Wednesday, 31 January 2018

கிரியா யோக சாதகரின் நித்திய சுத்தி முறைகள்

☘சிவ சித்தாந்தம்☘



கிரியா யோக சாதகரின் நித்திய சுத்தி முறைகள்

 சாதாரண மனிதனாக வாழ்ந்தாலும் சரி, யோகியாக வாழ்ந்தாலும் சரி உடல் ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியமானதாகும்.  யோகத்திற்கும், போகத்திற்கும் உடல் பிரதானமாகும். எனவே உடலை மிகவும் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பது மிகவும் அவசியமானது என்பதை நினைவில் கொள். மனதின் கழிவுகளை யோக சாதனையின் மூலம் நீக்கும் முயற்சியில் ஈடுபடும் யோகிகளுக்கு அந்த சாதனைக்கு ஒத்துழைக்கும்படியான உடலைப் பெறுவதும் அவசியமாகிறது. எனவே உடலின் கழிவுகளை அன்றாடம் நீக்குவதன் மூலமாகத்தான் யோக சாதனையினை எவ்விதத் தடங்கலும் இல்லாமல் சிறப்பாகச் செயல்பட முடியும்.
அவ்வாறு தினமும் உடலின் கழிவுகளை நீக்கி தூய்மையான உடலுடன் யோக சாதனையினை செய்யும் பொருட்டு சில செய்முறைப் பயிற்சிகளை நான் உனக்குக் கூறுகிறேன். இவ்வாறு தினமும் உடலின் கழிவுகளை நீக்கும் முறைக்கு நித்திய சுத்தி என்று பெயர்.  இதை 5 விதமாகப் பிரிக்கலாம். அவை 1. தந்த சுத்தி 2. கப சுத்தி 3. நேத்திர சுத்தி 4. குடல் சுத்தி       5. உடல் சுத்தி என்பனவாகும். உடலின் கழிவுகள் வெளியேற்றப் பட்டுக் கொண்டிருந்தாலும் வெளியேற்றப்படாத கழிவுகள் தங்கும் இடங்களாக வாய், தொண்டையின் மேல்பகுதி, கண், குடல் போன்ற இடங்கள் உள்ளன. இங்கு தங்கும் கழிவுகளே மனித உடலின் ஆரோக்கியத்தைக் கெடுத்து பல நோய்களை உருவாக்கக் காரணமாக அமைகின்றன என்பதை நினைவில் கொள்.
எனவே இந்தக் கழிவுகளை முறைப்படி நீக்குவது மிகவும் அவசியமாகும்.  காயம் என்னும் உடலைப் பற்பல அபூர்வ மூலிகைகளாலும், பா~hண மருந்துகளாலும், மிகவும் உயர்வான பல கற்ப ஒள~தங்களாலும் அழியாத தூய உடலாக மாற்றும் இந்த நித்திய சுத்தி முறைகள் மிகவும் அவசியமாகும்.  இவ்வாறு பல ஆண்டுகள் மிகவும் கடுமையான பல கட்டுப்பாடுகளுடன் நித்திய சுத்தி முறைகளையும், ஒள~த முறைகளையும் கடைப்பிடித்து உடலை சித்தி செய்து கொண்ட பின் இந்த முறைகள் தேவையில்லை.  எனவே அந்நிலையை அடைந்த சித்;தபுரு~ர்களின் நடவடிக்கைகளையும் அவர்களின் வாழ்க்கை முறைகளையும் கண்டு இவர்களெல்லாம் தினமும் இந்த முறைகளை கடைப்பிடிப்பதில்லையே என்ற குழப்பம் உன் மனதில் எழக்கூடாது.  ஏனெனில் அவர்கள் முழுவதும் தூய்மை அடைந்தவர்கள்.
எனவே அந்நிலையினை நீ அடையும் வரையில் கண்டிப்பாக இந்த நித்திய சுத்தி முறைகளை நீ கடைப்பிடித்தே ஆக வேண்டும்.  இனி நித்திய சுத்தி முறைகளை நீ கடைப்பிடிக்கும் போது கையாள வேண்டிய பொருள்களைப்  பற்றித் தெளிவாகக் கூறுகின்றேன்.  முதலில் தந்த சுத்தி என்னும் பல்லினைத் தூய்மை செய்யும் முறையையும் அதற்குரிய பொருள்களையும் கூறுகின்றேன்.  இந்த முறையினை யோகிகள் அல்லாதவர்களும் கடைப்பிடிப்பதால் நலமே கிட்டும்.
