அகத்தியர்: ''அன்புடன் அன்பருக்காகக் கேட்கும் போகனே!.. சொல்லலுற்றோம். 'ஸோம ஸுக்த வலமே’ அனைத்து வகையிலும் மிகச் சிறந்த பிரதட்சிண முறையாகும்.
'மாலோடு அயனும் காண மங்காத பிரதோஷத்தில்
மாதேவர்கள் காண சோம சுக்த வலமே
மாமேரு சிததர்கள் சிந்தித்தளித்ததே..
ஆகவே, சோம சுக்த பிரதடசிணத்திற்கு ஈடு இணையான வரங்களையோ, ஆசிகளையோ, தரவல்ல பிரதட்சிண முறை எதுவும் கிடையாது'. என்று மக்களிடம் உறுதியாக அறிவிப்பாய் போகா...
போகர்: 'ஐயனே! இவ்வுத்தம வலத்தைப்பற்றி மேலும் அறிய ஆவலாக இருக்கிறேன்...
அகத்தியர்: ''அப்பனே! சோமசுக்த வலத்தில் ஈசன் முதலில் புறப்பட்ட இடத்திலிருந்து பிரதட்சிணமாக நவகிரகமூலைக்கு வந்து அங்கிருந்து புறப்பட்டு அப்பிரதட்சிணமாக த்வஜஸ்தம்ப நந்திக்கு வர, முதலில் நந்திக்கு தீபம் காட்டப்பட்டு, பிறகு அத்தீபத்தை ஈசன் ஏற்றுக் கொள்கிறான். அங்கிருந்து ஈசன் திரும்பவும் பிரதட்சிணமாக வந்து சனீச்வர சன்னதியில் நின்று மஹா தூபதீப ஆராதனைகளை ஏற்றுக்கொண்டு, மீண்டும் புறப்பட்டு அப்பிரதட்சிணமாக இருக்கும் நிலைக்கு வந்து சேர்கிறான். இதேபோல் மூன்று முறை பிரதட்சிணமாகவும், அப்பிரதட்சிணமாகவும் ஈசன் வலம் வரும் இம்முறைக்கே சோமசுக்தப் பிரதட்சிணம் என்று பெயர்''.
போகர்: ''உத்தம குருவே! சோம சுக்த வலத்தில் ஈசன் ஏன், வலமாகவும் இடமாகவும்மாறி மாறி வலம் வருகிறான்?...
அகத்தியர்: 'சீடனே! தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது, ஆலால விடம் தோன்றி அவர்களைத் துரத்தியதல்லவா? அப்போது தேவர்களும் அசுரர்களும் கயிலையங்கிரியை நோக்கி ஒடினார்கள் அல்லவா? அப்பொழுது வலமாகச் சென்று கயிலையங்கிரிக்குள் புகுந்து ஈசனைச் சரணடையலாம் என்று எண்ணி தேவர்களும் அசுரர்களும் வலப்புறமாக வந்த பொழுது, ஆலாலம் அவர்களை இடப்புறமாக வந்து தாக்க, அஞ்சி நடுங்கிய அவர்கள் வந்த வழியே திரும்ப ஆலாலமும் தான் வந்த வழியே திரும்பிவந்து அவர்களைத் தாக்க முற்பட்டது. இவ்வாறு, அன்று தேவர்கள் வலமும் இடமுமாக, ஒடி ஒடி ஈசனைத் தேடியதை, இன்று சோம சுக்த வலத்தின்மூலம் நினைவுபடுத்திக் கொள்கிறோம்.
போகர்: ''ஐயனே! ஆடு மேய்ப்பவன் ஒருவன் ஆட்டைத் தன் தோளிலேயே வைத்துக்கொண்டு. அதைத் தேடியதைப் போல, தங்கள் இருதய கமலத்திலேயே தங்கியிருக்கும் ஈசனை நாடுவதை விட்டு, எங்கோ கயிலையில் இருக்கும் ஈசனை நாடி ஓடியதால் வந்த வினையே தேவர்களுடைய துன்பங்களுக்குக் காரணம் அல்லவா?
அகத்தியர்: ''சரியாகச் சொன்னாய் போகா! அன்று தேவர்கள் தங்களுள் ஈசனை வைத்துக்கொண்டு இடமும் வலமுமாக ஓடியதைப் போலவே நாமும் சோம சுக்த வலத்தில் ஈசனைத் தூக்கிக் கொண்டு வலமும் இடமுமாக வலம் வருகிறோம், புரிந்ததா ஜயனே?
