ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583 THIS SITE IS BEST VIEWED IN GOOGLE CHROME BROWSER. இந்த வலைத்தளம் கூகிள் குரோம் என்ற சாதனத்தில் சிறப்பாக இயங்கும்.
Friday, 15 May 2026
பொதிகை மலை அகஸ்தியர்
Wednesday, 13 May 2026
வறுமையை போக்கும் அவ்வை பிள்ளையார் வழிபாடு
Monday, 11 May 2026
வள்ளி மலை ஸ்வாமிகள்
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் அமைந்துள்ள அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில்,
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் அமைந்துள்ள அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில், சுமார் 10-ஆம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்ட பழமையான, முருகப்பெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு திருப்புகழ் தலமாகும். வள்ளி-தெய்வானையுடன் கந்தசுவாமி அருள்பாலிக்கும் இக்கோயில், சேய் வரம் (குழந்தை பாக்கியம்) அளிக்கும் தலமாகவும், வேதாளங்களைச் சிவகணங்களாகக் கொண்ட அரிதான தலமாகவும் போற்றப்படுகிறது. [1, 2, 3, 4]
- பழமை: பல்லவர், சோழர் காலத்திற்கும் முந்தையதாகக் கருதப்படும் இக்கோயிலில் கோபுரங்கள் இல்லை.
- மூலவர்: முருகப்பெருமான் வள்ளி மற்றும் தெய்வானையுடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
- சிறப்பு சன்னதி: தெற்கு நோக்கிய அலங்கார மண்டபத்தில் வள்ளி, தெய்வானை சன்னதிகள் அமைந்துள்ளன.
- தனித்துவம்: இந்த ஆலயத்தில் தட்சிணாமூர்த்திக்கு சன்னதி இல்லை.
- வழிபாடு: அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற தலம். [1, 2, 3]
- கந்தசஷ்டி, சூரசம்ஹாரம்.
- வைகாசி விசாகம், தைப்பூசம்.
- பங்குனி உத்திரம். [1]
- காலை: \(6:00\) AM - \(12:30\) PM
- மாலை: \(4:30\) PM - \(8:00\) PM [1]
மயூரப்பிரியன் முருகன்
🚩 அரிய 'மயூரப்பிரியன்' கோலத்தில் அருளும் குழந்தை வேலப்பர்! 🦚✨
பழனி - தாராபுரம் சாலையில் அமைந்துள்ள ஐவர் மலை, வெறும் குன்று மட்டுமல்ல; அது அதிசயங்களும் ஆன்மீக ரகசியங்களும் நிறைந்த ஒரு புனித பூமி. இங்கு வீற்றிருக்கும் அருள்மிகு குழந்தை வேலப்பர் திருக்கோயில் பல சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது.
✨ அபூர்வமான ‘மயூரப்பிரியன்’ திருக்கோலம்
பொதுவாக முருகப்பெருமான் கையில் வேல் ஏந்தி அல்லது மயில் மீது அமர்ந்து காட்சி தருவார். ஆனால் இங்கு முருகப்பெருமான், தோகை விரித்தாடும் மயிலின் கழுத்தை தனது இடக்கையால் அன்போடு அணைத்தபடி, வலக்கையை இடுப்பில் வைத்து கம்பீரமாகக் காட்சி தருகிறார். பாதத்தருகே பாம்பு இருப்பதும் ஒரு தனிச்சிறப்பு. இந்த அழகிய கோலத்தையே "மயூரப்பிரியன்" என்று அழைக்கிறார்கள்.
⚠️ முக்கிய குறிப்பு: அலங்கார நேரத்தில் இந்த முழு உருவத்தையும் பார்க்க முடியாது. அபிஷேக நேரத்தில் மட்டுமே முருகனின் இந்த அபூர்வ திருவுருவத்தை முழுமையாகத் தரிசிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது!
🧭 இந்தத் தலத்தின் பிற வியக்கத்தக்க சிறப்புகள்:
மேற்கு நோக்கிய சன்னதி: முருகர் கோயில்கள் பெரும்பாலும் கிழக்கு நோக்கியே இருக்கும். ஆனால், இது அரிய அமைப்பாக மேற்கு நோக்கி அமைந்துள்ளது.
வட்ட வடிவ நவகிரகங்கள்: பொதுவாக நவகிரகங்கள் சதுர வடிவில் இருக்கும். ஆனால் இங்கு அவை வட்ட வடிவில் அமைந்திருப்பது மிகவும் அரிதானது.
வரலாற்றுச் சான்று: இம்மலையில் காணப்படும் சமணர் கால கல்வெட்டுகள், குகைகள் மற்றும் சமணப் படுக்கைகள் இந்த இடம் பல நூற்றாண்டுகள் பழமையானது என்பதைப் பறைசாற்றுகின்றன.
அணையாத அடுப்பு: ஐவர் மலையில் உள்ள வள்ளலார் ஜோதி மண்டபத்தில் சுமார் 150 ஆண்டுகளாக அணையாமல் எரியும் அடுப்பு பக்தர்களை வியப்பில் ஆழ்த்துகிறது.
🧘 தியானத்திற்கு உகந்த தலம்
சித்தர்களும் துறவிகளும் இன்றும் இம்மலையில் சூட்சுமமாக தவம் செய்து வருவதாக நம்பப்படுகிறது. மன அமைதி தேடுபவர்களுக்கும், தியானம் செய்ய விரும்புவோருக்கும் இந்த மலைப்பகுதி ஒரு சிறந்த இடமாகும்.
🔱 மீண்டு வந்த அதிசயம்!
1997-ம் ஆண்டு திருடப்பட்ட இக்கோயிலின் உற்சவர் சிலை, பல போராட்டங்களுக்குப் பிறகு மீண்டும் அதிசயமான முறையில் இக்கோயிலுக்கே வந்து சேர்ந்தது. இது முருகனின் திருவிளையாடல் என்றே பக்தர்களால் போற்றப்படுகிறது.
வெற்றியைத் தரும் வேல் முருகனை, இந்த தனித்துவமான கோலத்தில் ஒருமுறையாவது நேரில் தரிசித்துப் பலன் பெறுங்கள்! 🙏
📍 இடம்: ஐவர் மலை, பழனி அருகே.
யோக பயிற்சிகள் வாசி யோகம் சர வித்தை சர யோகம்
Sunday, 10 May 2026
குழந்தையானந்தர் சித்தர்
சுமார்350 ஆண்டுகள் வாழ்ந்து நான்கு முறை அவதாரம் எடுத்து மதுரை காளவாசல் பகுதியில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் குழந்தையானந்தர் சித்தர் பற்றிய பதிவு
மகான்களின் வாழ்க்கை புனிதமானது மட்டுமல்ல;
புதிரானதும் கூட.
அத்தகைய மகான்களுள் நான்கு இடங்களில் ஜீவசமாதியானதாகக் குறிப்பிடப்படுபவர் மகான் ராஜபூஜித ஸ்ரீ குழந்தையானந்த சுவாமிகள்.
கிட்டத்தட்ட 250 வருடங்களுக்கு மேல் வாழ்ந்தவர் என்று கூறப்படும் இம்மகானின் வாழ்க்கை வரலாறு பல்வேறு அற்புதங்களை உள்ளடக்கியது.
