Tuesday 2 October 2018

ஜீவ நாடி வாக்கு - அகத்தியர் எமக்குரைத்த அருளுரை 02/10/2018


அகத்தியர் ஜீவ நாடி பொகளூர்

கோவை மேட்டுப்பாளையத்திற்கும்  - அன்னூருக்கும் இடையில் அமைந்துள்ள பொகளூர் கிராமத்தில் திரு இறைசித்தர் அவர்களால் ஸ்தாபிக்கபிட்ட ஓம் ஸ்ரீ அகத்திய சித்தர் பீடம் அமைந்து உள்ளது. அங்கே, இறை அருளால் அகத்தியரின் சீவ நாடி ஓலை சுவடி பாதுகாக்கப்பட்டு வருகிறது. அங்கே நிதமும் அகத்தியர் சீவ நாடியில் தோன்றி தம்மை நாடி வரும் பக்தர்களுக்கு பல வகையான பரிகார முறைகளை கூறி வாழ்வில் எல்லா வளமும் ஏற்பட வழி காட்டியபடி உள்ளார். அங்கே தினமும் குறிப்பிட்ட நேரத்தில் பொது வாக்கு பலன்களை அகத்தியர் உரைத்தபடியே உள்ளார்.





நாடி வாசிக்கப்படும் பக்தரின் பெயர் - தி. இரா. சந்தானம்



தேதி : அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி, செவ்வாய்க்கிழமை, 2018 ; 02/10/2018

ஜீவ நாடியில் அகத்தியர் அய்யாவின் வரிகள் கீழ் வருமாறு :

ஸ்ரீனிவாசப்பெருமானின் திருநாமம் பெற்றவனே, யாம் உமை அறிவோமே

உமை பெரும் விபத்திலிருந்து காக்கவே யாம் பைரவர் வடிவினில் சதுரகிரி தன்னிலும், வயோதிகர் வடிவில் திருவண்ணாமலை தன்னிலும் யாம் உமை அழைத்து சென்றோமே.

உன் இடர் தீர்க்கவே யாம் உன்னுள் இருந்து உன்னை அழைத்துச்சென்றோம் அப்பா.

அன்றுரைத்தேன் அறியவில்லையா என் மகனே. இந்த சென்மத்தில் உன்னை சுற்றி ஒரு கூட்டம் கூடுமப்பா. அப்போது நீ உயர் நிலை அடையக்கடைவாயே, என்று.

என் நாமம் அதனை பறைசாற்று.

யாம் உமக்கு இக்கலியுகம் தன்னிலே பெரும் ஒரு புண்ணிய பாக்கியம் அதை தந்தருள்வோமே.

பற்றி உன் பிறவி கடன் அதனை முடித்து நல்லதோர் பணிதனை செய் மகனே.

யாம் உன் அருகில் அல்ல நவகோடி சித்தர்களும் உன்னுள் இருந்து இயக்கப்பெருவாரே.

உன் வாழ்வு சீர் பெரும் அப்பா.
நாவடக்கம்கொள் மகனே.
கொண்டவளுடன் நல்லுறவாய் கிட்டும்.
உனை ஈன்றவளை மனம் மகிழ சொல் அய்யா.

உன் நாவிலே நான் இருப்பேன். உனது சிந்தனையும் யாமே. உனது செயலும் யாமே.

ஈன்ற மழலை வாழ்வு சீர் பெரும் அப்பா. மனம் தளராதே.

உம்மை அங்கங்கே தென்றலாக வந்து தழுவிச்சென்றோம் ; அறிந்தாயா நீ.

வானரமாகவும், வயோதிகனாகவும் உனை வந்து தொட்டு ஆசீர்வதித்தேன், உணர்வாய் நீ. 

வாசனை வடிவில் வந்து புலன் உணர்த்தினேன். 

வட்டமிடும் வானவில்லாக உனை சுற்றி வந்தேனே அறியவில்லையா என் மகனே. அறிவாய் நீ.

மலை போல் இருக்கும் இன்னல் எல்லாம் இனி பனி போல் விட்டு விலகுமப்பா.

