அகத்தியர் ஜீவ அருள் வாக்கு
உரைப்பவர் : குருஜி
இறைசித்தர்
உரைத்த இடம்
- பொகளூர்
அகத்தியர் ஜீவ நாடி பீடம்
அருள் பெறுபவர்
- தி. இரா.சந்தானம் , கோவை
தேதி - 26/05/2019
அகத்தியர்
அருளுரை கீழ் வருமாறு
தனிப்பட்ட
முறையில் கூறிய பரிகாரங்கள் பகிரப்பட்ட மாட்டாது
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
அகத்தியர்
ஜீவ நாடியை பற்றி உலகோர் புரிந்து கொள்ளவே இந்த பதிவு
பல அன்பர்கள்
அகத்தியரின் நேரடி வார்த்தைகளை கேட்க முடியாதவர்கள் , இந்த பதிவை படித்து புத்துணர்ச்சி
பெறுவர் .
ஜீவ நாடியில்
அருள் பெரும் எல்லோருக்கும் அகத்தியர் எல்லாவற்றையும் உரைப்பது இல்லை - சிறந்த அருள்
வாக்கினை பெற்றவர்கள் பதிவிடுவது இல்லை - பின் எவ்வாறு அகத்தியரை பற்றி புரியும் -
பலர் ஜீவ
நாடி என்றால் ஏதோ பரிகாரம் கூறுவார்கள் - கேட்டு செய்ய வேண்டும் அவ்வளவு தானே என்று
முக்கியத்துவம் கொடுப்பதில்லை -
ஆனால் ஆட்சியாளர்களை
ஆட்சியில் அமர வைப்பதும் - இயற்கை சேதங்களை முன்கூட்டியே அறிவிப்பதும் , இயற்கை சேதங்களில்
இருந்து காப்பதும் - ஊக்கம் கொடுப்பதும் -
ஒரு தாயாகவும் தகப்பனாகவும் குருவாகவும் பரம்பொருளாகவும் இருந்து வழி காட்டுவதும் அய்யன்
ஒருவரே
படித்து பயன்
பெறுவீர்களாக
குறிப்பு
- அகத்தியர் யாருடனும் வாதம் செய்ய வேண்டாம் என்று உத்தரவு - அதனால் (கோவை பாஷையில் சொல்வதானால் எந்த ஒரு ஆகாவளி கமெண்ட் க்கும் பதில் அளிக்க மாட்டேன் - மாறாக அவர்கள்
நமது பக்கத்தில் இருந்து Ban செய்யப்படுவார்கள் )
பிச்சாடல்
பேயோடு உகந்தாய் போற்றி
பிறவி
அறுக்கும் பிரானே போற்றி
வைச்சாடல்
நன்கு மகிழ்ந்தாய் போற்றி
மருவி
என் சிந்தை புகுந்தாய் போற்றி
மொய்ச்சார்
புறமொன்றும் எய்தாய் போற்றி
கச்சாக
நாகம் அசைந்தாய் போற்றி
கயிலை
மலையானே போற்றி போற்றி போற்றி
சிரம்
தாழ்ந்து வணங்கும் அடியவரின் தேவ தேவனே போற்றி
சிரம்
தாழ்ந்து இக்கலியுகம் தன்னிலே எம் நிலை இறக்கி
உமையவள்
ஆதிசக்தியின் அருளை பெற்று
என்
மகனுக்கு அருள் தனை உரைப்பேன்
கேளடா
!!!!!