போகர்: ''நன்கு புரிந்தது குருவே? சோம சுக்தப் பிரதட்சிணத்தால் வரும் பலன் யாது ஐயனே?
அகத்தியர்: ''அன்பனே!! பிரதோஷ வழிபாட்டில், உத்தம சோம சுக்த வலத்தில் ஈசனை முறையாகச் சுமந்து ஆனந்திப்பவர்கள் அனைத்துச் செல்வங்களையும் முறையாக அடைவதோடு தங்கள் பாவச் சுமையையும் முறையாகக் குறைத்துக்கோள்கிறார்கள்... அதுமட்டுமா... அச்வமேதயாகம் செய்த பலன் அவர்களைத் தேடி வருகிறது.
போகர்:''ஜயனே! ஈசன் அம்மையுடன் நந்தியின் மேலமர்ந்து வரும்போது அவனை எப்படி முறையாக தரிசிப்பது.
அகத்தியர்: ''சுந்தரனே! போகா! ஈசன் அம்மையுடன் நந்தியின் மீதேறி பவனிவரும் போது, நந்தீசனைத்தான் முதலில் தரிசிக்க வேண்டும். நந்தியை பார்த்துவிட்டுப்பின் அன்னையைக் காணுதல் வேண்டும். அன்னையை கண்ட பின் தான் ஈசனைக் காண வேண்டும். அப்படி நாம் ஈசனை முறையாக தரிசனம் செய்யும் போது அவன் நம்மேல் விதவிதமான பார்வைகளைச் செலுத்துகிறான். அவன் 'நேர் பார்வையால்' பார்க்கும்போது நம்மை பசுபதியாக நோக்குகிறான். 'கோணப்பார்வையில் (கோணத்தில் திரும்பும் போது நம்மைப் பார்ப்பது) யோகதத்துவங்களைக் காட்டி நம்மை இரட்சிக்கிறான். 'கண்ட பார்வையால்' (தெற்குப் பிராகாரம் திரும்பும் போது நம்மைப் பார்ப்பது) நம்மை பல கண்டங்களிலிருந்து காக்கிறான். இவை மட்டும் இல்லாது 'பின்புற தரிசனம்' முலமாக அறக்கடவுள் நம்மைத் தண்டிக்காமலிருக்க (தண்டீச்வர தரிசனம்) வகை செய்கிறான். இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். ஐயனே!... ஆனால் குரு முலமாக இவைகளைக் கற்றுணர்ந்து அனுபவிப்பதே உத்தமம்.. அதனால்தான் எல்லோருக்கும் குரு தேவையே, என்றார்கள் பெரியோர்கள்.''
போகர்: ''உத்தமரே, பொதுவாக பிரதோஷ வழிபாட்டை முதலில் எங்கு தொடங்க வேண்டும்?'.
அகத்தியர்: ''சீடனே! பிரதோஷ வழிபாட்டின் நோக்கமென்ன?
போகர்: ''பிரதோஷ விழாவின் நோக்கம்' அகந்தையை நீக்குவதே' என்று தாங்கள் முதலிலே கூறிவீர்கள் ஐயனே!
அகத்தியர்: ''அப்படியென்றால் பிரமனுடைய அகந்தையும் திருமாலுடைய அகந்தையும் அழிந்த இடம் எது?
போகர்: ''திருஅண்ணாமலை, ஜயனே...
அகத்தியர்:.'அப்படியென்றால் பிரதோஷ வழிபாட்டை நாம் முதலில் எங்கு தொடங்க வேண்டும்?
போகர்: 'திருஅண்ணாமலையில்தான் தொடங்க வேண்டும் ஜயனே!
அகத்தியர்: ''சரியாகச் சொன்னாய்.... திருஅண்ணாமலையில் முறையாக கிரிவலம் வந்து, உத்தம பிரதோஷலிங்க தரிசனம் கண்டு பிரதோஷ வழிபாட்டைத் துவங்குவதே உத்தமம், என்று மக்களுக்கு அறிவிப்பாய் போகா. மேலும் நாம் எத்தலத்தில் பிரதோஷ வழிபாட்டைச் செய்தாலும் முடிவில் எம்பெருமானாகிய நடராஜ மூர்த்தியை தரிசித்த பின்னரே பிரதோஷ வழிபாடு சம்பூர்ணமடைகிறது. இதுவும் மக்கள் அறிய வேண்டிய முக்கியமான இரகசியம் ஆகும்... ஆகவே பிரதோஷ வழிபாட்டை யாரொருவன் மேற்கூறியவாறு முறையாக செய்கிறானோ அவனே 'மைந்தன்' என்று அழைக்கப் படுகிறான்
போகர்: ''உத்தம குருவே! யாரை நாம் 'பாலன்' என்கிறோம்? யாரை நாம் 'பிள்ளை' என்றழைக்கிறோம்? யாரை நாம் 'மகன்' என்கிறோம்? யாரை நாம் 'மைந்தன்' என்றழைக்கிறோம்?
