தேடிப் போகாமலேயே அவர் நம்மைத் தேடி வருவார்.


உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான பேர் மத இன, மொழி, மத வேறுபாடற்று மகா அவதார் பாபாஜியைப் பற்றித் தெரிந்து கொள்ளும் ஆவலில் இருக்கிறார்கள். 


மகாவதார் பாபாஜியை தரிசித்ததாகவும் அவருடன் இருந்ததாகவும், பலர் பலவிதமாகச் சொல்கிறார்கள்.


விடுதலைப் போராட்ட தியாகியான டாக்டர் ராம்போஸ்லே பாபாஜியுடன் கிட்டத்தட்ட ஆறு வருடம் இருந்திருக்கிறார். பாபாஜியைப் பற்றிய அதிசயமான விஷயங்களை அவர் வியந்து கூறுகிறார். பாபாஜி எந்த வடிவத்திலும் தோன்றுவாராம். வயதானவராக, விலங்காக, பறவையாக எந்த உருவத்திலும் நிமிடத்தில் மாறிவிடுவாராம்.


ஒரு சமயம் அவரது பக்தரின் வீட்டிற்கு உணவருந்த வருவதாக பாபாஜி உறுதியளித்திருந்தாராம். ஆனால் சொன்னபடி பாபாஜி வரவில்லையென்று பக்தர் வருத்தப்பட்டார்.


அதை பாபாஜியிடமே நேரில் கேட்டுவிட்டார். உடனே பாபாஜி, ‘‘நான் அங்கே வந்திருந்தேன். மீந்துபோன உணவையெல்லாம் எனக்கு நீ போட்டாயல்லவா’’ என்றதும் அந்த பக்தர் அதிர்ந்து போனார். காரணம், அவர் மீந்து போன உணவைப் போட்டது ஒரு நாய்க்கு. அதாவது நாய் உருவில் அங்கே வந்திருக்கிறார் பாபாஜி.


பிரபஞ்சத்தில் எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் பாபாஜி செல்வார். சில நேரத்தில் பறவைகளின் மூலமாகத் தன் சீடர்களுக்கு செய்தி சொல்லி அனுப்புவார். அந்தப் பறவைகள் மனிதனைவிட விரைவாகச் சென்று சீடர்களிடம் பாபாஜியின் செய்தியை விவரமாகத் தெரியப்படுத்திவிடும்.


பாபாஜி யார் என்பதைத் தெரிந்துகொள்ள முயன்றவர்களுள் ஒருவரான யோகிராமையா என்பவர், தனது தியானத்தில் பாபாஜியின் பிறப்பைப் பற்றிய விவரங்கள் காட்சியாகத் தெரிந்ததாகக் கூறுகிறார்.


அவதரித்த காலம் உட்பட சகலமும் உணரும்படியாக தெளிவாகப் புலப்பட்ட கனவு அது. அதாவது பாபாவால் உணர்த்தப்பட்ட விஷயம் அது. அந்த விவரங்கள்:


கடலூருக்கும் சிதம்பரத்திற்கும் நடுவே கடலோரத்தில் உள்ளது பரங்கிப்பேட்டை என்ற ஊர். அங்கே வசித்தனர் வேதாரண்ய ஐயர்-ஞானம்பாள் என்ற நம்பூதிரி பிராமணத் தம்பதியினர். இறைபக்தி மிக்க அவர்களுக்கு, கி.பி.203ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி கடவுளருளால் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு நாகராஜ் என்று பெயர் வைத்தனர்.


கார்த்திகை தீபத்தன்று பிறந்த அக்குழந்தை, மானிட வர்க்கத்திற்கு தான் ஒளி தரப்போவதை சொல்லாமல் சொல்லியது.


கேரளத்தைச் சேர்ந்த இந்த நம்பூதிரி குடும்பத்தினர் அங்கிருந்து பரங்கிப்பேட்டை வந்து அங்கிருந்த சிவன் கோவிலில் அர்ச்சகம் செய்து வந்தனர். சிவாலயமான அது காலப்போக்கில் முருகன் தலமாக பிரசித்திபெற்று, முத்துக்குமாரசாமி கோவில் என்று பெயர் பெற்றது. பழமையான அந்தக் கோயில் இன்றும் பரங்கிப்பேட்டையில் இருக்கிறது.


சிறுவன் நாகராஜுக்கு ஐந்து வயது இருக்கும்போது அந்த சிவன் கோவிலில் நடந்த திருவிழா ஒன்றின்போது கயவன் ஒருவனால் கடத்திச் செல்லப்பட்டான். கல்கத்தாவிற்கு அவனைத் தூக்கிச் சென்றபோது ராமானந்தர் என்னும் வேதவிற்பன்னர் ஒருவர், சிறுவனது முகத்தில் தெரிந்த தேஜஸைக் கண்டார். சிறிதளவு பணம் கொடுத்து அவனைக் கயவனிடமிருந்து மீட்டார்.


அதனால், சிறு வயதிலேயே சாதுக்களுடன் பழகும் பாக்கியம் கிடைத்தது நாகராஜுக்கு. காசி, பிராயாகை போன்ற தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தபோது, அங்கே பால்குடி பாபாக்களோடு வாழ்ந்தார். அவர்களுக்கும் இலங்கையில் உள்ள கதிர்காமத்திற்கும் நல்ல தொடர்பு இருந்து வந்ததால் பதினொரு வயதிலேயே கதிர்காமம் சென்று அங்கு சித்தர் போகநாதரை சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றார்.


விரிந்து படர்ந்த ஓர் ஆலமரத்தின் கீழ் போகரோடு இருந்து, போகரின் ஆசியோடு பல்வேறு யோக சாதனைகளையும் தியானக் கிரியைகளையும் அவர் பழகினார்.


தமது பதினாறாவது வயதில் பொதிகை மலைப் பகுதிக்கு வந்த நாகராஜ், குற்றாலநாதர் கோயிலுக்கு அருகில் உள்ள பராசக்தி பீடத்தினருகில் அமர்ந்து, அகத்தியரை வேண்டி கடுமையான தவத்தை மேற்கொண்டார்.


