காக்ஷிஎன்ற காக்ஷிகண் காக்ஷியாச்சு
கலந்து ஒன்றாய் நின்ற பொருள் சூக்ஷமாச்சு
மோக்ஷமென்ற சூக்ஷமத்தில் தானா மென்று
மோனமுடன் தானிருப்பார் போதமாகப்
பேச்சான மூச்சிறந்த வடிவே யோகம்
வளமான யோகபதி பூரணமே தானாம்
சூக்ஷமேன்ர சூக்ஷமத்தை போதமாக
சூக்ஷாதி சூட்சமுடன் இருப்பார் தானே
இப்பாடலில் அகத்தியர் சமாதியின் உச்சத்தில் நடைபெறுவதைக் கூறுகிறார். இந்த நிலையே மோக்ஷம், இதில் அந்த யோகி ஜீவனுடன் கலந்துள்ள பரமனைப் பார்க்கிறார். இந்தக் காட்சி ஆக்னையில் கிட்டுகிறது. அப்போது அந்த யோகி பேச்சற்ற மவுனத்திலும் மூச்சற்ற கும்பகத்திலும் இருக்கிறார். இது உணர்வற்ற நிலையல்ல, பூரண உணர்வு நிலை, போத நிலை. அந்த யோகி போதமாக சூட்சத்துடன் கலந்து தானும் சூட்சமாக இருக்கிறார்.
இந்த நிலை நிரந்தர நிலை இல்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மனம் இறந்திருக்கும்வரை இந்த நிலை நீடிக்கும். மனம் தனது செயல்களைத் தொடங்கியவுடன் இந்த நிலை முடிந்து அந்த யோகி தனது உடலுணர்வு நிலைக்குத் திரும்புகிறார்.
No comments:
Post a Comment