அகத்தியர்: ''ஜயனே! அறிவு வளராத பிராயத்தில் இருக்கும் ஒருவனை 'பாலன்' என்றார்கள் பெரியவர்கள்; அதே சமயத்தில் அறிவு முதிர்ந்த நிலையில் இருக்கும் ஒருவனையும் 'பாலன்' என்றே அவர்கள் அழைக்கிறார்கள. அடுத்து தாய் தந்தையுடன் எப்பொழுதும் சச்சரவுகளில் ஈடுபடும் ஒருவனை 'பிள்ளை' என்கிறார்கள் பெரியோர். அடுத்து, தாய் தந்தை தன் குடும்பம் இவர்களே தன், உலகம் என்று வாழும் ஒருவனை 'மகன்' என்று அழைகின்றனர் பெரியோர். எல்லோரிடத்திலும் மரியாதையாக இருந்து, எல்லோருக்கும் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்பவனையே 'மைந்தன்' என்றனர் பெரியோர். 'தனக்கென வாழாத மைந்தன்' தன்னை தெய்வத் திருப்பணிக்கு அர்ப்பணித்துக் கொள்ளும் போது 'மகானாக' மாறுகிறான். ஆனால் எல்லோரிடமும் சண்டை போட்டு தாய் தந்தையை அவமதித்து நடப்பவனை 'தறுதலை' என்றனர் பெரியோர்.. அதே போல தன்னை வளர்த்து ஆளாக்கிய குருவை, எவன் ஒருவன் ஏமாற்றுகிறானோ, அவனையே 'துரோகி' என்றழைத்தனர் பெரியோர், அறிந்தாயா போகா!... அதுசரி, 'பெரியவர்கள்' என்று யாரைச் சொல்கிறோம் என்று உனக்கு தெரியுமா?
போகர்: 'உத்தமரே 'உலகத்தில் நிலையானது எது' என்று ஆராயும் நற்புத்தி உடையவர்களையே 'பெரியவர்கள்' என்று நாம் அழைக்கிறோம், என்று முன்பே, தாங்கள் எனக்குச் சொல்லியுள்ளீர்கள்.
அகத்தியர்: ''நீ சொல்வது முற்றிலும் சரியே; இருப்பினும் மனிதனைப் பிடித்து ஆட்டுகின்ற பலவித மதங்களையே அடக்கியாளும் வல்லமை படைத்தவர்களையும் நாம் 'பெரியவர்கள்' என்றே அழைக்கிறோம்.
போகர்: ''குருவே, யானைக்கு ஒரே ஒரு முறைதான் மதம் பிடிக்கும், ஆனால் மனிதனையோ பலவித மதங்கள் பிடித்து ஆட்டுகின்றன என்கிறீர்கள். அப்படி மனிதனைத் தாக்கும் ''மதங்களைச்'' சற்று விளக்குவீர்களா?