தவத்திற்கு இரங்கி அகத்தியர் அவர் முன்னே வந்தார். கிரியாகுண்டலினியை உபதேசம் செய்து இமயத்தின் உச்சியிலுள்ள பத்ரிநாத்திற்குச் சென்று அங்கு தவமியற்றும்படி அனுப்பினார். அங்கு சென்ற நாகராஜ் கடுமையான யோகப் பயிற்சிகளாலும், தியான முறைகளாலும் உன்னத நிலையடைந்து பாபாஜியாக இவ்வுலகிற்கு வெளிப்பட ஆரம்பித்தார்.


ஒவ்வொரு மனிதனும் சித்தாஸ்ரமம் சென்று அங்கே சாதனை மேற்கொள்வதை லட்சியமாகக் கொள்ள வேண்டும் என்று ரிக்வேதமும், சாமவேதமும் சொல்கின்றன.


ஆனால் சித்தாஸ்ரமத்திற்கு எல்லோராலும் அவ்வளவு சுலபமாகச் சென்றுவிட முடியாது. ஆயிரம் யோகிகளில் ஓரிருவருக்கு மட்டுமே அந்த பாக்கியம் கிடைக்கும்.


சித்தாஸ்ரமம் செல்வது எந்த அளவிற்கு உயர்வானது என்பதை விளக்க வேண்டுமானால், மகாபாரத சம்பவம் ஒன்றைச் சொல்லலாம்.


குருக்ஷேத்ரப்போரில் அர்ஜுனனின் அம்புகளால் தாக்கப்பட்டு அம்புப் படுக்கையில் உத்தராயண புண்ய காலத்தில் உயிர்விடக் காத்திருந்த பீஷ்மரைப் பார்க்க வந்தார் கிருஷ்ணர். அற்புதமான விஷ்ணு சகஸ்ரநாமத்தால் அவரைத் துதித்தார் பீஷ்மர். அடுத்து, கண்களில் நீர்வழிய தன் கடைசி ஆசையாக பகவானிடம் அவர் கேட்டது என்னதெரியுமா? ‘‘இதே உடலுடன் சித்தாஸ்ரமம் செல்ல வேண்டும்!’’ என்றுதான். பாரதப் போர் முடிந்ததும் தருமர், தாமோதரனிடம் கைகூப்பி வேண்டியதும் இதையே தான்.


பூலோகவாசிகள் சொர்க்கமும், வைகுந்தமும் செல்ல விரும்புவார்கள். ஆனால், மோட்சத்திலும், விண்ணுலகிலும் இருப்பவர்கள் சித்தாஸ்ரமம் வரவே ஆசைப்படுகிறார்களம். 


ஸ்ரீசக்ர வாசினியான அன்னை லலிதாம்பிகையின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதி இது. இதன் உள்ளே செல்லவோ, சென்று விட்டால் வெளியே வரவோ எல்லோராலும் முடியாது.


சில குறிப்பிட்ட குருமார்களாலும் அவர்களின் சீடர்களாக இருப்போராலும், மட்டுமே முடியும். அவர்களால் தேர்வு செய்யப்படுபவர்களை அவர்களே வழிகாட்டி அழைத்துப் போவார்கள். அங்கே பல ஆயிரம் வருடங்களுக்கு மேல் வாழும் மகான்களை தரிசிக்கலாம். பல சாதனைகளை கற்றுக் கொள்ளலாம். அவ்விதம் சித்தாஸ்ரமத்திற்குள் பிறரை அழைத்துச் செல்லும் உரிமை பெற்ற வெகு சிலரில் மகாவதார் பாபாஜி மிக மிக முக்கியமானவர்.


பாபாஜியின் அற்புதங்கள் அள்ள அள்ளக் குறையாதது. பாபாஜி, லாமா பாபா என்ற பெயரில் திபெத்தில் இருந்ததாகவும் அவரது சீடரான ஜவுக்ஷா லாமாவிற்கு நான்கு கைகள் கொண்ட சிவரூபத்தில் தரிசனம் தந்தார் என்றும் கங்கோத்ரி பாபா உறுதிப்படுத்துகிறார்.


பாபாஜியை தட்சிணாமூர்த்தி அம்சமாக 2500 வருடங்களுக்கு முன்பு கல் அக்னிநாத் என்ற பெயரில் தட்சிணாமூர்த்தியாகத் தோன்றினார் என்றும், அவரே குருகோரக்ஷாநாத் என்றும் சில புராணங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. நாத் பரம்பரையினர் அவரை சிவகோரக்ஷா என்றும், அவர் சிவபெருமான் அம்சம் என்றும் சொல்கிறார்கள்.


மகா அவதார் பாபாஜியை தனது மகா குருவாகக் கொண்டிருப்பவர் ரஜினி. அவரது அபூர்வ தரிசனத்தை அகத்தில் கண்டவர். பாபாஜியைப் பற்றி பலரும் பலவிதமாகக் கூறியிருந்தாலும், மகா அவதார் பாபாவைப் பற்றி தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை ரஜினியின் நெருங்கிய நண்பரும், பிரபல திரைப்படத் தயாரிப்பாளருமான நாகராஜன் ராஜா சொல்வதைக் கேளுங்களேன். ‘‘மகா அவதார் பாபாவைப்பற்றி எத்தனையோ பேர் எத்தனையோ அதிசயங்கள் அற்புதங்கள் என்று பலவும் சொல்லியிருக்கிறார்கள்.


அவரைப் பற்றிய புதிருக்கான விடையை அவரே சொல்வது போல், எனக்கு ஓர் அற்புதத்தை நிகழ்த்தி என்னை அதிசயத்தில் ஆழ்த்தியது என் வாழ்நாளில் மறக்க முடியாத மிகப் பரவசமான சம்பவம்.


2008ம் வருடம் ஜூலை மாதம் நானும் என் மனைவியும், எனது நண்பரும் அவரது மனைவியும் ரிஷிகேஷ் சென்றுவிட்டு அங்கிருந்து பத்ரிநாத் சென்றோம்.


