மனம் நொந்து போகும் வேளையில்
உடல் வெந்து நிற்கும் சடுதியில்
பலம் குன்றி நிற்கும் காலையில்
எமன் எமை அழைக்கிறான், வந்து விடு, இன்னுமா நீ இந்த உலகிலே இருக்க வேண்டும்... சிரிக்கிறான்
நான் என் ஐயனை பார்க்கிறேன்
ஏன்.....?...
எந்த பதிலுமில்லை
எனது தலை கவிழ்கிறது
சாவதற்கு மனமில்லை
வாழ்வதற்கு வழியில்லை
இனி செய்வதற்கு ஒன்றுமில்லை
நடப்பதெல்லாம் நாராயணன் செயல்
சரி .... நீ பதில் கூற வேண்டாம்
உன்னை பற்றி நிற்கும் யான் இப்போது அகங்காரத்தை பற்றி கொள்வது ஏன்
வாழ்வும் சாவும் எவர் பொறுப்பு
நித்தம் மரணம் நொடிக்குநொடி
எல்லாம் வேஷம்
நன்றாக வாழ்வது போல் நடிக்கலாமே தவிர
உண்மையில் உள்ளே இருப்பது மரணம் மட்டுமே
மரணத்தை தான் இந்த உலகம் ஆனந்தம் என்று கொண்டாடுகிறது
மரணத்தை நோக்கி செல்லும் போது சிறிது சிறிதாக சுய நினைவை இழக்கும் போது
அதற்கு மனிதன் போதை என்று பெயர் வைக்கிறான்
இறைவனை முன் நிறுத்தி தன் செயக் ஏதும் இல்லாமல் தனது எண்ணம் சொல் செயல் எல்லாமே இறைவன் செயலாக மாற்ற முடியாமல்...
தன் சுய நினைவை இழந்து, என்ன செய்கிறோம் என்று தெரியாமல் ஏதேதோ செய்கிறான்.
எல்லாமே ஒரு போதை தான்
உனக்கு ஒரு அளவிற்கு மேல் வாழ முடியாத ஒரு சூழ்நிலை வரும் போது
நீ என்ன செய்வாய் என்று ஒரு பாடம்
சாவதற்கு முடிவெடுப்பதென்பது மிக எளிது
ஆனால் சமாளிக்க வேண்டும்
நம்பிக்கை வேண்டும்
வாழ விடுவார்கள் என்ற நம்பிக்கை வேண்டும்
ஏன்......?...
இப்போது என் கேள்விக்கு விடை வருகிறது
மனிதர்களின் நிறம் என்ன என்று நீ புரிந்து கொள்ள வேண்டும்
அப்படியா... இவ்வளவு நாள் நான் புரிந்து கொண்டதெல்லாம்.....
எல்லாம் மாயை, தோலை உரித்து காட்டினால் தானே தெரியும், அவர்கள் சுயரூபம்
தெரிந்து என்ன ஆக போகிறது
தெரிந்து விட்டால் தெளிவு பெறலாம்
தெளிவின் கண் கிடைப்பது யாது.
தெளிவின் கண் கிடைப்பது ஞானம்
ஞானத்தின் கண் கிடைப்பது யாது
ஞானத்தின் கண் அறிவு கிடைக்கும்
அறிவு கிடைத்தால் வழி கிடைக்கும்
விளக்கம் கிடைக்கும், சமாதானம் கிடைக்கும்
தலைக்கு மேல் வெள்ளம் சென்ற பிறகு ஜான் என்ன முழம் என்ன
இந்த மரண பயமெல்லாம் ஓரளவுக்கு தான்
அளவு தாண்டி விட்டால் உன் சுய ரூபம் வெளிப்படும்
உன் சுய ரூபம் தான் சத்தியம் ஆயிற்றே சத்திய நோக்கம் ஆயிற்றே
ஆனால் சத்தியமாக நான் சொல்லுகிறேன் நான் என் ஆன்மீக லட்சியங்களுக்காக முழு மூச்சியும் அர்ப்பணித்து வருகிறேன். என் பார்வை முழுவதும் இறையின் மேல் சாய்ந்து உள்ளது.
திசை திருப்பி வேறு விஷயங்களின் மேல் பார்த்தால் அவை தாங்காது.
கத்தியை கையில் எடுத்தால் தானாகவே உயிர் பயம் அகன்று விடும். அருள் இருந்தால் அறிவு இருக்கும் உயிர் பிழைக்கும். அறிவு இல்லையென்றால் அருள் இல்லை என்று தான் அர்த்தம். உயிர் பிழைக்குமா? தெரியாது, அதன் விடை பரம்பொருளிடமும் நம்முள் இருக்கும் அதன் பகுதிக்குமே தெரியும்.
ஓம் சிவாய அகத்தீசாய நம
மகத்தான அகத்தீசா
ஓங்காளி பர பிரம்ம ஸ்வரூபினியே போற்றி
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