Monday 22 July 2019

என்னுடைய தனிப்பட்ட நாடி வாசிப்பு - 21/07/2019

என்னுடைய தனிப்பட்ட நாடி வாசிப்பு

நாடி  வாசிக்கும் இடம் :
அகத்தியர் ஜீவ நாடி பீடம்
பொகளூர், மேட்டுப்பாளையம்
கோவை

நாடி வாசித்த தேதி - 21/07/2019

நாடி வாசிப்பவர் - குருஜி இறைசித்தர்

நாடி கேட்பவர் - தி. இரா . சந்தானம் , கோவை

அகத்தியர் அருளுரை கீழ்வருமாறு :

ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
சீராய் திருவையாராய் போற்றி
மூவாய் மணியின் புகழே போற்றி
கண்ணின் இமை போல் காப்பாய் போற்றி
வருவாய் தருவாய் குகனே போற்றி
வஞ்சமில்லா அருள்தனை புரிவாய் போற்றி
கயிலை மலை வாழ் அய்யனே போற்றி போற்றி
சிரம் தாழ்ந்து வணங்கும் அடியோரின் தேவ தேவனே போற்றி
சிரம் தாழ்ந்து அகத்தியன் யானே அருள்தனை உரைப்பேன்
கேளடா  என் மழலையே

உமக்கு யாம் அன்றுரைத்தோம் - செவி வழி செய்திகளை நம்பாதே என்று
ராகுவின் கேதுவின் இடர்கள் உள்ளதென்று திரை வடிவில் கண்டாயா ?
- உள்ளதய்யா

யாம் இடர் நீக்கி வாழ வைப்போம் என் மகனே
யாம் உன்னுள் இருக்கும் நிலை வந்தால் - நாளென்ன கோளென்ன

-------------------------

தி. இரா. சந்தானம்
அய்யனே,எமக்கு தங்களது காப்பு உள்ளது - அனால் பொதுவாக உலகில் வாழும் மக்களுக்காக கேட்க்கிறேன் அய்யனே

-----------------------------

உமக்கு யாம் முன்றுரைத்தோம் அன்றே
வீசும் புயலில் காரென்றும் பூவென்றும் மழலை செல்வமென்றும் முதி யவனென்றும் காராது
அவனவன் விதிக் கர்மத்தால் மிதிபடுவானே
வடக்கே பெரும் வெள்ளத்தால் பெரும் நிகழ்வு ஏற்படும் அப்பா
நகரம் மூழ்கும் உயிர்கள் பலி படும் நிலைகள் மாற்றம் பெரும்
தெற்க்கே யாம் நேசிக்கும் தமிழ் தன்னிலே 21 நாள் தன்னிலே
நல்லதோர் வருணதேவன் மழை பொழிந்து
இடர் தீர்த்து விவசாயம் செழிக்கும் அய்யா

நிலை நிலை துதித்தோனுக்கு நல்லதொரு செயலும் கிட்டுமே

உமை  யாம் ஆள்வோம் ஆட்கொள்வோம் - முன்னுரைத்தேன்
மனம்  தளராதே தூயவனே

யாம் உன் அருகில் அல்ல , உன் உள்  இருந்து உமை  காப்பேன்

ஏசுவோர் ஏசட்டும் - தூற்றுவோர் தூற்றட்டும்

உமை நிலை பெறவே யாம் பக்குவ நிலை படுத்துவோம்

ஆலய பனி தன்னை மனமுவந்து என் அடியவரிடம் யாசகம் வாங்கி
பணி  அதை அமையச்செய்

உனக்கு யாம் உன் உள் இருந்து உமைக்காப்பேன்

உன் வம்ச நிலைகளை யாம் காப்போம்

வாழ்வு தன்னை யாம் காப்போம்

பௌர்ணமி யாகம் தன்னிலே நீ செய்த சிறு சிறு பணிகளை கண்டு யாம் மனமகிழ்ந்தோம்

உமை அபிஷேக நிலை தன்னிலே உற்று நோக்கினோம்

யாகம் தனிலே உமக்கு யாம் அக்கினியாக வந்து ஆசீர்வதித்து உமக்கு காட்சி தந்தோம்

வடக்கு திசை நோக்கியே உமை நோக்கினோம்

வாழ்வு சிறக்கும்

உன் மழலை வாழ்வு சீர் பெரும்

மனதை மென்மைப்படுத்து மான் மகனே

வீண் வாதம் அதை விட்டொழி

நாவடக்கம் கொள்ளய்யா

தூற்றுவோரை யாம் காண்போம்

வாழ்வு சிறக்கும்

முற்றே -

கேள்விகள் -

கேள்வி - 
புதிய வீடு சரியாக அமையவில்லைகட்டிய வீட்டை வாங்காமல் ஏற்கனவே உள்ள சொந்தமான இடத்தில் வீடு கட்ட எண்ணம் உள்ளது - அதில் கட்டலாமா - அதில் ஒரு வளர்ந்த வேப்ப மரமும் உள்ளது - அதை அகற்றி விட்டு வீடு கட்டலாமா - அல்லது வேப்பமரத்திற்கு இடம் அளித்து வீடு கட்டலாமா

