Monday 30 January 2023

நடுத்தர மக்கள் பற்றி சுவையான சில வரிகள்

 நடுத்தர வர்க்கத்தினருக்கே உரித்தான சில விஷயங்கள்........


5 ஸ்டார் ஹோட்டலில் போய் உக்காந்துட்டு தண்ணீரை அண்ணார்ந்து குடிப்பது.


👉மிடில் கிளாஸிடம் இருக்கும் ஒரு பழக்கம் எங்கே போனாலும் மாறாது என்றால்


அது வெளியிடங்களில் தண்ணீரை அண்ணார்ந்து குடிப்பது தான்.


தனக்கு தானே தனியா ஒரு வாட்டர் பாட்டிலை வாங்கி கொண்டு தனி ஒருவராக ரயிலில் பிரயாணம் செய்தாலும்


அந்த வாட்டர் பாட்டிலில் வாய் வைத்துக் குடிக்காமல் அண்ணார்ந்து தான் குடிப்பாங்க.


தண்ணீரை பருகும் ஸ்டைலிலே தெரிந்து விடும் அடடா இவர் நம்ம வீட்டு பக்கத்துக்கு வீடு போலயே என்று.


👉வரிசைக்கு முந்தி அடிக்கிறது.


அது ரயில்வே ஸ்டேஷனோ தியேட்டரோ,


சாமி தரிசனமோ எதுவோ.


ஒருவரை உரசாமல் நிற்கவே முடியாது


எங்கே போனாலும்.


பயணத்தில் எல்லாம் என்னமோ பாட்டி மடியில் தூங்குற மாதிரியே தூங்குவாங்க பாருங்க!


/ இதில் பலருக்கு மாற்றுக்கருத்து இருக்கலாம்.


👉உரசிட்டு உட்காருவது,


சாலையை கடக்கையில் கையை பிடித்துக் கொள்வது,


நண்பர்களை அடிச்சி பேசுறது,


யார் வீட்டு குழந்தை என்றே தெரியாமல் தூக்கி மடியில் வைத்துக் கொள்வது


எல்லாமே இவர்கள் தன்னையும் அறியாமல் செய்வார்கள்.


காரணம் எமோஷ்னலா மட்டும் அல்லாது physical ஆகவும் இவர்களது அன்பு வெளிப்படும்.


பணக்காரர்கள் அவ்வளவு எளிதில் மற்றவரை தொட மாட்டார்கள்.


👉குளிர்சாதன பெட்டியில மேரி கோல்டு பிஸ்கட் வாங்கி வைக்கிறது. எனக்கு தெரிஞ்சி நடுத்தர வர்க்கம் மட்டும் இல்லனா அந்த பிஸ்கட் எல்லாம் விற்பனையே ஆகாது.


மண்ணு மாதிரி இருக்கும் ஆனாலும் டீ குடிக்கும் போது வேற வழியே இல்லாமல் சாப்பிடுவோம்.


👉ஸ்டீல் கட்டில் & ஸ்டீல் பீரோ. எப்படா இதை தூக்கிப்போட்டுட்டு மர கட்டிலுக்கு மாறுவோம் என்பது பெரும்பாலான நடுத்தர வர்க்கத்தின் ஏக்கம் தான்.


👉டிரெசிங் டேபிளே அந்த கண்ணாடி வச்ச பீரோ தான்


👉பாதி நடுத்தர வர்க்கத்தினரின் மாளிகையில். லோயர் நடுத்தர வர்க்கத்தினர் வீட்டில் மர வேலைப்பாடுகளே இருக்காது.


👉அதுவே அப்பர் மிடில் கிளாஸ் வீடுகளில் செருப்பு ஸ்டாண்ட் கூட மரத்தில் தான் இருக்கும். இது தான் ரெண்டு பேருக்கும் அடிப்படை வித்தியாசம்.


👉பக்தி.


இது தான் நடுத்தர மக்களின் மாபெரும் அடையாளம். கடவுள் என்ற நம்பிக்கை தான்


இவர்களின் உந்து சக்தியே.


நல்லா சிந்தித்து பாருங்கள் உலக அளவில் பக்தியும் கடவுள் பயமும், நம்பிக்கையும் அதிகம் உள்ள மக்கள் இந்தியர்கள் தான்.


இந்தியர்களுக்கு பக்தி அதிகம் தான்.


அந்த பக்திமான்களில் முக்கால்வாசி நடுத்தர வர்க்கம் தான்.


ஒரு நம்பிக்கையை முன்னிட்டு தங்களை ஆறுதல் படுத்திக் கொள்வார்கள்.


சரி கடவுள் பார்த்துப்பாரு விடுடா,


அவன் செஞ்சா அவன் அனுபவிப்பான் என்ற வார்த்தையை


இவர்கள் பாதிக்கப்படும்போது எல்லாம் சொல்லி தங்கள் மனதை தாங்களே தேற்றிக் கொள்வார்கள்.


