Wednesday 21 April 2021

அண்டம் பிண்டம் பூரணம் .

 அண்டம்

பிண்டம்

பூரணம் ...


இவைகளை எப்படி பாவனை பண்ணுவது என்ற விதிகளை வள்ளலார் விளக்குகிறார் ...


அகம் 

அகப் புறம் 

புறம் 

புறப் புறம் ...


இந்த நான்கு நிலைகளிலும் கடவுள்

பிரகாசம் உள்ளது என்கிறார் வள்ளலார் ..


பிண்டத்தில் அகம் 

ஆன்மாவாகவும் ...


அகப் புறம் 

ஜீவனாகவும் ..


புறம் 

மனமாகவும் ..


புறப் புறம் 

ஐம்புலன்களாகவும்  ..

பிரகாசிக்கின்றன ..


அகம்

ஒரு பொருளின் உண்மைத் 

தன்மையை

அறிவது ஆன்ம அறிவு ..

இது தான் ஆன்மக் காட்சி ..


அகப் புறம் 

ஒரு பொருளின் தேவையை 

அறிதல் ஜீவ அறிவு ..

ஜீவக் காட்சி ..


புறம் 

ஒரு பொருளின் பெயர் உருவம்

குணம் இவற்றை விசாரித்து 

அறிவது மன அறிவு ..

கரணக் காட்சி ..


புறப் புறம் 

ஒரு பொருளின் பெயர் உருவம்

குணம் இவற்றை விசாரிக்காமல் 

அந்தப் பொருளை அப்படியே 

காணுதல் புலன் அறிவு ..

இந்திரியக் காட்சி ...


அண்டத்தில் அகம்

அக்கினியாகவம் ...


அகப் புறம் 

சூரியனாகவம் ..


புறம் 

சந்திரனாகவும் ..


புறப் புறம் 

நட்சத்திரங்களாகவும் ..

பிரகாசிக்கின்றன ...


ஆகவே பிண்டத்தில் நான்கும்

அண்டத்தில் நான்கும் மொத்தம்

எட்டு இடத்திலும் கடவுள் பிரகாசம்

காரியத்தால் உள்ளது ...


காரணத்தால் உள்ள இடம் 

பிண்டத்தில் புருவ மத்தி ...

அண்டத்தில் பரமாகாசம் ..


காரிய காரணத்தால் உள்ள 

இடங்கள் ..

பிண்டத்தில் விந்து நாதம் ..

அண்டத்தில் இடி மின்னல் ..


அகமாகிய ஆன்மப் பிரகாசமே 

ஞான சபை ...


அந்தப் பிரகாசத்துக்கு உள்ளிருக்கும்

பிரகாசமே கடவுள் ...


அந்த உண்மையின் அசைவே

நடம் 

நடராஜர் ..


ஆன்மாகாசம் 

பொற்சபை எனப் படுகிறது ..


ஜீவாகாசம் 

ரஜித சபை எனப் படுகிறது ...


திருஅருட்பா ..

உரை நடைப் பகுதி ..

No comments:

Post a Comment