தந்த சுத்தி :
 வேப்பம்பட்டை, கருவேலம்பட்டை, நாயுருவி வேர் பட்டை, கடுக்காய்த் தோல், கிராம்பு ஆகிய ஐந்து பொருள்களையும் சம அளவாக எடுத்து வந்து நன்கு வெயிலில் உலர்த்தி இடித்துச் சலித்து சூரணமாகச் செய்து கொள்ளவும்.  இந்த சூரணத்திற்கு நான்கில் ஒரு பங்கு இந்துப்பைப் பொடி செய்து கலந்து வைக்கவும்.  இதுவே தந்தாதி சூரணம் எனப்படும்.  தினமும் அதிகாலையில் இந்தச் சூரணத்தைக் கொண்டு பற்களை நன்கு அழுத்தித் தேய்த்துத் துலக்குவதன் மூலமாக பற்களில் உள்ள கறைகள், கிருமிகள் நீங்கும்.  பற்களில் வசீகரம் உண்டாகும்.  முகவசீகரம் ஏற்படும்.  அத்துடன் பற்களின் மேல் உள்ள ஈறுகள் நன்கு இறுகும்.
தந்த வாய்வு மற்றும் பற்களில் ஏற்படும் இரத்தக்கசிவு முதலியவைகள் நீங்குவதுடன் வாயில் உண்டாகும் வழுவழுப்புத் தன்மையும் மாறும்.  பயிற்சியின் போது அதிக நேரம் அப்பியாசம் செய்வதால் வாயுவானது கபாலத்தை நோக்கி வரும்போது தந்தங்களின் மேலுள்ள ஈறுகளின் உட்புறத்தில் தங்க நேரிடும்.  அவ்வாறு நடக்கும்போது ஈறுகளில் வீக்கமும் உண்டாகும்.  இரத்தக்கசிவு கூட உண்டாகும்.  இதனால் ஈறுகள் விரைவில் கடினத்தன்மையை இழந்து பற்கள் உதிரும்.  எனவே தந்த சுத்தியானது மிகவும் முக்கியமானதாகும். இனி  அடுத்ததாக மிகவும் எளிமையான அதே சமயம் மிகவும் அரிய பலனைக் கொடுக்கும் நேத்திரசுத்தி என்னும் கண்களின் கழிவுகளையும், கண்களின் அழற்சியையும் நீக்கும் அற்புத முறையைக் கூறுகின்றேன். இதை பயிற்சி செய்யும்போது கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.
நேத்திர சுத்தி:
 முகம் முழுவதும் மூழ்கும் அளவிலான ஒரு மண்பாண்டத்தை  வாய் அகன்றதாக எடுத்துக் கொள்.  இரவு படுக்கைக்குச் செல்லும்முன் அந்தப் பாண்டம் முழுவதும் நல்ல சுத்தமான நீரை ஊற்றி மூடி வைத்துவிடு. குhலையில் எழுந்த தந்நத சுத்தி செய்வதற்கு முன்பாக அந்த நீரில் 5 பன்னீர்ப்பூக்கள் அல்லது 5 நந்தியாவட்டம் பூக்களைப் போட்டு வைக்க வேண்டும். தந்த சுத்தி செய்து முடித்தபின்பு அந்த மண்பாண்டத்தில் உள்ள குளிர்ந்த நீhலி முகத்தை நன்கு அமிழ்த்திக் கொண்டு கண்களை நன்கு விரியத் திறந்து கண்விழியினை வலமிருந்து இடமாக 5 முறையும், இடமிருந்து வலமாக 5 முறையும் சுழற்றி பின் 5 முறை இமைகளை மூடி மூடித் திறந்தும் அதன்பின் சற்றுநேரம் கண்களை அசைக்காமல் திறந்தபடியும் வைத்திருக்க வேண்டும். இவ்;வாறு செய்யும்போது சுவாசத்தை நிறுத்த முடியவில்லை என்றால் ஒவ்வொரு முறையும் முகத்தை வெளியில் எடுத்தும் செய்யலாம்.  செய்வதற்கு எளிதாகத் தோன்றினாலும் இதுஈ மிகவும் அரிய பயிற்சியாகும். இவ்வாறு செய்வதால் கண்களில் உண்டாகும் அழுக்குகள், கண்களில் ஏற்படும் எரிச்சல், கண்களின் அழற்சி முதலியவை நீங்கி கண்களின்  உட்புறம் உள்ள மிகவும் நுண்ணிய நரம்புகள் குளிர்ச்சியடைந்து கண்கள் மிகவும் பிரகாசமடைவதுடன் குளிர்ந்து காணப்படும்.
