Tuesday 14 May 2019

என்னுடைய ஜீவ நாடி வழி அருளுரை உபதேசம் - ஞான ஸ்கந்தர் ஆலயம் - புதுக்காடு , அந்தியூர் - 19/04/2019


ஞான ஸ்கந்தர் ஜீவ நாடி 19ஏப்ரல் 2019

நாடி வாசிப்பவர்  - குருஜி ஜெகதீஸ்வரன் அய்யா அவர்கள்

அருள் பெறுபவர் - தி.இரா . சந்தானம் , கோவை

*************************************************************************************************
கடவுள் வாழ்த்து

மொய்தார் அணிகொழல் வள்ளியை வேட்டவன்
முத்தமிழால் இங்கு வைதாரையும் வாழ வைப்போன்
வாய்யா வாரணம் போல் கைதான் ........................


*********************************************************************************
ஆனந்த நிலை போலும் அம்பலத்தாடுகின்ற அரசனை அடிபணிந்து போற்றியது 

மைந்தன் இவன் நல்லபடி பூர்வ சென்மம் அகத்தீசன் தொண்டு செய்த பிள்ளையாம்

முறை கொண்டு குடும்பஸ்தனாய் இருந்து மனைவியோடும் இரு பிள்ளை பெற்று வாழ யோகம் உண்டு

தந்தை இல்லை தாய் உண்டு . தாய் குறித்து கவலை கொண்டிடாதே.

நலமாக இன்னவன் சௌக்கியமாய் சில காலம் அடிமை  இது  தொண்டு போல செய்தாலும் சொந்த தொழில் செய்ய யோகம் அது உண்டு

நல்லதொரு கோடீஸ்வர தன பிராப்தியும் சித்திக்கும்
சித்திக்கும் நாற்பான வயது கழிய நல்ல மாற்றம் தெரியும்

அகத்தியனுக்கு இன்னவன் ஆலயம் அமைக்கவும்
அகத்தியனுக்கு இன்னவன் தொண்டு செய்யவும்
அகத்தியன் மந்திரத்தை அனைவருக்கும் அறிவிக்கவும்
இன்னவன் குருநாதனுக்கு சேவை செய்யவும்
பிறவி நிலை கண்டனன்

உடல் தன்னிலே சிறு சிறு தொல்லை
ஏழரை சனி அல்லவா

கண்ட நன் ரத்தத்திலே  தொல்லை அது காட்டும்
மனதிலே ஏதேனும் இனம் புரியா கவலை அது கொண்டிடாதே
கந்தன் அறிவேன்

முறை கொண்டு சிறு சிறு உடல் உளைச்சல் கண்டாலும்
பெரிய வியாதி ஏதும் தந்திடாது பயமில்லை

மந்தனவன் மகரத்தில் ஏறட்டும்
உனக்கும் நல்லதொரு சொந்த தொழில் யோகம் வரும்
உடல் தன்னில் ஆரோக்கியம் மேம்பாடு தெரியும்
சித்தாந்தம், ஒளடதங்கள், ஆயுர் என வேதங்கள் போல்  கொள்  போதும்
பெரிய வைத்தியம்  உனக்கேதும் வேணா

நலமுண்டு நன்மை நிலை மனைவிக்கும் சௌக்கியமுண்டு
இரு பிள்ளையும் படித்து கரை ஏறும்
பயந்திடாதே

பாங்காக இருந்திடுவாய்
பக்குவப்பட்டிடுவாய்

விடைகழி கந்தனை சேவிக்க வைத்தேன் - சிறப்பு

சிறப்பாக சித்தர்காடும்  சென்றங்கே ஓணம் மீனும் அனுகூலம் பட வேணும் என்று உரைத்தனன்   - சிறப்பு

சிறப்புண்டு லாபம் நல்லதாம் முறையாகவே அறுபத்து மூன்று சித்தர்கள்  தனக்கும் உரிய  பூசை கண்டு வந்ததும் சிறப்பு

நலமாக சித்தர்காடு சென்றது சிறப்பு
முறையாக சித்தர்களை கண்டு வந்ததும் சிறப்பு

சீவ சமாதி  சித்தர்கள் அல்லவா
அகத்தியனும் உனக்கு சூட்சும வடிவு தன்னில்  ஆங்கொரு ஆசீர்வதித்திட்டான் !!

