Friday 19 January 2018

ஸ்ரீ ஆயுர் தேவி தரிசனம்

ஸ்ரீ ஆயுர் தேவி தரிசனம்

போகர் :- “சற்குருவே! ஸ்ரீ ஆயுர்தேவியை முதன்முதலில் பலகோடி யுகங்களுக்கு முன் உலகிற்கு அறிமுகப்படுத்தியது யார்?”

அகஸ்தியர் :- “தற்போது கலியுக மக்கள் மிகவும் எளிமையான வழியில் எம் பாரம்பரிய வழித்தோன்றல் மூலம் ஸ்ரீ ஆயுர்தேவி தரிசனம் பெற்று விட்டனர். ஆனால், பல கோடி யுகங்களுக்கு முன் திருஅண்ணாமலையில் குறிப்பிட்ட பக்ஷங்களுக்கு, யுகங்களுக்கு அருணாசல மலையைக் கிரிவலம் வந்தவர்களுக்கே ஆயுர்தேவி தரிசனம் கிட்டும் என்பது இறை நியதியாக இருந்தது. அதுவும் ஸ்ரீ ஆயுர்தேவி தரிசனத்திற்கு முன்துவித சிரஞ்சீவிஎன்றும், ஆத்யந்த பிரபு என்றும் அழைக்கப் பெற்ற ஸ்ரீ விநாயக ஆஞ்சநேய அர்த்தநாரீஸ்வர ரூபங்கொண்ட தெய்வத்தைத் தரிசனம் செய்தல் வேண்டும். இது திரேதா யுகம் நியதி.

திருஅண்ணாமலையில் கிரிவல பாதையில் ஸ்ரீ ஆயுர்தேவி தரிசனப் பாதை என்ற முகட்டுப் பாதை உள்ளது. பிருத்வி நந்தி அருகே யானைபடு குழி என்ற முக்கோணத் தீர்த்தப் பகுதியில் குருவருளால் குறிப்பிட்ட நட்சத்திரத்தில் குறிப்பிட்ட ஹோரையில் ஸ்ரீ ஆயுர்தேவி மூலமந்திரத்தை ஜபிப்பவர்களுக்கு ஸ்ரீ துவித சிரஞ்சீவி தரிசனம் கிட்டும். கிருத, திரேதா யுகங்களில் ஸ்ரீ துவித சிரஞீவி மகா பிரபுவின் அர்த்த நாரீஸ்வர ரூபதரிசனம் கிட்டியது. இவரே ஸ்ரீ ஆயுர்தேவியின் தரிசனத்திற்கு வழிகாட்டுவார்.


கலியுகத்தில் மகான்களுக்கும், குருவருள் நிரம்ப பெற்றவர்களுக்குமே, இத்தகைய அற்புத தரிசனம் கிட்டும். ஏனையோருக்கு திருஅண்ணாமலையே சிவரூபமாக காட்சியளிப்பதால், குறிப்பிட்ட பகுதியிலிருந்து மலையைத் தரிசனம் செய்திடில் அது ஸ்ரீ தேவியின் முகவடிவத்தில் காட்சியளிக்கும். ஆனால் இதற்கும் ஸ்ரீ சற்குரு அருள் வேண்டும்.

No comments:

Post a Comment