Tuesday, 19 May 2020

முனிவர்களின் தோற்றம்

#பிரம்மாண்ட #புராணம் - பகுதி 9

முனிவர்களின் தோற்றம்
=================

தக்ஷன் மகள் கியாதி, பிருகு முனிவரை மணந்து தாதா, விதாதா என்ற இரண்டு புத்திரர்களையும், ஸ்ரீ என்ற புத்திரியையும் பெற்றாள். புத்திரர்கள் தேவர்களாக, புத்திரி ஸ்ரீ விஷ்ணுவை மணந்து பாலா, உத்சாஹா ஆகிய இரண்டு புத்திரர்களைப் பெற்றாள். தாதாவின் மனைவி நியதியின் மகள் மிருகண்டு. அவள் மகன்கள் புகழ்பெற்ற மார்க்கண்டேய முனிவரும், வேதசிரனும் ஆவர். விதாதா ஆயதியை மணந்து பாண்டுவைப் பெற்றான். இவர்கள் அனைவரும் பிருகு மகரிஷிக் குலத்தில் உதித்தவர்கள் ஆகையால் பார்க்கவர்கள் எனப்பட்டனர். தக்ஷன் மகள் சம்பூதி, மரீசி முனிவரை மணக்க அவர்களுக்குப் பிறந்த மக்கள் அனைவரும் முனிவர்கள் ஆயினர். தக்ஷனின் புத்திரி ஸன்னதி கிரது முனிவரை மணந்தாள். அவர்கள் சந்ததியார் ஆயிரக்கணக்கானவர்கள் சிறந்த முனிவர்கள் ஆயினர். அவர்கள் வாலக்கியர்கள் எனப்பட்டனர்.

தக்ஷன் மகள் ஸ்வாஹா அக்கினியை மணந்ததாகப் பிரம்மாண்ட புராணம் கூறுகிறது. அவர்கள் பரம்பரையில் வந்தவர்களையும் பட்டியலிட்டுக் காட்டலாம். ஸ்வாஹாவனின் முதல் மகன் பவகாவின் புத்திரன் சகஸ்ராக்ஷன்; இரண்டாம் மகன் பவமானனின் மகள் காவ்யவாஹனன் மற்றும் மூன்றாவது மகன் சுரூசியின் மகன் ஹவ்யவாஹனன். தேவர்கள் ஹவ்யவாஹனனையும், பித்ருக்கள் காவ்ய வாஹனனையும், அசுரர்கள் சஹஸ்ராக்ஷனனையும் தீக்கடவுளாகப் பூசித்தனர். அடுத்து சிவன், தக்ஷன் புத்திரி தாக்ஷõயணி, தக்ஷனுக்கும் அவர்களுக்கும் உள்ள வேறுபாடு, தக்ஷயஞ்ஜம், தக்ஷன் அழிவு ஆகியவை இப்புராணத்தில் கூறப்படுகின்றது. (பல புராணங்களிலும் இது பற்றிக் கூறப்பட்டுள்ளது.)
தக்ஷயாகத்தின் காரணமாக தாக்ஷõயினி உயிரை விட்டு அடுத்து பார்வதியாகப் பிறந்து சிவனையே மணக்கிறாள். இந்நிகழ்ச்சிகளால் கோபம் கொண்ட சிவன், தக்ஷணை உலகில் பிராசீன பர்ஹி, மாரீஷர்களுக்கு மகனாகப் பிறக்குமாறு சபித்தார். தக்ஷனும் சிவனுக்கு முனிவர்கள் யாகத்தில் அவிர்ப்பாகம் அளிக்கமாட்டார்கள். சொர்க்கத்தில் இல்லாமல் பூமியில் மட்டுமே உறைவிடம் ஆகும் என்று சபித்தான். அப்போது சிவபெருமான் தக்ஷ சாபத்தினால் அல்ல, பூமியே உறைவதற்கு ஏற்ற இடம்; எனவே அங்கேயே என் உறைவிடம். நான் மற்ற தேவர்களுடன் உணவு கொள்மாட்டேன். ஏனெனில் பிராமணர்கள் எனக்குத் தனியாக உணவு படைப்பர். அதேபோல் நான் தனியாகவே பூசிக்கப்படுவேன், மற்றவர்களுடன் அல்ல என்று கூறினார்.

மறுபிறவியிலும் தக்ஷன் தக்ஷனாகவே பிறந்து இமயமலையில் கங்கைத் துவாரம் என்ற இடத்தில் சிவன் தவிர மற்றவர்களை அழைத்து ஒரு யாகம் செய்தார். சிவனில்லாத யாகம் வெற்றி தராது என்று கூறி ததீசி முனிவர் அதில் பங்கு கொள்ளவில்லை. மேரு மலை மீதிலிருந்து சிவனும், உமையும் அனைவரும் தக்ஷனின் யாகத்திற்குச் செல்வதைக் கண்டார். அப்போது சிவபெருமான் தன் வாயிலிருந்து வீரபத்திரனைத் தோற்றுவிக்க பரமன் ஆணைப்படி தக்ஷன் யாகத்தையும், அங்கிருந்தோர்களையும் வீரபத்திரன் அழித்தான். தக்ஷன் மறுபடியும் தலையும், உயிரும் பெற்றான். மேலும் பரமன் அவன் ஆயிரம் அசுவமேத யாகங்கள், நூறு வாஜ்பேய யாகங்கள் வெற்றியுடன் நடத்துமாறு ஆசீர்வதித்தார்.

தொடரும்...

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
#திருநாவுக்கரசர்_
தேவாரம்.
#ஐந்தாம்_திருமுறை.
                           #079புள்ளிருக்குவேளூர்.
               பாடல் எண் : 8.
#உள்ள முள்கி யுகந்து சிவனென்று
மெள்ள வுள்க வினைகெடு மெய்ம்மையே
புள்ளி னார்பணி புள்ளிருக்கு வேளூர்
வள்ளல் பாதம் வணங்கித் தொழுமினே
🌸🌸🌸🌸🌸
#திருமூலர்_அருளிய_திருமந்திரம்#பத்தாம்_திருமுறை_முதல்_தந்திரம்.
#04_உபதேசம்_பாடல்_எண்_19.
    #மாணிக்கத் துள்ளே மரகதச் சோதியாய்
மாணிக்கத் துள்ளே மரகத மாடமாய்
ஆணிப்பொன் மன்றினில் ஆடுந் திருக்கூத்தைப்
பேணித் தொழுதென்ன பேறுபெற் றாரே.
🌸🌸🌸🌸🌸
#தருமையாதீனக்_
குருமுதல்வர்
    #ஸ்ரீலஸ்ரீ
குருஞானசம்பந்த_
தேசிக     #பரமாசாரிய_சுவாமிகள்_அருளிய
🌹#சிவபோகசாரம்🌹#பாடல்_எண்_103.
#கூட்டுவதுங் கூட்டிப் பிரிப்பதுவும் ஒன்றொன்றை
ஆட்டுவதும் ஆட்டி அடக்குவதும் - காட்டுவதும்
காட்டி மறைப்பதுவும் கண்ணுதலோன் முன்வமைத்த
ஏட்டின் படியென் றிரு.

No comments:

Post a Comment