Friday 19 January 2018

ஸ்ரீகயாசுர மகரிஷி


ஸ்ரீகயாசுர மகரிஷி

போகர் :- “ஸ்ரீ ஆயுர்தேவியின் வலக் கரங்கள் நான்கில் முதல் கரப்பீடமாய் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ கயாஸுர மகரிஷியைப் பற்றி விளக்க வேண்டுகிறேன் குருதேவா!”

அகத்தியர் :- “ஸ்ரீ ஆதி பராசக்தி உறையும் ஸ்ரீ வித்யா லோகத்தில் அற்புதமான பித்ரு கோண சூட்சும பிந்து ஆரத்தில், தங்கத் தாமரை மேல் சந்திர கலையில் கடக ஆரத்தில் குண்டலி சகிதமாய் சங்கு சக்ரதாரியாக மூன்று கண்களுடன் ஒளிவிடுப் பிரகாசிப்பவள்ஸ்ரீமா தேவிஆவாள்.

ஸ்ரீமாதேவியை உபாசனை செய்து உன்னத உத்தம நிலை அடைந்தவரே கயாஸுர மகரிஷியாவார். ஆயிரம் மகாலக்ஷ்மி தேவியர் ஒருமித்து அளிக்கின்ற வரங்களை ஸ்ரீமாதேவி தனிப் பெரும் தேவியாய் அருளும் பாங்குடையவள். பிரதமை திதியில் வழிபடுவது இவளுக்குப் பிரீதியானது. குறிப்பாக நவராத்திரிப் பிரதமைத் திதியில் இத்தேவியின் அருட்தன்மை பன்மடங்காகப் பெருகி வர்ஷிக்கும்.”



ஸ்ரீகயாசுர மகரிஷி

பித்ரு சாப நிவர்த்தி

போகர் :- “ஞானதேவா! கயாஸுர மகரிஷி, ஸ்ரீமாதேவியைக் குறித்து தவமியற்றியது ஏன்?”

அகத்தியர் :- ”கலியுகத்தில் மக்களுடைய பெரும்பான்மையான துன்பங்களுக்கு மூல காரணம் அவர்கள் தங்கள் பித்ருக்களுக்குரித்தான கடமைகளை நிறைவேற்றாததே ஆகும். தானம், தர்ப்பணம், சிராத்தம் போன்ற பித்ரு கடன்களை மனப் பூர்வமாகச் செய்பவர்களும், ஆத்மார்த்தமாகச் செய்து வைப்பவர்களும் அருகி விட்டனர். ஊதியத்திற்கேற்ப ஓதுவதே மந்திரம் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. இவற்றைப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தீர்க்க தரிசனமாக அறிந்த ஸ்ரீ கயாஸுர மகரிஷி, கலியுக மக்களைப் பித்ரு சாபங்களிலிருந்து மீட்கும் பொருட்டு ஸ்ரீமாதேவியை நோக்கி தவமிருந்தார்.

கயா ஸ்தலபுராணம்
கோடானு கோடி யுகங்கள் தவமிருந்து ஸ்ரீ கயாஸுர மகரிஷியின் தன்னலமற்ற தவப்பெரு நிலையைக் கண்டு அதிசயித்தனர் தேவர்கள். அவர்கள் கயாஸுர மகரிஷியை அணுகிதங்கள் அற்புத தவத்தால் ஸ்ரீமாதேவி தங்களுக்கு அருளும் முன், எங்களால் இயன்ற தொண்டைத் தங்களுக்கு அர்ப்பணிக்கின்றொம்என்றனர். ஸ்ரீ மாதேவியின் அருளால் அவர்களுடைய வினயத்தை அறிந்து கொண்ட மகரிஷி, “நீங்கள் அனைவரும் என் அங்கத்தில் இடம் பெற்று வாழ்த்தியருள வேண்டும்!” என்று வேண்டினார்.”

