Sunday, 30 December 2018

அகத்தியர் ஜீவ நாடி வழியே குரு பூஜையை பற்றி அருளுரை


இன்று 30-டிசம்பர்-2018 அன்று பொகளூர் அகத்தியர் ஜீவ நாடியில் குருஜி இறைசித்தன் அவர்கள் ஜீவ நாடியை பிரித்த போது, அதில் அகத்தியர் 26-12-18 அன்று நடந்த குரு பூஜையை பற்றி கீழ் வருமாறு அருள் வாக்கு உரைத்துள்ளார்.



குரு பூஜையில் எம் மழலைகள் ஆற்றிய பணிகளை கண்டு யாம் மிக மிக மிக மனமகிழ்ந்தோம்

எல்லா மழழைகளுக்கும் தலங்களுக்கு சென்று வந்த பின் தான் யாம் தோன்றி ஆசி வழங்கியதை உரைப்பேன், ஆனால் இப்பீடத்து குரு பூசை தனிலே யாம் தோன்றி ஆசி வழங்குவோம் என்று முன்பே உரைத்தோமே, பூசை தனிலே நன்கு கவனம் செய்து நோக்கினாயா

யாகத்தில் யாம் தோன்றி ஆசிகள் வழங்கினோம்

யாகம் தனிலே அரூபமாக தோன்றி காட்சி அளித்தோம்

மழழைகள் அழைக்கவே அங்கே அக்கணமே யாம் வந்தோம். யாக ஜ்வாலையிலே நிலை கொண்டு நின்றோமே

வயோதிகனாக பின் நின்று எல்லோரையும் ஆசீர்வதித்தேன்

அபிஷேக பூஜை தனிலே யாம் வந்து ஒளியாக காட்சி தந்தோம்

அறிவாய் நீ

சங்கு நாதத்தை யாம் கேட்டு மனம் நெகிழ்ந்தோம்

மழழைகள் தீர்க்க ஆயுளை பெறுவார்கள்

யாம் துணை இருந்து அருள் புரிவோம்

ஆசிரமம் இடம் மாற்றம் பெரும்

த்யானம் செய் தானம் செய்

ஆசிகள் முற்றே !!!