இம்மகானும் ஸ்ரீ ஷிர்டி சாயிபாபாவைப் போலவே விஜயதசமி நன்னாளைத்தான் தனது சமாதி காலத்திற்குத் தேர்ந்தெடுத்தார் என்பது மற்றொரு விந்தையான சிறப்பாகும்.
குழந்தையானந்தரின் அவதார தோற்றம்:
சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் மதுரையை அடுத்த சமயநல்லூரிலே அவதரித்த மஹான் ஸ்ரீ குழந்தையானந்தர். அங்கு ராமஸ்வாமி ஐயர் – திரிபுரசுந்தரி என்ற அம்பிகையைப் போற்றி வணங்கும் பக்த குடும்பம் வாழ்ந்து வந்தது. குழந்தைப் பேறு இல்லாத தன் நிலையை எண்ணி வருந்திய அந்த தம்பதியினர் குழந்தை வரம் வேண்டி அம்பிகையை உருக்கமாக வேண்டியதோடு குழந்தை பிறந்தால் அதை அம்பிகைக்கே அர்ப்பணித்து விடுவதாகப் பிரார்த்தனையும் செய்து கொண்டனர்.
ஒரு நாள் தம்பதிகள் அம்மனுக்கு அபிஷேகம் செய்ய, பழம்,புஷ்பம் உள்ளிட்ட தேவையான அனைத்தையும் நைவேத்திய பிரசாதத்துடன் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு எடுத்துச் சென்றனர். அபிஷேகத்திற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக ஐயர் உள்ளே சென்றார். மேலக்கோபுர வாசலில் சர்க்கரைப் பொங்கல், வடை போன்ற நிவேதனப் பொருள்களுடன் பின்னால் தொடர்ந்து கொண்டிருந்த திரிபுரசுந்தரியிடம் இரு பிச்சைக்கார சிறுவர்கள் வந்து, “ரொம்பப் பசியாய் இருக்குதம்மா” என்று கூறினர். “கொஞ்சம் பொறுங்கள். அம்மனுக்கு நைவேத்யம் செய்து விட்டு தருகிறேன்” என்றார் திரிபுரசுந்தரி.
“அவ்வளவு நேரம் பசி பொறுக்க முடியாதம்மா” என்ற அவர்களின் உருக்கமான வேண்டுகோளைக் கேட்ட அவர் நிவேதனப் பொருள்களை வயிறார பிச்சைக்காரச் சிறுவர்களுக்குக் கொடுத்தார். பசி தீர்ந்த மகிழ்ச்சியில் அவரை அவர்கள் வாழ்த்தினர்.
நடந்ததைக் கேட்ட ஐயருக்குக் கடுங்கோபம் வந்தது. நிவேதனப் பொருள்களை அம்மனுக்கு நைவேத்யம் செய்யாமல்; மனைவி செய்த காரியத்தை அவரால் மன்னிக்க முடியவில்லை. கோபத்துடன் வீடு திரும்பி விட்டார்.
அம்பாளை மனமுருகப் பிரார்த்தித்த திரிபுரசுந்தரி, “எப்படியோ, பிரசாதப் பொருள்களை என் வீட்டிற்கே நீ தான் அனுப்ப வேண்டும்” என்று மீனாட்சியம்மனை வேண்டிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தார்.
உள்ளே பயந்து நடுநடுங்கிக் கொண்டு திரிபுரசுந்தரி தவிக்க கோபம் ஆறாத ஐயர் திண்ணையில் உட்கார்ந்திருந்தார்.
அப்போது, ஒரு சிறுவன் வந்து அவரிடம்,” ஐயா, அம்பாள் பிரசாதம் இதோ” என்று புஷ்பம், பழம்,சர்க்கரைப் பொங்கல், வடை ஆகியவற்றைத் தந்தான்.
ஒன்றும் புரியாத ஐயர் விழிக்கவே, உள்ளேயிருந்து ஓடி வந்த அவர் மனைவி, “ஒன்றும் பேசாமல் அதை வாங்கிக் கொள்ளுங்கள். அந்தப் பையன் எங்கிருந்து வருகிறான்” என்பதைத் தொடர்ந்து சென்று பாருங்கள்” என்றாள்.
ஒன்றும் புரியாத நிலையில் பையனைத் தொடர்ந்து சென்ற ஐயர் அந்தப் பையன் பிச்சைக்காரர்களுக்கு பிரசாதப் பொருள்க்ளைத் தந்த அதே இடத்தில் திடீரென்று மறைந்து விட்டான்.
எவ்வளவு தேடியும் அவனைக் காண முடியவில்லை. ஊர் திரும்பி வந்த ஐயர் நடந்ததைச் சொல்ல திரிபுரசுந்தரி அது அம்பிகையின் திருவிளையாடலே என்று
உறுதிபடக் கூறினாள்.
சரியாக பத்து மாதம் கழித்து தம்பதிகளுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.
ராமன் லட்சுமணன் என்று அவர்களுக்குப் பெயரிடப்பட்டது. இருவரின் ராமன் மட்டும் தாய்ப்பாலை அருந்தவே இல்லை.அழவும் இல்லை.
இது எதனால் என்று குழம்பி இருந்த் திரிபுரசுந்தரி அம்மாளுக்கு கனவில் அம்மன் தோன்றி, ‘பிரார்த்தித்தபடி குழந்தையைக் கொடு’ என்று கேட்டாள்
இருவரில் எந்தக் குழந்தையைக் கொடுப்பது? தம்பதிகள் குழந்தைகளுடன் மீனாட்சியம்மன் ஆலயம் சென்றனர்.
அங்கு பட்டருக்கு அருள் வந்து எந்தக் குழந்தைக்கு காலில் சங்கும் சக்கரமும் உள்ளதோ எதன் நாவில் நாராயண நாமம் இருக்கிறதோ அந்தக் குழந்தையை கொடுத்துவிடு என்று உத்தரவு பிறந்தது.
அதுவரை கவனிக்காத சங்கு சக்கர அடையாளங்களைக் குழந்தை ராமனின் காலில் அனைவரும் கண்டன்ர்.
மேலும் அது வரை பேசாமல் இருந்த குழந்தை ராமன் அம்மா என்று கூறியவாறே மீனாட்சியம்மனை நோக்கித் தவழ்ந்து சென்றது.
ராமனை பிரிய மனமின்றி அன்னை மீனாட்சியின் ஆணையின்படி மீனாட்சி கோவிலில் குழ்தையை விட்டு விட்டு தம்பதியினர் வீடு திரும்பினர்.
இரவு வந்தது. குழந்தையை என்ன செய்வது என பட்டர் யோசித்தார். (அந்தக் காலத்தில் பட்டரின் கவனிப்பிலேயே கோவில்கள் இருந்தன) அப்போது அசரீரி ஒன்று குழந்தையை கோவிலிலேயே விடுமாறு உத்தரவைப் பிறப்பித்தது.
அது முதல் ராமன் கோவிலில் வளர ஆரம்பித்தான்.
திருஞானசம்பந்தருக்கு ஞானப்பாலைத் தந்த அம்பிகை குழந்தையானந்தரையும் பால் கொடுத்து வளர்த்தாள்.