அகத்தியர்: ''மக்களுக்கு உதவும் என்பதால், வீளக்கமாகக் கூறுகிறேன்... முதலில் மனிதனைத் தாக்குவது 'குலமதம்' என்று நீ அறிவாயாக...! தான் பிறந்த குலமே உயர்ந்தது என்றெண்ணி வெறி கொள்வதால் வரும் மதம் இது... ஆனால் மனிதனுக்கு 'குலமதம்' கூடாது . ' ஒன்றே குலம், ஒருவனே தேவன்' என்று அவன் எப்போது உணருகிறானோ, அன்று அவனைவிட்டு இம்மதம் அகலகிறது. அடுத்து மனிதனைப் பிடிப்பது 'சுகமதம்' என்பதாகும். இது சேருகின்ற நண்பர் கூட்டத்தினால் ஒருவனுக்கு வருகிறது... ஆகவே, கலியில் இம்மதம் தாக்காதிருக்க மனிதன 'சத்ஸங்கத்தை' நாடுவது ஒன்றே வழி, இதைத் தொடர்ந்து வருவது 'யௌவன மதம்', என்று நீ அறிவாயாக... இம்மதம் இளமையில் அறியாமையினால் மனிதனுக்கு வந்து விடுகிறது. இளமை என்பது ஈசனுக்குத் திருப்பணி செய்வதற்கேன்றே ஈசனால் மனிதனுக்கு அளிக்கப்பட்டது என்பதை நாம் ஒவ்வொருவரும் உணரவேண்டும். இதைத்தான் பெரியவர்களும் .'இளமையில் கல்' எனறார்கள். இளமையில் உள்ள பலத்தால் நீ ஆணவம் கொண்டால் முதுமையில் நீ அதற்காக வருந்தித் துயருறுவது நிச்சயம். 'யெளவன மதத்தை' விளக்கும் கதையொன்றை உனக்குக் கூறுகிறேன்; கேட்பாயாக...மல்லன் ஒருவன் பெரியவர் ஒருவரிடம் வந்தான்...தானே பெரிய மல்லன் என்றும், தன்னை மிஞ்ச யாராலும் முடியாது என்றும் ஆகவே, 'தானே பெரியவன் என்றும் அப்பெரியவரிடம் கூறித் தோள்களைத் தட்டியபடி குதித்துக் கொண்டிருந்தான்.. பெரியவரும் அவனை சாந்தப்படுத்தி அவனை அமரச்செய்து சிறிதுநரம் அவனுடன் அளவளாவியபின், அவனுக்கு விடைகொடுக்க, அவனும் எழுந்திருக்க முற்பட்டான்.... ஆனால் அவன் கால்கள் இரண்டும் மரத்துப் போயிருந்ததால் அவனாலே எழுந்திருக்க முடியவில்லை.! பெரியவரும், அவனைப் பார்த்து, 'நீ தான், பெரிய மல்லன் ஆயிற்றே! அபார சக்தியைப் பெற்றவாயிற்றே! ஆனால் இப்பொழுது உன்னால் எழுந்துகூட நிற்க முடியவில்லையே! என்று கேட்க மல்லனும் வெட்கி தலைகுனிந்து' அவரைப் பணிகிறான்.. பெரியவரும் 'மல்லனே, அனைத்துள்ளும் சக்தியாக வியாபித்திருப்பவன் சிவனே! ஆகவே, அவனின்றி ஓரணுவும் அசையாது! ஆகவே, உன் இளமையை ஈசன் திருப்பணிக்குப் பயன் படுத்துவாயாக...என்று அறிவுரை கூறி அவனை அனுப்பினார்...
போகர்: ''இளமை ஈசனுக்காக வந்தது என்கிறீர்கள்...அப்படியென்றால் தன் முதுமையில் மனிதன் செய்ய வேண்டிய திருப்பணி என்ன ஐயனே?
அகத்தியரர்: ''ஜயனே! இளமையில் செய்த திருப்பணிகளை நினைத்து நினைத்து ஆனந்திப்பதே முதுமையில் மனிதன் செய்யும் திருப்பணி என்பதை நீ உணர்வாயாக ..
போகர்: ''குருவே, யௌவன மதத்தைப்பற்றி அழகாகக் கூறினீர்கள்...அடுத்து மனிதனைப் பீடிக்கும் 'மதம்' யாது?
அகத்தியர்: ''யௌவன மதத்தைத் தொடர்வது, 'வித்யா மதம்' என்று நீ அறிவாயாக... வெறும் ஏட்டுக்கல்வியினால் வருவது இது... முன்பே,. 'கல்வி என்றால் என்ன? ' என்று விளக்கியுள்ளேன். உனக்கு கல்வியைப் பற்றித் தெய்வப் புலவர் என்ன சொல்கிறார், தெரியுமா போகா?...
'கற்றதனால் ஆய பயன் என்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்'
என்று கல்வியின் பயனை எவ்வளவு அழகாகச் சொல்லியுள்ளார் பார்த்தாயா..
போகர்: ''ஆம். ஜயனே! மாணிக்கவாசகப் பெருமான் கூட 'நூலுணர்வுணரா நுண்ணியோன் காணக... ' என்று ஒரே வரியில் ஏட்டுப்படிப்பின் நிலையை அழகாக வெளிப்படுத்தியுள்ளாரல்லவா?
