Sunday, 3 November 2019

எமக்களிப்பட்ட தனிப்பட்ட அருளுரை - 02/11/2019


அகத்தியர்  ஜீவ அருள் வாக்கு

அருள் பெற்றவர் - தி. இரா . சந்தானம்
அருள் உரைத்தவர் - குருஜி இறைசித்தர் , பொகளூர் அகத்தியர் ஜீவ நாடி பீடம்

தேதி - 02/11/2019

கடவுள் வாழ்த்து

அருவாய் உருவாய் வருவாய் போற்றி
வருவாய் அருளை தருவாய் போற்றி
நீலகண்ட நிழலாய் நின்றாய் போற்றி
எல்லாம் எங்கும் நிறைந்தாய் போற்றி
காவாய் கனகத்திரளே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி போற்றி

சிரம் தாழ்ந்து வணங்கும் அடியாரின் தேவ தேவனுமே போற்றி
சிரம் தாழ்ந்து பொதிகை வாழ் அகத்தியன் யானே என் மழலைக்கு அருள் தனை உரைப்பேன் கேளடா என் மழலையே


கவனிக்க - தனிப்பட்ட சில விஷயங்கள் ரகசியம் காக்க  இதில் பதிவிடப்படவில்லை 

கேள்வி 1 -  பொதிகை மலை யாத்திரை செய்ய உத்தரவு கொடுங்கள் அய்யனே

பதில்

பொதிகை மலை பயணம் அதை யாம் உமக்கு பின் உரைப்போம் - கால நேரங்கள் வருமய்யா , கவலை கொள்ளாதே என் மகனே , உமை யாம் அழைத்து செல்வோம் , தட்ப வெட்ப நிலை மாறும் பொழுதினிலே யாம்
உமை அழைப்போம்

 *************************************************************************************

கேள்வி 2 - ஜோதி விருட்ச மணி மாலை  தனை அணிந்து கொள்ள உத்தரவு வேண்டும் அய்யனே. அந்த மாலையினால் என்ன பயன் விளையும்

ஜோதியாய் ரூபமாய் யாம் உனக்கு அருள் உரைக்க - அருள் பாலிக்க - சோதி மாலையெல்லாம் உமக்கு எதுக்குடா மூடனே !!!!!!! உமை யாம் காப்போம் என் மகனே

*************************************************************************************

ஆலய பணி

எனக்கு ஆலய பணி  அது அமையப்பெறும் இடம் தன்னிலே கதிர் தோன்றி முளைத்ததே - கண்டாயா நீ
கதிர் தோன்றியதய்யா
மூலையிலே நிலை நிறுத்த கூரை தனை அமையப்பெற்றுக்கொடு
உமக்கு யாம் அன்றுரைத்தோம் பட்சிகளின் தாவரங்களின் நிலை விதை தனை உள்ளிடு

கேள்வி  - அய்யா -  மூலை  என்றால் எந்த மூலை அய்யனே

மேற்கு, தென்மேற்கு  மூலை  தனிலே கூரையிட்டு
வடக்கு நோக்கி வாசலிட்டு
தீபமதை இங்கு இட்டு
எண்ணிக்கையில் 27 நாள் அணையா தீபமதை ஏற்றி
அணையா தீபத்தை அங்கிட்டு
ஒளியாக நான் அங்கு செல்வேன்

ஆலயம் சென்று - ஆசானுடன் யாசகம் வாங்கி பூசையிடு
அய்யன் வாழும் மலையாம் சதுரகிரி செல்
இடைக்காட்டு சித்தனவன் சமாதி நிலை பெற்ற திருவண்ணாமலை செல்
பாவங்களை சர்வ நாசம் செய்யும் பாபநாசம் செல்
மூன்று ஆலயங்கள் சென்று யாசகம் வாங்கி பூசையிடு
முடிவில் அவிநாசியப்பன் ஆலயம் சென்று ஐயனுக்கு பூசையிட்டு அங்கும் யாசகம் வாங்கி பூசை தனை மேற்கொள்

