Wednesday, 31 January 2018

மூடர்கள் செயல்

மூடர்கள் செயல்

பாபங்களை தொலைக்கும் பாப நாசத்தில், அகத்தியர் அருவியின் மேல் அமைந்துள்ள கல்யாண தீர்த்தத்தில் உமையவள் உலோபமுத்திரையுடன் குருமுனி அகத்தியர் கம்பீரமாக வீற்றிருந்தார்.

தற்போது, தாயாரின் சிலையில் அவரது தலை பகுதி சில விஷமிகளால் உடைக்கப்பட்டு உள்ளது.

நெல்லைமாவட்டம் பாபநாசம் அகத்தியர் அருவிக்கு மேல் வீற்றிருக்கும் குருமகரிஷி தம்பதியரின் திருமேனிக்கு நேர்ந்த கொடுமை......

குருநிந்தைக்கு பாபவிமோசனமே கிடையாது..
அவ்வாறிருக்க வார்த்தைகளால் சொல்லவியலாத இப்படுபாதக செயலைசெய்த பாவிகளுக்கு என்னவிமோசனமோ?....
இதேஇந்நேரம் வேறு மதத்தவரின் திருமூர்த்தம் இவ்வாறு சிதைக்கப்பட்டிருந்தால்"""திராவிடதிருட்டுநாய்கள்""கண்டணக்ககுரல்கள் எடுத்து கதறியிருக்கும்...
அன்னையின் சிரம்மீது கரம் வைத்தவன் இந்நேரம் காணாமல் போயிருப்பான்..
மதபேதம்இல்லாமல் இறையுணர்வு பெற்றோார் அனைவரும் இதைப்பகிரவும்...

ஓம்காலசம்ஹாரபைரவாயநமஹ

இன்று 01/02/2018 அன்று அகத்தியர் சீவ நாடியில் அகத்தியரிடமே இந்த சிலை உடைப்பை பற்றி கேட்கப்பட்டது. அகத்தியர் சீவ நாடியில் எழுந்தருளி, இது சில விஷக்கிருமிகளின் நயவஞ்சக செயல் என்று குறிப்பிட்டார். அவர்கள் கடவுள் மறுப்பு இயக்கத்தை சார்ந்தவர்கள் அல்ல, என்றும் உரைத்தார். சிலை கடந்த வெள்ளிக்கிழமை 26Jan18 அன்று அகற்றப்பட்டது என்றும் கூறியுள்ளார். மேலும், சில பக்தர்கள் ஒன்றினைந்து புதிய சிலை வெகு விரைவில் பிரதிட்டை செய்யப்படும் என்றும் நாடியில் கூறியுள்ளார். ஓம் அகத்தீஸ்வராய நம, நவ கோடி சித்தர்களே போற்றி போற்றி.

No comments:

Post a Comment