*#செளந்தர்ய_லஹரி_உருவான_கதை*
ஆதிசங்கரர் விஜய யாத்திரை செய்துகொண்டு வரும்பொழுது, கயிலாயத்திற்கு சென்றார்.
கயிலாயத்தில் அவர் மெளனமான நிலையில் தியானம் செய்து கொண்டிருந்த சமயம், பார்வதி, பரமேஸ்வரர் இருவரும் தங்களுக்குள்," கீழே பூலோகத்திலிருந்து நமது கயிலாயத்திற்கு ஒரு குழந்தை வந்திருக்கிறது". இந்த இளம்வயது பாலகனைப் பார்த்தால் ஏதாவது நாம் கொடுக்க வேண்டும் என்று தோன்றுகிறது "என்று பேசிக் கொண்டார்கள். இவர்கள் இருவரும் பேசி கொண்டிருந்தது ஆதி சங்கரருக்கு தெரியாது.
திடீரென்று இரண்டு சுவடிகளைப் பார்வதி பரமேஸ்வரர் இருவரும் மேலே இருந்து ஆதி சங்கரரிடம் தூக்கி எறிந்தனர்.அவரது இரு கைகளிலும் சுவடிகள் பட்டன. ஆனால் ஒன்றைத்தான் அவர் பிடித்தார். மற்றொன்றை நந்தி பகவான் கயிலாயத்திலிருந்து பறி போகிறதே! என்று பிடுங்கி விட்டார். நந்தியின் ஸ்பரிசம் பட்டதும் சங்கரர் கண்ணைத் திறந்து பார்த்தார். கையில் ஒரு சுவடிதான் இருந்தது. இன்னொன்றைக் காணவில்லை. சங்கரர் மனம் நொந்து அழுது மேலே பார்த்த போது, அங்கு பார்வதி, பரமேஸ்வரர் தரிசனம் கிடைக்க பெற்றார்.
அம்பாளை நோக்கி "அம்மா" இது என்ன லீலை? ஒரு சுவடி மட்டுமே எனக்கு கிடைத்தது. இன்னொன்றை நந்தி எடுத்து கொண்டு விட்டார். எனக்கு கிடைத்த பொக்கிஷத்தை தவற விட்டு விட்டேனே! என்று அழுது புலம்பினார்.
அச்சமயம் அம்பாள் "சங்கரா! நீ அழாதே!.என்னைப் பார்த்து தரிசனம் செய்து சிரம் முதல் பாதம் வரை நீ எழுது.நான் உனக்கு எல்லா இடங்களிலும் காட்சி கொடுப்பேன். அதனால் கவலையின்றி கிடைத்தை வைத்துக் கொள் "என்றாள்.
முதல் 41 ஸ்லோகம் சங்கரிடம் இருந்தது மீதி 59 ஸ்லோகத்தை நந்தி வைத்திருந்தார்.
அன்னையின் ஆணைப்படி மடை திறந்த வெள்ளம்போல் தாமே 59 ஸ்லோகத்தையும் சங்கரர் அன்னையின் அருளால் பாடி முடித்தார். இவ்வாறு 100 பாடல்கள் கொண்ட தொகுப்பே செளந்தர்ய லஹரி ஆகும். இதுவே செளந்தர்ய லஹரி பிறந்த கதை.
முதல் 41 ஸ்லோகம் ஆனந்த லஹரி என்று கூறப்படுகிறது.இதை ஈசனே இயற்றி அன்னையை ஆனந்தத்தில்
செளந்தர்யம் என்றால் அழகு, 100 பாடல்களிலும் அன்னையின் அழகும், அருளும் அற்புதமாக தாண்டவமாடுகின்றன.
செளந்தர்ய லஹரி 99 வது ஸ்லோகப்படி,இதனை பாராயணம் செய்பவர்களுக்கு பார்வதிதேவியின் எல்லையில்லாத் அருளோடு, சரஸ்வதி கடாக்ஷமும் கிட்டும் என்பதை அறியலாம்.
ஆடி செவ்வாய், வெள்ளி கிழமைகளில் செளந்தர்ய லஹரி சொல்லி தேவியின் அருளை பெறலாம்.
*அம்பிகையை ஆராதித்து சகல செளபாக்கியம் அடைய, நாம் பாராயணம் செய்வதுதான் செளந்தர்ய லஹரி.*🙏🙏🙏 அனுமன் ஆர்கே சாமி
ஆதிசங்கரர் விஜய யாத்திரை செய்துகொண்டு வரும்பொழுது, கயிலாயத்திற்கு சென்றார்.
கயிலாயத்தில் அவர் மெளனமான நிலையில் தியானம் செய்து கொண்டிருந்த சமயம், பார்வதி, பரமேஸ்வரர் இருவரும் தங்களுக்குள்," கீழே பூலோகத்திலிருந்து நமது கயிலாயத்திற்கு ஒரு குழந்தை வந்திருக்கிறது". இந்த இளம்வயது பாலகனைப் பார்த்தால் ஏதாவது நாம் கொடுக்க வேண்டும் என்று தோன்றுகிறது "என்று பேசிக் கொண்டார்கள். இவர்கள் இருவரும் பேசி கொண்டிருந்தது ஆதி சங்கரருக்கு தெரியாது.
திடீரென்று இரண்டு சுவடிகளைப் பார்வதி பரமேஸ்வரர் இருவரும் மேலே இருந்து ஆதி சங்கரரிடம் தூக்கி எறிந்தனர்.அவரது இரு கைகளிலும் சுவடிகள் பட்டன. ஆனால் ஒன்றைத்தான் அவர் பிடித்தார். மற்றொன்றை நந்தி பகவான் கயிலாயத்திலிருந்து பறி போகிறதே! என்று பிடுங்கி விட்டார். நந்தியின் ஸ்பரிசம் பட்டதும் சங்கரர் கண்ணைத் திறந்து பார்த்தார். கையில் ஒரு சுவடிதான் இருந்தது. இன்னொன்றைக் காணவில்லை. சங்கரர் மனம் நொந்து அழுது மேலே பார்த்த போது, அங்கு பார்வதி, பரமேஸ்வரர் தரிசனம் கிடைக்க பெற்றார்.
அம்பாளை நோக்கி "அம்மா" இது என்ன லீலை? ஒரு சுவடி மட்டுமே எனக்கு கிடைத்தது. இன்னொன்றை நந்தி எடுத்து கொண்டு விட்டார். எனக்கு கிடைத்த பொக்கிஷத்தை தவற விட்டு விட்டேனே! என்று அழுது புலம்பினார்.
அச்சமயம் அம்பாள் "சங்கரா! நீ அழாதே!.என்னைப் பார்த்து தரிசனம் செய்து சிரம் முதல் பாதம் வரை நீ எழுது.நான் உனக்கு எல்லா இடங்களிலும் காட்சி கொடுப்பேன். அதனால் கவலையின்றி கிடைத்தை வைத்துக் கொள் "என்றாள்.
முதல் 41 ஸ்லோகம் சங்கரிடம் இருந்தது மீதி 59 ஸ்லோகத்தை நந்தி வைத்திருந்தார்.
அன்னையின் ஆணைப்படி மடை திறந்த வெள்ளம்போல் தாமே 59 ஸ்லோகத்தையும் சங்கரர் அன்னையின் அருளால் பாடி முடித்தார். இவ்வாறு 100 பாடல்கள் கொண்ட தொகுப்பே செளந்தர்ய லஹரி ஆகும். இதுவே செளந்தர்ய லஹரி பிறந்த கதை.
முதல் 41 ஸ்லோகம் ஆனந்த லஹரி என்று கூறப்படுகிறது.இதை ஈசனே இயற்றி அன்னையை ஆனந்தத்தில்
செளந்தர்யம் என்றால் அழகு, 100 பாடல்களிலும் அன்னையின் அழகும், அருளும் அற்புதமாக தாண்டவமாடுகின்றன.
செளந்தர்ய லஹரி 99 வது ஸ்லோகப்படி,இதனை பாராயணம் செய்பவர்களுக்கு பார்வதிதேவியின் எல்லையில்லாத் அருளோடு, சரஸ்வதி கடாக்ஷமும் கிட்டும் என்பதை அறியலாம்.
ஆடி செவ்வாய், வெள்ளி கிழமைகளில் செளந்தர்ய லஹரி சொல்லி தேவியின் அருளை பெறலாம்.
*அம்பிகையை ஆராதித்து சகல செளபாக்கியம் அடைய, நாம் பாராயணம் செய்வதுதான் செளந்தர்ய லஹரி.*🙏🙏🙏 அனுமன் ஆர்கே சாமி
ஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ (எல்லா சுலோகங்களும்) – ஆனந்த லஹரி (சு.1 முதல் சு.41 வரை)
ஸ்ரீ “அண்ணா” எழுதி சென்னை ஸ்ரீராமகிருஷ்ணமடம் வெளியிட்டுள்ள “ஸௌந்த்ரயலஹரீ-பாஷ்யம்” என்ற விளக்க நூலில் இருந்து விளக்கங்களுடன் (சிற்சில இடங்களில், Pandit S Subrahmanya Sastri and T R Srinivasa Ayyangar இவர்களால் 1937-ம் வருடத்தில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு The Theosophical Publishing House ப்ரசுரித்த The Ocean of Beauty – Soundarya Lahari of Sri Samkara Bhagavatpada என்னும் நூலிலிருந்து எடுத்த ஆங்கில விளக்கங்களுடன்)
1. பராசக்தியின் ஏற்றம்
ஸர்வ விக்ன நாசமும் ஸகலகார்ய ஸித்தியும்
ஶிவ ஶக்த்யா யுக்தோ யதி ஶக்த: ப்ரபவிதும்
ந சேதேவம் தேவோ நகலு குஶ’ல ஸ்பந்திதுமபி
அதஸ்த்வா மாராத்த்யாம் ஹரிஹர விரிஞ்சாதிபிரபி
ப்ரணந்தும் ஸ்தோதும் வா கத மக்ருத புண்ய: ப்ரபவதி: 1
மங்களமூர்த்தியான மஹாதேவன் பராசக்தியாகிய உன்னுடன் கூடினவராக இருந்தால் மட்டுமே பிரபஞ்சத்தை ஆக்குவதற்குத் திறமையுள்ளவர் ஆவார். அவ்வாறு கூடியில்லாவிட்டால் அசைவதற்குக்கூட திறமை உடையவராக ஆவதில்லையன்றோ ? ஆகையால் விஷ்ணு, ருத்ரன், பிரம்மா முதலியவர்களாலும் பூஜித்தற்குரிய உன்னை புண்ணியம் செய்யாதவன் வணங்குவதற்கோ அல்லது துதிப்பதற்கோ எங்ஙனம் தகுதியுடையவனாவான் ?
குண்டலினி சக்தியினின்று பிரிந்தால் சிவனும் சவம் போல் ஆகிறான். – தேவி பாகவதம்.
கண்ணிய(து) உன்புகழ் கற்ப(து)உன் நாமம் கசிந்துபத்தி
பண்ணிய(து) உன்இரு பாதாம் புயத்தில் பகல்இரவா
நண்ணிய(து) உன்னை நயந்தோர் அவையத்து நான்முன் செய்த
புண்ணியம் ஏ(து)என்அம் மேபுவி ஏழையும் பூத்தவளே – அபிராமி அந்தாதி 12
Only when brought into union with the Sakti would Siva acquire the power of assuming the form of Pranava , the embodied form of Naadaa, etc. assuming the stages of Paraa, Pachyanti, etc. wherefrom originate the Svara-s, Varna-s, Pada-s, and Vaakya-s galore. If not, the Deva becomes utterly incapable of producing the Pranava, becoming dumbfounded.
While so, how dares one, who has acquired no merit, either to salute or to praise Thee (of the form of Pranava), O Goddess! that art worthy of being adored by
- Hari, Hara and Virincha – as the deities of the components of Pranava;
- Agni, Vaayu and Surya – as their Rishis:
- Gaayatri, Trishtub and Jagati – their meters:
- Rakta, Sukla and Krsna – as their colours;
- Jaagrat, Svapna and Susupti – their states;
- Bhumi, Antarika and Svarga – their seats;
- Udaatta, Anudaatta ands Svarita – their Svara-s;
- Rk, Yajus and Saman – their Veda-s;
- Gaarhapatya, Aahavaniya and Daksina – their Agni-s;
- Praahna, Madhyaahna and Aparaahna – their Kaalaa-s;
- Sattva, Rajas and Tamas – their Guna-s;
- Srsti, Sthiti and Samhaara – their functions;
All these standing in the order appropriate to them.
2. பாத தூளி மகிமை
ஸர்வலோக வசியம்
தநீயாம்ஸம் பாம்ஸும் தவசரண பங்கேருஹ பவம்
விரிஞ்சி: ஸஞ்சிந்வந் விரசயதி லோகாநவிகலம்
வஹத்யேநம் ஶௌரி கதமபி ஸஹஸ்ரேண ஶிரஸா
ஹரஸ் ஸம்க்ஷுத்யைனம் பஜதி பஸிதோத்தூளனவிதிம் 2
பிரம்மா உன்னுடைய திருவடித் தாமரைகளிலுள்ள மிக நுட்பமான தூளை ஸம்பாதித்து உலகங்களை முட்டின்றி சிருஷ்டிக்கிறார். ஆதிசேஷன் ஆயிரம் தலைகளால் இவ்வுலக வடிவான பாததூளியை எப்படியோ தாங்குகிறார். ருத்திரன் இதை நன்றாகப் பொடியாக்கி விபூதி பூசிக்கொள்ளும் முறைய அனுஷ்டிக்கிறார்.
பாததூளி பூஜை: ஒரு பௌர்ணமியில் ஸுவாஸினியைப் பூஜைக்கு அழைக்கும்போது நதி மணலை வஸ்த்ரகாயம் செய்து வழியில் இறைத்து அதன்மேல் அடிவைது வரச்செய்து பூஜை முடிந்தபின் அம்மணலைத் தேவியின் பாத தூளியாகக் கருதி ஒரு சிறிய பெட்டியில் சேகரித்து வைத்துக்கொண்டு காலை மாலைகளில் பூஜிக்கவேண்டும். காலைப் பூஜைக்குப் பின் “தநீயாம்ஸம் பாம்ஸும்” என்ற சுலோகத்தை ஆயிரம் முறையும், மாலை பூஜைக்குப்பின் :அவித்யானாம் அந்தஸ்திமிர த்வீப நகரீ” என்ற சுலோகத்தை ஆயிரம் முறையும் ஜபம் செய்யவேண்டும். இவ்விதம் வஸந்தருதுவிலோ சரத்ருதுவிலோ ஒரு மண்டலம் நியமத்துடன் பூஜையும் ஜபமும் செய்து முடிவில் ஒன்பது ஸுவாஸினிகளை அழைத்துப் போஜனம், வஸ்திரம், ஆபரணம், தக்ஷிணை முதலியவை அளித்து விரதத்தைப் பூர்த்தி செய்தால், அப்படிச் செய்பவர் அஷ்டைச்வர்ய ஸம்பன்னர் ஆவார்,
The worlds – both animate and inanimate:
- Seven upper worlds: Bhuur, Bhuvar, Suvar, Mahar, Jana, Tapas, Satya.
- Seven nether worlds: Atala, Vitala, Sutala, Rasaatala, Talaatala, Mahaatala, Paataala.
— Pandit S Subrahmanya Sastri and T R Srinivasa Ayyangar in The Ocean of Beauty – Soundarya Lahari
3. பாத தூளி முக்தியளிப்பது
ஸர்வ வித்யா ப்ராப்தி
அவித்யாநா மந்தஸ்திமிர மிஹிர த்வீப நகரீ
ஜடாநாம் சைதந்ய ஸ்தபக மகரந்த ஶ்ருதிஜரீ
தரித்ராணாம் சிந்தாமணி குணநிகா ஜன்மஜலதௌ
நிமக்நாநாம் தம்ஷ்ட்ரா முரரிபு வராஹஸ்ய பவதி 3
உன்னுடைய பாத தூளி அவித்தை குடிகொண்டிருக்கும் உள்ளத்தின் அகத்திருளைப் போக்கும் ஸூரியனுடைய உதயத்தீவின் நகரம் போலும், அவிவேகிகளுக்கு ஆத்ம ஞானமாகிய கற்பகவிருக்ஷத்தின் பூங்கொத்திலிருந்து பரவிச் செல்லும் மகரந்தம் போலும், ஏழைகளுக்கு நினைத்ததை அளிக்கக் கூடிய சிந்தாமணிக் குவியலாயும் பிறவிக்கடலில் மூழ்கியவர்களுக்கு ஆதி வராஹமாய் அவதரித்துப் பூதேவியைத் தூக்கிய முராரியின் கோரைப்பற்கள் போலும் விளங்குகிறது.
சிந்தாமணி என்னும் ரத்னம் சிந்தித்ததையெல்லாம் அளிக்க வல்லது. அம்பாளுடைய (ஹ்ரீம்) மாயாபீஜத்திற்குச் சிந்தாமணி பீஜம் என்று பெயர். ‘ஹ்ரிம்’ பீஜத்தை ஒன்றுக்கொன்று பார்வையான திரிகோணங்களின் நடுவில் எழுதி அதைச் சுற்றி விருத்தம் வரைந்து அதை மேல்பாகத்தில் அஷ்டதளத்தால் அலங்கரித்து, அதில் தேவியின் திருவடிகளைத் தியானித்துக் கொண்டு ஸௌந்தர்யலஹரீ சுலோகங்களைப் பக்தியுடன் பாராயணம் செய்துவந்தால் கனவிலும் நனவிலும் பராசக்தியின் தரிசனமும் பரிபூர்ண கடாக்ஷமும் ஏற்படும்.
4. பாத கமலங்களின் நிகரற்ற சக்தி
ஸகல பய நிவ்ருத்தி, ரோக நிவ்ருத்தி
த்வதந்ய: பாணிப்ப்யா: மபயவரதோ தைவதகண:
த்வேகா நைவாஸி ப்ரகடித வராபீத்யபிநயா
பயாத் த்ராதும் தாதும் பலமபி ச வாஞ்சா ஸமதிகம்
ஶரண்யே லோகானாம் தவ ஹி சரணாவேவ நிபுணௌ. 4
உலகிற்குப் புகலிடமே ! உனக்கு வேறான தேவக்கூட்டங்கள் கைகளால் அபயத்தையும் வரத்தையும் அளிப்பதாகக் காட்டுகிறர்கள். நீ ஒருத்தி மட்டும் அபிநயத்தால் வரத்தையும் அபயத்தையும் ப்ரகடனம் செய்பவளாக இருப்பதே இல்லை. ஏனென்றால் பயத்தினின்று காப்பாற்றவும், வேண்டியதற்கு அதிகமாகவே பலனை அளிப்பதற்கும்கூட உன்னுடைய திருவடிகள் திறமை உடையவைகள் அன்றோ ?
ஸம்ஸார பயத்தைப் பயத்தைப் போக்கி மோக்ஷமளிக்கும் அபயமுத்திரை யைத் தூக்கிய வலது கரத்திலும், உலக இன்பங்களை அளிக்கும் வரமுத்திரை இடது கரத்திலும் ஸாதாரணமாக தேவதைகளின் பிம்பங்களில் காணப்படுவது. ஆனால் த்ரிபுரஸுந்தரி தனது கரங்களில் பாசம், அங்குசம், புஷ்ப பாணம், கரும்புவில் ஆகியவற்றைத் தரித்திருப்பதால் பாதங்களில் அபயவரத சக்திகள் அம்பிகையின் பாதங்களில் அடங்கியிருப்பதாகத் தியானிக்கப் படுகிறது.
5. தேவி பூஜையின் மகிமை
ஸ்த்ரீ புருஷ வசியம்
ஹரிஸ் த்வா மாராத்த்ய ப்ரணத ஜன ஸௌபாக்ய ஜனனீம்
புரா நாரீ பூத்வா புரரிபுமபி க்ஷோப மனயத்
ஸ்மரோ(அ)பி த்வாம் நத்வா ரதி நயன லேஹ்யேன வபுஷா
முனீனா மப்யந்த: ப்ரபவதி ஹி மோஹாய மஹதாம் 5
வணங்கும் ஜனங்களுக்கு ஸகல ஸௌபாக்கியத்தையும் தோற்றுவிக்கும் உன்னை விஷ்ணு பூஜித்து முன்னொரு முன்னொரு சமயம் பெண்வடிவு கொண்டு முப்புரம் எரித்த பரமசிவனையும் கூட மனம் சலிக்கும்படி கவர்ந்தார். மன்மதனும் உன்னை வணங்கி ரதிதேவி கண்கொண்டு பருகும் அமுதம் போன்ற வடிவங் கொண்டு மஹான்களான முனிவர்களுக்கும் கூட அந்தரத்தில் மதிமயக்கம் உண்டாகும்படி சக்தியுள்ளவன் ஆகிறான் என்பது நிச்சயம்.
6. கடைக்கண் பார்வை
புத்ர ஸந்தானம்
தனு: பௌஷ்பம் மௌர்வீ மதுகரமயீ பஞ்ச விஶிகா:
வஸந்த: ஸாமந்தோ மலயமரு தாயோதன ரத:
ததாப்யேக: ஸர்வம் ஹிமகிரிஸுதே காமபி க்ருபாம்
அபாங்காத்தே லப்த்வா ஜகதித மனங்கோ விஜயதே 6
பனிமலையரசன் பெண்ணே ! மன்மதனுடைய வில் மலர்களாலானது. நாண்கயிறு தேனீக்களாலானது. பாணங்கள் ஐந்தே, அவையும் பூக்கள். வஸந்தருது போர்செய்ய ஏறிவரும் தேர் மலயத்திலிருந்து விசும் தென்றல் காற்று. அப்படியிருந்தும் உடலில்லாத மன்மதன் ஒருவனாகவே உன்னுடைய கடைக்கண் பார்வையால் ஏதோ ஒரு கிருபையை அடைந்து இந்த உலகம் அனைத்தையும் ஜயிக்கிறான்.
இந்தச் சுலோகத்தில் சொல்லப்படும் உபாசனைக்கு ‘அனங்க வித்யா’ என்று பெயர். இதற்கு ரிஷி மன்மதன். அவ்யக்த காயத்ரீச் சந்தம், ராஜராஜேஸ்வரி தேவதை.
7. தேவியின் ஸ்வரூபம்
தேவியின் ஸாக்ஷாத்காரம், சத்ருஜயம்
க்வணத் காஞ்சி தாமா கரிகலப கும்ப ஸ்தன நதா
பரீக்ஷீணா மத்த்யே பரிணத ஶரச்சந்த்ர வதனா
தனுர் பாணான் பாஶம் ஸ்ருணி மபி ததானா கரதலை:
புரஸ்தா தாஸ்தாம் ந: புரமதிது ராஹோ புருஷிகா 7
சலங்கைகள் கிலுகிலுக்கின்ற தங்க ஒட்டியாணம் பூண்டவளும் யானையின் மஸ்தகம் போன்ற நகில்களால் சற்று வணங்கிய வடிவுடையவளும், இடையில் மிக மெலிந்தவளும், சரத்காலத்துப் பூர்ணசந்திரன் போன்றமுகம் படைத்தவளும், கைகளால் கரும்புவில்,புஷ்பபாணம், பாசம், அங்குசம் ஆகியவற்றை தரிப்பவளும் முப்புரத்தை யழித்த பரமசிவனுடைய ஆச்சரியமான அகம்பாவ வடிவினளுமான பராசக்தி எங்களுக்கு எதிரில் எழுந்தருளட்டும்.
மணிபூரக சக்கரத்தில் தேவி எந்த ரூபத்துடன் பிரகாசிக்கிறாளோ அது இங்கே வர்ணிக்கப் படுகிறது. மேருதண்டம் என்னும் முதுகெலும்பிற்குள் ஸுஷும்னா என்ற நாடி ஸூக்ஷ்மமாக இருக்கிறது. இதன் அடியில் மூலாதார சக்கரமும், அதற்கு நாலு விரற்கடைக்குமேல் ஸ்வாதிஷ்டானமும், அதற்குமேல் தொப்புளுக்கு எதிரில் மணிபூரகமும், இருதயத்துக்கு எதிரில் அநாஹதமும், கண்டத்துக்கு எதிரில் விசுத்தியும், புருவமத்தியில் ஆஜ்ஞையும், சிரஸின்மேல் ஸஹஸ்ரார சக்கரமும் உள்ளன். மணிபூரகத்தில் த்ரிபுராந்தகனான காமேசுவரனுடைய ஜீவநாடியாகத் தேவி விளங்குகிறாள்.
“மன்மதனுக்கும் கரும்புவில், அம்பாகுக்கும் கரும்புவில்; அவனுக்கும் பஞ்சபாணம் புஷ்பந்தான், இவளுக்கும் பஞ்சபாணம் புஷ்பந்தான்; .. இதைப் பின்பற்றி மூககவி “உன்னுடைய கடாக்ஷம் சிவனிடம் மோஹத்தை உண்டுபண்ணுகிறது, மனுஷ்யர்களுடைய மோஹத்தை அடக்கிவிடுகிறது” என்கிறார்.” – காமகோடி சங்கராச்சாரியார்.
(க்வணத்=) மணிபூரகத்திலிருந்து தேவி அனாஹத சக்கரத்தை நோக்கி எழுந்தருளுகையில் பக்தர்கள் தேவியின் கால்சலங்கைகளின் கிலுகிலுப்பைக் கேட்கின்றனர்.
The Devi carries in her left lower arm the sugarcane bow with a string of bees, in her lower right arm the five arrows of Kamala, Raktakairava, Kahlaara, Indeevara, and Sahakaara flowers; in her upper left arm the Paasa, noose, shining like coral, and in her upper right arm the Ankusaa, goad, shining like the crescent. These weapons of the Devi are said to assume the Sthuula (gross), the Suuksma (Mantramaya) and the Para (Vaasanaamaya) forms.
- Pandit S Subrahmanya Sastri and T R Srinivasa Ayyangar in The Ocean of Beauty – Soundarya Lahari
8. தேவியின் சிந்தாமணிக்ருஹம்
ஜனனமரண நிவ்ருத்தி
ஸுதா ஸிந்த்தோர் மத்த்யே ஸுரவிடபி வடீ பரிவ்ருதே
மணித்வீபே நீபோபவனவதி சிந்தாமணி க்ருஹே
ஶிவாகாரே மஞ்சே பரமஶிவ பாயாங்க நிலயாம்
பஜந்தி த்வாம் தன்யா: கதிசன சிதானந்த லஹரீம். 8
அமிர்தக் கடலின் நடுவில் கல்பகவிருக்ஷத் தோப்புகளால் சூழப்பட்ட ரத்னத்தீவில் கதம்ப மரங்கள் நிறைந்த உத்தியான வனத்துடன் கூடிய சிந்தாமணிக்கிருஹத்தில் பரம மங்கல வடிவமான சிம்மாஸனத்தில் பரமசிவனுடைய மடியில் வீற்றிருக்கும் ஞானானந்தக் கடலின் அலைபோன்ற உன்னை புண்ணியவான்களான சிலரே வழிபடுகிறார்கள்.
இங்கே தேவியின் வாசஸ்தானமான சிந்தாமணி க்ருஹம் வர்ணிக்கப்படுகிறது. அது ஸகலப் ப்ரம்மாண்டங்களுக்கும் அப்பால் அமிருதஸாகரத்தின் மத்தியில் ரத்தினத்தீவில் உள்ளது. அதன் வெளி பிராகாரங்கள் இருபத்தைந்து: அவை வரிசையாக (1) இரும்பு (2) எஃகு (3) செம்பு (4) வெள்ளீயம் (5) பித்தளை (6) பஞ்சலோகம் (7) வெள்ளி (8) தங்கம் (9) புஷ்பராகம் (10) பத்மராகம் (11) கோமேதகம் (12) வஜ்ரம் (13) வைடூரியம் (14) இந்திரநீலம் (15) முத்து (16) மரகதம் (17) பவழம் (18) நவரத்தினம் (19) நானாரத்தினம் இவற்றாலும், (20) மனம் (21) புத்தி (22) அஹங்காரம் (23) சூரியனின் தேஜஸ் (24) சந்திரனின் தேஜஸ் (25) மன்மதனின் தேஜஸ் இவற்றால் ஆகியவை.
- எட்டாவது பிராகாரத்தில் உள்ளது கதம்பவனம் – இங்கே பரதேவதையின் மந்திரிணியான சியாமளாதேவி வசிப்பாள்.
- பதினைந்தாவது பிராகாரத்தில் அஷ்ட்திக்பாலர்கள் வசிப்பர்.
- பதினாறவது – ஸேனா நாயகி தண்டினி அல்லது வாராஹியின் -இருப்பிடம். இங்கேயும் சியாமளாதேவிக்கு ஒரு கிரஹம் உண்டு,
- பதினேழாவதில் யோகினிகள் வசிப்பர்.
- பதினெட்டில் மஹாவிஷ்ணு;
- பத்தொன்பதில் ஈசானன்.
- இருபதில் தாரா தேவி
- இருபத்தொன்றில் வாருணி.
- இருபத்திரண்டாவது அஹங்காரக் கோட்டையில் குருகுல்லா தேவி
- இருபத்துமூன்றாவது சூரியப்பிராகாரத்தில் மார்த்தாண்டபைரவர்.
- இருபத்துநான்கில் சந்திரன்
- இருபத்தைந்தாவது சிருங்கார வனத்தில் மன்மதன்.
இதற்குள் மஹாபத்ம வனமும் கற்பகவிருக்ஷத் தோப்பும், அதன் நடுவில் சிந்தாமணிக்கிருஹம்.
சிந்தாமணிக்கிருஹத்தின் அக்கினிமூலையில் சிதக்கினி குண்டமும், கிழக்குத் துவாரத்தின் இருபுறமும் மந்த்ரிணி, தண்டினி தேவிகளின் கிருஹனளும் உள்ளன. நான்கு துவாரங்களிலும் சதுராம்னாய தேவதைகள் காவல் இருப்பர்.
இதனுள் நவாவரணங்களுடன் கூடிய ஸ்ரீசக்கரம். இந்த ஸ்ரீசக்ரத்தின் நடுவில் ஸர்வானந்தமயம் என்னும் பிந்துபீடத்தில் பஞ்சப் பிரம்மாஸனத்தில் ஸதாசிவனுடைய மடியில் மஹாத்ரிபுரஸுந்தரி எழுந்தருளியிருப்பாள். பஞ்சப் பிரம்மாஸனமாவது, பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், ஈசானன் ஆகியவர்களைக் கால்களாகவும், ஸதாசிவனுடைய மடியையே மேல்பலகையாகவும் கொண்ட கட்டில். இதுவே “ அ-உ-ம-அர்த்த, மாத்திரை, பிந்து” வடிவான ஓங்கார மஞ்சம்.
9. ஆதார சக்கரங்கள்
தேசாந்திரம் சென்றவர் திரும்பிவருதல், அஷ்டைச்வர்ய ஸித்தி
மஹீ மூலாதாரே கமபி மணிபூரே ஹுதவஹம்
ஸ்த்திதம் ஸ்வாதிஷ்ட்டானே ஹ்ருதி மருத மாகாஶமுபரி
மனோ(அ)பி ப்ரூமத்யே ஸகலமபி பித்வா குலபதம்
ஸஹஸ்ராரே பத்மே ஸஹ ரஹஸி பத்யா விஹரஸே 9
மூலாதாரத்தில் பிருதிவீ தத்துவத்தையும் மணிபூரத்தில் ஜலதத்துவத்தையும் ஸ்வாதிஷ்டானத்தில் இருக்கும் அக்னி தத்வத்தையும், இருதயத்தில் அனாகதத்தில் வாயு தத்துவத்தையும், அதற்குமேல் விசுத்தியில் ஆகாச தத்துவத்தையும், புருவ நடுவில் ஆக்ஞையில் மனஸ் தத்துவத்தையும், இவ்வாறாக ஸுஷும்னா மார்க்கத்திலுள்ள எல்லாச் சக்கரங்களையும் ஊடுருவிச் சென்று ஆயிரம் இதழ் கொண்ட கமலத்தில் (ஸஹஸ்ராரபத்மம்) ரகசியமான இடத்தில் உனது பதியான ஸதாசிவன் கூடி மகிழ்கிறாய்.
ஆறு ஆதார சக்கரங்களையுன் கடந்து சென்று ஸஹஸ்ராரத்தில் ஸமாதி எய்துதல், ஷட்சக்ரவேதனம் என்றும் அந்தர் யாகம் என்றும் சொல்லப்படும், அது இங்கே விளக்கப் படுகிறது.
- மூலாதாரமும் ஸ்வாதிஷ்டானமும் சேர்ந்து அக்கினிகண்டம். அதற்குமேல் ப்ரம்மக்ரந்தி என்று ஒரு முடிச்சு உள்ளது.
- மணிபூரகமும் அநாஹதமும் சேர்ந்து சூரிய கண்டம். அதற்குமேல் விஷ்ணுக்ரந்தி என்று ஒரு முடிச்சு உள்ளது.
