Sunday 26 August 2018

பொது நாடி வாக்கு 26.08.2018


இன்று 26ஆகஸ்ட்2018 மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில் உள்ள பொகளூரில் ஓம் ஸ்ரீ அகத்தியர் சித்தர்கள் பீடத்தில் குருமுனி அகத்திய பெருமானுக்கு சிறப்பான முறையில் யாகம், அபிஷேகம், அலங்காரம் ஆகியவை செய்யப்பட்டு, அடியவர்களுக்கு மதிய உணவு அன்னதானம் ஆகியவை செய்யப்பட்டன.

பூசை முடிவில் அகத்தியர் அய்யாவிடம் பொது நாடி வாக்கு, அனைவர் முன்னிலையிலும் திரு. இறை சித்தன் செந்தில் அவர்களால் கேட்கப்பட்டது. அகத்தியரின் வரிகள் கீழ் வருமாறு :

சிங்கார திருத்தாண்டவம் புரியும் சிவ சிவனே போற்றிசீர்மிகு உலகை படைத்த பரனே போற்றிசிரம் தாழ்ந்து வணங்கும் அடியவரின் தேவதேவா போற்றிசிரம் தாழ்ந்தே பொதிகை வாழ் அகத்தியன் யானேஆனந்தத்திருத்தாண்டவம் ஆடும் என் அப்பன் நடராசரை தொழுதுஅருள் தனை உரைக்கிறேன் பொது தனிலே கேள் மகனே  இன்னவனே, அன்றுரைத்தேன் பிரம்ம முகூர்த்தம் தன்னிலே பூமி தேவி அவள் களங்கம் கற்பித்ததால் ஆக்ரோஷம் கொண்டாளே யாம் வளர்த்த தமிழ் மொழிக்கும் நச்சு பட்டதால் நிலை குலையுமே எண்ணிக்கையில் மூன்று திங்கள் தொண்ணூறு நாள் இன்றுரைக்கும் இடம் தன்னிலே இயற்கை சீற்றம் அது கோர தாண்டவம் ஆடுமப்பா தாண்டவம் சதிராடும், கடல் மட்டம் உயரக்கடவுமே, மழை நிய்யாது பெய்யும் வருண பகவானை மனமுருகி தொழுங்களேன் ஏன் அப்பன் ஈசன் ஆலயம் சென்று காலபைரவனுக்கு அகலிட்டு, மனை தனிலே அகலிட்டு, மனமுருகி தொழுதாலே வினை விட்டொழிந்து சகஜ நிலை திரும்புமப்பா. அண்டை மாநிலமதில் மீண்டுமோர் நிலத்தடுமாற்றம் நிகழுமேகர்மம் அது தலை தூக்கியதால் தர்மம் அதை நிலை நாட்டஇறைவனின் ஆட்டமே இதுவப்பா நான் தவமீன்ற என் அப்பன் பத்மநாப சுவாமி ஆலயம் தன்னிலே பொற்கதவை திறந்திட்டானே கள்ளனவன். கோவம் கொண்டானே இறைவனுமே, கோரத்தாண்டவமே நிறைவேறியதே ஆளுயர அலை வருமே அண்டமெல்லாம் நிலை நடுங்கும்தொழுவோனை விட்டொழிவானே ஆட்டமது நிலைக்குமப்பா, ஆட்டும் பால் அவனே அறிவானே முச்சொலுக்க நாட்டமொன்று முறையுடனே யாம் உரைப்போம், விழியுடனே கேள் மகனே வினையது விட்டொழியும் மனமது தளராதே மங்கையவள் செண்பக பூவினால் உமையவளை அர்ச்சித்து, நல்லெண்ணெய் தீபமிட்டு வெள்ளிக்கிழமை அன்று தொழுது வந்தாலே வினையெல்லாம் விலகி நிற்கும். வருண பகவான் மனமுருகி நிலை பெறுவானே. அன்றுரைத்தேன் அரசியல் துறை சார்ந்த பெரும் தலை உருளுமப்பா என்று மீண்டும் உரைப்பேன் கேள் மகனே, மீண்டுமோர் அரசியல் துறை சார்ந்த பெரும் தலை மீண்டும் ஒன்று உருளுமப்பா தடுமாற்றம் நிலை பெறுமே. பாவங்களை சர்வ நாசம் செய்யும் பாவநாசம் தனிலே மூழ்கும் நிலை உருப்பெருமேகால பைரவரை கனிவுடனே தொழுதாலே கஷ்டமெல்லாம் தீருமப்பா.வாழ்வது சிறக்க உமையவளின் நல்லாசி கிட்டுமே. - முற்றே - .

*****************************************************************************************
கேள்வி :
 அய்யா, தாங்கள் பொதுவில் உரைக்கும் விஷயத்தை மக்களுக்கு உரைத்தால் அதனால் உரைப்பவருக்கு கருமம் வந்து சேருமா?

ஸ்ரீனிவாச பெருமானின் திருநாமம் பெற்றவனே. நான் உனக்கு அன்றேயே உரைத்தேனே, நான் உன் அருகில் அல்ல, உன்னுள் இருந்து உமை காப்பேன் என்று, இப்பீடத்து ஆசான் வழி நின்றுபணி தன்னை செய் என்று. என் நாமம் அதை பறை சாற்று என்று உரைத்தேனே - சாற்றடா.உன் கர்மம் அதை நான் ஏற்பேன். கர்மம் கர்மம் என்றால் அத்தனை கர்மமும் எமக்கே, தர்மம் தர்மம் என்றால் அத்தனை தர்மமும் உமக்கே. கர்மத்தை யாம் காப்போம், தர்மத்தை நீ யாசி.பசுக்களின் வதையே இயற்க்கை சீற்றத்திற்கு முழு முதல் பொறுப்பேற்குமே, - முற்றே -

****************************************************************************************