Tuesday 2 January 2018

யாகம் செய்தால் யோகம் வரும்!

யாகம் செய்தால் யோகம் வரும்!


இந்துக்களின் வாழ்வியல் நடைமுறையில் வேதம் ஒவ்வொரு நாளும் பங்கு வகிக்கிறது. பிறப்பு முதல் இறப்பு வரையில் தொடரும் வாழ்நாளில் வேதத்தை தெரிந்தோதெரியாமலோ பின்பற்றுகிறோம். அல்லது நாம் பின்பற்றுகிற அனைத்தும் வேதங்கள் நமக்குப் பாரம்பரியமாகக் கற்பித்த விஷயங்களேயாகும்.
          அவ்வப்போது இவற்றை நமக்கு எளிமையாகவும் தெளிவாகவும் மகான்கள் எடுத்துக்கூறிநடைமுறைப் படுத்தியிருக்கிறார்களே தவிரயாரும் வேதமுறையை அழித்துவிடவில்லை. எப்படி பக்தி செலுத்த வேண்டும்எப்படி வாழவேண்டும்தோல்வியைத் தவிர்ப்பது எப்படி?
       எப்படி வாழ்ந்தால் மோட்சம் கிட்டும் என்பது வரை சகல விஷயங்களையும் வேதங்கள் எடுத்துக்கூறுகின்றன. இந்த வேதத்தில் ஒரு பகுதிதான் யாகம் அல்லது வேள்வி செய்தல் என்பது. வெற்றிகரமான வாழ்வு வாழ்வதற்காக இதைச் செய்தார்கள்.
         பகைவர்களை வெல்வதற்கு, பிறரை தன் வயப்படுத்தசெல்வம் சேரபிள்ளைப் பேறு அடைய இப்படி நிறைய விஷயங்களுக்காக வேள்விகளைச் செய்தார்கள்.
        அகத்தியர், ராமருக்கு வேள்வி பற்றி உபதேசிக்கும்போதுநீயே பரமாத்மாவாக உன்னை தியானம் செய்துகொண்டு விரதத்தை மேற்கொள்ள வேண்டும் என்று உபதேசித்திருக்கிறார். ஒருவன் எப்படி பரமாத்வாக மாறுவது?
        எப்போதும் இறை நினைவோடு இருக்கிறவன் இறைவனாகவே ஆகிறான். நீ எதுவாக உன்னை நினைக்கிறாயோஅதுவாகவே ஆகிறாய் என்கிறார்களேஅதுவே இது.
         மின்சாரம் பாய்ச்சப்பட்ட கம்பியை நாம் தொடும் போதுகம்பி ஷாக் அடித்தது என்று சொல்வதில்லை. மாறாககரண்ட் ஷாக் அடித்தது என்போம். இப்படி இறைமயமான மனம் இருக்கும்போது இறைவனாக நாம் மாறுகிறோம். அந்த நிலையை விட்டு நீங்கும் போதுசாதாரண நிலையை அடைகிறோம் என்பது
         சாஸ்திரங்கள் நமக்குக் கற்றுத் தருகிற விஷயம். கடவுளாக தன்னை பாவித்துக் கொண்டு, விரதத்தைத் தொடங்க வேண்டும் என்பது விதி. அந்த விதிகளில் சிலவற்றைப் பார்ப்போம். யாகம் செய்வதற்கு முன் நாள் உபவாசம் இருக்க வேண்டும். வீட்டில் கணபதி ஹோமம் செய்வதாக இருந்தாலும் முன் தினம் உபவாசம் இருக்க வேண்டும்.
         யாக தினத்தன்றுஅதிகாலையில் அதாவது சூரிய உதயத்திற்கு முன்பு நீராட வேண்டும். அக்காலத்தில் சனி நீராடு என்றார்கள். இதற்கு சனிக்கிழமை தோறும் எண்ணெய் தேய்த்து நீராடு என்று பொருள் சொல்லிவிட்டார்கள். உண்மையில்இதற்கு வேறு இரண்டு பொருட்களும் உண்டு.
           ஒன்று சனி நீராடு அதாவது ஊற்று நீரில் நீராட வேண்டும். புதிய நீரில் குளிப்பது என்றும் கூறலாம். (பாத்திரத்தில் பிடித்துத் தேங்கிய நீர் அசுத்தமாக மாறிவிடும் என்பதால் புதிய நீரில் குளிக்க வேண்டும் என்றார்கள்.) தேங்காத நீர் ஆற்று நீர். ஆற்று நீரில் குளி என்றும் இதைக் கூறலாம். இதற்கு இன்னொரு காரணமும் உண்டு.
