Wednesday, 10 January 2018

மர்மயோகம் ஒரு வாழ்வியல் - எது உண்மையான வழிபாடு

எது உண்மையான வழிபாடு...




Marma Yoogi


மிக கடினப்பட்டு மலை ஏறி திருப்பதி,அய்யப்பன்,அமர்நாத்,முக்திநாத் என்றெல்லாம் சென்று தரிசித்து வருகிறோம்.. உரிய பலனை எல்லோரும் அடைகிறார்களா என்றால் அது கேள்வி குறியாக இருக்கிறது.. சன்னதி முன் நின்று அங்கு கிடைக்கும் அளப்பரிய ஆற்றலை உள் வாங்க தெரியாமல் வெறும் கையோடு திரும்பி வருகிறோம்.. ஏதோ ஒரு மன திருப்தி.. அதுவே போதும் போதும் என நினைகின்றோம்.. சன்னதியில் என்ன நடக்கிறது.. ஒன்று வேடிக்கை மன்றொன்று கோரிக்கை... சன்னதியில் கடல்போல் நிறைந்து இருக்கும் இறை சக்தியை வாங்க தெரியாதது யார் தவறு.. வாங்க மறந்தவர்கள் தவறு.. எண்ண குறிகீடுகள்.. வேண்டுதல் என்ற பெயரில் இறைவன் இடம் ஆணைகள், கட்டளைகள் குவிகின்றன.. இறைவன் ஆற்றலுக்கு இயங்க வேண்டிய மனிதன் இறைவனையே கோரிக்கை மூலம் இயக்கத் தொடங்குகிறான். இறை ஆற்றல் உள்வாங்க தடையான அனைத்தையும் செய்கிறான்.. பேரறிவு கொண்ட கடவுளை ஏதோ அறிவு அற்றவன் போல் அவன் சன்னதியில் அவன் கோரிக்கைகளை வைத்து இறைவனுக்கே மறைமுகமாக ஆணை இடுகிறான்.. இறை பேராற்றலை
உள் வாங்க தனக்கு தானே தடை ஏற்படுத்தி கொள்கிறான்.. மற்றொன்று வேடிக்கை பார்ப்பது.. சதா இறைவனுடைய மகிமைகளை உற்று கவனிக்கும் மனிதநிலை ஒரு இழிவான செயலை செய்து கொண்டே இருக்கிறது.. தனக்கு உதவும் கடவுள் உதவுவதற்கு தகுதி உடையவனா என்ற ஆராயும் நிலை.. வியப்பூட்டும் இந்த உண்மை பலருக்கு அதிர்ச்சி தரலாம்.. உறுதி செய்ய பல உதாரணங்களை சொல்ல இங்கு இடம் இல்லை.. இதை ஏற்று கொண்டால் மட்டுமே உள்வாங்கும் திறனுக்கு செல்ல முடியும்.. எங்கும் நிறைந்த பேரற்றலை எந்த இடத்திலும் பெற முடிகின்ற போது ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு செல்லும் மனிதன் ஆன்மீகம் என்ற போர்வையில் சுற்றுலா பயணமாக வேடிக்கை பார்க்க அல்லவா செல்லுகிறான்.. சரி இருந்து விட்டு போகட்டும்.. சென்ற இடத்தில் வேடிக்கையை தவிர்த்து இறை ஆற்றலை உள் வாங்கும் பணியினை செய்யலாமே..
சரி.. தியானத்தில் எப்படி? தியானத்தில் எண்ணங்களோடு போராட்டம்... ஆழ்மனதில் ஜென்ம ஜென்மமான எண்ண பதிவுகளின் தொடர்ந்த படை எடுப்பால் தொடர் போராட்டம்.. வாழ்வு முடியும் வரை போராடி சக்தி இழந்து பெரும் தூக்கத்தில் (மரணம்) விழுகிறான்.. பின் என்னதான் வழி என ஆராய, சாட்சி நிலை சித்தர்கள் காட்ட, அதை பிடிக்கும் நிலை அறிந்து போராட்டத்தை நிறுத்தும் வகை அறியாது தடு மாறுகிறான்.. எல்லா யோகப்பயிற்சிகளும் பதஞ்சலி யோக முறையின் சீர்மை கெட இப்பொழுது போதிப்பதால் அது ஜீவ இயக்க சக்தியை பெருக்கவே செய்கிறது.. இதனால் மனிதன் தன் இயங்கும் தன்மையில் உள்வாங்கும் தன்மையை
இழந்து இறை ஆற்றலை பெறாத அவல நிலையில் உள்ளான்.. கருணை மிகுந்த இறைவன் பிறப்பிலேயே நமக்கு நாத தீட்சை கொடுத்து அனுப்பியதை மறவாமல் இருந்தால் போதும்.. அந்த நாத இணைப்பில் எண்ண அலைவரிசைக்கு அப்பால் ஒரு நிலையான ஓர் உயர் அலை வரிசையான சாட்சி நிலையில் நிறுத்தி எண்ண போராட்டத்தை அடியோடு நிறுத்தும் அற்புதத்தை காணலாம்.. பேராற்றலை பெறலாம்.. ஆனால் நமக்கு தான் நேரம் இல்லையே !! மரணத்திற்கு அழைத்து செல்லும் பாதைக்கு பல மணிநேரம் செலவிடும் நாம் எந்த வேலைக்கும் நடுவே முயலக்கூடிய நாத இணைப்பில் ஈடு பட நாம் ஏன் விரும்புவதில்லை.. உண்மை என்னவென்றால் நமக்கு வாழ பிடிக்கவில்லை என்பது தான்.. அதனால் மற்றவர்களும் வாழ விரும்புவதில்லை.. எப்படி இருக்கிறது இது.. இதுவும் மர்மமான பெரிய
உண்மையே.. அளவுக்கு அதிகமாக சொல்லி விட்டேனோ ? எதையும் ஏற்று கொள்ள தயாராக உள்ளேன்.. அவ்வளவே..

No comments:

Post a Comment