Sunday, 28 January 2018

ஹர ஹர சிவ சிவ ஷண்முகநாதா

எழும் போதும் வேலும் மயிலும் என்பேன்

எழுந்தே மகிழ்ந்து. தொழும் போதும் வேலும் மயிலும் என்பேன்

தொழுதே உருகி அழும் போதும் வேலும் மயிலும் என்பேன்

அடியேன் உடலம் விழும் போதும் வேலும் மயிலும் என்பேன்

ஹர ஹர சிவ சிவ ஷண்முகநாதா
ஹர ஹர சிவ சிவ என்முக நாதா

ஹர ஹர சிவ சிவ பரம விலஸா
ஹர ஹர சிவ சிவ அபய குஹேஸா

அருண கிரிபரவும் அருணெறி நாதா
தரும வுருவர்புகழ் சததள பாதா

அரிபிர மாதிக டொழுவடி வேலா
திருவடி நாரவ ருளமுறை சீலா

எனினிய குருநித மெனுமதி யீசா
சனனவெய் தறவளி தருபர மேசா

பாசா பாச பாப வினாசா
மாசே றாத மான நடேசா

போஜா வாஜா பூஜகர் நேசா
தேஜா ராஜ தேவஸ மாஜா

திஞ்சுவை யருளொரு திருவா ரமுதே
ஓம்சர வணபவ வுருவே யருவே.

-   ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்

🙏  ஓம் குமர குருதாச குருப்யோ நம:  🙏













No comments:

Post a Comment