இரவு தரிசனம் முடித்துவிட்டு, மறுநாள் அதிகாலை அபிஷேகம் பார்க்கச் சென்றோம். அந்த சமயத்தில் மட்டும்தான் பத்ரிநாராயணர் தியான நிலையில் அமர்ந்திருக்கும் திருக்கோலத்தை நாம் தரிசிக்க முடியும். அபிஷேகம் ஆரம்பித்தது. எனக்கு பீடத்தில் பத்ரிநாராயணன் உருவம் தெரியவில்லை. சாட்சாத் பாபாஜியே அங்கே அமர்ந்திருப்பதாகத் தோன்றியது. மெய்சிலிர்க்க கண்களில் நீர் வழிய தரிசித்தேன்.


பிறகு கோவிலின் தலைமை அர்ச்சகரான நம்பூதிரியைப் பார்க்கச் சென்றோம். அவரது அறைக்குள்ளே சென்றவுடன், அங்கே இருந்த ஓர் ஓவியத்தின் மீது என் பார்வை பதிந்தது. அதில், நான்கு கைகளுடன் பாபாஜி தியான நிலையில் அமர்ந்திருப்பது போல் ஓவியமாகத் தீட்டப்பட்டிருந்தது.


நம்பூதிரியைப் பார்த்து அந்த ஓவியம் பற்றிய விவரம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று என் மனம் படபடத்தது. ஆனால், அவர் உடலநலம் சரியில்லாமல் படுத்திருந்ததால் அவரைப் பார்க்காமலேயே சென்னை திரும்பினோம். என் மனமோ அந்த ஓவியத்தைப்பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தது.


சென்னை வந்தவுடன் முதல்வேலையாக என் நண்பர் ரஜினிகாந்த் அவர்களைப் பார்த்து பத்ரிநாத்தில் இருந்த அதிசய ஓவியத்தைப் பற்றி சொல்ல வேண்டும் என்ற ஆவலில் சென்றேன்.


ரஜினிகாந்தைப் பார்த்து ‘பத்ரிநாத்திற்குப் போய் வந்தேன்’ என்ற வார்த்தையை நான் முடிக்கும் முன்பு அவர் கேட்டார்... ‘‘பாபாஜியைப் பார்த்தீர்களா?’’


ஒரு விநாடி தூக்கிவாரிப் போட்டது எனக்கு. அவருக்கு எப்படித் தெரிந்தது? அவர் எதைச் சொல்கிறார்? பத்ரிநாராயணன், பாபாஜி போல் அமர்ந்திருப்பதைச் சொல்கிறாரா? என்று புரியாமல் விழித்தேன். 


புதிராகச் சிரித்தபடி தனது அறைக்குள் சென்றவர், வெளியில் வந்தபோது கையில் ஒரு படத்தோடு வந்தார். அந்தப் படத்தை அவர் என்னிடம் காட்டியபோது மேலும் அதிர்ந்து போனேன். பத்ரிநாத்தில் நம்பூதிரியின் அறையில் நான் பார்த்த விநோதமான பாபாஜி படம் அது!


‘‘இந்தப்படத்தைப் பற்றி சொல்லத்தான் நான் உங்களைத் தேடி வந்தேன். இது எப்படி உங்களிடம் இருக்கிறது?’’ என்று ஆச்சரியத்துடன் கேட்டேன்.


‘‘நீங்கள் ரிஷிகேஷ் போகிறீர்கள். எப்படியும் உங்களை பாபாஜி பத்ரிநாத்திற்கு அழைத்து விடுவார். அங்கு இந்தப் படத்தைப் பார்க்கும் பாக்கியம் உங்களுக்கும் கிடைக்கலாம். அதற்குப் பின்னர் இந்தப் படத்தைப் பற்றிய விபரத்தை உங்களிடம் கூறலாம் என்றிருந்தேன்’’ என்று சொன்ன ரஜினிகாந்த் பத்ரிநாத் அனுபவத்தை சொல்லத் தொடங்கினார்.


‘‘நான் பத்ரிநாத் சென்றிருந்தபொழுது, அங்குள்ள நம்பூதிரியைச் சந்திக்க அவரது அறைக்குச் சென்றேன். அவரது அறையில் இருந்த இந்தப் படத்தைப் பார்த்து ஆச்சரியமடைந்து அதையே மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்தேன். அதை கவனித்த நம்பூதிரி, ‘‘இந்தப் படத்தைப் பற்றிய ரகசியத்தை இதுவரை யாரிடமும் சொல்லவில்லை. ஏனோ, உங்களிடம் சொல்ல வேண்டும் என்று எனது உள் மனது சொல்கிறது’’ என்று கூறிவிட்டு சொல்ல ஆரம்பித்தார்.


‘‘எனக்கு முன் இருந்த நம்பூதிரியின் கனவில் இந்த உருவம் தோன்றி, ‘இந்தக் கோவிலில் பத்ரி நாராயணனாக நான் தான் இருக்கிறேன்’ என்று சொல்லியிருக்கிறார். திடுக்கிட்டு எழுந்த அவர், தனக்கு இறைவன் கனவில் காட்டிய உருவத்தை அப்படியே ஓவியமாக வரைந்து வைத்துவிட்டார்.


அன்று முதல் இந்தப் படத்திலுள்ள தெய்வத்திற்கு பூஜை செய்தபிறகே பத்ரிநாராயணனுக்கு பூஜை செய்யும் வழக்கம் தொடர்ந்து வருகிறது’’ என்று நம்பூதிரி கூறினார்.


மகா அவதார் பாபாஜியால் மக்களுக்கு கிரியா யோகத்தை அளிப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட சீடர், ஸ்ரீலாஹிரி மகாசாயர். இல்லறத்தில் இருந்து கொண்டே யோக சாதனைகள் செய்து இறைவனோடு ஒன்ற முடியும் என்பதை மக்களுக்கு எளிதாக எடுத்துச் சொன்னவர் இவர். மகா அவதாரர் பாபாவை நேரடியாக தரிசித்த அவர், கிருஷ்ண பரமாத்மாதான் பாபாஜி என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறார். அது நிதர்சனமான உண்மை என்பதை எனக்கு உணர்த்திவிட்டார் பாபாஜி.


