ஸ்ரீ ஆயுர்தேவியின்
வாகனம்
அன்ன
வாகனத்தை பூண்டவள் ஸ்ரீ ஆயுர்தேவி. அவள்
திருவடியில் இரண்டு சிம்மங்கள் பீடங்களாக
அமரும் பேறு பெற்றுள்ளன. திருவிடைமருதூரில்
சிவபெருமானுக்கு நந்தியாகச் சலாலகன் என்ற நந்திஸ்வரர்
அறக்கடவுள் அமர்ந்துள்ளார். பலகோடி ஆண்டுகள் தவம்
புரிந்து இத்தகைய அரிய பேற்றைச்
சலாலகன் பெற்றார் எனில் ஸ்ரீ ஆயுர்
தேவிக்கு அன்ன வாகனமாகவும், இரண்டு
சிம்ம பீடங்களாகவும் அமைந்துள்ளோர் எத்தகைய தவப்பெருநிலையை அடைந்திருக்க
வேண்டும்!!
ஸ்ரீ
ஆயுர்தேவியின் அன்னவாஹனமான சுவாரோஸிஷன் என்னும் மஹா தபஸ்வி
ஸ்ரீமன் நாராயணனை உபாசித்து மஹரிஷியானவர். அவர் ஸ்ரீ மஹா
விஷ்ணுவையே சாட்சாத் சிவபெருமானாக எண்ணித் தரிசனம் பெற
விழைந்த போது, “தேவி உபாசனை
மூலமாகவே எம்மை ஸ்ரீ சிவபெருமானாக
வரித்துத் தரிசனம் செய்ய இயலும்” என்று
ஸ்ரீ பெருமாள் அருளிடவே சுவாரோஸிஷ மஹரிஷி ஸ்ரீதேவி உபாசனையில்
திளைத்து அன்னவாகனமாக அமையும் பேறு பெற்றார்.
ஒன்பதின் தத்துவம்
ஒவ்வொரு
மனிதனின் தேகத்திலும் ஒன்பது துவாரங்கள் உள்ளன.
நாசி துவாரங்கள் வழிச் செல்லும் சுவாசத்தை
முறைப்படுத்தி, மனதை ஒருமுகப்படுத்தும் வாசிகலைத்
தத்துவத்திற்கு “பிராணாயாமம்” என்று பெயர் இதன்
விளக்கங்களைப் பலரும் அறிவர்.
நாசிகள்
தவிர ஏனைய ஏழு துவாரங்களிலும்
சுவாசம் உண்டு. இந்த ஆன்மீக
ரகசியங்களை அறிந்தவர்கள் சித்த புருஷர்களே! கர்ணாயாமம்,
யோனியாமம், குக்குடயாமம் என்று மூன்று வகை
யாம நியம முறைகளினால் ஏனைய
ஏழு துவார வாசிகலைகளை முறைப்படுத்தினால்,
சித்தர்களைப் போல் என்றும் சிவ
சித்தத்தில் திளைக்கும் பேற்றைப் பெறலாம்.
மனித எண்ணங்களின்
மூலம்
இந்த
ஒன்பது துவாரங்களின் மூலம் சக்திகளும், எண்ணங்களும்
உள்வெளிச் செல்கின்றன. இதனால் நொடிக்கு நொடி
ஒவ்வொரு மனிதனின் ஆன்மீக நிலை மாறி
கொண்டேயிருக்கிறது. ஆயிரக்கணக்கான எண்ணங்கள், சக்திகளின் உள்வெளிப் போக்குவரவால் மனிதனின் மனம் அமைதியின்றித் தவிக்கிறது.
அவன் மனோநிலையும் மாறுகிறது.
பத்மாசனத்தில்
ஆசன, யோனி வாயில்களும், பிராணாயாமத்தால்
நாசிகள், கண்களும், மௌனத்தால் வாயும், ஒங்காரத்தால் செவிகளும்
சாந்தமடைகின்றன. நவ துவார வாசிகளை
முறைப்படுத்துதலே உன்னத தியானமாகும். ‘இதற்கு
ஸர்வ ஸித்த யோகம்’, அல்லது ஸர்வ ஸித்த
சரீர தியானம்’ என்று பெயர்.
