இன்று 14/10/2018 இன்னுமொரு
நிகழ்வு
இங்கே
நினைத்தால் அங்கே நடக்கிறது, அங்கே நினைத்தால் இங்கே தெரிகிறது
ஜீவ நாடி பீட ஆசான் இறைசித்தன் செந்தில்
அய்யா அவர்களின் அலைபேசி பழுதை சரி செய்வதற்காக சமுத்திர ராஜன் என்ற அகத்திய
அடியவரிடம் கொடுத்து இரண்டு வாரம் ஆகி விட்டது. நேற்று பேசிய போது அது சரி
செய்யப்பட்டு விட்டதாகவும் அடுத்த முறை வரும் போது கொடுத்து விடுவதாகவும் தகவல்.
ஆனால், அந்த தொலைபேசி இல்லாமல் சிரமமாக உள்ளது என்று தகவல்.
இது நடந்தவுடன், அன்று இரவு சமுத்திர ராஜன்
என்னை அழைத்து பேசுகிறார். நானும் அவரும் உரையாடி பல நாட்கள் இருக்கும்.
பெரும்பாலும் அழைத்தால் கைபேசியை எடுக்கவே மாட்டார். ஆனால் அதிசயமாக நேற்று இரவு
அவரே அழைத்தார். உடனேயே கை பேசி சரியாகி விட்டதா என்று கேட்டேன். உடனே அது சரி
செய்து விட்டாச்சு, நீங்கள் செல்லும் போது சொல்லுங்கள், கொடுத்து விடலாம் என்று
கூறினார். சரி நீ இரண்டு தினம் கழித்து அதை என்னிடம் கொண்டு சேர்ப்பித்து விடு
நான் செல்லும் போது கொடுத்து விடுகிறேன் என்று கூறினேன். அதற்க்கு ரூபாய் 500
செலவு செய்தேன். அனால் செலவு செய்தேன் என்று அவரிடம் கூற வேண்டாம் என்று
கேட்டுக்கொண்டார். நான் கூறினேன், அந்த செலவை நான் ஏற்றுக்கொள்கிறேன், உனக்கு
கொடுத்து விடுகிறேன் என்றேன். அதற்க்கு சரி என்றார்.
இன்று காலை இறைசித்தர் பெரியநாயக்கன்பாளையம்
ஒரு வேலையாக வந்துள்ளார். அப்போது ஏன் மனதில் எழுந்த எண்ணம். " பார் இந்த
அன்பருக்கு நமது பீட ஆசானுக்கு உதவி செய்ய வாய்ப்பு கிடைத்து உதவி செய்தும் அதன்
பலன் அவனுக்கு கிடைக்காமல் நமக்கு கிடைக்கும் போல அமைப்பு உள்ளது. அந்த செலவையும்
நாம் ஏற்க்க போகிறோம், கைபேசியையும் நாம் நமது கையாலே கொடுக்க போகிறோம். அவனுக்கு
கிடைக்க வேண்டிய புண்ணிய பலன் நமக்கு கிடைக்கபோகிறது. அவனுக்கு இதெல்லாம் எப்படி
புரிய போகிறது என்று எண்ணினேன். பின்னர் சமுத்திர ராஜனை கைபேசியில் அழைத்து இங்கு
வர சொல்லி இறைசித்தரின் கைபேசியை நாமே இன்றே வாங்கி விடுவோம், நாம் இன்று வீட்டில்
சும்மா தானே இருக்கிறோம், அவரும் நம் வீட்டின் அருகில் உள்ள இடத்தில் வந்து உள்ளார். இன்றே அந்த
கைபேசியை எடுத்து சென்று கொடுத்து விடுவோம் என்று எண்ணினேன்.
இங்கே அடித்தால் அங்கே வலிக்கும் என்பது
போல மதியம் எனது நண்பர் என்னை அழைத்தார்.
என்ன தோன்றியது என்று தெரியவில்லை, என்னை
சில ஆன்மீக முக்கியமான கூடத்திற்கு அழைத்தார்கள், நானோ அங்கே செல்ல
விருப்பமிலாமல், ஏதோ ஒரு உந்துதல் பேரில் இரு சக்கர வாகனத்தை எடுத்து பேருந்து
நிறுத்தத்தில் நிறுத்தி விட்டு மேட்டுப்பாளையத்திர்க்கு பயணசீட்டு எடுத்து ஏறி
விட்டேன். அங்கிருந்து பொகளூர் பேருந்தில் சென்று சித்தர் பீடம் அடைந்து பொருளை
(கைபேசியை) சேர்த்து விடலாம் என்று எண்ணினேன்.
எல்லாமே ஒரு உந்துதல் பேரில், இப்படி செய்
என்று உத்தரவு இட்டதால் செய்ய தோணியது. இறைசித்தரை தொலைபேசியில் அழைத்தால்
எடுக்கவே இல்லை. பின்னர் துடியலூர் தாண்டியதும் அவரை அழைக்க ஒரு உந்துதல், அவர்
எடுக்கவே இல்லை. ஆனால் சரியாக பெரிநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தத்திற்கு
முன்னால் இறைசித்தரே என்னை அழைத்தார். தாம் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ளதாகவும்
தெரிவித்தார். அந்த நேரத்தில் தான் பெரியனயக்கன்பாளையத்தின் பேருந்து
நிறுத்தத்தில் நின்றது. உடனே இறங்கி அந்த இடத்தை விசாரித்து, அவரிடம் கைபேசியை சேர்ப்பித்து
விட்டேன். இப்போது என் இல்லம் திரும்பி விட்டேன். உங்களிடம் தெரிவிக்கலாம் என்று
கூறினேன் என்றாரே பார்க்கலாம்.
இது ஒரு சாதாரண விஷயம் தான் ஆனால் அந்த
உந்துதலுக்கு என்ன பெயர்?.
எனது எண்ணம் அவன் மனதில் உந்துதல்
ஏற்படுத்தியது, அவன் எண்ணம் இறைசித்தர் மனதில் உந்துதல் ஏற்படுத்தியது, அழைகழிக்காமல்
சரியாக பெரியநாயக்கன்பாளையத்தில் இறங்க வைத்து எது?
கைபேசி
இல்லாததால் பலர் இறைசித்தரை தொடர்பு கொள்ள முடியாமல் அவரவர் வாழ்க்கை சிக்கலுக்கு
விடை தெரியாமல் திணறி இருக்கலாம். அது இறைவன் செயலாக அதற்கு தடையாக உள்ள கைபேசியை
கொண்டு சேர்த்தது இறை செயலல்லாமல் வேறு என்ன?
நாங்கள்
வெறும் கருவியே, கட்டளை இட்டால் செயல்படுத்துவோம். ஆனால் எத்துனை பேருக்கு இந்த
ஆழ் மனது, உந்துதல் வேலை செய்கிறது, எத்தனை பேர் அதை மதித்து அதன்படி செயல்
செய்கிறார்கள் என்பது தான் ரகசியம்.
நான்,
சமுத்ர ராஜன் ஆகியோர் ஆழ் மனதில் வரும் எண்ணங்களை பார்த்து செயல் செய்கிறோம், ஒரு
எந்திரம் போல, சொன்னதை செய்யும் கிளிப்பிள்ளை போல.
வாழ்க்கையில்
இவ்வாறே செய்பவன் இல்லாமல் செயல் மட்டும் நடந்தால் அனைத்து காரியங்களும் இறை
செயலாக சுபமாக இருக்கும்.
சுபம் -
சுபம் - சுபம்
தி. இரா. சந்தானம் - 9176012104
சமுத்திர ராஜன் - 9566777973 .
கோவை.