 இதைச் செய்வதால் தீவிரமாக அப்பியாசம் செய்யும் போது கண்களில் ஏற்படும் அதிக எரிச்சல், இமைகள் துடித்தல், கண் இமை ஓரங்களில் ஏற்படும் அதிக வலி ஆகிய உபாதைகள் நீங்கும். மேலும் அன்றாடம் கண்களில் ஏற்படும் கழிவுகள் அகற்றப்படுவதால் கண் மறைவு நீங்கும். இந்த முறையில் பன்னீர் மற்றும் நந்தியாவட்டம் பூக்கள் கிடைக்காவிட்டால் வெறும் தூய்மையான நீரை மட்டும் பயன்படுத்தலாம். இந்த நித்திய சுத்தி முறையில் கூறப்படும்  நேத்திர சுத்தி முறையினை சாதாரணமாக சம்சார வாழ்வில் ஈடுபட்டிருப்பவர்களும், குழந்தைகள் முதல் முதியோர்கள் வரையில் யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் யோக சாதனையை மேற்கொள்பவர்கள் கண்டிப்பான முறையில் இதைச் செய்தாக வேண்டும். கிரியா எனும் யோக விஞ்ஞானத்தின் பயிற்சிகளை மேற்கொள்ளும் நீ இந்த நித்திய சுத்தி முறைகளை தெளிவாக அறிந்து பின்பற்ற வேண்டும் என்பதற்காகவே எவ்வித மறைப்பும் இன்றி வெளிப்படையாகக் கூறுகிறேன். கவனமுடன் கேட்டு முறையாகக் கடைப்பிடிப்பாயாக.
 இனி அடுத்ததாக பல பெரிய யோகிகள் கூட அறிந்திராத அதே சமயம் மிகவும் கட்டாயமாகச் செய்ய வேண்டிய கப சுத்தி முறையானது கூறப்படுகிறது. இந்த முறையினை நம்முடைய முன்னோர்களான கிரியா யோக மஹாகுருமார்கள் அனைவரும் பின்பற்றியது மட்டுமின்றி வலியுறுத்தியும் கூறியுள்ளனர்.  ஆதை உனக்குக் கூறுகின்றேன்.

கப சுத்தி:
 மூலிகை கைகளில் பல இருந்தாலும் யோக நிலைக்கு உதவும் ஈர்ப்பு சக்தியுள்ள மூலிகைகள் இவ்வுலகில் உண்டு. இந்த விதமான மூலிகைகளில் தாதுக்களின் தன்மை அதிகமாக இருப்பதுடன் ஐம்பூத அணுவின் ஆற்றலும் அதிக அளவில் இருக்கும். அவ்வாறான மூலிகைகளையே காயகற்ப மூலிகைகள் என்று கூறுவர். இவ்வாறான காயகற்ப மூலிகைகளுள் முதன்மையான இடத்தைப் பெறுவது கரிசலாங்கண்ணி என்னும் தெய்வீக மூலிகையாகும். இந்த மூலிகையைப் பயன்படுத்தாத யோகிகளே இல்;லை என்று கூறலாம். அவ்வளவு அரிய மூலிகையான கரிசலாங்கண்ணி மூலிகையே கிரியா யோக அப்பியாசத்தின் போது தைல முறைக்கும் பயன்படுத்தப்படுகிறது. இங்கு கூறப்படும் கப சுத்தி முறைக்கும் இந்த மூலிகையே பயன்படுத்தப்படுகிறது.