யாம் உம்முள் இருந்து உமை காப்போம்
தயங்காதே தூயவனே
தேகத்தில் இருக்கும் அத்தனை இன்னல்களும் விட்டொழியும் அப்பா


கேள்வி - மூன்று வருடமாக மாமனார் வீட்டில் துளிர்க்காமல் இருந்த வேப்ப மரம் தற்போது மாமனார் இறந்த உடனே துளிர்த்துள்ளது - எதனால்

பதில் - அகத்தியர் பதிலேதும் கூறாமல் மௌனம் சாதித்தார்

கேள்வி - லோபாமுத்ரா அன்னை அவர்களின் உதித்த நட்சத்திரம் என்னவென்று அய்யன் உரைக்க வேண்டும்

முன்னுரைத்தேன் அறியவில்லையா மூடனே - உடனமர்ந்த உமையவள் லோபமுத்திரையென்று யாம் உரைப்போம்
உமையவளும் ஆயில்யமே  - தொழ சொல் - தொழு - எம்மையே தொழுதாலும் உமையவளை தொழுதாலும் ஒன்றே

கேள்வி - வீட்டில் அகத்தி மரம் வளர்ந்து 20 அடி உயரத்திற்கு அகத்தி மரம் வளர்த்து உள்ளேன் - அது வீட்டுக்கு ஆகாது என்று இப்போது கேள்விப்படுகிறேன் - இப்போது அதனை நீக்கி விடலாமா

அகத்தி அதை வை - யாம் பின்னுரைப்போம் உமக்கு

கேள்வி  - சுகப்பிரம்ம மகரிஷி வழிபாடு செய்ய அய்யன் உத்தரவு, அருளுரைக்க வேண்டும்

யாம் உமக்கு அன்றுரைத்தோம் அறியவில்லையா மூடனே - நவகோடி சித்தனின் நல்லாசி பெற்றவனே என்று - உமக்கு சுகப்ரம்மனின் ஆசியும் உண்டு -தீபம் தூபம் அதை காட்டு - பிரம்மனுக்கு அதுவே சிறந்ததய்யா - வெள்ளை நிற ஆடையை உடுத்து பின்பு மஞ்சள் ஆடை தனை உடுத்து - சுகப்ரம்மன் அவன் நிலை கொள்வானே - உன் மனையை நோக்கி கிளியாய் வந்து சப்தம் தருவான் - அத்துணை இன்னல்களையும் தீர்த்து வைப்பான் - யாம் இருக்கிறோம் மனம் தளராதே என் மகனே

கேள்வி - குருபூஜை விழா தனை எவ்விதம் நடத்த வேண்டும் என்று அய்யன் தயை கூர்ந்து அருள் உரைக்க வேண்டும் . சென்ற முறை நடத்திய அதே முறையை இம்முறையும் பின்பற்றலாமா ?

மார்கழி ஆயில்யம் தன்னிலே பூசை தன்னை இடு
நீ முன் செய்த முறைதனிலே இம்முறையும் செய் மகனே
கலசம் தன்னை கட்டி , மா இலை தோரணம் தனை கட்டி
வாழை மரம் தனை கட்டி - வண்ண விளக்கு தனை இட்டு
ஓம் என்ற ப்ரணய மந்திரத்தை ஒலித்து பூசை தனை துவங்கு
பணி  தனை செய்
மறு ஆயில்யம் நட்சத்திரம் தன்னிலே யாம் நீ பெற்ற நிலம் தன்னிலே யாம் நிலை கொள்வோம்
பின்பு...

யாம் உமக்கு ஜோதி ரூபத்தில் வந்து காட்சி தருவோம்
உமக்கு மழைதுளியாக வந்து உமக்கு ஆசீர்வதிப்போம்
வனவில்லாக வந்து உன் கண்ணுக்கு காட்சி தருவோம்
கருட வடிவில் வந்து பீடத்தை வட்டமிட்டு செல்வோம்
இது தோன்றும் அப்பா - உற்று நோக்கு
உமை யாம் விண்ணில் இருந்து ஆசீர்வதிப்போம்
நல்லாசி பெறுவாய்
நலம் பெற இருப்பாய்
முற்றே