உடலே திருகோயில்
நவ
துவார வாசிகளுக்கேற்ப மனிதனுடைய தேகக் கர்ம பரிபாலனம்
நடைபெறுகின்றது. இதற்கேற்ப இன்ப துன்பங்கள் அமைகின்றன.
எனவேதான் அனைத்து ஜீவன்களின் இன்ப
துன்ப நிலைகளை ஒன்பதாகப் பகுத்துள்ளனர்.
மனிதனுடைய தேகத்திலும் ஒன்பது நவக்கிரகங்கள் ஆட்சி
கொண்டுள்ளன. நவகிரக தேக பரிபாலன
விதியும் உண்டு. இருதய கமலத்தில்
ஆத்மா, ஸர்வேஸ்வரனாக வீற்றிருக்க, தேகமே இறைவன் குடி
கொண்ட கோயில். உடலின் ஒன்பது
பகுதிகளில் நவக்கிரகங்கள் ஆட்சி செலுத்துகின்றன. ஏனைய
தெய்வங்களின் அருளாட்சி அமையும் தேக அம்சங்களும்
உண்டு. நவக்கிரக வழிபாடு பொதுவாகக் கோயில்களில்தான்
அமைந்துள்ளது. ஆனால், ஸ்ரீ ஆயுர்தேவி
இல்லந்தோறும் இருக்க வேண்டிய அகிலாண்டேஸ்வரி
ஆதலின்,
ஸ்ரீ ஆயுர்
தேவி பூஜை,
சிவாம்சம்
பரிபூரணமாக நிறைந்திருப்பவள் ஆதலின் – பரம்பொருள் வழிபாட்டையும், நவக்கிரக தத்துவம் விளக்கும் ஒன்பது வகையான இகபர
சுகங்களைத் தருபவளாதலால் – நவக்கிரக வழிபாட்டையும், சகல ஐஸ்வர்யங்களையும் தந்து
காத்து ரட்சிப்பதால் – ஸ்ரீ லக்ஷ்மி நாராயண
வழிபாட்டையும், அதி அற்புத சித்த
புருஷர்களும், மகரிஷிகளும் அருட்பெரும் தவத்தால் அருளியுள்ள பரிகார முறைகளால் ஒன்பது
வகையான துன்பங்கள் நிவர்த்திக்கின்ற முறையையும் தந்து சற்குருமார்களின் வழிபாட்டையும்
ஒருங்கே தருவதால் ஸ்ரீ ஆயுர்தேவி வழிபாடு, ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி தேவியின்
– ஸர்வ தெய்வ சம்பூர்ண வழிபாடாக
அமைகிறது.
அன்னவாஹனம்
போகர்
:- “சற்குரு தேவா! ஸ்ரீ ஆயுர்தேவி
அன்ன வாஹனத்தைத் தேர்ந்தெடுக்க காரணம் யாதோ?”
அகத்தியர்
:- பறவையினங்களில் முதன் முதலில் தோன்றியது
அன்னமே! சிருஷ்டியின் போது ஒவ்வொரு லோகத்திலும்,
ஒவ்வொரு பறவையை ஆதிமூலப் பட்சியாக
இறைவன் படைகின்றான். பட்சி சாஸ்திரத்தில் இடம்
பெறும் ஒவ்வொரு பட்சியும் வெவ்வேறு
யுகங்களில் முதன் முதலாகப் படைக்கப்பட்ட
பட்சியேயாகும். இவ்வாறாக தேவிலோகத்தில் ஆதிபட்சியாகிய அன்னப் பறவை ஒருமுறை
பரப்பத அரங்கநாதர் பள்ளி கொண்டுள்ள பாற்கடலிலும்
கூட பாலையும் நீரையும் இரண்டாக பிரித்ததாம்.
ஸ்ரீ
ரங்கநாதனின் திருச்சன்னிதியில் கூடக் கலப்படமா?” என்று
தேவர்கள் அதிசயிக்க ‘அனைத்து லோகங்களிலும் புனிதமான
க்ஷீரத்தைக் (பால்) கொண்ட பாற்கடலிலும்
நீர் கலந்துள்ளதா? இந்த நீர் எவ்வாறு
உட்புகுந்தது’ என அனைவரும் வியந்து நிற்க, ஸ்ரீ
பெருமாள் விவரித்தார்.