ரஜினிகாந்த் மூலம் தன்னைப் பற்றிய இந்த உண்மை எனக்குத் தெரிய வேண்டும். என் மூலம் வெளி உலகிற்குத் தெரிய வேண்டும் என்பது பாபாஜியின் எண்ணமாக இருந்திருக்கிறது.


பாபாஜியின் அந்த அற்புதப் படத்தின் பிரதி ஒன்றை எனக்குக் கொடுத்து, மன நிறைவையும், அருமையான, உண்மையான விளக்கத்தையும் எனக்களித்த நண்பர் ரஜினிகாந்திற்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. எல்லாம் பாபாஜியின் செயல் தவிர வேறென்ன!


கலியுகத்தின் கடவுளாய், மகா அவதார புருஷராய்த் திகழும் பாபாஜி எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவர். அவரது பெயரை ஒருமுறை உச்சரித்தாலே அவரது அபூர்வ ஞான சக்தி நமக்குள் பாய்வது போல் இருக்கும்.


பாபாஜி, காலத்தால் கட்டுப்படுத்த முடியாதவர். இயற்கைக்கும், விஞ்ஞானத்திற்கும் அப்பாற்பட்டவர். காரணம், காக்கும் கடவுளான பரம்பொருளே அவர்! பாபாஜியிடம் சரணடைவோம். அவர் நம்மை எங்கும் எப்போதும் காத்திடுவார்.

Thursday, 5 September 2024

ஆலய பணியில் இன்று






 

Tuesday, 27 August 2024

அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோயில்,* *சத்திரம் கிராமம்,* *புதுக்கோட்டை மாவட்டம்

*அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோயில்,*

 

*சத்திரம் கிராமம்,* 


*புதுக்கோட்டை மாவட்டம் .*


*காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.*


*மூலவர்: – காமாட்சியம்மன்*


*பழமை: – 500 வருடங்களுக்கு முன்*


*ஊர்: – சத்திரம் கிராமம்*


*மாவட்டம்: – புதுக்கோட்டை*


*மாநிலம்: – தமிழ்நாடு*

*சிதம்பரம் அருகேயுள்ள நல்லினம் கிராமத்தில், சில நூறு ஆண்டுகளுக்கு முன் ஒரு பூசாரி இருந்தார். அவரது குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆவுடையார்கோவிலில் (மாணிக்கவாசகரை சிவன் ஆட்கொண்டு உருவமின்றி அருவமாய் இருக்கும் தலம்) வசித்து வந்தார். அவருக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்தது. புகுந்த வீட்டில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அப்பெண் அங்கிருந்து கைக்குழந்தையான மகனுடன் வெளியேற்றப்பட்டாள். வீட்டில் வைத்து வணங்கிய காமாட்சி அம்மன் திருவுருவத்துடன் அவள் தன் உடன்பிறந்தவர்கள் வசித்த காளையார்கோவிலுக்கு வந்தாள். இவ்வூர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது.*


*வரும் வழியில், அவள் சில குடுகுடுப்பைக்காரர்களைச் சந்தித்தாள். அவர்கள் அவள் ஊர் வரை பாதுகாப்பாக கொண்டு வந்து சேர்த்தனர். பின்னர் அவ்வூரிலேயே தங்கி விட்டனர்.*


*அவளது குழந்தை வளர்ந்து பத்து வயதை எட்டினான். விளையாடுவதற்காக தாயிடம் உடுக்கு ஒன்று வாங்கித் தரும்படி கேட்டான். அம்மாவும் மகனுக்கு அதை அன்புடன் வாங்கிக் கொடுத்தாள். அதை அடித்துக் கொண்டே சிறுவன் விளையாடிய போது, வீட்டில் சிலையாய் இருந்த அன்னை காமாட்சி அதை ரசித்துக் கேட்டாள். அதற்கு பரிசாக அக்குழந்தை உடுக்கடித்தபடியே எது சொன்னாலும், பலிக்கும் பாக்கியத்தை கொடுத்தாள். இது குழந்தைக்கோ, குழந்தையின் தாய்க்கோ தெரியாது. ஊரிலுள்ளோர், “இந்த குழந்தை இவ்வளவு அழகாக குறி சொல்கிறானே! இவன் என்ன சொன்னாலும் பலிக்கிறதே!, எல்லாம் அவனது அன்னை பூஜிக்கும் காமாட்சியின் மகிமைதான் என எண்ணினர்.*


*இதனிடையே காளையார்கோவிலை அச்சமயம் ஆண்ட மன்னரின் மனைவிக்கு நோய் ஏற்பட்டது. அரண்மனை வைத்தியர்கள் எவ்வளவோ முயன்றும், நோய் தீரவில்லை. தீர்க்க முடியாத அந்த நோய்க்கான காரணத்தை அறிய குடுகுடுப்பைக்காரர்களை மன்னர் வரவழைத்தார். அவர்கள் தங்கள் சக்தியைப் பயன்படுத்தி, சில காரணங்களைக் கூறினர்.*


*ஆனால், அவை ஏற்றுக்கொள்ளக் கூடிவைகளாக இல்லை. அவர்கள் கூறிய காரணங்களின் அடிப்படையில், பரிகாரம் செய்தும் பலனில்லை. எனவே, மன்னர் குடுகுடுப்பைக்காரர்களை சிறையில் அடைத்து விட்டார். தன் தாயை சிறுவயதில் காப்பாற்றிய குடுகுடுப்பைக்காரர்கள் சிறையில் அடைக்கப்பட்டதை அறிந்த சிறுவன், அவர்களை வெளியே கொண்டு வர திட்டமிட்டான்.*


*அவன் நேரடியாக அரசனிடம் சென்று, காமாட்சியின் அருளுடன் நோய்க்கான காரணத்தையும், அது தீர்வதற்கான வழியையும் சொன்னான். நோய் குணமானது. மனம் மகிழ்ந்த மன்னன், “”உனக்கு என்ன வேண்டும்?’ என கேட்க, குடுகுடுப்பைக்காரர்களை விடுவிக்க வேண்டுமெனவும், தனக்கு ஓர் உடுக்கு பரிசாகத் தர வேண்டும் எனவும் கேட்டான்.*


*அவ்வாறே மன்னரும் செய்தார். காமாட்சியின் அருளால் குறி சொல்லி வந்த அச்சிறுவனின் மரபில் வந்த நான்கு பேர், காமாட்சிக்குப் பிற்காலத்தில் புதுக்கோட்டையில் கோயில் எழுப்பினர். உயிருள்ள பெண் போல, அலங்கார கோலத்தில் காட்சியளிக்கிறாள் அன்னை காமாட்சி.*

*🌹அன்புடன்🌹*

 *சோழ.அர.வானவரம்பன்*.