தருமம் அதை கையிலெடு கருமம் அது உனை விட்டு ஒழியுமே.

நான் கண்டம் விட்டு கண்டம் இருக்கும் ஏழு திரு நாமங்களை யாமே உமக்கு நித்திரையில் வந்து புலன் உணர்த்துவோம்.

பணி அதை செய். செல்வம் அது தானாக உனை நாடி வருமப்பா. செல்வம் இல்லையே என்று வீண் மனக்குழப்பம் வேண்டாம் என் மகனே. செல்வம் அது கிட்டும். நீ சீர் பெறுவாய். யாம் உன்னில் இருந்து உனை இயக்குவோமே.
 **************************************************************************
பொது நாடி

அன்றுரைத்தேன் இயற்கை சீற்றமது ; மீண்டும் உரைக்கிறேன் அரங்கேறும் அப்பா. சிறு சிறு இன்னலை தருவோம் யாம்.

இந்த கலியுகம் தன்னிலே கர்மம் தீர்ந்து சித்த மயம் செழிக்க சிறு இன்னல் பட்டே தீரும் அய்யா.

என் அப்பன் உலகாண்ட எம்பெருமானின் பத்மநாப சுவாமி ஆலயம் தன்னிலே ரகசிய பெட்டகத்தை அதை திறந்தால் அக்கணமே அழியுமே அத்தேசம். 

முற்றிலும் அழியும் அப்பா. 

இதை யாம் கடல் வெள்ளத்தாலும், சூறை காற்றாலும், இயற்கை சீற்றத்தாலும் அரங்கேறுமே. இது சித்தனின் வாக்கே.

கர்மமது தலை தூக்கியதே. அதனால் தர்மத்தை நிலை நாட்டவே யாம் அண்டை மாநிலத்திலே வெள்ளச்சேதம் நிகழ்ந்ததே. 

பசுவின் கண் தனிலே காரமதை திணித்து நரவதை செய்யும் நரன்களை விட்டொழிவானே.

************************************************************************** 

குரு பெயர்ச்சியில் எம் நிலைமை ஓங்குமா என்று மனம் நிக்காதே, குருவும் நானே, அகத்தியனும் நானே, குரு தட்சிணாமூர்த்தியும் நானே. நவக்ரஹ கோள்களை ஆட்டி வைக்கும் சித்தனவன் துணையிருக்க சீர் பெறுமே உன் வாழ்வு.

மழலைகள் தேகத்தில் இருக்கும் இன்னலை யாம் காத்து ரட்சிப்போமே. வாழ்வு சிறக்கும், 

ஜெயம், ஜெயம், ஜெயம். 
- முற்றே -

முடிவுரை
அகத்தியர் அய்யாவின் புகழை பரப்பவே, அவர் மகிமையை உலகோர் அறிய செய்யவே, மேல் உள்ள இந்த பதிவு. தனிப்பட்ட ஒருவருக்கு உரைத்த அருளுரையை பொதுவில் பதிக்கும் நோக்கம் அதுவே. நாம் பக்தியுடன் இருந்தால் அகத்தியர் அய்யா, எவ்வாறு நமக்கு வரும் இன்னல்களை முன் கூட்டியே காத்து நிற்கிறார், எப்படி நமது வாழ்வு சிறக்கும் என்பதற்கு நானே முன் உதாரணமாகே உள்ளேன் என்பதற்காக இந்த பதிவு.

யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்; அகத்தியர் நாமம் வாழ்க !! அகத்தியர் புகழ் ஓங்குக; முருகனருள் முன் நிற்க; நவ கோடி சித்தர்கள் துணை நிற்க, வாழ்வு சிறக்கட்ட்டுமே 

இப்படிக்கு 
தி. இரா. சந்தானம்
9176012104
குறிப்பு : 
தனிப்பட்ட முறையில் உரைத்த பரிகாரங்கள் பதிவிடப்படமாட்டாது.

வலைத்தளம்

https://agathiyarpogalur.blogspot.com/


ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583