- விசுத்தியும் ஆஜ்ஞையும் சேர்ந்து ஸோம கண்டம். அதற்குமேல் ருத்ரக்ரந்தி என்று ஒரு முடிச்சு உள்ளது.
க்ரந்தி என்பது நாடிகளின் முடிச்சையும் நாடியினுள் பாயும் எண்ணங்களில் பூர்வ வாசனையால் ஏற்படும் சிக்கல்களையும் குறிக்கும்.
மூலாதாரத்திலிருந்து எழுந்த பராசக்தி ஸ்வாதிஷ்டானத்தைக் கடந்ததும் மணிபூரகத்தில் பிரத்தியக்ஷமாவாள். அங்கே அர்க்யம், பாத்யம், முதல் பூஷணம் வரை உபசாரங்களைச் செய்து அநாஹத்திறு அழைத்துவந்து, தூபம் முதல் தாம்பூலம் வரை உபசாரங்களைச் செய்து, விசுத்திக்கு அழைத்துவந்து, அங்கே பராசக்தியைச் சிம்மாஸனத்தில் இருக்கச் செய்து, சந்திரகலாரூபமான ஸ்படிகமணிகளால் பூஜித்து, ஆஜ்ஞா சக்கரத்திற்கு அழைத்துவந்து நீராஜனம் செய்து, ஸஹஸ்ராரத்தின் நடுவில் இருக்கும் சந்திரமண்டலத்தில் ஸதாசிவனுக்குப் பக்கத்தில் சேர்த்து அவர்களைச் சுற்றிப் படுதாவைப் போட்டு, தான் ஸமீபத்தில் இருந்துகொண்டு அம்பாள் மூலாதாரத்திற்குத் திரும்பும் ஸமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கவேண்டும். இதுதான் அந்தர்யாகம் அல்லது ஸமயாசாரம் எனப்படும் மானச பூஜை.
குலபதம் என்பது ராஜவீதி என்று சொல்லக்கூடிய ஸுஷும்னா மார்க்கமே,
Pandit S Subrahmanya Sastri and T R Srinivasa Ayyangar in The Ocean of Beauty – Soundarya Lahari:
This stanza contains in a nutshell the quintessence of the sublimest truths of the Vedanta and the Yoga systems in harmonious combination, in relation to the worship of the Devi, as the Kundalini-Sakti of the Pindaanda (microcosm), and as the Tripurasundari of the Brahmanda (macrocosm). For a prpoper appreciation of the conception of the External Verities according to the conceptionof the ancient Rishis of India and their bearing on the Cosmogeny of the microcosm and the macrocosm will be found useful.
An Eternal Verity may be defined as that which gives scope for functioning to all orders of creation, till their final dissolution. Some Tantra-s classify the Eternal Verities into three groups:
- Aatma Tattvas 2. Vidya Tattvas 3. Siva Tattvas
Aatma Tattvas: characterised by Jadathvaa i.e.
non-sentinence
Vidya Tattvas: characterised by both Jadathvaa i.e.
non-sentinence and Prakaasakatva, the sentinence
Siva Tattvas: characterised by Prakaasakatva, the
Sentinence pure and simple.
According to the Kalpa-sutra-s, twentyfour fall under the first group, seven under the second and five under the third. These may be arranged as shown hereunder with their characteristic properties:
Aatma tattvas
- Prithvi – Earth, possessed of solidity
- Ap – Water, possessed of fluidity
- Tejas – Fire, possessed of heat
- Vaayu – Air, of the character of perpetual motion
- Akaasaa – Ether, of the character of space
- Gandha Tanmaatraa – Smell, in the form of subtle Earth
- Rasa Tanmaatraa – Taste, in the form of subtle Water
- Rupa Tanmaatraa – Form, in the form of subtle Fire
- Sparsa Tanmaatraa – Touch, in the form of subtle Air
- Sabda Tanmaatraa – Sound, in the form of subtle Eather
- Srothra – the auditory sense that perceive sound
- Tvac – the tactile sense that perceives Touch
- Chaksus – the optic sense that perceives Form
- Jihva – the gustatory sense that perceives Taste
- Ghraana – the olfactory sense that perceives Smell
- Vaac – speech, the motor-organ of articulate expression.
- Paani – the hand, the motor-organ of grasping and leaving.
- Paada –the foot, the motor-organ of locomotion
- Paayu – the motor-organ of evacuation
- Upasthaa – the motor-organ of generation and carnal pleasure
- Manas – the Mind, the inner sense that is attained, when Rajas, the mobility of misery, preponderates over Sattva and Tamas, the rhythm of happiness and inertia of delusion, which is the root cause of all volition
- Buddhi – the Intellect, the inner sense which is attained, when rhythm preponderates over mobility and inertia, and as such, is at the root of all conviction
- Ahamkaaraa – the Egoism, the inner sense which is attained, when inertia preponderates over rhythm and mobility, and which is at the root of all fancy, converging towards the self
- Prakriti – otherwise known as the Chitta which is attained by the equiposed state of rhythm, mobility and inertia
Vidya Tattvas
- Purusha or the Jiva (of the microcosm) – which, though full in itself, commands only to a limited extent, the five powers detailed below
- Kalaa – the Kriya-sakti, the power to do all things, but to a limited extent, inherin in the Jiva
- Avidya – also called Vidya – the Jnaana-Sakkti, in a veiled form and thus limited in its operation, inherent in the Jiva
- Raagaa – the Icchaa-sakti, perpetual satisfaction, which operates only partially and is therefore limited in extent, inherent in the Jiva
- Chit-sakti — perpetually inherent in the Jiva, when limited but the operation of the six changes denoted by ‘exists’, ‘takes birth’, ‘grows’, ‘ripens’, ‘wanes’, and ‘perishes’.
- Niyati – that which causes the Ananda-sakti, absolute independence, inherent in the Jiva
- Maayaa – the condition operating upon the Isvara, causing it to look upon the phenomenal world as ‘this’ , i.e., an entity separate from itself
Siva Tattvas
- Suddha Vidya – the condition operating upon the Sadaasiva, causing it to identify itself with the phenomenal world with the impression ‘I am this’
- Maheswara – that which is operated upon by the Maayaa
- Sadaasakti – that which is operated upon by the Sudhha Vidya
- Sakti – the desire which is but the impression of the world to be created
- Siva – the absolute non-differentiated existence, when conditioned by the Sakti.
Fifteen more are added to the number of Eternal Verities by some, by a process of further elaboration, thus making fifty-one in all, answering to the 51 letters of the Samskrt alphabet:
The seven Dhaatus, humours:
- Tvac – the external sheath of organs
- Asrj – blood
- Maamsa – flesh
- Medas – fat
- Asthi – bone
- Majjaa – marrow
- Suklaa – semen
The five vital airs:
- Praanaa
- Apaanaa
- Vyaanaa
- Udaanaa
- Samaanaa
The three gunaas:
- Rhythm (Sattva)
- Mobility (Raajasa)
- Inertia (Thaamasa)
The five Elements, the five Tanmaatraa-s, the five Organs of perception, the five organs of motor action, the Mind, the Maayaa, the Sudhha-Vidyaa, the Maheswara and the Sadaasiva are the twentyfive Eternal Verities from the Vedic standpoint, while the others are capable of being included in the twentyfive.
In this stanza, the Devi of the macrocosm, in the form of her exact prototype, the Kundalini of the microcosm, is represented as having broken through the entire Kula path containing the six Chakra-s of psychic energy, indicative of the twenty-one Tattvaa-s, to reach her Lord in the Sahasraaraa, the habitat of the four remaining Tattvaa-s, there to divert herself in secrecy with her Lord.
Even as Paramasiva, in the absence of his conjunction with the Tripurasundari, is powerless, so also the Jiva, without the operation of the Kundalini, will be very much the same as a corpse.
The vital force, which is inherent in every limb, muscle, nerve-centre and other physiological organs and which causes the entire frame to function, is but one aspect of the Kundalini. It is the same vital force that is the root cause of the functioning of the entire phenomenal world and could be comprehended only by those rare mortals who have gained mastery over it.
It is upon this fundamental fact that the system of Yoga is based, as the Praanaayaamaa, or the control of this vital force forms the bedrock of that system. If only the secret of control of this vital force and the human mind (the psychic force), which is only a subtle variety of the vital force, should be mastered by any person, he may be said to have conquered the phenomenal world. No wonder the Yogin takes his stand upon the Praanaayaamaa and Manolayaa for the successful accomplishment of the state of Samaadhi, his goal.
It is with that end in view that the Yogin concentrates his mind, controls the vital force and projects them towards the Moolaadhaaraa, the first psychic centre of energy, which results in the rousing of the Kundalini, dormant with its form of three-and-a-half spirals coiled therein.
Those that are proficient in the Yoga Saastraa hold that this machine of the human frame, which is controlled by the Kundalini, contains sevety-two thousand Naadi-s, the main ones among them, e.g. the Sushumnaa, the Idaa, the Pingalaa, etc. having distinct functions connected with the respiratory system alloted to them, and the other important Naadi-s controlling the sensory and motor organs.
The psychic energy requisite to control the various organs is said to abide in the six Chakraa-s of the Sushumnaa path, provided with the three stages, known as the Rudra-, Vishnu-, and Brahma-granthis-s (knots); which are respectively the regions of Fire, the Sun and the Moon, each of them situated at the end of a pair of these Chakraa-s, in the order given above.
In the case of ordinary mortals, their vital energy is wasted through the Idaa and Pingalaa, but in the case of the initiated, it is reulated in such a way that the Praanaa, coursin g through the Idaa and Pingalaa, and also the Apaanaa, are made to conserve the purpose of rousing the Kundalini and sending her up to the Brahmarandhraa.
All impulses, psychic and organic, may be classified as volitional, cognitional and actional, corresponding to the Ichhaa-, Jnaana-, and Kriyaa-saktis of the Devi. These, when pertaining to the body, are attributable to the Kundalini, while the corresponding cosmic impulses are attributable to the Tripurasundari.
Thou art diverting Thyself, in secrecy with Thy Lord, in the thousand-petalled lotus, having pierced through the Earth situated in Mulaadhaara, the Water in the Manipuraa, the Fire abiding in the Svaadhishtaana, the Air in the Heart (Anaahataa), the Ether above (the Visudhhi), and Manas between the eyebrows (Aajnaa) and thus broken through the entire Kula path.
Thou – in the form of Tripurasundari of the macrocosm and the Kundalini of the microcosm
Thy Lord – the Siva of the macrocosm and the Jiva of the microcosm, bereft of Maayaa, illusion
the thousand-petalled lotus – which is no other than the upper Srichakraa, the Bindu of which represents the Siva and the Jiva,bereft of Maayaa, as the case may be. This is the final resort, the Nirvaanaa of the accomplished seeker, lying beyond the Kula path, the Sushumnaa Maargaa, which contains the six Chakra-s mentioned in the stanza, in the ascendin g order of subtlety, with the three granthi-s in their appropriate places. The Sahasraaraa is considered to be the inner Srichakraa to be meditated upon with all the fifty-one letters of the Samskrt alphabet. The view is taken by some that the Bindu has its position in the Bindu of the Chakraa and the other fifty letters are to be arranged consecutively over the thousand petals, twenty times.
diverting Thyself, in secrecy with Thy Lord – Sudhha-Vidya in coalescence with Sadaasivaa is known as the Saadaakhyaa or the Paramaatman, which may be charecterised as the twnty-sixth Tattvaa, on the attainment of which is experienced Nirvaavaa or Jivanmukti.
having pierced through – having got beyond, after overcoming and absorbing in her own form. The ascent and the descent of the Kundalini constituting the Kundalini Yoga are said to form an Antaryaagaa.
the Earth situated in Mulaadhaara – But for the Muladhara, which partakes of the character of the Earth-element through its subtle form of Gandha-tanmaatraa, the body will become unstable with its equilibrium disturbed. This chakraa is no other than the Tri-kona of the Sri-chakraa. Piercing through this element would mean conquering it. The Yogin who does so is said to attain the power of penetration through massive stone walls, etc.
the Water in the Manipuraa – Manipura, the interior of which the Devi is said to fill with gems; hence the practice among the Samayin-s of the offering of jewels studded with various kinds of gems, while meditating on her in this seat. Although the Manipura is the third in the order of the Chakraas, it has been given the second place in the stanza to suit the order of the elements. This Chakraa represents water in its Rasa-tanmaatraa form. Conquest of this by the Yogin is said to confer on him the next higher power of mastery, such as floating, walking, etc. over water, The inner Dasaaraa of the Sri-chakraa is indicated by this.
the Fire abiding in the Svaadhishtaana — where the Devi is said to take her stand in the form of Kundalini, of her own accord, making the knot of Rudhra-granthi thereon. The fore is in the form of Ruupa-tanmaatraa. The conquest of this by the Yogin is credited with the bestowal of the power of fire-walking,etc. The SAshta-kona of the Sri-chakraa is indicated by this.
the Air in the Heart (Anaahataa) – the Air in the form of Sparsa-tanmaatraa. The heart signifies the Anaahata-chakraa of the heart-lotus. The word Anaahataa means the Naadaa, sound, produced without impact in the recess of the heart; hence ythe name of the Chakraa. The outer Dasaara of the Sri-chakraa is indicated by this. By the conquest of air, the Yogin is said to attain the fleetness of wind, buoyancy, etc.
the Ether – in the form of Sabda-tanmaatraa; above – i.e., above the heart, which is meant by the Chakra wich is as clear as the crystal, namely, the Visudhhi. The Chatur-dasaara of the Sri-ckakraa is indicated by this. By the conquest of this the Yogin attains the power of traversing the ethereal regions.
It may be noted here that Purnananda Swamin, the author of Satcakra-nirupana and other Taantrikaa-s are of the view the elements , Earth, Eater, Fire, Air and Ether have, as their corresponding Chakraas , the Muladhra, the Svadishtana, the Manipoura, the Anahata and the Visudhhi, which is at variance with this stanza of Samkara-bhagavatpaadaa, the author of this work, who has the support of the Vismakeswara Tantra in his favour, as explained by Bhaskaracharya in his Sethubanda.
Manas between the eyebrows (Aajnaa) – Manas, which embraces within itself the five senses of perception and the five senses of motor action, i.e., in all, the eleven Tattvaas. This refers to the Ajnaa-chakraa, so called because it is at this stage that a speck of knowledge about the Devi dawns. As she is bent upon breaking through the Brahma-granthi on the way to the Sahasraaraa, she remains there only for a trice, manifesting herslf in the form of a streak of lighting. The Chathush-kona i.e. the Bhugra of the Sri-chakraa is indicated by this. By conquering the mind, the Yogin is said to attain mystic powers, such as clairvoyance, clairaudience, telepathy etc.
The mystic powers explained above, as resukting from the mastery of these Chakraas, are really so many pitfalls to be avoided by the practitioner, as they are likely to lead him astray from his final goal of Nirvaanaa.
These six Chakraas are but temporary stages or planes wherein the Kundalini rests awhile, avowedly for mastering them, while the Sahasraaraa is her permanent abode, whence the practioner should not lose sight of his final goal, Nirvaanaa, beguiled by the temptations offered by the psychic powers attainable at the lower centres, but should lead the Kundalini on to the Sahasraaraa, there to effect her union with her Lord. Up to the moment of such blending, the practitioner retains his individual consciousness and thereafter enters on the blissful state of Nirvaanaa as long as the Kundalini rests in the Sahasraaraa prior to her descent therefrom. The duration of her staty depends on the strength of practice and the previous experience of the practitioner.
broken through the entire path of Kula – and thus having transcended the tenty-one Tattvaa-s from Prithvi to Manas, and the six-chakraas, which when taken together, would form the lower Sri-chakraa.
Bija- Bhuta- Chakraa- part of Srichakraa
Ham– Ether-Visudhhi-Chathurdasaara
Yam– Air-Anaahataa-Bhahirdasaara
Vam – Water – Manipura – Antardasaara
Ram – Fire – Svaadishthaana- Astakona
Lam – Earth – Mulaadhaaraa – Trikona
10. மூலாதாரம்
சரீர சுத்தி, வீர்ய விருத்தி
ஸுதாதாராஸாரைச் சரணயுகலாந்தர் விகலிதை:
ப்ரபஞ்சம் ஸிஞ்சந்தீ புனரபி ரஸாம்னாய மஹஸ:
அவாப்ய ஸ்வாம் பூமிம் புஜகநிப மத்த்யுஷ்ட வலயம்
ஸ்வமாத்மானம் க்ருத்வா ஸ்வபிஷி குலகுண்டே குஹரிணி 10
திருவடிகள் இரண்டின் இடையிலிருந்து பெருகும் அமிருத தாரையின் பிரவாஹத்தால் ஐம்பூதங்களால் ஆன உடலிலுள்ள நாடிகள் எல்லாவற்றையும் நனைப்பவளாய் அமிருத கிரணங்களைப் பொழியும் சந்திர மண்டலத்தில் இருந்து, உனது இயற்கையான இருப்பிடமாகிய மூலாதாரத்தை மறுபடியும் அடைந்து பாம்பைப்போல் குண்டலவடிவாக உன்னுடைய உருவத்தை செய்துகொண்டு சிறுதுவாரம் உடைய மூலாதார குண்டத்தில் உறங்குகிறாய்.
முன் சுலோகத்தில் தேவியின் ஆரோஹணம் சொல்லப்பட்டது, இங்கே அவரோஹணம் சொல்லப்படுகிறது. ஸஹஸ்ராரத்தில் பரமசிவனுடன் கூடியிருந்து ஆனந்த வெள்ளத்தைப் பெருக்கி அதனால் உடலிலுள்ள எல்லா நாடிகளையும் நனைத்துவிட்டு மீண்டும் மூலாதாரத்திற்குத் தேவி வருகிறாள்.
குலகுண்டம் என்பதி கு என்பது பிருதிவி தத்துவம். அது மூலாதாரத்தில் லயம் அடைவதால் மூலாதார சக்கரம் குலகுண்டம் எனப்படும். அதன் நடுவில் தாமரையில் இருப்பதுபோல் ஒரு கிழங்கு இருப்பதாகவும் அதன் நடுவில் ஒரு ஸூக்ஷ்மமான துவாரம் இருப்பதாகவும், அதில் தலையை வைத்துக் கொண்டு மூன்றரை வட்டவடிவில் குண்டலம் இட்டுக்கொண்டு தாமரை நூல்போல் மெல்லிய பிழம்பு வடிவில் குண்டலினி சக்தி உறங்குவதாகவும் கூறப்படுகிறது.
பக்தன் பத்மாஸனத்தில் அமர்ந்து கும்பகப் பிராணாயாமம் செய்து ஸ்ரீவித்யா பீஜத்தை மானஸிகமாக ஆவிருத்தி செய்தால் குண்டலினி சக்தி உறக்கம் விட்டு எழுந்து ஆறு சக்கரங்களையும் கடந்து ஸஹஸ்ராரத்தில் திவ்யரூபத்தோடு காட்சியளிப்பாள்.
Having in-filled the pathway of the Naadi-s with the streaming shower of nectar flowing from Thy pair of feet, having resumed Thine own position from out of the resplendent Lunar regions, and Thyself assuming the form of a serpent of three-and-a-half coils, sleepest Thou in the hollow of the Kulakundaa.
11. ஸ்ரீ சக்கர வர்ணனை
ஸத்ஸந்தானம், ஜன்ம ஸாபல்யம்
சதுர்ப்பி: ஸ்ரீகண்ட்டை: ஶிவயுவதிபி: பஞ்சபிரபி
ப்ரபிந்நாபி: சம்போர் நவபிரபி மூலப்ரக்ருதிபி:
சதுஶ்சத்வாரிம்ஶத் வஸுதல கலாஶ்ர த்ரிவலய:
த்ரிரேகாபி: ஸார்த்தம் தவ சரணகோணா: பரிணதா: 11
நான்கு சிவசக்கரங்களாலும், இவற்றிலிருந்து வேறான ஐந்து சக்தி சக்கரங்களாலும் ஒன்பதாக உள்ளதும், பிரபஞ்சத்தின் மூலகாரணமான தத்துவங்களுடன் கூடியதுமான உன்னுடைய இருப்பிடமான ஸ்ரீசக்ரத்தின் கோணங்கள் எட்டுத்தளம், பதினாறு தளம், மூன்று வட்டங்கள், மூன்று கோடுகள் அகியவற்றுடன் கூடி பரிணமிக்கும் நாற்பத்து நான்காக உள்ளன.
பராசக்தியின் யந்த்ர்ரூபம் ஸ்ரீசக்கரம். அது இங்கே வர்ணிக்கப் படுகிறது.
முக்கோணம், எட்டுக் கோணம், இரண்டு பத்துக் கோணங்கள், பதினான்கு கோணம் ஆகிய ஐந்தும் சக்தி சக்கரங்கள். பிந்து, எட்டிதழ்க்கமலம், பதினாறிதழ்க்கமலம்., நாற்கோணம் ஆகிய நான்கும் சிவச்சக்கரங்கள்.
–– லலிதா த்ரிசதி
ஸ்ரீசக்கரம் ஒன்பது முக்கோணங்களால் ஆகியது. ஆகையால் கீழ் நோக்கிய ஐந்தும் சக்தி சக்கரங்கள் என்றும், மேல் நோக்கிய நான்கும் சிவ சக்கரங்கள் என்றும் இன்னொரு வகையில் கொள்ளப் படும். – வரிவஸ்யாரஹஸ்யம்
ஸமயாசாரப்படி வரையும் சிருஷ்டிக்கிரம சக்கரத்தில் நடுமுக்கோணம் மேல் நோக்கியது.
கௌலாசாரப்படி வரையும் ஸமாரசக்கரத்தில் நடுமுக்கோணம் கீழ் நோக்கியது.
மூலப்ரக்ருதிபி: ஒன்பது சக்கரங்களும் ஆண்டமாகிய உலகிற்கும், பிண்டமாகிய உடலுக்கும் மூலகாரணங்களான தத்துவங்களைக் குறிப்பதால் அவை மூலப்பிரக்கிருதிகள் என்றும் யோனிகள் என்றும் கூறப்படுகின்றன:
உடலிலுள்ள மூலப்பொருள்களில் மஜ்ஜை, சுக்கிலம், பிராணன், ஜீவன் என்ற நான்கும் சிவாம்சம். த்வக் (தோல்), அஸ்ருக் (ரத்தம்), மாம்ஸம், மேதை (மூளை), அஸ்தி (எலும்பு) என்ற ஐந்தும் சக்தி அம்சம்.
அண்டத்தில் உள்ள மூலகாரணங்களில் பிருதிவீ, அப்பு, தேயு, வாயு, ஆகாசம் என்ற ஐந்தும் சக்தி அம்சம். மாயை, சுத்தவித்தை, மகேசுவரன், ஸதாசிவன் என்ற நான்கும் சிவாம்சம்.
நாற்பத்து நான்கு கோணங்கள்: 14+10+10+8+1 ஆகிய 43 கோணங்கள். சிவசக்கரங்களைத் தன்னுள்ளடக்கிக் கொண்ட பிந்து 44ஆவது.
12. உவமையற்ற ஸௌந்தர்யம்
சிவஸாயுஜ்யம், ஊமையும் பேச
த்வதீயம் ஸௌந்தர்யம் துஹினகிரிகன்யே துலயிதும்
கவீந்த்ரா: கல்பந்தே கதமபி விரிஞ்சி ப்ரப்ருதய:
யதாலோகௌத்ஸுக்யா தமரலலனா யாந்தி மனஸா
தபோபிர் துஷ்ப்ராபாமபி கிரிஶ ஸாய்ஜ்யபதவீம் 12
பனிமலையரசன் பெண்ணே கவி சிரேஷ்டர்கள் ஸரஸ்வதீ வல்லபரான பிரம்மா போன்றவர்கள்கூட உன்னுடைய அழகுக்கு உவமை கூறுவதற்கு எப்படி எப்படியோ கற்பனை செய்துபார்க்கிறார்கள். அவர்களால் முடியவில்லை. அந்த அழகை அனுபவிக்க ஆசை கொண்டதால், அழகிற்சிறந்த தேவஸ்த்ரீகளும் – பரமசிவனுடைய கண்ணைக்கொண்டு அதைக்காண விரும்பி – தவமுயற்சிகளால் அது அடைவதற்கு அரிதாயினும் பரமசிவ ஸாயுஜ்ய பதவியை மானசீகமாக அடைகிறார்கள்.
13. கடைக்கண்ணின் கிருபை
காமஜயம்
நரம் வர்ஷீயாம்ஸம் நயனவிரஸம் நர்மஸு ஜடம்
தவாபாங்காலோகே பதித மனுதாவந்தி ஶதஶ:
கலத்வேணீபந்தா: குசகலஶ விஸ்ரஸ்த ஸிசயா
ஹடாத் த்ருட்யத் காஞ்ச்யோ விகலித துகூலா யுவதய: 13
உன்னுடைய கடைக்கண் பார்வையில் விழுந்த மனிதனை அவன் வயது சென்றவனாயினும் கண்ணுக்குப் பிடிக்காதவனாயினும் சிற்றின்ப விளையாட்டுக்களில் மூடனாயினும், யௌவனப் பெண்கள் கூந்தல் முடி கலைந்தவர்களாய், நகில்களின் மேலுள்ள ஆடைகள் நழுவியவர்களாய், பரபரப்பால் ஒட்டியாணப் பூட்டுக் கழன்றவர்களாய் நூற்றுக் கணக்கானவர்கள் பின்தொடருகிறார்கள்.
ஸ்திரீகளாக வர்ணிக்கப்படும் சக்திகள் எல்லாம் அவனைத் தாமே வந்தடைகின்றன என்னும் கருத்து, கவிகளின் பரிபாஷைப்படி இங்கே சுட்டிக் காட்டப் படுகிறது.
“ஸகல விஷயங்களிலும் நமக்குள்ள சித்த விகாரங்கள் எல்லாம் நிவிருத்தியாக வேண்டும் என்பதற்காகத்தான் கரும்புவில்லையும் புஷ்பபாணங்களையும் அம்பாள் தன் கையில் வைத்துக் கொண்டிருக்கிறாள். அந்த அம்பாளுடைய கடாக்ஷம் நமக்கு ஏற்பட்டு விடுமானால், மூககவி சொல்லுகிறதுபோல் எல்லாவற்றையும் சமமாகப் பார்க்கிற திருஷ்டி, எந்த விஷயங்களிலும் மோகம் ஏற்படாத நிலை இவை உண்டாகிவிடும். அம்பாளுடைய கடாக்ஷம் கிடைத்தால் எவ்வளவு காமத்தை உண்டுபண்ணும்படியான வஸ்துவாயிருந்தாலும் அது காமத்தை உண்டுபண்ணாது.” — காமகோடி சங்கராசாரியார்
14. ஆதார சக்கரங்களின் கிரணங்களும் அப்பாலும்
பஞ்சம், கொள்ளை நோய் நிவிருத்தி
க்ஷிதௌ ஷட்பஞ்சாஶத் த்விஸமதிக பஞ்சாஶ துதகே
ஹுதாஶே த்வாஷஷ்டிஶ் சதுரதிக பஞ்சாச தநிலே
திவி த்வி: ஷட்த்ரிம்ஶன் மனஸி ச சதுஷ்ஷஷ்டிரிதி யே
மயூகாஸ் தேஷா மப்யுபரிதவ பாதாம்புஜ யுகம் 14
பூமி தத்துவமான மூலாதாரத்தில் ஐம்பத்தாறு, ஜல தத்துவமான மணிபூரகத்தில் ஐம்பத்திரண்டு, அக்கினி தத்துவமான ஸ்வாதிஷ்டானத்தில் அறுபத்திரண்டு, வாயு தத்துவமான அனாகதத்தில் ஐம்பத்துநான்கு, ஆகாச தத்துவமான விசுத்தியில் எழுபத்திரண்டு, மனஸ் தத்துவமான ஆக்ஞையில் அற்பத்துநான்கு என்று கிரணங்கள் எவை உண்டோ அவைகளுக்கு மேலாக உன்னுடைய இரண்டு திருவடிகளும் விளங்குகின்றன.
“ஆறு ஆதாரங்களும் காலகதிக்கு உட்பட்டவை” என்பதும் அவைகட்கு மேலே விளங்கும் தேவியின் திருவடிகள் “காலத்தைக் கடந்தவை” என்பதும் இங்கே குறிக்கப் படுகிறது.
- மூலாதாரம் 55 நாள்கொண்ட வஸந்தருதுவுக்கு ஒப்பாகவும்.
- மணிபூரகம் 52 நாள்கொண்ட க்ரீஷ்மருதுவுக்கு ஒப்பாகவும்.
- ஸ்வாதிஷ்டானம் 62 நாள்கொண்ட வர்ஷருதுவுக்கு ஒப்பாகவும்.
- அனாஹதம் 54 நாள்கொண்ட சரத்ருதுவுக்கு ஒப்பாகவும்.
- விசுத்தி 72 நாள்கொண்ட ஹேமந்தருதுவுக்கு ஒப்பாகவும்.
- ஆக்ஞை 64 நாள்கொண்ட சிசிரருதுவுக்கு ஒப்பாகவும்.
பிரம்மாண்டத்தில் நாட்களாய் இருப்பவை 360
பிண்டாண்டத்திலும் அக்கினிகண்டத்தில் 108, சூரியகண்டத்தில் 116, சந்திரகண்டத்தில் 136 ஆக 360 கிரணங்கள்.
தேவியின் ஸ்தானம் அக்கினிகலைக்கும் சூரியகலைக்கும் சந்திரகலைக்கும் அப்பாற்பட்டு அவைகளையெல்லாம் விழுங்கும் ஸ்வரூபம் உடையதாக விளங்குகிறது.
15. தேவியின் சுத்த ஸத்வ வடிவம்
கவித்துவமும் பாண்டியத்துவமும்
ஶரஜ் ஜ்யோத்ஸ்னா ஶுத்தாம் ஶஶியுத கடாஜூடமகுடாம்
வரத்ராஸ த்ராண ஸ்படிக குடிகா புஸ்தக கராம்
ஸக்ருந்ந த்வா நத்வா கதமிவ ஸதாம் ஸந்நிதததே
மது க்ஷீர த்ராக்ஷா மதுரிம துரீணா: பணிதய: 15
சரத்கால நிலவைப்போல் நிர்மல வடிவினளும், சந்திரனுடன் கூடிய சடைமுடியும் கிரீடமும் உடையவளும், வரம், அபயமுத்திரை, ஸ்படிகமாலை, புஸ்தகம் இவற்ரைக் கையில் கொண்டவளுமான உன்னை ஒருமுறை நமஸ்கரித்துவிட்டால், அப்படிப்பட்ட நல்லவர்களுக்கு தேனும், பாலும், திராக்ஷையும் சேர்ந்தாற்போன்ற இனிய சொற்றொடர்கள் எப்படித்தான் சித்திக்காமல் போகும் ?
ஸரஸ்வதி கடாக்ஷத்தால் வித்தையில் உயர்வடைய விரும்புபவர், தேவியைத் தியானம் செய்ய வேண்டிய முறை இங்கே கூறப் படுவதால் இது “ஸாரஸ்வதப் பிரயோஹம்” எனப்படும். அடுத்துவரும் இரண்டு சுலோகங்களிலும் இதுவே சொல்லப்படுகிறது.
சந்திரகலையை முடியில் தரித்திருப்பதால் பராசக்தியின் வடிவத்தினின்று இது வேறன்று என்பதை உணரவேண்டும். இது ஆதி மஹாஸரஸ்வதியின் வடிவம். பிரம்மபத்னியான ஸரஸ்வதி வடிவம் பின் தோன்றியது.
“ஸரஸ்வதி அஷ்டோத்தரத்தை எடுத்துக் கொண்டால் “ப்ரஹ்ம-விஷ்ணு-சிவாத்மிகாயை நம:” என்று வருகிறது. லக்ஷ்மி அஷ்டோத்தரத்தை எடுத்துக் கொண்டாலும் இப்படியே வருகிறது. அம்பாளே “பிரம்ம ரூபமாக சிரிஷ்டிகர்த்ரியாகவும், கோவிந்தரூபிணியாக கோப்த்ரியாகவும், ருத்ர ரூபமாக ஸம்ஹாரரூபிணியாகவும் விளங்குகிறாள்” என்று லலிதா ஸஹஸ்ர நாமத்திலும் வருகிறது. அவள் ஒருத்திதான் இப்படியெல்லாம் விளையாடுகிறாள்” – காமகோடி சங்கராசாரியார்.