               *(+918072055052)*

*பொதுவாக சிவன் கோயில்களில் தான் சிவராத்திரி விழா நடக்கும். அம்மன் கோயில்களில் நவராத்திரியே பிரதானம். ஆனால், சக்தியின்றி சிவமில்லை என்ற அடிப்படையில், புதுக்கோட்டை மாவட்டம் சத்திரம் கிராமத்தில் 64 பரிவார தெய்வங்களுடன் கொலு வீற்றுள்ள காமாட்சியம்மன் கோயிலில் சிவராத்திரி விழா சிறப்புடன் கொண்டாடப்படுகிறது.*


*இக்கோயிலில் ஒவ்வொரு பவுர்ணமியன்றும் சிறப்பு பூசை உண்டு. சிவாரத்திரியை ஒட்டி பால்குடம், காவடி பவனி நடக்கும். மாலையில் திருவிளக்கு பூசை நடத்தப்படும்.*


*கோரிக்கைகள்:*


*திருமணம் நடக்க, குழந்தைச் செல்வம் கிட்ட வேண்டுகின்றனர்.*


*நேர்த்திக்கடன்:*


*கோரிக்கை நிறைவேறியதும் அம்மனுக்கு அபிசேகம் செய்தும், புத்தாடை சாத்தியும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.*




Monday, 26 August 2024

கொடுமுடி நாகாபரணம்

 கொடுமுடி நாகாபரணம் .


எத்தனை நாகாபரணம் வந்தாலும் இந்த நாகாபரணதிற்கு தனி அழகு காரணம் என்னவென்று கேட்டால்.இது திருப்பாண்டிகொடுமுடி அருள்மிகு ஸ்ரீ மகுடேஸ்வரசுவாமிக்கு மகுடம் போல சாத்தப்படும் நாகாபரணம் ஆயிற்றே!!!


ஆதிசேஷனுக்கும், வாயுதேவனுக்கும் தங்களில் யார் பெரியவர் என்பதில் தகராறு ஏற்பட்டது. இந்திரன் விதித்த போட்டி விதிமுறைகளின்படி ஆதிசேஷன் மேருமலையை தனது ஆயிரம் மகுடங்களால் பற்றிக் கொள்ள வேண்டும் என்றும், வாயுதேவன் அதை மீறி மேருவை வீசித் தள்ள வேண்டும் என்றும் நிர்ணயிக்கப்பட்டது.


அதன்படி வாயுதேவன தன் பலம் அனைத்தையும் சேர்த்து காற்றடிக்க மேரு மலையின் ஐந்து சிகரங்கள் அங்கிருந்த் பிய்த்துக் கொண்டு தென்திசையின் பல பாகங்களில் வந்து வீழ்ந்தன. 


ஐந்தும் ஐந்து மணிகளாக மாறி ஒவ்வொரு இடத்தில் விழ, ஒவ்வொன்றும் ஒரு தலமானது.


சிவப்பு மணி வீழ்ந்த இடம் திருவண்ணாமலையாகவும், மாணிக்கம் மணி வீழ்ந்த இடம் ரத்தினகிரியாகவும் (திருவாட்போக்கி), மரகத மணி வீழ்ந்த இடம் ஈங்கோய் மலையாகவும், நீல மணி வீழ்ந்த இடம் பொதிகை மலையாகவும், வைரம் வீழ்ந்த இடம் கொடுமுடியாகவும் மாறின.


மேருவில் இருந்து பிய்ந்து வந்தவற்றில் மற்ற நான்கும் இன்றும் மலைகளாகவே காட்சி தர வைரமடிமுடி மட்டும் சுயம்பு லிங்கமாக காட்சி தருவது கொடுமுடி தலத்தின் சிறப்பாகும்.


மேருவின் மகுடத்தில் தோன்றியவர் என்பதால் மகுடேஸ்வரர் என்றும், தமிழில் கொடுமுடிநாதர் என்றும் இத்தல இறைவன் திருநாமம் கொண்டுள்ளார்.


அஞ்சினார்க்கு அரண் ஆதி என்று அடியேனும் நான் மிக அஞ்சினேன்

அஞ்சல் என்று அடித்தொண்டனேற்கு அருள் நல்கினாய்க்கு அழிகின்றது என்பஞ்சின் மெல்லடிப் பாவைமார் குடைந்து ஆடு பாண்டிக் கொடுமுடி

நஞ்சு அணி கண்ட நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.


இளமையாக்கினார் கோயில்

 இளமையாக்கினார் கோயில்


சிதம்பரத்தில் உள்ள காசு கடை தெருவில், ‘இளமையாக்கினார் கோயில்’ என்று வழங்கப்படும் திருப்புலீஸ்வரர் திருத்தலம் உள்ளது. 


வியாக்ரபாதர் பிரதிஷ்டை செய்ததால் இறைவன் திருப்புலீஸ்வரர் என்றும் அம்பிகை திரிபுரசுந்தரி என்றும் அழைக்கப்பட்டனர். 


ஆனால், திருநீலகண்டருக்கும் அவர் மனைவிக்கும் இளமையை அளித்த பிறகு இவர்கள் யவனேஸ்வரர், யவனாம்பிகை என்று அழைக்கப் படுகின்றனர். 


