Tuesday 5 November 2019

சிவானந்த பரம்ஹமசர் அமுத மொழி - இடத்தில் இருந்து குழலாய் இருக்கின்ற மூக்கினுடைய உதவியால் தெளிவாய் சப்தம் உண்டாகின்றது

*🌷சித்தவேதம்🌷*
*🌛 சப்தம் 🌞* 
*************************
*"குதம்" என்பது "கோ" அதாவது சப்தத்தினைத் தானம் செய்வது என்று சொல்வது.*

*"கோ"என்றால் சப்தம்.*

அந்த சப்தம் உண்டாவதற்கு முன் சொன்ன அண்ணாக்கின் வழியாய் இரண்டு துவாரங்கள் மேல் பாகத்தில் இருப்பதுண்டு.

அந்த துவாரங்களும் *மூக்கினுடைய துவாரங்களும் தம்மில் சேருவது புருவ மத்தியத்திற்குக் கீழேயுள்ள இடத்திலாகும்.*

*அங்கிருந்தாகும் ஆகாய அம்சமாகிய சப்தம் உண்டாவது.*

*அதற்கு உதாரணம்:-*

மூக்கில்லாதவர்க்குத் தெளிவாகப் பேசுவதற்கு முடிவதில்லை.

காரணம், முன் சொன்ன துவாரங்களில் இருந்து சப்தம் உண்டாகும் பொழுது வாயு தடையில்லாமல் ஒன்றாய் வெளியினுள்ளில் போகின்றது.

அந்த மூக்கு இருக்கும் பொழுது சப்தமாகிய வாயுவிற்குத் தடை உண்டாகி அடங்கி தெளிவாய்ப் பேசுகின்றனர்.

அதெப்படி என்றால் கிராமபோன் என்கிற பெட்டி பாட்டுக்களை நீர் கேட்டிருக்கிறீர் அல்லவா?

அந்த கிராமபோனினுடைய சப்தம் உண்டாகிறது பெட்டியினுடைய மேலே பாட்டுக்கள் அடங்கிய ஒரு பிளேட் அதாவது தட்டு வைத்து அதில் சப்தம் உண்டாகிற சவுண்ட் பாக்ஸ் அதாவது 

ஒலிக் கருவியில் ஊசி பிடிப்பித்து,அப்பெட்டிக்குச்  சாவி கொடுத்து, பிளேட் அதாவது தட்டு சுற்றும் பொழுது முன் சொன்ன ஊசியை பிளேட்டின் மேல் தொட்டு வைத்த பொழுது பிளேட் சுற்றுவதால் சப்தம் உண்டாகின்றது.

ஆனால் அதிலிருந்து உண்டாகிற பாட்டு தெளிவாய் கேட்பதில்லை.

காரணம், அந்த சப்தம் உண்டாவதான இடத்தில் ஒரு குழல் அதாவது ஹாரன் வைக்க வேண்டியது,வைக்காததலாகும்.

அந்த குழல் வைக்காததால் சப்தம் உற்பத்தியாகும் இடத்தில் அடக்கம் இல்லாமல் அதிலிருந்து உண்டாகிற வாயு வெளியில் பரவிப் போகிறது.

எப்பொழுது அக்குழல் வைக்கிறோமோ, அப்பொழுது மேற் சொல்லிய வாயு அக்குழலின் வழியாய் வெளியினுள் வருகின்றது.

அச்சமயத்தில் அதிலிருந்து உண்டாகிற பாட்டுக்கள் சிறு குழந்தைகளுக்கும் தெரிந்து கொள்ளத் தக்க விதத்தில் தெளிவாய் கேட்கின்றன.

*இப்படி முன்சொன்ன புருவமத்தியின் கீழே சப்தம் உண்டாகின்ற  இடத்தில் இருந்து குழலாய் இருக்கின்ற மூக்கினுடைய உதவியால் தெளிவாய் சப்தம் உண்டாகின்றது
.*

*அதனால் அண்ணாக்கின் வழியாக மேல் பாகமாய் இருக்கிற இரண்டு துவாரங்களுக்காகும் குதம் என்று சொல்வது.*

*உபதேசித்தவர்*
*சுவாமி சிவானந்த பரமஹம்சர்*