அஞ்சேல் !!

கந்த வடிவேலனும் உனக்கு அருளாசி இட்டிட்டேன்

முறையாக சித்தர்  அது காடு அதுவும் சென்ற பின்னே
சிங்கார வேலன் துதிக்க ஒரு சிறு குந்தம்  ஒன்றை கொண்டு வர வைத்தேன்
அனுகூலமான அரை அடி அளவிலே ஒரு  வேல் கொண்டு வா
துத்த நாகம்  கலந்ததுவும் செம்பிலே செய்திட்டு வா என்றேன்

சிறப்புண்டு அதன் பின்னர் ______________________ உபாசனை உனக்கதுவும் அறிவிப்பேன் என்றும்  வடிவேலன் பகர்ந்தேன்

முதலிலே ஒரு ஆயுதம் பூசை வேணும்

சிறீ வித்யை மார்க்கம் இவனுக்கு உபதேசம் உண்டு

அகத்தியன் பூஜித்த அம்பிகை அல்லவா

இன்னவனும் பூசிப்பதென்றாலும் உடல் தனக்கும் ஆறு சக்கரம் தனக்கும் ஒரு பாதுகாப்பு கொடுக்க வேணும்

ஆதலால் உடல் தனக்கு எப்போது தொல்லை வந்தாலும் அகத்தியன் நாடி தனிலே பார் - உனக்கு மருந்து அறிவிப்பேன் 

ஆதலாலே முறையாக அகத்தியனும்  அங்குண்டு 
சுவடியில் தோன்றி உனக்கு வழி காட்டி கொண்டே வருவான்  - விட்டிடாதே.

கந்த வடிவேலனும் உனக்கு வழி காட்டுவேன்

பூர்வ சென்ம தொடர்பாம்

ஆதலாலே லாபமது உண்டு
லட்சியம் நிறைவேறும்
இந்த குந்தமதை கொண்டு சென்று
இளையனார் வேலூரு சென்றிட்டு வா

முறையாக நன்மை
இளையனார் வேலூரும் சென்று
சுப்ரமண்யன் அதிகாரமானதொரு வேலதுவும் விழுந்த இடம் - உண்டு இன்னும்

சிறப்புண்டு - அவ்வேலுக்கு அருகிலே இவ்வேலை இடு

சிறப்புண்டு  - சுவாமிநாத சித்தர் பீடம் ஒன்று உண்டு
அந்த சமாதி தனில் அமர்ந்தால் வேல் தெரியும்
சிறப்புறவே லாபமது தருகின்ற _______________ பாராயணம் புரிந்திட்டு வா

முறைகொண்டு லாபம் ஒர்  முறையும் படித்த பின்னே இல்லமது வந்து
முறையாக நன்மை நிலை கண்டிட்ட  காலும்
ஒரு ___________ யில் பீடமொன்றை  வை

சிறப்புண்டு லாபமாகும் - வைத்த பின்னே
_________________  யும் ___________ தோரும்
முறையாக  ________________  இல் திருமஞ்சனம் கொள்

திரிமஞ்சன நெய்வேத்தியம் கொள் - (குறிப்பு - குருஜி உரைத்த மூன்று பொருட்களை கலந்து எறும்புகளுக்கு வைப்பதே திருமஞ்சன நெய்வேத்தியம் எனப்படும் )

சிறப்புண்டு லாபமாகும் -________________ பாராயணத்தை மிக்கவும் செய்யப்பார்

அனுகூலமாய்  நன்மையாய்  கண்டதொரு வேளை -
_____________  திசை பார்த்து 
வேல் ______________  திசை வைத்து பூஜித்து வா
அமருகின்ற ஆசனம் __________________________ அமர்ந்து கொள்
சிறப்பாக நன்மை நிலை - ____________ வஸ்திரம் தரித்து அமர்ந்து கொள்

நலமாக நன்மை ______________ மணியுடன் ஜெபித்து வா

நலமுண்டு லாபம் மேன்மேலான படி _____________ தனில்  பீடம் ஒன்றை செய்ய வேணும்
அதன் மேல் இந்த வேலை வித்திட்டு வை.