வெள்ளைப் பூ பூக்கும் கரிசலாங்கண்ணி மூலிகையை வேண்டிய அளவு பிடுங்கி வந்து நன்கு தண்ணீரில் கழுவி உரலில் போட்டு இடித்து சாறுபிழிந்து வைத்துக்கொள். அந்தச் சாற்றின் அளவிற்கு சமஅளவு சுத்தமான பசு நெய்யினை எடுத்துக் கொண்டு இரண்டையும் ஒன்றாகக் கலந்து ஒரு அடி கனத்த சட்டியில் ஊற்றி அடுப்பில் வைத்து அடிப்பிடிக்காமல் பதமாகக் காய்ச்சவும். நன்கு காய்ந்து நெய் சிவந்து புகையும் நிலையில் படிகாரம் என்னும் சீனிக்காரத்தைப் பொடி செய்து சிறிதணவு அதில்போட்டு சற்றுநேரம் கொதிக்கவிட்டு பின்பு இறக்கி வடிகட்டி ஒரு பாத்திரத்தில் ஊற்றி அந்தப் பாண்டத்தின் வாய்க்கு துணியால் வேடுகட்டி வைத்துக் கொள்ளவும். இது அமிர்தத்திற்கு ஒப்பானதாகும்.
 தினமும் காலையில் தந்த சுத்தியை முடித்த பின்பு இந்த கரிசாலை நெய்யை வலதுகைப் பெருவிரலில் தொட்டு வாயினுள் உள்நாக்கின் பின்புறமுள்ள மேல்நோக்கி சுவாசமானது செல்லும் துவாரத்தின் வாயில் நன்கு தடவி விடவும். பின்பு யாரிடமும் பேசாமல் எதுவும் உண்ணாமல் (48 நிமிடங்கள்) இரண்டு நாழிகை நேரம் அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்து இருக்கவும். இவ்வாறு நெய்யினை மூன்று முறை நெய்யினைத் தடவிக் கொண்டு இரண்டு நாழிகை இருக்கும்போது மனிதனின் சுவாசத்தை தடை செய்து மரணத்தை ஏற்படுத்தும் கபம் என்னும் கோழை என்றும் கூறப்படும் ஊர்த்துவ நாடி எனும் மேல் முகமான மிக மெல்லிய, நுண்ணிய ஜீவனாகிய உயிர் எனும் ஜீவ அணுவின் சுழற்சிக்கு சுவாசமானது செல்லும் பாதையில் அடைத்துக் கொண்டிருக்கும் கோழையானது இந்த மூலிகை நெய்யின் ஆற்றலால் மிக மெதுவாகக் கரைந்து கரைந்து வாய்க்குள் வர ஆரம்பிக்கும். இதை வெளியில் துப்பிவிட வேண்டும். இந்தக் கோழையானது நச்சுத் தன்மை உடையது.
 மனிதன் பிறக்கும்போது உருவான இந்தக் கபமானது இறக்கும் வரையில் தானாக வருவதில்லை அதனால் தான் நாசியின் மேல்புறம் வழியாக நெற்றியின் உட்புறத்தில் உள்ள சுவாச நரம்புகளின் வழியாக சுவாசமானது பிரிந்து ஜீவ அணுவிற்கு சுற்றிக் கொண்டு செல்கிறது. இவ்வாறின்றி சுவாசமானது ஒரே நேர்க்கோட்டில் உடம்பின் மையப்பகுதியில் மேல்நோக்கி இயங்க வேண்டும். இதற்காக சுவாசத்தை இயற்கைக்கு மாறாக மேல்நோக்கி செலுத்தக் கூடாது. அவ்வாறு சிலர் செலுத்தும் போது அந்த சுவாசத்தின் அதிய வெப்பத்தால் இந்த ஊர்த்துவ நாடியிலுள்ள கோழையானது சிறிது இளகி வரும்.  அவ்வாறு சிலர் செலுத்தும் போது அந்த சுவாசத்தின் அதிக வெப்பத்தால் இந்த ஊர்த்துவ நாடியிலுள்ள கோழையானது சிறிது இளகி வரும். அவ்வாறு வருவதை சிலர் அமிர்தம் என்று கூறிக்கொண்டு உட்கொண்டு விடுவார்கள்.
