Tuesday, 2 January 2018

அகத்தியர் கூறும் அதிசூட்சுமம்

காணவே நிச்சயத்தைக் காணவென்றால்
கண்ணே து வாயேது கருத்தங்கேது
பூணவே நின்று அண்டத் தப்பால் பாரும்
பொருந்தி நின்ற பூமியின் கீழிருப்பார் பாரு
ஊணவே நின்றகெதி பார்த்தாயானால்
உலகேது நீயேது நான்தான் ஏது
பேணவே பார்க்க அந்த மயமாய்ப் போச்சு
பேச்சற்ற சூக்ஷத்தின் காக்ஷிதானே

பரம் எனப்படும் அது அண்டத்துக்கு வெளியே பூமிக்குக் கீழே அதாவது வெளிப்பாட்டுக்கு வெளியே, உள்ளது. இதை ஒருவர் அறிந்தால் உலகம், உயிர்கள் என்று தனியாக எதுவும் இல்லை, அனைத்தும் பரம் என்பதை உணர்வார்.  அதுவே காரிருள் அல்லது இது என்று குறிக்க முடியாதது, அதுவே சப்தத்தைக் கடந்த மவுனம், அதி சூட்சுமம், என்கிறார் அகத்தியர்.

No comments:

Post a Comment