இக்கோயில் திருக்குளம், ‘இளமை தீர்த்தம்’ என்று வழங்கப்படுகிறது. முதிய வயதில் திருநீலகண்ட நாயனாரும் அவர் மனைவியும் மூழ்கி இளமையாக எழுந்த குளம்.


இறைவன் திருவிளையாடல் நிகழ்த்திய இக்குளம், சுற்றிலும் மதில் அமைக்கப் பட்டு மிக சுத்தமா கப் பராமரிக்கப்படுகிறது 


பெரிய பிராகாரங்களுடன் நகரத்தாரால் திருப்பணி செய்யப்பட்டு இருக்கிறது இவ்வாலயம். 


இது திருநீலகண்டருடன் மட்டும் அல்லாமல், கணம்புல்ல நாயனார் வாழ்க்கையுடனும் தொடர்புடைய ஆலயம்.


கணம்புல்ல நாயனார் விற்காத புல்லைக் கொண்டு வந்து  விளக்கேற்ற முற்பட்டார். ஆனால், புற்கள் எரியவில்லை. உடனே கருகிப் போயின. 


இதைக் கண்ட நாயனார் சற்றும் மனம் தளராமல் தனது முடியினைத் திரியாக்கி அதில் தீபம் ஏற்றினார். அவர் பக்தியை மெச்சிய இறைவன், அவர் முன் தோன்றி அவரை ஆட்கொண்டார். 


இத்தகைய சிறப்புக்கள் வாந்த இந்தத் திருத்தலத்துக்கு வந்து உங்கள் இளமையை மீண்டும் பெற்று வாழ்வீராக.


அமைவிடம்: 


சிதம்பரம் நடராஜர் ஆலயத்துக்கு அருகில்.


அகஸ்தியர் ஆலயம் பொகளூர், விக்கிரகங்கள் செய்யும் பணி

 இன்று நானும் குருஜியும் திருமுருகன் பூண்டி என்னும் ஊருக்கு சென்று அங்கே இருந்த உள்ளூர் மக்களிடம் விசாரித்து சிற்பக் கலைக்கூடங்களில் எது சிறந்த கலைக்கூடம் என்று கேட்டு அறிந்து அந்த கலைக்கூடத்திற்கு சென்று சிலைகளை ஆர்டர் கொடுத்துள்ளோம் 


நமது ஆலயத்தின் நுழைவு வாயில் ஆறடி உயரம் 4 அடி அகலம் கருவறை அளவு 11 அடி நீளம் 10 அடி அகலம் இதற்கு தகுந்தவாறு நாலு அடி அகலத்தில் ஒரு பீடம் அமைக்கப்படும் 


அந்த பீடத்தின் மேல் மற்றொரு சிறிய பீடம் இருக்கும் அந்த பீடத்தில் ஸ்ரீ அகஸ்தியர் ஸ்ரீலோபமுத்ரா சிலைகள் நிறுவப்படும்


இந்த இரண்டு பீடத்திற்கு மத்தியில் அஷ்டபந்தனம் எனப்படும் அஷ்டபந்தனம் போடப்பட்டு இந்த தரை பீடத்தின் மேல் அகஸ்தியர் லோப முத்ரா இருக்கும் இடம் அமர்த்தப்படும் கும்பாபிஷேகத்தின் போது இந்த நிகழ்வு நடைபெறும்


 அகஸ்தியர் சிலை மூன்றேகால் அடி லோப முத்ரா சிலை மூன்று அடி ஆகிய அளவில் இருக்கும் 


பீடத்தின் மொத்த அளவு ஒரு அடி.


சிலையின் உயரம் 3 1/4 அடி . ஆக மொத்தம் தரையில் இருந்து சுமார் 4 அடி உயரத்தில் ஒரு அகஸ்தியர் சிலை வடிவமைக்கப்பட்டு இருக்கும் 


சதுர பீடத்தின் வலது ஓரத்தில் ஆவுடையார் போன்ற அமைப்பு இருக்கும் .  அபிஷேகம் செய்யும் நீர் அந்த ஆவுடையார் வழியாக வெளியேறும் .  



மேலும் அந்த நீர் கட்டிடத்திற்கு வெளியே வந்து விழும் இடத்தில் மூணே கால் அடி நீளத்தில் இருபுறமும் யாழி அமைக்கப்பட்டு அதன் நடுவில் நீர் வந்து கீழே விழுகுமாறு கோமுகம் அமைக்கப்படும் 


இது தவிர அகஸ்தியர் லோப முத்ரா மூணே கால் அடி 3 அடி உயர சிலைகளுக்கு பின்னால் 4 முதல் 4.5 அடி உயரத்தில் வட்ட வடிவில் இரண்டு சிலைகளுக்கும் சேர்த்து ஒரு பெரிய பிரபாவளி கல்லிலே வடிவமைக்கப்பட்டு இருக்கும் 


அந்த பிரபாவளியில் கலை வேலைப்பாடுகள் நிறைய இருக்கும்., பார்ப்பதற்கு அழகாக இருக்கும் 


இதை தவிர உச்சிஷ்ட மா கணபதி சிலை செய்வதற்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

 உதிஷ்டமகா கணபதி அவர்களது மடியில் அவர்களது மனைவி அவர்கள் அமர்ந்திருப்பார் 


மகா கணபதியின் துதிகை தன்னுடைய மனைவியை தொட்டுக் கொண்டிருக்கும் வகையில் சாஸ்திரப்படி உச்சிஷ்ட மகாகணபதி சிலை அமைக்கப்படும்.


 அகஸ்தியர் தனது விக்கிரகத்திற்கு வாகனம் எதுவும் தேவையில்லை என்று கூறிவிட்டார் 


அதனால் அகஸ்தியர் உலோப முத்ரா விக்கிரகங்களுக்கு வாகனம் அமைக்கப்படவில்லை.


 உஜ்ஜிஷ்ட மகா கணபதி அவர்களுக்கு சாஸ்திரப்படி மூஞ்சூறு வாகனம் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.


 மேலும் உஜ்ஜிஷ்ட மகா கணபதி சிலை நுழைவு வாயிலில் ராகு மற்றும் கேது ஆகியவை பிரதிஷ்டை செய்யப்படும் .