அகத்தியர்: 'கல்வியின் நோக்கம், ஈசனை அறிவதே... இளமையின் நோக்கம் திருப்பணி செய்வதே... என்பதை மனிதன் என்று உணர்கிறானோ, அன்றுதான் அவனை விட்டு வித்யாமதமும், யௌவன மதமும் நீங்கும், என்பதை நீ அறிய வேண்டும். அடுத்து வருவது தனமதம் என்பதாகும். செல்வச்செருக்கினால் மனிதனுக்கு வரும் நோயே தனமதம் என்பது. 'தானமாய்த் தருவதற்கு வந்ததே தனம்' என்று மனிதன் உணர வேண்டும். ஆகவே பூர்வீக புண்ணியத்தால் வந்த தனத்தினால் நீ ஆணவம் கொள்ளாதே... 'செல்வமே, சிவபெருமானே' என்று நீ ஈசனை அன்புடன் வணங்கினால் தனமதம் உன்னை நாடி வராது என்பதை நீ உணர்வாய்.
''அடுத்து மனிதனைத் தாக்கும் மதம் 'சௌந்தர்ய மதம்' எனப்படுகிறது பேராபத்தை விளைவிக்கும் இம்மதம், அழகினால் வருவது என்பதை நீ உணரவேண்டும்... இதை விளக்க உனக்கு பாரத புராணத்தில் வரும் ஒரு நிகழ்ச்சியைக் கூறுகிறேன்… துரியோதனன் சபையில் அமர்ந்திருக்கிறான். பீஷ்மர் போன்ற உத்தமர்களும், சகுனி போன்ற துர்குணத்தாரும் அவனை சூழ்ந்து அமர்ந்திருக்கின
்றனர்...அப்போது துரியோதனனுடைய மனைவி பானுமதி மஹாராணி அவைக்குள் நுழைகிறாள்... அவளை கண்ட துரியோதனன் 'யாரோ வருகிறார்' என்றெண்ணி பயத்தில் எழுந்து நின்று விட்டான் ..''
போகர்: ''ஐயனே! தன் மனைவியையே, துரியோதனனால் தெரிந்துகொள்ள முடியவில்லையா? என்ன விந்தையிது?
அகத்தியர்: ''ஆம் ஐயனே! அவள் அன்று தன் புருவங்களைச் சிரைத்திருந்ததால், துரியோதனனுடைய கண்களுக்கு 'பூதம்' போலத் தெரிந்தாள்... 'பூதத்தைக் கண்டு பயந்ததால்தான் துரியோதனன் எழுந்து நின்றுவிட்டான்.... அருகிலிருந்த பீஷ்மரும்,' என்னே விதியின் கொடுமை! புருவத்தைச் சிரைத்தாள், கணவன் ஆயுளைக் குறைத்தாளே' என்று வருத்தப்படுகிறார். ஆகவே, அன்று அவள் புருவத்தைச் சிரைத்ததால்தான் துரியோதனன் போரில் தோல்வியுற்று மரணத்தைத் தழுவினான் என்கிறது இருடிகள் பாரதம்... அதுமட்டுமல்லாது புருவத்தைச் சிரைப்பவர்கள் மீது தீய ஆவிகள் சுலபமாக ஏறிக்கொள்ளும்..அவைகளின் தூண்டுதலால் மனிதன் செய்கின்ற காரியங்கள் அனைத்தும் எதிர்மாறாகப் போய்விடும்.. ஆகவே போகா.! இறைவன் அளித்த இயற்கையான அழகிற்கு மனிதன் மெருகூட்ட நினைக்கும் போது பல ஆபத்துகளைச் சந்திக்கவேண்டிய நிர்பந்தத்திற்க
ு ஆளாகி விடுகிறான் என்பதை நாமனைவரும் உணரவேண்டும்.
போகர்: ''உத்தமரே! தான் வகிக்கும் பதவியினால் ஒரு மனிதனுக்கு வரும் மதம் எது?
அகத்தியர்: ''ஜயனே, பதவியினால் வரும் மதம் 'ராஜ்ய மதம்' என்றறிவாயாக... கலியில் இம்மதத்தின் பிடியில் சிக்காத மனிதர்களே கிடையாது எனலாம். நாட்டை ஆளும் அரசர்கள்கூட பதவிமோகம் பிடித்து பதவியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக எதை வேண்டுமானாலும் செய்யத் துணிந்து விடுகிறார்கள்
போகர்: ''சத்குருவே! 'அரசாட்சி' என்றால் என்ன?
அகத்தியர்: ''அரனை சாட்சியாக வைத்து ஆளுகின்ற ஆட்சியே அரசாட்சி எனப்படுகிறது. ஆகவே கலியில் மனிதன் பதவிகளின் நிலையாமையை உணர்வானேயானால், அவனை ராஜ்யமதம் பீடிப்பதில்லை ..அடுத்து வருவதோ 'தபோ மதம்' என்றறிவாயாக.. தான் செய்த தவப்பயனால் ஒருவனுக்கு வரும் நோயே 'தபோ மகம்' என்று நீ அறியவேண்டும்...
