Monday 11 May 2020

தனூத் (Tanot)மாதா தேவி கோவில் இந்திய எல்லையின் பாதுகாவலாக விளங்கும் அதிசயம்! ...

#பாகிஸ்தானை_அலறவைத்த_பத்ரகாளிஅம்மன்!

தனூத் (Tanot)மாதா தேவி கோவில் இந்திய எல்லையின் பாதுகாவலாக விளங்கும் அதிசயம்! ...

இராஜஸ்தானின் ஜெய்சல்மார் பகுதியில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் 10 கி.மீ தொலைவில் அமைந்துள்து தனூத் மாதா கோவில். சக்தி வாய்ந்த தனூத் மாதா ஆலயத்தை உடைத்தெறியும் எண்ணத்தில் பாகிஸ்தான் ராணுவமானது 1965 ம் ஆண்டு போரில் 3000 க்கும் அதிகமான குண்டுகளை தொடுத்தது. ஆனால் தனூத் மாதாவின் சக்தியால் ஒரு குண்டு கூட வெடிக்காமல் செயல் இழந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த பாகிஸ்தான் இராணுவம் பதறிப் போனது. இதற்கிடையே வீறுகொண்டெழுந்த இந்திய இராணுவம் எந்த வித சேதமுமின்றி பாகிஸ்தானை நோக்கி முன்னேறி வெற்றி வாகை சூடியது.

போருக்குப் பின், பாகிஸ்தான் இராணுவ ஜெனரல் தனூத் மாதாவை தரிசிக்க வேண்டும் என இந்தியாவிடம் அனுமதி கோரினார். இந்தியாவும் அனுமதித்தது. ஜெனரல் கோவிலுக்கும் மாதாவுக்கும் உரிய மரியாதை செலுத்தி விட்டு கோவிலை நோட்டமிட்டு திரும்பினார்.

1965ம் ஆண்டு இந்தியா- பாகிஸ்தான் போருக்குப் பின் தனூத் மாதா கோவிலை இந்திய இராணுவமான BSF தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. போரில் வெடிக்காத குண்டுகள் கோவிலின் அருங்காட்சியகத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டது.

1971ல் மீண்டும் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூண்டது.முந்தைய போரின் தோல்வியால் வெறி கொண்ட பாகிஸ்தான் இராணுவமானது, இம்முறை கோவிலை உடைத்தெறிந்து இந்திய நிலப்பகுதியை கைப்பற்றி விட வேண்டும் என்ற எண்ணத்தில் மூர்க்கமாக களமிறங்கியது.

4 நாட்கள் தொடர் தாக்குதல் மூலம் வெடி குண்டுகளை அள்ளி வீசியது பாகிஸ்தானிய இராணுவம். மீண்டும் ஒரு வெடி குண்டுகள் கூட வெடிக்காமல் தனூத் மாதாவின் சக்தியால் செயல் இழந்தது. இத்துடன் பாகிஸ்தான் இராணுவத்தின் பீரங்கி டாங்குகள், ட்ரக்குகள் அனைத்தும் ஒரு இன்ச் கூட இந்தியாவை நோக்கி நகர முடியாமல் செயலிழந்தது.

என்ன ஒரு ஆச்சரியம்!!

இதனால் இந்திய இராணுவம் பாகிஸ்தான் படைகளை நோக்கி முன்னேறி 200க்கும் மேற்பட்ட எதிரிகளை சுட்டு வீழ்த்தியது. பலர் பீரங்கிகளை விட்டுவிட்டு தலைதெறிக்க உயிர் தப்பி பாகிஸ்தான் ஓடினர். தனூத் மாதாவின் அருளினால் எளிதாக அப்பகுதியில் இந்தியா இம்முறையும் வெற்றி பெற்றது.

இந்திய இராணுவம் இக்கோவிலை பராமரிப்பதோடு, பாகிஸ்தின் எல்லையை சுற்றி வருவதற்கு முன் கோவிலில் வழிபட்டு விட்டு மணலை வெற்றி திலகமிட்டு செல்கின்றனர்.

கி.மு 847 க்கும் முந்தைய தனூத் மாதாவின் சிலையை பலூசிஸ்தானின் லாஸ்வெலா பகுதியிலிருந்து இராஜ புத்திர அரசர்கள் கொண்டு வந்து இப்பகுதியில் வழிபட்டுள்ளனர்.

            ஓம் காளி! ஜெய் காளி!!.




No comments:

Post a Comment