சிறப்புறவே லாபமது தெரியும் - இப்படியும் முறையாக நன்மையாய்                           ,              தவறிடாமல்
___________  மும், __________________ இல் திருமஞ்சனமும், திரிமஞ்சன  நெய்வேத்தியங்களும் சென்று சேவிக்கப்பார்

நலமாக முக்காலம் உணரும்
அகத்தியனும்  முன்னே தோன்றுவான் உனக்கும்
சீரான அகத்தியரின் பிள்ளை நீ என்பதாலே உனக்கும் எதிர்கால பயமில்லை
மனைவிக்கும் பிள்ளை இரண்டிற்கும் குடியிருக்கும் வீட்டிற்கும் லாபம் தரும்

புகழடைவாய் ஆன்மீகத்திலும்
முறையாக நல்லதாம் கணக்கு, வழக்கு , கணக்கு பதிவு
சீராக கண்ட  நன் - மேலாண்மை நிருவாகம் போன்ற பணி
சீராக நல்லது - சொந்தமாய் தொழில் செய்ய யோகம்
என நிதிகளும் வந்து சேரும்  
எதிர்ப்புகள் மிக்கவும் குறையும்

வேல் உபாசனை எடுத்து சில காலம் கழிந்த பின்  ___________________ உபாசனை உனக்கு அறிவிப்பேன்

ஆதலால் இந்த நாள் உபதேசம் இது தான்

பரிகாரம் போலும் அல்ல

இது பூர்வ ஜென்மத்தை திறக்கின்ற சாவி
இந்ததொரு சாவியை இட்டிட்டேன்

முறையாக பூஜை அதை செய்து
வரம் வாங்க பழகிக்கொள்

வடிவேலன் வரம் கொடுப்பேன்
அகத்தியனை துணை இருக்க வைப்பேன்
லோபமுத்ரா வை ஆசீர்வாதம் இட வைப்பேன்
வள்ளி தேவசேனா சமேதராய் வந்து வீட்டினிலிருப்பேன்