போகர்: ''ஜயனே! இம்மதம் ஒருவனைத் தாக்காதிருக்க அவன் என்ன செய்யவேண்டும்?
அகத்தியர்: ''தான் செய்த தவத்தினால் பெற்ற பயனை ஒருவன் ஈசனுக்கே அர்ப்பணித்துவிட வேண்டும். தவப் பயனை ஈசனுக்கு அர்ப்பணிப்பதே உண்மையான தவம் என்று நீ உணர வேண்டும்
போகர்: ''சரியாகச் சொன்னீர்கள் ஐயனே! ஈசனை உணர வழிவகுக்காத தவங்களை இயற்றி என்ன பயன்?
அகத்தியர்: 'ஐயனே! இத்தகைய மதங்களை அடக்கியவர்களையே நாம் 'பெரியவர்கள்' என்கிறோம். இப்பொழுது புரிந்ததா போகா 'பெரியவர்கள்' என்றால் யாரென்று...?
போகர்: ''நன்கு புரிந்தது மகாதேவா... ஆனால் அத்தகைய உத்தமர்களை நாம் வணங்கும்போது, 'என்னை வணங்காதே இறைவனை வணங்கு' என்று ஏன் சொல்கிறார்கள்?
அகத்தியர்: ''நன்றாகக் கேட்டாய்... அப்பனே; உன் கேள்விக்கு நம் பரம்பரையைச் சேர்ந்த உத்தமர், அஸ்தீக சித்தரேவிடையளிக்கிறார்... 'நாமெல்லாம் இறைவனை வணங்கும் போது சிரம்மேல் கரம் குவித்து வணங்குகிறோம். ஈசனோ கரம் குவித்து ஆசி வழங்குகிறான். ஆகவே இறைவன் கரம் குவிக்க, நாம் சிரம்மேல் கரங் குவிக்கிறோம். நாம் கரம் குவித்து ஆசி வழங்க ஆரம்பித்தால் ஞானகர்வம் வந்துவிடும். ஆகவே, பெரியவர்கள், தங்களுக்கு ஞான கர்வம் வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் தன்னை வணங்குபவர்களை இறைவனை வணங்கச் சொல்கிறார்கள்' என்கிறார் அஸ்தீகர்..புரிந்ததா?
போகர்: ''ஆஹா' என்ன அருமையான விளக்கம்...ஐயனே! மதங்களை அடக்கிய மகான்களே கொண்டாடிய உத்தமப் பிரதோஷ வழிபாட்டைப் பற்றி மேலும் தாங்கள் கூறுவதைக் கேட்க ஆவலாக இருக்கின்றேன்...
#பிரதோஷ மலர்கள் :-
***********************
அகத்தியர்: ''அன்பனே.! மஹாபிரதோஷ தினங்களில் ஈசனை அலங்கரிக்கும் முறையைப் பற்றி நான், உனக்கு விரிவாகக் கூறுகிறேன். மக்களுக்கு எடுத்துரைப்பாயாக...
சித்தரும் ஞானியரும் ஈசனை 'அலங்காரப்பிரியன்' என்கிறார்கள்.. ''அலங்கார ரகசிய தீபிகா' என்று நான் எழுதியுள்ள கிரந்தத்தில் எப்படியெல்லாம் ஈசனை அலங்கரித்து ஆனந்திக்க வேண்டும் என்று விரிவாகச் சொல்லியுள்ளேன். இருப்பினும், மஹாப்பிரதோஷ தினங்களில் ஈசனை அலங்கரிக்க வேண்டிய முறைகளை பற்றி, மக்களுக்காக இங்கு விவரிக்கிறேன்..
ஏகாட்சரப் பிரதோஷ தினத்தன்று நீலகந்தப் புஷ்பத்துடன் முல்லை சேர்த்து ஈசனை அலங்கரிக்க வேண்டும். ஈசனை இவ்வாறு அலங்கரித்து வலம்வரச் செய்யும்போது தரிசிப்போர்க்கு ஆயுள் வளரும்... அடுத்து அர்த்தநாரி பிரதோஷ தினங்களில் நீலகந்தப் புஷ்பத்துடன், சிவப்பு அரளியையும். மல்லிகைப் பூவையும் சேர்த்து ஈசனை அலங்கரிக்க வேண்டும்.