போகர் :- “சற்குருவே! முப்பத்து முக்கோடி தேவர்கள் குடிபுகும் தேக அமைப்பை ஸ்ரீ கயாஸுர மகரிஷி கொண்டார் என்றால் எத்தகைய தவநிலையை அவர் மேற்கொண்டிருத்தல் வேண்டும்! கேட்பதற்கே வியப்பாய் உள்ளதே!”

அகஸ்தியர் :- “உண்மைதான் போகா! கயாஸுரர் ஸ்ரீ மாதேவியின் பரிபூரண அருளை பெற்றவர் அல்லவா! அமிர்தம் அருந்திய முப்பத்து முக்கோடி தேவர்களின் வாசத்தால் ஒருமித்த சஞ்சீவ ஸ்திர வாழ்வை ஸ்ரீ மாதேவியின் கருணயால் பெற்ற ஸ்ரீ கயாஸுர மகரிஷி, விண்ணகத்து நெடிது வளர்ந்த கல்லால மரம் போல் தேவாதி தேவரின் சரீரங்களோடு பூமியில் புதையுண்டார். அதுவே இன்றைக்கும் கோடிகோடியான ஜீவன்களின் பித்ரு சாபங்கள் நிவர்த்திக்கும்கயாபுனித பூமியாகும். அவர்தம் புனித தேகத்தில் எழுந்த புண்ணிய ஸ்தலமே கயா.

தலைமுறை தலைமுறையாக மனிதர்கள் வளர்த்து வந்த பித்ரு கடன்கள், முப்பத்து முக்கோடி தேவர்களின் திருவருளாலும், ஸ்ரீ மாதேவியின் பரிபூரண அனுக்ரகத்தாலும், ஸ்ரீ கயாஸுர மகரிஷியின் அருந்தவத்தாலும் கயா பூமியில் இடும் பிண்ட, தர்ப்பணத்தால் நொடியில் தீர்கின்றன.”

புலிப்பாணி :- “அத்துணை கோடி மக்களின் பாவச் சுமைகளைத் தாங்க வல்லவரன்றோ கயாஸுர மகரிஷி! குருவே!”

ஸ்ரீ விஷ்ணு பாதம்
அகஸ்தியர் :- “ஆம்! ஸ்ரீ கயாஸுர மகரிஷி இன்றைக்கும் அருள் பாலிக்கும் கயா திருத்தலத்தையே, பிரம்மா தம் சிருஷ்டிக்கான பிரம்ம யாகத்தை நடத்தத் தேர்ந்தெடுத்தார். பித்ரு தேவர்களின் அதிபதியான ஸ்ரீ மகாவிஷ்ணு கயாஸுர மகரிஷியின் இருப்பிடமான கயா ஸ்தலத்தையேஸ்ரீ விஷ்ணு உதயஸ்தானமாக ஏற்று தம் ஸ்ரீ விஷ்ணு பாதங்களைப் பதித்தார்.

கயாஸுர மகரிஷியின் திருமார்பில்தான் ஸ்ரீ விஷ்ணுவின் திருப்பாதங்கள் தரிசனம் அளிக்கின்றன. இவ்வாறாக கயா பூமியைப் பித்ரு தேவர்களின் தெய்வீக பூமியாக, ஸ்ரீ விஷ்ணு பாத ஸ்தலமாக மாறப் பெரும் தவம் புரிந்தவர் ஸ்ரீ கயாஸுர மகரிஷியே

பிண்ட தர்ப்பண பலன்

போகர் :- “கயா ஸ்தலத்தில் பிண்ட தர்ப்பணம் இடுவதால் யாது பயன் குருதேவா?”

அகஸ்தியர் :- கலியுகத்தில் மனிதனின் உடல், உணவைச் சார்ந்து அன்னமய கோசமாக உள்ளது. பித்ருக்களோ தங்கள் உணவை ஜலமயமாய்ப் பெற வேண்டும் என்பது இறை நியதி. அதனால்தான் தர்ப்பணங்கள் நீரால் வார்க்கப்படுகின்றன.