 மனித உடலின் கழிவாகிய கபம் என்னும் கோழையானது எங்காவது அமிர்தமாகுமோ? இவ்வாறு வாசியோகம்; என்னும் பயற்சியைச் செய்யும் சில யோகிகள் தெரியாமல் கோழையை உட்கொள்வதால் உடலில் பல நோய்கள் ஏற்படுவதுடன் வாய்நாற்றம், வயிற்றுவலி போன்ற நோய்களும் உண்டாகும். எனவே இந்த உண்மையான கபசுத்தி முறையினை முறையாக தவறின்றி தினமும் பயிற்சி காலத்தில் நீ கடைப்பிடித்து வரும்போது ஊர்த்துவ நாடியானது சிறிது சிறிதாக அடைப்பு நீங்கி சுத்தமாகும். இவ்வாறு சுத்தமாவதால் சுவாசமானது தானாக மேல்நோக்கும். இதனால் ஜீவ அணுவின் சுழற்சி அதிகமாகி வான் அமிர்தம் எனும் அணுமின் காந்த ஜீவ சக்தியை அதிகமாக உள் ஈர்க்கும். இதுவே உண்மையான வாசியோகமாகும். எனவே இந்த கபசுத்தி முறையினைத் தவறாமல் தினமும் செய்வாயாக.
குடல் சுத்தி:
 யோகப் பயிற்சியாயினும் சரி, சாதாரண வாழ்க்கை யாயினும் சரி வயிறு சுத்தமாக இருப்பது அவசியம்.  வயிற்றில் உள்ள சீரண மண்டலங்களான குடல்களை சுத்தம் செய்யும் முறைக்கு குடல்சுத்தி என்றுபெயர், இது மிகவும் அவசியமானதாகும். குடல் சுத்தமாகி அன்றாடம் உள்ள கழிவுகளை நீக்குவதன் மூலமாக யோக சாதனை சித்தியானது மட்டுமல்லாமல் பல நோய்களும் நீங்கும். இவ்வாறான குடல் சுத்தி முறையினைக் கூறுகின்றேன். இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக சுத்தமான தண்ணீர் 2 படி எடுத்து ஒரு சுத்தமான பாத்திரத்தில் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும். தண்ணீர் நன்கு கொதித்தவுடன் இறக்கி வைத்து அதில் சிறிதளவு சீரகத்தைப் போட்டு நன்கு மூடி வைத்துவிட வேண்டும்.
 அதிகாலையில் எழுந்து மூடியைத் திறந்து பார்க்க அந்தத் தண்ணீர் மஞ்சள் நிறத்தில் காணப்படும். இந்த நீரை ஒரு வெள்ளைத் துணியில் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். காலையில் தந்த சுத்தி செய்தவுடன் இந்த நீரை சிறிது சிறிதாக உட்கொண்டு வயிற்றை எக்கி மறுபடியும் விட்டு உள்புறம் எக்கி மறுபடியும் விடவும். இவ்வாறு 8 முறை செய், இவ்வாறு செய்வதால் வயிற்றிலுள்ள மலங்கள் அலசப்பட்டு மலம் கழிக்கும் உணர்வு உண்டாகும். மலம் கழித்துவிட்டு வந்து மறுபடியும் தண்ணீர் அருந்திவிட்டு இவ்வாறு செய். மறுபடியும் உள்ளே தங்கியுள்ள மலங்கள் வெளியேறும். இவ்;வாறு 4 அல்லது 5 முறைகள் செய்யவும். ஆரம்பத்தில் சற்றுக் கடினமாகவும் சலிப்பாகவும் இருந்தாலும் தொடர்ந்து பயிற்சி செய்வதன் மூலமாக வியத்தகு மாற்றங்கள் உண்டாகும்.
 இதனால் பசியின்மை, வயிற்றுவலி, மலச்சிக்கல், அதனால் உருவாகும் தலைவலி, தோல் நோய்கள், யோக சாதனையால் வயிற்றில் உண்டாகும் அதி உ~;ணம், எரிச்சல், வயிற்றில் வாயு சுழற்சியால் ஏற்படும் உபாதைகள் நீங்கும். உடல் பளபளப்பும் குளிர்ச்சியும் உண்டாகும். மிகவும் அபூர்வமான இந்த முறையினைப் பின்பற்றும் சாதாரணமாக யோக சாதனைகள் செய்யாத மனிதன் கூட 100 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்வான். இந்த முறையினை முறையாகச் செய்யாமல் சிலர்  காலையில் எழுந்தவுடன் கொதிக்க வைக்காத நீரை அருந்துவார்கள். சிலர் அன்னக்கஞ்சியை மோர் சேர்த்து உட்கொள்வார்கள். இதனால் உடலில் உ~;ணம் குறைந்தாலும் உடலில் கபமானது அதிகரிக்கும்.