இவ்வலங்காரத்தில் ஈசனை தரிசிப்பவர்களுக்கு மனக்கவலைகள் தீர்வதோடு. பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர்கின்றன. அடுத்து, திரிகரணப் பிரதோஷ தினங்களில் ஈசனை செந்தாமரைப் பூவினால் அலங்கரித்து வழிபடுவதால் காக்கும் கடவுளாகிய நாராயணனுடைய அருள் பூரணமாய்க்கிட்டும். அடுத்து பிரம்மசிரஸ் பிரதோஷ தினங்களில் நீலகந்த புஷ்பத்துடன் வெண்தாமரை மலர்களைச் சேர்த்து ஈசனை அலங்கரித்தல் அவசியம், அவ்வாறு அலங்கரித்து ஈசனை வணங்குவதால் திருமணத் தடங்கல்கள் நீங்குவதோடு காணாமல் போனவர் திரும்புவர்.
அடுத்து அட்சரப் பிரதோஷ தினங்களில் நீலகந்த மலர்களுடன் பிச்சிப்பூ சேர்த்து ஈசனை அலங்கரிக்க வேண்டும். அவ்வாறு ஈசனை அலங்கரித்து ஈசனை தரிசிப்பதால் செல்வங்கள் சேர்வதோடு இழந்த செல்வமும் திரும்பி வரும். அடுத்து ஸ்கந்தப் பிரதோஷ தினங்களில் நீலகந்த மலர்களுடன் சம்பங்கி மலர்களை சேர்த்து ஈசனை அலங்கரிக்க வேண்டும், அப்படிச்செய்து ஈசனை தரிசிப்பவர்களுக்கு எத்தகைய கொடிய வியாதியும் தீர்ந்துவிடும்.
அடுத்து, சட்ஜப் பிரபா பிரதோஷ தினங்களில் நீலகந்த மலர்களுடன் செம்பருத்திப் பூக்களைச் சேர்த்து ஈசனை அலங்கரிக்க வேண்டும். இவ்வாறு அலங்கரித்து ஈசனை தரிசிப்பதால் உண்மையான காதல் உத்தமமாய் திருமணத்தில் முடிகிறது. அடுத்து திக்கு பிரதோஷ தினங்களில் நீலகந்த மலர்களுடன் குண்டு மல்லி மலர்களைச் சேர்த்து ஈசனை அலங்கரித்து தரிசிப்பவர்களுக்கு உயர்பதவி வீடு தேடி வருகிறது.
அடுத்து நவநாத பிரதோஷ தினங்களில் நீலகந்த மலர்களுடன் சாமந்தி மலர்களைச் சோத்து, ஈசனை அலங்கரிக்க வேண்டும். அவ்வாறு அலங்கரித்து ஈசனைத் தரிசிப்பதால் பித்ரு சாபங்கள் நீங்கி இறையருள் கூடுகிறது.
அடுத்து முடிவாக துத்தப் பிரதோஷ தினங்களில் நீலகந்த மலர்களுடன் மனோரஞ்சித மலர்களையும் சேர்த்து ஈசனை அலங்கரிக்க வேண்டும் இவ்வாறு அலங்கரித்து ஈசனைக் காணுவதால் சகல சந்தானங்களும் தப்பாமல் கிட்டும். ஐயனே! பிரதோஷ விழாக்களில் இவ்வாறு பலவிதங்களில் .ஈசனை அலங்கரித்து வலம் வரச் செய்வதுக உத்தமம் என்றாலும், ஈசனுக்கு மையிட்டு. அலங்கரித்து பார்ப்பதும் உத்தம பலன்களைத் தரவல்லது.#ஈசனுக்கு மை இட்டு பாருங்களேன் :-
******************************************
போகர்: ''ஜயனே! முதலில் ஈசனுக்கு மலரிட்டுப் பார்க்கச் சொன்னீர்கள், அடுத்து மையிட்டுப் பார்க்கச் சொன்னீர்கள்! ஈசனுக்கு மையிட்டுப் பார்ப்பது என்னென்ன பலன்களைத் தரவல்லது என்பதைத் தாங்கள்தான் கூறவேண்டும்...
அகத்தியர்: ''அன்பனே! பிரதோஷ விழாவில் ஈசனுடைய நுனி நாடியில் மையிட்டு, அக்காட்சியை. காண்பவர்க்கு ஆறாண்டு காலம் போஜனத்திற்கு வழியுண்டு. ஈசனுடைய குழிகன்னத்தில் மையிட்டு அக்காட்சி காண்போர்க்கு இல்லை இனிப் பிறவியே...
''ஈசனுடைய புருவத்தில் மைதீட்டி அக்காட்சி கண்டவனுக்கு மனைவியினால் துன்பம் இனி இல்லையே....