தேவர்கள் அக்னி மூலமாகவும், கந்தர்வர்கள் பசுநெய் மூலமாகவும் உணவைப் பெற வேண்டும் என்பதும் இறை நியதியே! பித்ரு தேவர்களின் அதிபதியான ஸ்ரீ மகாவிஷ்ணுவே கயாவில் ஸ்ரீ பாத ஸ்வரூபத்தில் உறைவதால் அவரே பிண்ட தர்ப்பணங்களை ஏற்று அன்னமாகவும், நீராகவும், பசுநெய்யாகவும் பகுத்து அளித்து பித்ரு கடன்களை நொடியில் தீர்த்து அருள் புரிகின்றார். கங்க-மாதேவி இதற்குச் சாட்சியாக நிற்க, நீர்த்தாரை வர்ஷிக்கும் போது பித்ருகடன் நிவர்த்தி பூர்த்தியாகிறது.”

போகர் :- “உயர் ஆசானே! பித்ரு கடன்கள் தீருவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?”

அகஸ்தியர் :- “ஸ்ரீ மாதேவியின் அருள் பெற்றாலே பித்ரு கடன்கள் தீரும். இதற்கு வித்திடுபவர் ஸ்ரீ கயாஸுர மகரிஷி. இவர் பல பரிகாரங்களை அருளியுள்ளார்.

எளிய பித்ரு பரிகார முறைகள்

1001 முறை காயத்ரி மந்திரம் ஜபித்து கோதுமைப் பண்டங்கள நான்கு திக்குகளிலும் வைத்து நாய்களுக்கு இடுவதால் பில்லி, சூன்யத் துன்பங்கள் நீங்கும்.

இறந்தவர்களுக்கு விருப்பமான உணவுகள், ஆடை அணிகலன்கள் ஏனைய பொருட்களை காயத்ரி மந்திரத்தை ஜபித்து ஏழைகளுக்கு தானமாக அளித்தால் தடைப்பட்ட திருமணங்கள் நன்கு நடைபெறும்.

பொறாமை, குரோதங்களால் சிலர் பல குடும்பங்களைப் பிரித்து துன்புறுத்தியிருப்பர். இவர்கள் காயத்ரி மந்திரத்தை ஜபித்து பசு தானம் செய்தால் குடும்பங்களைப் பிரித்த பாவங்கள் தீரும். பெண்கள், பசுக்களுக்கு மஞ்சள் இட்டு பழம், கீரை போன்ற உணவையளித்து கோத்ரய மந்திரங்களை ஜபித்து 21 முறை பசுவை வலம் வர வேண்டும்.

ஆண்களாயின் பசுவிற்குக் குங்குமமிட்டு மேற்கண்டவாறு பெண்களைப் போல் வழிபடவேண்டும்.

குழந்தை பாக்கியம் வேண்டுவோர் நான்கு இதழ்களுடன் கூடிய ஆராக்கீரையின், ஒவ்வொரு இலைக்கும் 11 முறை காயத்ரி மந்திரம் ஜபித்து சிறிது வெல்லம் சேர்த்து கர்ப்பிணிப் பசுவிற்கு ஆகாரமாய் அளித்து வந்தால் குழந்தை பேறு கிட்டும்.”

இந்த தானதர்மங்களை எந்நாளிலும் எவ்விடத்திலும் செய்யலாம். கங்கை, காவிரி போன்ற புண்ணிய நதிக் கரையில் செய்தால் விசேஷமான பலன்கள் கிட்டும்.

ஏனைய பரிகாரங்கள்

மயக்க நிலையில் வாதத்தில், coma  நிலையில் பேச இயலாது இறந்தவர்களுக்காகக் கிழக்கு மேற்காக தர்ப்பைகளை வைத்து அதன் மேல் பிண்ட தர்ப்பணம் செய்தல் வேண்டும். ஊமைகளுக்கும் இவ்வாறே.

நிறைய கடன்களை விட்டுச் சென்று இறந்தோருக்கு வடகிழக்கில் தர்ப்பைகளைப் பரப்பிப் பிண்ட தர்ப்பணம் செய்தல் வேண்டும்..