👉மாசகடைசி எல்லா டப்பாவையும் உருட்டுவது.


டப்பாவை மட்டுமா உருட்டுவாங்க?


ஒரு பேண்ட் பாக்கெட் விடாம எல்லா பாக்கெட்டையும் துளாவுவாங்க


ஆனால் ஒன்னும் கிடைக்காது அது வேற கதை.


👉VKC பிரைட் காலணி.


ஒரு 20 ஆண்களை நிப்பாட்டிவிட்டு என்ன காலணி அணிந்திருக்கிரார்கள் என்று கணக்கிட்டால் இருபதில் 12 பேர் அந்த VKC காலணியை தான் அணிந்திருப்பர்.


அந்த 12 பேரும் நடுத்தரவர்க்கத்தினராக தான் இருப்பார்கள்.


👉ஆவி பிடிப்பது கை மருந்து சாப்பிடுவது. இதை வாசித்து கடந்து செல்வது ரொம்ப எளிதாக இருக்கலாம் ஆனால் நிஜத்தில் ரொம்ப கொடுமை.


காரணம் இது தான்,


மருத்துவ செலவு எல்லாம் வந்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம் எல்லா நடுத்தரவர்க்கத்தினருக்கும் இருக்கும்.


அதனாலையே ஒரு தும்மல் எடுத்தாலும் உடனே எதையாவது வசக்கி கசாயம் எடுத்து குடிக்க வச்சிருவாங்க.


தும்மல் வந்தால் ஆவி பிடிக்கனும்,


சளி இருந்தால் ஆவி பிடிக்கனும்,


மழையில் நனைஞ்சிட்டு வந்துட்டோம்னா ஆவி பிடிக்கனும்,


தலைவலி வந்தால் ஆவி பிடிக்கனும் அட இது என்ன விசேசம்


நாங்க எல்லாம் கொரொனாவுக்கே ஆவி பிடிச்ச கூட்டம் தான்.


👉கை மருந்து, கசாயம், ஆவி பிடித்தல் தான் நடுத்தர வர்க்கத்தின் மருந்து மாத்திரை ஊசி எல்லாம். ஆவி பிடித்தல் தான் இவர்களின் அடிப்படை மருந்து.


பணக்காரர்கள் வரும்முன் காப்போம் என்ற மன நிலையிலும்,


ஏழைகள் வந்த பின் காப்போம் என்ற மன நிலையிலும்,


நடுத்தர வர்க்கம் வரும்பொழுது காப்போம் என்ற மன நிலையில் இருப்பது தான் மழையில் நனைந்ததும் ஆவி பிடிப்பதன் உளவியல் எனலாம்.


ஆவி பிடிக்கிறதை தூக்கி ஓரம் வச்சிட்டு வாங்க


👉இவங்க வீட்டு குளிர் சாதன பெட்டியையும் உணவு மேசையையும் பார்ப்போம்.


ஒரு 20 நடுத்தரவர்க்கத்து அம்மாக்களை நிப்பாட்டிவிட்டு, குளிர்சாதன பெட்டியின் அவசியமும் பயனும் என்னனு கேட்டால்,


அந்த இருபது பேரில் 17 பேர் யோசிக்காமல் மாவு வைக்க,


பால் வைக்க என்ற பதிலை தான் முதலில் சொல்லுவார்கள்.


நடுத்தரவீட்டின் குளிர்சாதன பெட்டிகளில்


தோச மாவு, ஒரு பால் பாக்கெட், கறிவேப்பிலை, கொத்துமல்லி தலை, ரெண்டு முட்டை, நாலு எலுமிச்சை பழம், ஒரு பிஸ்கட் பாக்கெட் கண்டிப்பாக இருக்கும்.


பெங்களூர் டேஸ் படத்தில் காண்பிப்பது போல்

குளிர்சாதன பெட்டியை திறந்தால் கூல் டிரிங்ஸ் எல்லாம் உள்ளே இருந்து விழாது.


சாக்லெட்டை எல்லாம் பார் பாராக வாங்கி குளிர்சாதன பெட்டியில் வைத்து சாப்பிட்டதாக சரித்திரமே இருக்காது.


👉மகள் கிட்சனுக்குள் சென்றால் ஒரு டப்பா பொறிகடலை அட அது தான் பொட்டுகடலை காலியாக போகுதுனு அம்மாக்களுக்குத் தெரிந்துவிடும்.


தேங்காய் மற்றும் பொறிகடலையை சாப்பிடும் வழக்கம் பெரும்பாலான நடுத்தர வீட்டு குழந்தைகளுக்கு இருக்கும்.


அந்த பொறிகடலைக்கும் நடுத்தரவர்க்கத்தினருக்கும் இருக்கும் உறவு என்பது ஆயிரங்காலத்து பயிர்.


