Tuesday, 2 January 2018

அகத்தியர் குரு பூசை அழைப்பிதழ்

அன்பார்ந்த சித்த வித்தியார்த்திகளே, வணக்கம்.

நிகழும் மார்கழி மாதம் 20ஆம் தேதி, ஆங்கில நாள் ஜனவரி, 4, 2018, ஆயில்ய நட்சத்திரத்தில், ஒன்பது மணி முதல் மாலை வரை, அழகப்பனூர், பொகளுர் கிராமம், அன்னூர் டவுன் இல் அமைந்துள்ள அகத்திய சித்தர் சீவநாடி பீடத்தில், நாடியில் அகத்தியர் அய்யாவின் உத்தரவுப்படி, யாகம், அபிஷேகம், அலங்காரம், ஆரத்தி ஆகியவை நடைபெறும். வருடத்தில் ஓரே நாள் மட்டும், பக்தர்கள் தங்கள் கரங்களால் பால் அபிஷேகம் செய்ய அனுமதி உண்டு. அய்யா அவர்கள் நாடியில் வந்து, குரு பூசை விழா நடத்த உத்தரவு போட்டு உள்ளார்.

மற்ற இடத்தில் பூசை செய்வதற்கும் சீவ நாடி குடிலில் அய்யாவின் உத்தரவோடு பூசை செய்வதற்கும், நிறைய வேறுபாடு உள்ளது. இங்கே நித்தமும் அகத்தியர் நாடியில் ஒளி வடிவாக தோன்றி தமது பக்தர்களுக்கு சிறப்பாக அருள் பாலித்து கொண்டு இருக்கிறார். சீவ நாடி வாசிக்கும் இடமே, அவர் அடையாளம் சொல்லி ஸ்தாபித்த இடமாகும். சென்ற மாதம் பவுர்ணமி பூசையில் யாகத்தில் விஸ்வரூப காட்சி கொடுத்து உள்ளார்.

குரு பூசை யாகத்தில் அவரவர் கைகளால் யாகத்தில் மூலிகைகளை இடுவதற்கு அனுமதி உண்டு.

இந்த வருடம், மத்திய அரசு, அகத்தியர் குரு பூசையான ஆயில்ய நட்சத்திரத்தில் சித்தர்கள் தினமாக பொது விடுமுறை அறிவித்து உள்ளது. இது அகத்திய சித்தரின் மகிமை நாடெங்கிலும் பரவி உள்ளதை காட்டுகிறது.

எனவே அனைவரும் பொகளூருக்கு வந்திருந்து, அகத்தியர் அருளுக்கு பாத்திரமாகும்படி தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.

பத்திரிகை இத்துடன் இணைத்து உள்ளேன். அனைவரும் குடும்பத்துடன்  வருக. அருள் பெறுக

No comments:

Post a Comment