        ஆங்கீரஸர் என்ற முனிவர் ஒரு சமயம் யாகம் செய்துவிண்சலகம் சென்றார். போகும்போது தனது தவம்தான் பெற்ற தீட்சை ஆகியவற்றை தண்ணீரில் விட்டுச் சென்றார் என்று சிவ கீதை கூறுகிறது. இவ்வாறு விட்டுச் சென்ற தவத்தையும்,தீட்சையும் தண்ணீர் அளிப்பதால் ஆற்றில் நீராட வேண்டும்.
           அடுத்துசனி நீராடு என்பதற்கு சூரியன் அதிகாலையில் உதிக்கும் முன்பு (பிறக்கும் முன்பு) குளித்துவிடு என்று பொருள். நீராடுவதற்கு முன்பாக தன் உடலிலுள்ள நகம் போன்றவற்றையும்முகத்திலுள்ள ரோமங்களையும் நீக்கிவிட வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
            யாகத்தின் போது வெண்ணிறமான ஆடைபுதிய பூணூல்வெண்ணிற மலர் மாலைவாசனை திரவியங்கள் ஆகியவற்றைத் தரித்துக்கொள்ள வேண்டும். வெண்ணிற வஸ்திரத்தை அணிவதற்கு வஸ்திர தீட்சை என்று பொருள். ஆகவேதான் வெண்ணிற வஸ்திரம் அணியச் சொல்கிறார்கள்.
            அடுத்துசங்கல்பம் செய்துகொள்ள வேண்டும். எதற்காக இந்த ஹோமம் யாகத்தைச் செய்கிறோம் என்கிற விருப்பத்தை வெளியிட்டுஅதை நிறைவேற்றித் தர இறைவனை வேண்டுவதே சங்கல்பம். சங்கல்பத்தின் போதுவலது தொடை மீது இடது உள்ளங்கைத் தெரிவது போலவைத்து,அதன் மீது வலது கையை வைத்து மூட வேண்டும்.
           தனது இடம்பெயர்நட்சத்திரங்கள்காரணம் ஆகியவற்றைக் கூறி இதற்காக இதைச் செய்கிறேன் என்று சொல்ல வேண்டும். வேத மந்திரங்களைச் சொல்லி அக்னி வளர்க்க வேண்டும். அக்னி வளர்த்த பிறகு ஹோமம் ஆரம்பிக்கும். ஹோமத்தின் போதுவிரத மந்திரங்களை ஒருமுகப்பட்ட மனத்துடன் ஓதி, சமித்துநெய்மூவிஸ் ஆகியவற்றை அளிக்க வேண்டும். கடைசியாகப் பூரணாகுதி செய்வார்கள்.
         பூரணாகுதியின் போதுஅக்னியை பின்வருமாறு வேண்டிக் கொள்ள வேண்டும். அக்னியேஉமது ஒளி எதுவோஅதனால் நான் ஒளி பொருந்தியவனாக ஆக வேண்டும். உமது சக்தி எதுவோஅதனால் நான் சக்தியுடையவனாக வேண்டும். என்றெல்லாம் அக்னியைத் துதித்து, அதன் சக்தியை தனதாக்கிக் கொள்ள வேண்டும்.
          யாகம் முடிந்ததும்அதிலுள்ள சாம்பலை எடுத்து இடது கை உள்ளங்கையில் வைத்துவலது கை மோதிர விரலால் குழைத்து நெற்றிகழுத்துமார்பு,வயிறுதோள்கள்இடுப்புதலை என எல்லா இடங்களிலும் பூசிக்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதற்கு ரட்சை என்று பெயர்.
         ரட்சை என்பது சாம்பல் மட்டுமல்லஅது பகவானுடைய சக்தியாகும். இச்சக்தியை தரித்து, நாள் முழுக்க ஒரு மனத்தோடு அவனது நாமாவை இடைவிடாமல் ஜெபித்தால்,நாம் நினைத்த காரியம் கைகூடும்.
அகத்தியர் இப்படி ராமருக்கு உபதேசம் செய்து இருக்கிறார். ஆனால்நாம் காசுக்காக ஒரு மணி நேரத்திற்கு ஹோமம் செய்துவிட்டுஎல்லாவற்றையும் ஓரங்கட்டி விடுகிறோம். இது தவறு.
       எல்லாவற்றிலும் ஓரங்கட்டப்பட்டவர்கள்புதிய நிலைக்கு வருவதற்கு இத்தகைய ஹோமம் செய்வது நல்லது.

No comments:

Post a Comment