ராகு கேது சிலைகளுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது


ராகு மற்றும் கேது சிலைகள் நிறுவப்பட்டால் அங்கே திருமணம் செய்யலாம் என்பது சாஸ்திரம் ஆகும்


 இவை அனைத்தும் சேர்த்து அவர்கள் கூறிய விலை ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் 


அவர்கள் 20,000 தள்ளுபடி செய்து ஒரு லட்சத்து 20 ஆயிரம் என்ற விலை கூறினார்கள்.


 நாங்கள் மீண்டும் மேலும் பேசி கெஞ்சி கேட்டுக் கொண்டதன் பேரில் மேலும் 20000 குறைத்து ஒரு லட்சம் ரூபாய் என்ற அளவில் இந்த சிலை வேலைப்பாடுகளை வடிவமைத்து கொடுப்பதாக ஒப்புக்கொண்டார்கள்.


 இதற்கு முன் பணமாக 60,000 கொடுக்கப்பட்டுள்ளது. பாக்கி 40 ஆயிரம் ரூபாய் இன்னமும் கொடுக்க வேண்டும் .

இதற்கு நிதி தேவைப்படுகிறது.

 தற்போது சுமார் 58 ஆயிரம் ரூபாய் நிதி சேர்ந்துள்ளது ஏற்கனவே கொடுத்த அட்வான்ஸ் தொகையில் இதுவே 2000 ரூபாய் குறைவு.


 இன்னமும் சிலை டெலிவரி எடுக்கும் போது மேலும் 40 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் .


*எனவே மொத்தமாக இன்னமும் 42 ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்*


 பொதுமக்கள் அனைவரும் இரண்டு மூன்று நாட்களுக்குள் இந்த 58 ஆயிரம் என்ற பெரிய தொகையை நிதியாக தந்து உதவியப்படியால் இன்று எங்களுக்கு எளிதாக சென்று 60 ஆயிரம் ரூபாய் என்பது ஒரு முன்பணமாக கொடுக்க முடிந்தது .


மேலும் இன்னமும் 20 நாட்கள் அவகாசம் உள்ளது அதற்குள் இந்த 42 ஆயிரம் ரூபாய் யார் யாருக்கு எல்லாம் எவ்வளவு கொடுக்க முடியுமோ *கொடுக்காதவர்கள் யாராவது இருந்தால் கொடுத்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்* நன்றி






Thursday, 22 August 2024

காரியம் கைகூட பீஜ அட்சர மந்திரங்கள்

 காரியம் கைகூட பீஜ அட்சர மந்திரங்கள்!!!


பீஜ (அட்சர) மந்திரம் நமது உடலில் உள்ள சக்கரங்களை இயக்கி சக்தி அளித்து சீராக செயல்பட வைக்கும் ஆற்றல் உடையது. 


இதனை பிரயோகிக்கும் இடம் அனைத்திலும் மிகப்பெரிய அதிர்வாற்றலை உண்டாக்கி அவ்விடத்திலும் அங்குள்ளோரின் ஆன்ம, ஜீவ சக்தியை பெருக்கும். 


க்லீம், ஸ்ரீம், ஹ்ரீம், ஐம், கௌம், க்ரீம், ஹௌம், ஔம், சௌம்  என்று ஒன்பது (நவ) அட்சர பீஜ மந்திரங்கள் உண்டு.


அட்சரங்கள் முன்,பின் இடம் மாறும்போது ஒளியும்,நிறமும்,அதிர்வும் மாறும்.


இவைகளை சரியான முறையில் வரிசைபடுத்தி பிரயோகிக்க அதீத ஆற்றலை உணரலாம். 


நாவுக்குள் மௌனமாக இதை ஓதினால் நன்மைகள் தரும். 


ஒன்பது (நவ) அட்சர பீஜ மந்திரம் ஏழு சக்கரங்களுக்கும், இந்திரயோனி (உள்நாக்கு), பிரம்மநாளம்( தலைஉச்சி) பகுதிகளுக்கும் அதிர்வுகளை கொடுத்து சக்தி ஊட்டும்பொழுது பலன்களை பெரிதும் ஈர்க்கின்றது.


க்லீம்- மூலாதாரம்

ஸ்ரீம்- சுவாதிட்டானம்

ஹ்ரீம் – மணிப்பூரகம்

ஐம்- அநாகதம்

கௌம் – விசுத்தி

க்ரீம்- இந்திரயோனி

ஹௌம்- ஆக்ஞா

ஔம்- நெற்றி உச்சி

சௌம்- பிரம்ம நாளம்


அதாவது ஆக்ஞா சக்கரதிற்கான பீஜ 

(அட்சர) மந்திரம்'ஹௌம்' தொடர்ந்து பிரயோகிக்கும் பொழுது கல்வி ஞானம் முதலிய செல்வமும் வலிய வினை நீக்கமும் தீவினைகள் வராமல் செய்வதும் ஆகிய பலன் தரும்.


சூட்சம ஒளியுடல் உள்ஒளி வட்டம் (ஆரா) உண்டாகும்.


இவைகளை ஜோதிட சூட்சமாக ராசிகளுக்கான பீஜமந்திரத்தை உபயோகிக்கும் பொழுது கிரக நற்பலன்கள் பெரிதும் ஆகர்ஷணம் பண்ணும்.


கீழே ஒவ்வொரு ராசிக்கும் உண்டான பீஜமந்திரத்தை அளித்துள்ளேன.. 


அதனை தினசரி 108 முறை ஜபித்து வந்தால் சகலவித நன்மைகளும் உண்டாகும். 