16. அருணா மூர்த்தி
வேதாகம ஞானம்
கவீந்த்ராணாஞ் சேத: கமலவன பாலாதப ருசிம்
பஜந்தே யே ஸந்த: கதிசிதருணா மேவ பவதீம்
விரிஞ்சி ப்ரேயஸ்வாஸ் தருணதர ச்ருங்காரலஹரீ
கபீராபிர் வாக்பிர் விதததி ஸதாம் ரஞ்ஜனமமீ 16
கவியரசர்களுடைய சித்தமாகிய தாமரை வனத்திற்கு உதயசூரியன் போல் பிரகாசிப்பவளும் எதனால் அருணா எனப்பெயர் பெற்றவளும் ஆகிய உன்னை எந்த சில புண்ணியவான்கள் பூஜிக்கிறார்களோ அவர்கள் பிரம்மபத்னியான ஸரஸ்வதியின் செழிப்பு மிக்க சிருங்கார ரசத்தின் பிரவாஹம் போன்ற கம்பீரமான வாக்குகளால் ஸாதுக்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறார்கள்.
தேவியைச் சிவப்பு வர்ணமாக எட்டுக் கைகளுடன் இருதயத்தில் தியானிப்பது இங்கே கூறப்படுகின்றது. பாசம், ஈட்டி, கரும்புவில், புஷ்பபாணங்கள், புஸ்தகம், ஸ்படிகமாலை ஆகியவற்றையும், அபயம், வரம் என்ற முத்திரைகளையும் எட்டுக்கைகளில் தரித்து மூன்று கண்களுடன் விளங்கிகிறாள். இவ்வடிவம் ஸத்வத்தில் ரஜோகுணப் பிரதானமான ஸரஸ்வதி ரூபம். ப்ராஹ்மி முதலான மாத்ருகா ரூபங்கள் எல்லாம் தேவியினுடையவே.
இந்த ரூபத்தை உபாசிப்பவர்கள், சிருங்கார ரஸம் மிகுந்த கவித்திறன் பெறுவார்கள். உதாரணம் மஹாகவி காளிதாஸன்.
17. வாக் தேவதைகளால் சூழப்பெற்றவள்
வாக்விலாஸம், சாஸ்திர ஞானம்
ஸவித்ரீபிர் வாசாம் சஶிமணி ஶிலாபங்க ருசிபிர்
வஶிந்யாத்யாபிஸ் த்வாம் ஸஹஜனனிஸஞ்சிந்தயதி ய:
ஸ கர்த்தா காவ்யானாம் பவதி மஹதாம் பங்க ருசிபிர்
வசோபிர் வாக்தேவீ வதன கமலாமோத மதுரை: 17
தாயே ! வாக்கின் பிரவர்த்தகர்களும் சந்திரகாந்தக் கல்லைப் பிளந்தால் தோன்றுவது போன்ற காந்தியுடையவர்களும் வசினீ முதலிய வாக்தேவதைகளுடன் கூடியிருப்பவளாக உன்னை எவன் சிந்திக்கிறானோ அவன் மகான்களுடைய காவியங்களைப்போல் பிரகாசிப்பனவும் ஸரஸ்வதி தேவியின் முக கமலத்தின் பரிமளம்போல் மதுரமானதுமான வாக்குகளால் காவியங்களுக்கு கர்த்தாவாக ஆகிறான்.
ஸர்வரோகஹர சக்கரம் என்னும் அஷ்ட கோணத்தில் பூஜிக்கப்படும் எட்டு வாக்தேவதைகள்: (1) வஶினீ (2) காமேஶ்வரீ (3) மோதினீ (4) விமலா (5) அருணா (6) ஜயினீ (7) ஸர்வேஶ்வரீ (8) கௌலினீ
18. அருணரூப த்யானம்
காமஜயம்
தனுச்சாயாபிஸ் தே தருண தரணி ஸ்ரீ ஸரணிபிர்
திவம் ஸர்வா முர்வீம் அருணிம நிமக்னாம் ஸமரதிய:
பவந்த்யஸ்ய த்ரஸ்யத் வன ஹரிண ஶாலீன நயனா
ஸஹோர்வஶ்யா வஶ்யா: கதிகதி ந கீர்வாணகணிகா: 18
உதய சூரியனது போன்ற அழகு வெள்ளத்துடன் கூடிய உனது தேககாந்தியின் கிரணங்களால் எல்லாம் தேவலோகத்தையும் பூலோகத்தையும் இளஞ்சிவப்பு வர்ணத்தில் முழுகினவைகளாக எவன் தியானம் செய்கிறானோ அவனுக்கு பயந்த காட்டுமான்களுடையது போல் அழகிய கண்களுடன் கூடிய அப்ஸரஸ்த்ரீகள் ஊர்வசியுள்பட எத்தனை எத்தனை பேர்கள்தான் வசப்பட்டவர்களாக ஆக மாட்டார்கள் ?
இச்சுலோகம் ஸ்த்ரீவஸ்யகரம் எனப்படுகிறது. ஆனால் “ஸ்த்ரிய ஸமஸ்தாஸ் தவ தேவி பேதா:” என்றபடி எல்லா ஸ்த்ரீகளும் பரதேவதையின் வடிவங்களே. உபாஸகன் அவர்களை அங்ஙனமே கண்டு வணங்குவான்.
19. காமகலா த்யானம்
காமஜயம்
முகம் பிந்தும் க்ருத்வா குசயுக மதஸ் தஸ்யததோ
ஹரார்த்தம் த்யாயேத் யோ ஹரமஹிஷி தே மன்மதகலாம்
ஸ ஸத்ய: ஸம்க்ஷோபம் நயதி வநிதா இத்யதிலகு
த்ரிலோகீ மப்யாஶு ப்ரமயதி ரவீந்து ஸ்தனயுகாம் 19
பரமசிவனுடைய பட்டமஹிஷியே ! ஸ்ரீசக்கரத்தில் மத்தியில் உள்ள பிந்துவை காமகலாரூபிணியான உனது முகமாக தியானம் செய்துகொண்டு அதற்குக்கீழே இரண்டு ஸ்தனங்களையும் அதற்கும் கீழே சிவனுடைய பாதி வடிவான யோனியையும் தியானம் செய்துகொண்டு உன்னுடைய காமகலையாகிய ‘க்லீம்’ பீஜத்தை எவன் அவ்வங்கங்களில் தியானம் செய்கின்றானோ அவன் உடனே காமசக்திகளை வசப்படும்படி செகிறான் என்பது மிகவும் எளிது. சூரிய சந்திரர்களையே ஸ்தனக்களாக்க் கொண்டுள்ள முவ்வுலக வடிவமான மடந்தையையும் கூட விரைவில் மயங்கச் செய்வான்.
‘க்லீம்’ என்ற பீஜத்தில் உயிரெழுத்து ‘ஈ’. அதுவும் மூன்று பிந்துக்களால் ஆகியது. மேலுள்ள பிந்து சந்திரன். கீழுள்ளவை சூரியனும் அக்கினியும்.
இவ்வாறு காமகலா தியானம் செய்பவன் தேவியின் ஸ்வரூபமாகவே ஆகிவிடுகிறான். வேறு எண்ணம் இல்லாமல் ஒருமைப்பட்ட மனத்துடன் மூன்று பிந்துக்களையும் தியானம் செய்பவன் பரமானந்தக் கடலில் மூழ்கி கர்ப்பத்துவாரத்தைக் காணமாட்டான்.
20. சந்திரகாந்தப் பிரதமை போன்ற வடிவம்
ஸர்வ விஷ ஸர்வ ஜ்வர நிவாரணம்
கிரந்தீ மங்கேப்ப்ய: கிரன நிகுரும்பாம்ருதரஸம்
ஹ்ருதி த்வா மாதத்தே ஹிமகர ஶிலா மூர்த்திமிவ ய:
ஸ ஸர்ப்பாணாம் தர்ப்பம் ஶமயதி ஶகுந்தாதிப இவ
ஜ்வரப்லுஷ்டான் த்ருஷ்டா ஸுகயதி ஸுதாதாரஸிரயா 20
எல்லா அவயவங்களில் இருந்தும் கிரண ஸமூஹ வடிவில் அமிருத ரஸத்தை பெருக்கும் சந்திரகாந்தச் சிலையாலான மூர்த்தி போன்ற உன்னை எவன் உள்ளத்தில் நிலை நிறுத்தித் தியானம் செய்கின்றானோ அவன் பக்ஷிராஜ னாகிய கருடனைப்போல் பாம்புகளின் கொழுப்பை அடக்குகிறான், அம்ருத நாடியோடு கூடியிருக்கும் பார்வையால் ஜ்வரத்துடன் பீடிக்கப் பட்டவர்களை பீடை நீங்கிச் சுகமடையச் செய்கிறான்.
ஹிமகரசிலாமூர்த்தி: அம்ருதேசுவரி என்னும் ரூபம். இது எல்லா விஷங்களையும் போக்கும் மந்திரம். கருடபகவான் பார்வையால் விஷங்களைப் பூக்குவதால் இது காருடப் பிரயோகம் எனப்படும். இங்கே கூறியபடி தியானம் செய்பவனுடைய பார்வையாலேயே விஷங்களும் ஜ்வரங்களும் தீர்ந்துவிடும்.
ஒப்பிடுக: கருடோபநிஷத்: சந்த்ரமண்டல ஸங்காஶ, ஸூர்ய மண்டல முஷ்டிக, ப்ருதிவீ மண்டல முத்ராங்க, ஸ்ரீ மஹாகருடாய விஷம் ஹர ஹர ஹும் பட் ஸ்வாஹா. | ஓம் க்ஷிப் ஸ்வாஹா | ஓமீம் ஸ சரதி ஸ சரதி தத்காரீ மத்காரீ விஷாணாஞ்ச விஷ ரூபிணீ விஷதூஷிணீ, விஷஶோஷணீ, விஷநாஶினீ, விஷஹாரிணீ, ஹதம் விஷம் நஷ்டம் விஷம் அந்த ப்ரலீனம் விஷம் ப்ரநஷ்டம் விஷம் தே ப்ரஹ்மணா விஷம் ஹதம், ஹிதமிந்த்ரஸ்ய வஜ்ரேண ஸ்வாஹா ||
ஷண்மாஸ த்யானயோகேன ஜாயதே கருடோபம:
த்ருஷ்ட்யா கர்ஷயதே லோகம் த்ருஷ்ட்யைவ குருதே வசம்||
சந்த்ரகாந்த ஶிலாமூர்த்திம் சிந்தயித்வா விநாஶயேத்
தாபஜ்வரான் அஶேஷாம்ச்ச ஶீக்ரம் தார்க்ஷ்ய இவாபர:
கருடத்யான யேகேன ஸ்மரணாந் நாஶயேத் விஷம்.
ஆறுமாதத் தியானத்தால் கருடபகவானுக்குச் சமானமாகிப் பார்வையாலேயே உலகை வசம் செய்பவனாவான். சந்திரகாந்தப் பிரதமை போன்ற தேவியின் தியானத்தால் எல்லா ஜ்வரங்களையும் விஷங்களையும் போக்கடிப்பவன் ஆவான்.
விஷ்ணுவானவர் ஹாலாஹல விஷம் தன்னைப் பொசுக்காமல் இருக்க அம்ருதேசுவரியைத் தியானம் செய்ததாகச் சொல்லப்படுகிறது. அன்பாளுடைய சிந்தாமணி கிருஹத்தைச் சுற்றியிருக்கும் அம்ருதவாவியில் மணிமௌஅமான படகில் இருந்துகொண்டு அம்ருதேசுவரி பக்தர்களைக் கரை சேர்ப்பதாக்க் கூறப்படுகிறது. அதனால் அம்ருதேசுவரிக்குத் ‘தாரா’ என்று பெயர்.
“இந்த ஸௌந்தர்யலஹரி சுலோகத்தைப் பதினாறு ஆவிருத்திக்குக் குறையாமல் அம்பிகா தியானத்துடன் சொல்லிக்கொண்டு விபூதியையோ தீர்த்தத்தையோ அபிமந்த்ரணம் செய்து நோயாளிகளிடம் அதைக் கொடுத்து, விபூதியானால் தரித்துக் கொள்ளும்படிக்கும், தீர்த்தமானால் உட்கொள்ளும் படிக்கும் செய்வதாலேயே இந்தப் பிரயோகத்தைப் பரீக்ஷித்துப் பார்த்து விடலாம். ஸகலரோக நிவ்ருத்தி என்பதில் சந்தேகமில்லை. உபாஸகர்களுடைய திருஷ்டிக்கே ரோகாதிகளை நிவிருத்தி செய்து வைக்கும்படியான வைபவம் சித்திக்கிறது”.
— தேதியூர் சுப்ரஹ்மண்ய சாஸ்திரிகள்
21. மின்னல் கொடி போன்ற வடிவம்
ஸர்வ வசீகரம், ஸர்வாஹ்லாதகரம்
தடில்லேகாதன்வீம் தபனஶஶி வைஶ்வானரமயீம்
நிஷண்ணாம் ஷண்ணாமப்யுபரி கமலாநாம் தவகலாம்
மஹாபத்மாடவ்யாம் ம்ருதித மல மாயேன மனஸா
மஹாந்த: பஶ்யந்தோ தததி பரமாஹ்லாத லஹரீம் 21
மஹாந்த: பஶ்யந்தோ தததி பரமாஹ்லாத லஹரீம் 21
மின்னல்கொடி போல் ஶூக்ஷ்மமான தேஜோரூபம் உடையதும் சூரியன், சந்திரன், அக்கினி ஆகிய வடிவங்களில் பிரகாசிப்பதும் ஆறு ஆதார சக்கரங்களுக்கும் மேலே தாமரைக்காடு போன்ற ஸஹஸ்ரார சக்கரத்தில் நிலைபெறுவதுமான உன்னடைய “ஸாதா” எனப்படும் கலையை காமம் முதலிய அழுக்குகளும் அவித்தை முதலிய மயக்கங்களும் நீங்கிய மனத்தினால் மகான்கள் கண்டு அநுபவிப்பவர்களாய் அலையலையாக வரும் அளவுகடந்த ஆனந்தத்தை அடைகிறார்கள்.
குண்டலினீசக்தி மூலாதாரத்தில் இருந்து படிப்படியாக மேலேறி வரும்போது, ஆக்ஞாசக்கரத்தில் அதிக நேரம் தாமதிக்காமல், மின்னல்கொடிபோல் காட்சியளித்து விரைவில் ஸஹஸ்ராரத்தில் பரமசிவனை அடைகிறாள். ஸஹஸ்ராரத்தில் நிலையாக்க் குளிர்ந்து பிகாசிப்பதால் “ஸ்திர ஸௌதாமினீ” என்றும், ஆக்ஞைசக்கரத்தில் நொடி நேரம் பிகாசிப்பதால் “க்ஷணஸௌதாமினீ” என்றும் கூறப்படுகிறாள்.
ஷட்கோண சக்கரத்தின் மத்தியில் பிந்துவை எழுதி அதன்மேல் ஐந்து முகமுள்ள தீபத்தை ஏற்றிவைத்து தேவியை ஆவாஹனம் செய்து பூஜித்து ஆயிரம் தடவையோ முன்னூறு தடவையோ நூறு தடவையோ இந்த்ச் சுலோகத்தை தினந்தோறுமோ வெள்ளிக்கிழமை பௌர்ணமி போன்ற விசேஷ நாட்களிலோ பாராயணம் செய்தல் உபாஸனை செய்யும் வழிகளில் ஒன்றாகும். ஆவாஹன மந்த்ரம்: மஹாபத்ம வனாந்தஸ்தே காரணானந்த விக்ரஹே | ஸர்வபூதஹிதே மாத: ஏஹ்யேஹி பரமேஶ்வரி ||
22. ஸ்தோத்ர மஹிமை
ஸர்வஸித்தி
பவானி த்வம் தாஸே மயி விதர த்ருஷ்டீம் ஸகருணாம்
இதி ஸ்தோதும் வாஞ்சன் கதயதி பவானி த்வமிதி ய:
ததைவ த்வம் தஸ்மை திஶஸி நிஜ ஸாயுஜ்ய பதவீம்
முகுந்த ப்ரஹ்மேந்த்ர ஸ்புட மகுட நீராஜித பதாம் 22
“பவன் என்னும் பெயர் பெற்ற பரமசிவனுடைய பத்தினியே ! நீ அடிமையாகிய என்னிடம் கருணையுடன் கூடின பார்வையை செலுத்தியருள்வாயாக” என்று எவனாவது ஒருவன் துதி செய்ய விரும்பி, “பவானி, நீ” என்னும் இரண்டு வார்த்தைகளை சொன்னால் அப்போதே நீ அவனுக்கு விஷ்ணு, பிரம்மா, இந்திரன் ஆகியவர்களின் கிரீட ஒளியால் நீராஜனம் செய்யப்பெற்ற திருவடிகளையுடைய உனது ஸாயுஜ்ய பதவியை அளிக்கிறாய்.
தேவியின் அருளைப் பெறுவதற்கு, ‘பூஜை, ஜபம், ஹோமம்’ முதலிய கிரியைகளைவிட ஒருமித்த கருத்துடன் அவளைத் துதித்தலே போதும்” என்பது இச்சுலோகத்தின் கருத்து.
தெளிவாக இல்லாமலோ வேறு பேச்சுக்களின் இடையிலோ தேவியின் நாமம் உச்சரிக்கப் பட்டாலும் கூட அவள், விரும்பிய பொருள்களை, அவை கிடைத்தற்கு அரிதாயினும், எப்போதும் அளிப்பாள். – தேவீ பாகவதம்.
23. சக்தியிடம் சிவாம்சத்தின் அடக்கம்
ஸர்வ ஸம்பத்து
த்வயா ஹ்ருத்வா வாமம் வபுரபரித்ருப்தேன மனஸா
ஶரீரார்த்தம் ஶம்போரபரமபி ஶங்கே ஹ்ருதமபூத்
யதேதத் த்வத்ரூபம் ஸகல மருணாபம் த்ரினயனம்
குசாப்ரா மாநம்ரம் குடில ஶஶி சூடால மகுடம் 23
எக்காரணத்தால் என்னுடைய இருதயத்தில் பிரகாசிக்கும் இந்த உன்னுடைய ரூபம் முழுவதும் சிவப்பான காந்தியுடனும் மூன்று கண்களுடனும் இரண்டு ஸ்தனங்களால் சற்று வளைந்தும் பிறைச்சந்திரனைச் சூடிய மகுடத்துடன் விளங்குகிறதோ, அதனால் சம்புவினுடைய சரீரத்தின் இடதுபாகம் உன்னால் எடுத்துக் கொள்ளப்பட்ட பின்பும் முழுத் திருப்தியில்லாத மனத்தால் சரீரத்தின் மற்றொரு பாதியும் கவர்ந்து கொள்ளப்பட்டதென்று சந்தேகம் அடைகிறேன்.
சிவனும் சக்தியும் ஒரே உடலின் வலது பாகமும் இடது பாகமும். சிவனுடைய பாகம் வெளுப்பு, சக்தியின் பாகம் சிவப்பு. ஆனால் தேவியின் உடல்முழுதும் சிவப்பாகவே காணப்படுவதாலும், மூன்று கண்களும் கிரீடத்தில் சந்திர கலையும் தோன்றுவதாலும், பாதி உடலைக் கொண்டதில் திருப்தி அடையாமல் முழுவதையும் தன்மயமாகவே ஆக்கிக்கொண்டுவிட்டாள் என்று இங்கே கூறப்படுகிறது. சிவன் சக்தியியின் வடிவத்தில் மறைந்து போகிறான். இதனால் சக்தியைப் பூஜை செய்தால் சிவபூஜை செய்ததாகிறது. ‘உத்தரகௌலம்’ என்ற மதத்தில் தனியாகச் சிவபூஜை இல்லை. சக்தியிலேயே சிவன் ஐக்கியம்; அவனுக்குத் தனிவடிவமும் இல்லை, தொழிலும் இல்லை.
24. தேவியின் புருவ அமைப்பு
ஸர்வ பூத ப்ரேத பிசாச பய நிவாரணம்
ஜகத்ஸூதே தாதா ஹரி ரவதி ருத்ர: க்ஷபயதே
திரஸ்குர்வன் னேதத் ஸ்வமபி வபு ரீஶ ஸ்திரயதி
ஸதா பூர்வ: ஸர்வம் ததித மனுக்ருஹ்ணாதி ச ஶிவஸ்
தவாக்ஞா மாலம்ப்ய க்ஷண சலிதயோர் ப்ரூலதிகயோ: 24
பிரம்மா உலகத்தை சிருஷ்டிக்கிறார், விஷ்ணு ரக்ஷிக்கிறார், ருத்திரன் அழிக்கிறார், மஹேசுவரன் இந்த மூவரையும் தன்னிடம் லயிக்கும்படி செய்து தன் சரீரத்தையும் மறையும்படி செய்கிறார். ஸதா என்ற அடைமொழியை முன்கொண்ட சதாசிவன் அப்படிப்பட்ட இவர்கள் எல்லோரையும் உன்னுடைய நொடி நேர அசைப்பினால் தெரிவிக்கப் பட்ட புருவக் கொடிகளின் கட்டளையை அனுசரித்து அனுக்ரஹம் செய்கிறார்.
சிருஷ்டி, ஸ்திதி, ஸமாரம், திரோதானம், அனுக்கிரஹம் என்னும் ஐந்து தொழில்களையும் முறையே பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், ஈசான்ன், ஸதாசிவன் ஆகியோர்மூலம் தேவி நடத்துகிறாள். ஆகையால் லலிதா ஸஹஸ்ர நாமத்தில் தேவி ‘பஞ்ச க்ருத்ய பராயணா’ எனப்படுகிறாள்.
எல்லாத் தேவதைகளையும் தனித்தனியாகப் பூஜை செய்வது கூடாமையால் எந்த ஒரு தேவதையைப் பூஜித்தால் எல்லாத் தேவதைகளையும் பூஜித்ததாகுமோ அந்த மூலதேவதை அம்பிகை. இதே கருத்து அடுத்த சுலோகத்திலும் கூறப்படுகிறது.
25. தேவி பூஜையில் மும்மூர்த்தி பூஜையும் அடக்கம்
உன்னதப் பதவியும் அதிகாரமும்
த்ரயாணாம் தேவானாம் த்ரிகுண ஜநிதானாம் தவ ஶிவே
பவேத் பூஜா தவ சரணயோர் யா விரஶிதா
ததா ஹி த்வத் பாதோத்வஹன மணிபீடஸ்ய நிகடே
ஸ்திதா ஹ்யேதே ஶஶ்வன் முகுலித கரோத்தம்ஸ மகுடா 25
சிவபத்னியே, உன்னுடைய திருவடிகளில் எந்த பூஜை செய்யப்படுகிறதோ அது உன்னுடைய முக்குணங்களை அநுசரித்துத் தோன்றிய மும்மூர்த்திகளுக்கும் பூஜையாக ஆகும். அது பொருத்தமே. இவர்கள் உன்னுடைய திருவடிகளைத் தாங்கும் ரத்தினப் பலகையின் ஸமீபத்தில் எப்போதும் குவித்த கைகளைக் கிரீடத்தில் வைதுக்கொண்டு நிற்கிறார்கள் அன்றோ ?
த்ரிகுண ஜநிதானா: மூன்று குணங்களுடன் கூடிய மாயைக்கு
- ரஜோகுணம் மேலிட்டிருக்கும்போது அதனுடன் சம்பத்தப்பட்ட சைதன்னியம் பிரம்மா;
- சத்துவகுணம் மேலிட்டிருக்கும்போது அதனுடன் சம்பத்தப்பட்ட சைதன்னியம் விஷ்ணு;
- தமோகுணம் மேலிட்டிருக்கும்போது அதனுடன் சம்பத்தப்பட்ட சைதன்னியம் ருத்ரன்;
மணிபீடஸ்ய நிகடே: சரீரத்தில் உள்ள ஆறு ஆதாரங்களும் மணிபீடங்கள். அவை மூன்று கண்டங்களாகப் பிரிக்கப் படுகின்றன:
- அக்கினி கண்டத்தில் உள்ள பிரம்மக்கிரந்தி பிரம்மாவின் இருப்பிடம்.
- சூரிய கண்டத்தில் உள்ள விஷ்ணுக்கிரந்தி விஷ்ணுவின் இருப்பிடம்
- ஸோம கண்டத்தில் உள்ள ருத்ரக்கிரந்தி ருத்திரரின் இருப்பிடம்.
ஆறுசக்கரங்களிலும் அந்தர்யாக முறையில் தேவி பூஜிக்கப்படும்போது மும்மூர்த்திகளும் பூஜிக்கப்பட்டவர்கள் ஆகிறார்கள்.
26. பராசக்தியின் பாதிவ்ரத்ய மஹிமை
அகத்திலும் புறத்திலும் சத்துருக்களின் அழிவு
விரிஞ்சி: பஞ்சத்வம் வ்ரஜதி ஹரிராப்நோதி விரதிம்
விநாஶம் கீநாஶோ பஜதி தநதோ யாதி நிதனம்
விதந்த்ரீ மாஹேந்த்ரி விததிரபி ஸம்மீலித த்ருஶாம்
மஹாஸம்ஹாரே (அ)ஸ்மின் விஹரதி ஸதி த்வத்பதிரஸௌ 26
பிரம்மா அழிவையும், விஷ்ணு முடிவையும், யமன் நாசத்தையும், குபேரன் மரணத்தையும் அடிகிறார்கள். ஒருவர்பின் ஒருவராக வரும் இந்திர்ர்களின் கூட்டமும் கண்ணை மூடி பெருந்தூக்கத்தில் ஆழ்கிறது. அப்படிப்பட்ட மஹாபிரளய காலத்தில், பதிவிரதையான தாயே ! இந்த உனது பதியான ஸதாசிவன் உன்னுடன் விளையாடுகிறார்.
மஹாப்பிரளய காலத்தில் பிருதிவீ முதல் எல்லாத் தத்துவங்களும் ஒன்றி, அதற்குமேல் உள்ள தத்துவத்தில் லயமாகிக் கடைசியில் சக்தியும் சிவமும் ஆகிய இரண்டுமே எஞ்சி நிற்கும். அப்போது சிவன், ஸம்ஹார தண்டவம் ஆடிக்கொண்டிருப்பதைப் பராசக்தி மட்டும் பார்த்துக்கொண்டிருக்கிறாள்.
மஹேச்வர மஹாகல்ப மஹாதாண்டவ சாக்ஷிணீ – லலிதா ஸஹஸ்ரநாமம்
27. சமயாசார மானஸிக பூஜை
ஆத்ம ஞான சித்தி
ஜபோ ஜல்ப: ஶில்பம் ஸகலமபி முத்ராவிரசனா
கதி: ப்ராதக்ஷிண்ய க்ரமண மஶனாத்யாஹுதி விதி:
ப்ரணாம: ஸம்வேஶ: ஸுகமகில மாத்மார்ப்பம த்ருசா
ஸபர்யா பர்யாயஸ் தவ பவது யன்மே விலஸிதம் 27
ஆத்மஸமர்ப்பண பாவனையால் வெறும் பேச்சு ஜபமாகவும், கைத்தொழில் அனைத்தும் முத்திரைகளின் விளக்கமாகவும், நடை ப்ரதக்ஷிணம் செய்வதாகவும், உண்டி முதலியன ஹோமமாகவும், படுத்துக் கொள்ளுதல் நமஸ்காரமாகவும், இன்னும் சுகமாக முயற்சியின்றி எனது செயல் எது உண்டோ அது எல்லாம் உன்னுடைய பூஜை முறையாகவும் ஆகட்டும்.
முத்திரைகள்: ‘தசமுத்ரா ஸமாராத்யா” – லலிதா ஸஹஸ்ர நாமம். தேவியின் பூஜையில் பத்துமுத்திரைகள் (1)ஸம்க்ஷோபினீ (2) வித்ராவிணீ (3) ஆகர்ஷிணி (4) வசங்கரீ (5) உன்மாதினீ (6) மஹாங்குசா (7) கேசரீ (8) பீஜ (9) யோனி (10) த்ரிகண்டா.
ஸமயாசார ஞானிகள் வெளிப்படையாக ஸ்ரீசக்கரத்திலோ பிம்பத்திலோ பூஜையைச் செய்வதில்லை. அவர்கள் இயற்கையாகச் செய்யும் செயல்களெல்லாம் பூஜையாகவும், பேசும் பேச்செல்லாம் துதியாகவும் ஆகின்றன.
நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை, என்றும் வணங்குவதுன் மலர்த்தாள் – அபிராமி அந்தாதி
28. தேவியின் தாடங்க மஹிமை
விஷ பயம், அகாலம்ருத்யு நிவாரணம்
ஸுதா மப்யாஸ்வாத்ய ப்ரதிபய ஜராம்ருத்யு ஹரிணீம்
விபத்யந்தே விஶ்வே விதி ஶதமகாத்யா திவிஷத:
கராலம் யத் க்ஷ்வேலம் கபலிதவத: காலகலனா
ந ஶம்போஸ் தன்மூலம் தவ ஜனனி தாடங்க மஹிமா 28
பயங்கரமான மூப்பு, மரணங்களை விலக்குகிற அமிருதத்தை உண்டும்கூட பிரம்மா இந்திரன் முதலிய எல்லாத் தேவர்களும் விரளௌஅ காலத்தில் அழிவுறுகிறார்கள். கொடிய விஷத்தை சாப்பிட்ட சிவனுக்கு காலத்தின் முடிவு இல்லை என்றால் அதன் காரணம் உன்னுடைய காதில் உள்ள தாடங்க மஹிமைதான்.
பரமசிவனே, எந்தப் பராசக்தி உனது பாதி சரீரம் உடையவள் ஆகின்றாளோ அவள் உலகனைத்திற்கும் மருந்து. ருத்திரனாகிய உனக்கும் அவள்தான் மருந்து. விஷத்தை உண்டும் அவள் அருளால்தான் எங்களுக்காகப் பிழைத்து இருக்கிறாய். — ருத்ரம்
தேவியினுடைய தாடங்கம் ஸ்ரீசக்கர ரூபமே. ஸ்ரீசக்கரத்தை ஸுவாஸினிகளும் ஆராதிக்கலாம், எந்த ஸுவாஸினியானவள் புருஷனுக்குப் பரிபூர்ணமான ஆயுளைக் கருதி அதன்மூலம் குடும்பத்தில் பரம ஸௌபாக்கியத்தை எதிர்பார்க்கிறாளோ அந்த ஸுவாஸினியானவள் மஹா குருமூலமாகத் தனது கணவனை மேற்சொண்ண வித்தையை (பஞ்சதஶாக்ஷரி மந்திரத்தை) கிரகித்துக்கொள்ளும்படி செய்து புருஷனுடைய முகமாகத் தான் அந்த வித்தையைக் கிரகித்துக் கொண்டு, ஒவ்வொரு தினத்திலும் யதாசக்தி ஜபம் செய்து மஞ்சள்பொடியில் ஸ்ரீசக்கர லேகனத்தைச் செய்து மூலமந்திரத் தாலேயே ஷோடசோபசார பூஜைகளையும் செய்து, சக்தியை அனுசரித்து லலிதா ஸஹஸ்ரநாமம், த்ரிசதி, அஷ்டோத்தரம் இவைகளால் குங்குமத்தாலோ சிவப்புப் புஷ்பத்தாலோ அர்ச்சனையும் செய்து, நிவேதனாதிகள் செய்து, பிரதக்ஷிண நமஸ்காராதிகளால் பரதேவதையை ஆராதனம் செய்து வரவேண்டும். அப்படியானால் அவள் புருஷனுக்குத் தீர்க்காயுளை ஸம்பாதித்துத் தானும் மஹாபாக்யவதியாக நீடித்து வாழ்ந்து அவர்கள் திவ்ய தம்பதிகளாக்க் குடும்பத்தில் ஸ்கலவித ஸௌபாக்யத்துடன் விளங்குவார்கள். முதல் தினம் பூஜை செய்த மஞ்சள்பொடியை மறுதினம் ஸ்நான காலத்தில் பூசிக் கொள்ள வேண்டும்.
— தேதியூர் சுப்ரஹ்மண்ய சாஸ்திரி
29. தேவி பரமசிவனை வரவேற்கும் வைபவம்
ப்ரஸவாரிஷ்ட நிவிருத்தி, மூர்க்கரை வசப்படுத்துதல்
கிரீடம் வைரிஞ்சம் பரிஹர புர: கைடபபித:
கடோரே கோடீரே ஸ்கலஸி ஜஹி ஜம்பாரி மகுடம்
ப்ரணம்ரேஷ்வேதேஷு ப்ரஸப முபயாதஸ்ய பவனம்
பவஸ்யாப்யுத்தானே தவ பரிஜனோக்திர் விஜயதே 29
எதிரில் உள்ள பிரம்மாவினுடைய கிரீடத்தை விட்டு விலகி வாருங்கள்; கைடபாசுரனைக் கொன்ற விஷ்ணுவினுடைய கடினமான கிரீடத்தில் இடறிக் கொள்ளப் போகிறீர்கள். இந்திரனுடைய மகுடத்தை ஒதுக்கிவிட்டு வாருங்கள் என்று இவ்வாறாக பிரம்மா முதலியவர்கள் நமஸ்காரம் செய்து கொண்டிருக்கும் சமயத்தில் உனது இருப்பிடத்திற்கு வந்து கொண்டிருக்கும் பரமசிவனை நோக்கி நீ எழுந்து எதிர்கொண்டு உன்னுடைய சேடிகள் சொல்லும் வார்த்தை சிறப்பாக ஒலிக்கின்றது.