பயந்திடாதே பரிபூரண ஆசீர்வாதம் உண்டு

இப்பூஜையை முடித்திட்டு வா போதும்

ஆறு மாதம் கழியவே உபதேசம் ஆற்றி தருவேன் - வந்து மீண்டும் கேள்

*********************************************************************************

நான் இன்னமும் அந்த வேலை பிரதிஷ்டை செய்ய வில்லை . அதற்குள் குடும்பத்தில் ஒரு பெரியவர் நோய்வாய்ப்பட்டு இருந்தார் - அதனால் கோவில் சென்று வேல் பூஜிக்க சிறிது காத்திருக்க வேண்டியதாயிற்று. மேலும் அறிய வகை பொருளால் பீடம் அமைக்க சொல்லி உத்தரவு இருப்பதால் - பீடம் தயார் செய்து பின்னர் தான் வேல் கோவிலுக்கு சென்று பூஜையிட முடியும் - ஆனால் இப்போதே அந்த வேலால் ஏராளமான அனுகூலங்கள் அறியப்படுகின்றன . இப்போது பஞ்சலோகத்தில் ஒரு பீடம் செய்து உள்ளேன். அந்த பீடத்தில் வேலை சரியாக பொருந்துகிறதா என்று பார்ப்பதற்காக சாதாரணமாக அந்த வேலை சொருகிய பொது கொளுத்தும் வெய்யிலில் முதன் முறையாக  கோவையில் மழை வந்தது - அதற்க்கு பிறகு நிறைய நாள் மழை வந்தது. ஆனால் வெய்யில் காலத்தில் முதன் முறையாக வேல் பீடத்தில் சொருகிய இரண்டாவது நிமிடமே மழை வந்தது. பின்னர் வேல் பிரதிஷ்டை செய்ய சிறிது காலம் ஆகும் ஆதலால் அதனை பச்சரிசி பரப்பி அதன் மேல் படுக்க வைத்தோம். ஆனால் இன்று 14/05/2019, அந்த வேல் எடுத்து மீண்டும் வைத்து - நூபுர கங்கை தீர்த்தத்தால் அபிஷேகம் செய்த பொது - உடனேயே இரண்டு நிமிடத்தில் எங்கிருந்தோ ஒரு மயில் பறந்து வந்து வீட்டின் கூரையின் மேல் அமர்ந்தது. மயில் வந்தது பெரிய அதிசியம் இல்லை- பொதுவாக எப்போதும் வேண்டுமானாலும் மயில் வெறும் என்று நீங்கள் எண்ணலாம். ஆனால் மயில் எப்போதாவது தான் வரும் - அதுவும் எங்கள் தெருவில் இரண்டு வீடு தள்ளி இருக்கும் ஒரு அம்மையார் மொட்டை மாடியில் மயிலுக்கு அரிசி இடுவார் . எனவே அது எப்போதாவது வந்து உணவு இருக்கிறதா என்று பார்க்கும் .எங்கள் இல்லத்திற்கு எப்போதுமே வந்ததே இல்லை . அதுவும் வேல்   பீடத்தில் சொருகிய இரண்டாவது நிமிடம் மயில் வந்து அமர்ந்து விட்டது - இது எப்படி தற்செயலாக இருக்க முடியும் - மேலும் சில சுப செய்திகள், நெடுநாளாக எதிர்பார்த்து நிறைவேறாத இரண்டு நல்ல செய்திகள் அடுத்தடுத்து 2 மணி நேரத்தில் நடந்தேறியது - அதிசயத்திலும் அதிசியம். இன்னும் வேல் பிரதிஷ்டை செய்யவே இல்லை - அதற்குள்ளாகவே அத்தனையும் நடந்தேறியது. இன்று முதல் சிவ பூஜை செய்ய துவங்கி உள்ளேன். எல்லாம்  அகத்தியர் அருள். நேற்றிலிருந்து உத்தரவு பிறப்பித்த வண்ணமாகவே உள்ளார். நேற்று மாலை என்னிடம் அவர் கூறியதாவது  - செல் , சென்று சிவ பூஜைக்கு வில்வம் வாங்கி செல், நாளை முதல் நீ சிவ பூஜை செய்ய வேண்டும் என்றார். நானும் சரி என்றேன். வாகனத்தில் செல்லும் பொது ஒரு குரு பத்தினி அவர்கள் தொலை பேசியில் தொடர்பு   கொண்டு. முதலில் தாயாரை பூஜி - தாயாரை பூஜிக்காமல் எந்த தெய்வமும் உனக்கு அருளாது என்றார் . என்னடா  இது நிமித்த