ஏழு வய்தான போது ராமனுக்கு உபநயனம் செய்விக்க உத்தரவு கிடை்கப்பெற்றது. ஆகவே உபநயனமும் கோவில் பட்டர்களால் செய்து வைக்கப்பட்டது.
ராஜகோபாலன் என்ற தீட்சா நாமமும் சூட்டப்பட்டது.
பின்னர் 900 ஆண்டுகள் வாழ்ந்து வரும் பெரிய சித்தரான ஸ்ரீ கணபதி பாபாவைக் குருவாகக் கொள்ளுமாறு அன்னை மீனாட்சியிடமிருந்து அருள் ஆணை பிறந்தது.
ஒருநாள், அன்னை மீனாட்சியை தரிசிப்பதற்காக காசியிலிருந்து கணபதி பாபா என்ற மகான் வந்திருந்தார்.
ஒரு நல்ல சீடனை தேடிக் கொண்டிருந்த அவருக்கு ராஜகோபாலனைக் கண்டதும் அவனே அதற்குத் தகுதியானவன் என்ற எண்ணம் தோன்றியது.
ஆலயத்தினரின் அனுமதி பெற்று ராஜகோபாலனைத் தன்னுடன் அழைத்துச் சென்றார்.
காசியில் ஸ்ரீகணபதி பாபாவிடமிருந்து சகல சாஸ்திரங்களையும் பயின்றார் ராஜகோபாலன்.
முதல் சமாதி
குருநாதர் கணபதி பாபாவிடம் சகல சாஸ்திரங்களையும் பயின்ற ராஜகோபாலனுக்கு ஸ்ரீத்ரிலிங்க ஸ்வாமிகள் என்ற பெயர் ஏற்பட்டது.
ஸ்ரீத்ரிலிங்க ஸ்வாமிகள் என்ற பெயரில் கைலாய மலையிலும், மகாமேரு சிகரத்திலும் அமர்ந்து அருள்பாலித்தார்.
மானஸரோவர், கங்கோத்ரி, அமர்நாத், கேதார்நாத் ஸ்தலங்களில் நிர்விகல்ப சமாதியில் நீண்ட நாட்கள் இருந்திருக்கிறார்.
கஜானந்தேந்திர சரஸ்வதி என்ற திருநாமத்துடன் இமாலயத்திலுள்ள ஆதிசங்கர பீடத்தை அலங்கரித்தார்.
புனிதத் தலங்களை தரிசிப்பதற்காக
பல தல யாத்திரைகளை
மேற்கொண்டு மன்னர்களால் ராஜபூஜித ஸ்ரீ ராஜகோபால சுவாமிகள் என்று அவர்களால் அன்புடன் அழைக்கப்பட்டார்.
இமயமலை பகுதிகளில் சஞ்சாரம் செய்த அவரை ஏராள்மானோர் தரிசித்து அருள் பெற்றனர்.
கணபதி பாபா சமாதியடைந்த பின்பு கங்கை கரையில் சமுத்திரகூடம் என்னுமிடத்தில் உள்ள குகையில் நீண்ட காலம் தவமிருந்தார்.
(இந்த குகையைத்தான் பின்னாளில் சுவாமி விவேகானந்தர் கண்டு பிடித்து இந்த இடத்தில் தவம் இருந்து விஜய யாத்திரையை ஆரம்பித்தார்.)
இந்த தனி குகையில் பல ஆண்டுகாலம் நிஷ்டையில் இருந்த சுவாமிகள், பின் தாமும் ஒரு சமாதிக் குழியை ஏற்படுத்தி அதில் இறங்கி ஜீவ சமாதி ஆனார்.
இவ்வாறு த்ரிலிங்க ஸ்வாமிகளின் முதல் ஜீவ சமாதி காசியில் ஏற்பட்டது. கணபதி பாபா சமாதிக்கு அருகிலேயே இது உள்ளது.
கணபதி பாபாவை கணபதி ப்ரம்மம் என்று கூறுவார்கள். அவரது சமாதி இன்றும் காசியில் பஞ்சலிங்க கட்டத்தில் உள்ளது.
இன்றும் வெள்ளைச் சலவைக் கல்லிலானான அவரது சிலையை அங்கு பார்க்கலாம்.
இரண்டாவது சமாதி
பின்னர் அவர் நேபாளம் சென்றார். நேபாள ராஜ வம்சத்தைச் சேர்ந்த ஒருவருக்கு குஷ்ட நோய் பீடிக்கவே அவர் ஸ்வாமிகளிடம் சரணடைந்தார்.
அவருக்கு ஸ்வாமிகளின் அருளால் குஷ்ட்ம் நீங்கிற்று. ப்ல காலம் நேபாள அரசரின் அரண்மனையில் அவர் பூஜிக்கப்பட்டார்.
ஸ்வாமிகள் எப்போதும் அணிந்திருந்த மகர கண்டியும், கௌரிசங்கர ருத்ராட்ச மாலையும் நேபாள அரசர் கொடுத்தவையே.
ஸ்வாமிகளின் இரண்டாவது சமாதி நேபாளத்தில் பசுபதிநாதர் கோவிலில் உள்ளது.
ஸ்ரீ த்ரிலிங்க ஸ்வாமிகளை ராமகிருஷ்ண பரமஹம்ஸர், ஸ்வாமி விவேகானந்தர் உள்ளிட்ட ஏராளமான மகான்கள் தரிசித்திருக்கின்றனர்.
ஸ்வாமிகளை நேரில் தரிசித்த , ராமகிருஷ்ண பரமஹம்சர் இவர் தான் உண்மையான பரமஹம்சம் என போற்றி புகழ்ந்தார்.
மூன்றாவது சமாதி
நேபாள சமாதியிலிருந்து எழுந்த ஸ்வாமிகள் வட இந்தியா முழுவதும் சஞ்சரித்துப் பின்னர் ஆந்திர பிரதேசம் வந்தார். பின்னர் தமிழ்நாட்டிற்கு வந்து சேர்ந்தார். ஏராளமான பக்தர்களுக்கு அனுக்ரஹம் செய்தார்.
திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் மூன்றாவது சமாதியை எய்தினார். இது நெல்லையப்பர் சமாதி என்று அழைக்கப்படுகிறது.தென்காசியில் சன்னதி மடம் தெருவில் சங்கரன் பிள்ளை என்ற பக்தர் வீட்டில் இந்த சமாதி உள்ளது.
இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆவணி ஆயில்ய நட்சத்திரத்தில் குருபூஜை கொண்டாடப்படுகிறது.
குழந்தையானந்தர் காசியில் தங்கியிருந்த காலத்தில் விஸ்வநாதர் கோயிலையும், காலபைரவர் கோயிலையும் சிறப்பாக பராமரித்தார்.
1887ல் காசியில் தன்னை ஒரு பெட்டியில் வைத்து கங்கையில் விடுமாறு தன் சீடர்களுக்கு கட்டளையிட்டு, அப்பெட்டியுடன் தென்னகத்தில் திருவண்ணாமலை, சுருளி ஆகிய இடங்களில் தோன்றி பக்தர்களுக்கு நீண்ட காலம் அருள்பாலித்தார்.
நான்காவது சமாதி
மூன்றாவது சமாதி நிலையிலிருந்து எழுந்த ஸ்வாமிகள் மதுரையம்பதிக்கு எழுந்தருளினார்.
