Tuesday, 27 April 2021

மருந்துவாழ் மலை பரமார்த்தலிங்கேஸ்வரர் திருக்கோயில்''.

 ''ஆதலினால் மருந்துவாழ்மலை செல்வீர்''..."சித்ரா பௌர்ணமி

கிரிவலம்":26-4-2021''மருந்துவாழ் மலை

பரமார்த்தலிங்கேஸ்வரர் திருக்கோயில்''.தாமரையை கவிழ்த்து வைத்தது போல்

இருக்கும் மலை "மருந்து வாழ் மலை"..இது கன்னியாகுமரி நாகர்கோயில் மெயின்

ரோட்டில் சுசிந்திரம்  அருகில் உள்ளது.மருந்துவாழ் மலை அடிவாரத்தில் உள்ள

அன்பு குடில் ஆசிரமம் தொடர்புக்கு:9788860096..நம் மனத்தில் உள்ள

நியாயமான ஆசைகள் நிறைவேற பௌர்ணமி நன்னாளில் தொடர்ந்து 5 பௌர்ணமிகள்

"மருந்து வாழ் மலை"யை அந்தி கருக்கலில் கிரிவலம் வருவோம்.இலட்சுமணனைக்

காப்பாற்ற அனுமன்

சஞ்சீவி மலையைப் பெயர்த்து எடுத்துக் கொண்டு சென்ற போது தமிழ்நாட்டில்

விழுந்த பல்வேறு துண்டுகளில் இம்மலையும் ஒன்று.அகத்திய முனிவர், அத்திரி

முனிவர், பரமார்த்தலிங்கேஸ்வரர், தேவேந்திரன் வரை புனிதத் தவம் மேற்கொண்ட

பெருமையினை உடையதாகும். இன்றும் இங்கு பல சித்தர்கள் மலையின் குகைகளில்

வசிப்பதை காணலாம்.மலைப்பாதையில் பரமார்த்தலிங்கேஸ்வரர் சிவன் கோயில்

உள்ளது.திருவிதாங்கூர் மன்னர் மலை கோயிலுக்கு வந்தபோது மலையில் ஏறிச்

செல்வதற்கு வசதியாக படிகள் அமைக்கப்பட்டன.இம்மலையில் பிரணவ சஞ்சீவி,

அமிர்த சஞ்சீவி, ஜீவசஞ்சீவி உள்ளிட்ட ஏராளமான உயிர் காக்கும் மூலிகைகள்

உள்ளன.மேலும் எந்த மலையிலும் கிடைக்காத பல அபூர்வ மூலிகைகளும் உள்ளன.