சாஸ்திரம் சரியில்லையே என்று யோசித்து கொண்டே வாகனத்தை மேலும் செலுத்தினேன். சரி இன்று மலர் அங்காடிக்கு செல்லாமல் சிவ பூஜையை வேறொரு நாளுக்கு தள்ளி வைத்து விடுவோம். இன்று நிமித்த சாஸ்திரம் சரியில்லை , வண்டியை அடுத்து வரும் சாலை இணைப்பில் வேறு திசையில் திருப்பி மலர் அங்காடிக்கு செல்லாமல் இல்லத்திற்க்கே சென்று விடுவோம் என்று முடிவு செய்தேன். ஆனால் சாலை இணைப்பு வந்த உடனே திரும்ப வேண்டிய இடத்தில் சிவப்பு விளக்கு, மலர் அங்காடிக்கு செல்ல வேண்டிய பாதையில் பச்சை விளக்கு. வண்டியை பச்சை விளக்கு பக்கமாக மற்ற வாகனங்கள் என்னை ஒதுக்குகிறார்கள் நானும் சரி பரவாயில்லை அடித்த சாலை சந்திப்பில் வீடு பக்கம் திருப்பி கொள்ளலாம் என்று நேராகவே செல்கிறேன். அதற்குள் உள்  இருக்கும் மாமுனிவர் - மலர் அங்காடிக்கு கிளம்பி விட்டு அங்கே செல்லாமல்  வீட்டிற்கு செல்கிறாய் - மூடனே - உடனே நேராக மலர் அங்காடிக்கு செல் - குடும்பத்தில் குழப்பங்கள் இருக்க தான் செய்யும் - அதற்கும் சிவ பூஜைக்கும் ஆன்மீகத்திற்கும் என்ன சம்பந்தம் - நீ பூஜை துவக்கி உனது ஆன்மீக பாதையில் தொடர்ந்து செல் - குடும்ப சிக்கல்களை பற்றி கவலை கொள்ளாதே  - அது லௌகீகம் - இது ஆன்மிகம்  - நீ எவ்வளவு நேரம் குடும்ப சிந்தனையில்லாமல் ஆன்மீகத்தில் இருக்கிறாயோ - அவ்வளவு விரைவில் உனது லௌகீக சிக்கல்கள் என்ற மாயைகள் தவிடு பொடியாகும் - இது  எல்லாம் ஒரு மாயை - என்று ஒரு நீளமான கீதா உபதேசத்தை ஒரு சாலை சந்திப்பில் இருந்து இன்னொரு சாலை சந்திப்பிற்கு கடப்பதற்கு உள்லேயே உணர்த்தி முடித்தார். அடுத்த சாலை சந்திப்பில் தெளிவாக குழப்பமில்லாமல் மலர் அங்காடியை நோக்கி ஏகினேன். அங்கே செல்லும் வழியிலேயே குருஜி தொலை  பேசியில் அழைத்தார் - எப்போதும் குருஜி அழைத்தால் ஓரமாக வண்டியை நிறுத்தி உடனனேயே அழைத்து பேசி விடுவேன் . ஆனால் இன்றோ மேல் நோக்கி மலர் அங்காடிக்கு செல்க - அங்கே சென்று சேர்ந்து பிறகு அவரிடம் பேசுங்க அன்று அய்யன் உத்தரவு - அப்படியே ஆகட்டும் என்று மலர் அங்காடிக்கு சென்றேன் - அங்கே சென்று இறங்கியவுடனேயே குருஜி மீண்டும் அழைத்தார் - நான் அவரிடம் பேச வேண்டிய சில விஷயங்களை எல்லாமும்  விசாரித்து விட்டு வீட்டில் உள்ள சிக்கல்களையும் என் நிலைமையும் எடுத்து கூறினேன் . அப்போது வரும் சனிக்கிழமை பௌர்ணமி பூஜைக்கு ஏற்பாடு தயாராகி கொண்டு உள்ளதா என்று வினவினேன் . அய்யன் உள்ளே இருந்து பௌர்ணமி பூஜையில் கலந்து கொள்ளவும் என்று உத்தரவு - குருஜியிடம் சனிக்கிழமை வீட்டில் எந்த பிரச்னையாக இருந்தாலும் பூஜையில் கலந்து கொள்வேன் என்று வாக்கு கொடுத்தேன் - குருஜி உடனேயே சமித்து குச்சிகளும் , நெல் பொரியும் தேவைப்படுகிறது என்று கூறினார் . நாம் செல்வோமோ இல்லையோ என்று தெரியாது - வாங்கி வருகிறேன் என்று வாக்கு கொடுத்து அவரும் அதற்காக காத்திருந்து கடைசியில் வர தாமதமானோலோ அல்லது செல்ல முடியாவிட்டாலோ சங்கடம் தானே