அங்கு அவர் இருபது வருஷங்களுக்கும் மேலாக நடத்திய அருள் லீலைகளை ஆனந்தமாக அனுபவித்தோர் சென்ற தலைமுறையைச் சார்ந்தவர்கள்.
சதா யோகநித்திரையில் இருந்த அவரது திருவாக்கிலிருந்து எழும் அமுத மொழிகள் மூவாண்டுகளே நிரம்பப் பெற்ற குழந்தை பேசும் மழலை மொழி போல்வே இருந்தது.
அத்துடன் மட்டுமன்றி அவர் வாயிலிருந்து அமுதூற்றை ஒத்த சாளவாய் வழிந்து கொண்டிருந்தது.
குள்ளமான உருவம். பருத்த தொந்தி. வட்டமான முகம். சாளவாய் ஒழுகிக் கொண்டிருக்கும் வாய்.,மழலைப் பேச்சு என்று சுவாமிகளின் தோற்றம் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது.
குழந்தையைப் போன்ற தோற்றம். சிரித்த, ஆனால் மரியாதையைத் தோற்றுவிக்கும் முகம் என்பதாக சுவாமிகளின் உருவ அமைப்பு அமைந்திருந்தது.
‘கண்ணுரெண்டும் எச்சி, கறந்த பாலும் எச்சி ‘ என்று அடிக்கடிச் சொல்லுவார். குழந்தை போல குழறிக் குழறிப் பேசுவார் என்பதாலேயே அவருக்கு ‘குழந்தையானந்தர்’ என்ற பெயர் நிலைத்து விட்டது.
பருத்த தொந்தி. அருள் பொங்கும் முகம். பத்ம பாதங்களோ மஹாவிஷ்ணுவின் அம்சத்தைக் குறிக்கும் சங்கு சக்ரங்களைக் கொண்டவை. நிகழ்த்திய திருவிளையாடல்களோ மெய்சிலிர்க்க வைத்தவை.
1919ம் ஆண்டு மதுரையிலிருந்து வத்தலக்குண்டு சென்ற போது அங்கு தனக்கு தன் சீடர் மூலம் ஒரு கோயிலை நிர்மாணித்தார்.
1932ஆம் ஆண்டு மதுரை லக்ஷ்மிநாராயணபுர அக்ரஹாரம் 4அம் நம்பர் கிருஹத்தில் நவராத்திரி உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.
ஸ்வாமிகள் சுமார் 300 பவுன்களில் செய்து வைத்திருந்த ஸ்ரீசக்ரத்திற்கு விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டன.
எட்டாம் நாளன்று சிஷ்யர் ராமலிங்கய்யர் வெந்நீர் கொண்டு வந்து வைக்க மகாலிங்க பண்டாரம் என்பவர் நெய்யை ஸ்வாமிகளுக்கு தேய்த்து விட்டுக் கொண்டிருந்தார்.
மகாலிங்கம் அவரது கையில் ஏற்பட்ட பிளவையைக் கண்டு அவர் அடங்கி விடப் போகிறாரா?என்று ராமலிங்கய்யரிடம் கேட்க, குழந்தையானந்தர், “என்னடா சொல்கிறான் திருட்டுப் பயல்! அதெல்லாம் ஒண்ணுமில்லையடா! எல்லாம் நாளன்னிக்கி தான்!” என்று அருளினார்.
சனிக்கிழமை சரஸ்வதி பூஜை முடிந்தது. மதியம் மூன்று மணிக்கு ஸ்வாமிகளே என்று கூப்பிட்ட போது மூன்றாம் முறை கண்ணை விழித்துப் பார்த்தார் அவர்.
ராமலிங்கய்யர் சிறிது பாலை வாயில் ஊற்ற இரண்டு வாய் உள்ளே சென்ற பால் அப்படியே நின்று விட்டது.
இறுதியாக 1932ஆம் ஆண்டு, ஆங்கீரஸ வருஷம், புரட்டாசி மாதம் 23ஆம் தேதி சனிக்கிழமை தசமி திதி திருவோண நக்ஷத்திரம் கூடிய சுபதினத்தில் அடங்கி விட்டார்.
அவர் அடங்கி விட்டாரா? யார் நிர்ணயிப்பது?
அனைவரும் பிரமித்து நின்றனர். பின்னர் தேதியூர் பிரம்மஸ்ரீ சுப்ரமண்ய சாஸ்திரிகள் ஸ்வாமிகள் சமாதியடைந்ததை நிர்ணயித்து ஊர்ஜிதம் செய்தார்.
ஸ்வாமிகளை பலகாலம் ஆஸ்ரயித்து வந்த மிராசுதார் கன்கசபாபதி செட்டியார் ஆனையூரில் உள்ள தன் மனையில் அடக்கம் செய்ய விரும்பினார்.
சௌராஷ்டிர பக்தர்களோ திருப்பரங்குன்றம் ரோடில் தற்போது விவேகானந்த ம்டம் உள்ள இடத்தில் அடக்கம் செய்ய விரும்பினர்.
மற்றொரு சாரார் சின்னமணி ஐயர் என்பவரால் யதிகள் சமாதிக்காக விடப்பட்டுள்ள இடத்தில் அடக்கம் செய்ய விரும்பினர்.
இறுதியில் அனுமார் கோவிலில் திருவுளச் சீட்டு போட்டுப் பார்க்கப்பட்டது. அதில் வந்த இடம் சின்னமணி ஐயரின் இடம்.
அது அரசரடியில் காளவாசல் சந்திப்பில் உள்ளது.
மதுரை காளவாசல் அருகே உள்ள கோயிலில் நான்காவது ஸ்வாமிகளின் அதிஷ்டானம் அமைக்கபட்டது.
தனது அதிஷ்டானம் அமைக்கும் போது வழக்கமாக செய்யகூடிய சடங்குகள் ஏதும் செய்ய வேண்டாம் என்று சுவாமிகள் அடங்குவதற்கு முன்பு கூறியுள்ளார்.
மதுரை காளவாசல் அருகே உள்ள கோயிலில் சுவாமிகளின் அதிஷ்டானம் அமைக்கபட்ட பிறகு வத்தலக்குண்டில் தனக்காக எழுப்பப்பட்ட கோயிலில் மீண்டும் எழுந்தருளினார்.
மதுரையை அடுத்த சித்தாலங்குடி என்ற கிராமத்தில் குழந்தை சித்தராய் தங்கி, பல சித்துகள் செய்து சமாதி அடைந்து மீண்டும் வெளியே வந்து வேறொரு இடத்தில் தோன்றியருளினார்.
சித்தாலங்குடியில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் 4,5,6 தேதிகளில் குருபூஜை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இப்படி ஒவ்வொரு கால கட்டத்திலும் அவதார புருஷராக அவதாரம் எடுத்து சமாதி நிலை அடைந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் குழந்தையானந்த சுவாமிகள்.
அவர் சமாதியின் உள்ளே இருக்கிறாரா,அடுத்து வெளிக் கிளம்பி எங்கேனும் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறாரா? யார் சொல்ல முடியும் அதை?!
