Sunday, 6 June 2021

கேதர்நாத் சிவன் கோவிலுக்குப் பின்புறம் உள்ள இந்தப் பெரிய கல்

 அவனின்றி  ஓர் அணுவும் அசையாது


கீழ்கண்ட படத்தில் காண்பது உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் சிவன் கோவில்


கேதர்நாத் சிவன் கோவிலுக்குப் பின்புறம் உள்ள இந்தப் பெரிய கல்

2013லிருந்து தான் காணப்படுகிறது. இது அதற்கு முன் இந்த கல் அங்கு இல்லை


2013ல் அங்கு மாபெரும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு பேரிடர் பேரழிவை உண்டாக்கியது


கடுமையான வெள்ளப்பெருக்கில் கேதர்நாத் கோவிலும் அடித்துச் செல்லப்படும் நிலை ஏற்பட்டது


மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு மண்ணும் கல்லும் மழைப் போல கீழே கொட்டியது


அப்போது,படத்தில் காணப்படும் இந்தக் கல் மலையிலிருந்து 

உருண்டோடி வந்து

கோவிலுக்குப் பின்புறம்

நின்று கொண்டு

வெள்ளத்திலிருந்து கோவிலைக் பாது காத்தது.இன்று வரை பாது காத்து வருகிறது.


அ(சி)வனின்றி ஓர் அணுவும் அசையாது

சிவ சிவ சிவ சிவ சிவ சிவ🙏🙏🙏




No comments:

Post a Comment