30. தேவியைத் தனது ஆத்மாவாக உபாசித்தல்
பரகாயப் பிரவேசம்
ஸ்வதேஹோத்பூதாபிர் க்ருணிபிர் அணிமாத்யாபி ரபிதோ
நிஷேவ்யே நித்யே த்வா மஹமிதி ஸதா பாவயதி ய:
கிமாஶ்சர்யம் தஸ்ய த்ரிநயன ஸம்ருத்திம் த்ருணயதோ
மஹாஸம்வர்த்தாக்னிர் விரசயதி நீராஜன விதிம் 30
ஆதியந்தமற்ற பரம்பொருளே ! உனது உடலினின்று தோன்றிய கிரணங்கள் போன்ற அணிமாசித்தி முதலிய தேவதைகளால் சூழப்பெற்றவளாக சூழப்பெற்றவளாக சேவிக்கத் தக்கவளே ! உன்னை தனது ஆத்மா என்று எவன் எப்போதும் சிந்திக்கின்றானோ அவனுக்கு சிவ ஸாயுஜ்ய செல்வத்தையும் துரும்பெனக் கருதும் அவனுக்கு ஊழித் தீயானது மங்கள ஆரத்திக் காட்டிப் பூஜிக்கும் முறையை அனுஷ்டிக்கிறது. இது ஆச்சரியமா ?
அம்பிகையைத் தனது ஆத்மாவாகவே ஒருவன் பாவனை செய்தால் ஏற்படும் மகிமை ஒப்புயர்வற்றது. ஸதாசிவனைப்போல் கருதி உலகெல்லாம் அவனைப் பூஜை செய்யும்.
திரிநயனீ: ஸூர்யன், சந்திரன், அக்னி / இடை, பிங்களை, ஸுஷும்னை
O Goddess ! who art eternal and art served all around by the rays, Anima and others emanating from Thine own frame ! What is there to wonder at, if the Fire of the great Deluge should perform the ritual of offering lights before whosoever conceives Thee always ‘I am (Thou)’, treating the wealth of Tri-nayana as mere straw ?
Rays emanating from Thine own frame: The Sri-chakraa of nine parts, in the form of Aavaranana-devataas-s as detailed below:
- The three quadrangles of the Bhugrha,
- wherein abide the eight sidhhis: Animaa, Laghimaa, Mahimaa, Vasitva, Isaatva, Praakaamya, Prapti and Sarva-kaama-pradhaayini in the first quadrangle;
- the eight Matrs (Mathaas) – Braahmii, Maaheswarii, Kaumaarii, Vaishnavii, Vaaraahee, Maahendrii, Chaamundaa and Mahalakshmi in the second quadrangle;
- the ten Mudraa-s – in the third quadrangle: Sarva-samkshobini, Sarva-vidraavini, Sarvaakarshini, Sarva-vasankari, Sarvonmaadini, Sarva-mahaankusaa, Sarva-kechari, Sarva-bijaa, Sarva-yoni, Sarva-thrikhandaa
- Sixteen Devata-s in the sixteen petalled lotus: Kaamaakarshini, Budhhyaakarshini, Ahamkaaraakarshini, Sabdaakarshini, Sparsaakarshini, Rupaakarshini, Rasaakarshini, Gandhaakarshini, Chittaakarshini, Dairyaakarshini, Smrtyaagarshini, Naamaakarshini, Bijaakarshini, Aatmaakarshini, Amrtaakarshini, Sareeraakarshini
- Eight Devata-s in the eight petalled lotus: Anaga-kusumaa, Ananga-mekalaa, Ananga-madanaa, Ananga-madanaaturaa, Ananga-rekaa, Ananga-veginee, Anangaankusaa, Ananga-maalinee
- Fourteen Devatas in the Chadurasaara: Sarva-samkshobini, Sarva-vidraavini, Sarva-akarshini, Sarvaahlaadini, Sarva-sammohani, Sarva-stambini, Sarva-jrmbhini, Sarva-vasamkari, Sarva-ranjani, Sarvonmaadini, Sarvaartha-saadhani, Sarva-sampattipurani, Sarva-mantramayi, Sarva-dvandakshayankari
- Ten Devata-s in the Bahir-dasaara: Sarva-sidhhipradhaa, Sarva-sampatpradhaa, Sarva-priyankari, Sarva-mangala kaarini, Sarva-kaamapradaa, Sarva-soubhaagyadaayini, Sarva-mruthyu-prasamani, Sarva-vigna-nivaarini, Sarvaanga-sundari, Sarva-dukha-vimochani
- Ten Devata-s in the Antar-dasaara: Sarvajnaa, Sarva-sakti, Sarvaisvaryapradaa, Sarva-jnaamayi, Sarva-vyaadhi-vinaasini, Sarvaadhaara-swarupa, Sarva-paapahara, Sarvaanandamayi, Sarva-rakshaa-svarupini, sarvepsita-phalaprada
- Eight Devatas in the Ashta-kona: Vasini, Kaamesi, Modini, Vimalaa, Arunaa, Jayini, Sarvesi, Kaulini
- Three Devatas in the tri-kona: Kaamesvari, Vajresi, Bhagamaalaa
- In the middle: Tripurasundari
31. அறுபத்து நான்கு தத்துவங்களும் ஸ்ரீவித்தையும்
ஸர்வ வசீகரம்
சது: ஷஷ்ட்யா தந்த்ரை: ஸகல மதிஸந்தர்ய புவனம்
ஸ்திதஸ் தத்தத் ஸித்தி ப்ரஸவ பரதந்த்ரை: பஶுபதி:
புனஸ் த்வந்நிர்ப்பந்தா தகில புருஷார்த்தைக கடனா
ஸ்வதந்த்ரம் தே தந்த்ரம் க்ஷிதிதல மவதீதர திதம் 31
பரமசிவன் அவரவர் நாடும் அந்தச் சித்தியை மட்டும் அளிக்கும் வேறு தந்திரங்களாகிய அறுபத்து நான்கு வகைப்பட்ட தந்திர சாஸ்திரங்களால் எல்லா புவனங்களையும் நிரப்பிவிட்டு வாளாயிருக்கவே, மேலும் உன்னுடைய கட்டாயத்தின் பேரில் எல்லா விருப்பங்களையும், அறம் பொருள் இன்பம் வீடு என்ற எல்லாப் புருஷார்த்தங்களையும் ஒருங்கே கூட்டிவைக்க வல்லதான உன்னுடைய தந்திரமாகிய இந்த ஸ்ரீவித்தையை பூவுலகில் அவதரிக்கச் செய்தார்.
- ஸ்வதந்த்ரம் தே தந்த்ரம்: இது ஸமயாசாரம் எனப்படும். வஸிஷ்டர், ஸநகர், சுகர், ஸநந்தனர், ஸநத்குமாரர் ஆகிய ஐவர்கள் அருளிய சுபாசம பஞ்சகம் எனப்பெயர் பெற்ற ஸம்ஹிதைகளில் போதிக்கப்பட்ட மார்க்கம்.
- அறுபத்து நான்கு தந்திரங்களில் சொல்லியிருப்பது கௌலமார்க்கம்,
- ‘சந்த்ரகலா வித்யாஷ்டகம்” எனப்பட்ட எட்டுத் தந்திரங்களில் சொல்லியிருப்பது மிச்ரமார்க்கம்.
ஸமயமார்க்கம்தான் வைதிகர்கள் அனுஷ்டிக்கும் வித்தை. இது எல்லாப் புருஷார்த்தங்களையும் ஸாதிக்க வல்லது. இதுதான் அடுத்த சுலோகத்தில் கூறப்படுகிறது.
Sixtyfour Tantraa-s enumerated in the Vaamakeswara Tantraa, quoted by Lakshmiidhara and explained by him:
- Mahaamaayaa-sambara : having as its aim the deluding of the senses and the intellect.
- Yoginijaala-sambara: legerdemain, involving the agency of the Yogini-s, accomplished by resorting to the crematory and other ways of a repulsive nature and adopting questionable practices.
- Tattva-sambara: by causing the elements to appear as though mutually transforming themselves.
Eight Bairava Tantras are considered objectionable as they partake of Kaapaalikaa doctrines:
- Sidhha-bhairava
- Vatuka-bhairava
- Kankaala-bhairava
- Kaala-bhairava
- Kaalaagni-bhairava
- Yogini-bhairava
- Mahaa-bhairava
- Sakthi-bhairava.
Eight Tantras constituting the Bahurupaastaka wherein importance is attached to the eight Sakti-s. Even these are apprehensible, as they stray far away from the Vedic path:
- Braahmi
- Maaheswari
- Kaumaari
- Vaishnavi
- Vaaraahi
- Maahendri
- Chaamundaa
Eight arts relating to Yaamala, otherwise known as Kaamasidhhaa, aiming at gratification of several desires, which not having the sanction of the Veda-s, are considered objectionable, so much so that even the sixtyfour Tantra-s are sometimes spoken of collectively as Yaamalaa:
- Brahma-yaamala
- Vishnu-yaamala
- Rudra-yaamala
- Lakshmi-yaamala
- Umaa-yaamala
- Skanda-yaamala
- Ganesa-yaamala
- Jayadratha-yaamala.
- Chandra jnaanaa – which expounds the sixteen Nityaa-s, however considered objectionable, as smacking of Kaapaalika tenets. There is also a Tantra of the same name, which has nothing to do with the sixty-four Tantraa-s herein mentioned.
- Maalini-vidya – wherewith the oceans could be crossed.
- Mahaa-sammohana – which brings on sleep in persons even during their waking state. As this involves the cutting of the toungue of a child to render the acquisition of such power possible, it is reprehensible.
- Vaama-justaa and
- Mahaa-deva – productive of awkward habits and tendencies, which may be characterised as Vaamaachaaraa, filthy conduct.
- Vaatulaa and
- Vaatulottara and
- Kaamika – incidentally expounding the rules relating to the procedure to be adopted for the several processes connected with erection of temples,etc. commencing from the withdrawal and ending with the establishment of powers,etc. but involving features not countenanced by the Veda-s.
- Hrbheda-tantraa – which, though aiming at bursting through the six lotuses from the Mulaadhaaraa onears to the thousand-petalled one, falls within the province of the Kaapaalika-Tantraa, as it has recourse to the adoption of Vaamaachaaraa.
- Tantra-bhedaa and
- Guhya-tantraa – which involve retaliatory processes, both overt and covert, aiming at the destruction of what has been achieved by other Tantraa-s and causation of severe pain to living beings, and as such are reprehensible.
- Kalaa-vaada – expounding the secrets relating to the digits of the Moon, such as are dealt with in Vaatsyaayanaa’s sexual science, though dealing with a very useful branch of knowledge, involves such objectionable features as the grasping and releasing of Kalaa-s, the power of influencing the ten parts, the induction of Chandhra-Kalaa-s and the countenancing of the wicked practice of alluring others’ wives, and are on that account reprehensible.
- Kalaasaara – which expounds the rules relating to the excellance of colour and as such, a Vaamaachaaraa.
- Kundikaamata – which deals with the attainment of marvellous powers by administering special pills.
- Matottara – which deals with deals with the conquest of quicksilver by special processes laying claim to alchemic and panaceal virtues.
- Vinaakhyaa – which deals with command over a Yakshini of that name, having influence over sexual virility.
- Trotala – dealing with magical tankards, collyria and sandals, the first credited with marvellous medicinal properties, the second with magical clairvoyant powers, and the third with mysterious powers of locomotion.
- Trotallotra – credited with the power of bringing the sixty-four thousand Yakshini-s face to face.
- Panchaamrtaa – dealing with the immortality ingering in the Pindaandaa, microcosm of the five elements, and the bestowal of such immortality on the votary of the Tantra. This is also of the Kaapaalikaa type.
- Rupabheda
- Bhudoddaamara
- Kulasaara
- Kuloddisa
- Kulachudaamani – all of which (47 to51) are credited with the power of bringing about death and are, as such, not recognised by the Veda-s.
- Sarva-jnaanottara
- Mahaakaali-mata
- Arunesa
- Modinisa
- Vikuntheswara – the five Tantras (52 to 56) which have to be iven up as they deal with the tenets of the Digambara-s.
- Purvaamnaaya
- Paschimaamnaaya
- Dakshinaamnaaya
- Uttaraamnaaya
- Niruttaraamnaaya
- Vimala
- Vimalottha and
- Devi-mata – which(57 to 64) have reference to the doctrines of the Ksapanaka-s and are such to be discarded.
Bhaskararaayaa treats certain multiple Tantras as one, and includes eitht Tantras not enumerated by Lakshmidara and also questions the view of Lakshmidhara in treating certain Tantraas as reprehensible as these hav e been recognised by Vaamakeswara Tantra and avers that as all the kalpasutras are like Saastraas which have the sanction of the Upanishads and Lakshmidhara’s view is either coloured or prejudiced.
However it may be added that Lakshmidhara’s defence that he pins his faith on a saying attributed to Iswara which he quotes to the effect that both the Misra and Kaula paths are to be discarded. He therefore holds that the Samaya-maarga alone should be followed by twice-born and that such is also the view of the Samkara-bhagavatpaada.
32. ஸ்ரீ வித்தை பஞ்சதசாக்ஷரீ மந்த்ரம்
ஸகல கார்ய ஜயம், தீர்க்காயுள்
ஶிவ: ஶக்தி: காம: க்ஷிதி தர ரவி: சீதகிரண:
ஸ்மரோ ஹம்ஸ: ஶக்ரஸ் ததனு ச பரா மார ஹரய:
அமீ ஹ்ருல்லேகாபிஸ் திஸ்ருபி ரவஸானேஷு கடிதா
பஜந்தே வர்ணாஸ்தே தவ ஜனனி நாமாவயவதாம் 32
தாயே ! சிவ பீஜமான ‘க’ , சக்தி பீஜமான ‘ஏ’ , மன்மத பீஜமான ‘ஈ’ , பிருதிவி பீஜமான ‘ல’, அதன்பிறகு சூரிய பீஜமான ‘ஹ’ , குளிர்ந்த கிரணங்களையுடைய சந்திர பீஜமான ‘ஸ’ , மன்மத பீஜமான ‘க’ , ஹம்ஸ மந்திரத்திலுள்ள ஆகாச பீஜமான ‘ஹ’ , இந்திரனுடைய பீஜமான ‘ல’ , அதற்குப்பிறகு பரா பீஜமாகிய ‘ஸ’ , மன்மத பீஜமாகிய ‘ல’ உன்னுடைய இவ்வக்ஷரங்கள் மூன்று புவனேசுவரீ பீஜமான ஹ்ரீங்காரங்களுடன் ஒவ்வொரு கூட்டத்தின் முடிவிலும் சேர்க்கப்பட்டு உன்னுடைய மந்திரத்தின் அவயவங்களாக அமைகின்றன.
இங்கு ‘க’ என்னும் அக்ஷரத்தை முதலில் உடைய ‘காதிவித்தை’ என்னும் பஞ்சதசாக்ஷரீ மஹாமந்த்ரம் மறைமுகமாகக் கூறப்படுகிறது.
- முதலாவதாகிய வாக்பவ கூடம் (க-ஏ-ஈ-ல-ஹ்ரீம்) பிரளயகால அக்கினிபோல் பிரகாசிப்பதாய் மூலாதாரத்திலிருந்து கிளம்பி அனாஹதத்தைத் தொடுகிறது.
- இரண்டாவதாகிய காமராஜ கூடம் (ஹ-ஸ-க-ஹ-ல-ஹ்ரீம்) கோடி ஸூர்ய பிரகாசமுள்ளதாய் அனாஹத்திலிருந்து கிளம்பி ஆஜ்ஞா சக்கரத்தைத் தொடுகிறது.
- மூன்றாவதாகிய சக்தி கூடம் (ஸ-க-ல-ஹ்ரீம்) கோடி சந்திரப் பிரகாசமுள்ளதாய் ஆக்ஞையிலிருந்து லலாட மத்திவரை வியாபிக்கிறது.
மாலையிலுள்ள ரத்தினப்பரல்களைப்போல் மூன்று கூடங்களிலும் உள்ள வர்ணங்கள் வரிசையாக ஒன்றன்மேல் ஒன்றாகச் சிந்திக்கப்பட வேண்டும். மூலாதாரத்தில் உதித்த நாதம் இவ்வெழுத்துக்களிடையே மணிகளை ஊடுருவிச் செல்லும் சரடுபோல் விளங்கும். மூன்று கூடங்களிலும் ஹ்ரீங்காரத்தில் உள்ள பிந்துகலைகள் மூன்றும் வஹ்னிகுண்டலினீ, ஸூர்ய குண்டலினீ, ஸோமகுண்டலினீ எனப்படுவன.
வாக்பவ கூடத்தை அம்பாளுடைய முகமாகவும், மத்தியிலுள்ள காமராஜ கூடத்தைக் கழுத்து முதல் இடுப்பு வரையில் உள்ள பாகமாகவும், சக்திகூடத்தை இடுப்பிற்குக் கீழுள்ள பாகமாகவும் தியானிக்கவேண்டும்
“பஞ்சதசாக்ஷரீ மந்திரத்தில் உள்ள உயிர்மெய் எழுத்துக்களினின்றே ஆகாசம், வாயு, அக்னி, அப்பு, பிருதிவி என்ற பஞ்ச மகாபூதங்கள் தோன்றின.
- ஆகாசத்தின் குணம் சப்தம் ஒன்றே 1
- வாயுவின் குணங்கள் சப்தம், ஸ்பர்சம் இரண்டு 2
- அக்னியின் குணங்கள் சப்தம், ஸ்பர்சம், ரூபம் மூன்று 3
- அப்புவின் குணங்கள் சப்தம், ஸ்பர்சம், ரூபம், ரஸம் நான்கு 4
- பிருதிவியின் குணங்கள் சப்தம், ஸ்பர்சம், ரூபம், ரஸம், கந்தம் 5
இந்த பதினைந்து குணங்களும் பஞ்சதசாக்ஷரீ மந்திரத்தின் விகாஸமே என்று பாவித்தல் வேண்டும்.” – பாஸ்கர ராயர் – வரிவஸ்யா ரஹஸ்யம்
ஸ்ரீவித்யா: பஞ்சதசாக்ஷரி மந்திரத்தின் நாலாவது சந்த்ரகூடம் ரமா பீஜமாகிய ‘ஸ்ரீம்’ என்றும் அதுவும் சேர்ந்துதான் பதினாறு கலையுடன் இந்த மந்திரம் பரிபூர்ணம் அடைகிறது என்றும் அதனால்தான் ஸ்ரீவித்யா எனப்பெயர் பெற்றது, ஆனால் அது ரஹஸ்யமானதால் இங்கு மறைத்துவைக்கப் பட்டுள்ளதாய் உணரவேண்டும் என்றும் லக்ஷ்மீதரர் கூறுகிறார். இந்த கூடங்கள் இவ்வாறு ஒப்பிடப்படும்:
- முதல் கூடம் ஜாக்கிரத்திற்கும்
- இரண்டாம் கூடம் ஸ்வப்னத்திற்கும்
- மூன்றாம் கூடம் ஸுஷுப்திக்கும்
- நான்காம் கூடம் துரீயத்திற்கும்
ஒப்பிடுக: காயத்ரி மந்திரத்தில் ‘பரோ ரஜஸே ஸாவதோம்’ என்னும் நாலாவது பாதத்தைச் சேர்த்து உத்தம ஸாதகர்கள் ஜபிக்கவேண்டும் என்றும் அப்போதுதான் காயத்ரி வித்தை பூர்ணத்துவத்தை அடைகின்றது.
O Mother ! Siva, Sakti, Kaama and Ksiti; and then Ravi, Siitakirana, Smara, Hamsa and Sakra; and thereafter, Paraa, Maara and Hari ; these (three sets of) syllables, when conjoined severally at their ends with the three Hrllekhaa-s become the components of Thy name.
The Tantra premised by the words ‘Thy Tantra’ in the previous stanza, as understood by Lakshmidhara, is further elaborated in this stanza, which may be termed as the coping stone of the Samayin-s’ arch of worship.
The Mantra itself, the Sodasaakshari, it is said, cannot be given out publicly, but should be imparted by the Guru to the devout pupil in secret. This may be inferred from the fact that the sixteenth syllable does not find a place in the description given in the stanza. Merely because the stanza makes mention of only fifteen syllables, it should not be understood that the Mantra indicated is Panchadasaakshari.
The sixteenth syllable is the fourth Khanda of the Mantra and, like the fourth Paada of the Gayatri, should be muttered only by adepts who are highly evolved spiritually, as only they could conceive with their mainds, the fourth Khanda, which is beyond the reach of speech and thought and transcends all the Tattva-s, being the essence of pure consciousness.
The stanza merely mentions fifteen conventional names indicative of syllables, which, whenconstrued in the proper way, would yield the following result:
Siva is ‘ka’; Sakti represents ‘e’; Kaama represents ‘i’; Ksiti represents ‘la’ – first Khanda;
Ravi is ‘ha’ ; Siitakirana is ‘sa’ ; Smara, ‘ka’ ; Hamsa, ‘ha’ and Sakra, ‘la’ – second Khanda;
Paraa is ‘sa’ ; Maara, ‘ka’; and Hari, ‘la’ – third Khanda;
When the Hrllekhaa, i.e., ‘hrim’ is added to each of the three Khanda-s, the result is the Panchadasaakshari-mantra.
- The chief component of the Mantra, namely the Ramaa-Bija, when added to the end, will convert the Panchadasaakshari into the Sodasaakshari, which is really implied by the stanza.
- These sixteen syllables are the sixteen Chandra-kalaa-s or the fifteen Tithi-s of the lunar fortnight, and the sixteenth designated the Chitkalaa, with Tripurasundari and other Nitya-s as their presiding deities.
- The first four syllables of the Sodasaakshari constitute the first Khanda, relating to Agni, representing Kriyaa-sakti, the Jagrat state, the Visva-vrtti and Tamo-guna.
- The next five syllables constitute the second Khanda, relating to Surya, representing Icchaa-sakti, the Svapna state, the Taijasa-vrtti and rajo-guna;
- The Hrllekhaa between the two represents the Rudra-granthi.
- The next three syllables constitute the third Khanda relating to Soma, representing Jnaana-sakti, the Susupti state, the Prajna-vrtti and Sattva-guna;
- The Hrllekhaa between the second and the third Khanda-s represents the Vishnu-granthi.
- The fourth Khanda of one syllable, to be imparted by the Guru, known as Chandra-kalaa, is implied after the three aforesaid Khanda-s.
- The Hrllekhaa between the third and the fourth Khanda-s represents the Vishnu-granthi.
The influence of the Sun and the Moon over the human body and the part taken by them in helping the Yogin in the successful accomplishment of the Yoga may be summarized thus:
- The Sun and the Moon incessantly influence the Idaa- and Pingalaa-naadis day and night;
- The Moon through the Idaa in-fills all the seventy-two- thousand Naadi-s with his nectar.
- The Sun in his turn gathers up the same nectar.
- As and when the Sun and the Moon have their conjunction in the Aadhaara-chakra, there is the newmoon, during which the Kunalini has its sleep in the hollow of the Muulaadhaaraa, wherein is gathered the nectar flowing out of the lunar disc, melted in the presence of the rays of the Sun.
- Hence its sleeping state is represented to be during the dark fortnight.
- When the Yogin controls the passage of the Sun and the Moon along with the vital air through the Naadi-s, by performing Kumbhaka, the Sun and the Moon being deprived of their functions of in-filling and gathering the nectar, the Amrta-kunda in the Muulaadhaaraa gets dried up by the fire induced by the vital air, the Kundalini becomes famished and is roused from sleep, as it were, with the Phuutkaara of the snake, bursts through the three granti-s and bites the disc of the Moon in the thousand-petalled lotus.
- The shower of nectar flowing from the Moon drenches the lunar region of the Aajna-chakra, and the whole body gets filled with nectar from the shower.
- Hence the fifteen Kalaa-s of the Moon in the Aajna-chakra then become Nitya-s, perpetually shining.
- These Kalaa-s then reach and pervade the Visuddhi-chakra. The lunar disc in the middle of the thousand-petalled lotus is the Baindava-sthaana.
- That Kalaa of the character of pure consciousness is said to be of the form of Bliss. That alone is the Tipurasundari.
- Hence follows the secret of the Yogin’s successful accomplishment of rousing the Kundalini only in the bright half of the lunar month.
- All the Tithis-s of the bright half are therefore known as Full Moon, while the Tithis-s of the dark half inhere in the New Moon.
- Hence the Muulaadhaaraa is the region which is pitch dark. The Svaadhishthaanaa being subject to the influence of the Sun and the Moon is a region of darkness and light mixed together, while the Manipura, though essentially belonging to the region of Fire, is a region of darkness and light mixed together, owing to the reflection in the water there of the rays of the Sun. The Anaahataa is the region of brightness. Hence till Anaahataa is reached, the regions of the Chakra-s are either dark or of a mixed nature.
- The Visuddhi lies in the region of the Moon. The Aajnaa, being the seat of the Moon, is the region of nectar. As in these two regions, there is the admixture of the Sun’s rays, there is no moonlight.
- The thousand-petalled lotus, on the other hand, is a region of Moonlight alone. The Moon there being possessed of the Nitya-kalaa is perpetual, without waxing and waning.
- The disc of that Moon is the Sri-chakraa, while its Kalaa is the Saadaakhyaa.
- The Tri-kona is the Muulaadhaaraa.
- The eight-spoked Chakra is the Svaadhishtaanaa.
- The inner ten-spoked chakra is the Manipura.
- The outer ten-spoked Chakra is the Anaahataa.
- The fourteen spoked one is the Visuddhi.
- The four triangles of Siva constitute the Aajnaa-chakraa.
- The Bindusthaanaa in the quadrilateral is the thousand-petalled lotus.
- The Moon of the Aajnaa has fifteen Kalaa-s and contains the reflection of the sixteenth.
- In the disc of the Moon of the form of Sri-chakra, there is only one Kalaa and that is the Paramakalaa.
- The Anusvaara-s of the Panchadasaakshari indicate the Bindu and by implication the Naadaa thereof.
- Thus the Sri-chakraa of the character of the Naadaa, Bindu and Kalaa is also made up of three Khanda-s.
- The Saadaakhyaa which is the same as the Sri-vidyaa lies beyond the Naadaa, Bindu and Kalaa.
The fifty Kalaa-s inhere in the Sixteen Nitya-s as follows:
- The sixteen vowels, the sixteen consonants from ‘ka’ to ‘ta’, the sixteen consonants from ‘tha’ to ‘sa’, these inhere in the sixteen Nityaa-s in triads.
- The Akaasa-bija ‘ha’ inheres in the Akaasa of the Bindu, while ‘ksa’ which is composed of ‘ka’ and ‘sa’ inheres in the Nityaa-s corresponding to its components.
The sixteen Nityaa-s being of the form of the sixteen syllables, the sixteen syllables being of the form of the fifty Maatrkaa-s, the fifty Maatrkaa-s being of the form of the Sun, the Moon and the Fire, which in turn form the three granti-s, thus the four kinds of harmonious relations become patent.
Similarly the Chakraa-s and the Mantraa-s harmonise thus: The three Hrim-s and the Sri-bija inhere in the form of the Bindu of the Tri-kona, which represents the four Siva-chakraa-s. The letters comprised in the Pratyaahaaraa-s, Kalaa and Aksa inhere in the Sri-chakra as follows:
- The four semi-vowels and the four sibilants in the Ashta-kona.
- The twnty letters from ‘ka’ to ‘ma’ the nasals excepted, in the two dasaaraas.
- The nasal consonants through the Anusvaara, the Anusvaaraa and the Visargaa, in the Bindu.
- And the remaining 14 vowels in the Chaturdasaaraa.
The names of the sixteen Kalaa-s, the deities that preside over them, and the Tattvaa-s represented by them respectively , as gathered from the Veda-s, are :
Kalaa Deity Tattvaa
Darsaa, Tripurasundari Sivaa
Drstaa, Kaameswari Sakti
Darsataa, Bhagamaalini Maayaa
Visvaruupaa, Nityaklinnaa SuddhaVidhyaa
Sudarsanaa, Bherundaa Jala
Aapyaayamaanaa, Vahnivaasini Tejas
Pyaayamaanaa, Mahaavidyeswari Vaayu
Apyaayaa, Sivaduuti Manas
Suunrtaa, Tvaritaa Prthvi
Iraa, Kulasundari Aakaasaa
Apuuryamaanaa, Nityaa Vidyaa
Puuryamaanaa, Nilapataakaa Maheswaraa
Puuryanti, Vijaya Para-tattva
Puurnaa, Sarvamangala Aatma-tattva
Paurnamaasi, Jvaalaamaalinikaa Sadaasiva-tattvaa
Chitkalaa Chitkalaa Saadaakhya-tattva
The Devataa influencing the entire group is Kaama-devaa while Kaameswari presides over them all.
காதிவித்யா பஞ்சதசாக்ஷரீ – ஜபம் செய்யும் முறை
அஸ்யஸ்ரீ பஞ்ச தஶாக்ஷரீ மஹாமந்த்ரஸ்ய ஆனந்த பைரவ ருஷி: காயத்ரீச்சந்த: பஞ்சதஶாக்ஷர்யதிஷ்டாத்ரீ லலிதா மஹா த்ரிபுரஸுந்தரீ தேவதா || ‘கஏஈலஹ்ரீம்’ – பீஜம் | ‘ஸகலஹ்ரீம்’ ஶக்தி: | ‘ஹஸகஹலஹ்ரீம்’ – கீலகம் | ஸ்ரீ லலிதாமஹாத்ரிபுர ஸுந்தரீ ப்ரஸாதஸித்த்யர்த்தே ஜபே விநியோக:
‘கஏஈலஹ்ரீம்’, ‘ஸகலஹ்ரீம்’, ‘ஹஸகஹலஹ்ரீம்’ என்ற மூன்று கூடங்களையும் இரண்டுதடவை திருப்பி உச்சரித்துக் கர நியாஸமும் அங்க நியாசமும் செய்க.
பூர்ப்புவஸ்ஸுவரோமிதி திக்பந்த:
த்யானம்
அருணாம் கருணாதரங்கிதாக்ஷீம் த்ருதபாஶாங்குஶ
புஷ்ப பாண சாபாம்.
அணிமாதிபி ராவ்ருதாம் மயூகை ரஹமித்யேவ
விபாவயே பவானீம்
லம் – இத்யாதி பஞ்ச பூஜா
மந்த்ரஜபம்
‘கஏஈலஹ்ரீம்’, ‘ஸகலஹ்ரீம்’, ‘ஹஸகஹலஹ்ரீம்’
பூர்ப்புவஸ்ஸுவரோமிதி திக்விமோக:
த்யானம்: அருணாம் … பவானீம்
லம் – இத்யாதி பஞ்ச பூஜா
ஸமர்ப்பணம்:
குஹ்யாதிகுஹ்ய கோப்த்ரீ த்வம் க்ருஹாணாஸ்மத் க்ருதம் ஜபம் |
ஸித்திர்ப்பவது மே தேவி த்வத் ப்ரஸாதான் மயி ஸ்திரா ||
33. ஸௌபாக்ய மந்த்ரம்
ஸகல ஸௌபாக்யம்
ஸ்மரம் யோனிம் லக்ஷ்மீம் த்ரிதய மித மாதௌ தவ மனோ:
நிதாயைகே நித்யே நிரவதி மஹாபோக ரஸிகா:
பஜந்தி த்வாம் சிந்தாமணி குண நிபத்தாக்ஷ வலயா:
ஶிவாக்னௌ ஜுஹ்வந்த: ஸுரபிக்ருத தாராஹுதிஶதை: 33
ஆதியந்தமற்ற பரதேவதையே ! உன்னுடைய பஞ்சதசாக்ஷரீ மந்திரத்தின் முதலில் காமபீஜமான ‘க்லீம்’ என்ற அக்ஷரம், புவனேசுவரீ பீஜமான ‘ஹ்ரீம்’ என்ற அக்ஷரம், லக்ஷ்மீ பீஜமான ‘ஸ்ரீம்’ ஆகிய இம்மூன்றையும் சேர்த்து இடைவிடாத ஜபத்திலுள்ள ஆனந்தச் சுவையை அறிந்தவர்களாகிய சிலர் தொடர்ந்துவரும் சிந்தனையையே ஜபமாலையாகக் கொண்டு சக்தி முக்கோணத்தில் உள்ள அக்கினியில் காமதேனு அளித்த நெய்போன்ற ஆத்மானந்தத்தைக் கொண்டு நூற்றுக்கணக்கான ஆஹுதிகளை செய்பவர்களாக உன்னை ஆராதிக்கிறார்கள்.