போகர்: ''குருநாதா! பிரதோஷ விழாவில் ஈசனை அலங்கரித்து அடியார்க்கு அருள் பெற்றுத் தரும் 'மை' எப்படிப் பிறக்கிறது?
அகத்தியர்: ''ஈசனுக்கு இடப்படும் 'மை' உருவாகும் விதத்தைத்தானே கேட்கிறாய்... சொல்கிறேன் கேள், பொன்னாங்கண்ணி கீரையை எடுத்து, அதைச் சுத்தமாகக் கழுவி, வெட்டிவேருடன் சேர்த்து இடித்துச் சாறெடுக்க வேண்டும். பின் அதை தேங்காய் எண்ணையுடன் சேர்த்து, சிறிது நீர் விட்டு வாணலியில் நன்கு காய்ச்ச வேண்டும். தைலப்பதம் வந்த உடன் அந்தக் கலவையை ஒரு துணியிலிட்டு பிழிந்து எடுக்க, என்னை போன்ற திரவம் வரும். அத்திரவத்தை ஒர் அகல் விளக்கிலிட்டு, அதில் தாமரைத் திரியிட்டு தீபமேற்ற வேண்டும். திரி எரியும் போது அதில் பசுவெண்ணை தடவப் பட்ட ஒரு சுத்தமான தேங்காய் ஒட்டை தலைகீழாகப் பிடிக்கவேண்டும். இப்பொழுது தேங்காய் ஓட்டில் புகை படிய ஆரம்பிக்கும். தீபம் முழுவதுமாக எரிந்து அணைந்தவுடன், ஓட்டில் படிந்திருக்கும் கரிப்புகையை வழித்து, ஒரு சிறிய சந்தனப் பெட்டியில் சேகரித்து, அதை மலர்களால் அலங்கரித்து 'சிவபஞ்சாட்சரம்' முறையாக ஒதி அதற்கு உருவேற்றி வைத்துக்கொள்ள வேண்டும். இப்படித் தயாரிக்கப்பட்ட 'மை' யே ஈசனை அலங்கரிக்கும் தகுதியை பெறுகிறது. ''
போகர்: ''உத்தமரே! உத்தமப் பிரதோஷ வழிபாட்டினால் மக்கள் அடையும் இன்பத்திற்கு எல்லையுமுண்டோ?
அகத்தியர்: ''எல்லையில்லா இன்பத்தையும், அருளையும் தருவதால்தானே பிரதோஷ வழிபாட்டைத் தெய்வங்களே அனுஷ்டித்தனர்.
போகர்: ''ஐயனே! ஒவ்வொரு கிழமையிலும் நாம் செய்யும் பிரதோஷ வழிபாட்டின் மகிமையைத் தாங்கள் கூற வேண்டும்
அகத்தியர்: ''அன்பனே! ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் செய்யும் பிரதோஷ வழிபாடு அவர்களுக்கு சுப மங்கலத்தை தருகிறது. திங்கட்கிழமைகளில் மக்கள் செய்யும் பிரதோஷ வழிபாடு அவர்களுடைய மனங்களில் நல்லெண்ணங்களை உருவாக்கும் நல் அருளை தருகிறது. செவ்வாய்கிழமைகளில் மக்கள் பிரதோஷ வழிபாட்டை அனுஷ்டித்தால், அவர்களுடைய இல்லங்களில் இருக்கும் பஞ்சம், பட்டினி அகலும். புதன்கிழமைகளில் செய்யும் பிரதோஷ வழிபாட்டினால் தந்தை மகனுக்கு கருமம் செய்யாத நிலை கிட்டும்.
வியாழக்கிழமைகளில் செய்யும் பிரதோஷ வழிபாட்டினால், ஆண் சந்தான பாக்கியம் கிட்டும். வெள்ளிக்கிழமைகளில் பிரதோஷ விழாவைக் கொண்டாடுவதால் எதிர்ப்புகள் நீங்குகின்றன. சனிக்கிழமைகளில் நாம் அனுஷ்டிக்கும் மகாப் பிரதோஷ வழிபாட்டினால் நாம் அடையும் பலன்களை முன்பே உனக்கு நான் கூறிவிட்டேன். இருப்பினும் ஸ்திரவார பிரதோஷ வழிபாடு, பதவி உயர்வைத் தருவதோடு மாயைகளில் மாட்டிக்கொண்டு அலைக்கழியாத நிலையையும் அருளுகிறது....

No comments:
Post a Comment