 இதனால் தலையில் நீரேற்றம், தலைக்கனம், அதிக வியர்வை, சீதளநோய்கள், மூட்டுவலி, பசிமந்தம் ஆகிய நோய்கள் உண்டாகும். எனவே நான் மேலே கூறியுள்ள முறைப்படி செய்வதுதான் உண்மையான குடல் சுத்தி முறையாகும். தந்த சுத்தி செய்தவுடன் நேத்திர சுத்தி செய்து பின்பு குடல் சுத்தி செய். அதன்பின்பு கப சுத்தி செய்வது நன்று. ஏனெனில் மல உபாதைகள் இல்லாமல் இருக்கலாம். எனவே குடல் சுத்தி முறையினை கிரியா யோக சாதனை செய்பவர்கள் கண்டிப்பான முறையில் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை நினைவில் கொண்டு முறையாகச் செய். ஏனெனில் யோக சாதனையை மட்டும் போதித்து விட்டு அதற்கு ஏற்ப உடலின் தன்மைகளை மாற்றியமைத்துக் கொள்ளும் வழியினைக்  கூறாமல், கூறத்தெரியாமல் பலர் விட்டுவிடுவதால் தான் அதை அப்பியாசம் செய்பவர்கள் எவ்வளவுதான் கடினமாகவும், விடாமலும் பயிற்சி செய்தாலும் உயர்நிலையினை அடையாமல் அடைய முடியாமல் ஏமாந்து விடுகிறார்கள்.
 மேலும் பயிற்சியின் விளைவால் உடலில் ஏற்படும் அதிக உ~;ணம், வாயுவின் சுழற்சி ஆகியவைகளைத் தாங்க முடியாமல் அவர்கள் பல உபாதைகளுக்கும் ஆளாகிறார்கள். எனவேதான் நான் உனக்கு நித்திய சுத்தி முறைகளைத் தெளிவாகக் கூறினேன். இனி உடல் சுத்தி முறையைக் கூறுகின்றேன். உடலில் உள்ள கழிவுகள் ஒவ்வொரு உரோமக் கால்கள் வழியாகவும் வெளியேறும். அவ்வாறு வெளியேறும் கழிவுகளை அன்றாடம் தூய்மையாக நீக்குவது மிகவும் அவசியமானதாகும். இவ்விடத்தில் உன் மனதில் ஒரு சந்தேகம் எழலாம். பல பெரும் யோகிகள் பல ஆண்டுகள் குளிக்காமல் இருக்கிறார்களே என்று, உண்மைதான், அவர்கள் தங்கள் உடலை வெகுகாலங்;கள் அழியாமல் பாதுகாக்கும் பொருட்டு காயசித்தி செய்து கொண்டவர்களாவார்கள்.
 ஆவ்வாறு காயசித்தி பெறுவதற்காக பல உயர்வான தெய்வீக சக்தியுள்ள மூலிகைகளையும், பா~hணங்களையும், உலோகங்களையும் இன்னும் உயர்வான பல தாதுப் பொருட்களை யெல்லாம் பல வேதியல் மாற்றங்களுக்கு உட்படுத்தி மிகவும் அபூர்வமான கல்ப ஒள~தங்களைச் செய்து அதை மிகவும் கடுமையான உணவுக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து உட்கொண்டு உடலளவில் மிகவும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் வாழ்ந்து உடலை சித்தி செய்து கொண்டவர்கள் ஆவார்கள்.
 இவ்வாறான காயசித்தி முறையின் அபூர்வமான ஆற்றலால் தான் அவ்வாறான மாபெரும் யோகிகளின் மலம், சிறுநீர், வியர்வை, எச்சில், உடல் அழுக்குகள் போன்றவைகள் கூட அவர்கள் உட்கொண்ட பல அரிய கல்ப ஒள~தங்களின் சக்தியைப் பெற்றுள்ளதால் அவைகள் பட்ட உலோகங்கள் எல்லாம் களிம்புகள் நீங்கி அவர்களின் உடலைப் போலவே தங்கமாகவே மாறுகின்றன. இவ்வாறான நிலையை அடைந்த யோகிகளைத் தவிர ஆரம்ப நிலையில் காயசித்தியினைக் கடைப்பிடிக்கும் முன்பாக அடிப்படையான யோக சாதனைகளைச் செய்துவரும் யோகியானவர் கண்டிப்பான முறையில் கீழ்க்காணும் முறைப்படி யோகியருக்கு உண்டான உடல் சுத்தியினைச் செய்தாக வேண்டும். இனி மிகவும் அருமையான உடல் சுத்தி முறையினைக் கூறுகின்றேன்.