ஸ்மரம் ஹகாரத்தையும், யோநிம் ஸகாரத்தையும், லக்ஷ்மீம் ககாரத்தையும் என இதற்குப் பொருள் கொண்டு , முன் 32ம் சுலோகத்தில் காதிவித்தையில் கூறிய ‘கஏஈ’ என்ற மூன்று அக்ஷரங்களுக்குப் பதிலாக, ‘ஹ ஸ க’ என்ற மூன்று அக்ஷரங்களை உபயோகித்தால் அது ஹாதிவித்தை அல்லது லோபாமுத்ரா வித்தை எனப்படும்.
34. சேஷசேஷீபாவம்
அன்னியோன்னிய ஸமரஸ வளர்ச்சி
ஶரீரம் த்வம் ஶம்போ: ஶஶி மிஹிர வக்ஷோருஹ யுகம்
தவாத்மானம் மன்யே பகவதி நவாத்மான மனகம்
அத: ஶேஷ: ஶேஷீத்யய முபய ஸாதாரணதயா
ஸ்த்தித: ஸம்பந்தோ வாம் ஸமரஸ பரானந்த பரயோ: 34
பரதேவதையே ! சந்திரசூரியர்களை நகில்களாக உடைய நீ பரமசிவனுக்கு உடல் என்றும் மாசற்ற ஒன்பது வ்யூஹ ஸ்வரூபியான சிவனை உன்னுடைய உடல் என்றும் மனக்கண்ணால் காண்கிறேன். ஆகையால் உடைமை, உடையவர் என்ற இந்த உறவு ஸமரஸப்பட்ட ஆனந்தபைரவர், ஆனந்தபைரவி இருவருக்கும் ஸமமாக நிலை பெற்றுள்ளது.
சிவனின் ஒன்பது வியூஹஸ்வரூபி: காலம், குலம், நாமம், ஞானம், சித்தம், நாதம், பிந்து, கலை, ஜீவன் முதலியன.
சேஷசேஷீ: உலகின் சிருஷ்டி, ஸ்திதி, லயங்களின் போது சிவன், சக்தி இருவருடைய பிரயத்தனமும் இருந்தபோதிலும் அதில் ஆனந்தபைரவி ஆனந்தபைரவருடன் சிவன் சேஷித்தன்மை அடைந்தவராகவும், சக்தி சேஷத்தன்மை அடைந்தவளாகவும் ஆகிறார்கள். இப்படி இருவருக்கும் சேஷசேஷீ பாவம் ஸமானம் ஆகிறது. சிவனுக்கு ஸமமாக சிவனுக்கு ‘ஸமய:’ என்றும் சக்திக்கு ‘ஸமயா’ என்றும் பெயர்.
இந்த சுலோகத்தை ஜபம் செய்துவரும் குடும்பங்களில் ஸ்த்ரீ புமான்களுக்குப் பரஸ்பரம் அன்யோன்ய பாவம் த்ருடமாகும். வேதோக்த கர்மாக்களைச் செய்யும் காலங்களில் புருஷர்களுக்குப் பிராதான்யமும் குடும்ப விஷயங்களில் ஸ்த்ரீகளுக்குப் பிராதான்யமும் இருப்பது அவசியம். இப்படி ஸமரஸத்துடன் வாழும் கிருஹஸ்தர்கள் ஈசுவர அனுக்கிரகத்தால் ஞானத்தைப் பெற்று மோக்ஷத்தை அடையலாம். – தேதியூர் சுப்ரஹ்மண்ய சாஸ்திரி
35. ஆறு சக்கரங்களிலும் விளங்கும் தேவி
க்ஷயரோக நிவிருத்தி
மனஸ்த்வம் வ்யோம த்வம் மருதஸி மருத் ஸாரதி ரஸி
த்வ மாபஸ் த்வம் பூமிஸ் த்வயி பரிணதாயாம் ந ஹி பரம்
த்வமேவ ஸ்வாத்மானம் பரிணமயிதும் விஶ்வ வபுஷா
சிதானந்தாகாரம் ஶிவயுவதி பாவேன பிப்ருஷே 35
ஆக்ஞா சக்கரத்தில் மனமாக நீ விளங்குகிறாய்; விசுத்தி சக்கரத்தில் ஆகாசமாகவும் விளங்குகிறாய்; அநாஹதத்தில் வாயுவாக விளங்குகிறாய்; ஸ்வாதிஷ்டானத்தில் அக்கினியாக இருக்கிறாய்; ஜல தத்துவமும் நீயே; பிருதிவி தத்துவமும் நீயே; நீயே ப்ரபஞ்சமாகப் பரிணமித்திருப்பதால் உனக்கு வேறான பொருள் இல்லவே இல்லை. நீயீ உனது ஸ்வரூபத்தை பிரபஞ்ச வடிவாக பரிணமிக்கச் செய்வதற்கு பமசிவனுடைய பத்னி என்ற பாவனையால் ஆனந்த வடிவான சித்ரூபத்தை ஏற்றுக்கொள்ளுகிறாய்.
இந்த சுலோகத்தில் தேவியின் அஷ்டமூர்த்தித்வம் கூறப்படுகிறது.
பாரும் புனலுங் கனலும்வெங் காலும் படர்விசும்பும்
ஊரும் முருகு சுவையொளி யூறொலி யொன்றுபடச்
சேருந் தலைவி சிவகாம ஸுந்தரி சீரடிக்கே
சாரும் தவமுடையார் படையாத தனமில்லையே – அபிராமி அந்தாதி
From the accompanying table, it will be seen that the Devi, who transcends all, manifests herself as the six Deva-s with their six abodes represented by the six Tattva-s which have as theri centres, the six Chakraa-s from a combination of which the entire Universe is made. The Devi, notwithstanding her gross and subtle transformations, remains the Chit transcending all Tattvaa-s in combination with the Bliss of the Paramaatman:
Tattvaa-s —- Lokaa-s—-Devaa-s—-Chakraa-s
—————- Satya —– Paraasakti —- Sahasraara
Manas — Tapas —- Siva —- Aajnaa
Aakaasaa — Jana – Sadhaasiva — Visudhhi
Vaayu — Mahar — Maheswara — Anaahataa
Tejas — Suvar — Rudra –– Svaadhishthaana
Ap —– Bhuvar —- Vishnu — Manipura
Prthivi — Bhur — Brahman —Mulaadhaaraa
Accoding to the Uttarakaula doctrine, the Paraasakti, which is the Pradhaana, is the creator of the Universe. The Devi being the Pradhaana, there is no need for her subservience to any other Tattva.
36. ஆக்ஞா சக்கரத்தில் பரசம்பு ஸ்வரூபம்
ஸர்வ வ்யாதி நிவாரணம்
தவாஜ்ஞா சக்ரஸ்த்தம் தபன ஶஶி கோடி த்யுதிதரம்
பரம் ஶம்பும் வந்தே பரிமிலித பார்ஶ்வம் பரசிதா
யமாராத்த்யன் பக்த்யா ரவி ஶஶி ஶுசீனா மவிஷயே
நிராலோகே(அ)லோகே நிவஸதி ஹி பாலோக புவனே 36
உன்னுடைய ஆக்ஞா சக்கரத்தில் இருப்பவரும் கோடி சூர்யசந்திரர்களின் பிரகாசத்தை உடையவரும், ஸகுண, நிர்க்குண சக்திவடிவான உன்னால் இருபுறமும் அனைக்கப் பெற்றவருமான பரமசிவனை சேவிக்கின்றேன். அம்மாதிரி இருப்பவரை பக்தியுடன் ஒருவன் ஆராதித்தால் சூரியன், சந்திரன், அக்கினி ஆகிய மூவருடைய ஒளியாலும் விளங்கவைக்க முடியாததாகவும், கண்ணுக்கு எட்டாததாகவும் கண்ணால் காணும் உலகத்தினின்று வேறுபட்டதாகவும் உள்ள பரஞ்ஜோதிவடிவமான உனது ஸாயுஜ்ய பதவியில் வசிப்பான் என்பது நிச்சயம்.
தவ: தவ என்னும் சொல்லால் புருவமத்தியில் உள்ள நலு சிவசக்கரங்கள் கூறப்படுகின்றன. இரண்டுதளம் உள்ள சிவசக்கரம் அன்று – லக்ஷ்மிதரர்
தவாஜ்ஞா: காமேசுவரஸூரியின் அபிப்பிராயத்தில், இது புருவமத்தியில் உள்ள இரண்டுதள வடிவமான ஆக்ஞா சக்கரத்தைத்தான் குறிக்கிறது. அவ்வாறே மேலே வரும் ஐந்து சுலோகங்களிலும் அந்த அந்தச் சக்கரங்கள்தான் குறிக்கப்படுகின்றன.
ஆக்ஞா சக்கரத்தில் பரசம்பு நாதரையும் சித்பராம்பாளையும் 64 மானஸ வியூகங்களால் சூழப்பட்டவர்களாகத் தியானிக்கவேண்டும்.
பாரதபூமியில் காசி க்ஷேத்ரம் ஆக்ஞாசக்கர ஸ்தானம். அங்கே துர்க்கையும் விசாலாக்ஷியும் பிரதான சக்திகள்.
அக்னிகண்டம், சூரியகண்டம், சந்திரகண்டம் இவற்றிலுள்ள கிரணங்கள் முன்னூற்றருபதும் ஆக்ஞாசக்கரத்தைக் கடந்து செல்லமாட்டா. அதற்குமேல் ஸஹஸ்ராரத்தில் பிரகாசிப்பது மற்றொரு நித்யமான சந்திரகலை.
37. விசுத்தி சக்கரத்தில் பார்வதி பரமேசுவர த்யானம்
பிரம்மராக்ஷஸ பூதப்ரேத பிசாச நிவாரணம்
விஶுத்தௌ தே ஶுத்தஸ்படிக விஶதம் வ்யோம் ஜனகம்
ஶிவம் ஸேவே தேவீமபி ஶிவஸமான வ்யவஸிதாம்
யயோ: காந்த்யா யாந்த்யா: ஶஶிகிரன ஸாரூப்ய ஸரணே:
விதூதாந்தர் த்வாந்தா விலஸதி சகோரீவ ஜகதீ 37
உன்னுடைய விசுத்தி சக்கரத்தில் தெளிவான பளிங்கு போன்ற வடிவினரும் ஆகாச தத்துவத்தைத் தோற்றுவிப்பவரும் ஆகிய சிவனையும் சிவனுடைய ஸங்கல்பத்திற்கு ஒத்த ஸங்கல்பம் உடையவளாகிய தேவியாகிய உன்னையும் சேவிக்கிறேன். எவர்களுடைய வெண்ணிலாவைப் போல் வெளிவரும் ஒளியினால் உலகம் முழுதும் அக்ஞானமாகிய அக இருள் ஒழியப் பெற்றதாய் நிலவில் களிக்கும் சகோரப் பக்ஷிபோல் விளங்குகிறதோ அப்படிப்பட்ட உங்களை சேவிக்கிறேன்.
விசுத்தி சக்ரம் பதினாறுதள கமலம்
ஆக்ஞா சக்கரத்தில் ஆத்மத்வம் நிரூபிக்கப் பட்டது. அவ்வாத்ம தத்துவத்திலிருந்து ஆகாசம் தோன்றுகிறது. இங்கு ஆத்மாவானது மனஸ் தத்துவம். சந்த்ரஸ்தானத்தில் உள்ள பார்வதியும் சூரியஸ்தானத்தில் உள்ள பரமேசுவரனும் விசுத்தி சக்கரத்தில் விளங்கும்போது மற்ற ஆனந்தங்கள் விலகிப் போகின்றன, பதினாறு நித்யைகளின் நிலவும் இல்லை. சிவதம்பதிகளின் ஆனந்தமயமான ஒளியே எல்லா ஜீவர்களுக்கும் ஜீவாதாரம்.
ஆகாசதத்துவ உபாஸனை சிதம்பர க்ஷேத்திரத்தில் செய்யப்படுவது. சிவனுக்கும் சக்திக்கும் இவ்வுபாஸனையில் வ்யோமேசுவரன் என்றும் வ்யோமேசுவரி என்றும் பெயர். அவர்கள் 72 ஆகாச மயூகங்களுடன் உபாசிக்கப் படுவர். சிலர் இந்தச் சுலோகத்தில் குறிக்கப் படுவது அர்த்த நாரீசுவர மூர்த்தி எனவும் கூறுவர்.
38. அநாஹத சக்கரத்தில் ஜீவப்ரஹ்ம ஐக்கியம்
பாலாரிஷ்ட நிவாரணம்
ஸமுன்மீலத் ஸம்வித் கமல மகரந்தைக ரஸிகம்
பஜே ஹம்ஸத்வந்த்வம் கிமபி மஹதாம் மானஸசரம்
யதாலாபா தஷ்டாதஶ குணித வித்யாபரிணதி:
யதாதத்தே தோஷாத் குணமகில மத்ப்ய: பய இவ 38
நன்றாக மலர்ந்த ஞானத்தாமரையின் ஆனந்தமாகிய மகரந்தம் ஒன்றையே விரும்பி அநுபவிப்பவைகளும் மகான்களுடைய மனதாகிற மானஸ ஸரஸில் நீந்துபவைகளும் இப்படிப்பட்டவை என்று வர்ணிக்க முடியாதவைகளுமான
இரண்டு ஹம்ஸங்களை பூஜிக்கிறேன். அவைகளுடைய இன்பப் பேச்சில் இருந்தே பதினெட்டெனக் கணக்கிடப்பட்ட வித்தைகள் பரிணமிக்கின்றன. அவை குற்றத்திலிருந்து குணமனைத்தையும் நீரிலிருந்து பாலைப்போல் பிரிக்கின்றன.
வாயு தத்துவத்திற்கு இருப்பிடம் அநாஹத சக்கரம். இது பன்னிரண்டு தள கமலம். இங்கு ஹம் என்ற சிவனையும் ஸ என்ற சக்தியையும் ஹம்ஸேசுவரன் – ஹம்ஸேசுவரி என்ற 54 வாயவ்ய மயூகங்களுடன் உபாசிக்க வேண்டும். இந்த ஹம்ஸங்களின் சம்பாஷணைதான் பதினெட்டு வித்தைகள். அவையாவன: வேதங்கள் 4, சிக்ஷை, கல்பம், வியாகரணம், நிருக்தம், சந்தஸ், ஜோதிஷம் என 6, மீமாம்ஸம், நியாயம், புராணம், தர்மசாஸ்திரம் என 4, ஆயுர்வேதம், தனுர்வேதம், காந்தர்வவேதம், நீதி சாஸ்திரம் என 4.
The eighteen Vidyaa-s are : (1) Siksaa (2) Kalpa (3) Vyaakarana (4) Nirukta (5) Jyotisa (6) Chandas (7) Rc (8) Yajus (9) Saaman (10) Atharvan (11) Purva- and Uttara-Mimaamsa (12) Nyaaya (13) Puraana (14) Dharmasaastra (15) Aayurveda (16) Dhanurveda (17) Gaandharva (18) Niti-Saastra.
“வித்யோபாஸகர்கள் அந்தர்முகமாக இருந்து கொண்டு அநாஹத சக்கரத்தில் ஏற்படும் சப்தத்தைக் கவனித்தால், ஸ்ரீவித்யா ஷோடசியில் உள்ள அக்ஷரங்களும், வித்யாகுருவின் ஸ்வரூபமும், தேவியின் ஸ்வரூபமும் (ஆகப் பதினெட்டும்) சப்த மூலமாகப் பிரத்தியக்ஷமாக அநுபவிக்கப் படும்.” – தேதியூர் சுப்ரஹ்மண்ய சாஸ்திரி
“ஹம்ஸ: ஸோஹம் ஸோஹம் ஹம்ஸ:” என்ற அஜபாவித்தையினால் ஹம்ஸத்வந்த்வத்யானம் செய்கிறவர்களுக்குப் பாவங்களும் புண்ணியம் ஆகிவிடும்.
ஹம்ஸத்வந்த உபாசனத்திற்கு ஏற்பட்ட ஸ்தானம் ஆவுடையார் கோவில்.
ஸ்ரீசங்கரர் ஸுபகோதய வியாக்யானத்தில் “அநாஹத்தில் சிவனை ஶிகிஜ்வாலா என்ற தீப வடிவிலும், சக்தியை ஶிகினீ என்ற ஒளி வடிவிலும் தியானம் செய்ய வேண்டும்” என்று கூறுகிறார். இப்படி உபாசிப்பவர்கள் எதிலும் நல்லதை எண்ணிப் பார்க்க வேண்டுமேயன்றிக் குற்றங்களை எண்ணக் கூடாது என்பது நியமம்.
39. ஸ்வாதிஷ்டான சக்கரத்தில் காமேசுவரி
நினைத்ததைக் கனவில் காண
த்வ ஸ்வாதிஷ்ட்டானே ஹுதவஹ மதிஷ்ட்டாய நிரதம்
தமீடே ஸம்வர்த்தம் ஜனனி மஹதீம் தாஞ்ச ஸமயாம்
யதாலோகே லோகான் தஹதி மஹஸி க்ரோதகலிதே
தயார்த்ரா யா த்ருஷ்டி: ஶிஶிர முபசாரம் ரசயதி 39
தாயே ! உன்னுடைய ஸ்வாதிஷ்டான சக்கரத்தில் அக்கினி தத்துவத்தை சிந்தித்து அதில் இடைவிடாது பிரகாசிக்கும் காலாக்கினி ரூபரான அந்த ருத்திரனையும், மகிமை வாய்ந்த அந்த ஸமயா அல்லது சந்திரகலா சக்தி என்னும் உன்னையும், போற்றுகின்றேன். ருத்திரருடைய எந்தப் பார்வையான அக்கினி கோபத்தால் வளர்ந்து உலகங்களை எரிக்கின்றதோ அப்போது கருணையால் நனைந்த உன்னுடைய பார்வை எதுவோ அது குளிர்ச்சியான உபசாரத்தை செய்கிறது.
வாயுவிலிருந்து அக்கினி தோன்றுகிறது. அக்கினிக்கு இருப்பிடம் ஸ்வாதிஷ் டான சக்கரம். இது ஆறுதள கமலம். இங்கே ஸமவர்த்தேசுவரர், ஸமயாம்பாள் என்று சிவனையும் சக்தியையும் 62 தைஜஸ மயூகங்களுடன் உபாசிக்க வேண்டும். இதற்கேற்பட்ட ஸ்தானமான அருணாசலம் என்னும் திருவண்ணாமலை. இங்கே உள்ளது தேஜோலிங்கம்.
சக்கரக்கிரமத்தில் விசுத்திக்கும் அநாஹதத்தும் பின் மணிபூரகம் வரவேண்டும். ஆனால் தத்துவக் கிரமத்தில் ஆகாசத்திற்கும் வாயுவுக்கும் பின் அக்கினி வருவதால் இவ்வாறு கூறப்படுகிறது.
40. மணிபூரகத்தில் மேகத்திடை மின்னல்கொடி போன்றவள்
நல்ல கனவு பலித்தல், கெட்ட கனவு விலகுதல், லக்ஷ்மி கடாக்ஷம்
தடித்வந்தம் ஶக்த்யா திமிர பரிபந்த்தி ஸ்புரணயா
ஸ்புரந் நானாரத்னாபரண பரிணத்தேந்த்ர தனுஷம்
தவ ஶ்யாமம் ம்கம் கமபி மணிபூரைக ஶரணம்
நிஷேவே வர்ஷந்தம் ஹரமிஹிர தப்தம் த்ரிபுவனம் 40
உன்னுடைய மணிபூரக சக்கரத்தை முக்கியமான உறைவிடமாகக் கொண்டதும், இருட்டுக்குச் சத்துருவைப்போல் பிரகாசிக்கும் பராசக்தியாகிற மின்னல் கொடியுடன் கூடியதும், ஜ்வலிக்கும் நானாவிதமான ரத்தின ஆபரணங்களாகிய இந்திரவில்லுடன் கூடியதும், கறுத்ததும், ருத்ரனாகிய பிரளயகால சூரியனால் எரிக்கப்பட்ட மூவுலகையும் மழை பொழிந்து குளிரச் செய்வதும், ஆகிய அதிசயமான மேகம் போன்ற உனது சதாசிவ தத்துவத்தை சேவிக்கிறேன்.
“அநாஹத சக்கரத்தில் உள்ள சூரியகிரணம் கீழே பரவி, ஸ்வாதிஷ்டான அக்கினியுடன் கூடி மணிபூரகத்தில் புகுந்து மேகத்தை உண்டாக்கி மழை பொழிந்து தாபத்ரயத்தால் தவிக்கும் உலகைக் குளிரச் செய்கிறது”
– அருணாமோதினீ
அக்கினியிலிருந்து ஜலம் தோன்றுகிறது. ஜலத்திற்கு இருப்பிடமான மணிபூரக சக்கரம் பத்துத்தள கமலம். இங்கே மகேசுவரன் – ஸ்திரஸௌதாமினி என்று சிவனையும் சக்தியையும் உபாசிக்க வேண்டும். இவர்களுக்கு அமிருதேசுவரன் – அமிருதேசுவரி என்ற பெயரும் பொருந்தும். இவர்களை ஸத்யோஜாதம், வாமதேவம் முதலிய 52 ஜல மயூகங்களால் சூழப்பெற்றவர்களாகத் தியானிக்க வேண்டும். இதற்கு ஏற்பட்ட ஸ்தானம் திருவானைக்காவல்.
இருள் நிறைந்த மணிபூரகத்தில் நீருண்டமேகம் போன்ற சிவனிடம் சாதாரண மின்னல்கொடிபோல் தேவி காட்சி அளிக்கிறாள்.
ஒப்பிடுக: “நீல தோயத மத்யஸ்த்தாத் வித்யுல்லேகேவ பாஸ்வரா”
— நாராயண ஸூக்தம்
41. மூலாதாரத்தில் ஆனந்தத் தாண்டவம்
தேவியின் ஸாக்ஷாத்காரம், குன்ம நோய் நிவாரணம்
தவாதாரே மூலே ஸஹ ஸமயயா லாஸ்ய பரயா
நவாத்மானம் மன்யே நவரஸ மஹாதாண்டவ நடம்
உபாப்யா மேதாப்யா முதய விதி முத்திஶ்ய தயயா
ஸநாதாப்யாம் ஜஜ்ஞே ஜனகஜனனீமத் ஜகதிதம் 41
உன்னுடைய மூலாதார சக்கரத்தில் நடனம் செய்வதில் நோக்கம் உள்ளவளும் ‘ஸமயா’ எனப் பெயர் கொண்டவளுமான உன்னுடன் கூட நவரஸம் ததும்பும் சிறந்த தாண்டவம் ஆடுகிற ஆனந்தபைரவரை தியானம் செய்கிறேன். பிரளயத்தில் அழிந்த உலகின் சிருஷ்டியை கருதி கருணையுடன் தம்பதியாகக் கூடியவர்களான உங்கள் இருவர்களாலும் இவ்வுலகமானது தந்தையும் தாயும் உடையதாக ஆகிறது.
அப்புவிலிருந்து பிருதிவி தத்துவம் உண்டாகிறது. பிருதிவிக்கு இருப்பிடம் மூலாதாரம். இது முக்கோணத்தின் நடுவில் நாலுதள கமலம். இங்கே ஆனந்தபைரவர் – ஆனந்தபைரவி என்று சிவனையும் சக்தியையும் 56 பிருதிவி மயூகங்களுடன் கூடியவர்களாகத் தியானம் செய்யவேண்டும்.
ஸமயாசாரத்தில் வெளியில் பூஜை இல்லை. இவர்கள் செய்யும் ஐக்கியானுஸந்தானம் நான்குவகைப் பட்டது:
- மூலாதாரம் முதலிய ஆறு சக்கரங்களும் ஸ்ரீசக்கரத்தில் உள்ள ஆறு கோணங்களில் ஐக்கியம்.
- ஸஹஸ்ராரம் பிந்து ஸ்தானமான சதுரச்ரத்தில் ஐக்கியம்.
- பிந்துவில் சிவன் ஐக்கியம்.
- ஸ்ரீசக்கரத்தில் அம்பாளுடைய மந்திரம் ஐக்கியம். பரா, பச்யந்தி, மத்யமா, வைகரி என்ற நாதத்துக்கும் ஷட்சக்கர வடிவமான பிந்துவுக்கும் காலாத்மகக் கலை வடிவமான முன்னூற்றருபது கிரணங்களுக்கும் அம்பாள் அதீதமானவள்.
இப்படிச் சிவதம்பதிகளைத் தங்களுக்குள்ளேயே பூஜிப்பவர்களுக்கு ஸமயிகள் என்பது பெயர்.
இதுவரை 41 சுலோகங்கள் ஆனந்தலஹரீ – கைலாஸத்தில் இருந்து கிடைத்தவை;
இனிவரும் ஐம்பத்தொன்பது சுலோகங்கள் ஸௌந்தர்ய லஹரீ – ஸ்ரீ சங்கராசாரியார் அருளியது.
ஸ்ரீ
ஸௌந்தர்ய லஹரி (சு.42 முதல் சு.103 வரை)
இனிவரும்
ஐம்பத்தொன்பது சுலோகங்கள் ஸௌந்தர்ய லஹரீ – ஸ்ரீ சங்கராசாரியார் அருளியது.
ஸௌந்தர்ய
லஹரி (சு.42 முதல் சு.103 வரை)
1. கிரீட வர்ணனை
ஸகல
வச்யம், ஜலரோக நிவாரணம்
கதைர்
மாணிக்யத்வம் ககனமணிபி: ஸாந்த்ர கடிதம்
கிரீடம்
தே ஹைமம் ஹிமகிரிஸுதே கீர்த்தயதி ய:
ஸ
நீடேயச்சாயா ச்சுரண ஶபலம் சந்த்ர ஶகலம்
தனு:
ஶௌனாஸீரம் கிமிதி ந நிபத்னாதி திஷணாம் 42
இமயமலையின்
பெண்ணே ! மாணிக்கங்களாக உன் சேவையின் பொருட்டு உருவடைந்துள்ள பன்னிரண்டு ஆதித்தியர்களால் நெருக்கமாக இழைக்கப்பட்ட உன்னுடைய தங்கக் கிரீடத்தை எவன் வர்ணிக்கப் புகுகிறானோ அவன் கிரீடகோளத்தில் உள்ள மாணிக்கங்களின் காந்தியால் விசித்திரவர்ணம் உள்ளதாகத் தோன்றும் சந்திரகலையை இந்திரனுடைய வில் என்ற கருத்தை வர்ணனையில் எப்படிப் புருத்தாமல் இருக்க முடியும் ?
The twelve Aadithyaas are : (1) Dhaatr (2) Mitra (3) Aryaman
(4)Rudra (5) Varuna (6) Surya (7) Bhaga (8) Vivasvat (9) Pusan (10) Savitr (11)
Tvastr (12) Vishnu
2. கேச வர்ணனை
ஸர்வ
ஜயம்
துனோது
த்வாந்தம் நஸ் துலித தலிதேந்தீவர வனம்
கன
ஸ்நிக்த ஶ்லக்ஷ்ணம் சிகுர நிகுரும்பம் தவ ஶிவே
REPORT THIS AD
யதீயம்
ஸௌரப்யம் ஸஹஜ முபலப்தும் ஸுமநஸோ
வசந்த்யஸ்மின்
மன்யே வலமதன வாடீ விடபினாம் 43
பரமசிவ
பத்தினியே ! மலர்ந்த கறுநெய்தல் காடுபோல் பிரகாசிப்பதாகவும், அடர்ந்தும் வழவழப்பாகவும், மெதுவாகவும் உள்ளதுமான உன்னுடைய கேச பாரம் எங்களுடைய அக இருளை போக்கடிக்கட்டும்.
அதில் உள்ள இயற்கையான வாசனையை அடைய விரும்பி இந்திரனுடைய நந்தவனத்தில் உள்ள மரங்களின் புஷ்பங்கள் அந்தக் கேசபாரத்தில் வசிக்கின்றன என்று நினைக்கிறேன்.
‘சம்பகாசோக
புந்நாக ஸௌகந்திகலஸத்கசா’ என்ற ஸ்ரீலலிதா ஸஹஸ்ர நாமத்திற்குப் பொருள் கூறும்போது பாஸ்கரராயர் “புஷ்பங்களின் வாசனையை விட்த் தேவியின் கூந்தலுக்கு இயற்கையாகவே அதிக வாசனை இருப்பதால் அப்புஷ்பங்கள் வெறும் அலங்காரத்திற்காக மட்டும் தரிக்கப் பட்டதாகக் கூறுகிறார். தேவி சூடிக்கொண்டதால் புஷ்பங்களுக்குப் பெருமை.
3. வகிட்டின் வர்ணனை
ஸர்வரோக
நிவிருத்தி
தனோது
க்ஷேமம் நஸ்தவ வதன ஸௌந்தர்ய லஹரீ
பரீவாஹஸ்ரோத:
ஸரணிரிவ ஸீமந்த ஸரணி:
வஹந்தீ
ஸிந்தூரம் ப்ரபலகபரீ பார திமிர
த்வஷாம்
ப்ருந்தைர் பந்தீக்ருதமிவ நவீனார்க்க கிரணம் 44
உன்னுடைய
முகத்தின் அழகுவெள்ளத்தின் பெருக்கானது, வழிந்தோடும் வாய்க்கால் மாதிரி தோன்றுவதும் பலம் மிகுந்த கேச பாரத்தின் இருளாகிய சத்துருக் கூட்டத்தால் சிறைப்பிடிக்கப்பட்ட உதய சூரியனுடைய ஒளி போன்ற குங்குமத்தை தரிப்பதும் ஆகிய வகிட்டின் ரேகை எங்களுக்கு க்ஷேமத்தை அளிக்கட்டும்.
இந்த
சுலோகத்தில் வரும் ஸௌந்தர்யலஹரி என்னும் சொல்லே இந்த நூலுக்குப் பெயராக வைக்கப் பட்டுள்ளது.
உதயசூரியனுடைய
ஒளி போன்ற சிந்துரப்பொட்டு:
உதிக்கின்ற
செங்கதிருச்சித் திலக முணர்வுடையோர்
மதிக்கின்ற
மாணிக்கம் மாதுளம் போது மலர்க்கமலை
துதிக்கின்ற
மின்கொடிக் குங்கும தோயமென்ன
விதிக்கின்ற
மேனி அபிராமி யென்றன் விழுத்துணையே – அபிராமியந்தாதி 1
4. முன் நெற்றி மயிர் வர்ணனை
லக்ஷ்மீ
கடாக்ஷம், வாக்குப் பலிதம்
அராலை:
ஸ்வபாவ்யா தலிகலப ஸஶ் ரீபி ரலகை:
பரீதம்
தே வக்த்ரம் பரிஹஸதி பங்கேருஹ ருசிம்
தரஸ்மேரே
யஸ்மின் தஶனருசி கிஞ்ஜல்க ருசிரே
ஸுகந்தௌ
மாத்யந்தி ஸ்மரதஹன சக்ஷுர் மதுலிஹ: 45
புன்சிரிப்பால்
சற்று மலர்ந்தாற்போன்றதும், பல்வரிசையாகிற கேசரங்களுடன் பிரகாசிப்பதும் நல்மணமும் உள்ளதும் ஆகிய எந்த முக கமலத்தில் மன்மதனை எரித்த சிவனுடைய கண்களாகிய தேன்வண்டுகள் மயங்குகின்றனவோ அப்படிப்பட்ட உன்னுடைய முகம் இயற்கையாகவே சுருட்டையானதும் சிறு வண்டுகள் சஞ்சரிப்பது போன்ற சோபையைக் கொண்டதுமான முன்நெற்றி மயிர்களால் சூழப்பெற்று தாமரையின் அழகை பரிகசிப்பது போல் இருக்கிறது.
5. பாதிச் சந்திரன் போன்ற நெற்றியின் வர்ணனை
புத்திரப்ராப்தி
லலாடம்
லாவண்ய த்யுதி விமல மாபாதி தவ யத்
த்வதீயம்
தன்மன்யே மகுட கடிதம் சந்த்ரசகலம்
விபர்யாஸ
ந்யாஸா துபயமபி ஸம்பூய ச மித:
ஸுதாலேபஸ்யூதி:
பரிணமதி ராகா ஹிமகர: 46
வெண்ணிலவு
போன்ற அழகுடன் உன்னுடைய எந்த நெற்றியானது பிரகாசிக்கிறதோ அதை கிரீடத்தில் சூடிக்கொண்டிருப்பதன் இரண்டாவது பாகமாகிய சந்திரகலையோ என்று எண்ணுகிறேன். இரண்டும் திருப்பிப் பொருத்தப் பட்டால் ஒன்றுக்கொன்று நன்றாகச் சேர்ந்து அமிருதம் ஒழுகும் பூர்ணிமைச் சந்திரனாக பரிணமிக்கும்.
அம்பாளுடைய
நெற்றிக் கிரீடத்தில் இருக்கும் பாதிச் சந்திரனைப் பூர்ணமாக்கும் மற்றொரு பாதிபோல் வலைந்தும் அழகாகவும் உள்ளது என்று நெற்றி வர்ணிக்கப் படுகிறது.
