Friday 24 May 2019

இன்று இளையனார் வேலூரில் சிறப்பான தரிசனம்

இன்று இளையனார் வேலூரில் சிறப்பான தரிசனம்


.

செய்யாற்றின் கரையில் கிராமத்தில் அமைந்துள்ளது.

காஞ்சீபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து நேரடி பேருந்து உள்ளது - தனியார் பேருந்து.

பழமையான கோவில். குருக்கள் கொஞ்சம் கோபிஷ்டராக உள்ளார். ஆனால் மிகவும் நல்லவர். மிக சிரத்தையுடன் பூஜை செய்கிறார்.

நான் 8.30 am காலை செல்ல முயற்சித்து தாமதமாகி ஆகி காலை 9.45 மணிக்கு சென்று சேர்ந்தேன். என்ன ஆச்சர்யம். அபிஷேகம், அலங்காரம், எல்லாம் முடித்து, திரை சீலையிட்டு மூடி, வந்தவர்களை வெளியேவே அமரச்சொல்லி இருந்தார். வாசலில் நின்று கொண்டு இருந்தார். நான் சென்றதும் -உள்ளே செல்லுங்கள், நான் வருகிறேன், என்று எனக்காகவே காத்திருந்தது போல சொன்னாரே பார்க்கலாம்.

சரி, எல்லாம் இறைவன் செயல் என்று எண்ணி, கோவிலை ஒரு முறை வலம் வந்தேன்.

முருகர் நாடியில் கூறி உள்ளது போல், கோவில் வடகிழக்கு மூலையில் சுவாமிநாத சித்தர் பீடம் அமைந்திருந்தது, அதற்கு நேரே கிழக்கில் வேல் சந்நிதி அமைந்திருந்தது. அங்கிருந்து பார்த்தால் வேல் தெரியம்படி அமைந்திருந்தது. மிக சரியாக முருகர் நாடியில் இவ்வாறு தான் கூறி இருந்தார்.

நிதானமாக ஒவ்வொரு சந்நிதிக்கும், அய்யர் பூஜை செய்து தீபம் காட்டினார், முருகர், சந்தான விநாயகர், ஈஸ்வரர், வேல், பைரவர், கஜவல்லி அன்னை, சுவாமிநாத சித்தர் ஆகியோரின் தரிசனம் பெற்றேன்.

நான் கொண்டு சென்று கொடுத்த வேல் ஐ அய்யர் முருகரிடமும் மற்றும் வேல் சந்நிதியில் வைத்து பூசை செய்து கையில் கொடுத்தார்.

பின்னர் நான் மீண்டும் வேல் சந்நிதி சென்று வணங்கி, சுவாமிநாத சித்தர் பீடம் சென்று, அங்கே தரையில் அமர்ந்து, வேல் ஐ மடியில் வைத்து கொண்டு வேல் விருத்தம் பாராயணம் செய்தேன்.

மிக அதிசய அதிர்வுகள் சித்தர் பீடத்தில் வேல் உபாசனை செய்த போது உணர முடிந்தது. என்னை மறந்து, வாய் பராயணத்தை பாடியது. ஒவ்வொரு வரி பாடிய பின்னர் நிமிர்ந்து, வேல் சந்நிதியை நோக்கி வணங்கி, அடுத்த வரியை படித்தேன்.

பாராயணம் முடிந்து, நான் கொடுத்த அர்ச்சனை பொருட்களை ஒரு தட்டில் வைத்து பிரசாதமாக திரும்ப எனக்கே கொடுத்தார், மேலும் மலர் மாலை என் கழுத்திலிட்டு, ஆசியிட்டார்.

பின்னர் நான் ஒரு முறை தியானத்தில் அமர்ந்து மீண்டும் அந்த அதிர்வை உணர்ந்து, பின்னர் கோவிலை ஓரு முறை வலம் வந்து கொடி மரம் வந்து விழுந்து வணங்கினேன்.

கோவில் பிரசாதம் புளியோதரை, சுண்டல், சர்க்கரை பொங்கல், மாவிளக்கு ஆகியவை கொடுக்கப்பட்டது.

கோவிலில் பணி புரியும் இரண்டு பெரியவர்களுக்கு யாசகம் வழங்கினேன்.

பின்னர் ஒரு நிழலில் அமர்ந்து பிரசாதம் சாப்பிடும் போது 10.45, சுமார் 1 மணி நேரம் கழித்து இருந்தது. அய்யர் கோவிலை மூடி பூட்டி விட்டு, பூஜை முடிந்தது என்று அறிவித்தார். சரியாக நான் உள்ளே வந்தவுடன் ஆரம்பித்தவர், நான் வெளியே வந்தவுடன் முடித்தார்.

காலை காஞ்சி வந்து தங்கி, காமாட்சி அன்னையை கண்டு, பின்னர் முருகர் ஆலயம் செல்லலாம் என்று திட்டம், ஹோட்டலில் உணவு அருந்தி கொள்ளலாம் என்று திட்டம் தீட்டினேன். ஆனால் முருகர் அதை தடுத்து, காஞ்சிபுரம் டிக்கட் ஐ ரத்து செய்து, ஆற்காட்டில் உறவினர் வீட்டில் செல்ல வைத்து, அங்கேயே காலை உணவருந்தி, மதியத்திற்கும் பார்சல் செய்து, ஆற்காட்டில் இருந்து காரில் by pass சாலை வழியாக எந்த கோவிலுக்கும் செல்லாமல், நேராக இளையனார் வேலூர் சென்று, சரியான நேரத்தில் மிக அபாரமான தரிசனம் கிடைக்க வைத்து, பிமனர்5 திரும்ப காஞ்சிபுரம் வந்த போது அனைத்து கோவில்களும் மூடியிருக்க , என்னை மட்டும் இன்று தரிசனம் செய்தால் போதுமடா என்று கூறியது போல இருந்தது. அதுவும் இன்று வெள்ளிக்கிழமை, சஷ்டி மற்றும் எனது ஜென்ம நக்ஷத்திரமான திருவோணமும் சேர்ந்து வந்தது, மிக சிறப்பு.

இதோ கந்த வடி வேலவன் ஆலயம் தரிசனம் செய்து, சென்னை நோக்கி பயணிக்கிறேன், சுகப்ரம்மர் ஆசிரமத்திற்கு. இன்று சுக பிரம்ம மகரிஷிக்கு திருவோணத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை, அன்னதானம் இரவு 7pm முதல் 9.30pm வரை. மேலும் இன்று சென்னையில் பாம்பன் சுவாமிகள் குரு பூஜை நடை பெற்று வருகிறது. முடிந்தால் அவரையும் தரிசனம் செய்வேன்.

குருநாதா போற்றி

மகரிஷிகளே போற்றி

பிரணவ பொருளுக்கு அரகரோகரா

தி. இரா. சந்தானம்
கோவை.
9176012104