உடல் சுத்தி:
 உடல் சித்தி முறைக்குத் தேவையான பொருள்களைக் கூறுகின்றேன். பூலாங்கிழங்கு, கஸ்தூரி மஞ்சள், வங்காளப் பச்சை, வசம்பு ஆகிய 4 பொருள்களையும் சம அளவாக எடுத்துக் கொள்ளவும். இந்த நான்கு பொருள்களின் மொத்த எடைக்கு 10 பங்கு குட்டி விளா இலையையும் அதே அளவு சீயக்காய் காயையும் எடுத்துக் கொள்ளவும். இந்தப் பொருள்கள் அனைத்தையும் வெயிலில் நன்கு உலர்த்தவும். பின்பு நன்கு இடித்துச் சலித்து சூரணமாகச் செய்து கொள்ளவும் (மி~pனிலும் அரைக்கலாம்). காலையில் எழுந்தவுடன் இந்த சூரணத்தில் சிறிதளவு எடு;த்து ஒரு கிண்ணத்தில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து வைக்கவும். தந்த சுத்தி, நேத்திர சுத்தி, குடல் சுத்தி, கப சுத்தி ஆகிய நான்கையும் முடித்தவுடன் இளம் சுடுநீரில் இந்தப் பொடியைத் தேய்த்துக் குளிக்கவும். இதனால் உன் உடலின் மயிர்க்கால்களில் தங்கியுள்ள அழுக்குகள் வெளியேறுவதுடன் உடலில் ஏற்படும் வியர்வை நாற்றம், கற்றாழை நாற்றம், உடல் இடுக்குகளின் உப்புப் படிதல், தோலின் வறட்சி, தோல் நோய்கள் நீக்குவதுடன் தோல் பளபளப்போடு வாசனையும் இருக்கும்.
 இவ்வாறு முறையாக நித்ய சுத்தியை ஒரு யோகியானவர் அவருடைய யோக சாதனை செய்துவரும் காலங்களில் கண்டிப்பாகப் பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் எவ்விதமான உடல் உபாதைகளும் இன்றி அவருடைய யோக சாதனையானது நடைபெறும்.  எனவே நீ இந்த நித்திய சுத்தி முறைகளை முறையாகவும், விடாமலும் கடைப்பிடிப்பாயாக. அப்போது தான் உடலுக்கு எந்தவிதத் தீங்கும் ஏற்படாது. இவ்வாறு நித்திய சுத்தி முறைகளை முறையாகச் செய்து வந்தாலும் உன்னுடைய தீவிரமான பயிற்சியின் விளைவாக உதிரமானது விரைவாக ஓடுவதன் காரணமாகவும், உடலின் நீர்த் தன்மையானது வியர்வையாக அதிகம் வெளியேறுவதன் காhரணமாகவும் உடலில் அதிக உ~;ணம் ஏற்பட்டு உடல் வளர்ச்சியடையவும் ஒவ்வொரு இணைப்புகளிலும் இடுப்புப் பகுதிகளிலும் உள்ள ஜவ்வு மண்டலங்கள் வறட்சியடைந்து வலி ஏற்படவும் வாய்ப்புண்டு. எனவே இவ்வாறு ஏற்படாமல் இருக்க மாதத்தில் இரண்டு முறை அதாவது 15 நாட்களுக்கு ஒரு முறை ‘பட்சசுத்தி’ எனும் முறையைக் கண்டிப்பாகக்  கடைப்பிடிக்க வேண்டும். அதையும் தெளிவாகக் கூறுகிறேன்.
