கல்லால மரம்
போகர்
:- ”ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தவக்கோலம் பூண்டிருக்கும் கல்லாலமரம் பூலோகத்திலுள்ளதா சற்குருவே?”
அகஸ்தியர்
:- “கோடிக் கணக்கான ஆன்மீக ரகசியங்கள்
பொதிந்துள்ள திருஅண்ணாமலையில் மலை உச்சியில் கல்லால
மரம் உள்ளது. இம்மரத்தின் அடியில்
ஸ்ரீ தட்சிணாமூர்த்தி மனித சரீரத்தில் இன்றும்
காட்சி தருகிறார். இந்தியாவின் பல புண்ணிய நதி
தீரங்களிலும், பொதிகை மலை, இமய
மலை, கொல்லி மலை போன்ற
சித்தர்கள் வாழும் மலைப் பகுதிகளிலும்
கல்லாலமரம் விளங்குகின்றது. ‘ஊர்த்துவ மூலமரம்” எனப்படும். இம்மரத்தின் வேர்ப்பகுதி வளைந்து மேல் நோக்கி
வானத்தில் வேர்விட்டு இருக்கும். காண்பதற்கு அரிய காட்சி இது,
வேர்ப்பகுதி மேல் நோக்கியும், இலைத்
தழைகள் கீழ்நோக்கியும் அமைந்துள்ள அற்புத விருட்சங்கள் பல
உண்டு. இவற்றின் தரிசனமே பல சித்திகளைத்
தரவல்லது.
திருஅண்ணாமலையில்
கல்லாலமரம் அமைந்துள்ள மலைப் பகுதிய்ல் காட்சிதரும்
ஸ்ரீ ஆயுர்தேவி சிலாரூபத்தைச் சனகாதி முனிவர்கள் நால்வரும்
இன்றைக்கும் தினமும் வழிபட்டுச் செல்கின்றனர்.
திருஅண்ணாமலையைத் தாண்டாது அதனைச் சுற்றிச் செல்லும்
சூரியபகவானும் ஸ்ரீ ஆயுர்தேவியை தினமும்
வணங்கி செல்கின்றார்.
இது
தவிர இமய மலைப் பகுதியிலும்
ஸ்ரீ மஹாஅவதூது பாபா, த்ரைலிங்க ஸ்வாமி
போன்ற அற்புத மஹான்கள் தினமும்
வழிபடுகின்ற பனி மலை குகையில்
ஸ்ரீ தாராதேவி ஆலயத்தில் ஸ்ரீ ஆயுர்தேவிக்கு சன்னதி
அமைந்துள்ளது. குருஅருள் பெற்றோர் இதனை இன்றும் தரிசிக்கலாம்.
ஸ்ரீ
இரமண மஹரிஷி தரிசனம் செய்த
கல்லால இலையைக் கொண்டுள்ள அபூர்வமான
கல்லால மரம் அமைந்திருக்கும் திருஅண்ணாமலை
உச்சிப் பகுதியில் ஸ்ரீ ஆயுர்தேவியின் சிலாரூப
வடிவைக் காணலாம். இது இன்றைக்கும் பிரம்ம
ரகசியமாகவே இலங்குகிறது.
No comments:
Post a Comment