Monday 30 January 2023

சதுரகிரி

 சதுரகிரி மலையின்  சிறப்பம்சம்

இந்த மலையில் மேற்புறத்தில் நான்கு திசைகளிலும் சிறு குன்றுகள் அரணாக அமைந்து உள்ளன ,நாற் சதுர வடிவில்  அமைந்து உள்ளது  அதனால் அதற்க்கு சதுர கிரி என்று பெயர் . இங்கு அமைந்து  உள்ள குன்றுகள் நவமணிகளின் குணத்தை கொண்டு உள்ளது இங்கு உள்ள பகுதி கிரகணங்களின் தாக்கத்தில்  இருந்து விடுபட்டு  தனது சக்தியை  (அம்பாளின் சக்தி) வெளியில் வெளிப்படுத்தும் திறன் கொண்டது , இங்குள்ள சர்ப்பங்கள் நவரத்தின சிகப்பு நிறத்தில் உள்ளன  இங்கு அநேக ஜோதி விருட்ஷ மரங்கள் உள்ளன.இங்கு இரவென்றும் பகலென்றும் இல்லை , இரண்டும் சேர்ந்த நிலையில் வெளிச்சம் உடையது .இங்குள்ள புற்கள் நிறைந்த பகுதி யில் புல்பூண்டுகளாக அநேக ரிஷிமார்களும் விருட்ஷிகங்கள் மரங்களாக தேவர்களும்  சித்த மகரிஷிகளும் உள்ளனர் ,வீட்டில் வளர்க்கும் பட்ஷி , மிருகங்கள்போன்ற  வடிவில்  இங்கே  உலாவி வருகிறார்கள் . இங்கே  சித்தர்கள்  பக்தர்களாகவும்  அடியார்களாகவும் மக்களுடன்  கலந்து  மகாலிங்கத்தை தரிசிக்க  வருபவர்களை  கூட்டிச்  செல்வார்கள்

இன்னும் சிவனும் பார்வதியும்  காட்சி கொடுத்த இடமாகவும்  இது உள்ளது

இமயத்தில் வாழும் ரிஷிகள்   முனிவர்கள்  இங்கே வாழ்கின்றனர் . இதன் பெருமை அளப்பரியது . இந்த மலையை வலம் வந்தாலும் துன்பங்கள்  துயர்கள்  தீரும்

No comments:

Post a Comment