சுவாமிகளின் முந்தைய சமாதிகளை ஊர்ஜிதம் செய்த சம்பவங்கள்:
ஸ்வாமிகள் மதுரையில் தங்கியிருந்த வீடு ஒன்றில் த்ரிலிங்க ஸ்வாமிகள் படம் மாட்டப்பட்டிருந்தது. அதைக் கண்ட குழந்தையானந்த ஸ்வாமிகள், “அடே, என்னுடைய அந்த வேஷத்தையும் வைத்திருக்கிறாயா? இங்கே தான் நம்மைக் குழந்தையாக்கி விட்டார்கள்’ என்று கூறினார். இதனால் அவரே த்ரிலிங்க ஸ்வாமிகள் என்பது அவர் வாயாலேயே நிரூபணம் ஆயிற்று.
தன்னிடம் இருந்த 300 பவுனை வைத்து ஸ்ரீசக்ரம் செய்ய தென்காசி சென்றார் குழந்தையானந்த ஸ்வாமிகள். அவரது பக்தரான சங்கரன் பிள்ளை வீட்டுக்கு சென்ற ஸ்வாமிகள் திடீரென்று உள்ளே சென்று அங்கிருந்த சமாதியில் அமர்ந்து விட்டார். என்னதான் பக்தராக இருந்தாலும் தன் முன்னோர் சமாதியில், பரம்பரையாக பூஜித்து வரும் இடத்தில் குழந்தையானந்தர் அமர்ந்திருப்பதைக் கண்ட சங்கரன் பிள்ளைக்கு ச்மாதானமாயில்லை. கேட்கவோ துணிவில்லை.
குழந்தையானந்தர் அவர்கள் உள்ளத்திலிருப்பதை அறிந்து கொண்டு, “என் இடத்தில் உட்கார யாரையடா கேட்கணும்” என்றார்.
பின்னர் சங்கரன் பிள்ளையின் வமிசத்தின் பலதலைமுறையினரின்
விருத்தாந்தங்களை விளக்கினார். எல்லோரும் பிரமித்து வியந்து அவரைத் தொழுது வணங்கினர்.
ஆக த்ரிலிங்க ஸ்வாமிகள் மற்றும் நெல்லையப்பர் சமாதி தன்னுடையவையே என்பதை ஸ்வாமிகளே அருளிக் கூறியிருப்பதால் அவர் நீண்ட நெடுங்காலம் வாழ்ந்தவர் என்பது நிர்ணயிக்கப்படுகிறது.
இன்றும் ஸ்வாமிகளின் அரசரடி அதிஷ்டானத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று அருள் பெற்று வருகின்றனர்.
சுவாமிகள் நிகழ்த்திய அற்புதங்கள்:
சுவாமிகள் நிகழ்த்திய அற்புதங்கள் பலப்பல. அவற்றுள் ஒன்று இன்னமும் அவரது பக்தர்களால் நினைவு கூரப்படஉகிறது.
ஒருநாள் மதுரை ரயில் நிலையத்தில் சென்னைக்குச் செல்ல இருந்த ரயில் ஒன்றில் சுவாமி ஏறி அமர்ந்து கொண்டார் குழந்தையானந்தர்.
அது வெள்ளைக்கார அதிகாரி ஒருவருக்கு ரிசர்வ் செய்யப்பட்டிருந்த முதல் வகுப்புப் பெட்டி.
தனக்கென ரிசர்வ் செய்த அந்த இடத்தில் குழந்தையானந்தர் அமர்ந்திருந்ததைப் பார்த்ததும் அந்த அதிகாரி கடும் கோபம் கொண்டார்.
உடனடியாக அந்த இடத்தை விட்டு எழுந்து கொள்ளுமாறு சுவாமிகளை அதிகாரம் செய்தார்.
ஆனால் சுவாமிகள் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் மௌனமாக அமர்ந்திருந்தார்.
அதிகாரி, ஸ்டேஷன் மாஸ்டரிடம் புகார் செய்தார்.
அப்போது கல்யாணராம அய்யர் என்பவர் ஸ்டேஷன் மாஸ்டராகப் பணியாற்றி வந்தார்.
அவர் சுவாமிகளைப் பரிசோதித்து டிக்கட் இல்லை என்பதால் கீழே இறக்கி விட்டார்.
சுவாமிகள் பிளாட்பாரத்தில் .
அமர்ந்து விட்டார்.
ரயில் கிளம்ப பச்சைக்கொடி காட்டப்பட்டது. டிரைவர் எஞ்சினை இயக்கினார். ரயில் கிளம்பவில்லை.
பலமுறை முயன்றும் பலனில்லை. அப்போது அங்கு வந்த சுவாமிகளின் மகிமை அறிந்த சிலர், ஸ்டேஷன் மாஸ்டரிடம் சுவாமிகளின் பெருமை பற்றிச் சொல்லி, அவரிடம் மன்னிப்புக் கேட்கச் சொல்லினர்.
கல்யாணராம அய்யரும் பணிவுடன் சுவாமிகளிடம் மன்னிப்பு வேண்டினார்.
சுவாமிகளை முதலில் அமர்ந்திருந்த ஆசனத்திலேயே அமர்த்தினார். வெள்ளைக்கார அதிகாரிக்கு மாற்று ஏற்பாடு செய்தார்.
உடனே சுவாமிகள் சந்தோஷம் பொங்க ‘ டேய், ரயில் இனிமேல் போகும்டா’ என்றார்.
டிரைவர் உடனே எஞ்சினை இயக்க, ரயில் கிளம்பியது.
ஒருமுறை பக்தர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றிருந்தார் குழந்தையானந்த சுவாமிகள்.
அந்த வீட்டில் சுவாமிகளின் திருவுருவப் படத்தோடு அவர் முந்தைய உருவமான த்ரையலிங்க சுவாமிகளின் படத்தையும் வைத்து வழிபட்டு வந்தனர்.
அதைப் பார்த்த சுவாமிகள், ‘அடேய், எனது இந்த வேஷத்தையும் வைத்திருக்கிறாயா? பேஷ், பேஷ்’ என்றார் புன்னகையுடன்.
இதன் மூலம் குழந்தையானந்தரின் பூர்வ ஜென்மமே ஸ்ரீ த்ரையலிங்க சுவாமிகள் என்ற உண்மையை அறிந்து கொள்ள இயலுகிறது.
இவ்வாறு மூன்று முறை ஜீவசமாதியிலிருந்து வெளித்தோன்றி பக்தர்களுக்கு அருள்பாலித்த இம்மகான், 1932ம் வருடம் விஜயதசமி அன்று, மதுரை லட்சுமி நாராயணபுரத்தில் சமாதி அடைந்தார்.
மதுரை அரசரடியில் அமைந்திருக்கும் இவரது ஜீவ சமாதியிலிருந்து சூட்சும ரீதியாக பக்தர்களுக்கு இன்றும் ஸ்ரீ குழந்தையானந்தர் உதவி வருகிறார் என்பது பக்தர்கள் நம்பிக்கை.
விஜயதசமி அன்று மகானை உளப்பூர்வமாக வழிபடுபவர்களுக்கு எல்லா நன்மையும் பெருகும்.
இவரின் பரிபூரண அருளை பெற்ற சீடர் முருகானந்த சாமிகள் ஆவார் .
இவர் திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குமாரலிங்கம் எனும் ஊரில் ஜீவ ஐக்கியம் பெற்றுள்ளார்.