“அஷ்டமீ
சந்த்ர விப்ராஜ தளிக ஸ்த்தல சோபிதாயை நம:” அரைவட்ட வடிவமான அஷ்டமிச் சந்திரன் போல் விளங்கும் நெற்றியைக் கொண்டவளுக்கு நமஸ்காரம்.
6. புருவங்களின் அழகு
எல்லாக்
காரியங்களிலும் ஜயம்
ப்ருவௌ
புக்னே கிஞ்சித்புவன பய பங்க வ்யஸநிநி
த்வதீயே
நேத்ராப்யாம் மதுகர ருசிப்யாம் த்ருத குணம்
தனுர்
மன்யே ஸவ்யேதரகர க்ருஹீதம் ரதிபதே:
ப்ரகோஷ்ட்டே
முஷ்டௌ ச ஸ்தகயதி நிகூடாந்தரமுமே 47
உமாதேவியே
! உலகபயத்தைப் போக்குவதில் ஊக்கம் உள்ளவளே ! சற்று வளைந்த உன்னுடைய புருவங்கள் வண்டுகள் போல் பிரகாசிக்கின்ற கண்களால் நாண் பூட்டியதாகவும், இடதுகையால் பிடிக்கப் பட்டு முழங்கையாலும் விரல் முஷ்டியாலும் மறைக்கப் பட்டதால் மத்தியபாகம் தெரியாததாகவும் உள்ள மன்மதனுடைய வில் என்று எண்ணுகிறேன்.
7. கண்களின் அழகு
நவக்கிரஹ
தோஷ நிவிருத்தி
அஹ:
ஸூதே ஸவ்யம் தவ நயன மார்க்காத்மகதயா
த்ரியாமாம்
வாமம் தே ஸ்ருஜதி ரஜனீ
நாயகதயா
த்ருதீயா
த்ருஷ்டிர் தரதலித ஹேமாம்புஜ – ருசி:
ஸமாதத்தே
ஸந்த்யாம் திவஸ நிஶயோ ரந்தரசரீம் 48
உன்னுடைய
வலது கண் சூரியவடிவு ஆனதால் பகலை உண்டாக்குகிறது. உன்னுடைய இடது கண் சந்திரவடிவு ஆனதால் இரவை உண்டாக்குகிறது. உன்னுடைய மூன்றாவது கண் சிறிது மலர்ந்த பொற்றாமரையைப் போல் விரகாசிப்பதால் பகலுக்கும் இரவுக்கும் நடுவில் உள்ள ஸந்தியா காலத்தை உண்டாக்குகிறது.
8. எட்டு விதமான கண்ணோட்டம்
ஸர்வ
ஜயம், நிதி தர்சனம்
விஶாலா
கல்யாணீ ஸ்புட ருசி ரயோத்யா குவலயை:
க்ருபாதாராதாரா
கிமபி மதுரா(அ)(அ)போக
வதிகா
அவந்தீ
த்ருஷ்டிஸ்தே பஹுநகர விஸ்தார விஜயா
த்ருவம்
தத்தந்நாம வ்யவஹரண யோக்யா விஜயதே 49
உன்னுடைய
கண்ணோட்டம் விசாலமாகவும் மங்களகரமாகவும் மலர்ந்து பிரகாசிப்பதாகவும், கருநெய்தல்களால் வெல்லமுடியாத அழகு வாய்ந்ததாகவும் கருணைப் பெருக்கிற்கு ஆதாரமாகவும் வர்ணிக்க முடியாத இனிமையுடன் கூடியதாகவும், ஆழங்காண முடியாததாகவும், ரக்ஷிப்பதாகவும், பல நகரங்களில் அதன்
வெற்றியின் சீர்மை விளங்குவதாகவும், அதனால் அந்த நகரங்களின் பெயர்களால் குறிப்பிடத் தக்கதாகவும் நிச்சயம் அனைத்தையும் வெல்லுவதாக விளங்குகிறது.
எட்டு
விதமான த்ருஷ்டி:
விசாலா
என்பது உள்ளாக மலர்ந்த பார்வை
கல்யாணீ
ஆச்சரியத்தைக் காட்டுவது
அயோத்யா
காமத்தை உண்டாக்குவது
தாரா
ஆலஸ்யத்தைக் காட்டுவது
மதுரா
ஸஞ்சலமானது
போகவதீ
பிரியத்தோடு கூடியது
அவந்தீ
மயங்கியது
விஜயா
பாதி மூடினது
9. மூன்றாவது கண்
தூரதர்சனம்,
வைசூரி நோய் நிவாரணம்
கவீனாம்
ஸந்தர்ப்ப ஸ்தபக மகரந்தைக ரஸிகம்
கடாக்ஷ
வ்யாக்ஷேப ப்ரமர கலபௌ கர்ணயுகலம்
அமுஞ்சந்தௌ
த்ருஷ்ட்வா தவ நவரஸாஸ்வாத தரலௌ
அஸூயா
ஸம்ஸர்க்கா தலிக நயனம் கிஞ்சிதருணம் 50
கவிகளுடைய
பாடல்களாகிய பூங்கொத்தின் மகரந்தத்தைப் பருகுவதிலேயே முக்கியமாக ஆசை வைத்த உன்னுடைய இரண்டு காதுகளையும் விடாமல் இருக்கும் நவரஸங்களையும் அநுபவிக்க ஆசைகொண்ட குட்டி வண்டுகள் போன்ற கடைக்கண்களை பார்த்து பொறாமையினால் உன்னுடைய நெற்றிக் கண்ணானது சிறிது சிவந்திருக்கிறதுபோலும்.
51 தேவியின் பார்வையில் எட்டு ரஸங்கள்
ஸர்வஜன
வச்யம்
ஶிவே
ச்ருங்காரார்த்ரா ததிதரஜனே குத்ஸனபரா
சரோஷா
கங்காயாம் கிரிஶசரிதே விஸ்மயவதீ
ஹராஹுப்யோ
பீதா ஸரஸிருஹ ஸௌபாக்யஜனனீ
ஸகீஷு
ஸ்மேரா தே மயி ஜனனி
த்ருஷ்டி: ஸகருணா 51
தாயே
! சிவனிடத்தில் உன்னுடைய பார்வை காதலின் கசிவு உள்ளதாகவும் அவரைத் தவிர மற்றவர்களிடத்தில் அருவருப்புடையதகவும் கங்கா தேவியிடம் கோபத்துடன் கூடியதாகவும் சிவனுடைய லீலைகளில் வியப்புடையதாகவும் சிவன் அணியும் பாம்புகளிடம் பயம் உடையதாகவும் தாமரையின் அழகுக்கும் அழகு செய்வது போல் சற்றுச் சிவந்திருப்பதால் வீரரஸம் உடையதாகவும் தோழிகளிடத்தில் ஹாஸ்ய ரஸம் உடையதாகவும் என்னிடம் கருணையுடன் கூடியதாகவும் விளங்குகிறது.
52 மன்மத பாணங்களைப் போன்ற கண்கள்
காமஜயம்,
காது, கண்களின் ரோக நிவாரணம்
கதே
கர்ணாப்யாம் கருத இவ பக்ஷ்மாணி தததீ
புராம்
பேத்துஶ் சித்தப்ரஶம ரஸ வித்ராவண பலே
இமே
நேத்ரே கோத்ராதரபதி குலோத்தம்ஸ கலிகே
தவாகர்ணாக்ருஷ்ட
ஸ்மரஶர விலாஸம் கலயத்: 52
மலையரசனான
இமவானுடைய குலக்கொழுந்தே ! உன்னுடைய இக்கண்கள் இரண்டும் காதுகள் வரை நீண்டிருப்பதாலும், பாணங்களில் கட்டிய இறகுகளைப் போன்ற இமை மயிர்களை தரிக்கும் காரணத்தாலும் முப்புரம் எரித்த சிவபெருமானுடைய மனத்தின் சாந்தி ரஸத்தைக் கலைப்பதை நோக்கமாகக் கொண்டு காதுவரை இழுக்கப்பட்ட மன்மதபாணத்தின் திறமையை நடித்துக் காட்டுகின்றன.
இவ்விதம்
தேவியினுடைய கண்ணழகைத் தியானம் செய்வதால் இருதயத்தில் உள்ள காமச் சிக்கல் அறுபட்டு ஒழியும்.
53 மும்மூர்த்திகளைச் சிருஷ்டிக்கும் முக்குணங்களைப் படைத்த கண்கள்
தேவி
பிரத்யக்ஷம், ஸகல லோக வச்யம்
விபக்த
த்ரைவர்ண்யம் வ்யதிகரித லீலாஞ்ஜனதயா
விபாதி
த்வந்நேத்ர த்ரிதய மித மீஶானதயிதே
புன:
ஸ்ரஷ்டும் தேவான் த்ருஹிண ஹரி ருத்ரானு ப்ரதான்
ரஜ:
ஸத்வம் பிப்ரத் தம இதி குணானாம்
த்ரயமிவ 53
பரமசிவனுடைய
அன்பிற்கு உரியவளே! அழகுக்காக இட்டுக் கொள்ளப் பட்ட மையினால் மூன்று வர்ணங்களை இன்னும் தெளிவாகப் பிரித்துக் காட்டும் இந்த உன்னுடைய கண்கள் மூன்றும் பிரளயகாலத்தில் உன்னிடம் ஒடுங்கிய பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் என்ற தேவர்களை மறுபடியும் தோற்றுவிப்பதற்கு ரஜோகுணம், ஸத்துவகுணம், தமோகுணம் என்ற மூன்று குணங்களையும் தரித்துக் கொண்டாற்போல் விளங்குகிறது.
54 மூன்று புண்ணிய நதிகளைப் போன்ற கண் ரேகைகள்
ஸர்வ
பாப நிவ்ருத்தி, உபஸ்தரோக நிவாரணம்
பவிர்த்ரீ
கர்த்தும் ந: பஶுபதி பராதீன
ஹ்ருதய
தயாமித்ரைர்
நேத்ரை ரருண தவல ஶ்யாம ருசிபி:
நத:
ஶோணோ கங்கா தபன தனயேதி த்ருவமமும்
த்ரயாணாம்
தீர்த்தானா முபநயஸி ஸம்பேத மநகம் 54
பசுபதிக்கு
ஆதீனமான உள்ளம் படைத்தவளே ! தயைக்குக் கூட்டாளிகளும் சிவப்பு, வெளுப்பு, கறுப்பு என்ற வர்ணங்களைக் கொண்டவைகளுமான உனது கண்களால் மேற்கு நோக்கிச் செல்வதும் சிவந்ததுமான சோணபத்ரா என்ற
ஆறு, வெளுப்பான கங்கை, சூரியபுத்திரியாகவும் கறுப்பு வர்ணம் கொண்டதாகவும் விளங்கும் யமுனை என்ற மூன்று புண்ணிய நதிகளின் ஸங்கமமாகிய பாவத்தையெல்லாம் போக்கும் இக்கூட்டுறவை உன்னைக் காணும் – எங்களை புனிதமாக்குவதற்காக ஏற்படுத்தியிருக்கிறாய் என்பது நிச்சயம்.
55 கண்கள் முடாமல் இருக்கும் காரணம்
ரக்ஷிக்கும்
சக்தி; அண்டரோக நிவாரணம்
நிமேஷான்
மேஷாப்யாம் ப்ரளய முதயம் யாதீ ஜகதீ
தவேத்யாஹு:
ஸந்தோ தரணிதர ராஜன்யதனயே
த்வதுன்மேஷாஜ்ஜாதம்
ஜகதித மஶேஷம் ப்ரளயத:
பரித்ராதும்
ஶங்கே பரிஹ்ருத நிமேஷாஸ் தவ த்ருஶ: 55
பர்வதராஜ
குமாரியே உன்னுடைய கண்கள் மூடுவதாலும் திறப்பதாலும் உலகம் பிரலத்தையும் சிருஷ்டியையும் அடைகிறது என்று சான்றோர் கூறுகின்றனர். உனது கண்கள் திறப்பதால் உண்டான இந்த உலகம் முழுவதையும் பிரளயத்திலிருந்து அழியாமல் காப்பதற்காக உன்னுடைய கண்கள் மூடுதல் இல்லாமல் இருக்கின்றன என்று நான் ஊகிக்கிறேன்.
தேவதைகள்
கண்கொட்டுவதில்லை. பரதேவதை இயற்கையாகவே கண்கொட்டாமல் இருந்தபோதிலும் அது உலக ரக்ஷணத்துக்காக என்று இங்கே உபசரித்துக் கூறப்படுகிறது.
56 அழகில் மீன்களையும், நீலோத்பவத்தையும் வெல்லும் கண்கள்
பந்தவிமோசனம்,
நேத்ரதோஷ நிவாரணம்
தவாபர்ணே
கர்ணே ஜபநயன பைஶுன்ய சகிதா
நிலீயந்தே
தோயே நியத மநிமேஷா: ஶபரிகா:
இயஞ்
ச ஸ்ரீர் பத்தச்சத புடகவாடம் குவலயம்
ஜஹாதி
ப்ரத்யூஷே நிஶி ச விகடய்ய ப்ரவிஶதி 56
யாருக்கும்
கடன் படாததால் ‘அபருணா’ எனப் பெயர்பெற்றவளே ! உன்னுடைய காதில் மெதுவாக ஓதுவதுபோல் கண்கள் காணப்படுவதால் தங்களைப் பற்றிக் கோள்சொல்வதாக அச்சம் அடைந்து பெண்மீன்கள் கண்களைமூடாமல் பார்த்துக் கொண்டே நீரில் மறைந்து கொண்டிருக்கின்றன என்பது நிச்சயம். இந்த கண்ணின் அழகாகிய தேவதையும் காலையில் இதழ்கள் மூடிக்கொள்வதால் கதவு சாத்தப் பட்டது போன்ற கருநெய்தல் பூவை விட்டுவிடுவதுபோலும் இரவில் அதைத் திறந்து கொண்டு மீண்டும் புகுவது போலும் தோன்றுகிறது.
மீன்களைப்போன்ற
கண்ணழகு படைத்த மூர்த்தி விசேஷம் மதுரையில் உள்ளது. ஆகையால் அங்கே மீனாக்ஷி கோவிலில் பொற்றாமரைக் குளத்தில் மீன்கள் வாழ்வதில்லை எனக் கூறுவர்.
அபர்ணே
: (1) பக்தர்களிடம் கடன்படாமல் இருப்பவள்; (2) அம்பாள் பார்வதியாகத் தவம் செய்தபோது (பர்ணம்) இலையைக்கூடச் சாப்பிடாமல் இருந்ததால், ‘அபர்ணா”
57 எங்கும் சமமாகப் பிரகாசிக்கும் நிலவு போன்ற கடாக்ஷம்
ஸகல
ஸௌபாக்கியம்
த்ருஶா
த்ராகீயஸ்வா தரதலித நீலோத்பல ருசா
தவீயாம்ஸம்
தீனம் ஸ்நபய க்ருபயா மாமபி ஶிவே
அநேனாயம்
தன்யோ பவதி ந ச தே
ஹானி-ரியதா
வனே
வா ஹர்ம்யே வா ஸமகர நிபாதோ
ஹிமகர: 57
மங்களஸ்வரூபியே
! தீர்க்கமானதும் சற்று மலர்ந்த கருநெய்தல்போல் பிரகாசிப்பதுமான உன் பார்வையால் உனக்கு வெகு தூரத்தில் இருக்கும் ஏழையாகிய என்னையும் கூட கருணையால் நீராட்டி வை. அதனால் இவன் செல்வ வானானாக ஆகிவிடுவான். இதனால் உனக்கு ஒரு நஷ்டமும் இல்லை. சந்திரன் காட்டிலாயினும் நாட்டிலாயினும் நாட்டிலுள்ள மாளிகையிலாயினும் தன் கிரணங்களைச் சமமாகவே பொழிகிறான், அதனால் சந்திரனுக்கு என்ன நஷ்டம் ?
58 மன்மதபாணம் போன்ற கடைக்கண் பார்வை
காமஜயம்,
ஸகலரோக நிவிருத்தி
அராலம்
தே பாலீயுகல மகராஜன்யதனயே
ந
கேஷா மாதத்தே குஸுமஶர கோதண்ட குதுகம்
திரஶ்சீனோ
யத்ர ஶ்ரவணபத முல்லங்க்ய விலஸன்
அபாங்க
வ்யாஸங்கோ திசதி ஶரஸந்தான திஷணாம் 58
பர்வதராஜகுமாரியே
! உன்னுடைய வளைந்த காதுக்கும் கண்ணுக்கும் இடையே உள்ள பிரதேசம் இரண்டும் புஷ்ப பாணனான மன்மதனுடைய வில் என்ற நம்பிக்கையை யாருக்குத்தான் உண்டாக்காது ? அந்தப் பிரதேசத்தில் குறுக்காகச் செல்லுகின்ற கடைக்கண் பார்வை காது வழியாக ஊடுருவிப் பாய்வதாய் விளங்கிக்கொண்டு பாணம் தொடுக்கப்பட்டுள்ளது என்ற தோற்றத்தை உண்டாக்குகிறது.
தனந்தரும்
கல்வி தருமொரு நாளுந் தளர்வறியா
மனம்தரும்
தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சமில்லா
இனம்தரும்
நல்லன வெல்லாம் தரும்அன்ப ரென்பவர்க்கே
கனம்தரும்
பூங்குழ லாளபிராமி கடைக் கண்களே- அபிராமியந்தாதி 69
59 மன்மதனுடைய ரதம் போன்ற முகம்
ஸர்வஜன
வச்யம்
ஸ்புரத்கண்டாபோக
ப்ரதிபலித தாடங்க யுகளம்
சதுஶ்சக்ரம்
மன்யே தவமுகமிதம் மன்மதரதம்
யமாருஹ்ய
த்ருஹ்யத் யவனிரத மர்க்கேந்து சரணம்
மஹாவீரோ
மார: ப்ரமதபதயே ஸஜ்ஜிதவதே 59
கண்ணாடிபோல்
பிரகாசிக்கிற கன்னப்பிரதேசத்தில் பிரதிபலிக்கின்ற இரண்டு தாடங்கங்களுடன் கூடின உன்னுடைய இந்த முகமானது நாலு சக்கரங்களுடன் கூடின மன்மதனின் தேர் என்று கருதுகிறேன். அதில் ஏறிக்கொண்டு மன்மதன் மஹாவீரனாக விளங்குபவனாய் சூரிய, சந்திரர்களைச் சக்கரங்களாகக் கொண்ட பூமியாகிய தேரில் போருக்குச் செல்லும் பிரமத கணங்களுக்கு அதிபதியான பரமேசுவரனையே வஞ்சிக்க எண்ணி எதிர்க்கிறான்.
60 மதுரமான சொல்லோசை
வாக்குப்பலிதம்,
ஊமையையும் பேசவைப்பது
ஸரஸ்வத்யா:
ஸூக்தீ ரம்ருத லஹரீ கௌஶலஹரீ
பிபந்த்யா:
ஶர்வாணி ஶ்ரவண சுலுகாப்யா மவிரலம்
சமத்கார
ஶ்லாகாசலித ஶிரஸ: குண்டலகணோ
ஜணத்காரைஸ்
தாரை: ப்ரதிவசன மாசஷ்ட இவதே 60
பரமசிவபத்தினியே
! அமுதப்பெருக்கின் இனிமையைத் தனதாக்கிக்கொண்ட உன்னுடைய சொல்லமுதத்தை காதுகளாக்ய பாத்திரங்களால் இடைவிடாது பருகுபவரும் அப்பேச்சின் திறமையைப் போற்றும் வகையில் தலையை அசைப்பவருமான ஸரஸ்வதீதேவியினுடைய காதணிகள் ‘ஜணத்’, ‘ஜணத்’ என்ற உயர்ந்த ஒலியால் ‘ஆம், ஆம்’ என்று ஆமோதிப்பை சொல்லுவனபோல் தோன்றுகின்றன.
61 மூக்குத்தி முத்தின் அழகு
மனோஜயம்,
லக்ஷ்மீகடாக்ஷம்
அஸௌ
நாஸாவம்ஶஸ் துஹிநகிரிவம்ச த்வஜபடி
த்வதீயோ
நேதீய பலது பல மஸ்மாக முசிதம்
பஹத்யந்தர்
முக்தா: ஶிஶிரகர நிஶ்வாஸ கலிதம்
ஸம்ருத்த்யா
யத்தாஸாம் பஹிரபி ச முக்தாமணிதர: 61
ஹிமவானுடைய
குலமாகிய கொம்பில் பறக்கும் கொடிபோன்றவளே ! உன்னிடைய இந்த மூங்கில்தண்டு போன்ற மூக்கு எங்களுக்குப் பொருத்தமானதும் விரைவில் கைகூடுவதுமாகிய நற்பயனை அளிக்கட்டும். அந்த மூக்காகிய மூங்கில்தண்டு உள்ளே முத்துக்களை வைத்துக் கொண்டிருக்கிறது போலும். அவ்வாறு முத்துக்கள் நிறைந்திருப்பதால்தான் வெளியிலேயும் சந்திரநாடி பாயும் இடதுநாசியின் வழியே வெளிவரும் மூச்சுக் காற்றினால் கொண்டுவரப்பட்ட சிறந்த முத்தை அணிந்துகொண்டிருக்கிறது போலும்.
62 உதடுகளின் அழகு
நல்ல
நித்திரை
ப்ரக்ருத்யா(அ)(அ)ரக்தாயாஸ்
தவ ஸுததி தந்தச்சதருசே:
ப்ரவக்ஷ்யே
ஸாத்ருஶ்யம் ஜனயது பலம் வித்ருமலதா
ந
பிம்பம் தத்பிம்ப ப்ரதிபலன ராகா தருணிதம்
துலா
மத்யாரோடும் கதமிவ விலஜ்ஜேத கலயா 62
அழகிய
பற்களைக் கொண்டவளே ! இயற்கையாகவே சிவந்திருக்கிற உன்னுடைய உதடுகளின் அழகுக்கு உபமானம் சொல்லுகிறேன். பவழக்கொடி பழத்தை உண்டாக்கட்டும். கோவைப்பழமோ என்றால் தேவியின் உதடுகளைப் போல் இருக்கவேண்டும் என்று அச்சிவப்பைத் தன்னிடம் பிரதிபலிக்கச் செய்துகொண்டதால் சிவப்பாக இருப்பதால் சமத்துவத்தை சிறிதளவுகூட அடைய முயன்றாலும் எப்படித்தான் வெட்கப்படாமல் இருக்கும் ?
63 புன்சிரிப்பின் அழகு
ஸர்வஜன
ஸம்மோஹனம்
ஸ்மிதஜ்யோத்ஸ்னாஜாலம்
தவ வதன சந்த்ரஸ்ய பிபதாம்
சகோராணா
மாஸீ ததிரஸதயா சஞ்சு ஜடிமா
அதஸ்தே
ஶீதாம்ஶோ ரம்ருதலஹரீ மாம்லருசய;
பிபந்தி
ஸ்வச்சந்தம் நிஶி நிஶி ப்ருஶம் காஞ்ஜிகதியா 63
உன்னுடைய
முகமாகிய சந்திரனின் புன்சிரிப்பாகிய அமுதம்போன்ற நிலவுக்கற்றையை பருகும் சகோரபக்ஷிகளுக்கு அதன் அளவு கடந்த தித்திப்பால் அலகு, உணர்ச்சி இழந்ததாக ஆகிவிட்டது. அதனால் அவை புளிப்பில் ஆசைகொண்டு குளிர்ந்த கிரணம் கொண்ட சந்திரனின் நிலவாகிய அமுதப்பெருக்கை புளித்தகஞ்சி என்றெண்ணி வேண்டியவரை இரவுதோறும் நிறைய பருகுகின்றன.
64 நாவின் வர்ணனை
ஸரஸ்வதி
கடாக்ஷம்
அவிஶ்ராந்தம்
பத்யுர் குணகண கதாம்ரேடனஜபா
ஜபாபுஷ்பச்சாயா
தவ ஜனனி ஜிஹ்வா ஜயதி ஸா
யதக்ராஸீநாயா:
ஸ்படிகத்ருஷ தச்சச்சவி மயீ
REPORT THIS AD
ஸரஸ்வத்யா
மூர்த்தி: பரிணமதி மாணிக்யவபுஷா 64
தாயே
! உன்னுடைய பிரசித்தமான நாக்கு இடைவிடாமல் பதியாகிய பரமசிவனுடைய பல குணங்களை விளக்கும்
கதைகளைப் பேசுவதையே ஜபமாகக் கொண்டு செம்பருத்திப் புஷ்பம் போல் சிவந்து சிறப்புடன் விளங்குகிறது. அந்நாக்கின்
நுனியில் இருக்கும் ஸரஸ்வதியினுடைய படிகம் போன்ற தெளிவான காந்தியுடன் கூடிய வடிவம் மாணிக்கம்போல்; சிவந்த வடிவமாக மாறுதல் அடைகிறது
65 தேவியின் தாம்பூல மஹிமை
வெற்றி,
வாக்விலாஸம்
ரணே
ஜித்வா தைத்யா னபஹ்ருத ஶிரஸ்த்ரை: கவஶிபி:
நிவ்ருத்தைஶ்
சண்டாம்ஶ த்ரிபுரஹர நிர்மால்ய விமுகை:
விஶாகேந்த்ரோபேந்த்ரை:
ஶஶிவிஶத கர்ப்பூரஶகலா
விலீயந்தே
மாதஸ்தவ வதன தாம்பூல கபலா 65
தாயே
! போரில் அசுரர்களை வென்று திரும்பியவர்களும் தலைப்பாகையை நீக்கியவர்களும் கவசம் பூண்டவர்களும் சண்டிகேசுவரனுடைய பாகமாகிய பரமசிவ நிர்மால்யத்தில் நோக்கம் இல்லாதவர்களுமான தேவஸேனாபதியான ஸுப்ரஹ்மண்யர், தேவர்களின் அரசனான இந்திரன், உபேந்திரனாகிய விஷ்ணு ஆகியோரால் சந்திரனைப்போல் வெண்மையான பச்சைக் கற்பூரத்தூளுடன் கூடிய உன்னுடைய வாயில் மெல்லப்பட்ட தாம்பூலக் கவளங்கள் விழுங்கப் படுகின்றன.
அம்பாளிடம்
தேவாஸுர யுத்தத்தில் வெற்றிச் செய்தியைச் சொல்ல யுத்தத்தில் இருந்து நேராகக் கவசம் தலைப்பாகைகளுடன் வந்ததால் தலைப்பாகையை மட்டும் கழற்றிவிட்டு நமஸ்கரித்தனர். விஶாகேந்த்ரோபேந்த்ரை: ஸ்கந்தர், இந்திரன், விஷ்ணு ஆகிய எல்லோருமே தேவியின் புத்திரர்கள்தாம்.
66 தேவியின்குரல் வீணையினும் இனியது
இன்சொல்,
ஸங்கீத ஞானம்
விபஞ்ச்யா
காயந்தீ விவித மபதானம் பஶுபதேஸ்
த்வயாரப்தே
வக்தும் சலித ஶிரஸா ஸாதுவசனே
ததீயைர்
மாதுர்யை ரபலபித தந்த்ரீ கலரவாம்
நிஜாம்
வீணாம் வாணீ நிசுலயதி சோலேன நிப்ருதம் 66
பசுபதியினுடைய
பலவகைப்பட்ட லீலையை வீணையில் பாடுகின்ற ஸரஸ்வதீதேவீ உன்னால் தலையசைப்புடன் ஆமோதிக்கும் வார்த்தையானது சொல்வதற்கு ஆரம்பிக்கப்பட்டபோது அதனுடைய இனிமையால் வீணத்தந்திகளின் அழகிய ஒலி அவமதிப்புற்றதைக் கண்டு தன்னுடைய வீணையை உரையினால் வெளியில் தெரியாவண்ணம் மூடிவிடுகிறாள்.
கச்சபீ
என்பது ஸரஸ்வதியின் வீணைக்குப் பெயர். கச்சபீ என்ற சிறந்த வீணை நாதத்தினும் இனிய மொழியாள் – லலிதா ஸஹஸ்ரநாமம்.
67 மோவாய்க்கட்டையின் சிறப்பு
தேவியின்
ப்ரஸன்னம்
கராக்ரேண
ஸ்ப்ருஷ்டம் துஹிநகிரிணா வத்ஸலதயா
கிரீஶேனோதஸ்தம்
முஹுரதரபானாகுலதயா
கரக்ராஹ்யம்
ஶம்போர் முகமுகுரவ்ருந்தம் கிரிஸுதே
கதங்காரம்
ப்ரூமஸ் தவ ஶுபுக மௌபம்ய
ரஹிதம் 67
மலையரசன்
பெண்ணே ! இமவானால் வாத்ஸல்யத்துடன் நுனிக்கையால் தொடப்பட்டதும் பரமசிவனால் அதரபானம் செய்யும் ஆவலுடன் அடிக்கடி உயர்த்தப்பட்டதும் பரமசிவனுடைய கையால் அங்ஙனம் தொடுதற்கு உரியதும் உவமையற்றதும் முகமாகிய கண்ணாடிக்குப் பிடிபோன்றதும் ஆகிய உன்னுடைய மோவாய்க்கட்டையை எப்படித்தான் வர்ணிப்போம்.
68 முகத்தாமரைக்குக் காம்பு போன்ற கழுத்து
ராஜவச்யம்
புஜாச்லேஷாந்
நித்யம் புரதமயிது : கண்டகவதீ
தவ
க்ரீவா தத்தே முககமலநால ஶ்ரியமியம்
ஸ்வத:
ஶ்வேதா காலாகரு பஹுல ஜம்பால மலினா
ம்ருணாலீ
லாலித்யம் வஹதி யததோ ஹாரலதிகா 68
உன்னுடைய
இந்த கழுத்து முப்புரம் எரித்த பரமசிவனுடைய புஜங்களின் தழுவுதலால் எப்போதும் மயிர்க்குச்சால் முள்களுடன் கூடியிருப்பதால் முகத்தாமரைக்குக் காம்பு போன்ற பொலிவை அடைகிறது. அதற்கும் கீழுள்ள முத்துமாலை இயற்கையில் வெண்மையாயினும் கறுப்பான அகிலுடன் கூடிய சந்தனக்குழம்பினால் சேற்றில் அழுக்கடைந்த தாமரைக் கொடியின் பொலிவைக் கொண்டதாக இருக்கிறது.
69 கழுத்தில் பிரகாசிக்கும் மூன்று ரேகைகள்
ஸங்கீத
ஞானம்
கலே
ரேகாஸ்திஸ்ரோ கதி கமக கீதைக நிபுணே
விவாஹ
வ்யாநத்த ப்ரகுணகுண ஸங்க்யா ப்ரதிபுவ
விராஜந்தே
நானாவித மதுர ராகாகர புவாம்
த்ரயாணாம்
க்ராமாணாம் ஸ்திதி நியம ஸீமான இவ தே 69
ஸங்கீத
கதி, கமகம், கீதம் ஆகியவற்றில் ஒப்புயர்வற்ற திறமை வாய்ந்தவளே! உன்னுடைய கழுத்தில் உள்ள மூன்று பாக்கிய ரேகைகள் நன்றாய்க் கட்டப்பட்ட பல நூல்கள் கொண்ட
சரட்டின் எண்ணிக்கையை ஞாபகப்படுத்துவது போலும். பலவிதமான இனிய ராகங்களுக்குத் தோற்றுவாயாக உள்ள ஷட்ஜம், மத்யமம், காந்தாரம் என்ற மூன்று தொகுதிகளுக்கும் இடத்தையும் எல்லையையும் பிரித்துக் காட்டுவது போலும் விளங்குகின்றன.
உத்தம
ஸ்த்ரீகளுக்கும் புருஷர்களுக்கும் நெற்றி, கழுத்து, வயிறு ஆகிய மூன்றிடங்களில் மூன்று கோடுகள் இருக்கும் என்று ஸாமுத்ரிகா சாஸ்திடம் கூறுகிறது. “விவாஹ காலத்தில் மாங்கல்யதாரணத்திற்குப் பிறகு இடதுகையில் ஒரு ஸரமும், கழுத்தில் மூன்று ஸரமுமாகச் சரடு கட்டுவது சில தேசங்களில் வழக்கும்” என்று க்ருஹ்ய ஸூத்ரம் கூறுகிறது.
70 தாமரைக் கொடிகள் போன்ற நான்கு கைகள்
சிவாபராதத்துக்குச்
சாந்தி
ம்ருணாலீ
ம்ருத்வீனாம் தவ புஜலதானாம் சதஸ்ருணாம்
சதுர்ப்பி:
ஸௌந்தர்யம் ஸரஸிஜபவ: ஸ்தௌதி வதனை:
நகேப்ய:
ஸந்த்ரஸ்யன் ப்ரதம மதனா தந்தகரிபோ:
சதுர்ணாம்
ஶீர்ஷாணாம் ஸம மபய ஹஸ்தார்ப்பணதியா 70
தாமரைத்
தண்டுபோல் மெதுவாய்த் துவளும் உன்னுடைய நான்கு கொடிபோன்ற கைகளின் அழகை தாமரையில் உதித்த பிரம்மா முதலில் தனது தலைகளில் ஒன்றைக் கிள்ளிவிட்ட காலகாலனான வரமசிவனுடைய நகங்களினின்று பயந்துகொண்டு ஸமகாலத்தில் நான்கு கைகளாலும் அபயம் அளிப்பாய் என்ற நோக்கத்துடன் நான்கு முகங்களாலும் துதிக்கிறார்.