ஆண் சந்ததி இல்லாதோர் தர்ப்பைகளை வடகிழக்கிலும், பெண் சந்ததி இல்லாதோர் வடமேற்கிலும் தர்ப்பைகளைப் பரப்பி தர்ப்பணம் செய்தல் வேண்டும்.
சந்ததியில்லாது இறந்தோர்க்கு தர்ப்பைகளை தென்மேற்கில் பரப்பி பிண்ட தர்ப்பணம் செய்தல் வேண்டும்

இது தவிர பெண்கள் தங்கள் மாமனார், மாமியார் பற்றிய பொய், புகார்களைத் தன் பெற்றோரிடம் தெரிய படுத்துவதால் பல துன்பங்கள் ஏற்படும். பெரியோருக்கு அடக்கமாக பணிவிடை செய்யாது, அகங்காரத்துடன் நடக்கும் பெண்களுக்கும் சில சாபங்கள் உண்டு. இவர்கள் தர்ப்பையில் மூன்று முடிச்சுகள் இட்டு, அதில் பிண்டம் வைத்து, கட்டிய வஸ்திரங்களுடன் நீரில் இறங்கி, பிண்டத்தை நீரில் இட்டு, கட்டிய வஸ்திரத்தையும் தானம் செய்தல் வேண்டும். இதனால் தகாத முறையில் தாம் வருத்திய மாமனார், மாமியார்களின் சாபங்களிலிருந்து நிவர்த்தி பெறலாம்.

பெண்கள் பிண்டமிடுதல்

போகர் :- ”பெண்கள் பிண்டம் இடலாமா குருதேவா?”

அகஸ்தியர் :- “இடலாம். ஒரு நாட்டுப்பெண் புகுந்த வீட்டு பெரியோர்களை அவமதித்தால் அப்பெரியவர்கள் அளிக்கும் சாபத்தினால் அப்பெண்ணிற்குப் பலதுயர்கள் உண்டாகும். இதற்காக அப்பெண்தான் மேற்கூறிய முறையில் பிண்டதர்ப்பணம் இட்டு பிராயச்சித்தம் செய்தல் வேண்டும்.”

போகர் :- “பித்ரு ஹோம குண்டங்கள் பற்றி ஸ்ரீ கயாஸுர மகரிஷியின் விளக்கம் யாது குருதேவா?”

பித்ரு ஹோம குண்டங்கள்

அகஸ்தியர் :- இதை விளக்கினால் பல காண்டங்களாக விரிவு பெறும். எனினும் சுருக்கித் தருகின்றேன். மக்களுக்கு அறிவிப்பாயாக!

ஹோமம் செய்வதால் நற்பலன்கள் உண்டாகும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. பித்ருக்களுக்கும் ஹோமம் செய்வதுண்டு. இறந்தவர்களின் உயரத்திற்கேற்பத் தக்க இட்த்தில் ஹோம குண்டம் அமைத்தல் வேண்டும். ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்கள் செய்யும் ஹோமங்களும் உள்ளன. பித்ரு ஹோம குண்டங்கள் எத்திசையில் அமைக்கப்பட வேண்டும் என்பதையும் ஸ்ரீ கயாஸுர மகரிஷி வரையறுத்துள்ளார்.

நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்யும் சில செயல்கள் எத்தகைய தோஷங்களுக்கு நம்மை ஆளாக்குகின்றன என நாம் அறிய மாட்டோம். அத்தோஷங்களுக்கு உரிய நிவர்த்தியையும் கயாஸுர மகரிஷி அருளியுள்ளார்.