மேஷம் - ஓம் ஐம் க்லீம் சௌம்

MESHAM – OM AIM KLEEM SOUM


ரிஷபம் - ஓம் ஐம் க்லீம் ஸ்ரீம்

RISHABAM – OM AIM KLEEM SHRIM


மிதுனம் - ஓம் க்லீம் ஐம் சௌம்

MITHUNAM – OM KLEEM AIM SOUM


கடகம் - ஓம் ஐம் க்லீம் ஸ்ரீம்

KADAGAM – OM AIM KLEEM SHRIM


சிம்மம் - ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் சௌம்

SIMMAM – OM HREEM SHREEM SOUM


கன்னி - ஓம் ஸ்ரீம் ஐம் சௌம்

KANNI – OM SHREEM AIM SOUM


துலாம் - ஒம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம்

THULAM – OM HREEM KLEEM SHREEM


விருச்சிகம் - ஓம் ஐம் க்லீம் சௌம்

VRICCIGAM – OM AIM KLEEM SOUM


தனுசு - ஓம் ஹ்ரீம் க்லீம் சௌம்

THANUSU – OM HREEM KLEEM SOUM


மகரம் - ஓம் ஐம் க்லீம் ஹ்ரீம் ஸ்ரீம் சௌம்

MAGARAM – OM AIM KLEEM HREEM SHREEM SOUM


கும்பம் - ஓம் ஹ்ரீம் ஐம் க்லீம் ஸ்ரீம்

KUMBAM – OM HREEM AIM KLEEM SHREEM


மீனம் - ஓம் ஹ்ரீம் ஐம் க்லீம் ஸ்ரீம்

MEENAM – OM HREEM AIM KLEEM SHREEM


*ராசி தெரியாத அன்பர்கள்*


க்லீம்

ஸ்ரீம்

ஹ்ரீம்

ஐம்

கௌம்       

க்ரீம்

ஹௌம்

ஔம்

சௌம்


ஓம் சிவாய நம என முடிக்கவும்.


சௌம்

ஔம்

ஹௌம்

க்ரீம்

கௌம் 

ஐம்

ஹ்ரீம்

ஸ்ரீம்

க்லீம்


ஓம் சிவாயநம என முடிக்கவும்.


இரண்டும் சேர்த்து ஒரு முறை.


இவ்வாறு குறைந்தபட்சம் 54 முறை மனதினுள் ஜெபிக்க வேண்டும்.


மேலும் இதனை  எண்ணிக்கை வைக்காமல் எவ்வளவு முறை மனதினுள் கூறி வர செய்கிறோமோ, அதற்குரிய நன்மைகள் மென்மேலும் வந்து சேரும்.


முகநூல் பதிவு https://www.facebook.com/share/dJgqmBqoZLL2hUTh/?mibextid=oFDknk

அகத்தியர் சிலை செய்யும் பணி

 அன்பான அகத்திய பக்தர்களே வருகின்ற 26 ஆம் தேதி திங்கட்கிழமை கோகுலாஷ்டமி அன்று நமது புதிய ஆலயத்தில் ஸ்தாபகம் செய்வதற்காக எம்பெருமான் அகஸ்தியர் மற்றும் தேவி லோக முத்திரை மற்றும் விநாயகர் சிலைகள் ஆகியவை செய்வதற்காக சிற்பியிடம் முன்பணம் கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.


 திங்கள்கிழமைக்குள் தங்களால் முடிந்த ஒரு தொகையை அகத்தியர் சிலைக்காக அனுப்பி வைக்கவும் .  பல பக்தர்களிடம் இருந்து சிறிது சிறிது நன்கொடை பெற்று சிலை செய்ய வேண்டும் என்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.


 எனவே அவர் அவர்கள் தங்களால் முடிந்த அளவு குறைந்தபட்சம் 100 200 500 1000 ஆகிய தொகைகளில் உங்களின் வசதிக்கு ஏற்றவாறு அகத்தியர் சிலையில் தங்களது பங்களிப்பை அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.


 திங்கட்கிழமை காலை வரை இந்த பணம் அகத்தியர் சிலைக்கு என்று தனியாக வரவு வைக்கப்பட்டு திங்கட்கிழமை அன்று சிற்பியிடம் கொடுக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறோம் 

Gpay 9176012104 Santhanam T Ramanathan

மிக்க நன்றி

Sunday, 11 August 2024

அகஸ்தியர் பீடம் குருஜி அவர்களிடமிருந்து வந்துள்ள ஒரு அறிவிப்பு....

 நமது அகஸ்தியர் பீடம் குருஜி அவர்களிடமிருந்து வந்துள்ள ஒரு அறிவிப்பு....செய்தி


 அகஸ்தியர் பீடத்தில் குருஜி அவர்களால் நாடி வாசிக்கப்பட்டது அந்த ஜீவ நாடியில் எழுந்தருளிய எம்பெருமான் அகஸ்தியர் பெருமான் இனிமேல் யாரும் தீப எண்ணெய் கொண்டு விளக்கு ஏற்ற வேண்டாம் என்று கூறியுள்ளார்.


* *நல்லெண்ணெய் மட்டுமே உபயோகப்படுத்தி விளக்கு ஏற்ற வேண்டும் என்று ஓலைச்சுவடியில் அகத்திய பெருமான் உரைத்துள்ளார்* 


* *எனவே நமது பீடத்திற்கு வரும் நண்பர்கள் அனைவரும் வரும்போது தங்களால் முடிந்த அளவு நல்லெண்ணெய் வாங்கி கொண்டு வந்து கொடுக்கவும்* 


அதேபோல  தங்கள் இல்லங்களில் நல்லெண்ணெய் முடிந்தவரை நல்லெண்ணெய் தீபம் கொண்டு விளக்கு ஏற்ற வேண்டும் என்பதையும் கேட்டுக்கொள்கிறோம் மிக்க நன்றி

Tuesday, 23 July 2024

சேலம் ஊத்து மலை


 

Sunday, 21 July 2024

21July2024 குரு பௌர்ணமி பூஜை காட்சிகள், ஸ்ரீ அகஸ்தியர் ஜீவ அருள் நாடி பீடம் பொகளூர்


 






























ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்


https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1


ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583

https://agathiyarpogalur.blogspot.com/?m=1


முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.


*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.


தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.


ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.

பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.

நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.

மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.


தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏


Agathiyar Temple JeevaNadi

Tiruppur, Tamil Nadu

093843 95583


கூகிள் வரைபடம் வழி கீழே 👇


https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in


முகநூல் -


https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/