முன்னுரைத்தேன் மூடனே அறியவில்லையா உமக்கு
யாம் உன்னுள் இருந்து உமை காப்பேன் என்று
அன்றுரைத்தேனே உனக்கு - யாம் மனை அதை அமையப்பெற்று தருவேன் என்று
அந்த வேப்பனை நீ தொழுது மனை அதை கட்டு
உமக்கு உமையவளின் நல்லாசி கிட்டுமய்யா


கேள்வி - 
அத்தி வரதராஜ பெருமாளை  தரிசனம் செய்து வந்தோம் - மிகுந்த சிரமமாக இருந்தது - சில பேர் வரிசையிலேயே இறந்தார்கள் - பலர் மயக்கம் அடைந்தார்கள் - கடவுளை பார்க்க வந்த அந்த உயிர்களை கடவுள் காப்பாற்ற கூடாதா - அப்படி இறந்தவர்களுக்கு புண்ணிய கதி கிடைக்குமா ?

அந்த ஸ்ரீனிவாசப்பெருமானின் நல்லாசி கிட்டியதே உமக்கு
அகத்தியனுக்கு யாம் உமை ஆசீர்வதித்தோம்
அங்கு போகும் ஆத்மாக்களின் அது அவரவர் கர்ம வினையே

முன்னே அத்தி வரதன் தோன்றி உள் போகும் வேளையிலே
எண்ணிக்கையில் மானிடனை நோக்கினான் அப்பா
திரை வடிவில் வந்ததால் - சென்றார் - நின்றார் - மாண்டார்
அவர் விதிக்கர்மமே


யாம் அன்றுரைத்தோம் - அழைத்தால் அக்கணமே வருவோம் என்று
 - வருவோம் -



கேள்வி - 
திருக்கோவிலூரில் சமாதி கொண்டுள்ள ஞானானந்தர் என்பவர் யார் - அவரே அகத்தியரின் அவதாரமா - அல்லது ஈசனின் அவதாரமா - 400 வருடம் வாழ்ந்து இருக்கிறார் - அதிசயங்கள் பல புரிந்துள்ளார் - அவரை பற்றி கூற வேண்டும் - அகத்தியர் பாடல்களை உலகுக்கு கொண்டு வந்தவர் அவரே என்று கூறுகிறார்கள்

யோகியவனை உற்று நோக்கி கேட்க்கின்றாய்
அவரும் ___ னும் யோகியும் ஒரு வழி வந்த சித்தனே
திரைவடிவை எண்ணாதே - செவி வழி செய்தியை கேட்காதே

கேள்வி - 
மாமனார் அவர்கள் சமீபத்தில் இறந்து விட்டதால், தற்போது மாமியார் அவர்கள் தனியாக வாசிக்க எண்ணம் கொண்டுள்ளார்கள் - அவர் எந்த மகளுடன் இருக்க வேண்டும் - அல்லது தனியாக வசிக்க அனுமதிக்கலாமா

உன் கொண்டவுளுடன் ஈன்றவளை கண் எதிரிலேயே வை - அவள் தேகம் சீர் பெரும்


கேள்வி - 
எனது தாயார் தனியே வசித்து கொண்டு வருகிறார்கள் - அவர்களின் நிலை என்ன ?

உன்னை ஈன்றவள் அவள் தேகம் சீர் பெரும் அய்யா - அவள் மனச்சலனம் காண்கிறாள்
சலனமதை விட்டொழிந்து வருவாளே
தனிமை நிலை நிற்கவே எண்ணம் கொண்டுள்ளாள் - நிறைவேறும் அய்யா

கேள்வி - 
மனைவியின் கல்வி , வேலை குறித்து அருள் உரைக்க வேண்டுகிறேன்

கொண்டவள் அவள் கல்வி தனிலே சிறு தடை ஒன்று உள்ளதய்யா
இடர் நீக்கி வாழ வைப்பேன் - அஞ்சாதே என் மகனே


கேள்வி - 
தாங்கள் கூறிய பரிகார முறைகளில் மாற்றம் தேவைப்படுமா

நான் முன்னுரைத்த பரிகாரம் தன்னை ...............  ( பரிகாரத்தில் சிறிது மாற்றங்கள் கூறி உள்ளார் )..பதிவிடுவதற்கில்லை

வினை அகலும் என் மகனே அஞ்சாதே நிலை பெறுவாய்
உமக்கு யாம் மனை அதை அமையப்பெற்று தருவோமே
வாழ்வாய் எமக்கு நிலை நிறுத்தப்பா
யாம் உன்னுள் இருந்து உமைக்காப்பேன்
வாழ்வு நலம் பெறுமே - முற்றே -