எனது சொந்த
அனுபவம் - தி. இரா. சந்தானம், கோவை
- சளித்தொல்லை
நான் வெகு நாட்களாக வாசி யோகம் பயின்று வருகிறேன்.
வாசி யோகத்தில் சில சமயம் உணவு விசயத்தில் சிறிது கவனமாக இருக்க வேண்டும், மேலும் பயிற்சி
தீவிரமாக இருக்கும் போது, மேலும் அதிக கவனமாக இருக்க வேண்டும்.
ஒரு நிலையில் பயிற்சி தீவிரம் பெற்ற போது மிகுந்த
தாகம் ஏற்பட்டு நிறைய குளிர்ந்த நீர், இளநீர், ஐஸ் க்ரீம் , கோகோ கோலா போன்றவற்றை குடித்து
விட்டேன். பின்னர் ஓரிரு நாட்களில் சளி பிடித்தது. நானும் சாதாரணமாக விட்டு விட்டேன்.
ஆனால் அது மிகவும் தீவிரமடைந்து இரவு உறங்க முடியாமல் மூச்சு சரியாக விட முடியாமல்
ஒரு வகையான ஆஸ்த்துமா போல ஆகி விட்டது . நானும் அதனை வாசி யோகத்தின் மூலமே சரி செய்ய
பெரு முயற்சி செய்தேன்.
ஆனால் வாசி
யோகம் எனக்கு காய்ச்சல் வராமல் தடுத்ததே ஒழிய, சளி தீரவே இல்லை. நானும் விடாமல் சளியை
சிந்தி கொன்டே இருந்தேன். சுமார் 45 நாட்கள்
தொடர்ந்து சளியால் அவதிப்பட்டுக்கொண்டு இருந்தேன் . அப்போது அகத்தியர் ஜீவ நாடி பீடத்திற்கு
சென்று குப்பை சித்தர் ஜீவ சமாதி உள்ள இடத்தை
சுத்தம் செய்து வழிபாடு செய்தேன். அப்போது இறை சித்தன் செந்தில் அய்யா அவர்கள் ஒரு
சிறிய டப்பாவில் ஒரு பொடியை எடுத்து வந்து ஒரே ஒரு விள்ளல் (இரு விரல்களில் எடுக்கும் அளவு ) எடுத்து சாப்பிட
கொடுத்தார். அதனை உண்ட உடனேயே கசப்பு தலைக்கு ஏறியது. சுமார் பாத்து நிமிடத்தில் சுவாச
ஓட்டம் சீராகியது. பின்னர் இன்று சுமார் 3 வாரம் ஆகி விட்டது எந்த ஒரு சளியும் இருக்கும்
அறிகுறியே இல்லை. ஒரு விள்ளல் மூலிகை பொடிக்கு இவ்வளவு வீரியமா என்று வியந்து போனேன்.
அந்த பொடியை உண்ட பின் மூன்று நாட்களுக்கு உடலில் பெரும் சூடு இருந்தது. அதுவே அனைத்து
சளியையும் கரைத்தது.
எளிமையான மருத்துவம் தான். ஆனால் நீண்ட நாள் பிரச்சனைகள்
நிமிடத்தில் இருக்கும் இடம் தெரியாமல் ஓடி விடுகின்றன. இந்த மருந்துகளெல்லாம் அகத்தியர்
அய்யா அவர்கள் மருத்துவ நாடியில் காலை 3:30 மணி பிரம்ம முகூர்த்தத்தில் நாடியில் கூறி
உள்ளவை ஆகும். மூலிகைகள் இருந்தாலும் அவற்றை கண்டு அறிந்து சாப நிவர்த்தி செய்து, முறைப்படி
தயாரித்து வழங்க ஆள் வேண்டுமே.
எல்லாம் அவன் செயல்.
அகத்தியர் ஆசி எல்லாமே ராசி !! அகத்தியரை நம்பு,
அவர் கொடுப்பார் தெம்பு !!!
சிவாய நம, குருவே போற்றி.