லோபாமுத்திரைஅகத்திய மைந்தன் 09/22/2013 லோபாமுத்திரை2014-01-17T15:39:13+00:00
அகத்தியர் ஜீவ அருள் நாடியின் படி
இன்று லோபாமுத்திரை என்று சொல்லக்கூடிய, என்னுடன் இருக்கின்ற மனைவியின் பெயராக உச்சரிக்கின்றனர். லோபாமுத்திரை யார் என்ற கேள்வி இதுவரைக்கும் யாரும் கேட்டதில்லை. அவள் யார்? பிறந்தது என்ன, வளர்ந்தது என்ன என்று கேட்டதில்லை. அன்னவளே அகத்தியனால் உருவாக்கப்பட்ட தாமிரபரணி நதிக்கரைதானடா லோபாமுத்திரை. எங்கும் இல்லாத அதிசயம் தானடா இங்கு நடந்திருக்கிறது. எந்த ஒரு மாநிலத்திலும் ஒரு நதி உருவாகி, கிளம்பி பல கிளைகளாக பிரிந்து கடலிலே கலக்கும் போது வேறு மாநிலத்திலே, வேறு கடலிலே கலக்கும். தமிழகத்தில் மட்டுமல்ல, வேறு உலகத்தில் எங்குமே பார்க்க முடியாத அதிசயம் இங்குதான நடந்துள்ளது.
எந்த மலையில் தாமிரபரணி நதி உற்பத்தியாகிறதோ, அதே நதி நெல்வேலி என்று சொல்லப்படுகின்ற திருநெல்வேலியில், புண்ணிய நதிகளில் நீராடி, நடை கலந்து, உடை அணிந்து ஆனந்தப்பட்டு இங்குள்ள கடலில் கலப்பது போல் வேறு உலகத்தில் எங்கும் இந்த அதிசயத்தை காண முடியாது. அந்த நதியை உண்டாக்கிய பெருமை அகத்தியனுக்கு உண்டடா. ஆகவே அந்த நதியின் பெயரை தான் லோபாமுத்திரை என்று ஆக்கியிருக்கிறேனே தவிர, சித்தர்களுக்கும், முனிவர்களுக்கும் மனைவி ஏதடா? ஆக, எந்த சித்தனாவது மனைவியுடன் இருப்பதை நீ பார்த்திருக்கிறாயா? பார்த்திருக்க முடியாது. அப்படியென்றால் அகத்தியனுக்கு மட்டும் லோப முத்திரை ஏன் என்று கேட்கலாமே.
அகத்தியன் தன் நிலை விட்டு இறங்கக் கூடாது. அவன் 4000 ஆண்டு முனிவன், அவன் பற்று பாசம் எல்லாம் தாண்டி நிற்கிறவன் என்றாலும் கூட, லோபா முத்திரையை பக்கத்தில் வைத்துக்கொண்டு அகத்தியன் பற்று பாசம் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது என்று கேட்கலாம். லோபாமுத்திரை என்பது காவிரி தான். காவிரிதான் என்னிடம் 6 மாதம் காவிரியாகவும், 6 மாதம் லோபா முத்திரையாகவும் இருக்கிறாள். 6 மாதம் தாமிர பரணி நதியாகவே இருக்கிறாள். ஆக, தாமிரபரணி நதியைத்தான் அகத்தியன் அருகிலே வைத்துக் கொண்டு இருக்கிறேனடா! இல்லை என்றால், எந்த மாநிலத்துக்கும், எந்த ஊருக்கும் கிடைக்காத சிறப்பு, தாமிரபரணிக்கு கிடைக்குமா? ஆகவே, லோபா முத்திரையை வணங்கினால், தாமிரபரணியை வணங்கியது போல் ஆகும். லோபாமுத்திரையை நான் நினைத்தால், தாமிர பரணியே உனக்கு வந்து அபிஷேகம் செய்தது போல் ஆகும். லோபா முத்திரையை வணங்கினால், காவிரி நதியே வந்து உன்னை கட்டியணைத்து, தாயாக முத்தமிட்டு, நெஞ்சில் தடவி கொடுத்து, பூ வாரி பொட்டுவைத்து, உன்னை கை தூக்கி அனைத்து செல்வதைப் போலவே எண்ணலாம். அத்தனை பாசமும், பண்பும் அகத்தியன் வைத்திருக்கிறேனடா! அகத்தியன் ஒரு பிரம்மச்சாரி, அகத்தியனுக்கு மனைவி என்பது கிடையாது. ஆனால் தனிப்பட்ட ஒரு முனிவன் ஒரு வீட்டில் இருந்துவிட்டால், அதை தோஷம் என்று சொல்வார்களே என்பதற்காகத்தான், இதையெல்லாம் மனிதர்கள் பிற்காலத்தில் ஏற்படுத்துவார்கள், அதில் அகத்தியன் பெயரும் கெட்டுவிடக் கூடாது என்பதர்க்காகத்தான், அகத்தியனே லோபாமுத்திரை என்கிற பெயரை உண்டாக்கி, அதில் காவிரியையும், தாமிர பரணியையும் கலக்கச் செய்திருக்கிறேன்.
இதுவரை ஏன் கேட்கவில்லை என்று எனக்கு புரியவில்லை. ஆனால் நான் சொல்ல வேண்டியது கடமை, ஏன் என்றால் அந்த லோபாமுத்திரையை, தாமிர பரணி நதிக்கரையில், இந்த கோடகநல்லூர் புண்ணிய ஸ்தலத்தில் அமர்ந்து உண்டாக்கிய இடம் இது. தாமிரபரணி நதிக்கரையை, லோபாமுத்திரையாக்கி என்கூட வைத்துக் கொண்டிருக்கிறேனே, மனைவி அல்ல. தாமிரபரணி நதிக்கரையில் தான் நான் இருக்கிறேன். பொதிகை மலையில் தான் நான் உலா வந்து கொண்டிருக்கிறேன்.

No comments:
Post a Comment