இந்த மூலிகைகள் பலவிதமான நோய்களை தீர்க்கும் ஆற்றல் கொண்டவையாகத்

திகழ்கின்றன. இம்மலையில் இருந்து வீசும் காற்றைச் சுவாசிக்கும் போது

உடலில் புது சக்தி தோன்றுகிறது. ஆஸ்துமா நோய் வராமலும்

தடுக்கின்றது.இதனால் ஏராளமான பொதுமக்கள் இங்கு வந்து சமைத்து சாப்பிட்டு,

மூலிகைக் காற்றைச் சுவாசித்து, உடல் ஆரோக்கியத்துடன் திரும்பிச் செல்வதை

தினமும் காணமுடிகிறது. இம்மலையில் உள்ள மூலிகை இலைகளை பறித்து மலையிலே

வைத்து

சாப்பிடும் போது கசப்புத்தன்மை இல்லாமலும், மலைக்கு வெளியே கொண்டு வந்து

சாப்பிடும் போது கசப்புத்தன்மையுடன் இருப்பது இம்மலையில் உள்ள

மூலிகைகளின் தனிச்சிறப்பாகும்."வருடியிருப்பதாலே மருந்து வாழ் மலையில்

மருந்து வளரலாச்சே சிவனே அய்யா"என்கிறார் மகான் அய்யா வைகுண்ட

சுவாமிகள்.மருந்து வாழ்  மலையில் கொடிய நோய்களையும் தீர்க்கும் மூலிகைகள்

இன்றும் வளர்வதால் தான் இம்மலை மருந்து வாழ் மலை ஆனது.இம்மலை ஹனுமான்

தூக்கி சென்ற சஞ்சீவி மலையின் ஒரு துண்டு.இங்கு திருக்கார்த்திகை தீபம்

நன்நாளில் மாலை 6 மணிக்கு மலை உச்சியில்

திருக்கார்த்திகை தீபம் ஏற்றி கொண்டாடுகிறார்கள்.இந்த ஜோதி, மலையை

சுற்றிலும் சுமார் 30 கிலோமீட்டர் தூரம் வரை தெரியுமாம்.கேரளாவில்

உள்ளநிறைய சித்த மருத்துவர்கள் இம்மலையை தேடி வந்து,மூலிகைகளை பறித்து

செல்கிறார்கள்.ஆனால் நம்மவர்கள்?!.குறட்டை விடுகிறார்கள் என்பதே

உண்மை.ஆம்!அறிய முடியாத அரிய மூலிகைகளை எல்லாம் இம்மலையில் வைத்து விட்டு

நம்மவர்கள் கோட்டை விடுகிறார்கள்.குறட்டை விட்டோர் எல்லாம்,கோட்டை

விட்டார்..சித்த மருத்துவர்கள் இம்மலையை வலம் வந்து

,சுவடிகளில் உள்ள அரிய மூலிகைகளை எல்லாம் இங்கு கண்டு அறிந்து நம் மனித

குலத்தை மேம்படுத்த வேண்டும்.மருந்துவாழ் மலையினை சென்றடைய

நாகர்கோயில்-கன்னியாகுமரி வழிப்பாதையில் சுசீந்திரம் திருத்தலம்

அடுத்துவரும் பொத்தையடி எனும் இடத்தில இறங்கிடவேண்டும்.கன்னியாகுமரியில்

இருந்து 8கிலோமீட்டர் தூரத்தில் மருந்துவாழ் மலை அமைந்து உள்ளது.உள்ளம்

சம்பந்தமான நோய்களும்,நம் உடம்பில் உள்ள நோய்களும் அகல

சுந்தரகாண்டம்,சிவபுராணம்,தேவாரம்,திருப்புகழ் பாடி மருந்துவாழ் மலையினை

பௌர்ணமி நாளில் அந்திப்பொழுதிலும்,இரவிலும் வலம் வருதல்

சிறப்பாம்."நானேயோ தவம் செய்தேன்? `சிவாய நம' எனப் பெற்றேன்?"."வர

இருக்கும் பிறவியிலும்வாழ்த்திடுவேன் நின்

அருளை"."நாயேனைஆட்கொண்டஅண்ணாமலையானைப்

பாடுதும் காண்"."நாயேனை நாளும் நல்லவனாக்க,ஓயாமல் ஒழியாமல் உன்னருள்

தந்தாய்"..."நேற்றைய வாழ்வு அலங்கோலம்,அருள் நெஞ்சினில் கொடுத்தது

நிகழ்காலம்,வரும் காற்றில் அணையாச் சுடர்போலும்,அருள் கந்தன்

தருவான்எதிர்காலம்,எனக்கும் இடம் உண்டு,அருள் மணக்கும் முருகன்

மலரடிநிழலில்"கட்டுரையாக்கம்:அன்

பன்.சிவ.அ.விஜய் பெரியசுவாமி,கல்பாக்கம்,9787443462..













3 comments:

  1. பரமார்த்த லிங்கம் அத்திரி மகரிஷியால் இந்த குகையினுள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதன் காலம் சுசீந்திரம் கொன்றையடிக்கு முற்ப்பட்டதாகவோ அதே காலகட்டத்துடனோ இருக்க வாய்ப்புள்ளது. அத்திரி முனிவர் அனுசயா தேவி இன்றை ஆஸ்ராமம் பகுதியில் தான் குடில் அமைத்து வாழ்ந்ததாக ஐதீகம்.

    ReplyDelete
  2. ஆஸ்ராமம் அருகே அஞ்சனம் எழுதிய கண்டன் சாஸ்தா திருக்கோவில் குளம் தான் அத்திரி முனிவர் ஹோமம் வார்த்த ஹோமகுண்டம்.

    ReplyDelete
  3. பரமார்த்த லிங்கம் பற்றி மேலும் அறிய 8098741590

    ReplyDelete