“என்னுடைய பிரார்த்தனைகளுக்கேற்ப சிவபெருமான் என்னுடைய திருமார்பில் திரு நடனம் ஆடினார்.
இதனால் என் எடை கூடியது.”
அதைத் தாங்க இயலாது ஆதிசேஷன்
பெருமூச்சு விட்டு, “பிரபோ! திடீரென்று தங்கள்
திருமேனியின் எடை பெருகக் காரணமென்ன?”
என்று வினவ, அடியேன் ஆதிசேஷனுக்கு
இறைவன் சிவபெருமான் திருநடனம் ஆடிய காட்சியை விவரித்தேன்.
”சாட்சாத் சதாசிவ பரம்பொருளையும், நாராயண
மூர்த்தியையும் ஒருசேரத் தாங்கும் பாக்கியம் பெற யான் என்ன
புண்ணியம் செய்தேனோ!” என்று புளகாங்கிதம் அடைந்து
ஆதிசேஷன் ஆனந்த கன்னீர் வடித்தனன்.
அக்கண்ணீர்த் துளிகள் பாற்கடலில் கலந்தன.
அதனையே ஆதிமூல அன்னபட்சி பிரித்து
தந்தது. இத்தகைய தெய்வ திருவிளையாடல்
புரிந்த அன்னப் பறவையே ஸ்ரீ
ஆயுர்தேவியுன் வாகனமாக அமைந்துள்ளது’
சிம்ம பீடங்கள்
புலிப்பாணி :- “ஆஹா!
கேட்பற்கே இனிமையாக உள்ளதே! குருவே! அடுத்து
சிம்ம பீடங்கள்…
அகத்தியர்
:- “சொல்கிறேன் புலிப்பாணி! சிம்ம பீடங்களாய் இருக்கும்
இவர்கள் யுகதர்ம மனுக்களாவர். பலகோடி
யுகங்களில் தர்மத்தைப் பரிபாலனம் செய்து வந்த மனுப்ரஜாதிபதிகள்,
கர்த்தம பிரஜாபதியின் சிஷ்யர்கள். அதர்மத்தை எதிர்த்து கர்ஜித்தவர்கள். பிராணிகளின் கர்ம பரிபாலனங்களை நிர்ணயிக்கும்
பித்ருலோக ஆதித்யர்களின் நியமனத்தையே மேற்கொண்டுள்ள அற்புதமான மனு அவதார புருஷர்கள்
ஒவ்வொரு லக்கினத்தில் பிறக்கும் ஆண், பெண் ஜீவன்களைப்
பரிபாலிப்பதற்கென்றே யுகாந்தர மனு தேவர்கள் உள்ளனர்.
சிம்ம ராசிக்கு அதிபதியான சூரிய நாராயணமூர்த்தியின் அருட்
கடாட்சத்தைப் பெற்றவர்களே இந்த சிம்ம பீடங்கள்.
அனைத்து லோகங்களிலும் சிம்ம லக்ன ஜீவன்களுக்கு
அதிபதி இவர்களே!”
போகர்
:- “குருவே! அப்படியானால் ஸ்ரீ ஆயுர்தேவி தரிசனத்தின்
மூலம் நமஸ்காரயோகமும், அனைத்து ஆசன முறைகளும்
சித்திக்குமல்லவா?”
அகத்தியர்
:- “நிச்சயமாக! யோகம் பயில்வோருக்கு குறிப்பாக
ராஜயோகிகளுக்கு ஸ்ரீ ஆயுர்தேவி தியானம
சிறந்த, விரைவான பலன்களை அளிக்கக்
கூடியதாகும். அது மட்டுமல்லாது, அன்ன
வாகன தரிசனமானது (அன்னம் பால் நீர்
இரண்டையும் தனித்தனியே பிரிப்பது போல்) பகல் – இரவு
பிரித்து கானும் தீர்க்க தரிசனத்தையும்
அபாரமான ஜோதிட கிரக பரிபாலன
அறிவையும் தரவல்லதாகும். ஜோதிடர்களுக்கு ஸ்ரீ ஆயுர்தேவி பூஜை
முக்கியமானதாகும்.”
No comments:
Post a Comment