Tuesday, 2 January 2018

சேருமிடமறிந்து சேர்

தள்ளுவது ஆரைஎன்றால் மைந்தா கேளு
தன்னுரவுயில்லாத சமையத்தோரை
உள்ளுரைந்த உள்ளமதைப் பாரார் தன்னை
உத்த சிவஞ் சத்திபதம் தேடார் தன்னை
நல்லுணர்வு இல்லாத நாயகன் தன்னை
நாதாந்த வேதமதைக் காணார் தன்னை
சொல்லுணர்வாய் நாவில்வைத்துப் பேச வேண்டாம்
சோதிமய மானசிவ ஞானம் பாரே


ஆன்மீகத்தில் முன்னேற விரும்பும் ஒருவர் எத்தகைய மக்களுடன் காலத்தை வீணாக்கக் கூடாது என்று அகத்தியர் இப்பாடலில் கூறுகிறார்.  ஆத்மாவை முக்கியமாகக் கருதாத மதத்தை கடைப்பிடிப்போர், தனது உள்ளத்தைக் கவனித்து தன்னுள் ஆழாதவர்கள், சக்தி சிவபதம் என்ற உயர்ந்த நிலைகளை விரும்பாதவர், தன்னையே நாயகன் முக்கியமானவன் என்று கருதுவோர், நல்லுணர்வு இல்லாதோர், நாதாந்த வேதம் எனப்படும் உலகைக் கடந்த உணர்வை பெற விழையாதவர்கள் ஆகியோரைத் தள்ள வேண்டும் என்று அவர் கூறுகிறார்.  இம்மக்கள் தன்னையே உயர்வாக எண்ணி உலக இன்பங்களிலும் பெருமைகளிலும் காலத்தைக் கழிப்பவராவர்.  இவர்களுடன் சேர்வது ஆன்மீக முன்னேற்றத்தை தடைப்படுத்தும் என்கிறார் அகத்தியர்.  இவற்றை விடுத்து ஜோதிமயமான சிவஞானத்தைப் பெற முயற்சி செய் என்கிறார் அவர்.

No comments:

Post a Comment