லலிதா சஹஸ்ரநாமம் சொல்வதில் குழந்தையானந்த ஸ்வாமிகள் சொன்ன ஒரு ஆன்மீக இரகசியம்!
பல நூறு ஆண்டுகளாக பாரதத்தில் லலிதா சஹஸ்ரநாமத்தைச் சொல்லி வருவது இயல்பான ஒரு பழக்கமாக பல்லாயிரம் குடும்பங்களில் ஆகி விட்டது.
ஆனால் இதைச் சொல்லுவதில் உள்ள இரகசியத்தை குழந்தையானந்த ஸ்வாமிகள் தன் பக்தை ஒருவருக்கு அனுக்ரஹித்துள்ளார்.
சுவையான அந்த சம்பவத்தின் மூலம் இரகசியம் அனைவருக்கும் வெளிப்பட அனைவரும் அதன் மூலம் பலன் பெறும் பாக்கியமும் ஏற்பட்டுள்ளது.
1927ஆம் ஆண்டு. புதுக்கோட்டை சீஃப் கோர்ட் வக்கீல் சுவாமிநாத ஐயரும் அவரது மனைவி பாகீரதி அம்மாளும் ஸ்வாமிகளின் அநுக்ரஹத்திற்குப் பாத்திரமான சிறந்த பக்தர்கள்.
ஸ்வாமிகளின் மீது பரம் பக்தி அவர்களுக்கு.ஸ்வாமிகள் இரு முறை அவர்கள் வீட்டிற்கு விஜயம் செய்து பல நாட்கள் அங்கு தங்கி இருக்கிறார்.
இரண்டாம் முறை (1927இல்) ஸ்வாமிகள் அவர்கள் வீட்டிற்கு விஜயம் செய்த போது பாகீரதி அம்மாள் ஒன்பது மாத கர்ப்பிணி.
ஸ்வாமிகள் வாய் சிறு குழந்தைகள் குழறுவது போலக் குழறிச் சொற்களை வெளிப்படுத்தும்.
‘பாயி’ என்று பாகீரதி அம்மாளை மாடியிலிருந்து விளித்து ஸ்வாமிகள் கஞ்சியோ காப்பியோ கொண்டு வரச் சொல்லுவது வழக்கம்.
நிறைமாத கர்ப்பிணி படி ஏறி வருதைப் பார்த்து, “உனக்கு சிரமமாய் இருக்கிறதா?” என்று ஸ்வாமிகள் பரிவோடு கேட்பார்.
“நல்ல காரியங்கள் நடக்கும் போது சற்று சிரமம் கூடவே இருக்கும்.ஆனால் அதைப் பொருட்படுத்தக் கூடாது” என்று அருளுரை வழங்கிய ஸ்வாமிகள்,” ஸ் என்று சொல்லாதே! ஸ் என்று போய் விடும்’ என்று அன்பாகக் கூறினார்.
லலிதா சஹஸ்ர நாமம் சொல்லும் வழக்கத்தை பாகீரதி அம்மாள் கொண்டிருந்தார்.
ஒரு நாள் அவரிடம் ஸ்வாமிகள்,”லலிதா சஹஸ்ர நாமம் சொல்லும் போது ஆற்றுக்குக் கரை கட்டுவது போல ஒவ்வொரு நாமத்திற்கும் முன்னும் பின்னும் பிரணவமாகிய'ஓம்'என்பதைச் சேர்த்துச் சொல்” என்று அருளினார்.
ஸ்வாமிகள் மீனாட்சி அம்மன் கோவிலில் அம்மன் வளர்த்த மீனாட்சி அம்மையின் அருள் குழந்தையாவார்.
தன் அன்னையை எப்படி வழிபட்டால் முழுப் பலனும் கிடைக்கும் என்ற இரகசியத்தை அவர் அருளியது அனைவருக்குமான காலத்திற்கேற்ற உபதேசம்.
ஓம் என்னும் உயரிய மந்திரம்
தானம் யக்ஞம் போன்ற சகல காரியங்களையும் ஆரம்பிக்கும் போது ப்ரணவமாகிய ஓம் மந்திரத்தைச் சொல்ல வேண்டும் என்று சாட்யாயனர் அருளியுள்ளார்.
அதே போல காத்யாயனர் ஓம் எனும் ப்ரரணவத்தை சொல்லியே அனைத்துக் காரியங்களையும் ஆரம்பிக்க வேண்டும் என்று அருளியுள்ளார்.
தால்ப்ய பரிசிஷ்டம் என்ற நூலில் ஓம்காரத்தைச் சொல்லாமல் கூறும் சகல மந்திரங்களும் சித்தியைக் கொடுக்க மாட்டாது என்று கூறப்பட்டுள்ளது.
ஆகவே தான் லலிதா சஹஸ்ரநாமத்தில் வரும் ஒவ்வொரு நாமாவுக்கு முன்னரும் பின்னரும் ஸ்வாமிகள் ஓம்காரத்தைச் சேர்த்துச் சொல் என்றார்.
முதலில் சொல்லாவிட்டால் மந்திரம் ஒழுகி விடுமென்றும் கடைசியில் சொல்லாவிட்டால் மந்திரம் பொங்கி வழிந்து விடும் என்றும் காளிகா புராணம் போன்றவற்றில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த அரிய இரகசியத்தை ஸ்வாமிகள் பக்தைக்கு அருளினார்.
பக்தைக்கு ஆண் குழந்தை பிறக்க அது புஷ்ய நட்சத்திரத்தில் பிறந்ததைக் கேட்டு அறிந்த ஸ்வாமிகள், “புஷ்ய நட்சத்திரத்தில் பிறந்திருக்கிறான். ஜெகதீசன் என்று பெயர் வை. நன்றாக இருப்பான்” என்று ஆசீர்வாதம் செய்தார்.
ஒவ்வொரு மந்திரம் சொல்லும் விதத்தையும் ஆசார்யர் மூலமாகவே கற்றுத் தெளிந்து உச்சரிக்க வேண்டும் என்பது தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கம்.
காலம் கலி காலமானதால் நமக்குத் தெரியாத இரகசியங்களை இப்படிப் பெரும் மகான்கள் கூறி அருளுவது வழக்கம்.
ஆக லலிதா சஹஸ்ரநாமம் கூறும் வழியை பெரும் மகானான குழந்தையானந்த ஸ்வாமிகள் அருளியுள்ளார்.
அதைக் கடைப்பிடித்து சஹஸ்ர நாமம் சொல்லி முழுப்பலனையும் அன்னையின் அருளால் பெறுவோமாக!
ஸ்ரீ குழந்தையானந்தர்
குரு சரித்திரம் ஆதாரபூர்வமாக
குருவின் வாரிசுகள் மற்றும் பலரால் சொல்லபட்ட உண்மை வரலாறு எல்லோருக்கும் அறிந்துகொள்வதற்காக
குருவின் அருளால் புத்கமாக வெளியிடபட்டுள்ளது.
இந்த புத்தகத்தை படிப்பதற்கு கீழே உள்ள இணைப்பை பயன்படுத்திகொள்ளவும் .
https://drive.google.com/open…
இந்த புத்தகத்திற்க்கு copyright
உள்ளது.
இதை மறுபதிப்பு செய்ய
அனுமதி வாங்க வேண்டும் .
குருவே சரணம்!
