Sunday, 17 May 2020

30 ஆவது சக்தி பீடம், ஜெயந்தி மாதா , ஹஸ்தினாபுரம்

*51சக்திபீடங்கள்*

*ஜெயந்தி_மாதா_கோயில்*


*முக்தி_நாயகி_ஜெயந்தி_பீடம்*


*ஹஸ்தினாபுரம்_ஹரியானா (30/51)*



அன்னை சதி தேவியின் இடது திருத்தொடை விழுந்து நிலை கொண்ட சக்தி பீடமாக திகழ்கிறது.

அம்மன் : ஜெயந்தி தேவி
மூலவர் : கிரம்தீஸ்வரர்
ஊர் : ஹஸ்தினாபுரம்
மாநிலம் : ஹரியானா

#ஜெயந்தி_தேவி

மேகாலயாவின் தலைநகரமான ஷில்லாங்கிலிருந்து 63 கி.மீ தொலைவிலுள்ள நார்டியாங் எனும் கிராமத்தில், ஜெயந்தியா மலையின் மீது அமைந்துள்ள வன துர்க்கை திருக்கோயில்' போற்றப்படுகின்றது.சில குறிப்புகள் அன்னையின் இடது கணுக்கால் இத்தலத்தில் விழுந்தது என்றும் அறிவிக்கின்றன.

#தலவரலாறு

பீடேஸ்வரியின் திருநாமம் 'ஜெயந்தேஸ்வரி', பைரவரின் திருநாமம் 'கிரம்தீஸ்வரர்'.
இயற்கை எழில் கொஞ்சும் இத்திருத்தலத்தில் அன்னை வன துர்க்கையாக இனிது எழுந்தருளி இருக்கின்றாள்.சுமார் 600 வருடங்களுக்கு முன்பாக, இப்பகுதியை ஆண்டு வந்த 'தான் மானிக்' எனும் மன்னனின் கனவில் அன்னை ஜெயந்தி தேவி எழுந்தருளி, இத்தலத்தின் மேன்மையினை உரைத்தருளி, இங்கு ஒரு சிறு ஆலயம் அமைக்குமாறு பணித்தருளினாள் என்று வரலாற்றுக் குறிப்புக்கள் நமக்கு அறிவிக்கின்றன.

#திருவிழா

ஒவ்வொரு ஆண்டும் துர்கா பூஜை இத்தலத்தில் தனித்துவமான முறையில் மிகவும் சிறப்புடன் கொண்டாடப் பெறுகின்றது.

#தலச்சிறப்பு

வாழைக் கன்றோடு சில செடிகொடிகள்,இலைகள்,பூக்கள் மற்றும் பழங்கள் இவற்றைச் சேர்த்து, திருவஸ்திரம் அணிவித்து, அம்பிகையாக அலங்கரித்துத் திருக்கோயில் கருவறையில் 4 முதல் 5 நாட்களுக்கு எழுந்தருளச் செய்து பூஜித்துப் பின்னர் அன்னையைத் திருவீதியுலா கண்டருளச் செய்து, இறுதியாக மலையடிவாரத்திலுள்ள நதியில் விசர்ஜனம் புரிந்து வழிபடுகின்றனர்.அவசியம் தரிசித்துப் பயன்பெற வேண்டிய தலம்.

#பொது_தகவல்

மேலும் மூன்று இடங்களை ஜெயந்தி சக்தி பீடமாகக் கூறுகின்றனர்🎉
(1)சைல்ஹெட்டிலிருந்து சில்லாங் போகும் சாலையில் சைல்ஹெட்டிற்கு வடக்கே 43 கி.மீ தொலைவில் ஜெயந்தியாபூர் உள்ளது.
இது பழைய அரசாங்கத்தின் தலைநகரம்.
சக்தி பீடமானது பௌர்பாக் காளி கோவில் என்றும் ஃபாலிசுர் காளி பரி கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இது ஜெயந்தியாபூர் அருகேயுள்ள கலஜோர் பௌர்பாக் என்ற கிராமத்தில் உள்ளது.இக்கோவில் போரோ கங் ஆற்றின் வடக்கே உள்ளது. ஜெய்ந்த்யாப்பூர் என்ற ஊரின் தெற்கே உள்ளது. மேலும் N4 ரோட்டின் கிழக்கே உள்ளது.