👉எல்லா நடுத்தர வீட்டின் பெட் ரூமிலும் ஒரு நாற்காலி 'யாருக்கோ வந்த விதி'னு இருக்கும்.


அந்த நாற்காலி வெறும் நாற்காலி மட்டும் இல்லை அது ஒரு சுமை தாங்கி.


துவைத்து காயப்போட்டு எடுத்த ஆடைகளை நேரா கொண்டு வந்து அது மேல தான் போடுவாங்க.


ஏழைகள் வீடுகளில் இந்த ஆடைகள் அசையிலும் (கொடி),


பணக்காரர்கள் வீட்டில் ரேக்கிலும் தொங்கும்.


நடுத்தர வீட்டில் மட்டும் அந்த சுமை தாங்கி என்னும் நாற்காலி இந்த பொறுப்பை ஏற்றுக் கொள்ளும்.


இங்கேயும் இருக்கனும் அங்கேயும் போகனும் என்ற எண்ணம்.


ஒன்னும் புரியலல?


👉வீட்டில் ஒன்னுக்கு ரெண்டு சிலிண்டர் வைத்திருந்தாலும் கூட


ஒரு விறகு அடுப்பு மேடையும் போட்டு வச்சிருப்பாங்க.


ஏழ்மை நிலையிலிருந்து நடுத்தரவர்க்கம் ஆகியும் விட்டுட்டு வந்த அடுப்பையும் விட மனசு இருக்காது


(அதாவது பழைய வாழ்க்கை முறையை விடவும் மனசு இருக்காது)


அதே நேரம் அடுத்த மாசம் நாம மைக்ரோஓவன் வாங்குவோம்னு யோசிப்பாங்க


(அதாவது அடுத்தடுத்த நிலைக்குள் செல்ல வேண்டும் என்ற ஆவலும் இருக்கும்).


ரெண்டு நிலை மனது இவர்களுக்கு எப்பொழுதுமே இருக்கும்.


பழையதை விட்டுட்டு வர மனதே இருக்காது.


நான் வெறும் விறகு அடுப்பை மட்டுமே சொல்லல.


👉மெனு கார்டை மாங்கு மாங்குனு பார்த்துட்டு கடைசியில அதே பிரியாணியை ஆர்டர் பண்ணுறது.


அதில் கொடுமை என்னனா,


குடும்பமா போய் அந்த ரெஸ்ட்டாரண்ட்டில் உட்கார்ந்துட்டு ஆளுக்கொரு மெனு கார்ட் வாங்கி தனி தனியா மெனுவை பார்ப்பார்கள்.


ஆனால் எத்தனை முறை மாங்கு மாங்குனு பார்த்தாலும் கடையில இவங்க ஆர்டர் செய்வது என்னவோ அதே பிரியாணியை தான்.


ஒரு சுவை நாக்கில் ஓட்டிகிட்டா போதும்


அதை தாண்டி வரவே மாட்டாங்க நடுத்தரவர்க்கத்தினர்.


Safe zone லையே தான் இருப்பாங்க.


வேற உணவு புதுசா ட்ரை பண்ணி அது நல்லா இல்லாம போச்சுனா?


பேசாம பிரியாணியே ஆர்டர் பண்ணுவோம்.


இது தான் இவர்கள்.


👉எங்கே போனாலும் விலைப்பட்டியலை பார்ப்பது.


எனக்கு பிடித்ததை வாங்கினேன் என்பதை விட என் பட்ஜெட்டுக்கு இது தான் சரி அதனால் இதை வாங்கினேன் என்பது தான்


இவர்களது பதிலாக இருக்கும்.


👉கோயில் குளத்துக்கு போனால் புளி சோறை கட்டி எடுத்துட்டு போறது,


👉பிள்ளையை விடுதிக்கு அனுப்பினால் ஊறுகாய் மற்றும் இட்லி பொடியை கையோட கையா குடுத்து அனுப்புறது.


இதுக்கு பின்னாடி இருக்கும் உளவியல் என்னனு நான் சொல்லியா தெரியனும்?


பத்தாயிரம் பக்கதில் எழுத வேண்டிய பதில் பத்து பாயிண்ட்டிலா உள்ளடங்கிவிடப் போகிறது?


👉இதனுடன் கார் சீட் கவரை கிழிக்காமலே ரெண்டு வருடத்திற்கு காரை ஓட்டுவதையும் சேர்த்துக் கொள்ளலாம்.


👉அப்புறம் அந்த வாட்டர் பாட்டிலை அண்ணார்ந்து குடிப்பது உங்களிடம் மட்டுமே இருக்கும் ஆரோக்கியமான விசயம் தான்.


இதையெல்லாம் மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.


அவசரத்துக்கு யாராவது தண்ணீர் கேட்டால்குடுக்கலாம்ல? 😀😀😀

No comments:

Post a Comment