வந்து சேரும் என்று எண்ணினேன் - அனால் அய்யன் என் முன்னே அந்த முத்தையா ஸ்டார் முதலிய கண்ணில் காண்பித்து - செல்க சென்று பூஜை பொருட்கள் வாங்குங்க என்று பணித்தார் - சரி அய்யன் சொல்படி நடப்போம் என்று சென்று அந்த கடை முதலாளியிடம் என்ன அய்யா நல்ல இருக்கீங்களா என்று விசாரித்தேன் - ஆமாம் தம்பி நேற்று தான்  உங்களை நினைத்தேன் - என் அந்த தம்பி கடை பக்கம் வரவே இல்லை - நாளாயிற்றே என்று நினைத்தேன் - உடனேயே நீங்கள் வந்து விடீர்கள் என்றார்  - அப்போது கூட நான் என்ன எண்ணினேன் என்றால் - இன்று இரு சக்கர வாகனத்தில் வந்து இருக்கிறோம் சமித்து வாங்க முடியாது - இன்னும் சனிக்கிழமைக்கு சில நாட்கள்  உள்ளது , எனவே நாளை அல்லது மாரு நாள் வாங்கி கொள்வோம் , அதற்குள் நம் மனம் எப்படி மாறுமோ தெரியாது என்று கூறுகிறேன் - அனால் அய்யன் உள்ளே அமர்ந்து சேமித்து கட்டைகளை வாங்குக  அதற்கூறிய பையும் அவரிடம் உள்ளது குடியும் வாங்கி வாகனத்தில் மாட்டிக்கொண்டு செல்க என்று உத்தரவு - நான் அய்யன் உத்தரவை மீற  முடியாமல் - அய்யா இரண்டு பை  நிறைய சமித்துகள் கொடுக்கவும் என்று கூறுகிறேன் - அனால் அய்யன் உடனேயே அவருள் அமர்ந்து பையில் குறைவாக தான் போடா முடியும் - நான் வேண்டுமானால் வாகனத்தில் கயிறு வைத்து கட்டி தரட்டுமா என்றார் - அய்யன் மீண்டும் என்னுள் வந்து மொத மூட்டையையும் வாங்குக என்று உத்தரவு - சரி என்ன ஆனாலும் பரவாயில்லை மொத மூட்டையும் எண்ணமால் அப்படியே மூட்டையாக கொடுத்து விடுங்கள் என்று கேட்டு  வாங்கி வாகனத்தில் வைத்து கட்டி எடுத்து வந்து விட்டிட்டேன். அய்யன் ஓயவே இல்லை காலையில் சிவ பூசை செய்ய வைத்து வேலை நிமிர்த்தி பீடத்தில் இட  வைத்து மேற்கூறிய அனைத்து அற்புதங்களையும் செய்வித்து சில சுப செய்துகளையும் கண் கூடாக காட்டி விட்டார் . ஒரு மாதமாக வேல் பூசை ஐடா இளையனார் வேலூர் செல்வதற்கு இரண்டே நிமிடத்தில் பூசை முடிந்தவுடன் உத்தரவு இட்டார்  - உடனேயே ஏகுக  இளையனார் வேலூர் - பீடத்தை பற்றி கவலை வேண்டாம்  - தாமாகவே அமையும் அது - சரி என்று காலண்டரை சஷ்டி அன்று செல்லலாம் என்று பார்க்கும் பொது மிக சரியாக வெள்ளிக்கிழமை  சஷ்டி மற்றும் திருவோணம் நட்சத்திரம் (எனது ஜென்ம நட்சத்திரம் ) சேர்ப்பித்து வரும் நாளை குறிக்கப்பெற்றேன். நெற்றில் இருந்தே அய்யன் உத்தரவு மேல் உத்தரவு .............அய்யன் அருள் ..............சகலமும் ஜெயம் ............வாழக  அய்யன் அகத்தியர்  அருள் .வளர்க அவரது புகழ் ........... வாழ்க சித்தர் மார்க்கம் .......... வளர்க சித்தர் பீடங்கள் ..........  எண்ணிலாத நவ கோடி சித்தர்கள் பாதம் பணிந்து எனதுரையை நிறைவு செய்கிறேன் . வணக்கம் ; நல்லது.


எனது முருகர் ஜீவ நாடி பதிவு பிரசுரிக்கப்படமால் ஒரு மாதமாக இருந்தது .இந்த பதிவையும் அய்யன் உத்தரவு இட்டதனாலேயே தட்டச்சு செய்து பதிவிட்டுள்ளேன் .


 தி. இரா . சந்தானம் 
கோவை 
9176012104