பட்ச சுத்தி:
 இந்த பட்ச சுத்தி முறைக்கு உண்டான பொருள்களை முதலில் கூறுகின்றேன். மிளகு, மஞ்சள், நெல்லிவத்தல், கடுக்காய் தோல், வேப்பமுத்து ஆகிய 5 பொருள்களையும் வகைக்கு கால்பலம் எடுத்து சுத்தமான பசும்பால் விட்டு விழுதுபோல் அரைத்து தலையிலும், உடலிலும் நன்கு அழுத்தித் தேய்த்துக் கொண்டு 1 ஜாமம் ஊறிய பின்பு சுடுநீரில் தலை முழுக வேண்டும். 15 நாட்களுக்கு ஒருமுறை இவ்வாறு செய்வதால் உடல் உ~;ணம், தலைச்சூடு, கண் புகைச்சல், கண் எரிச்சல் ஆகிய நோய்கள் வராது, உடல், கண்கள் குளிர்ந்து காணப்படும். இந்த பட்ச சுத்தியால் உடல் உ~;ணமானது சமனப்படுவதுடன் உடலின் மயிர்க்கால்கள் தங்கியிருக்கும் மெழுகு போன்ற கழிவுகள் நீங்கும். இதற்கு பஞ்ச கல்ப ஸ்நானம் என்று பெயர்.
இவ்வாறு முறைப்படி உடலை தூய்மையாக்கிக் கொண்டு தீவிரமாக யோகசாதனையை  செய்யும்போது உன் உடலில் படிப்படியாக பல மாற்றங்களை நீ உணர்வாய், தூக்கம், சோம்பல், உடல்வலி போன்ற உபாதைகள் நீங்கி உடல் வலுவும் ஆண்மை சக்தியும் அதிகரிக்கும். உயிர் தத்துவமாகிய விந்துவின் தன்மை அதிகரிப்பதால் காம உணர்வானது கூடும் அந்த மாய்கையில் சென்றுவிடாமல் கிரியா என்னும் யோக விஞ்ஞானத்தின் அதி அற்புத ஆற்றல்களை நினைவில் கொண்டு பெருவாழ்வு நிலையில் உயர் தத்துவத்தை மனதில் நிறுத்தி செயல்படு. ஏனெனில் எவ்வளவு நூல்களைப் படித்தாலும் நேரடியாக இதுபோன்ற தெளிவான உன் கருவின் வழிமுறைகளை யாரும் கூறமாட்டார்கள். பல தத்துவங்களையும், பல யோக சாதனை முறைகளையும் கூறுவார்களே அன்றி அனுபவ பூர்வமாக படிப்படியாக முன்னேறும் செய்முறைகளை யாரும் கூறமாட்டார்கள்.
கிரியா யோகத்தின் 16 நிலைகள்
1. பார்வையை நிலைப்படுத்தல்
2. மனதை நிலைப்படுத்தல்
3. சுவாசத்தை நிலைப்படுத்தல்
4. உடல் இயக்கங்களை நிலைப்படுத்தல்
5. பிரபஞ்ச ஆற்றலை உணர்தல்
6. உடலில் அணு, மின், காந்த ஆற்றலை அறிதல்
7. உடலில் அணு, மின், காந்த ஆற்றலை அதிகப்படுத்தல்
8. உடலின் ஆற்றலை பிரபஞ்ச ஆற்றலுடன் இணைத்தல்
9. பிரபஞ்ச ஆற்றலை உள்வாங்கி நிறுத்தல்
10. உடல்சித்தி எனும் காயசித்தி செய்தல்
11. உயிராகிய ஜீவ அணுவை உடலில் இருந்து பிரித்து அறிதல்
12. அங்கப் பிரவேச சித்தியடைதல்
13. ஆகாயப் பிரவேச சித்தியடைதல்
14. உடல் அணுக்களில் அணு, மின், காந்த சக்தியை உயர்த்தி உடலின் பெண்மைத் தன்மையை நீக்குதல்
15. உடலை ஒளி உடலாக மாற்றி தூய உடலாக்குதல்
16. பிரபஞ்ச சக்தியுடன் இரண்டறக் கலந்து அனைத்தையும் அறிந்து கொண்டு சமாதி நிலையில் இருத்தல். இதுவே சாயுச்ய நிலையாகும்.

யோகா வேதம் புத்தகத்திலிருந்து



☘சிவ சித்தாந்தம்☘

No comments:

Post a Comment