71 கமலம்போல் சிவந்த கைநகங்களின் காந்தி
லக்ஷ்மீ
கடாக்ஷம்
நகானா
முத்யோதைர் நவநலின ராகம் விஹஸதாம்
கராணாம்
தே காந்திம் கதய கதயாம: கதமுமே
கயாசித்வா
ஸாம்யம் பஜது கலயா ஹந்த கமலம்
யதி
க்ரீடல்லக்ஷ்மீ சரண தல லாக்ஷா ரஸ
சணம் 71
உமா
தேவியே ! நகங்களுடைய சிறந்த ஒளியினால் அன்றலர்ந்த தாமரையின் சிவப்பை ஏளனம் செய்கின்ற உன்னுடைய கரங்களின் காந்தியை எவ்வாறு வருணிப்போம் ? நீயே சொல். அது கஷ்டம். செந்தாமரை ஒருவேளை தன்னிடம் லீலை புரியும் லக்ஷ்மியின் திருவடியில் உள்ள செம்பஞ்சுக் குழம்புடன் சேர்த்தால் எப்படியோ சிறிதளவாவது ஒற்றுமையை அடையலாம்.
72 கணபதியும் ஸ்கந்தனும் பால் பருகும் நகில்கள்
தேவியருள்
சுரத்தல், யக்ஷிணீவச்யம், இரவில் பயமின்மை
ஸமம்
தேவி ஸ்கந்த த்விபதன பீதம் ஸ்தனயுகம்
தவேதம்
ந: கேதம் ஹரது ஸததம் ப்ரஸ்னுத முகம்
யதாலோக்யா
ஶங்காகுலித ஹ்ருதயோ ஹாஸஜனக:
ஸ்வகும்பௌ
ஹேரம்ப: பரிம்ருஶதி ஹஸ்தேன ஜடிதி 72
பரதேவதையே
! பால் சுரக்கும் காம்புகளுடன் கூடியதாயும் ஸமகாலத்தில் ஸ்கந்தனும் யானைமுகத்தோனும் பால் குடிப்பதுமான இந்த உன்னுடைய நகில் இரண்டும் எங்களுடைய துன்பத்தை எப்போதும் போக்கடிக்கட்டும். அந்த நகிலை பார்த்து ஸந்தேகத்தால் கலங்கிய உள்ளமுடைய கணபதி அவசரமாக சிரிப்புண்டாகும்படி தன் தலையில் உள்ள கும்பங்களை இருக்கிறதா என்று தன் கையால் தடவிப் பார்த்துக் கொள்கிறார்.
73 நகில்கள் அல்ல அவை ஞானாமிருத கலசங்கள்
பால்
வளர்ச்சி, ஜீவன் முக்தி
அமூ
தே வக்ஷோஜா வம்ருதரஸ மாணிக்ய குதுபௌ
ந
ஸந்தேஹஸ்பந்தோ நகபதி பதாகே மநஸி ந:
பிபந்தௌ
தௌ யஸ்மாதவிதித வதூஸங்க ரஸிகௌ
குமாராவத்யாபி
த்விரதவதன க்ரௌஞ்சதலனௌ 73
மலையரசின்
வெற்றிக்கொடியே ! உன்னுடைய இந்த நகில்கள் அமிருதரஸம் நிறைந்த ரத்னகலசங்கள். எங்களுக்கு மனதில் அதைப்பற்றிச் சந்தேகம் கொஞ்சம் கூட இல்லை. ஏனென்றால் அவைகளை பருகின்ற யானை முகத்தோனும் க்ரௌஞ்சாசுரனைக் கொன்ற ஸுப்ரஹ்மண்யனும் ஸ்த்ரீஸங்க ரஸத்தை அறியாத குழந்தைகளாகவே இன்றைக்கும் இருக்கிறார்கள்.
74 மார்பில் விளங்கும் முத்துமாலை
நற்கீர்த்தி
வஹத்யம்ப
ஸ்தம்பேரம தனுஜ கும்ப ப்ரக்ருதிபி:
ஸமாரப்தாம்
முக்தாமணிபி ரமலாம் ஹாரலதிகாம்
குசாபோகோ
பிம்பாதர ருசிபி ரந்த: ஶபலிதாம்
ப்ரதாப
வ்யாமிஶ்ராம் புரதமயிது: கீர்த்திமிவ தே
74
அம்மா
! உன்னுடைய நகில்களின் மத்தியப்பிரதேசம் கஜாசுரனுடைய கும்பத்தில் இருந்து உண்டான சிறந்த முத்துக்களால் ஆக்கப்பட்டதும், குற்றமற்றதும் கோவைப்பழம்போல் சிவந்த உதட்டின் காந்தியால் உள்புறம் விசித்திரமான வர்ணங்களோடு பிரகாசிப்பதாகவும், முப்புரம் அழித்த பரமசிவனுடைய பிரதாபத்தோடு கலந்த கீர்த்தியே மாலையாக வந்ததோ என்று விளங்குவதாகவும் உள்ள கொடிபோன்ற ஹாரத்தை தாங்குகிறது.
75 பால் வடிவில் பெருகுவது ஸரஸ்வதியின் பிரவாகம்
கவிபாடும்
திறமை
தவ
ஸ்தன்யம் மன்யே தரணிதரகன்யே ஹ்ருதயத:
பய:
பாராவார: பரிவஹதி ஸாரஸ்வத மிவ
தயாவத்யா
தத்தம் த்ரவிடஶிஶு ராஸ்வாத்ய தவ யத்
கவீனாம்
ப்ரௌடானா மஜனி கமனீய: கவயிதா:
75
மலையரசன்
பெண்ணே ! உன்னுடைய முலைப்பால் இருதயத்திலிருந்து உதித்த அமிருதப்பிரவாகம் போலும், வாக்தேவதையான ஸரஸ்வதியே அவ்வுருக்கொண்டு வந்தாற்போலும், பெருகிறது என்று கருதுகிறேன். ஏனென்றால் கருணை ததும்பும் உன்னால் அளிக்கப்பட்ட உன்னுடைய பாலை அருந்தி திராவிடக்குழந்தை தலைசிறந்த கவிகளுக்குள் மனதைக் கவரும் கவிஞனாக ஆகிவிட்டான் அன்றோ !
விந்தியமலைக்கு
வடக்கே பஞ்ச கௌடர்கள்:
காஷ்மீரில்
ஸாரஸ்வதர்
பஞ்சாபில்
கான்யகுப்ஜர்
வங்காளத்தில்
முக்ய கௌடர்
ஒரிஸ்ஸாவில்
உத்கலர்
நேபாளத்திலும்
பீஹாரிலும் மைதிலர் (மிச்ரர் எனப்பட்டம் உள்ளவர்)
விந்தியமலைக்கு
தெற்கே பஞ்ச திராவிடர்கள்:
ஆந்திரர்
கர்னாடகர்
மஹாராஷ்டிரர்
கூர்ஜரர்
தமிழர்
(முக்யத் திராவிடர்)
திரவிடசிசு
என்பது யார் ? :
ஸ்ரீ
சங்கரருடைய பரமகுரு கௌடர், சங்கரர் த்ராவிடர். சங்கரர் சிறு குழந்தையாக இருக்கையில் ஒருசமயம் தாயும் தந்தையும் வீட்டில் இல்லாதபோது அழுதுகொண்டிருந்ததால் பார்வதியே வந்து பால் கொடுத்துத் தேற்றியதாக ஒரு வரலாறு உண்டு. ஆனால் சங்கரர் தன்னைப்பற்றியே “திராவிடக்குழந்தை தலைசிறந்த கவிகளுக்குள் மனதைக் கவரும் கவிஞனாக ஆகிவிட்டான்” என்று கூறிக்கொள்வாரா என்பது சந்தேகம்.
‘திரவிடசிசு’
என்றது திருஞானசம்பத்தரைக் குறிக்கும் என்று காமகோடி ஆசாரியரும் பிறரும் கூறுகின்றனர். பார்வதி அவருக்குப் பால் கொடுத்து மறைந்தபின் வாயில் பாலின் அடையாளத்தைப் பார்த்த தாய்தந்தையர் ‘யார் பால் கொடுத்தது’ என்று வினவ, “தோடுடைய செவியன்” என்று அவர் பாடிய வரலாறு இதற்கு ஆதாரம்.
ஸௌந்தர்யலஹரியைத்
தமிழில் பாடிய வரப்பிரஸாத்யான கவிராஜ பண்டிதரும், “வருண நன்குறு கவுணீயன் சிறுமதலை அம்புயல் பருகியே” என்று பிராம்மண குலத்தில் கவுணிய அல்லது கௌண்டின்ய கோத்திரத்தில் பிறந்த ஞானசம்பந்தர் எனவே பொருள்கொண்டு பாடுகிறார்.
Lakshmidhara, Kaivalyaasrama and others maintain that the
reference is to the Samkara-Bhagaavatpada himself. The story according to
Kaivalyaasrama is: Samkara’s father who was a pious devotee of the Devi, would
never fail to visit the local temple every day and after bathing the Devi with
milk and doing Puja, was in the habit of returning home with a small quantity
of Nirmaalya milk with which the little child was fed every day. When he had to
be temporarily absent from his village, he left instructions with his wife that
the Puja should be performed by her as usual during his absence. She was
carrying out her husband’s mandate, but as she had to keep aloof during her
menstrual period, she directed her child, the infant Samkara, to go to the
temple and perform Puja in her stead. The child, in his simplicity, was under
the impression that the milk was intended to be drunkby the Devi and felt
surprised that the Devi would not partake of it. When at the importunity of the
child, the Devi drank all the milk, he burst into tears and called upon her to
return to him the usual quantity intended for his use. The Devi, out of
compassion, suckled the child, whereupon it burst into rhapsodies of praise and
returned home singing songs which automatically came out of his mouth. Just
then, the child’s father returned from his journey and greeted him with
inexpressible joy. The Devi soon appeared to the father in a dream and
prophesied a remarkable career for the child blessed by her breast-feeding.
Another account is given in the Malayalam edition of
Soundaryalahari by Kantiyur Mahadeva Sastrin, in his commentary on the
forty-first stanza,i.e., the last of the Anandalahari He sys that the entire
work was by a Siddha of the name of Dravida-sisu, who had it inscribed on the slope
of Mount Kailasa and when Samkara-Bhagavatpada paid a visit to the Mount as a
pilgrim and was reading the work, the Devi called the attention of the Siddha
thereto and commanded him to wipe off the work as it contained profound secrets
not to be revealed to mortals. Even before the Siddha carried out the said
command, Samkara was able to commit to memory forty-one stanzas at random out
of the hundred. Before he could memorize the rest, the entire work had been
cleanly wiped out by the Siddha. On his return home, Samkara wrote out from
memory the forty-one stanzas, which now farm the first part of the work and
composed the other stanzas requisite to make up the one hundred. The difference
in style and theme between the two parts is given as a reason for credence
being attached to this story of the authorship of the work.
Sri Jnanasambandha, a native os Sirkazhi, was when 3 years
old, he was taken to the temple by his father Sivapaadahrudaya, who went to
bathe in the water tank and left the child on the ghat. The child, in
unfamiliar circumstance, soon began to cry calling out “Mother !, Fathar !’ .
Touched by this, Lord Siva of the temple asked his pouse to take the child and
feed him with her milk. The child was soon appeased and stood there with milk
flowing out of his mouth. On noticing this, the father asked the chiled as to
who had suckled him. Whereupon the child burst into a song in praise of Siva
and became later in life one of the recognised bards of Tamil hymns (the others
being Appar, Sundarar and Manikyavaasagar).
Sri Jnaanasambandha is said to have flourished about twelve
centuries ago and was hence possibly a contemporary of Samkara-Bhagavatpada.
(or a possibility that Samkara’s period is after the period of Gnanasambandhar,
after he and his works have become popular – ngs)
The fact that Samkaracharya would not have given such a high
testimonial to himself as indicated by the last line of the stanza, but would
probably have couched a reference to his capacity as a poet in much milder
language, militates against the position taken by Lakshmidhara and others.
76 மன்மதன் மூழ்கிய மடு போன்ற நாபியின் அழகு
பரம
வைராக்கியம், காமஜயம்
ஹரக்ரோத
ஜ்வாலாவலீபி ரவலீடேன வபுஷா
கபீரே
தே நாபீ ஸரஸி க்ருதஸங்கோ மனஸிஜ:
ஸமுத்தஸ்த்தௌதஸ்மா
தசல தனயே தூமலதிகா
ஜனஸ்தாம்
ஜானீதே தவ ஜனனி ரோமாவலிரிதி 76
மலையரசன்
பெண்ணே ! மன்மதம் பரமசிவனுடைய கோபத்தினின்று தோன்றிய அக்கினி ஜ்வாலைகளால் சூழப்பெற்ற சரீரம் உடையவனாய் உன்னுடைய ஆழமான நாபி என்னும் மடுவில் நாட்டம் உடையவன் ஆனான், அதில் மூழ்கினான், அதிலிருந்து கொடிபோன்ற புகை கிளம்பிற்று. அதை ஜன்ங்கள் உன்னுடைய நாபியிலிருந்து மெல்லிதாய் மேலே படரும் ரோமவரிசை என்றே கருதுகிறார்கள்.
77 யமுனையின் அலை போன்ற ரோமவரிசை
ஸர்வஜனவச்யம்,
சூக்ஷ்மதர்சனம்
யதேதத்
காலிந்தீ தனுதர தரங்காக்ருதி ஶிவே
க்ருஶே
மத்யே கிஞ்சிஜ்ஜனனி தவ யத்பாதி ஸுதியாம்
விமர்த்தா
தன்யோன்யம் குசகலஶயோ ரந்தரகதம்
தநூபூதம்
வ்யோம ப்ரவிஶதிவ நாபிம் குஹரிணீம் 77
மங்களஸ்வரூபியே
! தாயே ! உன்னுடைய மெலிந்த இடையில் யமுனா நதியின் மிக மெல்லிய அலையின் வடிவு போன்ற யாதொரு இந்த ஒன்றுள்ளதோ – அதாவது ரோமவரிசையின் சிறு பொலிவு உண்டோ – எது ஞானிகளுக்கு தியானத்தில்புலப்படுகிறதோ –
அது கலசங்கள் போன்ற இரு நகில்களின் நடுவில் அகப்பட்டுக் கொண்டதும், நகில்கள் ஒன்றோடொன்று உறைவதால் மெலிந்ததுமான நீல நிறமுள்ள ஆகாயம் குகைபோன்ற தொப்புள் குழியில் புகுவதுபோல் தோன்றுகிறது.
78 நகில்களாகிற தாமரை முளைத்த தடாகம் போன்ற நாபி
ஸர்வலோகவச்யம்
ஸ்திரோ
கங்காவர்த்த: ஸ்தன முகுல ரோமவலி லதா
கலாவாலம்
குண்டம் குஸுமஶர தேஜோ ஹுதபுஜ:
ரதேர்
லீலாகாரம் கிமபி தவ நாபிர் கிரிஸுதே
பிலத்வாரம்
ஸித்தேர் கிரிஶ நயனானாம் விஜயதே 78
மலையரசன்
பெண்ணே ! உன்னுடைய நாபியானது கங்கை நீரின் சுழலா, ஆனால் அசையாமல் இருக்கிறதா ? நகில்களாகிய மொட்டுக்களுடன் கூடிய ரோமவரிசையாகிற கொடியின் கிழங்கு இருக்கும் பாத்தியா ? மன்மதனுடைய ஒளியாகிய அக்கினியின் ஹோமகுண்டமா ? ரதியினுடைய விளையாட்டு வீடா ? பரமசிவனுடைய கண்கள் செய்த தவம் சித்திக்கும் குகையின் துவாரமா ? இன்னதென்று கூறமுடியாததாக அது விளங்குகிறது.
“நாப்யாலவால
ரோமாளி லதாபல குசத்வயீ” – நாபி
எனும் பாத்தியிருந்து முளைத்தெழுந்தகொடி போன்ற ரோமவரிசையின் உச்சியில் பழுத்த பழங்களை ஒத்த இரு ஸ்தனங்களை உடையவள் – லலிதா ஸஹஸ்ரநாமம்.
79 மெல்லிய இடையின் அழகு
ஸர்வஜனமோஹனம்,
இந்திரஜால வித்தை
நிஸர்க்க
க்ஷீணஸ்ய ஸ்தன தட பரேண க்லமஜுஷோ
நமன்மூர்த்தேர்
நாரீதிலக ஶனகைஸ் த்ருட்யத இவ
சிரம்
தே மத்யஸ்ய த்ருடித தடினீ தீர தருணா
ஸமாவஸ்தா
ஸ்தேம்னோ பவது குஶலம் ஶைலதனயே 79
பெண்குலத்தின்
திலகமான பார்வதியே ! இயற்கையாகவே மெல்லியதும் நகில்களின் பாரத்தினால் வருந்துவதும் அதனால் வளைந்த வடிவுள்ளதும் மெல்ல மெல்ல ஒடிந்துபோவதுபோல் இருப்பதும், இடிந்துபோன நதியின் கரையில் இருக்கும் மரத்திற்கு சமமான நிலையில் நிற்பதுமான இடைக்கு நீண்டகாலம் க்ஷேமம் உண்டாகட்டும்.
சின்னஞ்
சிறிய மருங்கினில் சாத்திய செய்யபட்டும்
பென்னம்
பெரிய முலையும் முத்தாரமும் பிச்சிமொய்த்த
கன்னங்
கரிய குழலும்கண் மூன்றும் கருத்தில்வைத்துத்
தன்னந்
தனியிருப் பார்க்கிதுபோலும் தவமில்லையே — அபிராமியந்தாதி53
80 இடையில் மூன்று ரேகைகளின் அழகு
மன்மதனை
வெல்லும் திறமை, இந்திரஜாலம்
குசௌ
ஸத்ய: ஸ்வித்யத் தடகடித ஸூர்ப்பாஸபிதுரௌ
க
ஷந்தௌ தோர் மூலே கனக கலஶாபௌ கலயதா
தவ
த்ராதும் பங்காதலமிதி வலக்னம் தனுபுவா
த்ரிதா
நத்தம் தேவி த்ரிவலி லவலீ வல்லிபிரிவ 80
தேவியே
! பரமேசுவரனுடைய பெருமையை நினைத்த அதே க்ஷணத்தில் உடலுடன் ஒட்டிக்கொண்டிருக்கிற ரவிக்கையை கிழிப்பனவாகவும், தோளின் அடிப்பக்கத்தில் உறைகின்றனவாகவும், பொன்குடங்களைப் போன்ற உனது நகில்களை செய்கின்ற மன்மதனால் உனது இடுப்பை ஒடிந்துபோகாமல் போதுமான வகையில் காப்பதற்கு இருக்கட்டும் என்று இடுப்பில் மூன்று மடிப்புகளாகத் தோன்றும் வள்ளிக் கொடிகளால் மூன்றுதடவை சுற்றிக் கட்டப்பட்டதுபோல் காண்கின்றது.
81 மலைபோன்ற நிதம்பம்
அக்னி
ஸ்தம்பம்
குருத்வம்
விஸ்தாரம் க்ஷிதிதரபதி: பார்வதி நிஜாத்
நிதம்பா
தாச்சித்ய த்வயி ஹரணரூபேண நிததே
அதஸ்தே
விஸ்தீர்ணோ குருரய மஶேஷாம் வஸுமதீம்
நிதம்ப
ப்ராக்பார: ஸ்தகயதி லகுத்வம் நயதி ச 81
பார்வதியே
! மலையரசன் கனத்தையும் விஸ்தாரத்தையும் தன்னுடைய அடிவாரத்தின்றும் எடுத்து உன்னிடத்தில் கொடுத்துவிட்டார் போலும். அதனால்தான் பருத்தும் விசாலமாகவும் இருக்கிற உன்னுடைய இந்த (hip) நிதம்பத்தின் பின்புறம் பூமி முழுவதையும் மறைக்கிறது, அதை லேசாகவும் செய்துவிடுகிறது.
82 யானையின் துதிக்கை போன்ற தொடை
ஜலஸ்தம்பம்,
இந்திரபதவிக்கொத்த பதவி
கரீந்த்ராணாம்
ஶுண்டான் கனககதலீ காண்டபடலீம்
உபாப்யாமுரூப்யா
முபயமபி நிர்ஜித்ய பவதி
ஸுவ்ருத்தாப்யாம்
பத்யு: ப்ரணதி கடினாப்யாம் கிரிஸுதே
விதிஜ்ஞே
ஜானுப்யாம் விபுத கரிகும்ப த்வயமஸி 82
பகவதி
! பார்வதி ! சிறந்த யானைகளின் துதிக்கைகள், பொன்வாழை மரங்கள் ஆகிய இவ்விரண்டையும் இரண்டு தொடைகளால் ஜயித்தும் சாஸ்திரத்தை அறிந்தவளே ! பதியாகிய பரமசிவனுக்கு நமஸ்காரம் செய்யும் பழக்கத்தால் கடினமாகவும் நன்கு திரண்டு உருண்டும் இருக்கும் முழங்கால் முட்டிகளால் இந்திரனுடைய யானையாகிய ஐராவதத்தின் இரண்டுகும்பங்களையும் ஜயித்தும் இருக்கிறாய்.
83 மன்மதனின் அம்பறாத்தூணிகள் போன்ற முழந்தாள்கள்
சதுரங்க
சைனிய ஸ்தம்பனம்
பராஜேதும்
ருத்ரம் த்விகுணஶரகர்ப்பௌ கிரிஸுதே
நிஷங்கௌ
ஜங்கே தே விஷமவிஶிகோ பாட
மக்ருத
யதக்ரே
த்ருஶ்யந்தே தஶஶர பலா: பாதயுகலீ
நகாக்ரச்சத்மான:
ஸுர மகுட ஶாணைக நிஶிதா: 83
பார்வதி
! பஞ்சபாணனாகிய மன்மதன் ருத்திரனை ஜயிப்பதற்கு உன்னுடைய முழந்தாள்களை நிறைந்த அம்பறாத் தூணிகளாக செய்திருக்கிறான். ஆம், நிச்சயம், அவ்வம்பறாத் தூணிகளின் நுனியில் இரண்டுபாதங்களுடைய நகங்களின் நுனிகள் எனப் புனைப்பெயர் கொண்டவையும் தேவர்களின் கிரீடங்களாகிய சாணைக் கற்களால் தீட்டப் பெற்றவையுமான பத்துப் பாணங்களின் இரும்புமுனைகள்தான் காணப்படுகின்றன.
84 உபநிஷதங்களின் உச்சியில் விளங்கும் பாதாரவிந்தங்கள்
பரகாயப்ரவேசம்,
ஜீவன்முக்தி
ஶ்ருதீனாம்
மூர்த்தானோ தததி தவ யௌ ஶேகரதயா
மமாப்யேதௌ
மாத: ஶிரஸி தயயா தேஹி சரணௌ
யயோ:
பாத்யம் பாத: பஶுபதி ஜடாஜூட தடினீ
யயோர்
லாக்ஷா லக்ஷ்மீ ரருண ஹரிசூடாமணி ருசி: 84
தாயே
! உன்னுடைய எந்த பாதங்களை வேதங்களின் தலைபோன்ற உபநிஷதங்கள் சிரோபூஷணங்களாக தரிக்கின்றனவோ அந்தப் பாதங்களை என்னுடைய தலையிலும் கூட தயைகூர்ந்து வைத்தருள்வாயாக. அவற்றிற்கு பாத்யமாக அளிக்கப்பட்ட தீர்த்தம் பரமசிவனுடைய சடையில் இருக்கும் கங்கையாகிறது. அவற்றிற்கு பூசப்பட்ட லாக்ஷா ரஸத்தின் பொலிவு சிவப்பான காந்தியுடன் கூடினதும் விஷ்ணுவின் சிரஸை அலங்கரிப்பதுமான மாணிக்கமோ என்று எண்ணும்படி இருக்கின்றது.
அம்பாளுடைய
ஊடலைத்தணிக்கப் பரமசிவன் அம்பாளுடைய பாதத்தில் வணங்கும்போது அவருடைய சடையில் இருக்கும் கங்கை பெருகி அம்பாளுக்குப் பாத்யம் மாதிரி ஆகிறது. – லக்ஷ்மீதரர்.
85 பரமசிவனும் தாங்க விரும்பும் பாதாரவிந்தங்கள்
பிசாச
பய நிவிருத்தி
நமோவாகம்
ப்ரூமோ நயன ரமணீயாய பதயோ:
தவாஸ்மை
த்வந்த்வாய ஸ்புட ருசி ரஸாலக்தகவதே
அஸூயத்
யத்யந்தம் யதபிஹனனாய ஸ்ப்ருஹயதே
பஶூனா
மீஶான: ப்ரமதவன கங்கேலி தரவே 85
கண்களுக்கு
மகிழ்ச்சி அளிப்பதாகவும், பிரகாசம் மிக்கதாகவும், உலராத செம்பஞ்சுக்குழம்புடன் கூடியதாகவும் உள்ள உன்னுடைய பாதங்கள் இவ்விரண்டிற்கும் நமஸ்கார வார்த்தையை சொல்லுகிறோம். அந்தப் பாதங்களால் உதைக்கப் படுவதை விரும்புகிற நந்தவனத்தில் உள்ள அசோக மரத்தினிடம் பசுபதியானவர் மிகவும் பொறாமைப் படுகிறார்.
கங்கேலி,
காமகேலி அல்லது அசோகம் எனப்படும் மரம் சிவப்புப்புஷ்பங்களைக் கொண்டது. அது புஷ்பிக்காத போது உத்தம ஸ்த்ரீகளின் பாதஸ்வர்சம் ஏற்பட்டால் புஷ்பிக்கும் என்பது நம்பிக்கை. “பாதாஹத: ப்ரமதயா விகஸத்யசோக” என்பது பழமொழி.
Jealous of the Kankeli : the Kankali is a tree which,
according to tradition, when barren, blossoms only when kicked by the tender
feet of women of highest class, known as Padmini-s.
86 பரமசிவன் பார்வதியை வணங்குவது மன்மதனுக்கு வெற்றி
பிசாச
பய நிவிருத்தி, சத்ருஜயம்
ம்ருஷா
க்ருத்வா கோத்ரஸ்கலன மத வைலக்ஷ்ய நமிதம்
லலாடே
பர்த்தாரம் சரணகமலே தாடயதி தே
சிராதந்த:
ஶல்யம் தஹனக்ருத முன்மூலிதவதா
துலாகோடிக்வாணை:
கிலிகிலித மீஶான ரிபுணா 86
உன்
பிறந்தவீட்டைப்பற்றிய
ஏளனத்தை விளையாட்டுக்காக செய்துவிட்டு பிறகு உன் ப்ரணயகோபத்தைக்கண்டு இன்னது செய்வதென்று தெரியாமல் வணங்கின பர்த்தாவின் நெற்றியில் உன்னுடைய பாதகமலங்கள் தட்டுப்படும் போது, நெற்றிக்கண் எரிப்பால் எரிக்கப்பட்டு, நெடுநாளாக நெஞ்சில் வைத்து உறுத்திக் கொண்டிருந்த பாணம் போன்ற பகையை அடியோடு தீர்த்துக் கொள்பவனும் சிவனுடைய பகைவனுமாகிய மன்மதனால் உன் பாதச் சிலம்புகளின் மூலம் ‘கிலி கிலி’ என்ற ஜயகோஷம் எழுப்பப் படுவதாயிற்று.
87 பனியிலும் இரவிலும் கூட அழகு குன்றாத பாதகமலங்கள்
ஸர்ப்ப
வச்யம்
ஹிமானீ
ஹந்தவ்யம் ஹிமகிரி நிவாஸைக சதுரௌ
நிஶாயாம்
நித்ராணாம் நிஶி சரமபாகே ச விஶதௌ
வரம்லக்ஷ்மீபாத்ரம்
ஶ்ரிய மதிஸ்ருஜ ந்தௌ ஸமயினாம்
ஸரோஜம்
த்வத் பாதௌ ஜனனீ ஜயதஶ் சித்ரமிஹ கிம் 87
தாயே
! தாமரையோ பனியில் கருகிப்போவது உனது திருவடித் தாமரைகளோ – பனிமலையில் இருப்பதில் தேர்ச்சி பெற்றவை; தாமரை இரவில் இதழ்களை மூடிக்கொண்டு உறங்குவது, உனது திருவடிகளோ இரவிலும் இரவு முடிந்தபோதும் எப்போதும் பிரசன்னமாய் இருப்பவை; தாமரை தன்னிடம் லக்ஷ்மி வசிக்கும்படி இருப்பது, உன் திருவடித் தாமரைகளோ வழிபடுபவர்களுக்கு லக்ஷ்மியை அளிப்பவை; — ஆகையால் தாமரையை உனது பாத கமலங்கள் ஜயிக்கின்றன. இதில் அதிசயம் என்ன இருக்கிறது ?
88 மென்மையான பாதத்தை அம்மியில் ஏற்றிய கல்நெஞ்சக்காரர் பரமசிவன்
துஷ்டமிருகங்களின்
வச்யம்
பதம்
தே கீர்த்தீனாம் ப்ரபத மபதம் தேவி விபதாம்
கதம்
நீதம் ஸத்பி: கடின கமடீ கர்ப்பர துலாம்
கதம்
வா பாஹுப்யா முபயமனகாலே புரபிதா
யதாதாய
ந்யஸ்தம் த்ருஷதி தயமானேன மனஸா 88
தேவியே
! உன்னுடைய பாதங்களின் முன்பாகம் நீ அடியார்களைக் காக்கின்றாய்
என்ற கீர்த்திக்கு உறைவிடம். அடியார்களுக்கு ஏற்படும் விபத்துக்களுக்கு இடம் அளிக்காமல் இருப்பது – கருணையால் அங்ஙனம் மிகவும் மென்மையானதாக இருக்கையில் அதற்கு ஸாதுக்களாகிய கவிகளால் கடினமான ஆமையோட்டின் உவமை எப்படி கற்பிக்கப் பட்டதோ ? தயை நிறைந்த மனமுடைய பரமசிவனால் விவாக காலத்தில் அப்பாதங்கள் கைகளால் எடுத்து அம்மிக்கல்லின்மேல் எப்படித்தான் வைக்கப்பட்டனவோ ?
இந்தச்சுலோகம்
சில பழையகாலப் புஸ்தகங்களில் காணப்படவில்லை என்று கைவல்யாசிரமர் கூறுகிறார்.
89 சந்திரகிரணம் போன்ற கால்நகங்களின் ஒளி
ஸகலரோக
நிவிருத்தி
நகைர்
நாகஸ்த்ரீணாம் கரகமல ஸங்கோச ஶஶிபி:
தரூணாம்
திவ்யானாம் ஹஸத இவ தே சண்டி
சரணௌ
பலானி
ஸ்வ:ஸ்த்தேப்ய: கிஸலய கராக்ரேண தததாம்
தரித்ரேப்யோ
பத்ராம் ஶ்ரியமனிஶ மஹ்னாய தததௌ 89
சும்பநிசும்பர்களை
ஸம்ஹாரம் செய்த பரதேவதையாகிய சண்டிகையே ! துளிர்கள் ஆகிற கை நுனிகளால் ஸ்வர்க்க
வாசிகளுக்கு விரும்பிய பலன்களை அளிக்கின்ற தேவ லோகத்தில் உள்ல கல்பகம் முதலிய விருக்ஷங்களை ஏழை எளியவர்களுக்கும் பரம மங்களமான செல்வத்தை எந்தச் சமயத்திலும் விரைவில் அளிக்கின்ற உனது பாதங்கள் நகங்களால் பரிகசிப்பவைபோல் இருக்கின்றன. எப்படிப்பட்ட நகங்களால் என்றால் – தேவஸ்திரீகளின் கைகளாகிற தாமரைகளை மூடிகொள்லச் செய்யும் சந்திரர்களைப் போன்ற நகங்களால்.
நகங்களின்
காந்தி பரிகாசச் சிரிப்பு போல் இருக்கிறது.
