எனது ஜீவ
நாடி வாசிப்பு 03.10.2019
இன்னவனும்
எனக்கு லோகம் தனிலே வடிவம் தந்தாய்
உமையவளுடன்
உன் மனை
தனிலே எமை நிலை நிறுத்து
மா
பலகை தன்னில் பீடம் அதை அமைத்து
மேல்
கூரை தனை தர்ப்பையிலே அமைத்து
நான்கு
கோணமும் திசை கட்டி பூசை தனை செய்யடா
நீ
இடும் பூசை தனை யாம் மனம் நிறைவுடன் ஏற்போம்
மனம்
தளராதே தூயவனே
நீ
ஜல அபிஷேகம் செய்தால் அதனை ஏற்போம்
வாசனை
திரவியத்தால் அபிஷேகம் செய்தால் அதனை ஏற்போம்
வாழ்வில்
நிலை பெறுவாய் என்
மகனே
உன்
மனையில் இருக்கும் துர் சக்திகள் அனைத்தும் விட்டொழியுமே
யாம்
காப்போம் தூயவனே
அன்றுரைத்தோம்
உமக்கு உன் மனை தனிலே தர்ப்பை பச்சை கற்பூரம் வெண்கடுகு ஒமம் கரும்குங்கிலியம் மருதானி விதைதனை தன்னை சேர்த்து அருகம்புல் தன்னை உள்ளிட்டு புகையிடு - திங்களுக்கு மூன்று முறை இடு - யாம் உமக்கு வாசம் செய்வோம்
பின்பு
வெண் தாமரை தனை பாதத்தில் இட்டு பூசையிடு
எண்ணிக்கையில்
ஜலத்தில் இரண்டு நாளும்
பன்னீர்தனை
, பன்னீர் புஷ்பமிட்டு
தாமரை
புஷ்பத்தை இட்டு ஒரு நாளும்
திருமஞ்சளிலே
ஒரு நாளும்
நல்
மஞ்சளிலே ஒரு நாளும்
சந்தினம்
ஜவ்வாது அத்தர் இலே ஒரு நாளும் இட்டு
பின்பு
தண்ணீரால்
அபிஷேகம் தன்னை செய்து நிலை நிறுத்து என் மகனே
யாம்
நிலை நிற்போம்
உமக்கு
யாம் காட்சி
தருவோம்
ஈன்ற
மழலைகளின் தேகத்தில் சிறு
சிறு இன்னல்கள் உள்ளதய்யா
இடர்
நீக்கி வாழ வைப்பேன் அஞ்சாதே தூயவனே
உன்
மனை தனிலே சில துர் சக்திகள் அங்கங்கு உள்ளதய்யா
கலைந்தோடும்
எண்ணிக்கையில் இரண்டு நாள் தன்னிலே
மனம்
தளராதே - யாம் உமை காப்போம்
வாழ்வில்
நிலை பெறுவாய்
ஐயம்
கொள்ளாதே
நாவடக்கம் கொள்
மகனே
நாடி வழி நற்பலன்களை யாம் உரைப்போம் உமக்கு
- முற்றே
-