அகத்தியர் எமக்கு உரைத்த வாக்கு
ஆசான் - குருஜி இறை சித்தர்
இடம் - அகத்தியர் ஜீவா அருள் நாடி பீடம் , பொகளூர், கோவை மாவட்டம்
நாடி கேட்பவர் - தி. இரா. சந்தானம்
தேதி - 07.05.2020 மாலை
6:30 மணி, சித்ரா பௌர்ணமி யாகம் முடிந்து கேட்டது
அகத்தியர் வாக்கு
அருவாய் உருவாய் திருவாய் போற்றி
திருவாய் மலரடி தருவாய் போற்றி
அருவாய் குகனே ஒளிர்வாய் போற்றி
காவாய் கனக திரளே போற்றி
என் கயிலை மலையானே
நின் திருப்பாதங்கள் போற்றி போற்றி போற்றி
சிரம் தாழ்ந்து வணங்கும் அடியவரின் தேவ தேவனே போற்றி
சிரம் தாழ்ந்து அகத்தியன் யானே அருள் தனை உரைப்பேன்
கேளடா என் மகனே
பொது வாக்கு தனை அன்றுரைத்தேன் உமக்கு
அறியவில்லையா என் மகனே
வெள்ளை தோல் போற்றிய
துர் எண்ணம் படைத்த
மானிட பிண்டத்தால் வந்த வினையே அய்யா
சித்திரை முதல் நாள் சீர் பெரும் என்று முன்னுரைத்தேன்
சித்திரை முடியும் தருவாயில் வைகாசி எட்டினில் மாற்றம் ஒன்று உன்டப்பா
மான் மகனே , பெரும் இன்னல்களுக்கு நேராகுமே இப்பத்து தினங்களில் மீண்டும் வருமப்பா
இது அதிகார வர்க்கத்தால் வந்த வினையப்பா
மாறும் மகனே மனம் தளராதே
என் மகனே யாம் உரைத்தோம் உமக்கு
வாழ்வில் சீர் பெறுவாய்
உன் மனைதனிலே சுபநிகழ்வு ஒன்று அரங்கேறும் என்று அன்றுரைத்தேன்
சுப நிகழ்வு அரங்கேறியதே
மங்கையவள் பூப்புற்றாள் பூமகனே
மழலைக்கு மலை நெல்லி சாறெடுத்து உள் பருக சொல்லய்யா
அவள் தேகமது சீர் பெரும்
தேகத்தில் இருக்கும் இன்னலது விட்டொழியும்
ஆலய பணி தனை செய்வாய் யாம் அறிவோம்
இன்னல்கள் தீரூமப்பா
துர் எண்ணம் கொண்டவனெல்லாம் இடம் விட்டு இடம் பெயர்வான்
விதி மாற்றம் பெறுமே
வேல் பூசை அதை செய்து வா
யாம் உன் மனை தனிலே நிலை கொள்வோம்
திங்களுக்கு ஒரு முறை எலுமிச்சம் கனியினால் ஆனா ரசமதை
எனக்கு அபிஷேகம் செய், உமையவளுக்கும்
பின்பு
அருகம்புல் தனை பொடியிட்டு
அப்பொடிதனிலே அபிஷேகம் செய்யப்பா
யாம் மனம் மகிழ்வோம்
உன் மனை தனிலே சீர் பெரும் அப்பா
வாழ்வு நிலைபெறும் என் மகனே தயங்காதே
இத் துர்ப்பீடை அது விட்டொழியும்
மக்களும் செழிப்படைவானே
விவசாயம் சீர் பெரும் அப்பா
வாகனத்தில் சில கோளாறுகள் இடர்படுமே
கண்டம் விட்டு கண்டம் இருக்கும் அரசியல் துறை சார்ந்த பெரும் தலை ஒன்று தலை சாயுமே
பின்பு அங்கிருக்கும் மக்களெல்லாம் அவதிக்கு ஆளாவார்கள்
யாம் காத்து நிற்போம்
உனக்கு அன்றுரைத்தேன்
மண்ணிலிருக்கும் சித்தனெல்லாம்
விண்ணை நோக்கி வருவானே
யாம் நேசித்த தமிழ் மண்ணை யாம் காப்போம்
யாம் பொதிகை மலை உச்சியில் இருந்து தமிழ் மண்ணை உற்று நோக்கி கொண்டு இருக்கிறோம்
யாம் நிலை பெற பெறுவோம்
ஒளி தனை மனை தனில் ஏற்று
ஓம்காரமதை மனதிலே நிறுத்து
மலை போல் இருக்கும் துயரெல்லாம் பனி போல் விட்டு விலகுமே
கொண்டவள் அவள் மனச்சலனம் காண்கிறாள்
மனச்சலனம் காணாதே என் மகளே
உமை யாம் காப்போம்
அன்றுரைத்தோமே உனக்கு
அரசு துறையில் உயர் நிலை அடைவாய் என்று
அடைவாய் என் மகளே
மாற்றம் பெரும் வாழ்வு தனை
ஈன்ற மழலைகள் வாழ்வு சீராகும்
முற்றே
Nadi readings for self and for common purpose
Skandhar nadi
Ambal Nadi
Sukar maharishi
Own writings, experiences
என் இது வைகாசி யில்
ReplyDeleteமீண்டும் வைரஸ் தொடருமா ??? என் இந்த சோதனை... அகஸ்தியர் தான் இந்த வைரஸ்களை ஆட்கொள்ள வேண்டும்...
மான் மகனே , பெரும் இன்னல்களுக்கு நேராகுமே இப்பத்து தினங்களில் மீண்டும் வருமப்பா
Deleteஇது அதிகார வர்க்கத்தால் வந்த வினையப்பா
மாறும் மகனே மனம் தளராதே