(2)சில்லாங் மலைகளின் கிழக்கே NH 44 ரோட்டில் 65 கி.மீ தொலைவில் ஜோவாய் என்ற நகரம் உள்ளது.இது ஜெயந்தியா மாவட்டத் தலைநகராகும். இங்கிருந்து 24 கி.மீ வடக்கே நார்ட்டியாங் துர்கா அல்லது ஜெயந்தேஸ்வரி கோவில் உள்ளது. சமீபத்தில் நானூறு ஆண்டுகள் பழைமையான கோவிலை இடித்து சிறு மாற்றங்களுடன் கட்டியுள்ளனர்.இங்கு துர்கா மற்றும் ஜெயந்தேஸ்வரி (அல்லது மச்யோதரி)இருவரும் அருள்கின்றனர்.இந்த அஷ்டதத்து அல்லது அஷ்டதட்டு சிலைகள் 6 முதல் 8 இன்ச் உயரமானது. அஷ்டதட்டு சிலை என்றால் எட்டு உலோகங்களின் கலவையால் ஆன சிலையாகும்.நார்ட்டியாங் மார்க்கெட்டிலிருந்து கிட்டத்தட்ட 2 கி.மீ தொலைவில் இந்த துர்கா கோவில் உள்ளது.

(3)மேற்கு வங்கத்தின் ஜல்பாய்குரி மாவட்டம் பக்ஸா புலிகள் காப்பகம் காட்டுப்பகுதியின் குக்கிராமம் ஜெயந்தி என்பதாகும்.இந்த கிராமம் ஜெயந்தி நதிக்கரையிலுள்ளது. இங்கு 13 கி.மீ தூரம் கொண்ட பக்ஸா டுவர் – ஜெயந்தி ட்ரக் பயணம் மிகவும் பிரபலம். இங்குள்ள மஹாகாள் குகையில் சக்தி பீடம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

#அமைவிடம்

டெல்லியில் இருந்து 135 கி.மீ தொலைவில் ஹஸ்தினாபுரம் அமைந்துள்ளது.

மதுரையில் இருந்து சென்னை சென்ட்ரல், டெல்லி ரயில் நிலையம் வழியாக டேராடூன் ரயிலில் சுமார் 2840 கி.மு பயணம் செய்தால் மேருட் சிட்டி அல்லது மேருட் கான்ட் ரயில் நிலையம் வரும். மேருட் கான்ட் ல் இருந்து 38 கி‌.மீ தொலைவில் உள்ள ஹஸ்தினாபுரம் செல்ல பேருந்து வசதி உள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து தமிழ் நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்து டெல்லி அடைந்து அங்கிருந்து டேராடூன் செல்லும் ரயிலில் அல்லது மேருட் கான்ட் செல்லும் பிற ரயிலில்  சுமார் 76 கி.மீ பயணம் செய்தால் மேருட் சிட்டி அல்லது மேருட் கான்ட் ரயில் நிலையம் வரும். மேருட் கான்ட் ல் இருந்து 38 கி‌.மீ தொலைவில் உள்ள ஹஸ்தினாபுரம் செல்ல பேருந்து வசதி உள்ளது.

திருவனந்தபுரத்தில் இருந்து சேலம் வழியாக டெல்லி செல்லும் கேரளா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்து டெல்லி அடைந்து அங்கிருந்து டேராடூன் செல்லும் ரயிலில் அல்லது மேருட் கான்ட் செல்லும் பிற ரயிலில்  சுமார் 76 கி.மீ பயணம் செய்தால் மேருட் சிட்டி அல்லது மேருட் கான்ட் ரயில் நிலையம் வரும். மேருட் கான்ட் ல் இருந்து 38 கி‌.மீ தொலைவில் உள்ள ஹஸ்தினாபுரம் செல்ல பேருந்து வசதி உள்ளது. சென்னையில் இருந்து 2277 கி.மீ தொலைவில் ஹஸ்தினாபுரம் அமைந்துள்ளது.


No comments:

Post a Comment