90 கற்பகப் பூங்கொத்தாகிய பாதம்
துர்மந்திரச்
சேதனம்
ததானே
தீனேப்ய: ஶ்ரியமனிஶ மாஶானுஸத்ருஶீம்
அமந்தம்
ஸௌந்தர்ய ப்ரகர மகரந்தம் விகிரதி
தவாஸ்மின்
மந்தார ஸ்தபக ஸுபகே யாது சரணே
நிமஜ்ஜன்
மஜ்ஜீவ: கரணசரண: ஷட்சரணதாம் 90
ஏழை
எளியவர்களுக்கு அவரவர்களின் விருப்பத்திற்கு இணங்க செல்வத்தை எப்போதும் அளிப்பதும், குறைவின்றி அளவுகடந்த அழகாகிய மகரந்தத்தை இறைப்பதும், கற்பகத்தின் பூங்கொத்தைப் போல் மங்கலவடிவாகியதும் ஆன உன்னுடைய இப்பாத
கமலங்களில் புகுந்து உறைவதும், மனத்துடன் கூட இந்திரியங்கள் ஆகிற கால்களைக் கொண்டதுமான ஆறுகால் வண்டாக இருக்கும் தன்மையை என்னுடைய ஜீவன் அடையட்டும்.
சில
பாடங்களில் இச்சுலோகம் 92 ஆவதாகவும், இந்த இடத்தில் ‘கதாகாலே’ என்னும் 98 ஆவது சுலோகமும் கானப்படுகிறது. கைவல்யாசிரமர் பாட்த்தில் இச்சுலோகம் இல்லை.
91 தேவியின் நடையழகு
பூமி
லாபம், தன லாபம்
பதந்யாஸ
க்ரீடாபரிசய மிவாரப்து மனஸ:
ஸ்கலந்தஸ்
தே கேலம் பவனகலஹம்ஸா ந ஜஹதி
அதஸ்தேஷாம்
ஶிக்ஷாம் ஸுபகமணி மஞ்ஜீர ரணித
ச்சலாதாசக்ஷாணம்
சரணகமலம் சாருசரிதே 91
புண்ய
சரித்திரம் உடையவளே ! உன்னுடைய
வீட்டில் உள்ள அன்னப் பறவைகள் உனது நடையழகை கற்றுக்கொள்ள ஆரம்பிக்க எண்ணம் கொண்டவைபோல் துள்ளிக்குதித்துக்கொண்டு உன்னுடைய அழகிய நடையை தொடர்வதை விடுவதில்லை. ஆகையினால் உன்னுடைய திருவடி மங்களமான ரத்தினம் இழைத்த சிலம்புகளின் ஒலியின் மூலம் மறைமுகமாக அப்பறவைகளுக்கு நடைப்பழக்கத்தை கற்றுக்கொடுப்பது போல் இருக்கிறது.
92 தேவியின் இருக்கை
ஆளுந்திறமை
கதாஸ்தே
மஞ்சத்வம் த்ருஹிண ஹரி ருத்ரேஶ்வர ப்ருத:
ஶிவ:
ஸ்வச்ச ச்சாயா கடித கபட ப்ரச்சதபட:
த்வதீயாநாம்
பாஸாம் ப்ரதிபலன ராகாருணதயா
சரீரீ
ச்ருங்காரோ ரஸ இவ த்ருசாம்
தோக்தி குதுகம் 92
ப்ரஹ்மா,
விஷ்ணு, ருத்திரன் ஆகிய அதிகார புருஷர்கள் உன்னுடைய வேதஸ்வரூபமாகிய கட்டிலின் நான்கு கால்களாக இருக்கும் தன்மையை அடைந்திருக்கிறார்கள். ஸதசிவன் வெண்மையான காந்தியோடு கூடிய மேல்விரிப்பு என்ற வேஷத்துடன் இருக்கிறார். உன்னுடைய காந்தியின் பிரதிபலனத்தால் அவர் சிவப்பாகத் தோன்றுவதால் சிருங்கார ரஸமே சரீரம் படைத்து வந்ததுபோல் உன்னுடைய கண்களுக்கு ஆனந்தத்தை அளிப்பவர் ஆகிறார்.
சில
பாடங்களில் இது 94 ஆவது சுலோகமாகவும், அடுத்துவரும் ‘அராலா கேசேஷு’ என்பது 92 ஆவதாகவும் வருகிறது.
93 சிவனுடைய கருணையின் உருவே தேவி
மனோரத
ஸித்தி
அராலா
கேஶேஷு ப்ரக்ருதிஸரலா மந்தஹஸிதே
ஶிரீஷாபா
சித்தே த்ருஷதுபலஶோபா குசதடே
ப்ருசம்
தந்வீ மத்யே ப்ருது ருரஸிஜாரோஹ விஷயே
ஜகத்
த்ராதும் ஶம்போர் ஜயதி கருணா காசிதருணா 93
பரமசிவனுடைய
மனத்துக்கும் வாக்குக்கும் எட்டாத ஏதோ ஒரு கருணையானது உலகை ரக்ஷிப்பதற்காக அருணா என்ற பராசக்தி வடிவில் வெற்றியுடன் விளங்குகிறது. அந்தக் கருணாசக்தி தேவியின் கூந்தலில் சுருளும் குடிலத்தன்மையாகவும், புன்சிரிப்பில் இயற்கையான இனிமையாகவும், மனத்தில் வாகைப் பூவினது போன்ற மிருதுத்தன்மை யாகவும், நகில்களில் கல்லினுள் இருக்கும் ரத்தினத்தினது போன்ற கடினமாகவும், இடையில் முகுந்த மெலிவாகவும், மார்பிலும் நிதம்பத்திலும் பருமனாகவும் விளங்குகிறது.
94 தேவியின் உபயோகத்திற்கான ஜலபாண்டம் போன்றது சந்திரபிம்பம்
இஷ்டப்
பிராப்தி
கலங்க:
கஸ்தூரி ரஜநிகர பிம்பம் ஜலமயம்
கலாபி:
கர்ப்பூரைர் மரகதகரண்டம் நிபிடிதம்
அதஸ்
த்வத்போகேன ப்ரதிதின மிதம் ரிக்தகுஹரம்
விதிர்
பூயோ பூயோ நிபிடயதி நூநம் தவ க்ருதே 94
இந்த
வானில் தோன்றும் சந்திரமண்டலமாகத் தோன்றுவது பிரதிபலிக்கும் ஜலம் நிறைந்த மரகதப்பாண்டம்; கிரணங்களாகிய பச்சைக்கர்ப்பூரத்தால் நிறைவு செய்யப்பட்டது; களங்கமாகத் தோன்றுவது கஸ்தூரி. ஆகையால் தின்ந்தோறும் உனது உபயோகித்தால் காலியாகும் அப்பாண்டத்தை பிரம்மா மீண்டும் மீண்டும் உனக்காக நிச்சயம் நிரப்பி வைக்கிறார் என்றுதான் நான் கருதுகிறேன்.
The moon is here compared to an emerald canister containing
musk and refined camphor for the daily use of the Devi. As the supply is
exhausted every day, it is being replenished by Brahman, the Devi’s servant,
then and there.
95 இந்திரிய அடக்கம் இல்லாதவர்கள் தேவியை அணுகி வழிபடமுடியாது
இஷ்டப்
பிராப்தி
புராராதே
ரந்த: புரமஸி ததஸ் த்வச்சரணயோ:
ஸபர்யா
மர்யாதா தரலகரணானா மஸுலபா
ததா
ஹ்யேதே நீதா: ஶதமகமுகா: ஸித்திமதுலாம்
தவ
த்வாரோபாந்த ஸ்திதிபி ரணிமாத்யாபி ரமரா: 95
நீ
முப்புரம் எரித்த பரமசிவனுடைய அந்தப்புரத்தில் பட்டமஹிஷியாக விளங்குகிறாய். அதனால் உன்னுடைய பாதங்களில் நெருங்கிப் பூஜை செய்யும் முறை அடங்காத சித்தம் உடையவர்களால் அடையக் கூடியது அன்று. அதனால்தான் இந்த இந்திரன் முதலான தேவர்கள் உன்னிடைய வாயிற்புரத்தில் இருக்கும் அணிமா முதலிய தேவதைகளால் – தடை செய்யப்பட்டவர்கள் ஆயினும் பூஜை செய்ய விரும்பி வந்ததால் அணிமா முதலிய சித்திகளை அடையும்படி செய்விக்கப் பட்டார்கள்.
96 தேவியின் பாதிவ்ரத்ய மகிமை
ஸரஸ்வதீ
கடாக்ஷம், லக்ஷ்மீ கடாக்ஷம்
கலத்ரம்
வைதாத்ரம் கதிகதி பஜந்தே ந கவய:
ஶ்ரியோ
தேவ்யா: கோ வா ந
பவதி பதி: கைரபி தநை:
மஹாதேவம்
ஹித்வா தவ ஸதி ஸதீனா
மசரமே
குசாப்யா
மாஸங்க: குரவக தரோ ரப்யஸுலப: 96
பதிவிரதைகளின்
தெய்வமே ! பிரம்மாவினுடைய மனைவியை எத்தனையோ கவிகள் நாடி அடையவில்லையா ? ஏதோ ஒரு வகையான செல்வத்தால் எவனோ ஒருவன் லக்ஷ்மீபதி என்ற பெயருக்கு உரியவனாக ஆகிவிடவில்லையா ? பதிவிரதைகளுக்குள் முதன்மையானவளே ! மஹாதேவனை விட்டு உனது நகில்களுடைய ஸம்பந்தமோ மருதோன்றி மரத்திற்குக் கூட கிடைத்தற்கு அரிது.
மந்த்ரம்,
ஜபம், கல்வி இவைகளால் ஸரஸ்வதீ வல்லபன் ஆகலாம். ஏராளமான செல்வத்தைப் பெற்றுக்கோண்டு லக்ஷ்மீபதி ஆகலாம். கல்வியையும் செல்வத்தையும் மனிதர் வசப்படுத்திக் கொள்ளலாம்.
ஆனாலும்
எவருமே, மனத்திற்கும் வாக்குக்கும் எட்டாத பரதேவதையை வசப்படுத்திக்கொள்ள முடியாது.
பூத்துக்
காய்க்கும் முன் சில மரங்கள் பெண்களின் தழுவுதலுக்காக ஏங்குகின்றன. குரவகம் அப்படிப்பட்ட மரம். அதற்குக்கூட தேவியின் ஆலிங்கனம் கிட்டாது.
97 தேவியே ஸரஸ்வதியும் லக்ஷ்மியும் பார்வதியும்
ஜீவன்முக்தி
கிராமாஹுர்
தேவீம் த்ருஹிணக்ருஹிணீ மாகமவிதோ
ஹரே:
பத்நீம் பத்மாம் ஹரஸஹசரீ மத்ரிதநயாம்
துரீயா
காபி த்வம் துரதிகம நிஸ்ஸீம மஹிமா
மஹாமாயா
விஶ்வம் ப்ரமயஸி பரப்ரஹ்ம மஹிஷி 97
பரப்பிரம்மத்துடன்
இணைந்த பராசக்தியே ! வேதத்தை அறிந்தவர்கள் – உன்னையே – பிரம்மாவின்
பத்தினியான வாக் தேவதையாக கூறுகிறார்கள். – உன்னையே ஹரியினுடைய பத்தினியான லக்ஷ்மியாகவும், சிவனுடைய பத்தினியான பார்வதியாகவும் – கூறுகிறார்கள். நீயே இம்மூவருக்கும் அப்பாற்பட்டவளாக அடைவதற்கு அரியதும் எல்லையில்லாத மகிமை உடையவளாக – மகாமாயை எனப் பட்டவளாக உலகு அனைத்தையும் ஆட்டி வைக்கிறாய்.
98 பாத தீர்த்தம் ஊமையையும் பேசவைக்கும்
வாக்ஸித்தி
கதா
காலே மாத: கதய கலிதாலக்தகரஸம்
பிபேயம்
வித்யார்த்தீ தவ சரண நிர்ணேஜன
ஜலம்
ப்ரக்ருத்யா
மூகானாமபி ச கவிதா காரணதயா
கதா
தத்தே வாணீ முககமல தாம்பூல ரஸதாம் 98
தாயே
! லாக்ஷாரஸப்பூச்சுடன்
கலந்துவரும் உன்னுடைய பாதப்பிரக்ஷாளன தீர்த்தத்தை பிரம்மவித்தையை நாடும் நான் எக்காலத்தில் பருகப் போகிறேன்.?
கூறி
அருளுங்கள். இயற்கையாகவே ஊமைகளுக்கும் கூட கவி பாடும் சக்தியை அளிக்கும் காரணத்தால் ஸரஸ்வதியின் வாயில் உள்ள தாம்பூல ரஸத்திற்கு
ஒப்பான நிலையை எப்போது – என்வாயில் சேர்ந்த அந்தப் பாத தீர்த்தம் அடையப் போகிறது ?
கோகர்ண
க்ஷேத்திரத்திற்கு அருகில் உள்ள மூகாம்பிகா க்ஷேத்திரத்தில் தனது பாத தீர்த்தத்தால் ஊமையை தேவி மகாவித்வானாகச் செய்த வரலாறு ஒன்று உண்டு.
99 தேவியின் பக்தன் கல்வி,செல்வம்,அழகு, ஆயுள் நிரம்பியவன்
பேரின்பம்
ஸரஸ்வத்யா
லக்ஷ்ம்யா விதி ஹரி ஸபத்நோ விஹரதே
ரதே:
பாதிவ்ரத்யம் ஶிதிலயதி ரம்யேண வபுஷா
சிரம்
ஜீவந்நேவ க்ஷபித பஶுபாஶ வ்யதிகர:
பராநந்தாபிக்யம்
ரஸயதி ரஸம் த்வத் பஜநவான் 99
உன்னைப்
பூஜிப்பவன் பிரம்மாவும் விஷ்ணுவும் கூடப் பொறாமை படக்கூடியவனாக கல்வியுடனும் செல்வத்துடனும் இன்பத்தை எய்துகிறான். மன்மதன் போன்ற உடல் அழகால் ரதி தேவியின் கற்பையும் கலங்கச் செய்கிறான். பசுத்தன்மையும் வினைக்கயிற்றின் கட்டுகளும் நீங்கியவனாக பேரானந்தம் எனப் பிரசித்தி பெற்ற இன்பரஸத்தை சிரஞ்ஜீவியாக இருந்துகொண்டு அநுபவிக்கிறான்.
“முதலில்
ஸரஸ்வதி என்று இந்த சுலோகம் ஆரம்பித்திருக்கிறது. அப்புறம் லக்ஷ்மியைப் பற்றிச் சொல்லியிருக்கிறது. எடைக்கொடுத்துப் பின் பணத்தைக் கொடுத்தால் பணம் வீண் போகாதோ அதை முன்று தேவி கொடுப்பாள். ஏகாந்தபக்தி அம்பிகை இடத்தில் யாருக்கு உண்டோ அவர்களுக்கு ஸரஸ்வதியின் அருள் நிறைய உண்டாகும். நல்ல புத்தி ஏற்படும். அதற்கு எல்லை எவ்வளவு ? பிரம்மா வீட்டில் அது சம்பூரணமாக இருக்கிறது. அம்பிகையின் உபாசகனுக்கு அதைவிட அதிகமாக உண்டாகும். அதனால் பிரம்மாவுக்குக் கோபம் வரும். இப்படி ஹரியும் பிரம்மாவும் கோபித்துக் கொள்ளும் வரைக்கும் ஸரஸ்வதீ, லக்ஷ்மீ கடாக்ஷம் அம்பிகையின் பக்தனுக்கு உண்டாகும்” – காஞ்சிப்பெரியவர்
Piercing through the Six Chakra-s
(from the explanation to stanza 99)
Lakshmidhara, taking this stanza as the penultimate one of
the work, says that this stanza indicates the worshipper’s piercing through the
six Chakra-s in order to reach the Sahasraaraa.
In substantiation of this view, he proceeds thus:
The Jivanmukta continues to function in the body out of
sheer Vaasanaa, even after the removal of ignorance, even as the potter’s wheel
continues to whirl after the pot has been brought into shape completely.
The Bhajana indicated in the last line is of two kinds. (a)
by the worshipping of the six Chakra-s and (b) by Dhaaranaa. As regards the
former, the first two Chakra-s , being in a region of darkness, are unworthy of
being worshipped. The other five Chakra-s , including the Sahasraaraa, alone
are to be taken into account.
Worshippers of the Manipura attain the liberation known as
Saarsti , which consists in raising a city by the side of the Devi’s city and
abiding there, ever engaged in her service.
Worshippers of the Anaahataa attain the liberation of the
Saalokyaa Salokyaa is residence in Devi’s city.
Worshippers of the Visuddhi attain the liberation of the
Saameepyaa Saameepyaa consists in ministering to the comforts of the Devi.
Worshippers of the Aajnaa attain the liberation of the
Saarupyaa Saarupyaa consists in attaining similarity of form with the Devi,
which, however, being distinct and separate, is not Saayujyaa.
The aforesaid four types of liberation are known as Gauna or
accessory, for the reason that external torments alone are warded off in these
types.
Worshippers of the Sahasraaraa alone have the privilege of
attaining liberation of the Saayujyaa type, wherein even internal torments
vanish, and which is therefore the ideal type of perpetual liberation referred
to in the last line of the stanza.
After getting over all sorts of difficulties, the votary
renders himself fit for attaining Saayujyaa. When Saayujyaa is reached, he
merges into the conjoint forms of Siva and sakti. This is Kaivalya.
The six Chakra-s of
the body and their identity with the six Chakra-s of the SriChakraa have
already been dealt with : (they are reproduced below once again by NGS)
=========== (from explanation to stanza 9)
Thou art diverting Thyself, in secrecy with Thy Lord, in the
thousand-petalled lotus, having pierced through the Earth situated in
Mulaadhaara, the Water in the Manipuraa, the Fire abiding in the
Svaadhishtaana, the Air in the Heart (Anaahataa), the Ether above (the
Visudhhi), and Manas between the eyebrows (Aajnaa) and thus broken through the
entire Kula path.
Thou – in the form of Tripurasundari of the macrocosm and
the Kundalini of the microcosm
Thy Lord – the Siva of the macrocosm and the Jiva of the
microcosm, bereft of Maayaa, illusion
the thousand-petalled lotus – which is no other than the
upper Srichakraa, the Bindu of which represents the Siva and the Jiva,bereft of
Maayaa, as the case may be. This is the final resort, the Nirvaanaa of the
accomplished seeker, lying beyond the Kula path, the Sushumnaa Maargaa, which
contains the six Chakra-s mentioned in the stanza, in the ascendin g order of
subtlety, with the three granthi-s in their appropriate places. The Sahasraaraa is considered to be the inner Srichakraa to be meditated
upon with all the fifty-one letters of the Samskrt alphabet. The view is taken
by some that the Bindu has its position in the Bindu of the Chakraa and the
other fifty letters are to be arranged consecutively over the thousand petals,
twenty times.
diverting Thyself, in secrecy with Thy Lord – Sudhha-Vidya
in coalescence with Sadaasivaa is known as the Saadaakhyaa or the Paramaatman,
which may be charecterised as the twnty-sixth Tattvaa, on the attainment of
which is experienced Nirvaavaa or Jivanmukti.
having pierced through – having got beyond, after overcoming
and absorbing in her own form. The ascent and the descent of the Kundalini
constituting the Kundalini Yoga are said to form an Antaryaagaa.
the Earth situated in Mulaadhaara – But for the Muladhara,
which partakes of the character of the Earth-element through its subtle form of
Gandha-tanmaatraa, the body will become unstable with its equilibrium
disturbed. This chakraa is no other than the Tri-kona of the Sri-chakraa.
Piercing through this element would mean conquering it. The Yogin who does so
is said to attain the power of penetration through massive stone walls, etc.
the Water in the Manipuraa – Manipura, the interior of which
the Devi is said to fill with gems; hence the practice among the Samayin-s of
the offering of jewels studded with various kinds of gems, while meditating on
her in this seat. Although the Manipura is the third in the order of the
Chakraas, it has been given the second place in the stanza to suit the order of
the elements. This Chakraa represents water in its Rasa-tanmaatraa form.
Conquest of this by the Yogin is said to confer on him the next higher power of
mastery, such as floating, walking, etc. over water, The inner Dasaaraa of the
Sri-chakraa is indicated by this.
the Fire abiding in the Svaadhishtaana — where the Devi is said to take her stand in
the form of Kundalini, of her own accord, making the knot of Rudhra-granthi
thereon. The fore is in the form of Ruupa-tanmaatraa. The conquest of this by
the Yogin is credited with the bestowal of the power of fire-walking,etc. The
SAshta-kona of the Sri-chakraa is indicated by this.
the Air in the Heart (Anaahataa) – the Air in the form of
Sparsa-tanmaatraa. The heart signifies the Anaahata-chakraa of the heart-lotus.
The word Anaahataa means the Naadaa, sound, produced without impact in the
recess of the heart; hence ythe name of the Chakraa. The outer Dasaara of the
Sri-chakraa is indicated by this. By the conquest of air, the Yogin is said to
attain the fleetness of wind, buoyancy, etc.
the Ether – in the form of Sabda-tanmaatraa; above – i.e.,
above the heart, which is meant by the Chakra wich is as clear as the crystal,
namely, the Visudhhi. The Chatur-dasaara of the Sri-ckakraa is indicated by
this. By the conquest of this the Yogin attains the power of traversing the
ethereal regions.
It may be noted here that Purnananda Swamin, the author of
Satcakra-nirupana and other Taantrikaa-s are of the view the elements , Earth,
Eater, Fire, Air and Ether have, as
their corresponding Chakraas , the Muladhra, the Svadishtana, the
Manipoura, the Anahata and the Visudhhi, which is at variance with this stanza
of Samkara-bhagavatpaadaa, the author of this work, who has the support of the
Vismakeswara Tantra in his favour, as explained by Bhaskaracharya in his
Sethubanda.
Manas between the eyebrows (Aajnaa) – Manas, which
embraces within itself the five senses
of perception and the five senses of motor action, i.e., in all, the eleven
Tattvaas. This refers to the Ajnaa-chakraa, so called because it is at this
stage that a speck of knowledge about the Devi dawns. As she is bent upon
breaking through the Brahma-granthi on the way to the Sahasraaraa, she remains
there only for a trice, manifesting herslf in the form of a streak of lighting.
The Chathush-kona i.e. the Bhugra of the Sri-chakraa is indicated by this. By
conquering the mind, the Yogin is said to attain mystic powers, such as
clairvoyance, clairaudience, telepathy etc.
The mystic powers explained above, as resukting from the
mastery of these Chakraas, are really so many pitfalls to be avoided by the practitioner, as they are likely to
lead him astray from his final goal of Nirvaanaa.
These six Chakraas are but temporary stages or planes
wherein the Kundalini rests awhile, avowedly for mastering them, while the Sahasraaraa
is her permanent abode, whence the practioner should not lose sight of his
final goal, Nirvaanaa, beguiled by the temptations offered by the psychic
powers attainable at the lower centres, but should lead the Kundalini on to the
Sahasraaraa, there to effect her union with her Lord. Up to the moment of such
blending, the practitioner retains his individual consciousness and thereafter
enters on the blissful state of Nirvaanaa as long as the Kundalini rests in the
Sahasraaraa prior to her descent therefrom. The duration of her staty depends
on the strength of practice and the previous experience of the practitioner.
broken through the entire path of Kula – and thus having
transcended the tenty-one Tattvaa-s from Prithvi to Manas, and the six-chakraas,
which when taken together, would form the lower Sri-chakraa.
Bija- Bhuta- Chakraa- part of Srichakraa
Ham– Ether-Visudhhi-Chathurdasaara
Yam– Air-Anaahataa-Bhahirdasaara
Vam – Water – Manipura – Antardasaara
Ram – Fire – Svaadishthaana- Astakona
Lam – Earth – Mulaadhaaraa – Trikona
The same and thus having transcended the tenty-one Tattvaa-s
from Prithvi to Manas, and the six-chakraas, which when taken together, would
form the lower Sri-chakraa.
=============
The same also establishes the identity of the Naadaa with
the Bindu. The Naadaa is the SriChakra.
The Bindu, as will be shown presently, is the group of six
lotuses:
The Mulaadshaaraa is of four petals. Its pericarp is the
Tri-kona.
The Swaadhisthaanaa
is of six petals. Its pericarp is the Ashta-kona.
The Manipura is of ten petals. Its pericarp is the
The Anaahataa is of
twelve petals. Its pericarp is the
The Visuddhi is of
sixteen petals. Its pericarp is the Dasa-kona.
The Aajnaa is of two
petals. Its pericarp is of two phases: the Astadhalapadma is of one phase and the Shodasadhalapadma of
the other phase.
Of the three circles,
One is of the character of the Rudra-granthi at the end of
the Swaadhisthaanaa,
Another is of the character of the Vishnu-granthi at the end
of the Anaahataa,
And another is of the charater of the Brahma-granthi at the
end of the Aajnaa ckakra.
Above these, the three quadrilaterals with the four doors
have flights of steps at bthe four doors. This Bhu-grha is the pericarp of the
Sahasaradhalapadma. There are a thousand petals to this lotus. The Baindava-sthaanaa is in the middle of the
pericarp with the four doors.
In this manner, the identity of the Sri-chakra with the
Kamalas serving as palaces for the Devi may be sen. This identity, known as
that of the Naadaa and the Bindu, should be preserved as a profound secret and
has to be divulged only by the Guru for the benefit of the disciple.
The inhering of the fifty Kalaa-s in the six Chakraa-s:
(from explanation to stanza 2)
When meditaing upon the six chakras, the 50 letters are to
be visualised :
Mulaadhaaraa: 4 letters from va to sa to be visualised as
resting on the 4 petals of this Chakra.
Svaadhishthaaaa: 6 letters from ba to la to be visualised as
resting on the 6 petals of this Chakra.
Manipuraa: 10 letters from da to pha to be visualised as
resting on the 10 petals of this Chakra.
Anaahataa: 12 letters from ka to tha to be visualised as
resting on the 12 petals of this Chakra.
Visuddhi: 16 letters from a to visarga to be visualised as
resting on the 16 petals of this Chakra.
Aajnaa: 2 letters ha to ksa to be visualised as resting on
the 2 petals of this Chakra.
100. தேவியளித்த சக்தியால் தேவியைப் பாடியது
ஸகல
ஸித்தி
ப்ரதீப
ஜ்வாலாபிர் திவஸகர நீராஜனவிதி:
ஸுதாஸூதேஶ்
சந்த்ரோபல ஜலலவை ரர்க்யரசனா
ஸ்வகீயை
ரம்போபி: ஸலிலநிதி ஸௌஹித்யகரணம்
த்வதீயாபிர்
வாக்பிஸ் தவ ஜநநி வசாம்
ஸ்துதிரியம் 100
வாக்கிற்கு
பிறப்பிடமாகிய தாயே ! கர்ப்பூரதீப ஜ்வாலையால் சூரியனுக்கு நீராஜனம் செய்தாற்போலும், அமிருதகிரணங்களைப் பொழியும் சந்திரனுக்கு சந்திரகாந்தக் கல்லில் கசியும் நீர்த்துளிகளால் அர்க்கியம் அளித்தாற்போலும், சமுத்திரத்திற்கு சொந்தமான ஜலத்தாலேயே சமுத்திரத்திற்குத் தர்ப்பணம் செய்தாற்போலும், உன்னுடையதேயான வாக்குகளால் அமைந்த இந்த உனது ஸ்தோத்திரம்.
“ஸ்ரீ
ஆசார்யர் எதற்குமேலே நினைக்க முடியாதோ அந்தத் தத்துவத்தைச்
சொன்னவர். அவரே இப்படித் தாழ்மையோடு சொல்லியிருக்கிறார். இந்த ஒரு சுலோகத்தைப் பாராயணம் பண்ணினால் ஸௌந்தர்யலஹரீ முழுவதையும் பாராயணம் பண்ணின பலன் ஊண்டாகும். எப்படி ? எல்லா வித்தைகளுக்கும் விரயோஜனம் விநய ஸம்பத்து. ஸகல விநயமும் இந்தச் சுலோகத்தில் இருக்கிறது. பூஜை செய்யும்போது ஈசுவரனுக்கு எல்லா உபசாரங்களையும் பண்ணிவிட்டுக் கடைசியில் நீராஜனம் பண்ண வேண்டும். இதில் நீராஜனம் இருக்கிறது. எல்லாவற்றிற்கும் முடிவான தத்துவத்தை இந்தச் சுலோகம் சொல்லுவதற்கு இதுவும் ஓர் அடையாளம் போல் இருக்கிறது. – காமகோடி சங்கராசாரியார்.
இத்துடன்
நூறு சுலோகங்கள் கொண்ட ஸௌந்தர்யலஹரி முற்றிற்று
வேறு
பாடங்களில் அதிகப்படியாகக் காணப்படும் சுலோகங்கள்
ஸௌந்தர்யலஹரீ
நூறு சுலோகங்களுடன் இன்னும் மூன்று சுலோகங்கள் சேர்ந்து காணப்படுகின்றன. அவை பகவத்பாதருடையது அன்று, பிறரால் சேர்க்கப்பட்டவை எனக்கருதி அவற்றிற்கு உரையெழுதவில்லை – லக்ஷ்மீதரர்
இந்த
மூன்று சுலோகங்களும் கைவல்யாசிரமர் எழுதிய ஸௌபாக்யவர்த்தினீ உரையில் காணப்படுகின்றன. இவை பிரயோக நூல்களில் காணப் படவில்லை.
அந்த
வகையில்
வேறு
பாடத்தில் 94 ஆவது சுலோகமாக வருவது:
ஸமானீத:
பத்ப்யாம் மணி முகுரதா மம்பரமணிர்
பயா
தாஸ்தா தந்த: ஸ்திமித கிரண ஶ்ரேணி மஸ்ருண:
ததாதி
த்வத்வக்த்ர ப்ரதிபலன மச்ராந்த விகசம்
நிராதங்கம்
சந்த்ராந் நிஜ ஹ்ருதய பங்கேருஹமிவ
தேவியின்
பாதாரவிந்தங்களுன் முன் ரத்னக் கண்ணாடிபோல் வைக்கப்பட்ட சூரியன் தன் கிரணங்களால் தேவியின் முகத்திற்குத் துன்பம் ஏற்படாதவண்ணம் தன் ஒளியைச் சுருக்கிக் கொள்கிறான். அந்த நிலையில் தேவியின் திருமுகத் தாமரை சூரியபிம்பத்தில் பிரதிபலிக்கிறது. சாதாரணத் தாமரை சந்திரனை கண்டால் வாடும். ஆனால் என்றும் மலர்ச்சியுடன் இருக்கும் இந்தத் தாமரை சூரியனுடைய இருதயத்தாமரை போல் விளங்குகிறது.
வேறு
பாடத்தில் 99 ஆவது சுலோகமாக வருவது:
ஸமுத்பூத
ஸ்த்தூல ஸ்தனபர முரச் சாருஹஸிதம்
கடாக்ஷே
கந்தர்ப்பா: கதிசன கதம்பத்யுதி வபு:
ஹரஸ்ய
த்வத்ப்ராந்திம் மனஸி ஜனயந்திஸ்ம விமலா
பவத்யா
யே பக்தா : பரிணதி ரமீஷா மிய முமே
உமாதேவியே
! அழுக்கற்ற உனது பக்தர்கள் பரந்து கனத்த மார்பைக் கொண்டவர்களாகவும், அழகிய புன்சிரிப்பை உடையவர்களாகவும், கடைக்கண் பார்வையில் மன்மதர்களாகவும், கடம்பமரம் போன்ற உடல் படைத்தவர்களாகவும் மாறிவிடுகிறார்கள். அவர்களைப் பார்க்கும்போது சிவனுடைய மனத்தில் ‘இவர்களும் தேவியேதானோ ?’ என்ற மயக்கம் ஏற்படுகிறது. (பக்தர்கள் அங்ஙனம் ஸாரூப்ய முக்தியை எய்திவிடுகிறார்கள்.)
The implication is that all devotees of the Devi, by
constantly meditating on her form, themselves develop a similar form, as
constant believing is seeing, seeing develops into knowing, and knowing is
becoming.
வேறு
பாடத்தில் 102 ஆவது சுலோகமாக வருவது:
நிதே
நித்யஸ்மேரே நிரவதிகுணே நீதிநிபுணே
நிராகாடஜ்ஞானே
நியம பரசித்தைக நிலயே
நியத்யா
நிர்முக்தே நிகிலநிகமாந்த ஸ்துதபதே
நிராதங்கே
நித்யே நிகமய மமாபி ஸ்துதிமிமாம்
செல்வமே
! என்றும் மகிழ்ச்சி பொங்கும் முகமுடையவளே ! எல்லையற்ற குணநிதியே ! நீதியில் வல்லவளே ! குறைவில்லாத ஞானம் உள்ளவளே ! சித்தத்தை அடக்கியவர்களிடம் உறைபவளே ! கட்டுப்பாடு அற்றவளே ! உபநிஷதங்கள் எல்லாம் போற்றும் உயர் நிலையே ! பௌஅம் அற்றவளே ! நித்தியம் ஆனவளே ! என்னுடைய இந்த ஸ்துதியையும் ஏற்றருள்வாய் !
ஸ்ரீ
காமேசுவர ஸூரியும் அருணா மோதினீ என்ற
தமது உரையில் இந்த சுலோகத்தைச் சேர்த்திருக்கிறார்.
Super useful site 🙏, please correct missing word in 1st line of 1st sloka 😭
ReplyDelete