வறு
அடைகின்ற
தோஷத்தின் விளைவு
ஹோம குண்டம்
ஆஹூதியாகப் படைக்க 
தோஷம்
அமைக்கும் திசை
வேண்டியது
முதியோர் இல்லம அலலது
சுருஹத்தி
எதிர்பாராத
தென்கிழக்கு
அவர்கள் விரும்பிய உணவை 
அனாதை இல்லஙகளில்
தோஷம்
விபத்துக்கள்
திசை
ஆஹூதியாகத் தானமளித்தல்
விடப்பட்டு பெற்றோர்

நேரும்


மரணமடைதல்




சொத்திற்காக மட்டும்
கோரகத்துரு
நோய்கள்,
வடகிழக்கு
மூதாதையர் சொத்தில் ஒரு பங்கை
காப்பாற்றப்பட்டு பின்பு
தோஷம்
தீராத வறுமை
திசை
சிவன் கோயிலுக்கு அளித்தல்
சொத்தைக் கவர்ந்தபின்

ஏற்படும்

மூதாதையர் விரும்பிய இனிப்புப் 
அவர்களை ஏமாற்றுதல்



பொருளை ஆஹூதியாக்குதல்
கணவன் மனைவியின் பேச்சை
மாரிவடு
குடும்பத்தில்
தென்மேற்கு
அனாதை இல்லங்களில்
கேட்டுப் பெற்றோர்களை
தோஷம்
குழ்ந்தைகளுக்கு
திசை
இருக்கும் விதவைகள்
இம்சித்தல்

மயக்கமேற்படுதல்

வயதானவர்களுக்கு உதவி
அவர்கள் ஆதரவின்றி




மரணம் அடைதல்




பெற்றோர்கள் குழந்தைகளைத்
குமாரிகா
கடைசி
வடமேற்கு
அநாதை
தாம் இருக்கும்போதே
தோஷம்
காலங்களில்
திசை
குழந்தைகளுக்குச்
அநாதை இல்லங்களில்

நிராதரவு

சேவை
சேர்த்தல்





குறிப்பு
விபத்துக்களில் இறந்தோர்க்கு தென்கிழக்கு திசையில் ஹோம குண்டம் வைத்தல் வேண்டும்.

ஸ்ரீகயாசுர மகரிஷி அருளிய தர்ப்பண விதி முறைகள்

வகையினர்
தர்ப்பை நுனியை வைக்க
வேண்டிய திசைகள்
பேச இயலாது
கிழக்கு மேற்கு
இறந்தோர்க்கு
நிறைய கடன்களை
வடகிழக்கு தென்மேற்கு
பாக்கியாக வைத்து
இறந்தோர்க்கு
ஆண் சந்ததி
தென்கிழக்கு வடமேற்கு
இல்லாதோர்க்கு
பெண் சந்ததி
வடமேற்கு தென்கிழக்கு
இல்லாதோர்க்கு
குழந்தை 
தென்மேற்கு வடகிழக்கு
இல்லாதோர்க்கு
மாமனார் மாமியாரைப்
தர்ப்பையில் மூன்று முடிச்சுகள்
பற்றித் தவறான
இட்டு அவற்றில் பிண்டம்
புகார்களை தங்கள்
வைத்து கட்டிய
பெற்றோரிடம் கூறும்
வஸ்திரத்துடன் நீரில் இறங்கி
பெண்கள்
பிண்டத்தை நீரில் இட்டு
(இதற்குப்
மாற்றுடை பூண்டு
பெரிய சாபங்கள்
கட்டிய வஸ்திரத்தை
உண்டு)
தானமாக அளித்தல்



குறிப்பு

தர்ப்பண மந்திரங்கள் அறியாதோர் மேற்கண்ட திசைகளில் தர்ப்பைகளை வைத்து இறந்தவரின் பெயரைச் சொல்லி திறந்த வலது கையின் கட்டைவிரல், ஆள்காட்டி விரல்களிடையே எள் கலந்த நீரை தர்ப்பையின் நுனிப் பகுதியில் விழுமாறு ஊற்ற வேண்டும்.

ஸ்நானம் செய்த உடல் சுத்தத்துடன் இறைநாமம் ஓதியவாறே அன்னம் வடித்து ஒரு பெரிய சாத உருண்டையைச் செய்திட இதுவே பிண்டமாகும்.

பிண்டத்தின் (அன்ன உருண்டை) அன்னசாரத்தை நீர் மூலமாகவே தர்ப்பையில் ஆவாஹனமாகும் பித்ருக்கள் (மேலோர்) பெறுகின்றனர்.

No comments:

Post a Comment