Saturday 28 March 2020

ராமாயணம்

நேற்று சுந்தர காண்டம் கதை காலக்ஷேபம் zoom ஆப் மூலம் நேரலையில் கேட்டு கொண்டு இருந்தேன். முதல் 15 நிமிடம் கேட்டு முடித்தவுடன் என்னை அறியாமல் உறங்கு விட்டேன். பின் 10 நிமிடம் கழித்து உறங்கி விட்டதற்காக வெட்கப்பட்டேன். ஆனால்.....

உறக்கத்தில் கிடைத்த விளக்கம் கண் முன்னே விரிந்தது
எதற்கு ராமாயணம் கேட்க வேண்டும். என்ன பிரயோசனம்
அடேய், அதன் உள் அர்த்தத்தை புரிந்து கொள்ளுடா
ராமன் தான் பரம்பொருள்
அயோத்தியை தான் சத்திய உலகம்
சீதை தான் நீ, பரம்பொருளுடனேயே இணைந்து வாழ்ந்தவன்
ஒரு கால கட்டத்தில் அயோத்தியா வை விட்டு விலகி
கனகம் செல்ல நேர்ந்தது. அது தான் இந்த உலகம்
நீ தான் பத்தினி, உன் பதி பரம்பொருள். அவன் உன் உள்ளேயே கலந்து இருக்கான். எங்கே இருக்கான்? இந்த உலகம் என்னும் கானகத்துக்கு உள்ளே பரம்பொருளை சுமந்து கொண்டு  நீ.
பின் சீதை தீய சக்தியால் ராமனிடம் இருந்து பிரிக்கப்பட்டான்
நீயும் உன் ஆசை கோபம் அஹங்காரதால் பரம்பொருளிடம் இருந்து விலகி நின்றாய்
சீதை மாயை இல் மாய மானில் சிக்குண்டு தன் தகுதியை குறைத்து கொண்டாள்
நீயும் அவ்வாறே மனதில் அழுக்கு குணங்கள் கொண்டு உன் தகுதியை குறைத்து கொண்டாய்.
ராவணன் கவர்ந்து சென்றான் சீதையை
உன்னை உன் கர்ம வினைகள் கவர்ந்து உன்னை ஆட்டி படைக்கிறது.
சீதை சிறைப்பட்டது அசோக வனத்தில்
நீ சிறைப்பட்டது இந்த உடலில் இந்த உலகில் ஜனன மரண நிலையில்
ராமன் சீதையை கை விட்டானா ... இல்லையே
இறைவனும் உன்னை கை விடவில்லை
உனக்கு கஷ்டங்கள் கொடுக்கிறான். அந்த அம்புகள் உனக்கு இல்லை அவை உன் தீய குணங்களாகிய இராவணனுக்கு.
திருந்தாத ராவணனுக்கு இறைவன் எவ்வளவு முறை எச்சரிக்கை கொடுத்து வாய்ப்பு அளிக்கிறான். அவை யாவுமே உனது பிறவிகள்.
ஒவ்வொரு பிறவியிலும் இறைவன் வாய்ப்பு அளிக்கிறான் நீ திருந்துவதற்கு...
இறுதியில் ராவனன் மரணம் அடைகிறான் ராம பானத்தில். உன் அகங்காரம் உன் முக்தியில் மரணம் அடைகிறது.
சீதை ராமனுடன் சேர்கிறாள் மீண்டும்
நீ இறைவனுடன் மீண்டும் ஒன்றாகி நிற்கிறாய், தீய குணங்கள் வீழ்ந்த பின்பு
சீதைக்கு அக்கினி பிரவேசம் செய்து சோதனை செய்தார் ராமர்
அதே போல இறைவனும் உம்மை சோதித்து பார்ப்பார், நீ எவ்விதம் நடந்து கொள்கிறாய் என்று.
ராம தூதன் அனுமன், சதா ராம நாமம் ஜெபிப்பவர்
இந்த உலகில் உன் குரு தான் அனுமன், பரம்பொருளின் தூதுவன்
சதா பரம்பொருளுடன் இணைந்து இருக்கும் பாலமே உன் குரு அனுமன்
உன் குரு அகத்தியன் ஒரு சிரஞ்சீவி... அவன் உன்னை கரை சேர்ப்பான்
ராம ராஜ்ஜியம் தான் சத்திய உலகம்
ராமன் பாலம் அமைத்து இலங்கை அடைந்தான்
அதே போல இறைவனும் சத்திய உலகத்தில் இருந்து உன் மேல் இரக்கப்பட்டு இவ்வுலகத்துள் இறங்கி வந்து இருக்கிறான்.
ராமன் உனை தேடி வந்து கொண்டு இருக்கிறான் நீ கவலைப்படாதே என்று கூறுவதய சுந்தர காண்டம்
ஆகவே சுந்தர காண்டம் படித்தால் இறைவன் வருவார் அனுமன் வருவார். இந்த உலகத்தில் மாய சக்திகள் அசோக வனத்தில் சீதையை சூழ்ந்து இருக்கும்படி உன்னை சூழ்ந்து இருக்க, நீ தைரியமாக இரு.
ராவணன் என்ற எமன் உனை நெருங்குமுன் ராமன் என்ற இறைவன் உனை  அந்த காப்பார். எனவே  நீ சீதையாக மாறு. மனதை தூய்மையாக வை. ராமன் வரும் வரை. அதன் பின் ராமன் பொறுப்பில் உண்னை ஒப்படை.