தனி நாடி
தி-இரா. சந்தானம்
மார்கழி ஆயில்ய நட்சத்திரம்
அகத்தியர் எம்பெருமானாரின் குரு பூஜை
நாள்
அருள்மிகு அகத்தியர் லோபாமுத்ரா குரு பூசை
அகத்தியர் ஜீவ நாடி பீடம் - பொகளூர்
கோவை
காலை 5 மணி
என்
நன் மகனே
நீ
செய்த பணிகளை கண்டு யாம் மனமகிழ்ந்தோம்
உமக்கு
யாம் அன்றுரைத்தோம் உம் அருகில்
அல்ல உன் உள் இருந்து உமை காப்போம் என்று
வேல்
விருத்தம் அதை செப்பித்து வா
வேலவன்
துணை நிற்பான்
எமது
பூரண நல்லாசியும் உமக்கு கிட்டுமே
அன்றுரைத்தேன்
மூடனே
பிறவியில்லா
பெரும் சுடரே
ஆலய
பனி அதை ஆசிரமம் தனை பணி தனை மேற்கொள்ளப்பா
திரை
வடிவு தன் னிலே யாம் உமக்கு துணை நிற்போம்
ஏசுவோரை
கண்டு மனம் தளராதே
அவனவன்
விதி கர்மத்தால் நிலை மாற்றம் பெறுமே
இன்னவனே
- நீ செய்தொழில் தன்னிலே மீண்டுமொரு உயர்நிலை செல்வாய்
அன்றுரைத்தேன்
நாலு நாமம் கொண்ட ஒருவன் ஆசிரமம் ஆலய பணிக்கு உனக்கு உதவிக்கரம் புரிவாரே
மனம்
தளராதே
மங்கை
அவளும் முன் வந்து மண்டியிட்டு யாசகம் தனை பெற்று உன்னிடம் தருவாளே
அன்றுரைத்தேன்
மூடனே நான்கு ஆலயங்கள் சென்று
யாசகம் வாங்கி பூசையிடு
நல்லதோர்
நிலை பெறுவாய்
நீ
ஈன்ற மழலைகள் வாழ்வு
சீர் பெரும் அப்பா
எமது
பூரண ஆசி உமக்கு என்றும் உண்டே
உன்
மனை தனிலே யாம் நித்தம் உனை நோக்குகிறேனே
கவுளி
வடிவிலே சென்று வட கிழக்கிலே சொல்லுவேனே
அறியவில்லையா உமக்கு
நாடி
வழி நற்பலன்களை யாம் உரைப்போம் இங்கு
கவுளி
வடிவில் வந்து உச்சாடம் கொடுப்போம் அங்கு
உமையே
காப்போம்
உமையே
ஆசீர்வதிப்போம்
நிலை
பெறுவாய் சீர் பெறுவாய்
- முற்றே
-