Sunday 2 June 2019

எனது அனுபவம் - தொலைந்த ஆவினம் தனை மீட்டு தருபவன் 🙏

அகத்தியர் கருணை மிகப்பெரியது.

நாங்கள் அகத்தியர் ஆரத்தி பாடலில் பாடும் ஒரு வரி - தொலைந்த ஆவினம் தனை மீட்டு தருபவன் - என்ற வரி உண்மையாகி உள்ளது.

சென்ற வெள்ளிக்கிழமை 31.05.2019 அன்று குற்றாலம் புலியருவி அருகில் தெற்கு மலை எஸ்டேட் இல் அய்யன் தவம் புரிந்த இடம் சென்று பூசையில் கலந்து கொண்டு சனி 01ஜூன்19 வீடு திரும்பினேன். இரு நாட்கள் தொடர்ந்து இரவு பயணம், பகலில் மலையேற்றம் ஆகியவை இருந்ததால், ஒரு ஓட்டுனரை அமர்த்தி எங்களது காரில் சனி 01ஜூன்19 அன்றே பொகளூர் ஜீவ நாடி சென்று அகத்தியரிடம் அருள் உரை வாக்கு பெற்றோம்.

பின்னர் வீடு திரும்பும்போது, ஒரு கடையில் நிறுத்தி, மகளின் பிறந்த நாள் கேக் வாங்க சென்றோம், அப்போது காரில் இருந்து இறங்கும் போது எனது புதிய விலை உயர்ந்த ஸ்மார்ட் தொலைபேசி கீழே விழுந்தது தெரியாமல் கடைக்குள்ளே சென்றேன். பின்னர் 5 நிமிடத்தில் தொலை பேசியை தேடிய போது காரில் இல்லை, கையில் இல்லை, சாலையில் இல்லை.
கடையில் இருக்கும் வீடியோ காமெரா வேலை செய்யவில்லை.

ட்ரைவர் ஒருவர் தான் காரில் இருந்தார். அவர் தாம் தொலைபேசியை பார்க்கவேயில்லை என்கிறார்.

பின்னர் வீட்டிற்கு வந்து அவரை அனுப்பி விட்டு, குருஜி இடம் விஷயத்தை கூறினோம். அவர் நிஷ்டயில் பார்த்து, அந்த பொருள் தொலைந்த அந்த கடை அருகிலே தான் உள்ளது என்கிறார். பின்னர் காரில் மீண்டும் தேடி பார்க்க சொன்னார். தேடினோம், கிடைக்கவில்லை. பின்னர் , நாளை காலை அது கிடைக்கும் என்று அருள் உரைத்தார். இதனிடையில், திருடியவன் போனை சுவுட்ச் ஆப் செய்து மீண்டும் இயக்கிய sms இரு முறை வந்தது. போன் சுவிட்ச் ஆப் நிலையிலிலேயே இருந்தது.

துடியலூர் காவல் நிலையம் சென்று கம்ப்ளயின்ட் கொடுக்க சென்றோம். அவர்கள் ஓட்டுனரை அழைத்து நாளை காலை 10 மணிக்கு விசாரணை செய்வதாக கூறினார். ஓட்டுனரிடம் காலை 10 மணிக்கு விசாரணைக்கு வரும்படி தெரிவிக்கப்பட்டது. குருஜி, மீண்டும் அழைத்து, நாளை காலை நிச்சயம் போன் திரும்ப கிடைக்கும் என்று உறுதி கூறினார்.

அதன் படி காலை காவல் நிலையம் சென்றிருந்த போது எனது போனுக்கு அழைத்து பார்த்த போது, ஆன் செய்யப்பட்டு இருந்தது. போலீஸ் ஏட்டு அய்யாவிடம் தொலை பேசியை கொடுத்து பேசி, போன் இருக்குமிடம் கேட்டு, அவரும் உடன் வந்து 5 நிமிடத்தில் பெற்று தந்தார். எடுத்தவன் திருடன், போனை அனைத்து வைத்து, விற்க முயற்சி செய்து, அவர்களுள் ஒரு சிறுவன் அதற்கு உடன்படாமல் போனை ஆன் செய்து, போலீஸ் பேசியவுடன் கொடுத்து உள்ளான். போன் கார் அருகே கீழே கிடந்தது, நான் எடுத்து வைத்தேன். எனது  நண்பர்கள் என்னை அடித்து போனை கேட்டார்கள். நான் கொடுக்கவில்லை, பாருங்கள் அடித்த அடையாளம் என்று காட்டுகிறான்.

எல்லாம் அய்யன் அருள்.

அகத்தியரை நம்பியவர் கைவிடப்படார் என்பது கண்கூடான உண்மை.

இந்த முறை ஜீவ அருள் வாக்கு பிரமாதமாக வந்துள்ளது. நேரம் கிடைக்கும் போது தட்டச்சு செய்து போடுகிறேன்

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

தி. இரா. சந்தானம்
கோவை.
9176012104