நன்றி:சென்னையிலிருந்து வெளி வரும் சிறந்த ஆன்மீக மாத இதழான ஞான ஆலயம் செப்டம்பர் 2017 இதழில் வெளியாகியுள்ள கட்டுரையிலிருந்தும்,
Tamil and Vedas
என்ற இணைதளத்திலிருந்தும் பெறப்பட்ட தகவல்களை தொகுத்து பதிவாக வெளியிடபட்டுள்ளது.
சுவாமி குழந்தையானந்தர் படம்,மதுரை மீனாட்சியம்மன் கோவில் தூணில் அன்னை மீனாட்சியுடன் உள்ள சிற்பத்தின படம்,அவரது ஜீவ சமாதிகளின் படங்கள்
Friday, 1 May 2026
32 முப்பத்தி இரண்டு சிவ தீட்சை
அகத்தியர் அருளியவை முப்பத்தி இரண்டு சிவ தீட்சை என்றால் என்ன ?
இறைவனை காணும் வழி காண நமக்கான குருவிடம் தீட்சை பெற வேண்டும். நமக்கான குருவை தேர்த்தெடுக்க இயலாத பட்சத்தில் சிவ பக்தியும், முறையான சிவ வழிபாடும் நாம் கொண்டிருந்தால் அகத்தியரே நமக்கு குருவாயிருந்து நமக்கான குருவை அடையாளம் காட்டி சிவ தரிசனம் பெற வழிகாட்டுகிறார்.
சித்தர்களின் தலையாய சித்தர், அந்த பரம்பொருளின் பிரியத்துக்குரிய அகத்திய மாமுனி, பாமரனும் தகுதி இருந்தால் இறைவனை அடையலாம் என்பதற்காக , பகிர்ந்துகொண்ட தேவ ரகசியம். சித்த ரகசியம் இவை. இவற்றை உணர்ந்து சித்தியடைந்தவர்களுக்கு ஞானம் பெருகும், பாவம் விலகும் என்கிறார்.மேலும் ஆதி சித்தனான சிவனின் பாத தரிசனம் கிடைக்குமாம்.இந்த தீட்சைகளை நற்குமரனான முருக பெருமான் தனக்கு அருளியதாகவும் கூறுகிறார்.
அகத்தியர் அருளியவை முப்பத்தி இரண்டு சிவ தீட்சைகள். குருவிடம் இருந்து பெறப்படும் உபதேசங்களில் முதன்மையானது இந்த சிவ தீட்சைகள்தான்.இந்த தீட்சைகளை முறையாக குருவின் மூலமாய் பெற்று செபிக்க தீட்சைகள் சித்திக்கும் என்கிறார் அகத்தியர்.
சிவதீட்சையில் முப்பத்தி இரண்டு
மந்திரங்கள். இவை ஒவ்வொன்றுக்கும் தனித்துவமான பலன்கள். நமக்கு தேவையான மந்திரத்தை மட்டும் சொல்லி பலன் பெற்றுக் கொள்ளலாமே என்று நினைக்க வேண்டாம். இந்த முப்பத்தி இரண்டு மந்திரங்களும் ஒவ்வொரு படிநிலையாக கருதப் படுகிறது.ஒவ்வொரு நிலையாக பூரணத்துவம் பெற்று மந்திரம் சித்தியடைந்த பலனை உணர்ந்த பின்னரே அடுத்த நிலைக்கு முன்னேறிச் செல்லுதல் வேண்டும். அகத்தியர் அருளியவை முப்பத்தி இரண்டு சிவ தீட்சைகள் விளக்கத்தை விரிவாக பார்க்கலாம்.
சிவதீட்சை – 1
ஸ்ரீம் அம் ஓம்” என்று லட்சம் முறை செபிக்க முதல் தீட்சை சித்தியாகும். அப்போது இறைவனின் திருக்காட்சியைக் காணலாம் என்கிறார். காட்சியைக் காணும் போது தேகமெல்லாம் வேர்த்துப் போகும். ஆனால் இந்தக் காட்சி கண் மாயை அல்ல, இதைக் கண்டு தேறுவதே முதல் தீட்சையாகும் என்கிறார் அகத்தியர்.
சிவதீட்சை – 2
“ஆம் ஓம் ஹரீம் ரீம்” என்ற மந்திரத்தினை லட்சம் முறை செபிக்க இரண்டாவது தீட்சை சித்தியாகும். அப்போது மூச்சு உள்ளடங்குவதுடன் , முக்தியும், சக்தியும் சித்தியாகும் என்கிறார்.
சிவதீட்சை – 3
“குறோம் ஸ்ரீம் றீம் றீம் நம்” என்ற மந்திரத்தினை லட்சம் முறை செபிக்க மூன்றாவது தீட்சை சித்தியாகும். அப்போது சந்திரனை போல தேகம் ஒளிவீசும் என்கிறார்.
சிவதீட்சை – 4
“ஸ்ரீங் அங் உங்” என்று லட்சம் முறை செபிக்க நான்காவது தீட்சை சித்தியாகும். அப்போது மோட்சமும், தேவதைகள் உனக்கு பணியும் தன்மையும் ஏற்படும் என்கிறார்.
சிவதீட்சை – 5
“யங் வங் றீங்” என்று லட்சம் முறை செபிக்க ஐந்தாவது தீட்சை சித்தியாகும். அப்போது தேவதைகள் ஒரு சட்டையைத் தரும். அதை அணிந்துகொள் என்கிறார்.
சிவதீட்சை – 6
“சங் ரங் உம் ஆம்” என்று லட்சம் முறை செபிக்க ஆறாவது தீட்சை சித்தியாகும். அப்போது தேகத்தில் வாசம் வீசும். அத்துடன் தேகசுத்தியும் சித்திக்கும் என்கிறார்.
சிவதீட்சை – 7
“இங் ரங் அவ்வு” லட்சம் முறை செபிக்க, மானை கையில் ஏந்தி இருக்கும் சிவன் அருகில் இருப்பார். வானவர்கள் மகிழ்ச்சியுடன் வா வா என்று அழைப்பார்கள் என்கிறார்.
சிவதீட்சை – 8
“மங் றீங் ரா ரா” என்று லட்சம் முறை செபிக்க ஆனந்தம் உண்டாகும். அத்துடன் தேவர்கள் வந்து உன்னுடன் இணைவார்கள் என்கிறார்.
சிவதீட்சை – 9
“வங் கிலியும் சிங் அம் ஐம்” என்று லட்சம் முறை செபிக்க உன் வினைகள் எல்லாம் தீர்ந்து உடல் கல்லைப் போல் உறுதிபெறும்.இவ்வாறு ஒன்பதாவது தீட்சை சித்தியாகும் என்கிறார்.
சிவதீட்சை – 10
“வம் வும் அம் இம்” என்று லட்சம் முறை செபித்தால் தேகம் பொன் போல ஆகும். இவை இனிதான பத்தாவது சிவதீட்சை ஆகும் என்கிறார்.
சிவதீட்சை – 11
“மங் றீங் றீங்” என்று லட்சம் முறை செபிக்க பதினோராவது தீட்சை சித்திக்கும். பாதி மதியை சடையில் அணிந்த சிவபெருமானின் திருவடியைப் பணிந்து என்றென்றும் தொண்டனாய் இருப்பாய் செய்துபார் என்கிறார்.