இன்னவனும்
என் நாமம் அதை ஜெபித்தாய்
வீண்
மனச்சலனம் கொள்ளாதே என் மகனே
நாவடக்கம்
கொள்ளப்பா
நாடி
வழி நற்செய்திகளை யாம் உரைப்போம் உமக்கு
வேலுண்டு
வினையில்லை
வினை
தீருமய்யா
வேலாட
மயிலாட வினை ஓடுமே
உமக்கு
யாம் அன்றுரைத்தோம்
சக்தி
வடி வேலவனின் நல்லாசி கிட்டுமே
கிட்டும்
மனம் தளராதே தூயவனே
அன்றுரைத்தேன்
நாவடக்கம் கொள்ளப்பா நாடி
வழி நற்செய்திகளை யாம் உரைப்போம் உமக்கு
வாதம்
அதை விட்டொழி
கள்ளனவனும்
குள்ளனவனும் ஓடுவானே
உமக்கு
யாம் அன்றுரைத்தோம் உன் அருகில் அல்ல உன் உள் இருந்து உமை காப்பேன் என்று
யாம்
காப்போம் தூயவனே
நவகோடி
சித்தனின் நல்லாசி பெற்றவனே
மனதை
மென்மைப்படுத்து
அவரவர்
விதி கர்மத்தால் வந்த வினையே அய்யா
உனை ஈன்றவள்
உன்னை விட்டு வெகு தூரம் பயணித்தாளே
அவள்
விதிக்கர்மத்தால் விலகி நிற்கிறாள்
மனதை
நீ மென்மைப்படுத்து
உமை
யாம் இயக்கச்செய்வோமே
யாம்
ஆள்வதும் உனை ஆட்டி
வைப்பதும் யாமே
சித்தனின்
நாமத்தை பறை சாற்று ...சீர் பெறுவாய்
யாம்
இருக்கிறோம் உமை காக்க தூயவனே அஞ்சாதே
தினம்
சிவ புராணத்தை பதியம் படி
வாழ்வில்
நிலை பெறுவாய்
செவ்வாய்
என்றுரைக்கும் நன்னாளில் ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
உமை
யாம் காப்போம்
உமை யாம்
ஆசி தந்தோம்
உமையே
வெல்லச்செய்வோம்
இனி நாட்டில்
நிலை மாற்றம் பெரும்
அப்பா
மாற்றுமோர் நிலை
உண்டாக்கி புதியதோர்
தலைமை மாற்றம் பெறுமே
கள்ளனவன் ஓடுவானே
, குள்ளனவனும் மறைவானே
உனக்கு யாம்
அன்றுரைத்தோம் சித்தனின்
திருநாமத்தையும் சித்தனின்
நல்லாசி பெற்றவனும்
ஆளுவானே
மும்மாரி
மழை பெய்யும் விவசாயம் செழிக்கும் அப்பா
கால்நடைகளுக்கு
திடீர் தொய்வுநிலை ஏற்பட்டு மாளுமே !!! யாம் காப்போம் !!!
தினம்
சிற்றசர்களாக வாழும் சிட்டு குருவிகளுக்கு தானம் கொடு
சாபத்தால்
நிலை பெற்றவனப்பா
வாழ்வு
சிறக்கும்
ஒரு
முறை கொண்டவளுடன் ஈன்ற மழலையுடன் >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
தானம்
செய் த்யானம்
செய் என் மகனே
யாம்
உனக்கு அன்றுரைத்தோமே
வினை
தீரவே வேல் தந்தோம்
வினை
தீருமப்பா
உன்
மழலைகளின் வாழ்வை சீர் செய்
கொண்டவளுடன்
நட்புறவு கொள்ளப்பா
மனதை
மென்மைப்படுத்து
விதியும்
நானே வேதமும் நானே
வேதங்களும்
நானே
குருவும்
நானே
குரு தட்சிணாமூர்த்தியும்
நானே
உமை
ஆட்கொண்டு அருளுரைக்கும் அகத்தியனும் நானே
பனி
போல் இருக்கும் துயரெல்லாம் மழையாக கரையுமய்யா
காளி அவள்
துணை நிற்பாள் கலங்காதே
என் மகனே
உனை
தூற்றுவோரெல்லாம் துர்கெட்டு ஒழிவானே
உன்னை
ஏசுவோரெல்லாம் இடம் விட்டு ஓட கடைவானே
யாம்
இருக்கிறோம்
மனதை
மென்மைப்படுத்து
புன்னகையுடன்
எனைத்தொழு
யாம்
உனக்கு காட்சி தருவோம்
வாழ்வு
சிறக்கும் !!! முற்றே