சிவதீட்சை – 12
கற்பம் உண்டு நிலைத்தவர்க்கு சிவபெருமானின் ஒருமுகமான தற்புருசமே இது. “வம் ஆம் நம்” என்று லட்சம் உரு செபிக்க சித்தியாகும். கெவுன மார்க்கம் செலல ஏதுவாக சட்டை ஒன்றும் கிடைக்கும் அதை அணிந்தால் கெவுன சித்தி கிடைக்கும் என்கிறார்.
சிவதீட்சை – 13
அறிவுத் தெளிவுடன் “ஊம் ஆம்” என்று லட்சம் முறை செபிக்க தேகம் வச்சிர தேகமாகும். எமன் கூட அருகில் வர மாட்டான்.இவ்வாறு பதின்மூன்றாவது தீட்சை சித்திக்கும் என்கிறார்.
சிவதீட்சை – 14
“றம் றூம் ஸ்ரீம் அவ்வு” என்று லட்சம் முறை செபிக்க பதின்நான்காவது தீட்சை சித்தியாகும். சாயுட்சய பதம் பெறுவார் என்கிறார் .
சிவதீட்சை – 15
“ஸ்ரீம் றீம் றீம் ஓம்” என்று லட்சம் முறை செபிக்க தேகம் கல்போலாகும். தேர்ந்துபார். என்ன அற்புதம் சிவ சிவா நாதவிந்து கட்டிப்போகும்.இதுவே பதினைந்தாவது தீட்சை ஆகும். இவைகளை ஆய்ந்தறிந்தவர்களுக்குப் பதினாறாம் தீட்சையைச் சொல்கிறேன் கேள் என்று தொடர்கிறார்.
சிவதீட்சை – 16
“சங் இங் றங்” என்று லட்சம் முறை செபிக்க மாந்தளிர் போல் தேகமுள்ள மனோன்மணித் தாய் தன் இருகரம் நீட்டியபடியே மகனே என வருவாள். அவள் வரும் போதே அவளைப் பணிந்துகொள் என்கிறார் அகத்தியர்.இதுவே பதினாறாவது தீட்சையாகும்.
சிவதீட்சை – 17
“றீங் றீங் ஸ்ரீம் ஸ்ரீம்” என்று லட்சம் முறை செபிக்க காய்ப்பான நரையும் இல்லை. திரையும் இல்லை. கற்பத்தை உண்ண சுருக்கான வழி. வழியறியாதவர்கள் உன்னை ஏய்த்து விடுவார்கள். அவர்களின் ஏய்ப்புக்கு நீ ஆளாகிவிடாதே என்கிறார்.மேலும் இது ஒரு நல்வாய்ப்பு என்கிறார் அகத்தியர். இதுவே பதினேழாம் சிவதீட்சையாகும்.
சிவதீட்சை – 18
“சங் சிங் ரா ரா” என்று லட்சம் முறை செபிக்க சட்டை போகும். இது ஈஸ்வரியாளின் தீட்சை என்கிறார். இது பதினெட்டாவது தீட்சையாகும்.
சிவதீட்சை – 19
“திரிநேத்திராயா வா வா” என்று விருப்பமுடன் லட்சம் முறை செபிக்க பத்தொன்பதாவது தீட்சை சித்தியாகும்.இந்த தீட்சை சட்டையை தள்ளும் என்கிறார்.
சிவதீட்சை – 20
“ஸ்ரீங்காரதேவாய நமா” என்று லட்சம் முறை செபிக்க தொட்டதெல்லாம் சித்தியாகும்.இது இருபதாவது சிவதீட்சையாகும்.
சிவதீட்சை – 21
“இங் அங் றங்” என்று லட்சம் முறை செபிக்க எட்டுத் திசையையும் வெல்லலாம்.இதுவே இருபத்தியொன்றாவது சிவதீட்சையாகும்.
சிவதீட்சை – 22
“அரி அரி ஓம்” என்று என்று லட்சம் முறை செபிக்க இருபத்தி இரண்டாவது சிவதீட்சை சித்தியாகும்.
சிவதீட்சை – 23
“ரா ரா ரா றீம் றீம்” என்று லட்சம் முறை செபிக்க இருபத்தி மூன்றாவது சிவதீட்சை சித்தியாகும்.
சிவதீட்சை – 24
குணமாகவும் மறைவாகவும் “லீ லீ லீ அரஹர றீ றீ றி” என்று லட்சம் முறை செபித்து வாழ்த்துவாய் என்கிறார் அகத்தியர்.
சிவதீட்சை – 25
இருபத்தி ஐந்தாவது தீட்சையைக்கேள். கெவுனம் ஓடவென்றால் இதைக்கேள். “ஏ ஏ ஏ ஊ ஊ ஊ” என்று லட்சம் முறை செபிக்க இந்த தீட்சை சித்தியாகும் என்கிறார்.
சிவதீட்சை – 26
இருபத்து ஆறாவது தீட்சையைக்கேள், இது மாதாவின் தீட்சை இது, “இஷயா இஷயா ஓம்” என்று லட்சம் முறை செபிக்க மௌனம் சித்தியாகும் என்கிறார்.
சிவதீட்சை – 27
இருபத்தி ஏழாவது தீட்சையைக்கேள். இத்தீட்சையில் நீயே சிவனாவாய். அதைச் சொல்கிறேன். “ஓம் சிவாய சிவா றீங்” என்று லட்சம் முறை செபிக்க வேண்டும் என்கிறார்.
சிவதீட்சை – 28
இருபத்தி எட்டாவது தீட்சையைக்கேள். “சிவ ஓம் சிவாய நம” என்று லட்சம் முறை செபிக்க உலகத்தில் பூரிப்பான புகழ் உண்டாகும் என்கிறார் அகத்தியர்.
சிவதீட்சை – 29
இருபத்தி ஒன்பதாவது தீட்சையைக்கேள். இது போற்றுதற்குரிய புகழ் கிடைக்கும். அதற்கு “சவ்வும் மவ்வும்” என்று லட்சம் முறை செபிக்க வேண்டும் என்கிறார்.
சிவதீட்சை – 30
முப்பதாவது தீட்சையைக்கேள். “மங் சங் கங்” என்று லட்சம் உரு செபிக்க
உன் தேகம் ஒருநாளும் அழியாது. அகம் மகிழ நரையும் இல்லை திரையும் இல்லை. யுகம் வரைக்கும் உன் தேகத்தை நிலைநிறுத்தும்.
சிவதீட்சை – 31
, “ஸ்ரீம் றீம்” என்று ஓதுவாய் லட்சம் உரு இது முப்பத்தியொன்றாம் தீட்சை என்கிறார்.
சிவதீட்சை – 32
முப்பத்து இரண்டாந் தீட்சைகேள். “நங் கிலி சிங் கிலி” என்று லட்சம் உரு செபிக்க கோடி காலம் வரை இறவாமலிருத்தும் மற்றுமுள்ள காலமனைத்தும் வாழ்த்தி தோத்திரங்கள் செய்து கொள்வாய். கொன்றாலும் வாள் கொண்டு வெட்டிப்போட்டாலும் வெட்டுப்பட்ட இடம் சற்றும் குறையாமல் ஒட்டிக்கொள்ளும் என்கிறார்.
